அணு அண்டம் அறிவியல் -38 உங்களை வரவேற்கிறது
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி - ஒரு திரைப்படப்பாடல்
A rocket explorer named Wright,காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி - ஒரு திரைப்படப்பாடல்
Once traveled much faster than light.
He set out one day, in a relative way,
காலப் பயணம் பற்றிய சில சுவாரஸ்யமான கதைகளை சொல்வதாக சொல்லியிருந்தோம். இன்னும் ஒரு இரண்டு மூன்று எபிசோடுகளுக்கு அவற்றைப் பார்க்கலாம்.முதலில் கதை சொல்லி விட்டு பிறகு அது இயற்பியல் விதிகளின் படி சாத்தியமா என்று பார்க்கலாம்.முதலில் பிரபலமான ஒரு திரைப்படம் BACK TO THE FUTURE ...
கதையின் டீன்-ஏஜ் ஹீரோ மார்டி ஒரு பெரிய ராக் மியூசிக் ஸ்டார் -ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறான். அவனது காதலி ஜெனிஃபர் ! மார்ட்டியின் அப்பா ஜார்ஜ்.அம்மா லோரைன் ! இந்த சிறிய குடும்பம் கலிஃபோர்னியாவின் ஒரு மலைப்பள்ளத்தாக்கில் வசித்து வருகிறது. மார்ட்டியின் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரு நாள் இரவு டின்னரின் போது மார்டி அவன் அம்மாவை 'உங்கள் இருவரின் சந்திப்பு முதலில் எப்படி நிகழ்ந்தது என்று கேட்கிறான். அதற்கு அவள் தன் அப்பா ஓட்டி வந்த கார் ஜார்ஜ்ஜின் மீது மோதிய ஒரு விபத்து தான் அவர்களின் முதல் சந்திப்பு என்கிறாள்.
1985 ஆம் வருடம் அக்டோபர் 25 ஆம் தேதி. மார்டி சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது Save the clock tower என்று எழுதப்பட்ட ஒரு நோட்டிஸை யாரோ அவனுக்கு தருகிறார்கள். 1955 ஆம் வருடம் நவம்பர் 15 அன்று மின்னல் தாக்கி நிரந்தரமாக நின்று விட்ட ஒரு மணிக்கூண்டு கடிகாரத்தைப் பற்றியது அது. மார்டி நிமிர்ந்து பார்த்த போது அந்த கடிகாரம் பத்து மணி நான்கு நிமிடங்களில் உறைந்து விட்டிருக்கிறது .மார்டி எந்த சுவாரஸ்யமும் இன்றி அதைப் படிக்கிறான். அதை வீசி எறிய மனம் இன்றி தன் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான். மார்டினுக்கு ஒரு விஞ்ஞானி நண்பர் உண்டு. அவர் பெயர் டாக் (Doc ) அன்று அவரை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து அவரை சந்திக்கிறான்.டாக் அவனுக்கு தான் வடிவமைத்திருக்கும் ஒரு கால இயந்திரத்தைக் காட்டுகிறார். அந்த இயந்திரம் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை மாற்றியமைத்து வடிவமைக்கப் பட்டிருந்தது. அதற்கு எரிபொருள் சாதாரண பெட்ரோல் அல்ல. ப்ளுடோனியம் என்னும் கதிரியக்கத் தனிமம். அந்தத் தனிமத்தில் அணுக்கரு பிளவை ஏற்படுத்தி அதிலிருந்து வரும் 1 .2 கிகாவாட் ஆற்றல் FLEX CAPACITOR எனப்படும் ஒரு
மின் தேக்கிக்கு அனுப்பப்படுகிறது. அந்த காரில் நாம் நினைக்கும் ஒரு தேதியை செட் செய்து விட்டு அதை 88 கி.மீ/மணி என்று வேகத்தில் ஓட்டினால் போதும். நாம் செட் செய்த காலத்துக்கு போய் விடுவோம் என்று டாக் சொல்கிறார். மார்டி அதை வியப்புடன் பார்க்கிறான். முப்பது வருடம் முன்பு ஏதோ ஒரு Random தேதியை மார்ட்டிக்கு காட்டுவதற்காக டாக் அந்த மெஷினில் செட் செய்கிறார்
விஞ்ஞானி டாக் தன் கால இயந்திரத்திற்கு தேவையான எரிபொருளான ப்ளுடோனியத்தை லிபியாவின் தீவிராவாதிகளிடம் இருந்து திருடிக் கொண்டு வந்திருந்தார்.இதை அறிந்து கொண்ட அவர்கள் அன்று டாக்கின் இருப்பிடத்திற்கு வந்து அவரை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் மார்டி அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காரில் ஏறி வேகமாக ஓட்டுகிறான். ஆனால் அந்த கார் தான் டாக் காட்டிய கால இயந்திரம் என்று அவன் கவனிக்கவில்லை.காரில் 88 கி.மீ வேகத்தை அடையும் அவன் அவர்கள் முன்பே செட் செய்து வைத்த தேதியான நவம்பர் 5 , 1955 க்குப் போய் விடுகிறான். துரதிர்ஷ்ட வசமாக காரில் எரிபொருள் தீர்ந்து விடுவதால் மார்டியால் திரும்ப எதிர்காலத்துக்கு வர முடிவதில்லை.
இறந்த காலத்தில் மார்டின் பள்ளத்தாக்கை இலக்கின்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் போது தற்செயலாக தன் அப்பாவை(ஜார்ஜ்) சந்திக்கிறான் (கல்யாணமாகாத டீன்-ஏஜ் அப்பா!) . மார்ட்டி அணிந்திருக்கும் உடை
அப்போது அந்தக் காலத்திற்கு விசித்திரமாக இருக்கிறது.அப்பாவும் எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கும் மகனும் நண்பர்கள் ஆகின்றனர்.
சில நாட்கள் கழித்து ஜார்ஜ் சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் அவன் மீது மோத வருகிறது. இதை கவனித்த மார்டி அவனை பாதையில் இருந்து தள்ளி விபத்தை தவிர்க்கிறான். காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் லோரைன் (மாட்டியின் இளவயது அம்மா) ஜார்ஜ்ஜை காதலிப்பதற்கு பதில் மார்டியிடமே தன் மனதைப் பறி கொடுக்கிறாள். மார்டி தன் அம்மாவை ஜார்ஜை காதலிக்க வைக்க எவ்வளவோ முயல்கிறான். ஆனால் லோரைன் தன் மகனிடமே (!) தீராத காதல் கொண்டிருக்கிறாள். அவளை avoid செய்து விட்டு மார்டின் விஞ்ஞானி டாக்கின் இளமையான Version -ஐ தேடிப்போகிறான்.
மார்டி எப்படியோ விஞ்ஞானி டாக்கை கண்டுபிடித்து தான் எதிர்காலத்தில் இருந்து வந்திருப்பதாகவும் தான் எதிர்காலத்துக்கு திரும்ப உதவும் படியும் வேண்டுகிறான். கால இயந்திராத்தை எப்படி வடிவமைப்பது என்றும் அவன் சொல்கிறான். டாக் தற்போது ப்ளுடோனியம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் 1 .2 கிகாவாட் ஆற்றல் தரும் இயந்திரம் தற்போது இல்லை என்றும் அவன் எதிர்காலத்துக்கு திரும்ப முடியாது என்றும் வருத்தப்படுகிறார். அந்த அளவு ஆற்றல் ஏதாவது இயற்கை மூலங்களில் இருந்து கிடைக்குமா என்று மார்டி கேட்கிறான்.அதற்கு அவர் ஒரு வேளை மின்னலிடம் இருந்து கிடைக்கலாம் என்கிறார். மார்ட்டிக்கு ஏதோ பொறி தட்ட உடனே அவன் தன் கோட்டுப் பையில் வைத்திருந்த அந்த நோட்டிஸை காட்டுகிறான். அதில் 15 -11 -1955 அன்று இரவு பத்து மணிக்கு நகரத்தின் பிரபலமான ஒரு கிளாக் டவரை மின்னல் தாக்கியது என்று குறிப்பிட்டு இருந்தது. டாக் உடனே மகிழ்ச்சி அடைந்து அந்த டவரின் இடிதாங்கியில் இறங்கும் மின்சாரத்தை பயன்படுத்தி கால இயந்திரத்தை இயக்கி அவன் மீண்டும் எதிர்காலத்துக்கு சென்று விடலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார். இதற்கிடையில் மார்ட்டியின் சட்டைப் பையில் இருந்த ஒரு குடும்ப புகைப்படத்தை அவன் எதேச்சையாகப் பார்க்கிறான். அதில் அவனது உருவமும் அவன் சகோதரர்களின் உருவமும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியிருந்தது. இதைக் கண்டு பயப்படும் அவன் முதலில் தன் தந்தையையும் தாயையும் காதலிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு டாக்கிடம் இருந்து விடைபெறுகிறான். ப்ளானின் படி வரும் சனிக்கிழமை இரவு அவரை சந்திப்பதாக சொல்கிறான்.
ஜார்ஜை சந்திக்கும் மார்டி, அவனிடம் அவனது காதலுக்கு தான் உதவுவதாக சொல்கிறான். அவர்கள் அதற்கு ஒரு திட்டம் போடுகிறார்கள்.நகரத்தில் நடக்கும் ஒரு பார்டிக்கு செல்லும் லோரைனை வழிமறித்து மார்டி கெட்டவன் போல நடித்து அவளை கடத்த முயற்சிப்பது என்றும் அப்போது ஜார்ஜ் வந்து அவளைக் காப்பாற்றி காதல் வலையில் விழவைப்பது என்றும் திட்டம் போடுகிறார்கள். அனால் அந்த குறிப்பிட்ட நாளில் மார்டி வருவதற்கு முன்பே வேறு ஒரு உண்மையான ரௌடி லோரைனை வழிமறித்து கற்பழிக்க முயல்கிறான். திட்டத்தின் படி அங்கே வரும் ஜார்ஜ், இதைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் சாமாளித்துக் கொண்டு லோரைனை அவனிடம் இருந்து காப்பாற்றுகிறான். இருவரும் இணைந்து பார்ட்டிக்கு சென்று நடனமாடுகிறார்கள். அவர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் போது அங்கே வரும் மார்டி இதைப் பார்த்து மகிழ்ச்சி
அடைகிறான். உடனே தன் போட்டோவை திரும்ப பார்க்கிறான். அதில் அவன் உருவம் மீண்டும் வந்திருக்கிறது.
சனிக்கிழமை மாலை டாக்கை சந்திக்கும் மார்டி அவருக்கு ஒரு கடிதத்தை கொடுக்கிறான். அதில் அவர் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் எழுதி இருப்பதாக சொல்கிறான். (1985 இல் அவர் லிபியா தீவிரவாதிகளின் குண்டுபட்டு இறந்து விடுவார் என்று எழுதியிருக்கிறான்) ஆனால் எதிர்காலத்தை அறிந்து கொள்ள விரும்பாத டாக் அந்த லெட்டரை கிழித்துப் போட்டு விடுகிறார். அன்று இரவு இருவருக்கும் டென்ஷன் அதிகரிக்கிறது. ஏனென்றால் அந்த மின்னலின் மின்சாரத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தாவிட்டால் அப்புறம் மார்டி நிரந்தரமாக கடந்த காலத்திலேயே தங்கி விட வேண்டியது தான். டாக் காரின் தேதியை அக்டோபர் 26 1985 என்று செட் செய்கிறார்; டவரின் இடிதாங்கியில் இருந்து ஒரு ஒயரை காரின் இஞ்சினுக்கு ஷார்ட் சர்க்யூட் செய்கிறார். மார்டி தயாராக காரில் அமர்ந்து கொள்கிறான்.மின்னல் தாக்க ஐந்து நிமிடங்களே இருக்கும் போது திடீரென்று ஒயர் அறுந்து விடுகிறது.எப்படியோ அவர் பாடுபட்டு அதை மீண்டும் இணைத்து முடித்த மறு கணம். சரியாக 10 :04 மணிக்கு மின்னல் டவரை தாக்குகிறது. மின்சாரம் இறங்கி கடிகாரத்தை தாக்கி அது நின்று விடுகிறது. காரின் இஞ்சினுக்கு பை-பாஸ் ஆன மின்சாரம் அதை இயக்கி கார் 88 கி.மீ வேகத்தில் பறந்து மார்டி எதிர்காலத்துக்கு மீண்டும் வந்து
சேருகிறான். அங்கே டாக் உயிரோடு இருக்கிறார் . அவன் முப்பது வருடங்களுக்கு முன்பு கொடுத்த கடிதத்தை முன் தினம் மீண்டும் இணைத்து படித்துப் பார்த்து அன்று புல்லட்-ஃப்ரூப் உடை அணிந்து வந்தேன் என்கிறார்!
Back to the future பாகம் ஒன்று இப்படி முடிகிறது.
இப்படி ஒரு (சுலபமான) காலப்பயணம் சாத்தியமா என்று தெரியவில்லை. டாக் குறிப்பிடும் Flex capacitor பற்றி படத்தில் Technical details எதுவும் இல்லை. மிகச் சாதாரண வேகத்தில் செல்லும் ஒரு கார் எப்படி கடந்தகாலத்தில் நுழையும் என்பதும் தெரியவில்லை. டெக்யான் எனப்படும் கற்பனைத் துகள்கள் ஒளிவேகத்தை விட மிஞ்சிய வேகத்தில் செல்ல முடியும்
என்கிறார்கள். டெக்யான் களுடன் ஒரு கஷ்டம் என்ன என்றால் அவை புறப்படுவதற்கு முன்னரேயே தம் இலக்கை போய் சேர்ந்து விடும். இன்று புறப்பட்டு நேற்று போய் சேருவது போல. டாக் தன் இயந்திரத்தில் இந்த டெக்யான்களை உபயோகித்திருக்க வேண்டும்.(quantum gravity ) அணுக்கரு சிதைவின் மூலம் காமா கதிர்கள் வெளிப்படுமே தவிர டெக்யான் வெளிப்படுமா என்று தெரியவில்லை.ஆனாலும் சும்மா கதை தானே? அதற்கு பெரிதாக விளக்கங்கள் எதுவும் தேவை இல்லை:-)
இன்னொரு விஷயம் , மார்டி காலத்தில் பின்னோக்கி சென்று கால இயந்திரம் ஒன்றை எப்படி செய்வது என்று டாக்குக்கு சொல்கிறான். அதன் படி டாக் இயந்திரம் செய்கிறார். அதே இயந்திரத்தை வைத்துக் கொண்டு டாக் எதிர்காலத்தில் மீண்டும் கடந்த காலத்துக்கு செல்கிறான். இங்கே ஒரு LOOP வருகிறது. அப்படியானால் கால இயந்திரத்தை உண்மையில் யார் கண்டுபிடித்தது? பாம்பு தன் வாலைக் கடித்து தன்னைத் தானே முழுங்குவது போல இது ஒரு முடிவில்லாத வளையம்.
இப்போது நான் கடந்த காலத்தில் பயணித்து ஐன்ஸ்டீன் இளைஞராக இருக்கும் போதே அவரிடம் ரிலேடிவிடி பற்றி சொல்கிறேன் என்றும் அதை வைத்துக் கொண்டு அவர் தன் ரிலேடிவிடி பற்றிய பேப்பர்களை வெளியிட்டார் என்றும் வைத்துக் கொண்டால் யார் உண்மையிலேயே ரிலேடிவிடியை கண்டுபிடித்தது? அதே மாதிரி நீங்கள் காலத்தில் பயணித்து
ரகுமானிடம் என்னவளே அடி என்னவளே என்ற பாட்டுக்கான டியூனை அவரிடம் சொல்லி அவர் அதை இசையமைத்தால் யார் உண்மையிலேயே அதை இசையமைத்தது? அப்பா அம்மா இல்லாமல் குழந்தை பிறக்க முடியுமா? கடந்த காலப் பயணம் இது போல நிறைய லூப் களை உண்டாக்குகிறது. SPACETIME DIAGRAM களில் இந்த மாதிரி வளையங்களுக்கு அனுமதி
இல்லை.
இன்னொன்று மார்டி கடந்த காலத்துக்கு செல்லும் போது அவன் அம்மாவின் உடலில் உயிர்செல்களாக (அல்லது அப்பாவின் உடலில்??????????) தான் தன்னை உணர முடியுமே தவிர அம்மாவுடன் காபி டேயில் உட்கார்ந்து கொண்டு காபியெல்லாம் குடிக்க முடியாது. நான் நேற்றுக்கு காலப்பயணம் செய்ய முடிந்தால் நான் (இன்றைய நான்) நேற்றைய நானுடன்
கை குலுக்க முடியுமா? இல்லை நான் என்னை நேற்றைய நானாக உணர்வேனா?
படத்தில் மார்ட்டியின் பெற்றோர்கள் சந்திக்கும் வாய்ப்பு குறையும் போது அவனது கை மெல்ல மறைகிறது. சரி ஒரு திரைப்படத்தில் இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் நிஜத்தில் மார்ட்டியின் உடல் அணுக்கள் அப்படி உடனே மறைந்து போய் விடாது. இயற்பியலின் நிறை அழிவின்மை விதி (Law of conservation of mass)இதை தடுக்கிறது.
படத்தைப் பாருங்கள் கால-வெளி வரைபடத்தில் இயற்பியல் வளையங்களை (loop ) அனுமதிப்பதில்லை. வெளியில் A என்ற புள்ளியில் புறப்பட்டு B என்ற புள்ளிக்கு சென்று மீண்டும் B யில் இருந்து A க்கு வர முடிகிறது. ஆனால் காலத்தில் இது சாத்தியம் இல்லை A B C ...என்று மேலே ஏறிக் கொண்டே இருக்கிறது. அதாவது காலத்தின் குறி எப்போதும் ஒரே திசையை நோக்கியே இருக்கிறது. வெளியில் பூமராங் ஒன்று புறப்பட்டு மீண்டும் அதே பாதையில் திரும்பி வர முடிகிறது. ஆனால் அது வெளியில்
திரும்பி வருகிறதே தவிர காலத்தில் திரும்பி வருவதில்லை. எனவே காலவெளி வரைபடத்தில் Y அச்சை சார்ந்த வளையங்கள் சாத்தியம் இல்லை.
கடந்த காலத்துக்கு சென்று நீங்கள் உங்கள் பாட்டியை கொன்று விட்டால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட புதிர்களை காலப்பயணம் ஏற்படுத்தினாலும் அது இன்னும் பிக்சன் எழுத்தாளர்களுக்கு ஒரு வற்றாத கற்பனை ஊற்றாக இருக்கிறது.
back to the future கதையை மறுபடியும் படியுங்கள்..எவ்வளவு அழகாக அதை எழுதியிருக்கிறார் அதன் இயக்குனர்? சரி ஒரு கேள்வி. கதையில் வருவது போல மார்டி ஏன் மறைந்து போக வேண்டும்? இந்த இடத்தில் இயக்குனர் ஒரு தவறு செய்து விட்டார். மார்டி மறைந்து போனால் அவர்கள் பெற்றோர் சந்திப்பு இன்னும் எளிமையாகி அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு மார்டி என்ற மகனை பெறுவார்கள். அவன் கடந்த காலத்துக்கு வந்து (ஏனோ) மறைந்து போவான். அதாவது தன்னை உருவாக்கவே அவன் மறைந்து போகிறானா? அபத்தம்..
மேலும் மார்டி அந்த மின்னலை தவற விட்டு விட்டு கடந்த காலத்திலேயே தங்கி விட்டிருந்தால் என்ன ஆயிருக்கும்? அவர்கள் பெற்றோர்கள் கல்யாணம் செய்து கொண்டு குழந்தை மார்டி பிறக்கும் . அப்படியென்றால் இரண்டு மார்டி? அய்யோ தலை சுற்றுகிறது..
சமுத்ரா
14 comments:
இதற்கெல்லாம் பதிலை நம்ம சூப்பர் ஸ்டார் எப்பவோ சொல்லிட்டாரே!!!
“பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது” அது போல இந்த மாதிரி படம் பார்த்தா அனுபவிக்கனும்,ஆராயக் கூடாது”
ஆனால், உங்கள் கேள்விகள் எல்லாம் எனக்கும் முளைத்தது..
ஹாஹஹா, இது loop அல்ல loopக்கு அப்பா போல...........
கால பயணத்தில் வேறு எதோ அறியப்படாத பொக்கிஷம் உள்ளது என்பது மட்டும் உண்மை.
நிச்சயம் ஒரு நாள் அந்த ரகசியம் வெளிப்படும்.
Interesting, இந்த Type'ல ஒரு தொடர்கதை படிச்சேன்.."http://hareeshnarayan.blogspot.com/2010/08/blog-post.html"
//அய்யோ தலை சுற்றுகிறது..//
எனது கடவுள் குறித்த சிந்தனையும் இது போன்றுதான், அது குறித்த கேட்கலாம் என்ற அந்த SMS-க்கு மேற்கொண்டு தொடராத வண்ணம் உங்கள் பதில் அமைந்திருந்தால் அதனை அப்படியே விட்டுவிட்டேன்!
:-)
சமுத்ரா...கொஞ்சம் பொறுமையா வாசிச்சேன்.நடக்கிற காரியமா இதெல்லாம் !
Parallel Universes சாத்தியமாக இருந்தால் காலப்பயணம் சாத்தியம்...
ரொம்ப யோசிக்கறீங்க..
ஆங்கில பட சுருக்கங்கள் அருமை...
இந்த நிமிடம் இந்த நொடி சுற்றியது சுற்றியது தான் எனும் பௌதிகத்தை மனம் புத்தி அறிவு இத்யாதிகள் உணர்ந்தாலும் ,கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கிய பயணம்...எதிர் காலத்தை நோக்கி முன்னோக்கிய பயணம் என கால இயந்திர கற்பனை எத்தனை காலம் தாண்டினாலும் உயிர்ப்பானது....
That is my favorite movie...
டெக்யான்கள் த்வைத ஹரியை விட உயர்ந்தவையா?. ஹ ஹ ஹ ஹா நல்ல கற்பனைத் துகள்கள்
ஒளியை விட வேகத்தில் பயணம் செய்யும் டெக்யான்கள் என்பது ஈதர் என்பதைப்போல கான்சப்டிற்காக செய்த கற்பனையா இல்லை சாத்தியங்கள் உள்ளனவா?
இந்த மாதிரிக் கதைகள் சிந்திப்பதற்கும், கற்பனைக்கும் நிறைய வாய்ப்புகள் தரும். இந்தக் காலப் பயணத்தில் மார்டியை ஒரு இன்விசிபில் மனிதனாகக் கற்பனை செய்து பார்த்தால் எப்படியிருக்கும்.?
பாம்பு தன் வாலைக் கடித்து தன்னைத் தானே முழுங்குவது போல இது ஒரு முடிவில்லாத வளையம்.//
பகிர்வு சிறப்பாக இருக்கிறது.
இதில் குறிப்பிட்டுள்ள வேகம் தவறு. அந்த கார் 88 மைல்/மணி வேகத்தில் செல்ல வேண்டும். அதாவது 141.622 கி.மீ/மணி வேகத்தில் செல்ல வேண்டும்.
இதில் குறிப்பிட்டுள்ள வேகம் தவறு. அந்த கார் 88 மைல்/மணி வேகத்தில் செல்ல வேண்டும். அதாவது 141.622 கி.மீ/மணி வேகத்தில் செல்ல வேண்டும்.
Post a Comment