அணு அண்டம் அறிவியல் -65 உங்களை வரவேற்கிறது.
நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி....
மொட்டைமாடியில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்தக் கோடைக் காலத்தில் நம் எல்லாருக்கும் ஒருமுறையேனும் கிடைத்திருக்கும்.ESPECIALLY, இப்போது பவர் கட் அதிகம் என்பதால் ..அப்படி வானமே கூரையாகப் படுத்திருக்கும் போது மேலே பார்த்து ஒரு முறையேனும் 'TwinkleTwinkle little Star, how I wonder what you are' என்று பாடாவிட்டாலும் மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா?
நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி....
மொட்டைமாடியில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்தக் கோடைக் காலத்தில் நம் எல்லாருக்கும் ஒருமுறையேனும் கிடைத்திருக்கும்.ESPECIALLY, இப்போது பவர் கட் அதிகம் என்பதால் ..அப்படி வானமே கூரையாகப் படுத்திருக்கும் போது மேலே பார்த்து ஒரு முறையேனும் 'TwinkleTwinkle little Star, how I wonder what you are' என்று பாடாவிட்டாலும் மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா?
மின்னும் சின்ன விண்மீனே-நீ
என்ன எனவே வியந்தேனே!
என்ன எனவே வியந்தேனே!
பிரபஞ்ச மாளிகையை இயற்கை இருட்டாக வைக்கவில்லை. கோடிக் கணக்கில் பில்லியன் கணக்கில் விண்மீன்கள் நெபுலாக்கள் காலக்சிகள் சூப்பர் நோவாக்கள் என்று விதம் விதமான விளக்குகள் அதை ஒளியூட்டி அழகு செய்கின்றன.இயற்கை என்றுமே கஞ்சத்தனமாக இருந்ததில்லை. வீணாக எரிகிறதே விளக்கை அணைத்து விடலாம் பில் அதிகம் வரும் என்ற கவலைகள் மனிதனுக்கு மட்டுமே.இயற்கைக்கு என்றுமே நித்தியம் ஒளி உற்சவம் தான்.ஆமாம் ,சரி,பிரபஞ்சத்தில் இத்தனை விண்மீன்கள் எதற்கு? தேவையே இல்லாமல்.To maintain Mass density என்று டெக்னிகலாகப் பேசாமல் கொஞ்சம் தத்துவம் பேசுவோம்.
எர்னெஸ்ட் மாச் என்ற ஒரு விஞ்ஞானி ,மனிதனுக்கும் பிரபஞ்சத்தின் தூரத்தில் உள்ள ஏதோ ஒரு விண்மீனுக்கும் மெல்லிய கட்புலனாகாத தொடர்பு இருக்கிறது என்கிறார். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனா
உன் வாழ்வில் இந்த விளைவை ஏற்படுத்தும் என்று சொன்னால் 'WHAT BULL SHIT ? ' நட்சத்திரத்துக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? என்கிறோம்.OF COURSE , நம் வாழ்க்கைத் துணை எப்படி இருக்கும், எவ்வளவு குழந்தைகள் ,என்ன வியாதி வரும் என்பதையெல்லாம் நட்சத்திரத்தைப் பார்த்து விட்டு கணிப்பது கொஞ்சம் ஓவர்.
BUT IT DOES HAVE AN INFLUENCE .
நட்சத்திரம் ஒன்று நிலையாக இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே நீங்கள் சுழல ஆரம்பித்தால் அதுவும் உங்களைப் பொறுத்து சுழல்கிறது. உங்கள் கைகள் உடம்பை விட்டு விலகி ஒரு மையவிலக்கு விசையை (CENTRIFUGAL FORCE ) உணர ஆரம்பிக்கின்றன. நட்சத்திரம் சுழலும் போது (சார்பியல் படி நீங்கள் நிலையாக இருந்து நட்சத்திரம் சுழல்கிறது என்று சொல்லலாம்) உங்கள் கைகள் ஏன் விசையை உணர வேண்டும்? மாச் தத்துவம் (MACH 'S PRINCIPLE ) "Local physical laws are determined by the large-scale structure of the universe "என்கிறது.இங்கே ஒரு குறிப்பிட்ட விதிகள் வேலை செய்வதற்கு பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒருவிதத்தில் உதவி செய்கிறது என்று சொல்லலாம். எனவே நாம் உயிர் வாழ்வதற்கு பிரபஞ்சத்தின் மூலையில் உள்ள ஒரு விண்மீன் கூட தன் மிகச்சிறிய பங்கை ஆற்றுகிறது என்பது உண்மை.
INERTIA என்று அழைக்கப்படும் ஒரு பொருளின் 'நிலைமம்' (தான் இருக்கும் நிலையில் இருந்து மாறுவதற்கு ஒரு பொருள் அளிக்கும் எதிர்ப்பு)அதற்கு பிரபஞ்சத்தில் மற்ற பொருள்களும் இருப்பதாலேயே ஏற்படுகிறது என்று மாச் வாதிடுகிறார். தோராயமான உதாரணமாக ட்ராபிக்கில் நிற்கும் உங்கள் காரைக் கருதலாம். காருக்கு ட்ராபிக் எல்லாம் தெரியாது. ஆக்சிலரேட்டரை மிதித்தால் முன்னால் நிற்கும் வண்டி மீதி போய் மோதி விடும்.ஆனால் காருக்கு இயல்பாகவே நிலைமம் இருக்கிறது.நின்று கொண்டிருந்து விட்டு திடீரென்று போ என்றால் கொஞ்சம் முரண்டு பிடிக்கும். ஏன் இவ்வாறு முரண்டு பிடிக்க வேண்டும்? முன்னால் ட்ராபிக்கில் வண்டிகள் நிற்கின்றனவே என்பதால் இருக்கலாம். அதே போல உங்கள் கார் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிற போது அது அதே சீரான வேகத்தை MAINTAIN செய்ய வேண்டும். இல்லையென்றால் பின்னால் வந்து கொண்டிருக்கும் வாகனம் அதன்மீது மோதி விடும். எனவே தன் சீரான வேகத்திலிருந்து மாறும் நிலைக்கு ஒரு பொருள் இயல்பாகவே எதிர்ப்பு தெரிவிக்கிறது என்கிறார் மாச்.(இதற்கு எதிரான) நியூட்டனின் bucket Argument , ஆர்வம் இருந்தால் விக்கிபீடியாவில் படித்துக் கொள்ளவும்.
மாச்சின் தத்துவம் நம்மை HOLISM என்ற முழுமைத் தத்துவத்துக்கு அழைத்துச் செல்கிறது.எந்த ஒரு விஷயத்தையும் பகுதிகளாக பார்க்காமல் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறது ஹோலிசம். பகுதிகளைப் பற்றி தெரிந்து கொண்டு பின்னர் அவற்றை இணைத்தால் முழுமையைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்ற கருத்து மிகவும் தவறு என்கிறது இந்தக் கொள்கை. அதாவது அரிஸ்டாடிலின் Whole is Greater than its parts together! உதாரணமாக கார் என்பது என்ன?சீட், எஞ்சின், ப்ரேக், ஸ்டியரிங், க்ளட்ச் ,ஆக்சிலரேட்டர் சக்கரங்கள், கதவு, இவையெல்லாம் சேர்ந்தது தானா? இல்லை இவையெல்லாம் சேரும் போது 'கார்' என்ற முழுமைக்கு வேறு ஏதேனும் ஒன்று சேர்க்கப்படுகிறதா? ரசம் என்பது தண்ணீர், ரசப்பொடி, சீரகம், மிளகு, கருவேப்பிலை, கொஞ்சம் வெப்பம் இவைசேர்ந்ததா ? அதே போல மனிதன் என்பவன் கை, கால், மூளை +மனம் தானா?
இயற்பியல் WHOLE IS NOT EVEN EQUAL TO ITS PARTS TOGETHER ; WHOLE IS LESS THAN ITS PARTS TOGETHER என்கிறது.உதாரணமாக இரண்டுக்கும் மேற்பட்ட அணுத்துகள்கள் சேர்ந்து உருவாகும் அணுக்கருவின் நிறை அந்த தனித்தனி துகள்களின் நிறைகளின் கூடுதலை விடக் குறைவாகவே உள்ளது.துகள்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைப்பதற்கான பிணைப்பு ஆற்றல் (BINDING ENERGY ) அந்த நிறையில் இருந்தே எடுத்துக் கொள்ளப்படுகிறது. வாழை இலைகளை கட்டும் போது அந்த இலைகளில் ஒன்றில் இருந்தே நாரை உருவி அவைகளைப் பிணைத்து வைப்பது போல!
வாழ்வில் நாம் பிரச்சனைகளை சமாளிக்கும் போது இரண்டு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டி உள்ளது.
* ஒன்று பிரச்சனையைப் பகுதிகளாகப் பிரித்து , அலசி ,ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வு காண்பது.
* இன்னொன்று பிரச்சனையை அப்படியே அதன் முழுமையுடன் அலசுவது
ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
ஒரு ராணுவ வீரன் கடுமையான காயங்களுடன் எதிரி தேசத்தால் பிடிக்கப்படுகிறான்.அங்கே ஒரு மருத்துவமனையில் இருக்கிறான்.
கடுமையான காயங்கள் காரணமாக அவனுடைய வலது கால் எடுக்கப்படுகிறது.
"எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்,, இதை என்னுடைய சொந்த மண்ணில் புதைத்து விடுங்கள்" என்று எதிரிகளிடம் வேண்டுகிறான்.
அப்படியே செய்யப்படுகிறது.
அவனது இடது காலும் நோய் வந்து வெட்டப்படுகிறது.
"எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்,, இதை என்னுடைய சொந்த மண்ணில் புதைத்து விடுங்கள்" என்று எதிரிகளிடம் வேண்டுகிறான்.
அப்படியே செய்யப்படுகிறது.
சில காரணங்களுக்காக அவன் வலது கையை இப்போது எடுக்க வேண்டி வருகிறது.
"எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்,, இதை என்னுடைய சொந்த மண்ணில் புதைத்து விடுங்கள்" என்று எதிரிகளிடம் வேண்டுகிறான்.
இப்போது எதிரி ராணுவ ஜெனரல் " ஏய், நீ என்ன பகுதி பகுதியா தப்பித்துப் போகலாம்னு நினைக்கறியா"? என்றான் கோபமாக.
பிரச்சனையை முழுமையாக அணுகவில்லை என்றால் சில சமயங்களில் இப்படி நடப்பதுண்டு.
இங்கே மூன்று விதமான வாதங்கள் இருக்கின்றன.
கணிதம் : முழுமையும் அதன் பகுதிகளின் கூடுதலும் சமம் . ex : 200 =100 +100
இயற்பியல் : முழுமை அதன் பகுதிகளின் கூடுதலை விட குறைவு எக்ஸ்: BINDING ENERGY , ENTROPY
தத்துவம் , ஆன்மிகம் : முழுமை அதன் பகுதிகளின் கூடுதலை விட அதிகம். உதாரணம் : உயிர் [இதனால் தான் லேபில் கார்பன், அமினோ அமிலங்கள் , புரதங்கள் இவற்றைக் கலந்து மின்சாரத்தை அளித்தால் அதற்கு உயிர் வருவதில்லை!]
சமஸ்கிருதத்தின் 'அத்வைதம்' என்ற வார்த்தை அழகானது. 'ஏகத்வா' என்று சொல்லாமல் 'ஒருமை' என்று சொல்லாமல் இரண்டு இல்லை என்கிறது அது. ஒருமை என்று சொன்னால் அங்கே தவிர்க்கமுடியாமல் இரண்டு , பல என்பதெல்லாம் வந்து விடுகிறது. இரண்டு இல்லாத போது ஒன்று என்பதும் அர்த்தத்தை இழந்து விடுகிறது.எனவே சாமார்த்தியமாக இரண்டு இல்லை , பன்மை இல்லை என்கிறது அது.
பிரபஞ்சமே முழுமை தான். அதைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்கிறது ஹோலிசம். அப்படித் தனித்துப் பார்க்க நாம்
நிர்பந்திக்கப்பட்டால் கூட ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் தொடர்பு உடையது, (Interconnectivity )ஒன்று இன்னொன்றை பாதிக்கும் பூமியில் அசையும் பட்டாம்பூச்சியின் சிறகு செவ்வாயில் புயலைத் தோற்றுவிக்கும் என்ற கேயாஸ் தத்துவத்தை மறக்கக் கூடாது என்கிறது. கேயாஸ் தியரியை இன்னும் விஞ்ஞானிகள் பலர் ஏற்க மறுக்கிறார்கள்.இது மிகவும் தலைவலி பிடித்த வேலை என்பதால். உதாரணம் நாளை புயல் வருமா என்று தெரிந்து கொள்ள இன்றைய காற்று அழுத்தம், காற்றின் வேகம், வெப்பநிலை, கடலின் நீரோட்டம் இவைகளை வைத்து கணக்கிட்டால் போதும். அமேசான் காட்டில் உட்கார்ந்து கொன்று சிறகை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.அப்படியே எடுத்துக் கொண்டாலும் எத்தனை ப.பூச்சிகளை எடுத்துக் கொள்வது?? கார் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது , ரோட்டில் எவனாவது குறுக்கே வந்து விடுவானோ, எதிர்பாராத சந்தில் இருந்து ஆட்டோ எதிர்ப்பட்டு விடுமோ, வழியில் மரம் முறிந்து
கீழே விழுந்து விடுமோ, என்றெல்லாம் பயந்து கொண்டிருந்தால் காரே ஓட்ட முடியாது அல்லவா?இப்போது-
TAO OF PHYSICS இல் இருந்து:-
பொருட்கள் தமது இருப்பையும் இயல்பையும் பரஸ்பர சார்புத் தன்மையினால் பெறுகின்றனவேயன்றி அவைகளாகவே தமக்குள்ள அதனையும் வைத்துக்கொண்டு இருப்பன அல்ல -The central philosophy of Budhism -Nagarjuna
"ஓர் அடிப்படைத் துகள் (Elementary Particle )என்பது தனித்துவமாக நிலவக்கூடியதும் பகுப்பாய்வுக்கு உட்படுத்த ஒண்ணாததுமானதொரு தனி அமைப்பு அல்ல; சாராம்சத்தில் பிற பொருள்களோடு உறவுக்கரங்களை நீட்டுகின்றதோர் அமைப்பு" -எஸ்.பி.ஸ்டேப்
கோபன்-ஹேகன் தத்துவம் ஒரு பொருளை கவனிக்கும் போது அதன் உண்மையான நிலையை கவனிக்கிறோமா இல்லை அது கவனிப்பவருடன் நிகழ்த்தும் interaction -ஐ கவனிக்கிறோமா என்று அறிவது கடினம் என்கிறது.அதாவது பிரபஞ்சத்தில் 'பார்ப்பவன் ' என்ற ஒன்று இல்லை'பங்கு கொள்பவன்' என்பது தான் இருக்கிறது. பிரபஞ்சத் திருநடனத்தில் NO ONE IS AN AUDIENCE,,EVERY ONE IS A PARTICIPANT..
"வானம் பூமி வளிமண்டலம் அனைத்து உயிர்களின் மூச்சுக் காற்றோடு சேர்ந்து காற்று இவை அனைத்தும் எவனொருவனோடு சுற்றிப் பின்னப்பட்டு உள்ளனவோ அவனே பரமாத்மா" -முண்டக உபநிஷதம்
SPIDER WEB தத்துவம் என்று ஒன்று உள்ளது. பிரபஞ்சமே ஒரு பெரிய சிலந்தி வலை என்கிறது இது. எனவே ஒரு இடத்தில் தோன்றும் மாற்றம் வலை வழியே பரவி இன்னொரு பொருளை பாதிக்கலாம் என்கிறது.
The world is like an enormous spider web and if you touch it, however lightly, at any point, the vibration ripples to the remotest perimeter and the drowsy spider feels the tingle... (260)
SPIDER WEB தத்துவம் என்று ஒன்று உள்ளது. பிரபஞ்சமே ஒரு பெரிய சிலந்தி வலை என்கிறது இது. எனவே ஒரு இடத்தில் தோன்றும் மாற்றம் வலை வழியே பரவி இன்னொரு பொருளை பாதிக்கலாம் என்கிறது.
The world is like an enormous spider web and if you touch it, however lightly, at any point, the vibration ripples to the remotest perimeter and the drowsy spider feels the tingle... (260)
எனவே இயற்பியலிலும் , ரங்கராஜன் நம்பியை கடலில் வீசினால் எட்டு நூற்றாண்டு கழித்து கடலில் சுனாமி வருவதற்கு சாத்தியம் இருக்கிறது.
மேலும் பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளையும் பார்த்து நாம் 'நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே' என்று பாடலாம். அல்லது 'தத்வமசி' நீ தான் நான் என்று சொல்லி புளகாங்கிதம் அடையலாம்.
எனவே தூரத்து விண்மீனைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். IT 'S REQUIRED ..முதலில் ஒரு விண்மீன் எப்படிப் பிறக்கிறது என்று பார்ப்போம்.[விண்மீனும் பிறக்கிறது; சாப்பிடுகிறது, வாழ்கிறது, ஓய்வெடுக்கிறது;நோயில் விழுகிறது ;வாழ்ந்து மடிகிறது. ]
எனவே தூரத்து விண்மீனைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். IT 'S REQUIRED ..முதலில் ஒரு விண்மீன் எப்படிப் பிறக்கிறது என்று பார்ப்போம்.[விண்மீனும் பிறக்கிறது; சாப்பிடுகிறது, வாழ்கிறது, ஓய்வெடுக்கிறது;நோயில் விழுகிறது ;வாழ்ந்து மடிகிறது. ]
ஒரு திருக்குறள்:
பீலிசெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
௮-௮-௮ வில் திருக்குறள் எதற்கு என்கிறீர்களா? சோழியன் குடுமி சும்மா ஆடாது.
சமுத்ரா
பீலிசெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
௮-௮-௮ வில் திருக்குறள் எதற்கு என்கிறீர்களா? சோழியன் குடுமி சும்மா ஆடாது.
சமுத்ரா
15 comments:
இன்றைய AAA நல்லாயிருக்கு...
நிறைய புரியலை..புரிஞ்சுதான் என்ன ஆகப்போகுதுன்னு சொல்றீங்களா?
சோழியன் குடுமி சும்மா ஆடாது தான்...
நல்ல பதிவு அடர்த்தியான விஷயங்கள். இரண்டு மூன்று தடவை படிக்க வேண்டும்.
இப்படியே ஒவ்வொரு கதவும் திறந்துட்டே போனா கடைசியில் முடிவு வருமா அல்லது தொடக்கத்திலேயே முடிவோமா?
அய்யனின் இந்த குறள் இந்த இடத்தில் அழகான தெரிவு.....
ஔவையார் குறள் பற்றி சொல்லிய குறள் ஒன்று ’’கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி குறுக தரித்த குறள்’’...
’’பிலி பெய்சாகாடும் ‘’ big bang யை ஒன்றரை வரியில் அடக்கிவிட்டார்...
எல்லாம் தெரியும்
என்றிருக்காது,
கற்றது கை மண் அளவு;
கல்லாதது உலகளவு;
உணர்ந்து நடப்பவர்
வாழ்வில் உயரலாம்;
உணர்த்தியது, சமுத்ரா
தங்கள் பதிவு;
# ௮-௮-௮//
பேசாமல் ௮-௮-௮ வை *"அ-ஆ-இ"* என்று பெயர் மாற்றி வைத்துவிடுங்கள்... [*அறிவியல்-ஆன்மிகம்-இலக்கியம்*] :))
//நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி....//
இடம் மாறி வந்துட்டேனா? தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையோ? நட்சத்திரம் இருக்கு, வாழ்க்கையும் இருக்கு சுழற்சியும் இருக்கு... ஆனால் முழுசாப் பார்த்தா பொருள் தெரியலையே?! :)
முன்னமே சொல்லிவிடுகிறேன்: பதிவு நன்றாக இருக்கிறது...
# உயிர் வாழ்வதற்கு பிரபஞ்சத்தின் மூலையில் உள்ள ஒரு விண்மீன் கூட தன் மிகச்சிறிய பங்கை ஆற்றுகிறது என்பது உண்மை.//
மிகவும் உண்மை. ஒவ்வொரு நட்சத்திரமும் நம் வாழ்க்கைக்கு ஒரு வகையில் காரணம். ஆனால் அதேபோல பூமியிலிருக்கும் ஒவ்வொரு துரும்பும், புழு பூச்சியும் நம் தற்போதைய வாழ்க்கைக்கு காரணம் அல்லவா? (உண்மையில் இவை நட்சத்திரங்களைவிட பெரும்பங்கு ஆற்றுகின்றன நேரத்தாலும் தூரத்தாலும் நமக்கு மிக அருகில் இருக்கும் காரணத்தால்) அப்படிப் பார்த்தால் நம் சோதிடத்திலும் பஞ்சாங்கத்திலும் ஒவ்வொரு துரும்பையும் அல்லவா கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்? லாஜிக் இடிக்கிறதே?!
//முன்னால் ட்ராபிக்கில் வண்டிகள் நிற்கின்றனவே என்பதால் இருக்கலாம்.//
எனவே வெட்டவெளியில் கார் முரண்டு பிடிக்காதா? Matter distribution குறைந்த inter galactic space இல் பொருளுக்கு இனேர்ஷியா மிகவும் குறைவாக இருக்குமா? அப்படியானால் இனேர்ஷியாவைக் கணக்கிடும்போது சுற்றி எவ்வளவு பொருள் இருக்கிறது எனக் கணக்கிட வேண்டுமா? Is this science?
// கார் என்பது என்ன?சீட், எஞ்சின், ப்ரேக், ஸ்டியரிங், க்ளட்ச் ,ஆக்சிலரேட்டர் சக்கரங்கள், கதவு, இவையெல்லாம் சேர்ந்தது தானா?//
அதைச் சேர்க்கத் தேவையான திறமையும் சேர்ந்தது. ஆனால் சேர்த்துவிட்டுப் பிரிக்கும்போது அந்தத் திறமை காணாமல்போய் விடுகின்றதே?
///அணுக்கருவின் நிறை அந்த தனித்தனி துகள்களின் நிறைகளின் கூடுதலை விடக் குறைவாகவே உள்ளது///
இந்தக் கருத்து, கொஞ்ச நாளைக்கு முதல் நீங்கள் சொன்ன "சுடுநீர் குளிர்நீரைவிட நிறை அதிகமாக இருக்கும்" எனும் கருத்துக்கு எதிராக உள்ளதே? அப்படியானால் ஆற்றலை நிறையின் அளவுகோல்களை வைத்து அளக்க முடியாதா?
# ஒரு ஜோக்
excellent example..
//கேயாஸ் தியரியை இன்னும் விஞ்ஞானிகள் பலர் ஏற்க மறுக்கிறார்கள்.//
இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுப்பதால்தான் எமது எதிர்வுகூறல்களில் ஒரு அநிச்சயம் காணப்படுகின்றது... நாங்கள் அதை விதி என்று சொல்லிவிட்டு கூலாகச் சென்று விடுகின்றோம்..
//கீழே விழுந்து விடுமோ, என்றெல்லாம் பயந்து கொண்டிருந்தால் காரே ஓட்ட முடியாது அல்லவா?//
ஆனால் எப்படியாவது இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பாக கார் ஓட்டலாம்... :))
தெரியாத விஷயங்கள்
How R U Abarajithan, I didnt know how to explain Mach principle of Inertia so it's an approximate example only.
Sorry for that.
AB,If you look things as a whole, not separately as mass or energy but as a whole Mass energy nothing is changed.Mass-energy equivalence. But still we have no idea of what causes mass and what is energy
@சமுத்ரா சார்,
அடடா.. இன்னிக்கு மழை பெய்யாதுன்னு பொதிகைல சொல்றாங்களே? அது இதுதானா? என்ன ஆச்சர்யம்...
I'm fine. ஒருவழியா அந்தப் பொதுத்தேர்வை முடிச்சுட்டு லீவுல நிம்மதியா இருக்கேன். நீங்க எப்படி?
உதாரணம் ஓகே சார். ஆனா Mach principle of Inertia உண்மையென்றாலும் இனேர்ஷியாவைக் கணக்கிடும்போது சுற்றுப்புற பொருட்களின் பரவலை கணக்கிடுவதில்லை என நினைக்கிறேன்.
# Mass Energy
உண்மைதான். ஆனால் நீங்கள் அ-அ-அ 61 இல்
//ஆற்றலுக்கும் (சிறிதே) நிறை உண்டு.சூடான காபி ஆறிய காபியை விட கொஞ்சம் அதிக நிறை இருக்கும்.//
என எழுதியதைப் படித்தபோது கொஞ்சம் டவுட் வந்தது. இங்கே
//அணுக்கருவின் நிறை அந்த தனித்தனி துகள்களின் நிறைகளின் கூடுதலை விடக் குறைவாகவே உள்ளது.//
என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் அந்த bonding energy யின் நிறையும் கூட்டப்பட்டு மொத்த 'நிறை' சமமாக அல்லவா இருக்க வேண்டும்? இரண்டு இடத்திலும் நிறை என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான்..
மற்றபடி, குற்றம் கண்டுபிடித்து பேர்வாங்கும் புலமை எதுவும் இல்லையென்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)
இன்னைக்கு இவ்வளவு போதுமுன்னு சொல்ல வேண்டியது தானே... அதுக்கெதுக்கு பீலியெல்லாம் பிய்க்கிறீங்க.
நல்லாருக்கு,இன்னும் கொஞ்சம் எளிமையாய் சொல்லலாம்
நல்லாருக்கு,இன்னும் கொஞ்சம் எளிமையாய் சொல்லலாம்
@abarajithan
//அதைச் சேர்க்கத் தேவையான திறமையும் சேர்ந்தது. ஆனால் சேர்த்துவிட்டுப் பிரிக்கும்போது அந்தத் திறமை காணாமல்போய் விடுகின்றதே?//
திறமையினால் சேர்க்கப்படும் அதோடு சரி. பிரிக்காவிட்டாலும் கூட திறமை காணப்படாது. Sorry.
Post a Comment