இந்த வலையில் தேடவும்

Thursday, April 26, 2012

லிட்டில் ஜானி ஜோக்ஸ்

ஸ்கூல் டீச்சர் தன் மாணவர்களைப் பார்த்து
'குழந்தைகளே' கடவுள் எங்கே வசிக்கிறார் என்று கேட்டாள்.
ரோஸ் எழுந்து 'கடவுள் சொர்க்கத்தில் வசிக்கிறார் டீச்சர்' என்றாள்.
'வெரி குட் ரோஸ்' நீ உட்கார் என்றாள் டீச்சர்.
இப்போது ஸ்டெல்லா எழுந்து 'என் இதயத்தில் வசிக்கிறார் டீச்சர்' என்றாள்.
'வெரி குட்  நீ உட்கார் 'என்றாள் டீச்சர்.
வேறு யாராவது சொல்கிறீர்களா என்று டீச்சர் கேட்க, லிட்டில் ஜானி அவசரமாக கை உயர்த்தினான்.
'டீச்சர், கடவுள் எங்கள் வீட்டு பாத்ரூமில் வசிக்கிறார்' என்றான்.
இதைக் கேட்டு திடுக்கிட்ட டீச்சர் ' ஜானி, அது எப்படி என்று சொல்கிறாயா' ? என்றாள்.
லிட்டில் ஜானி ' தினமும் காலையில் எழுந்து அப்பா பாத் ரூமுக்கு செல்லும்போது வெளியில் இருந்து 'அடக் கடவுளே, நீ இன்னும் வெளியே வரலையா'? என்று கேட்பார் என்றான்.
********************

லிட்டில் ஜானி ஸ்கூலில் இருந்து வந்து தன் அம்மாவிடம் 'மம்மி, இன்று என்னை நான் செய்யாத ஒரு விஷயத்துக்காக பெஞ்சில் ஏறி நிற்க வெச்சுட்டாங்க ' என்றான்.

அம்மா, 'அடப்பாவமே, வருத்தமா இருக்கு, என்ன அது?" என்றாள்

'அதுதான் மம்மி, ஹோம் வொர்க்..'

***************


லிட்டில் ஜானி ஒரு வீட்டின் வெளியே நின்று கொண்டு காலிங் பெல்லை அழுத்த முயற்சி செய்வதை பாதிரியார் ஒருவர் பார்த்தார்.

ஜானி மிகவும் சின்னப்பையன் என்பதால் அவனுக்கு பெல் எட்டவில்லை.

'நான் உனக்கு உதவுகிறேன் மை சன்' என்று சொன்ன பாதிரியார் அவனுக்கு பெல்லை அடிக்க உதவி செய்தார்.

'மை சைல்ட் , வேறு ஏதாவது உதவி வேண்டுமா ' என்று கேட்டார் பாதிரியார்.

ஜானி  ' ஃபாதர், இப்போது ஓடுவதற்கு ரெடி ஆகுங்கள் ' என்றான்.

************************

லிட்டில் ஜானியின் ஸ்கூலில் பிள்ளைகளை ஒரு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப் போனார்கள்.
அங்கே MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.
இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஜானி  'அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க' என்றான்.
'இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' என்றார் இன்ஸ்பெக்டர்

'அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே' என்றான் ஜானி.

***********************

ஸ்கூலில் டீச்சர் பிள்ளைகளைப் பார்த்து 'உங்க வீட்டில் போன வாரம் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ' என்று ஒன்றை சொல்லுங்கள் என்றாள்.

லிட்டில் ஜானி எழுந்து 'எங்க பாட்டி கிணத்துல விழுந்துட்டாங்க' என்றான்.

'அடப்பாவமே, இப்ப உங்க பாட்டி எப்படி இருக்காங்க' என்றான்.

'தெரியலை மிஸ், ஏன்னா நேத்து அவங்க உதவி கேட்டு சத்தம் போடறதை நிறுத்திட்டாங்க' என்றான் ஜானி.

*************************

ஸ்கூலில் டீச்சர் பிள்ளைகளைப் பார்த்து 'இங்கே யார் யார் எல்லாம் உங்களை முட்டாள் னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க' என்றாள்.

யாருமே எழுந்து நிற்கவில்லை.

மிகுந்த தயக்கத்துக்குப் பின் லிட்டில் ஜானி எழுந்து நின்றான்.

டீச்சர் ' சரி, அப்படீன்னா நீ ஒரு முட்டாள்?' என்று கேட்டாள்.

'இல்லை மிஸ், நீங்க தனியா நிற்கறதைப் பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் எழுந்தேன்' என்றான் ஜானி.

******************************

லிட்டில் ஜானி ஒரு பொம்மைக் கடையில் நுழைந்து ஒரு பொம்மை விமானம் வாங்கினான்.
கவுன்டரில், பிள்ளைகள் வைத்து விளையாடும் விளையாட்டு பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்தான்.

' இதப் பாரு கண்ணா , என்ன இது?' என்றான் கடைக்காரன்.

'பணம்' என்றான் ஜானி.

'ஆனால் இது உண்மையான பணம் இல்லை'

'அஸ்கு புஸ்கு இந்த ப்ளேன் மட்டும் என்ன உண்மையான ப்ளேனா?' என்றான் ஜானி.
 
*********************


ஸ்கூலில் டீச்சர் பிள்ளைகளைப் பார்த்து குழந்தைகளா கோழி என்ன கொடுக்கும் என்று கேட்டாள்.
லிட்டில் ரோஸ் எழுந்து 'முட்டை' என்றாள் .
வெரி குட் என்ற டீச்சர் செம்மறி ஆடு என்ன கொடுக்கும்' என்றாள்.
லிட்டில் ஜார்ஜ் எழுந்து 'கம்பளி' என்றான்.
வெரி குட் என்ற டீச்சர் 'எருமை என்ன கொடுக்கும்' என்றாள்.
லிட்டில் ஜானி பின்னால் இருந்து குரல் கொடுத்தான் 'ஹோம் வொர்க்!
**************************

லிட்டில் ஜானி ஒரு நாள் மாலை ஸ்கூலில் இருந்து வந்தவுடன் அம்மாவைப் பார்த்து  மம்மி சின்னப் பொண்ணுங்களுக்கு குழந்தை பிறக்குமா?' என்று கேட்டான்.
'கண்டிப்பாக இல்லை ஜானி ' என் கேட்கிறாய்? என்றாள் அம்மா.
ஜானி வாசலை நோக்கி குரல் கொடுத்தான் 'பாரு மேரி, நான் சொல்லலை
நாம அப்படி பண்ணா ஒண்ணுமே நடக்காது' என்றான்.

****************************
மூன்று பையன்கள் தன் அப்பாக்களைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள்.

'எங்க அப்பா பேப்பர்ல ஏதோ கிறுக்கறார். அதை கவிதைன்னு சொல்றார்.
அதுக்கு ஐநூறு ரூபாய் கொடுக்காறாங்க' என்றான் முதல் பையன்.

இரண்டாம் பையன் ' எங்க அப்பா பேப்பர்ல ஏதோ கிறுக்கறார். அதை
பாட்டுன்னு சொல்றார்.
அதுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காறாங்க' என்றான்

லிட்டில் ஜானி 'இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. எங்க எப்பா ஏதோ பேப்பர்ல உளறி வச்சுருக்கறதை சர்ச்ல வாசிக்கிறார். அதை பிரசங்கம் ன்னு சொல்றார்.அதுக்கு அப்புறம் எல்லார் கிட்டயும் காசை வசூல் பண்ண எட்டு பேர் வேண்டியிருக்குன்னா பாத்துக்கோயேன்' என்றான்.

**************************
லிட்டில் ஜானி மம்மியிடம் கிறிஸ்மஸ் -ஸிற்கு ஒரு சைக்கிள் கேட்டான், மம்மி 'நீ இன்னும் வளர வேண்டும்' என்று சொல்லி விட்டாள் .

எனவே ஜானி ஜீசஸ்-ஸிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

'அன்புள்ள ஜீசஸ் , நான் மிகவும் நல்ல ரொம்ப நல்ல பையன்' எனவே எனக்கு ஒரு சைக்கிள் கொடுக்கவும் ...'

இதில் திருப்தி ஏற்படாமல் ஜானி அதைக் கிழித்துப் போட்டு விட்டு மீண்டும் எழுதினான்.

'அன்புள்ள ஜீசஸ், நான் அவ்வப்போது கொஞ்சம் தப்பு பண்ணி இருக்கிறேன்.ஆனால் நான் நல்ல பையன் தான் ;எனவே எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைக்கவும்.'

இதிலும் திருப்தி ஏற்படாமல் ஜானி அதைக் கிழித்துப் போட்டு விட்டான்.
அப்போது வீட்டில் மதர் மேரியின் பொம்மை ஒன்று இருந்தது. அதை எடுத்துப் போய் துணியில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து பரண் மீது வைத்து விட்டு வந்து எழுதினான்:

'ஜீசஸ், நீ உன் அம்மாவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்றால் உடனே
எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைக்கவும்'
*****************************


சமுத்ரா

13 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

எனக்கு மிகவும் பிடித்த ஜோக்ஸ்களில் லிட்டில் ஜானிக்கு முதலிடம். நீங்க நல்ல டீசண்டான ஜோக்ஸா பொறுக்கி எடுத்து போட்டிருக்கீங்க. சிலது எனக்கு புதிது. நன்றி.

AROUNA SELVAME said...

ரசித்து மனம்விட்டு சிரித்தேன். நன்றி.

வரலாற்று சுவடுகள் said...

ஹி ஹி ஹி .., இப்பிடித்தான் சிரிச்சுகிட்டே இருக்கேன் ..! ஹி ஹி ஹி

T.N.MURALIDHARAN said...

ஜோக்ஸ் சூப்பர்

விஸ்வநாத் said...

Sir, where is the answer to the question in your previous post ?

சமுத்ரா said...

The question has been answered in the comments ;) Viswanath.

நிலவன்பன் said...

அவ்வ்வ்வ்

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

G.M Balasubramaniam said...

ரசித்தேன்.!

பாலா said...

நல்ல அருமையான நகைச்சுவைகள்.

Abarajithan Gnaneswaran said...

சூப்பர்... LOL..

//'இல்லை மிஸ், நீங்க தனியா நிற்கறதைப் பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் எழுந்தேன்' என்றான் ஜானி.// :DD

காலிங் பெல் ஜோக்கை வடிவேலு ஒரு படத்திலும், வான்டட் போட்டோ ஜோக்கை பில்லாவிலும் பயன்படுத்தி இருப்பார்கள்...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான நகைச்சுவைகள்.

LawrencE said...

Please don't make fun about religion... Other jokes are nice. :)