கலைடாஸ்கோப்-62 உங்களை வரவேற்கிறது.
=
=
பத்து நாட்களுக்கு முன்பு ஒருநாள் மிக மிக
சலிப்பான ,சாதாரணமான மத்தியான வேளை. ஹெவி லஞ்ச் மற்றும் அலுப்பு மிக்க
ஆபீஸ் வேலை. தூக்கம் கண்களை மெல்ல வருடிக் கொண்டிருந்தது.(இந்த, மத்தியானம் இரண்டு மணியில் இருந்து மூன்று மணிவரை உள்ள நேரத்தை எனக்கு
பிடிக்கவே பிடிக்காது).அப்படிப்பட்ட ஒரு நேரத்தை திடீரென்று சுவாரஸ்யமாக
மாற்றும் படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.ஒரு ஐந்து வினாடிகளுக்கு ஆபீசில் மேஜை, நாற்காலி எல்லாம் மெலிதாக அதிர்ந்தன. (காபி
கப்கள் எல்லாம் கீழே விழுந்து உடைந்தன என்று மிகையாக சொல்ல விருப்பம்
இல்லை)DUE TO AN EMERGENCY, IT'S NECESSARY TO
EVACUATE THE BUILDING ,எல்லாரும் SAFE ASSEMBLY POINT இற்கு செல்லவும்
என்று அலாரம் அடித்தது.எந்த சூழ் நிலையிலும் கம்ப்யூட்டரே கதி என்று கடமை உணர்ச்சியுடன் உட்கார்ந்து வேலை செய்யும்
(அல்லது வேலை செய்வது போல பாசாங்கு செய்யும்) சில சிகாமணிகள் எல்லா
ஆபீசிலும் இருப்பார்கள். அவர்கள் கூட எதற்கு வம்பு வெளியே போய் விடலாம் என்று அலுங்காமல் வெளியே
வந்து விட்டார்கள்.SAFE ASSEMBLY பாயிண்ட் இல் நின்றிருந்த பல முகங்களைப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் நம் ஆபீசில் தான் வேலை செய்கிறார்களா
என்று தோன்றியது ..2012 படம் போல எல்லாரும் வெளியேறியதும் கட்டிடம் இடிந்து அப்படியே நமது கம்ப்யூட்டர் சகிதம் பூமிக்குள் மறைந்து விடக் கூடாதா என்று
தோன்றியது (ஜாலி ஒரு வாரம் ஆபீஸ் லீவு) ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அரைமணிநேரம் கழித்து அனைவரும் அவரவர் இடத்திற்கு திரும்பி அவரவர் ஆணிகளைப் பிடுங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆபீசிலும் அபார்ட்மென்ட்களிலும் நாம், அரட்டை அடிக்கும் போதும், ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போதும். சாப்பிடும் போதும் , தூங்கும் போதும் ,மிக்சர் கொறித்துக் கொண்டே டி.வி. பார்க்கும் போதும் நம் கீழே உள்ள பூமி ஸ்திரமாகத்தான் இருக்கும் என்று எவ்வளவு உறுதியாக நம்புகிறோம்? நிலமெனும் நல்லாள் அவ்வப்போது இப்படி விரல்களை சொடுக்கி சோம்பல் முறிக்கிறாள்; பூமி கொஞ்சம் அதிர்ந்தாலும் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவான் மனிதன். அனாலும் 'பார், இந்த நாளை டைரியில் குறிச்சு வச்சுக்க. எண்ணி ஒரே வருஷத்துல உன்னை...' என்றெல்லாம் அபத்தமாக வசனம் பேசுகிறான்..
==
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஒரு புதிர். விடையை அடுத்த கலைடாஸ்கோப்பில் சொல்கிறேன்.
இரண்டு கதவுகள். ஒரு கதவின் பின்னே ஒரு முரட்டு சிங்கம் இருக்கிறது. இன்னொன்றின் பின்னே தங்கப் புதையல். இரண்டு கதவுகளும் இரண்டு
வீரர்களால் காவல் காக்கப்படுகின்றன. இரண்டு வீரர்களில் ஒருவன் எப்போதும் உண்மையே பேசுவான். இன்னொருவன் எப்போதும் பொய்தான் பேசுவான். யார் உண்மை பேசுபவன் யார் பொய் பேசுபவன் என்று தெரியாது. நீங்கள் ஏதோ ஒரு வீரனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்க வேண்டும். அதன் மூலம் எந்தக் கதவில் தங்கம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரே ஒரு கேள்வி.அதுவும் ஒரு வீரனிடத்தில் மட்டுமே (அதே கேள்வியை இன்னொருவனிடம் கேட்க முடியாது).அந்தக் கேள்வி என்ன?
===
நாம் ஒரு செயலை செய்கிறோம். ஆனால் கவனம் முழுக்க அதில்தான் இருக்கிறதா என்பது டவுட்டு தான். ஆயிரத்தெட்டு விஷயங்களைப் பற்றி
இடையிடையே நினைக்கிறோம். உதாரணம் நான். ஆபீசில் வேலை செய்து கொண்டு இன்னும் எல்.ஐ.சி பாலிசி கட்டவில்லையே இன்று xxx மெஸ்சேஜ் செய்யவில்லையே ஊருக்குப் போக டிக்கெட் புக் செய்ய வேண்டுமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.MULTI TASKING என்பது நல்லது தான். (ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது) ஆனால் ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பதால் பயன் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது. இந்தக் கதையைப் படியுங்கள்:
பத்மபாதர் நரசிம்மரை நினைத்து நெடுங்காலம் காட்டில் தவமிருக்கிறார். வேடன் ஒருவன் அவரை தினமும் கவனிக்கிறான். ஒருநாள் அவரைப் பார்த்து "சாமி, யாரை நெனச்சு நீங்க இப்படி தியானம் பண்ணறீங்க" என்று கேட்கிறான். பத்மபாதர் "அதெல்லாம் பெரிய விஷயம், உனக்குப் புரியாதுப்பா " என்கிறார்.வேடன் "யாருன்னு சொல்லு சாமி, ஆள் எங்க இருந்தாலும் புடிச்சு கொண்டாறேன்" என்கிறான். ப.பா சிரித்து விட்டு 'சிங்கத் தலையும் மனித உடலும் கொண்ட ஒரு தெய்வம்" என்கிறார். வேடன் அந்த ஆளை நாளை மாலைக்குள் பிடித்துக் கொண்டு வருவேன்; இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் இட்டு தன் தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறான்.ஒரு நாள் முழுவதும் ஊன் உறக்கம் இன்றி தேடிக் களைக்கிறான். இறுதியில் நரசிம்மம் கிடைக்காமல் போகவே தீ மூட்டி அதை வலம் வந்து உள்ளே இறங்க எத்தனிக்கிறான். அப்போது பின்னாலிருந்து சிம்மத்தின் கர்ஜனை கேட்கிறது. மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உருவம் நிற்கிறது. அதை அப்படியே கயிற்றில் கட்டி பத்மபாதரிடம் அழைத்து வருகிறான் வேடன். 'சாமி , பாரு நீ கேட்ட அந்த ஆளை கட்டிக் கூட்டியாந்திருக்கேன்' என்கிறான்.ஆனால் வேடனுக்குத் தெரியும் நரசிம்மம் பத்மபாதருக்குத் தெரிவதில்லை. 'எங்கப்பா , எனக்கு ஒண்ணுமே தெரியலையே' என்கிறார் அப்பாவியாக. நரசிம்மர் வேடனுக்கு மட்டும் காட்சி அளிக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் அழுகிறார். 'நரசிம்மா, நான் எத்தனை காலம் உன்னை உபாசனை செய்கிறேன் ' எனக்கு நீ தரிசனம் தரவில்லையே என்று வருந்துகிறார். சிம்ம கர்ஜனை செய்து நரசிம்மர் குரல் கொடுக்கிறார்: "பத்மபாதா, வேடன் ஒருநாள் முழுவதும் என்னையே நினைத்துக் கொண்டிருந்தான், அன்னம், தண்ணீர், வேட்டை எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒருநொடி கூட வேறு நினைப்பேதும் இன்றி என்னையே மனதில் வரித்துக் கொண்டிருந்தான், எனவே அவனுக்குக் காட்சி தந்தேன், நீயோ நெடுங்காலம் என்னை நோக்கித் தவம் இருந்தாலும் கூட உன் மனதில் மற்ற விஷயங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. எனவே உனக்கு என் குரலை மட்டும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது' என்கிறார்.
ஓகே.என்னதான் நிஷ்காம்ய பக்தி இருந்தாலும் விடாமல் இறைவனை நான்-ஸ்டாப்பாக நினைத்துக் கொண்டிருப்பது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.But, Concentration has some value.இதையே ஓஷோ போன்ற விவகாரமான ஆசாமிகளிடம் சொன்னால், கடவுளாவது கரப்பான் பூச்சியாவது ஒரே விஷயத்தை தொடர்ந்து மனம் நினைத்துக் கொண்டிருந்தால் மனமே அதை வெளியில் PROJECT செய்து ஒரு hallucination (மாய வஸ்து) ஐ உருவாக்கி விடும் என்று சொல்வார்கள். எனவே நரசிம்மர் அந்த வேடனின் மனதின் Hallucination ஆகக் கூட இருக்கலாம். யார் கண்டது?
====
இன்று உலக புத்தக தினம். புத்தகங்களைப் பற்றி சில Quotes :
என் சிறந்த நண்பன் என்பவன் இதுவரை நான் படிக்காத புத்தகத்தை எனக்குப் பரிசளிப்பவன் -ஆப்ரகாம் லிங்கன்
உலகம் ஒரு புத்தகம். பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள் -செயின்ட் அகஸ்டின்
மதிய உணவை வேண்டுமானாலும் நீங்கள் தவிர்க்கலாம் ; ஆனால் ஒரு நல்ல புத்தகத்தை தவற விட்டு விடாதீர்கள் - ஜிம் ரோகன்
உங்கள் வாழ்க்கை வரலாறு ஒரு நல்ல புத்தகமாக இருக்காது; எனவே அதை எழுத முயற்சி செய்யாதீர்கள் - ஃபிரான் லெபோவிட்
நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்க விரும்பினால், அது இன்னும் எழுதப்படவில்லை என்றால் அதை நீங்கள்தான் எழுத வேண்டும் - டோனி மோரிசன்
இந்தப் புத்தகத்தில் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.நான் செய்த முதல் தவறைப் பற்றி 850 -ஆவது பக்கத்தில் சொல்லியுள்ளேன் - ஹென்றி கிஸ்சிங்கர்
ஒரு புத்தகம் என்பது நீங்கள் மீண்டும் மீண்டும் திறக்க முடிகிற ஒரு பரிசாகும் - கேரிசன் கெய்லர்
ஒரு நல்ல புத்தகம் என்பது எதிர்பார்ப்புகளுடன் திறக்கப்படுகிறது; மனமகிழ்வோடு முடிக்கப்படுகிறது -அமாஸ் ப்ரோன்சன்
ஒரு நல்ல புத்தகம் என்பது நம்மால் படிக்கப்படுவதல்ல. நம்மைப் படிப்பது -W .H .ஆடன்
ஒரு புத்தகத்தை முடிப்பது என்பது ஒரு நல்ல நண்பனைப் பிரிவது போலாகும் - வில்லியம் ஃபெதர்
மதிப்புரைகளைப் பார்த்து விட்டு நான் புத்தகம் வாங்குவதில்லை - ஜிம் ஹேரிசன்
ஒரு மோசமான புத்தகம் கூட நமக்கு ஏதோ ஒன்றை விட்டுச் செல்கிறது -விஸ்லாவா ஸ்கைம்போர்ஸ்கா
புத்தக விரும்பிகள் தனியாக படுக்கைக்கு செல்வதில்லை - யாரோ
ஒரு நல்ல புத்தகத்தை எடுத்து செல்வது என்பது ஒரு தோட்டத்தை நம் பாக்கெட்டில் எடுத்து செல்வது போல - சீனப் பழமொழி
ஒரு புத்தகத்தை எழுத நீங்கள் பாதி நூலகத்தைப் படிக்க வேண்டும் - சாமுவேல் ஜான்சன்
=====
சில விசித்திரமான Quotes :
நான் இந்த உலகத்தை மாற்ற விரும்புகிறேன்.. ஆனால் அதன் Source code தான் கிடைக்கவில்லை -யாரோ
காலம் என்பது ஒரு நல்ல ஆசான். ஆனால் அது தன் எல்லா மாணவர்களையும் கொன்று விடுகிறது - ஹெக்டர் பெர்லியாட்ஸ்
இன்று தான் கடைசி என்பது போல ஒவ்வொரு நாளும் வாழுங்கள். ஒருநாள் உங்கள் அனுமானம் உண்மையாக இருக்கும் -யாரோ
இளமையாக இருப்பதற்கு மூன்று வழிகள். ஒன்று சந்தோஷமாக இருப்பது இரண்டு ஆரோக்யமான உணவுகள் சாப்பிடுவது மூன்று உங்கள் வயதைப் பற்றி பொய் சொல்வது -லூசில் பால்
உங்களுக்கு வயதாகும் போது மூன்று விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று உங்கள் ஞாபக சக்தி பழுதடைகிறது. மற்ற இரண்டும் என்ன என்று ஞாபகம் இல்லை -சர் நார்மன் விஸ்டம்
என் கிரடிட் கார்ட் தொலைந்து விட்டது என்று நான் போலீசிடம் புகார் கொடுக்கவில்லை. அதைத் திருடியவன் என் மனைவியை விட குறைவாகவே செலவு செய்து வருகிறான் -இலி நாச்ட்ஸ்
ஒரு நல்ல வக்கீல் சட்டத்தை அறிந்து வைத்திருக்கிறார். புத்திசாலி வக்கீல் நீதிபதியை விருந்துக்கு அழைத்துச் செல்கிறார் -யாரோ
ஆதாம் தான் உலகிலேயே அதிர்ஷ்டம் செய்த ஆண்மகன்; அவனுக்கு மாமியார் இல்லை -ஷோலம் அலைச்சம்
உலகிலேயே புரிந்து கொள்ளக் கடினமான விஷயம் இந்த இன்கம்டாக்ஸ் -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சிகரெட்டை விடுவது சுலபமான செயல் தான். நானே அதை பல முறை செய்திருக்கிறேன் -மார்க் ட்வைன்
கொள்ளைக்காரர்கள் உன் பணத்தை எடு இல்லை உன் உயிரைக் கொடு என்கிறார்கள். மனைவிகள் இந்த இரண்டையும் கேட்கிறார்கள் -சாமுவேல் பட்லர்
கணிதத்தின் மிகப்பெரிய புதிர்: ஆயிரம் வருடங்கள் கடந்து விட்டன , நூற்றுக்கணக்கான தேற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டன, பல சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.இன்னும் 'X ' இன் மதிப்பு என்ன என்று தெரியவில்லை -X
அறைக்குள் நுழைந்து விட்டு பிறகு எதற்காக வந்தோம் என்று யோசித்திருக்கிறீர்களா? நாய்கள் அப்படித்தான் தம் வாழ்வைக் கழிக்கின்றன என்று நினைக்கிறேன் -ஸூ மெர்பி
ஒரு மருத்துவமனையின் படுக்கை என்பது வெயிட்டிங் இல் இருக்கும் டாக்சியின் மீட்டர் போன்றது -க்ருசோ மார்க்ஸ்
நான் பிரார்த்தனை செய்வதில்லை. நான் கடவுளை சலிப்பூட்ட விரும்பவில்லை -ஆர்சன் வேல்ஸ்
ஒரு மனிதன் தான் பிரபலம் ஆகி எல்லாரும் தன்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். பிரபலம் ஆனதும் பொது இடங்களில் முகத்தை மறைத்துக் கொண்டு செல்கிறான் -ஃபிரெட் அலன்
======
ஓஷோ ஜோக்
டாக்டர் ஒருவர் வீட்டுக்கு போன் வந்தது.
'ஹலோ மிஸ்டர். மார்க்ஸ் இன் வீட்டில் இருந்து பேசுகிறோம்"
டாக்டர்: சொல்லுங்கள்
போன்: வீட்டுக்குள் ஒரு பூனை புகுந்து விட்டது. உடனே வரவும்.
டாக்டர்: என்ன? பூனையா? பூனை வந்ததற்கா என்னை அழைக்கிறீர்கள்?
போன்: நான் தான் மிஸ்டர். மார்க்ஸின் கிளி பேசுகிறேன்.
டாமி ஒரு சுங்க கேட்டைக் கடக்க வேண்டி வந்து. கையில் தன் கிளியை வைத்திருந்தான்.
சுங்க அதிகாரி, "சார், நீங்கள் உங்கள் கிளிக்கு சுங்கம் செலுத்த வேண்டும் என்றார் "
எவ்வளவு?
"கிளி உயிரோடு இருந்தால் ஐந்து டாலர், பொறித்த கிளி என்றால் இரண்டு டாலர்"
டாமியைப் பார்த்து அவன் கிளி அவசரமாக 'டாமி , ஏதாவது ஏடாகூடமாக சிந்தித்துத் தொலையாதே ' என்றது.
Osho : Parrots are wiser than men
இப்போது ஓர் அடல்ட் ஜோக்.
ஒரு நியூடிஸ்ட் காலனியில் ஒரு குட்டிப் பையன் தன் அப்பாவைப் பார்த்து 'அப்பா , பணக்காரன் என்றால் யார், ஏழை என்றால் யார்?" என்றான்.நிர்வாண மனிதர்களுக்கிடையில் இதை எப்படி சொல்வது? உடையே இல்லாத போது?
எனவே தற்காலிகமான பதிலாக அவன் அப்பா 'யாருக்கு 'அது' பெரியதாக இருக்கிறதோ அவன் பணக்காரன்' 'யாருக்கு அது சிறியதாக இருக்கிறதோ
அவன் ஏழை 'என்று சொல்லி வைத்தார்.
இரண்டு நாள் கழித்து பையன் அப்பாவிடம் ஓடி வந்தான்.
என்னடா விஷயம் என்றார் அப்பா.
"அப்பா, ஒரு ஏழை அக்காவைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தான். அப்படி வரும் போது திடீரென்று அவன் பணக்காரனாக மாறி விட்டான்.என்ன அதிசயம்?"என்றான் குட்டிப் பையன்
சமுத்ரா
ஒரு நியூடிஸ்ட் காலனியில் ஒரு குட்டிப் பையன் தன் அப்பாவைப் பார்த்து 'அப்பா , பணக்காரன் என்றால் யார், ஏழை என்றால் யார்?" என்றான்.நிர்வாண மனிதர்களுக்கிடையில் இதை எப்படி சொல்வது? உடையே இல்லாத போது?
எனவே தற்காலிகமான பதிலாக அவன் அப்பா 'யாருக்கு 'அது' பெரியதாக இருக்கிறதோ அவன் பணக்காரன்' 'யாருக்கு அது சிறியதாக இருக்கிறதோ
அவன் ஏழை 'என்று சொல்லி வைத்தார்.
இரண்டு நாள் கழித்து பையன் அப்பாவிடம் ஓடி வந்தான்.
என்னடா விஷயம் என்றார் அப்பா.
"அப்பா, ஒரு ஏழை அக்காவைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தான். அப்படி வரும் போது திடீரென்று அவன் பணக்காரனாக மாறி விட்டான்.என்ன அதிசயம்?"என்றான் குட்டிப் பையன்
சமுத்ரா
15 comments:
// நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஒரு புதிர். விடையை அடுத்த கலைடாஸ்கோப்பில் சொல்கிறேன்.//
விடைக்காக காத்திருக்கிறேன்;
புதிருககான விடையான அந்த மில்லியன் டாலர் கேள்வி: சிங்கம் எந்த அறையில் இருக்கிறது? என்பதே. சரியா? கலைடாஸ்கோப்பில் ‘ஏ’ ஜோக்கா? இருநதாலும் சிரிக்க முடிஞ்சது ஹி... ஹி... புத்தகங்கள் பற்றிய மொழிகள் அனைத்துமே எனக்கு மிகமிகப் பிடித்திருந்தன.
சிறந்த பொன்மொழிகள் ..,
சமுத்திரா,
பூமி ஆடியதும் ரொம்ப ஆடிப்போயிட்டிங்க போல, நாம ஆடாத ஆட்டத்தையா பூமி ஆடிடப்போவுது :-)) ஆடட்டும் ஆடட்டும்!
அடேங்கப்பா நான் இஸ்கூல் படிக்க சொல்ல கேட்டப்புதிர் ஆச்சே,
அந்த காவலனைக்கேட்டால் எந்தக்கதவுக்கு பின்னால் தங்கம் இருக்குனு சொல்வான் என இன்னொருக்காவலனிடம் எனக்கேட்டு , அவன் சொன்னதுக்கு எதிர்க்கதவை திறக்கணும்.
அழகி அல்லது புலி என்று ஒரு உலகப்புகழ் கதையோட உல்டா தான் இந்தப்புதிர். அந்த கதையை உலகின் சிறந்த சிறுகதைனு சுஜாதா ஒரு காலத்தில் அறிமுகப்படுத்தினார்.
முன்னமே படிச்ச புதிர். I think this'd be an interesting problem for programmers.
யாராவது ஒருத்தன்கிட்டே எந்தக் கதவுக்குப் பின்னாடி சிங்கம் இருக்குன்னு மத்தவங்கட்டி கேட்டால் எந்தக் கதவைக் காட்டுவான்னு கேட்டுட்டு அந்தக் கதவை தைரியமா ஓபன் பண்ணலாமாம்...
இதே புதிரை, ஒரு கதவுக்குப் பின்னாடி ரெண்டு மாசப் பட்டினில சிங்கமும் அடுத்த அறைல ஸ்விஸ் பாங்க் திறந்த லாக்கரும், கதவுக்கு முன்னாடி ஒரேயொரு காவலனும், ஒரேயொரு கேள்வியும் மட்டும்தான்னா என்ன பண்ணுவீங்க?
//விடாமல் இறைவனை நான்-ஸ்டாப்பாக நினைத்துக் கொண்டிருப்பது எப்படி சாத்தியம்//
God is omnipresent. இதன்படி நாம என்ன நினைச்சாலும் அது கடவுள்தானே?
// வெளியில் PROJECT செய்து ஒரு hallucination (மாய வஸ்து) ஐ உருவாக்கி விடும்//
உண்மைதான். நமது ஆசைகளை தீர்ப்பது போலக் காட்டி, ஆசைகளை காலாவதியாக்குவதே இந்த hallucination களின் வேலையாக இருக்கவேண்டும்.
# quotes: good ones. I'm gonna share them.
//இந்தப் புத்தகத்தில் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.நான் செய்த முதல் தவறைப் பற்றி 850 -ஆவது பக்கத்தில் சொல்லியுள்ளேன் - ஹென்றி கிஸ்சிங்கர்// :D
முதலில் நமக்கு தெரிந்த கேள்வியை கேட்க வேண்டும்.உதாரணமாக இந்தியாவின் தலைநகர் எது?
டெல்லி என்று சரியாய் சொன்னால் இரண்டாவது ரோபோ பொய் சொல்லும் . எனவே இரண்டாவது கேள்வி எந்த கதவுக்கு பின்னால் தங்கம் உள்ளது ? அது கட்டிய திசைக்கு எதிர் திசை சரியான பதில்.
lie detector வச்சு கண்டுபிடிக்கலாம்
//Abarajithan Gnaneswaran said...
யாராவது ஒருத்தன்கிட்டே எந்தக் கதவுக்குப் பின்னாடி சிங்கம் இருக்குன்னு மத்தவங்கட்டி கேட்டால் எந்தக் கதவைக் காட்டுவான்னு கேட்டுட்டு அந்தக் கதவை தைரியமா ஓபன் பண்ணலாமாம்..//
he is correct
யாராவது ஒருத்தன்கிட்டே எந்தக் கதவுக்குப் பின்னாடி சிங்கம் இருக்குன்னு மத்தவங்கிட்ட கேட்டால் எந்தக் கதவைக் காட்டுவான்னு கேட்டுட்டு அந்தக் கதவை தைரியமா ஓபன் பண்ணலாமாம்..//
இதுதான் கரெக்ட் கேள்வி.
அந்த காவலனைக்கேட்டால் எந்தக்கதவுக்கு பின்னால் தங்கம் இருக்குனு சொல்வான் என இன்னொருக்காவலனிடம் கேட்டு , அவன் சொன்ன கதவை திறக்கணும்.
\\யாராவது ஒருத்தன்கிட்டே எந்தக் கதவுக்குப் பின்னாடி சிங்கம் இருக்குன்னு மத்தவங்கிட்ட கேட்டால் எந்தக் கதவைக் காட்டுவான்னு கேட்டுட்டு அந்தக் கதவை தைரியமா ஓபன் பண்ணலாமாம்.\\ இது வேலைக்காகாது. ஒருவேளை நீங்கள் கேள்வியைக் கேட்கத் தேர்ந்தெடுப்பவர் உண்மை பேசுபவராக இருந்தால், அவர் அடுத்த நபர் சொல்லும் பொய்யைத் தானே அப்படியே சொல்லுவார்? அப்புறம் எப்படி சரியான கதவைத் திறக்க முடியும்?
"தங்கம் எந்தக் கதவின் பின்னால் இருக்கிறது என்று நான் கேட்டால் அதற்க்கு நீ என்ன பதில் சொல்வாய்?"- இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் உண்மையான பதில் கிடைத்துவிடும்.
-வேலு.
@ வேலு சார்,
:D சார், நீங்க சரியா கவனிக்கலைன்னு நெனைக்கறேன்... நான் கேட்டது சிங்கத்த...
//இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் உண்மையான பதில் கிடைத்துவிடும்.//
அடடா... ஆனா அந்தக் காவல்காரன் கன்பியூஸ் ஆகலைன்னா சரிதான்.. :)
\\:D சார், நீங்க சரியா கவனிக்கலைன்னு நெனைக்கறேன்... நான் கேட்டது சிங்கத்த...\\
அப்புறமாதான் யோசிச்சேன், நீங்க கேட்ட கேள்வியிலும் உண்மை தெரிந்துவிடும். ஆனால், அடுத்த காவலாளி எண்ணப் சொல்லப் போகிறான் என்பது இந்தக் காவலாளிக்கு முன்னரே எப்படித் தெரியும்?
\\அடடா... ஆனா அந்தக் காவல்காரன் கன்பியூஸ் ஆகலைன்னா சரிதான்.. :)\\
கன்பியூஸ் ஆகணும்னா, நீங்க கேட்ட கேள்விக்கே கூட ஆகலாம்..... :)
Velu
@ வேலு சார்,
//ஆனால், அடுத்த காவலாளி எண்ணப் சொல்லப் போகிறான் என்பது இந்தக் காவலாளிக்கு முன்னரே எப்படித் தெரியும்?//
எல்லாம் முன்னமே பேசி வச்சிருப்பாங்கங்கற ஒரு நப்பாசை தான்.
//கன்பியூஸ் ஆகணும்னா, நீங்க கேட்ட கேள்விக்கே கூட ஆகலாம்..... :)//
அதான் ஒருத்தர் எனக்கு முன்னாடியே இதே பதில சொல்லிட்டாரேன்னு கொஞ்சம் மாத்தி போட்டேன். அவ்வளவுதான்.
complete each level by overcoming any obstacles which you come across, the faster you complete the game the better score you will achieve, do you have the balance. Stunt Dirt Bike : Say hello to mother nature by cranking through some lumber piles. Systematically and mercilessly disassembling, flushing, greasing, and re-packing the cycling ipation is running high for the $25,000-to-win Third Annual Commonwealth 100 scheduled for April 13th and 14th at Bill Sawyer’s Virginia Motor Speedway in. The most fun but most hard to win are stunt games where you need to balance your vehicle, avoid obstacles, do tricks and stunts for more score and at last - finish. Have fun with us! Race your Quad Bike Play over 1000 free racing games online, including car games, bike games, parking games and more on! Cool online car racing games, puzzle games, action games, shooter games, solitaire games, math and social over 1000 FREE games here at , including free online games, arcade games, racing games, shooting games, and flash games!
Post a Comment