இந்த வலையில் தேடவும்

Monday, May 7, 2012

கலைடாஸ்கோப்-63

லைடாஸ்கோப்-63 உங்களை வரவேற்கிறது.

[

நரசிம்மராவாகவே இருந்தாலும் பல் டாக்டரிடம் பல்லைக் காட்டித் தான் ஆக வேண்டும் என்பார்கள்.ஈறுகளில் பயங்கர வலி என்று பல் டாக்டரிடம் போனதற்கு 'உங்கள் பல் வரிசை' சரியாக இல்லை.ஒரு வருடம் 'கிளிப்' போட்டுக் கொள்ளுங்கள்.வரிசை சரியில்லை என்றால் ஈறுகளில் FOOD PARTICLES சிக்கிக் கொண்டு அடிக்கடி இந்தப் பிரச்சினை வரும் ' என்றார். சரி என்று ஒப்புக் கொண்டதற்கு இந்தியன் கிளிப் என்றால் 8000 ரூபாய் ஃபாரின் கிளிப் (?) என்றால் 12000 ரூபாய் எது வேண்டும் என்றார்.நமக்கு தான் ஃபாரின் என்றவுடன் ஓர் இனம் புரியாத மோகம் வருமே , ஃபாரினே போடுங்க டாக்டர் என்று சொன்னதற்கு 'வெயிட், முதலில் உங்களுக்கு சில பற்களைப் பிடுங்க வேண்டும்;அப்ப தான் மற்ற பற்கள் நகர்ந்து செட் ஆவதற்கு வழி கிடைக்கும்' என்றார்.(இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதா?) சரி என்ன செய்வது? வாழ்க்கையில் சில விஷயங்களை அடைய வேண்டும் என்றால் சில விஷயங்களை இழந்து தான் ஆக வேண்டும் (இப்படியெல்லாம் சொல்லி நமக்கு நாமே சில சமயம்  சமாதானம் சொல்லிக் கொள்ளவேண்டியது தான் :( ) என்று பிறந்ததில் இருந்து என்னுடனேயே வந்த என் பற்கள் சிலவற்றை இழக்கத் துணிந்தேன்.
 
'பல்லைப் பிடுங்கிய அடுத்த இரண்டு மூன்று நாள்கள் நரகம்' என்று கேட்டிருக்கிறேன். அதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். பிடுங்கும் போது லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து விடுவதால் ஒன்றும் தெரிவதில்லை.அதன் பிறகு இரண்டு நாள் தயிர்சாதம் கூட சாப்பிட முடியாமல் அவதிப்பட வேண்டும். பல் எடுத்த பகுதி பயங்கரமாக வீங்கி விடும். BITING PATTERN மாறுவதால் உணவை மெல்ல முடியாமல் வாய் தவிக்கும்.பேச முடியாது. [அது என்னவே பல் பிடுங்கிய நாளில் தான் பழைய நண்பர்கள் எல்லாம் 'என்ன மச்சி, ஃப்ரீயா இருக்கயா என்று ஃபோன் பண்ணி கடுப்பேற்றுவார்கள்].ஆபீசில் I CANT TALK என்று போர்டை எழுதி வைத்து விட்டேன்.[தீமையிலும் ஒரு நன்மை இருக்கிறது பாருங்கள்] எப்படியோ பல் பிடுங்கும் படலம் முடிந்து வெற்றிகரமாக கிளிப்  போடப்பட்டது. 
 
கிளிப் போட்ட அடுத்த சில வாரங்களும் நரகம் என்று சொல்லவும் வேண்டுமோ? பல்லில் ஏதோ பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போல இருக்கும்.பிரஷ் செய்வது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும். [ஸ்பெஷல் பிரஷ் தருவார்கள்].தூங்க முடியாது. வாய், ஏதோ பலகாரம் தான் வைத்திருக்கிறார்கள் என்று எச்சிலை அதிகம் சுரக்குமாம். எனவே படுத்தால் சின்னப் பாப்பா மாதிரி எச்சில் வழிய ஆரம்பிக்கும்.கம்பி வாயின் உட்புறத்தில் உரசி புண்கள் வரும். சரி. இதெல்லாம் முதல் சில
வாரங்களுக்கு தான். எப்படியோ எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. இப்போது கிளிப் இருப்பதை உடலும் மனமும் மறந்து விட்டன. It's become another body part! இன்னும் கீழ் வரிசை செட் ஆகவில்லை; எலாஸ்டிக் போட்டு இழுக்க வேண்டும்.
ப்ளூ ரிங் போட வேண்டும் என்று இப்போது வாயின் உள்ளே ஒரு காயலான் கடையே உள்ளது.சரி இன்னும் நாலு மாதம் தானேஇந்தக் கருமாந்தரத்தை எல்லாம் பொறுத்துக் கொள்ளலாம் என்றால் The story is not over yet. கிளிப்பை எடுத்ததும் பல் மீண்டும்
பழைய வரிசைக்கு நகராமல் இருக்க RETAINER என்று ஒரு சமாசாரத்தை போட்டுக் கொள்ள வேண்டுமாம். நல்ல புன்னகைக்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை.What's the cost of smile? அப்படிப்பட்ட புன்னகையை இயற்கையாகவே உங்களுக்கு கடவுள் கொடுத்திருந்தால் எங்களை எல்லாம் நினைத்துக் கொண்டு அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!

[[

பெண்கள் , குறிப்பாக காதலிகள் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு லவ் பண்ணும் போது அவர்கள் ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டார்கள் என்பது. பர்ஸ் மறந்து விட்டேன், நாய்க்குட்டிக்கு வைத்திய செலவு, ஏ.டி.எம்.வேலை செய்யவில்லை என்று ஏதோ சாக்கு சொல்லி பே பண்ணும் நேரத்தில் எஸ்கேப் ஆகி விடுவார்கள்  என்பது. இது உண்மையா என்று ஆபீசில் சக பெண் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது 'உண்மையில்லை' என்று சொன்னார். இப்போது காலம் மாறி விட்டதாகவும் பையன்கள் உஷாராகி விட்டதாகவும்
சொன்னார்.[நமக்கு தான் இந்தக் காதல் கத்திரிக்காய் இவற்றில் அனுபவமே இல்லையே.. மேலும் Men do not make pauses at women who wear glasses என்பது போல Girls do not have slips for the guy who wears clips என்பதால் காதல் கீதல் எல்லாம் இன்னும் அலர்ஜி ஆகி விட்டது]. இப்போதெல்லாம் பையன்கள் ஒரு நாள் நான் செலவழித்தால் மறுநாள் நீ செலவழி..ஒரு நாள் நான் பானிபூரி வாங்கிக் கொடுத்தால் மறுநாள் நீ பேல்பூரி வாங்கிக் கொடு ; ஒருநாள் நான் பெட்ரோல் போட்டால் மறுநாள் நீ போடு என்று CUT N RIGHT ஆக சொல்லி விடுகிறார்களாம். (கையில் ஒரு டேலி சீட் இல்லாதது தான் பாக்கி )எனவே காதலிப்பது என்பது இரு பாலருக்கும் செலவு தான். திரைப்படங்களில் காட்டுவது எல்லாம் டூ மச். இப்போதெல்லாம் ஒரு பெண் பர்சில் நயா பைசா (அல்லது கிரெடிட் கார்டு த்யாதிகள்)இல்லாமல் டேட்டிங் எல்லாம் போக முடியாது.


[[[
சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு படிக்கக் கிடைத்தது.

சில உதாரணங்கள்:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று

Leaving ripe fruits the raw he eats
Who speaks harsh words when sweet word suits.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோருக்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

They lead a high-souled manly life
The pure who eye not another's wife.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூ
ம்
உண்பதூ
ம் இன்றிக் கெடும்.

Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

They gather fame who freely give
The greatest gain for all that live.

இன்பத்துப் பாலில் இருந்து ஒன்று:


நீங்கின் தெறூம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

Away it burns and cools anear
Wherefrom did she get this fire?

[[[[

இந்த 'பரிட்சையில் பிட்டு அடிப்பது' என்பது எமக்கு (நித்யானந்தா ஸ்டைல்) எப்போதும் அலர்ஜியாகவே இருந்து வந்துள்ளது. அந்தக் கருமத்தை கண்ட இடங்களில் ஒளித்து வைத்துக் கொண்டு பார்த்து விடுவார்களோ என்று பயந்து கொண்டு எறும்பு எழுத்தைப் படித்துக் கொண்டு,எங்கெங்கே எந்த பிட்டு இருக்கிறது என்பதற்கு ஒரு இன்டெக்ஸ் பிட்டு வைத்துக் கொண்டு இப்படி கஷ்டப்படுவதற்கு பேசாமல் பாடத்தைப் படித்துக் கொண்டு போய் விடலாம் என்பது என் பாலிசி. 
 
ஆனால் பிட்டே எடுத்துக் கொண்டு போகாமல் சமர்த்தாக நேர் நேர் தேமா என்று மனப்பாடம் செய்து கொண்டு போவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பரீட்சை ஹாலில் நாம் தேமா  என்று சாரி தேமே என்று நாம் உண்டு நம் பேப்பர் உண்டு என்று உட்கார்ந்திருந்தாலும் பின்னால் இருந்து எவனாவது
முதுகை சொரிவான்.அது ஓர் உலகமகா தர்ம சங்கடம்.அவனைத் திரும்பிப் பார்க்காமலும் இருக்க முடியாது.ஏன் என்றால் அவன் எல்.கே.ஜி யில் நமக்கு ஸ்லேட் பென்சில் கொடுத்து உதவிய உயிர் நண்பன். அதே சமயம் உதவி செய்யவும் முடியாது. அன்று வந்திருக்கும் investigator முகம் வேறு  சிம்ம சொப்பனமாக இருக்கும்.அவர் பார்க்காத போது அவசரமாகத் திரும்பி எ, பி, சி என்று பரதநாட்டிய முத்திரைகளை காட்ட வேண்டி இருக்கும். ஒரு முறை ஒரு துணிகரமான பையன் என் ANSWER பேப்பரையே உருவி எடுத்துக் கொண்டு விட்டான்.அது திரும்பி வரும் வரையில் திருவிழாவில் குழந்தையைத் தொலைத்த தந்தையின் மனநிலையில் இருந்தேன். என்ன தான் சொல்லுங்கள் பிட்டு அடிப்பது
என்பது ஒரு சுவாரஸ்யம் தான் ...அந்த சுவாரஸ்யத்தை,திரில்லை மிஸ் செய்து விட்டோமோ , ஒரு முறை (
ஜட்டியில் ஒளித்து)பிட்டு எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.பிட்டு என்ற எண்ணமே வராமல் மாணவர்களை புரிந்து கொண்டு தேர்வு எழுதச் செய்யும் கல்வி முறை இன்னும் நம்மிடம் வராததும் வேதனையாக இருக்கிறது.

[[[[[
தற்போது EDUCATION என்பதும் INDUSTRY என்பதும் இருவேறு track -களாக உள்ளன. என்ன சொல்கிறேன் என்றால் ஒரு மாணவன்/மாணவி காலேஜ் படிப்பு முடிக்கும் வரை தான் எந்த வேலையில் எந்த INDUSTRY யில் சேருவோம் என்பது தெரிவதில்லை.ஒரு மாணவன் படிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து தான் E யும் I யும்
ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. INDUSTRY LINKED EDUCATION (ILE) என்று ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதாவது ஒரு இண்டஸ்ட்ரி ஒரு குழந்தையை , ஒரு சிறுவனை(சிறுமியை) இவன்தான் நாளை என் கம்பெனிக்கு இஞ்சினியர் என்ற அசாத்தியப் பொறுமையுடனும் தொலைநோக்குடனும் டெக்னிகலாக தத்து எடுத்துக் கொள்வது. அவன் படிப்பு செலவை பெற்றோர்கள் மீது திணிக்காமல் தாங்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.அவனுக்கு இண்டஸ்ட்ரியின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் சிறுபிராயத்தில் இருந்தே சொல்லித் தருவது. இப்படி செய்தால் அவர்களும் இன்டஸ்ட்ரிக்கு LOYAL ஆக இருப்பார்கள் ; வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே கம்பெனி மாற மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.( செஞ்சோற்றுக் கடன்!) இதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் நன்மை தான். சமூக சேவை செய்த மாதிரியும் இருக்கும். தனக்குத் தேவையான திறமை வாய்ந்த தொழிலாளியைத் தேர்ந்தெடுத்த திருப்தியும் இருக்கும்.இப்போது இருக்கும் HIRING process Arranged marriage மாதிரி.நேற்று வரை யாரென்று தெரியாதவர்கள் இன்று முதல் கூடி வாழும் அபத்தம் .ILE என்பது LOVE marriage . ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின்னர் ஒன்று கூடி இயங்குவது. பார்க்கலாம். நம் கல்வியாளர்கள் எதிர்காலத்தில் ILE யை செயல்படுத்துவார்களா என்று.

[[[[[[

இஞ்சி தின்ற குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டது போதும். இப்போது கொஞ்சம் சிரியுங்கள்.

ஓஷோ ஜோக் (ஸ்)


*ஒரு பெண் முல்லா நசுருதீனிடம் , " நீ என்னைக் காதலிக்கிறாயா'? எனக் காதில் கிசுகிசுத்தாள்.
முல்லா "கண்டிப்பாக , நான் உன்னைக் காதலிக்கிறேன், அதில் என்ன சந்தேகம்' எனப் பதில் கூறினார்.
"அப்படியானால் என்னைத் திருமணம் செய்து கொள்வாயா" என்று அந்தப் பெண் கேட்டாள்.
முல்லா 'இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தை விட்டு விட்டு ஏன் வேறு விஷயத்துக்கு மாறுகிறாய்' என்றார்.

*இரண்டு பாகிஸ்தானிகள் சொர்கத்தின் தங்கக் கதவருகே வந்தார்கள்

செயின்ட் பீட்டர் ' அய்யோ, நீங்கள் எல்லாம் இங்கே வரக்கூடாது, அப்படியே திரும்பிப் போய் விடுங்கள் ' என்று கத்தினார்.

பாகிஸ்தானிகள் 'அப்படித் தான் வருவோம். தடுத்தால் குண்டு வைத்து விடுவோம்' என்று முன்னேறினார்கள்.

பீட்டர் உள்ளே ஓடிப்போய் இயேசுவிடம் விஷயத்தை சொன்னார்.
இயேசு ' பீட்டர், எதிரிகளையும் நேசிக்க வேண்டும் என்று நான் உனக்கு சொல்லவில்லையா' 'போய் அவர்களை உள்ளே விடு' என்று பதிலளித்தார்.

பீட்டர் வாசல் வரை சென்று விட்டு ஓடி வந்து 'ஜீசஸ், ஜீசஸ், காணவில்லை' என்றார்.

இயேசு 'சரி , விடு, அவர்கள் போனால் போகட்டும்' என்றார்.

பீட்டர் ' அது இல்லை ஜீசஸ், வாசலில் இருந்த தங்கக் கதவுகளைக் காணவில்லை' என்றார்.


சமுத்ரா




13 comments:

Philosophy Prabhakaran said...

உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா...

உங்க சக பெண் ஊழியர் Exceptional Case... இன்னமும் பசங்க தான் செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள்...

// சுத்தானந்த பாரதி //

நல்லவேளை இது ஜாக்கி ப்ளாக் அல்ல...

TamilCC said...

பல் பிடுங்குவதில் இவ்வளவு சிரமம் இருக்கா? வேப்பம் குச்சியே போது போல இருக்கு...

MARI The Great said...

ஒரு ஆணுக்கு காதலிக்க தேவையான தகுதி 'கனமான மணி பர்ஸ்' என்று என் தலைவர் 'சித்தானந்தா' கூறியிருக்கிறார் சகோ ..!

பால கணேஷ் said...

கலைடாஸ்கோப் இப்போதும் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது.

VELU.G said...

நீங்கள் இன்னொரு பல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டிருந்திருக்கலாமே?. மருத்துவம் தொழிலாகிவிட்ட படியால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேணடும்.

ஒரு சாதாரண பல்வலிக்கு இவ்வளவு விலை அதிகம் பாஸ்.

நம் உடலில் கைவைக்கும் வைத்தியத்திற்கு இரண்டு மூன்று ஆலோசனைகள் பெற்று உறுதி செய்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்.

விஸ்வநாத் said...

கடைசி ஜோக் - தீவிரவாதிகள் என்று போட்டிருக்கலாம்;

Uma said...

//இப்போதெல்லாம் ஒரு பெண் பர்சில் நயா பைசா (அல்லது கிரெடிட் கார்டு த்யாதிகள்)இல்லாமல் டேட்டிங் எல்லாம் போக முடியாது. // appadiyellam onnum illai sir...

பாலா said...

நல்லா சுவாரசியமாக இருந்தது. அதிலும் அந்த பல் கிளிப் சம்பவம் அருமை.

சேலம் தேவா said...

அந்த ILE முறை அருமையான யோசனை.எப்போதும் போல் சுவாரஸ்யம்.

இராஜராஜேஸ்வரி said...

சமூக சேவை செய்த மாதிரியும் இருக்கும். தனக்குத் தேவையான திறமை வாய்ந்த தொழிலாளியைத் தேர்ந்தெடுத்த திருப்தியும் இருக்கும்.

சிறப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

நீண்ட நாள் வாழ்வது எப்படி said...

டாக்டர்களும் தேர்வுக்கு ஹைடெக் பிட் அடிக்கிறார்களாம். அதைத் தடுக்க இவர்களும் முனைப்போடு பாடுபடுகிறார்கள். கேட்கும் போது மஹா கேவலமாக இருக்கிறது. தண்டனைக் குறைவுதான் குற்றங்க்களை ஊக்குவிக்கிறது.

Aba said...

//சுத்தானந்த பாரதி//

அறிமுகத்துக்கு நன்றி... ரீஷேர் பண்ணிட்டேன்... :) (G+ பக்கம் இன்னும் வரலையே? பிசியோ?)

#பிட்

நான் பொதுத்தேர்வுகளுக்கு ஸ்ட்ரிக்டாக பிட், காபி எல்லாம் அடிப்பதில்லை... வகுப்புத்தேர்வுகளில் பக்கம் பக்கமாக... ஆனால் இப்படியான 'கறுப்பு மதிப்பெண்கள்' ஐந்தைத் தாண்டிவிடாமல் பார்த்துக்கொள்வேன்... பொதுப்பரீட்சைல பிரச்சனை வராம இருக்கறதுக்கு...

//தற்போது EDUCATION என்பதும் INDUSTRY என்பதும் இருவேறு track -களாக உள்ளன.//

என்ன சார் சொல்றீங்க? நம்ம ஏரியால எல்லாம் த்ரீ இடியட்ஸ்-ல வர்ற மாத்த்ரி பிறக்கும்போதே டாக்டரா இஞ்சின்யரான்னு முடிவு பண்ணிடறாங்க.. முடியல...

Nunez said...

உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா... உங்க சக பெண் ஊழியர் Exceptional Case... இன்னமும் பசங்க தான் செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள்... // சுத்தானந்த பாரதி // நல்லவேளை இது ஜாக்கி ப்ளாக் அல்ல...