இந்த வலையில் தேடவும்

Thursday, July 28, 2011

கலைடாஸ்கோப் -31

லைடாஸ்கோப் -31 உங்களை வரவேற்கிறது.

1
==

திருப்பதிக்கு மலை மீது நடந்து ஏறிச் சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? அந்த அனுபவம் சமீபத்தில் கிடைத்தது. அது என்னவோ தெரியவில்லை ஆபீஸில் ஒரு நாலு ஃப்ளோர் ஏறினாலே மூச்சு வாங்கி கால்வலித்து நாலாவது ஃப்ளோரில் லிப்ட் -டிடம் சென்று சரணாகதி அடையும் நிலைமை ஏற்படும். ஆனால் அங்கே நாலாயிரம் படிகள் ஏறினாலும் ஒரு துளி கூட கால் வலிக்கவில்லை.பாலாஜியின் கருணையா இல்லை நம்முடன் கூட நிறைய பேர் ஏறுவதால் நமக்கு அசதி தெரியவில்லையா Don 't know !நிறைய வெள்ளந்தியான மனிதர்கள் 'கோவிந்த' கோசத்துடன் அனாயாசமாக மலை ஏறுகிறார்கள். சில பேர் ஏறும் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்த வண்ணம் ஏறுகிறார்கள் ! ஏழு மலைகளை ஏறி முடிக்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் ஆகிறது.(முதல் படி ஆரம்பிக்கும் இடத்தில் கற்பூரங்கள் கொளுத்தி எல்லாரும் சுற்றி நின்று பின்னால் வருபவர்களுக்கு வழியையே அடைத்து விடுகிறார்கள்.)

முதல் மூன்று மலைகள் கொஞ்சம் செங்குத்தாக இருக்கின்றன. கடைசி நாலை ஒரு விளையாட்டு மாதிரி ஏறி விடலாம் போங்கள் . As usual , ஏறும் பாதை முழுக்க வியாபாரம் ஜோராக நடக்கிறது. இதை தவறு என்று சொல்லவில்லை. It 's needed ! உப்பு தடவிய மாங்காய், எலுமிச்சை சோடா, வெள்ளரிக்காய், சித்தூர் பால்கோவா , நிலக்கடலை, காபி, டீ,
இட்லி வடை இத்யாதிகள், ஜூஸ், கடலைப் பொரி, பலாப்பழம், முறுக்கு வகைகள், மிக்சர், லேஸ், குர்குரே என்று அந்த வெங்கடாசலபதியே இதையெல்லாம் சாப்பிட்டுப் பார்க்க ஒரு தடவை மலை ஏறி மேலே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மலைக்கு பஸ்சிலோ காரிலோ ஏறி (?) வருபவர்கள் எத்தனை ஓர் அழகான அனுபவத்தை 'மிஸ்' செய்கிறார்கள் என்று தோன்றியது. பகவானைக்காட்டிலும் பக்தர்களின் தரிசனம் பெரியது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பக்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்றால் அடுத்த முறை மலை ஏறிச் செல்லுங்கள். ராமானுஜர் திருமலை முழுவதையும் முழங்காலால் ஏறிச் சென்றாராம். ஹ்ம்ம்..இதை இப்போது கற்பனை கூட செய்ய முடியவில்லை! ஆனால் முழங்கால் முறி மண்டபம் வரும்போது மட்டும் சில பேர் ஒரு பத்து படியை சின்சியராக முழங்காலால் ஏறுகிறார்கள் ! அந்த மண்டபம் வந்த போது தான் ராமானுஜர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாராம். நாமெல்லாம் ஒரு பத்து படி ஏறி விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறோம்.அவர் ஏறும்போது வழியில் ஒரு சோடா கடை கூட இருந்திருக்காது என்பது இன்னொரு ஆச்சரியம்.சரி..ஆன்மீகத்தை விடுங்கள்.. மலை ஏறுவது ஒரு நல்ல உடற்பயிற்சி.மலை ஏறும்போது தேவையில்லாத கொழுப்பு வியர்வையாக வெளியேறுகிறது. ஆம்..நம் மனதில் இருக்கும் கொழுப்பு கூட..

இறைவனை தரிசிக்கச் செல்லும் போது நம் அடையாளத்தை இழக்க வேண்டும் என்பார்கள். ஆனால் திருப்பதியில் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்! இரண்டாவது மலையில் நம்மை போட்டோ எடுத்து மேலே அதை சரிபார்க்கிறார்கள். மலை ஏறி வருபவர்களுக்கு மேலும் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று அவர்களுக்கான தரிசன வரிசை தனியாக (Short ஆக) இருக்கிறது. இரண்டே இரண்டு இடங்களில் தான் (நாங்கள் போன போது) வரிசை மெகா சீரியல் கதை மாதிரி நகராமல் ஒரு மணிநேரம் நின்று விட்டது.

நாலாயிரம் படிகள் வியர்வை வழிய ஏறுதல், வரிசையில் தவம் கிடத்தல்,இடிபாடுகளில் சிக்குதல்,பக்கத்தில் இருப்பவரின் காலை மிதித்து விட்டு சாரி சொல்லுதல், கேட்டை திறந்து விட்டதும் மராத்தான் ஓட்டம் ஓடுதல், இவை அத்தனையும் பின்னர் கிடைக்கப்போகும் ஒரு சில நொடிகள் தரிசனத்திற்கு என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தாலும் அந்த சில நொடிகள் தரிசனத்தில் நாம் அதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் எங்கோ ஓடி மறைந்து போகின்றன. க்யூ மெல்ல மெல்ல நகர்ந்து பாலாஜியை நெருங்கும் போது எல்லாருக்கும் ஒரு விவரிக்க ஒண்ணா பரவசம் உடலிலும் மனதிலும் தொற்றிக் கொள்கிறது. தலை தூக்கி சர்வ அலங்காரங்களுடன் காட்சி தரும் பாலாஜியைப் பார்க்கும் போது ஏதோ வைகுண்டத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வு எழுகிறது. அந்த சில நொடிகளில் கடவுள் இல்லை என்று யாராலும் சத்தியமாக சொல்லவே முடியாது! மீண்டும் சொல்கிறேன்..நீங்கள் பஸ்ஸில் மலை ஏறினால் இந்த தரிசனம் இத்தனை பரவசமாக இருக்காது. ஏதோ வந்தோம் பார்த்தோம் போனோம் என்று ஒப்புக்கு சப்பாகவே இருக்கும்.

2
==

'உருவத்தால் ஓங்கி உயர்ந்த மரங்களும் பருவத்தால் அன்றிப் பழா' ....எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று சிலர் சொல்வதில் உண்மை இருக்கவே செய்கிறது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் உலகில் வாழ்ந்து வந்திருக்கிறான். ஆனால் ரேடியோ என்ற ஒன்றை கண்டுபிடிக்க நாம் பதினெட்டாம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
காலம் மட்டும் அல்ல ..மனிதர்களுக்காகவும் வரலாறு காத்திருக்க வேண்டும். ரைட் சகோதரர்களுக்கு தோன்றிய அந்த விமான மாடல் ஏன் அதற்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களில் ஒருவருக்கு கூட தோன்றவில்லை? ஆர்க்கிமிடிஸ் -சிற்கு தோன்றிய அந்த 'யுரேகா ' ஏன் அதற்கு முன் வாழ்ந்த தத்துவ ஞானிகளில் ஒருவருக்கு கூட உதிக்கவில்லை? 'லாஸ்ட் மூவ்மென்ட்' என்ற
சிம்பொனியைத் தர ஒரு பீத்தோவான் வர வேண்டி இருந்தது. மோனலிசாவை நம் முன்னே புன்னகைக்க வைக்க ஒரு டாவின்சி வர வேண்டியிருந்தது. எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று இன்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் என்னவெல்லாம் வரவிருக்கிறதோ?

'' 'ரி' '' '' 'நி' என்ற ஐந்து ஸ்வரங்கள் த்யாகராஜருக்கு முன்பும் இருந்தன. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு 'பண்டு ரீதி கொலு' பாடலைத் தர அவரால் தான் முடிந்தது. இதே ஐந்து ஸ்வரங்களை வைத்துக் கொண்டு ஒரு 'சுவர்க்கமே என்றாலும்' பாடலைத் தர இளையராஜா வரவேண்டி இருந்தது.இயற்கை தன் அற்புதங்களை ஒரு குறிப்பிட்ட நபரின் மூலமாக மட்டுமே வெளிக்கொணரும் போலிருக்கிறது.

அழகான பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் போது இந்த டியூன் நமக்கு ஏன் முன்பே தோன்றவில்லை என்று தோன்றும். அதே போல அழகான பாடல் வரிகளும். '50 கே.ஜி தாஜ்மஹால்' என்ற கற்பனை வைரமுத்துவுக்கு தான் தோன்றுகிறது!'

ஒரு கஞ்சப்பிசினாரி ராஜாவிடம் ஒரு கவி
ர் ஓர் அழகான கவிதையை பாடிக்காட்டினாராம். அவன் அதற்கு எந்த எக்ஸ்ப்ரஷனும் காட்டாமல் 'இந்த வார்த்தைகளை எல்லாம் நான் அகராதியில் முன்பே பார்த்திருக்கிறேன்' என்றானாம். நம் முன் வார்த்தைகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. ஸ்வரங்கள் இலவசமாக கிடைக்கின்றன. புத்தகங்கள் மலிந்து கிடக்கின்றன.கேட்டதெல்லாம் தருவதற்கு இன்டர்நெட் இருக்கிறது! ஆனால் எல்லாராலும் ஒரு ரோசினி, ஒரு காளிதாஸ், ஒரு தாகூர் தான் ஆக முடிவதில்லை!

3
==


சமீபத்தில் ஒரு Forwarded இ-மெயில் வந்திருந்தது. (தலைப்பு :All about a boy !) பொதுவாக நாம் பெண்களை தான் 'தியாக தீபம் 'தியாக பூமி' என்று போற்றுகிறோம். ஆண் ஒருவன் தியாகம் செய்வதே இல்லையா என்று கேட்கிறது அந்த
இ-மெயில். தங்கச்சிப் பாப்பாவுக்காய் சாக்லேட்டை தியாகம் செய்யும் குட்டிப்பையனிடம் இருந்து ஆரம்பிக்கிறது அந்த தியாகம். தன் காதலை பெற்றோர்களுக்காக தியாகம் செய்யும் இளைர்கள்,சாகோதரிக்காக லோன் வாங்கும் இளைர்கள் என்று இன்றும் இருக்கவே செய்கிறார்கள். தியாக தீபங்கள் என்று இலக்கியங்களால் வர்ணிக்கப்படும் பெண்கள் மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்க வெளிநாடுகளில் சுகங்களைத் துறந்து ஊன் உறக்கம் மறந்து வேலை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். பெண் ஒருத்தி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு வருகிறாள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் அதையே பெரிய தியாகமாகப் பார்க்கிறோம். ஆனால் நம் சமுதாயம் 'உத்தியோகம் புருஷ லட்சணம் ' என்று அறுபது வயது வரை அவனை குடும்பத்துக்காய் மாடாக உழைக்க வைத்த போதும் அவன் தியாகங்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை . அல்லது ஆண் செய்யும் தியாகங்கள் 'taken for granted '

கன்னடத்தில் சக்கை போடு போட்ட ஒரு திரைப்
டம் 'முங்காரு மழை ' ..ப்ரீதி மதுர தியாக அமர(காதல் இனியது.தியாகம் அழிவில்லாதது) என்ற Caption உடன்..இது தமிழில் வருகிறது என்கிறார்கள். எப்போது என்று தெரியவில்லை. தன் காதலை (காதலியின் அப்பாமேல் இருக்கும்) விசுவாசத்திற்காக தியாகம் செய்யும் ஒரு இளைஞனின் கதை அது. படத்தின் க்ளைமாக்சில் எல்லாரையும் ஐம்பது மில்லி கண்ணீர் விட்டு அழ வைத்த சாதனைக்காகவே அந்த திரைப்படம் அபார வெற்றி பெற்றது ! படம் மட்டும் அல்ல...பாடல்களும் இதில் ராக் ஹிட்!

[யாரது, தியாகத்திற்கும் ஆண்கள் தலையில் விழும் சொட்டைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்பது? ]

4
==
சில விஷயங்கள் இன்று அடியோடு நம்மிடம் இருந்து மறைந்து விட்டன இல்லையா? நிர்மா வாசிங் பௌடர் (இன்னும் இருக்கிறதா நிர்மா?) டி.வி. சானலை மாற்ற 'டொக் டொக்' என்று திருகும் குமிழ், கிட்டத்தட்ட நம் உயரத்தில் முக்கால் வாசி இருக்கும் நீண்ட முனை கொண்ட பெரிய குடை, மடிப்பு மடிப்பாக இருக்கும் பஸ் ஜன்னல் திரை, இரண்டு சக்கர ஆட்டோ
மாதிரி இருக்கும் பஜாஜ் ஸ்கூட்டர், விரல் வைத்து சுற்றும் டெலிபோன், தலையில் அணியும் ரிப்பன், இன்க் பேனா, (பிரில்
இன்க் ??) , சைக்கிள் ரிகஷா என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.(உங்களுக்கு ஏதாவது தோன்றினால் ADD செய்யுங்கள்) இந்த லிஸ்டில் சைக்கிளும் ,டைப் ரைட்டிங் இயந்திரமும் வெகுவிரைவில் சேர்ந்து கொள்ளும் என்று தோன்றுகிறது.

[யாரது, தாத்தா பாட்டி என்று சொல்வது? ஹ்ம்ம் நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான்]

5
==
ஆங்கிலம் ஒரே மொழி தான் என்றாலும் அதில் தான் எத்தனை எத்தனை உச்சரிப்பு பேதங்கள்? இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்தவர்களும் ஒவ்வொரு மாதிரி பேசுவார்கள்.ஹ்ம்ம் முதலில் மிகவும் பிரபலமான கேரளா ஆங்கிலம் "Ungle கோல்ட் மீ பார் கோபி ' 'பேப்பர்' என்பதை சொல்லும் அழகை வைத்தே இவர் தமிழ்நாடு தான் என்று முடிவு கட்டி விடுகிறார்கள் . 'pay ' 'per ' என்று சொல்ல வேண்டுமாம். 'பே' என்பதை ஏதோ பேயைப்பார்த்த மாதிரி வாயைப் பிளந்து கொண்டு சொல்லக் கூடாதாம். SIMBLE தான் முயற்சி பண்ணுங்கள்! ஆங்கிலத்தில் R என்ற எழுத்து ஒரு உயிரெழுத்துக்கு முன்னால் வந்தால் ஒழிய அது 'சைலன்ட்' என்று கன்னடத்துக் காரர்களுக்கு தெரிவதில்லை.துணியை 'அய்ரன்' செய் என்று தான் சொல்ல வேண்டும். நம் மாதிரி 'அயன்' என்று பிரம்மாவை எல்லாம் இழுக்கக் கூடாது. இது ஓகே..ஆனால் உலகத்தை 'வர்ல்ட்' என்று சொல்வது
இங்கே (கன்னடத்தில்) பிரசித்தம். தயிராய் 'கர்ட்' சொல்லை 'வர்ட்' என்று 'ர்' நாக்கு கிழிந்து விடும் படி அழுத்தி ! சரி..ஹிந்தி காரர்கள் ஏன் மசாலா டோசா என்கிறார்கள்..?

இப்போது இது என்ன என்று கண்டுபிடிக்க முடிகிறதா? "Nine Pipe Pour Pour Pipe Pour Pipe Pour Pour Pipe"

.
..
...
....
.....
......
.......
........
.........
..........
...........
............
.............
ஓகே


"9544545445" லல்லு பிரசாத் அவர் போன் நம்பர் சொல்கிறாராம்! :-)




6
===

ஓஷோ ஜோக்.. வாய் விட்டு சிரியுங்கள்..வாழ்க்கை என்பது ஒரு பிரபஞ்ச நகைச்சுவை (cosmic joke)

மூன்று பைத்தியங்கள் ஒரு நாள் காலையில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து விட்டன. ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கும் இடத்துக்கு சென்றன. அங்கே இருந்த ஒரு மேஸ்திரி 'ஏன் மூணு பேரும் மச மசன்னு நிக்கறீங்க, போய் வேலையைப் பாருங்க' என்று மிரட்டினார்

அரை மணி நேரம் கழித்து மேஸ்திரி வந்து பார்க்கும் போது இரண்டு பைத்தியங்கள் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்க இன்னொன்று சின்சியராக குழி தோண்டிக் கொண்டிருந்தது.

'ஏன் இப்படி அசையாமல் நிற்கிறீர்கள் ?'

'நாங்கள் ரெண்டு பேரும் ஸ்ட்ரீட் லைட்ஸ்'

இதைக் கேட்டு அவர் கோபப்பட்டு அந்த ரெண்டு பேரையும் துரத்தி விடுகிறார். குழி தோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து 'நீ வேலை செய்யிப்பா , ஏன் நிறுத்திட்ட ?" என்கிறார்

'நான் எப்படி இருட்டில் வேலை செய்வது எசமான்?"



ஜார்ஜைப் பார்த்து அந்த மனநல மருத்துவர் சொன்னார்: "ஜார்ஜ், நீ இனிமேல் எலி இல்லை.. நீ மனிதன்..என்னைப் போல ஒரு மனிதன்..நீ இனிமேல் பூனையைப் பார்த்து பயப்பட எந்த அவசியமும் இல்லை..நீ மனிதன்..ஞாபகம் இருக்கட்டும்" என்றார்

ஜார்ஜ் ஆஸ்பிடலை விட்டு வெளியே வந்ததும் ஒரு பூனை குறுக்கே போனது.. அவன் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தான்.

டாக்டர் 'ஜார்ஜ், நீ தான் எலி இல்லை என்று படித்துப் படித்து சொன்னேனே, அப்புறம் ஏன் பூனையைப் பார்த்து பயந்து உள்ளே ஓடி வருகிறாய்"

அதற்கு அவன் 'டாக்டர் , நான் எலி இல்லன்னு எனக்குத் தெரியும்.. ஆனா அந்த பூனைக்குத் தெரியுமா?"



முத்ரா




17 comments:

Katz said...

//அந்த சில நொடிகளில் கடவுள் இல்லை என்று யாராலும் சத்தியமாக சொல்லவே முடியாது! // அப்போ நீங்க ஒத்து கொள்கிறீர்களா?

bandhu said...

வழக்கம்போல் பிரமாதம்.. என்ன ஒரு வெரைட்டி! மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உங்களிடம் நிறைய இருக்கிறது!

Mohamed Faaique said...

சைக்கிளை ஒழிந்து போகும்`னு லிஸ்ட்`ல சேர்க்க முடியாது. கிழக்காசிய நாடுகளில் சைக்கிள்தான் பேவரிட். நம்மாளுங்கும் கொஞ்ச நாளில் மாற வேண்டிய நிலை ஏற்படும்.

இராஜராஜேஸ்வரி said...

பாலாஜி பகிர்வும்,
உருவத்தால் ஓங்கி உயர்ந்த மரங்களும் பருவத்தால் அன்றிப் பழா' ..பழமொழியும்,
மற்ற பகிர்வுகளும் வார்த்தையில் இருந்து மௌன்த்திற்கு அழைத்துச்சென்றன. பாராட்டுக்கள்.

Ramachandranwrites said...

சுஜாதா எழுதிய திமலா என்ற கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. நல்ல பார்வை, வாழ்த்துக்கள்.

Aba said...

//இயற்கை தன் அற்புதங்களை ஒரு குறிப்பிட்ட நபரின் மூலமாக மட்டுமே வெளிக்கொணரும் போலிருக்கிறது.//

நியூட்டனின் கூற்றுபோல நாம் மற்ற மனிதர்களின் தோள்களில் ஏறி பார்ப்பதாலேயே அதிக தூரம் காண முடிகிறது.. நீங்கள் குறிப்பிட்ட மனிதர்கள் யாருடைய தோள்களில் ஏறுவது என தெரிந்தவர்கள் (அல்லது தவறுதலாக சரியான தோள்களில் ஏறியவர்கள்). அத்தோடு எங்கே தடுக்கி விழுந்து விடுவோமோ என்ற பயம் அற்றவர்கள். முயற்சியும் மூளையும் பயமின்மையும் கொஞ்சூண்டு அதிர்ஷ்டமும் முதலில் (மனித வரலாற்றில் மற்றவர்களுக்கு வாய்க்கும் முன்) வாய்த்தவர்களே வெற்றிக்கனியை தட்டுகிறார்கள்.

ஒருவேளை நியூட்டன் ஒரு ரெண்டு வருடம் அதிகமாக யோசித்திருந்தால் ரிலேடிவிடியை கண்டுபிடித்திருக்கக் கூடும்... யார் கண்டது?

Aba said...

Pronounciation.. thnx very much.. leaned new things...

Is iron i-run in British english too?

கத்தார் சீனு said...

சமுத்ரா....கலைடாஸ்கோப் அருமை...முக்கியமாக திருப்பதி அனுபவம் அற்புதம்....

நான் இது வரை ஒரு ஏழெட்டு முறை நடந்து திருமலை போயிருக்கேன்... சமீப காலங்களில் நடந்து செல்ல முடியவில்லை....

அடுத்த லீவில் கண்டிப்பாக நடந்துதான் செல்ல வேண்டும்....நன்றி பகிர்விற்கு !!!!

ஷர்புதீன் said...

//பாலாஜியை நெருங்கும் போது எல்லாருக்கும் ஒரு விவரிக்க ஒண்ணா பரவசம் உடலிலும் மனதிலும் தொற்றிக் கொள்கிறது. தலை தூக்கி சர்வ அலங்காரங்களுடன் காட்சி தரும் பாலாஜியைப் பார்க்கும் போது ஏதோ வைகுண்டத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வு எழுகிறது. அந்த சில நொடிகளில் கடவுள் இல்லை என்று யாராலும் சத்தியமாக சொல்லவே முடியாது!
//

மிக ஆச்சரியமாக இருக்கிறது... சமுத்ராவிற்கு இதன் "காரணம்" புரியாதது., உளவியல் குறித்து எழுதவேண்டும் என்ற ஆவலை ஒரு மாதம் சம்பளம் போனாலும் பரவாயில்லை என்று எழுதி தொலைக்கலாம் என்று தோன்றுகிறது!


//அந்த சில நொடிகளில்//

பதில் இங்கேதான் ஒளிந்திருக்கிறது!

Uma said...

Super Sir....ஒரு நல்ல Friend'டோட உரையாடின மாதிரி இருக்கு..

adhvaithan said...

நான் எலி இல்லன்னு எனக்குத் தெரியும்.. ஆனா அந்த பூனைக்குத் தெரியுமா//// rofl.. u rocks as always..

சமுத்ரா said...

ஷர்புதீன், சில பேர் தங்களை அறிவாளி என்று நிரூபிக்க கடவுள் மறுப்பு என்ற ஆயுதத்தை ஏனோ கையில் எடுத்துக்கொள்கிறார்கள். நான் அந்த கூட்டத்தில் சேர விரும்பவில்லை. அறிவியல் எழுதினால் கண்டிப்பாக கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டுமா? என்ன விதமான லாஜிக் இது??!!! உலகில் இதுவரை வந்த விஞ்ஞானிகள் யாரும் கடவுள் இல்லை என்று திட்டவட்டமாக வாதாடியதில்லை.

கோயிலில் க்யூ நகரும் பொது பரவசமாக இருக்கிறது ; புளகாங்கிதம்
கிடைக்கிறது என்றால் MAY BE அதற்கு சைகாலஜிகல் காரணங்கள் இருக்கலாம்..ஆனால் ஒவ்வொன்றுக்கும் காரணம்
, மூலம் கண்டுபிடிக்க முனையும் போது வாழ்க்கை தன் அழகை இழந்து விடுகிறது. Ignorance is bliss ! கண்களில் பரவசம் மின்ன
வரிசையில் காத்திருக்கும் innocent மனிதர்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். எலாவற்றுக்கும் காரணம்
தேடி வாழ்வின் சில அழகான அனுபவங்களை நான் இழக்கத் தயாராக இல்லை. பரவசம் வருவது உன் இந்த ஹார்மோனில் இந்த
சுரப்பி அதிகமாக சுரப்பதால் தான்..என்ற விவாதங்களை கொஞ்ச நேரத்துக்காகவாவது மறந்து விடுவோமே!

ஷர்புதீன் said...

மிக சரியாக ., என்னோடு நூறு சதவீதம் ஒத்துபோவது போன்ற ஒரு பதிலை இன்றுதான் என் வாழ்கையில் படிக்கிறேன். நான் ஒன்றும் கடவுள் மறுப்பாளன் இல்லை., "ஆனால் உங்களை போன்று புரிந்து அனுபவிக்கும் வர்க்கம்தான் நானும்!"

சினிமாவில் உணர்ச்சிமயமான காட்சியில் கேமெரா இடது பக்கம் இருக்கிறது என்று யோசிப்பவனை நானும் திட்டியிருக்கிறேன், அதே நேரம் உங்களை அதே திருப்தி சாமி மேட்டரில் யாரும் ஏமாற்ற முடியாது என்பதை அறிந்து கொள்ளத்தான் அந்த பின்னூட்டத்தை இட்டேன். மேஜிக் சோவில் தெரிந்தே ஏமாறுவதை ரசிக்கிறோமே , அது போல தான் கடவுள் விசயமும் என்று கூட நானே எனக்கு பதில் சொல்லியிருக்கிறேன்! ( உடன்பாடு உண்டா?!) அதை விட்டு மேஜிக் காரன் நம்மை நல்ல முட்டாளாக்குகிறான் என்று நினைக்க ஆரம்பித்தால்.....

I really very very satisfied in your answer, and i need this kind of knowledge/perception to see the God / Man!

சித்ரவேல் - சித்திரன் said...

சென்ற வாரம் தான் நடந்து போய்வந்தேன்..மிக இனிய அனுபவம். ஆனால் தொடர்ந்து போக இயலவில்லை. 3மாதம் ஒருமுறையேனும் செல்ல நினைக்கிறேன்.

Aba said...

// ஒவ்வொன்றுக்கும் காரணம்
, மூலம் கண்டுபிடிக்க முனையும் போது வாழ்க்கை தன் அழகை இழந்து விடுகிறது. Ignorance is bliss !//

100% true... என்னைப்பொறுத்தவரை இவ்வாறான சந்தோஷங்களை அனுபவிக்கும் நொடியில் லாஜிக் பார்க்காமல் அனுபவித்துவிட்டு பிறகு நேரம் கிடைத்தால் காரணம் கண்டுபிடிக்க முனையலாம்.. சில விஷயங்கள் ஏன் என்று புரியாததால்தான் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கிறது..

ஷர்புதீன் சாரின் மேஜிக் ஷோ உவமை அருமை...

ஷர்புதீன் said...

//சில விஷயங்கள் ஏன் என்று புரியாததால்தான் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கிறது..//

அதே, கடவுள் குறித்த வாதங்கள் வரும்பொழுது இதனை சொல்லித்தான் முடித்து வைப்பது வழக்கம்!

Aba said...

ஆனால் பல இடங்களில் இந்த கடவுள் எனும் பதம் ஒரு சமாளிப்புப் போர்வையாக பயன்படுத்தப்படுகின்றது.. மனிதனால் தற்போது விளங்கிக்கொள்ள முடியாத அனைத்தையுமே கடவுளின் அதிசயம் என முத்திரை குத்தி தள்ளி வைப்பதும் முயற்சி செய்ய சோம்பல்பட்டு, தன்னம்பிக்கையை நம்ப வழியற்று பலர் கடவுளின் மேல் பாரத்தை போடுவதும் சரியான செயல்கள் என நான் நம்பவில்லை...

மனிதன் தனது அறிவுசார்ந்த பயணத்தில் கடவுளை ஒரு முட்டுக்கட்டையாக நினைக்கக்கூடாது.. இயலுமானவரை அதை அறிவியலில் ஒதுக்கிவிட்டு முன்னேற முயற்சிக்கவேண்டும். துன்பம் வரும் போதும் நம்ப வேண்டியது தன்னையே தவிர கடவுளை அல்ல. ஆனால் ஒரு கட்டத்தில், உயிர் வாழ்வுக்கு நம்பிக்கை மட்டுமே தேவையான நிலையில் தன்னைக்கூட நம்ப முடியாத இயலாமையில் வேறு வழியின்றி கடவுளை நம்பிவிட்டுப் போகலாம்.

அதைவிட்டு புரியாதெல்லாம் கடவுள்.. அது என்றைக்கும் புரியாது என முடிவுசெய்துவிட்டு சும்மாயிருப்பது சரியல்ல...