இந்த வலையில் தேடவும்

Monday, May 28, 2012

அணு அண்டம் அறிவியல் -66

அணு அண்டம் அறிவியல் -66 உங்களை வரவேற்கிறது.

சில அத்தியாயங்களுக்கு வேறு ஒரு டாபிக் பார்த்து விட்டு நட்சத்திரங்கள் பற்றிய Discussion ஐத் தொடருவோம்.

ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோம், இல்லை தனியாக இல்லை.- இரண்டு எண்ணங்களும் பயத்தை அளிக்கின்றன - ஆர்தூர் க்ளேக்.


செவ்வாயின் நிலப்பரப்புEXTRA TERRESTRIAL LIFE அதாவது பூமியை விட்டு வேறு எங்காவது உயிர்கள் வாழ்கின்றனவா என்னும் தேடல். Are we alone in the universe ? என்னும் கேள்வி வி
ஞ்ஞானிகளை வெகுகாலமாகக் குடைந்து வந்துள்ளது.ஒரு வீட்டுக்குப் புதியதாகக் குடிபோனால் பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் (ஏதாவது ஃபிகர் கிகர் இருக்கிறதா)என்று எட்டிப் பார்க்கும் ஆர்வம் மனிதனுக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் பூமியின் 'பக்கத்து' வீடுகள் கற்பனை செய்யமுடியாத தூரங்களில் இருப்பதால் இந்த பக்கத்து வீட்டு ஆர்வம் இன்னும் ஓர் எல்லையிலேயே இருந்து வருகிறது. நமக்கெல்லாம் தெரிந்த மிகவும் பரிச்சயமான பக்கத்து வீடுகள் நிலா, வெள்ளி, புதன், செவ்வாய் போன்ற நம் அக்கா தங்கை வீடுகள். இவற்றில் உயிர்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது ஆபத்து என்றால் இங்கே நாம் குடியேற முடியாதா என்று ஆசைப்படுகிறார்கள்.இதில் முதல் மூன்றும் மிகவும் முசுடு. உள்ளே யாரும் காலடி எடுத்து வைக்க முடியாத படி கலீஜாக இருக்கின்றன.விருந்தினர்களை வாசலிலேயே விரட்டி அடித்து விடும் வன்னெஞ்சம் அவர்களுக்கு! BEST CHOICE செவ்வாய் என்கிறார்கள்.செவ்வாய் தன்னிடம் வருபவர்களை திரும்பி 'செல்வாய்' என்று சொல்லாமல் அதற்கு ஓரளவு விருந்தோம்பல் குணம் வாய்த்திருக்கிறது. எதிர்காலத்தில் INTER PLANETARY STATION கள் வரலாம். செவ்வாய்க்கு ஹனிமூன் பேக்கேஜுகள் வரலாம். செவ்வாய் விசா வாங்க வேண்டி இருக்கும்.இப்போதே பக்கத்தில் உள்ள கிரகங்களில் ப்ளாட்டுகள் விஜய் டிவியில் சீரியல் நடிகர்களை வைத்து விளம்பரம் போடாத குறையாக விற்பனை ஆகி வருகின்றனவாம்.காசு நிறைய இருந்தால் ஒன்றிரண்டு சைட்டுகளை இப்போதே வளைத்துப் போடவும்.பிற்காலத்தில் உங்கள் தலைமுறைகள் ச்சே கொள்ளுத்தாத்தா மார்ஸ்ல அப்பவே ஒரு சைட்டு வாங்கிப் போட்டிருக்கலாம் என்று நொந்து கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டாம்.சரி. ஜோக்ஸ் அபார்ட்.
ப்ருனோ .


'பூமிக்கப்பால் வாழ்க்கை' என்ற விவகாரத்தை 1600 களில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் தத்துவ ஞானி ஜியோர்டனோ ப்ருனோ . எல்லா ஆதிக்கமும் சர்ச்சின் கைகளில் இருந்த காலம் அது. அப்போது அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் (ரோம் நகரில்) 'சூரியன் என்பது ஒரு நட்சத்திரம்;பூமி சூரியனை சுற்றி வருகிறது. பிரபஞ்சத்தில் இது போல தாய் நட்சத்திரத்தை சுற்றும் ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கலாம்; அதில் வெவ்வேறு உயிரினங்கள் இருக்கலாம்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்.இது பாதிரியார்களை மிகவும் உறுத்தியது. WE ARE EXCLUSIVE என்ற கர்வம் மனிதனுக்கு எப்போதுமே இருந்துள்ளது.பத்தோடு பதினொன்றாக இருக்க மனித மனம் விரும்புவதில்லை. இன்னொரு கிரகம் என்றால் அங்கு வாழ்க்கை சாத்தியம் என்றால் அங்கே உள்ள சர்சுகளில் இருந்து எங்கே பாதிரிமார்கள்,பிஷப்புகள், போப்புகள் தங்களுக்குப் போட்டியாக (?) வந்து விடுவார்களோ என்ற பயத்தில் ப்ருனோ கைது செய்யப்பட்டார். நடுரோட்டில் அவர் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கடைசியில் உயிரோடு எரிக்கப்பட்டார். சூரியன் தான் பூமியை சுற்றுகிறது. பிரபஞ்சம் எங்கும் பூமியில் தான் உயிர்கள் இருக்கின்றன. பூமி போன்ற கிரகங்கள் இல்லை;பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே போப்பு தான். யாராவது மறுத்தால் அவர்களுக்கும் இதே கதி தான் என்று தண்டோரா போடப்பட்டது.


பூமி- பிரபஞ்சத்தின் மையம்


ஆனால் சமீபத்தில் ப்ருனோவின் ஆவி தன் பழி வாங்குதலைத் தொடங்கி உள்ளது.ஒரு மாதத்துக்கு குறைந்த பட்சம் இரண்டு பூமியொத்த கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. Bruno was right; There can be number of Popes in the universe! ஆனால் கிரகங்கள் இருப்பதால் மட்டும் அதில் உயிரினங்கள் இருக்கின்றன என்று சொல்லி விட முடியாது.கிரகங்களை (சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியுடன்) கண்டுபிடிப்பது சுலபம். தாய் விண்மீனின் வெளிச்சத்தில் ஒரு கரும்புள்ளி நகருவதை பார்த்தால் அது ஒரு கிரகம் என்று ஊகிக்கலாம். அந்த கிரகங்களில் டைனோசர்கள் இருந்தாலும் கூட அது தொலைநோக்கியில் தெரியாது. ஏனெனில் உயிர் என்பது ஒரு சிக்கலான விஷயம். வெப்பம், தண்ணீர், ஆக்சிஜன், கார்பன் இவை இருந்தாலும் கூட உயிர் வந்து விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சர்க்கரை, பால், காபித்தூள் இவைகளைக் கலந்தால் இன்ஸ்டன்ட் ஆக காபி வருவதைப் போல அல்ல உயிர்.

FIRST,பூமிக்கப்பால் உள்ள உயிரினங்களைத் தேடும் போது நாம் அதீத கற்பனைகளை விட்டு விட வேண்டும். உயிர் என்றால் அது 'கிட்டத்தட்ட' பூமியில் இருப்பது போலவே இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இன்றி உயிர்கள் இருக்கும்; இரும்பால் ஆன உயிர்கள் (மெஷின்கள்) நடந்து வரும் , ஹைட்ரஜன் பூதங்கள் இருக்கும் என்ற கற்பனைகளை விட்டுவிட வேண்டும். இரும்பால் ஆன உயிர்கள் இருந்தால் அவை இறந்ததும் செல்லரித்துப் போவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்.இது உயிர் சுழற்சியை ஏற்படுத்தாது.

'தண்ணீர்' ஒரு பிரபஞ்ச கரைப்பான் (UNIVERSAL SOLVENT ) என்று நமக்குத் தெரியும்.உடம்புக்குத் தேவையான சத்துக்களை மிக எளிதாக தண்ணீரில் கரைத்து செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.தண்ணீரை செல்லமாக கடவுளின் MIXING BOWL என்று அழைக்கிறார்கள். மேலும் தண்ணீர் மூலக்கூறுகள் ஒன்று ஒன்று ஒட்டிக் கொள்ளும் தன்மை உடையவை. தண்ணீரின் இந்த பசைத் தன்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.[தண்ணீரில் கப்பல் மிதப்பதற்கும் கற்களின் மேல் கப்பல் ஊர்ந்து செல்வதற்கும் ஒப்பிட்டுப் பாருங்கள்]எனவே எத்தனை உயரமாக இருந்தாலும் மரங்கள் தண்ணீரை கீழிருந்து உறிஞ்ச முடிகிறது; மேலும் தண்ணீர் ஒரு heat sink போல செயல்பட்டு ஒரு கிரகத்தின் வெப்பநிலையை MAINTAIN செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.நீரின்றி அமையாது உலகு! எனவே உயிர்கள் இருக்கிறதா என்று தேடும்
விஞ்ஞானிகள் முதலில் அங்கு தண்ணீர் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.[ அதானே , 'தண்ணி' இல்லாம எப்பூடி 'குடி' ஏறறது?]

அடுத்து கார்பன்!

கார்பனின் வெளிக்கூட்டில் அமைந்திருக்கும் நான்கு எலக்ட்ரான்கள் அதை ஸ்பெஷல் ஆக்குகின்றன. தன் கூட்டை நிறைவு செய்யும் வெறியில் அவை தாய்லாந்தில் வீதிகளில் நின்று கஸ்டமர்களை அழைக்கும் விலைமாதர்களை (நெருடலான உதாரணத்திற்கு மன்னிக்கவும்) போல மற்ற தனிமங்களை விரகதாபத்தில் தன்னிடம் ஈர்க்கின்றன. ஆக்சிஜன், ஹைட்ரஜன் , நைட்ரஜன் போன்ற சபல தனிமங்கள் கார்பனுடன் 'உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்று எளிதாக இணைந்து விடுகின்றன. ப்ரோடீன், கார்போ ஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்ற உயிருக்குத் தேவையான விஷயங்கள் கார்பன் பிணைப்புகள் மூலம் எளிதில் கிடைக்கின்றன.கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிக நீளமான கார்பன் சங்கிலிகள் (அறுந்து விடாமல்) கிடைக்கின்றன. டி.என்.ஏ போன்ற உயிர் விதைகளுக்கு இந்த நீண்ட சங்கிலிகள் மிக அவசியம்.சுருக்கமாக சொன்னால் NO CARBON NO CHEMISTRY ! (நோ கெமிஸ்ட்ரி நோ மானாட மயிலாட :) )மிகவும் ரொமாண்டிக் ஆனது இந்தக் கார்பன். எல்லாருடனும் 'அட்ஜஸ்ட்' செய்து போகக் கூடியது.இன்னும் விளங்கும் படி சொன்னால் பிரபஞ்சத்தின் முதல் விலைமகள் கார்பன் தான்.

கார்பனுக்குப் போட்டியாக பிசினஸ் செய்யும் வல்லமை (சக்களத்தி?) சிலிகானுக்கு உண்டு.சிலிகான் கார்பனுடன் ஒத்த வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது.நான்கு பிணைப்புகள் மற்றும் தனிம அட்டவணையில் கார்பனுக்குக் கீழேயே இருக்கிறது. எனவே SILICON BASED LIFE என்பதை நீங்கள் அறிவியல் புனைவுக் கதைகளில் (A Martian Odyssey ) படித்திருக்கக் கூடும்.ஆனால் சிலிகான் பிரபஞ்சத்தில் குறைவாகவே கிடைக்கிறது. கார்பனைப் போல அவ்வளவாக வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை. கார்பனைப் போல மிக நீண்ட சங்கிலிகளை அமைக்காமல் ஆறு மூலக்கூறுகளுக்கு மேலே போனால் முணுக்கென்று கோபித்துக் கொண்டு உடைந்து விடுகிறது.

கார்பன் அதன் எலக்ட்ரான்களுடன் -பார்பதற்கு எம்பெருமான் சுதர்சன சக்கரம் போல இருக்கிறது என்று வியக்கலாம்.


சுவாசிக்கும் போது கார்பன் ஆக்சிஜனுடன் இணைந்து கார்பன்டை ஆக்சைடாக (வாயுவாக) எளிதில் மூக்குவழியே வெளியேறி விடுகிறது. ஆனால் சிலிகான் ஆக்சிஜனுடன் இணையும் போது சிலிகான் டை ஆக்சைடு (சிலிகா) (மணல்)என்னும் திடப்பொருள் கிடைக்கிறது. எனவே நாம் SILICON based life ஆக இருந்தால் மூக்கு வழியாகவும் No.2 போக வேண்டும். ஐந்து வினாடிகளுக்கு ஒரு முறை பாத் ரூம் போகும் அவலம்! GOD IS GREAT! மூக்கு வழியே நொடிக்கு நொடி நாம் வெளியிடும் கழிவு யாருக்கும் தெரிவதில்லை; துர் நாற்றமும் வீசுவதில்லை. 'உன் மூச்சுக் காற்றில் (நம்பர் டூ) நான் வாழ்வேன்' என்று சினிமாப் பாட்டெல்லாம் வேறு எழுதுகிறோம்.

மில்லர்-யூரே ஆய்வு (1953 ) புகழ் பெற்ற ஓர் உயிரியல் (அல்லது வேதிஇயல்)ஆய்வாகும். தண்ணீர், மீத்தேன், அம்மோனியா, ஹைட்ரஜன் போன்ற விஷயங்களை ஒரு பிளாஸ்கில் எடுத்துக் கொண்டு [இந்த விஷயங்கள் தான் பூமியில் உயிர்கள் தோன்றிய போது இருந்தன] அதற்கு மிக மைல்டாக எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தார்கள். ஒரு வாரம் கழித்துப் பார்த்த போது பிளாஸ்கில் அமிமோ அமிலங்கள் உருவாகி இருந்தன.[அமினோ அமிலங்கள் ப்ரோடீனை உருவாக்குகின்றன] பிளாஸ்கில் கொடுக்கப்பட்ட மின்சாரம் அமோனியா மற்றும் மீத்தேனின் கார்பன் பிணைப்புகளை சைலண்டாக உடைத்து அவற்றை REARRANGE செய்து அமினோ அமில சங்கிலிகளை உருவாக்கியது.அதாவது கார்பன் ஒரு வாரத்தில் தன் பாய் ஃபிரண்டை மாற்றிக் கொண்டு விட்டிருந்தது. [நலத்தின் கண் நாரின்மை தோன்றின்.. ஆம் கார்பனின் குலம் சரியில்லை..அவள் என்ன பண்ண முடியும்?]

அடுத்து தன்னைத் தானே படியெடுத்துக் கொள்ளும் தன்மை உடைய
டி.என். மூலக்கூறுகள்! (இவையும் கார்பன் சங்கிலிகள் தான்) உலகில் முதன் முதல் டி.என்.ஏ ஏணி உருவாவதற்கு பூமித்தாய் பல மில்லியன் ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆழ்கடலில் மில்லர்-யூரே ஆய்வை செய்து விட்டு மில்லியன் ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தால் ஒரு DNA மூலக்கூறை நாம் தரிசிக்க முடியும் என்கிறார்கள்.(It's not god; it is time that created life!) தொடர்ச்சியான மின்னல்கள் மூலமும் (நம்ம கார்பன் வந்திருக்காக ,மீத்தேன் வந்திருக்காக , அமோனியா கூட வந்திருக்காக வாம்மா மின்னலு!) கடலுள் வெடித்த எரிமலைகள் காரணமாகவும் இந்த சூப்பிற்கு ஆற்றல் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.PRIMORDIAL சூப் என்னும் இந்த சூப் தான் நம் ஆதி உயிர் குழம்பு.

சில சிக்கலான கார்பன் சங்கிலிகள்


எனவே லாஜிகலாக ஓர் உயிர் உருவாக தண்ணீர், கார்பன் மற்றும் தன்னைத் தானே படிஎடுக்கும் DNA மூலக்கூறுகள் தேவை என்று வைத்துக் கொள்ளலாம்.இதை வைத்துக் கொண்டு பிரபஞ்சத்தில் INTELLIGENT LIFE இருக்கிறதா என்று தேட முடியும். அதாவது தண்ணீர் இல்லாத கிரகங்களை தாட்சிண்யம் இன்றி ஒதுக்கி விடலாம்.தண்ணீர் இருந்து கார்பன் இல்லாவிட்டால் அதையும் ஒதுக்கி விடலாம். பிரபஞ்சத்தில்(காலக்ஸியில்) உயிரினங்களைத் தேடுவதற்கு ட்ராக் சமன்பாடு (DRAKE 'S EQUATION ) உதவுகிறது.


இங்கே,

N = பால்வீதி மண்டலத்தில் இருக்கும் நாகரீகங்களின் எண்ணிக்கை. (நம்மால் தொடர்பு கொள்ள முடிந்த)
R = ஒரு வருடத்தில் நம் காலக்ஸியில் புது நட்சத்திரங்கள் தோன்றும் வீதம்

Fp = அந்த நட்சத்திரங்களில் கிரகம் உள்ள நட்சத்திரங்கள்

Ne = அந்த கிரகங்களில் வாழ்க்கையை support செய்யக்கூடிய கிரகங்கள்

Fl = அந்த கிரகங்களில் வாழ்க்கை தோன்றக்கூடிய கிரகங்கள்

Fi = அந்த கிரகங்களில் 'அறிவுள்ள' உயிர்கள் தோன்றும் கிரகங்கள்

Fc = அந்த உயிரினங்களில் தங்கள் இருப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்ட நாகரீகங்களின் எண்ணிக்கை

L = அந்த நாகரீகங்கள் தங்கள் இருப்பை வெளியில் வெளிப்படுத்தும் காலகட்டம்


(R ) புதிதாகப் பிறந்த நட்சத்திரங்கள் மிக சீக்கிரம் சூரியனைப் போன்ற MAIN SEQUENCE ஸ்டார் ஆகின்றன. ஒரு நட்சத்திரம் வெள்ளைக் குள்ளனாக (white dwarf )வோ சிவப்பு ராட்சசனாகவோ (Red giant ) இருந்தால் அதன் கிரகத்தில் உயிர்கள் தோன்ற முடியாது.எனவே உயிர்கள் தோன்றுவதற்கு புதிய நட்சத்திரங்கள் அவசியம்.நம் காலக்ஸியில் ஒரு வருடத்துக்கு சராசரியாக ஏழு விண்மீன் குழந்தைகள் பிறக்கின்றனவாம்.

நட்சத்திரம் ஜம்மென்று இருந்தாலும் அதில் வாழ்க்கையை தாங்கக்கூடிய கிரகங்கள் இருக்க வேண்டும். அதாவது அதன் Habitable zone னுக்குள். கோள் ரொம்பவே உள்ளே இருந்தால் அதன் தண்ணீர் எல்லாம் ஆவியாகி விடும். ரொம்பவும் தள்ளி இருந்தால் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து விடும்.நம் பூமி இருப்பது போல ஒரு Safer distance இல் இருக்க வேண்டும். Gliese 581 c என்ற பூமி நிகர் (earth like ) கிரகத்தைத் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். (பூமியைப் போல ஐந்து மடங்கு கணம்; வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ்)சமீபத்தில் இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதன் விசேஷம் என்ன என்றால் அதில் முழுவதும் கார்பன் தன் படிக நிலையில் இருக்கிறதாம். கார்பனின் படிக நிலை என்றால் அது வைரம். அதாவது நம் பூமியில் எப்படி மண் (சிலிகா)இருக்கிறதோ அது போல அங்கே வைரம். தூரத்தில் இருந்து பார்த்தால் கிரகம் எப்படி ஜொலிக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆனாலும் சில
விஞ்ஞானிகள் ட்ராக் சமன்பாடு முற்றிலும் தவறு என்கின்றனர். ஒரு ஆறேழு காரணிகளை வைத்துக் கொண்டு உயிர்கள் இருப்பதை கணிக்க முடியாதது என்கின்றனர்.Life is a product of infinite number of possibilities. IOW, Drake's equation should have infinite number of variables. ட்ராக் சமன்பாடு நிறைய காரணிகளின் பெருக்கல் பலனாக இருப்பதால் ஒன்று பூச்சியம் ஆனாலும் உயிர்கள் தோன்றக் கூடிய சாத்தியக் கூறு பூஜ்ஜியம் ஆகி விடுகிறது. பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு நிறைய விஷயங்கள் சாதகமாக அமைந்துள்ளன. சூரியனிடம் இருந்து அதன் தூரம், பூமியின் சாய்வு, நிறை, காந்தப்புலம் ,வளிமண்டலம், ஓசோன் படலம், கடல்கள்,துணைக்கோள் நிலா, பூமிக்கு அடுத்து பூதாகரமான வாயுக்கோள் வியாழன் (ஆஸ்டிராய்டுகளை உள்ளே விடாமல் விலக்க) , ஆக்சிஜன், கார்பன், வளிமண்டல அழுத்தம், etc .,(RARE EARTH HYPOTHESIS )[பூமிக்கு நிலவு இல்லை என்றால் கடல்கள் துருவப்பகுதிக்கு ஓடிப் போய் விடும்.பூமியின் சுழற்சி நிலவின் ஈர்ப்பு இல்லாததால் பல மடங்கு அதிகரித்து குறுகிய இரவு பகல் சுழற்சி ஏற்படும்.இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவாது!]

அதாவது பூமியில் உயிர்கள் தோன்றியது மிக மிக மிக அரியதொரு நிகழ்வு என்கிறார்கள். மாயாஜாலப் படம் ஒன்றில் ராஜாவின் நோய் தீர்க்கும் மருந்து என்ன என்பதற்கு வைத்தியன் , "நடு அமாவாசை இரவில் மழை பொழியும் போது அந்த மழைநீர் ஒரு மண்டை ஓட்டின் உள்ளே நேரடியாக விழ வேண்டும்.அதில் நல்ல பாம்பின் விஷம் ஒரு சிறிதே கலக்க வேண்டும்.அதுதான் மருந்து" என்பான். அது போல பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு நிறைய நிறைய ஆயிரக்கணக்கான காரணிகள் ஆச்சரியகரமாக ஒன்று சேர வேண்டும்.(improbable combination of astrophysical and geological events and circumstances.) அரிய பூமி அனுமானம் என்ற இந்தக் கொள்கை கோபர்னிகன் தத்துவத்துக்கு எதிரானது.கோபர்
னிகன் கொள்கை பூமி இந்த பிரபஞ்சத்தில் எந்த விதத்திலும் ஸ்பெஷல் அல்ல என்கிறது.நாம் பத்தோடு பதினொன்று தான். உயிர்கள் எங்கே வேண்டுமானாலும் தோன்ற முடியும் என்கிறது .ஆனால் FERMI PARADOX என்ற இன்னொரு தத்துவம் அறிவுள்ள) உயிர்கள் வேறு கிரகங்களில் இருந்தால் அவர்களின் சிக்னல்களை நாம் ஏன் அறிய முடிவதில்லை என்று கேட்கிறது. நாம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த நூறு ஆண்டுகளிலேயே ரேடியோ அலைக் குப்பைகளை ஏராளமாக வெளியில்(space ) வீசி உள்ளோம். நம் காலக்ஸியில் எங்காவது வளர்ச்சியடைந்த நாகரீகங்கள் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக தொலைத்தொடர்புக்கு மின்காந்த அலைகளை உபயோகப்படுத்த வேண்டும். அவற்றின் மிச்சங்களை நாம் ஏன் detect செய்ய முடிவதில்லை?

milky way galaxy


நம் பால்வீதி காலக்சி கூட ஸ்பெஷல் என்கிறார்கள்.ஏனென்றால் மற்ற காலக்சிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் சாது. நட்சத்திர மோதல்கள்,சூப்பர் நோவாக்கள் போன்றவை இங்கே அடிக்கடி நிகழ்வதில்லை.மேலும் நம் சூரியன் காலக்ஸியின் மையத்தில் இல்லாமல் ஓரளவு விளிம்பில் உள்ளது.மையத்துக்கு அருகில் இருந்தால் காமா கதிர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும்.மேலும் நம் சூரியன் நடுத்தர வயதில் இருக்கிறது.இதையெல்லாம் பார்க்கும் போது நாம் ஒரு விதத்தில் ஸ்பெஷல் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் நம் பக்கத்து வீட்டுக்காரர்களை தேடும் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் தான் இருக்கிறது.

........


சமுத்ரா12 comments:

வரலாற்று சுவடுகள் said...

இயற்பியலை .., அறிவியலை அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறீர்கள்.., தங்களது முந்தைய பதிவுகளை நான் வாசித்ததில்லை. இனி ஓய்வு நேரங்களில் வாசிக்க முயற்சிக்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள் ..!

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

ammuthalib said...

இன்னொரு பூமி, அங்கே மனித வாழ்க்கை, அதற்கான தேடல் எல்லாம் ஒகே. ஆனால் அதனால் என்ன பயன் என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது. சப்போஸ் எங்கோ தொலை தூரத்தில் ஏலியன் வாழ்வது நிரூபணம் ஆனால் 'இவர்கள்' அவர்களோடு கல்யாண சம்மந்தமா வைத்துக்கொள்ளப் போகிறார்கள்?

இங்கே என் ஆபீசில் ஒரு பையன் ஏலியன் மற்றும் பறக்கும் தட்டுக்கள் மேல் அசைக்க முடியா நம்பிக்கையில் இருக்கிறான். ஒரு நாள் வேற்று கிரக மனிதர்கள் பக்கம் பேச்சு திரும்பியபோது, அவர்களை கண்டுபிடிப்பதால் ஏற்படும் நன்மை என்று அவன் கூறியது, "அப்புடி கண்டு புடிச்சிட்டா, அவங்களோடு பிரெண்ட்ஸ் ஆகி நமக்கு தேவையானத அவங்க கிட்ட இருந்து வாங்கிக்கலாம், அவுங்களுக்கு தேவையானத நாம கொடுக்கலாம்." ஒரே நாடு, அல்மோஸ்ட்(!) ஒரே இனம், பக்கத்து மாநிலமா இருந்தும் தண்ணிக்கு போர் (சண்டை அல்ல... போர்) நடக்கிறது இங்கே. இந்த லட்சணத்தில் வேற கிரகமாம்...வேற மனிதர்களாம் ஆனா ஈசியா கொடுக்கல் வாங்கல் செய்வானுங்கலாம்... என்னங்கடா உங்க லாஜிக் என்று கேட்க தோன்றியது...

எனிவேஸ்... நமக்கு வெகு பக்கத்தில் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் பசியிலும் வேதனையிலும் தற்கொலையில் செத்துக்கொண்டிருக்க, எங்கோ உள்ளதாக கற்பனைக்கப்படும் மனிதர்களை தேடி அலையும் இந்த ஜந்துக்களுக்கு நான் சொல்ல விரும்பிவது, "ஆணியே புடுங்க வேணாம்"

நீண்ட கமெண்டுக்கு மன்னிக்கவும். பிங் செய்யுங்கள். விவாதிப்போம்.

chandru said...
This comment has been removed by the author.
கார்பன் கூட்டாளிகள் said...

நானும் கூட கார்பன் பற்றி எழுதியுள்ளேன்.எட்டின் விதிப்படி தனது முக்தி நிலை அடைவதற்கு இன்னும் நான்கு எலக்ட்ரான்களை அடைய வேண்டும் அல்லது இழக்க வேண்டும். எட்டில் சரி பாதியாக இருப்பதால் இதுவே ஒரு சிறப்புத் தன்மை ஆகிவிட்டது. ஆகவே எல்லாவிதமான யுக்திகளையும் பயன்படுத்தி கார்பன் (தனக்குத் தானே கூட சேர்ந்து), உன்னால் என்மனம் இழந்தது பாதி, உன்னால் என்மனம் அடைந்தது பாதி என்று பாடிக்கொண்டே ஆக்ஸிசன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியவற்றுடன் குறைந்தது 2 அணுக்களிலிருந்து 100000 அணுக்கள் வரை கூட ஒன்றாக இணைந்து இலட்சக்கணக்கான அங்கக கூட்டுப் பொருட்கள்(Organic Compounds) உருவாயின.

சமுத்ரா said...

ammuthalib said...

அப்துல், நாம் Pessimistic ஆக இந்த விஷயத்தில் யோசிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. பூமியில் ஒரு புதிய கண்டம் புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது
என்று வைத்துக் கொள்வோம். 'அங்கே போனாலும் மனிதன் பாலிடிக்ஸ் செய்வான்;அங்கேயும் தன் அபத்தங்களைத் தொடருவான்' என்று யாராவது அங்கே குடியேறாமல்
இருப்பார்களா? புதிய கிரகத்திற்குக் குடியேறும் போது அல்லது புதிய கிரக
மனிதர்களை சந்திக்கும் போது ஏதாவது ஆக்கப்பூர்வமான மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா? our earth is already overloaded.குறைந்த பட்சம்
மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு தீர்வு கிடைக்கும் அல்லவா? புதிய கிரகத்தில் நம் நாட்பட்ட நோய்களுக்குத் மருந்துகள் கிடைக்கலாம்.ப்ளாஸ்டிகிற்கு மாற்றான இயற்கை பாலிமர்கள் கிடைக்கலாம்.இப்படியே POSITIVE ஆக யோசியுங்கள்.

ammuthalib said...

உள்ளூரில் ஓனான் பிடிக்க தெரியாதவன் சீமைலே சிங்கம் பிடிக்க போரானாம் என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

நான் சொல்ல வருவது, புது கிரகம் கண்டுபிடிப்பது எல்லாம் இருக்கட்டும். முதலில் நம்மிடையே இருக்கும் resourcesஐ நாம் ஒழுங்காக பயன் படுத்துகிறோமா என்பதே என் வாதம்.

இதில் ஆப்டிமிசம் பெஸ்சிமிசம் என்பது ஏதும் இல்லை. எங்கோ "இருப்பதாய்" கருதப்படும் வேற்று கிரகத்தை கண்டுபிடிப்பதற்கு கோடானு கோடி செலவு செய்வதை விட நம் கண் முன்னே வீணடிக்கப்படும் பூமியை பாதுகாக்க, முறையாக பயன் படுத்த நாம் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்பதே என் கேள்வி.

charity begins at home இல்லையா...

Our earth isnt overloaded. It is we who keep piling up in metro cities and creating chaos.

If you feel it is worth discussing more, we shall do. :)

சென்னை பித்தன் said...

மிக அரிய தகவல்களை அருமையாகத் தொகுத்தளிக்கும் உங்கள் பணி சிறப்பானது.மேலும் சிறக்கட்டும்.

Abarajithan Gnaneswaran said...

முதல்ல பதிவு பற்றி....

நல்ல டாபிக் ஒண்ணு எடுத்திருக்கீங்க... தனித் தொடரா எழுதினா இன்னும் நல்லது... (அருண் சார்: ஏலியபுராணம் மாதிரி)

//இன்னும் விளங்கும் படி சொன்னால் பிரபஞ்சத்தின் முதல் விலைமகள் கார்பன் தான்.//

உலக வரலாற்றுலேயே கார்பனுக்கு இப்படி ஒரு விளக்கம் குடுத்த first and only ஆள் நீங்கதான்னு நினைக்கறேன்... வாழ்த்துக்கள். ஆனா சார், மூலகங்கள் கற்பெல்லாம் பாத்தா He, Ar மாதிரி காலம் பூரா கன்னியா இருக்க வேண்டியதுதான்... [அதுசரி, நம்ம கற்புக்கரசிங்க கார்பனை கோடி கேஷ் குடுத்து கழுத்துல மாட்டிக்கறாங்களே?]

//அரிய பூமி அனுமானம் என்ற இந்தக் கொள்கை கோபர்னிகன் தத்துவத்துக்கு எதிரானது. கோபர்னிகன் கொள்கை பூமி இந்த பிரபஞ்சத்தில் எந்த விதத்திலும் ஸ்பெஷல் அல்ல என்கிறது.நாம் பத்தோடு பதினொன்று தான். உயிர்கள் எங்கே வேண்டுமானாலும் தோன்ற முடியும் என்கிறது//

ஓகே. உயிர்கள் தோன்றது மிக மிக மிக மிக....மிக அரிதானதுதான். ஆனா இந்தப் பிரபஞ்சத்தோட சைஸ்சையும் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்துல இருக்கக்கூடிய கோள்களின் எண்ணிக்கையும் யோசிச்சுப்பாத்தா இவ்வளவு குறைவான நிகழ்தகவுகளைக் கூட சமன் செய்ய முடியும்னு தோணுதே>

//FERMI PARADOX//

இதுக்கு அருண் சார் பதில் சொல்லியிருக்காரு... In case if you have not read this before: http://ommachi.net/2010/10/08/aliens-peru-vadikattal

Abarajithan Gnaneswaran said...

@ammuthalib

//Our earth isnt overloaded. It is we who keep piling up in metro cities and creating chaos. //

I agree.. ஆனா என்னைக் கேட்டா அறிவியலும் தொழில்நுட்பமும் வேற வேறன்னுதான் சொல்லுவேன்... என்னைப் பொறுத்த வரையில Science rises from curiosity. ராக்கெட் அனுப்ப பயன்படுமேன்னு நியூட்டன் விதிகளைக் கண்டுபிடிக்கல. ரிலேடிவிடியால என்ன பயன்கறது (முடிவெட்டிக்கற பணத்தை மிச்சம் பண்றது தவிர) ஐன்ஸ்டீனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்ல... அவங்கெல்லாம் scientists. ஏன் ஏன்னு கேள்வி கேட்டு, பதில் கண்டுபிடிச்சு திருப்திப்பட்டுக்கறவங்க...

ஆனா, தொழில்நுட்பவாதிங்க வித்தியாசமானவங்க... எடிசன் பல்பு கண்டுபிடிக்க மெனக்கட்டது மனித குலத்துக்கு பயன் (அ) அவருக்கு பணம்கற காரணத்துலதான்.

இதுல, வேற்றுக்கிரகத்தை மனிதன் ஆராய முக்கிய காரணம் curiosity. Are we alone?ங்கற ட்ரில்லியன் டாலர் கேள்வி... ஆராய்ச்சிக்கு பணம் வாங்கறதுக்காக மனித குலத்துக்கு நன்மை, அது இதுன்னு கதை விடறாங்களோன்னு சந்தேகமா இருக்கு. அதாவது இது அறிவியல்.. இதை பயன்படுத்தி பண்ணி செவ்வாய்ல ப்ளாட் வாங்கற ஈன புத்தி தொழில்நுட்பம்...

Abarajithan Gnaneswaran said...

@சமுத்ரா சார்,

//குறைந்த பட்சம் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு தீர்வு கிடைக்கும் அல்லவா? புதிய கிரகத்தில் நம் நாட்பட்ட நோய்களுக்குத் மருந்துகள் கிடைக்கலாம்.ப்ளாஸ்டிகிற்கு மாற்றான இயற்கை பாலிமர்கள் கிடைக்கலாம்.இப்படியே POSITIVE ஆக யோசியுங்கள்.//

வாவ்.. நல்ல ஐடியா.. அதாவது மனித மக்கள்தொகையை பூமில குறைக்காம வேற கிரகத்துக்குக்கு அனுப்பி அங்கேயும் நாசம் பண்ணப் போறோம்... How wonderful... பிடிச்ச பீடை பூமியோட போகட்டும்னு பாத்தா விட மாட்டேங்கறீங்களே.. அடுத்தது இருக்கற கொஞ்ச நஞ்ச நோயையும் அழிக்கறதா? மனித நோய் மட்டும்தானே? நல்லது. Life expectancy 80, death rate இவ்வரவு குறைவா இருக்கும்போதே இந்த ஆட்டம் போடறோம், இதுவும் இல்லைனா... நினைச்சுப் பார்க்கக் கூட முடியல... ஹாலிவுட்ல ஏலியன்கள் பூமியை ஆக்ரமிக்கற மாதிரி இன்னொரு அமைதியான கிரகத்தை நாங்க ஆக்கிரமிச்சு நாசமாக்கப் போறமா?

உங்ககிட்டே இருந்து இப்படி ஒரு கருத்தை நான் எதிர்பார்க்கல..

Sabrinantsq said...

மிக அரிய தகவல்களை அருமையாகத் தொகுத்தளிக்கும் உங்கள் பணி சிறப்பானது.மேலும் சிறக்கட்டும்.