இந்த வலையில் தேடவும்

Tuesday, April 10, 2012

அணு அண்டம் அறிவியல் -64

அணு அண்டம் அறிவியல் -64 உங்களை வரவேற்கிறது.

பொருட்கள் நகர்கின்றன. எனவே முதலில் நகர்த்தியவர் இருக்க வேண்டும்
நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு மூல காரணம் இருக்க வேண்டும்.
பொருட்கள் இருக்கின்றன. எனவே அவற்றைப் படைத்தவர் இருக்க வேண்டும்.
பொருட்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. எனவே அவைகளுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

-Auinas 's Cosmological Proof

 

SOURCE CODE என்ற திரைப்படத்தின் சுருக்கமான கதையைப் பார்க்கலாம்:

ஸ்டீவன்ஸ் ஒரு ராணுவ அதிகாரி.ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஒரு விமான விபத்தில் காயமடைகிறார். நினைவிழக்கிறார்.விழிப்பு வரும் போது அவர் ஒரு ரயிலின் உள்ளே இருக்கிறார்.அவருடைய முகம் கண்ணாடியில் வேறு யாரோ ஒருவருடைய முகமாகத் தெரிகிறது.
(ஃ பெண்ட்ராஸ்). ரயிலில் அவர் தன்னுடன் பயணிக்கும் சக பயணி கிறிஸ்டினா என்ற பெண்ணுடன் பேசுகிறார். இருவரும் நெருக்கமாகிறார்கள்.அப்போது ட்ரெய்னில் ஒரு குண்டு வெடிக்கிறது. எல்லாரும் வெடித்துச் சிதறுகிறார்கள்.

ஸ்டீவன்ஸ் ஒரு முற்றிலும் புதிதான இடத்தில் கண் விழிக்கிறார். அங்கே டி.வி. போன்றதொரு திரையில் கேப்டன் கோல்ட்வின் என்ற பெண் தோன்றி இவருடன் பேசுகிறார்.ஸ்டீவன்ஸ் SOURCE code என்ற ஒரு சோதனை ப்ராஜெக்ட்-இல் இருப்பதாக தெரிவிக்கிறார். Source code என்பது ஒருவரை இன்னொருவருடைய (வாழ்க்கையின்) கடைசி எட்டு நிமிடங்களை வாழ்வதற்கு அனுமதிக்கும் ஒரு புதுமையான ப்ராஜெக்ட்.
ட்ரெயினில் பயணம் செய்த
ஃ பெண்ட்ராஸ் என்ற ஆசிரியரின் (இறந்த பின்னும் மூளை எட்டு நிமிடங்கள் உயிர்ப்போடு இருக்கிறது) கடைசி
எட்டு நிமிடங்களுக்குள் சென்று ட்ரெயினில் பாம் வைத்தவன் யார் என்று கண்டுபிடிப்பது தான் ப்ராஜெக்டின் நோக்கம்.பாம் வைத்தவனைக்
கண்டுபிடிப்பதன் மூலம் அவன் மூலம் மேலும் நடக்கவிருக்கும் தீவிரவாத செயல்களைத் தடுத்து விடலாம் என்பது அவர்கள் நோக்கம்.

சரி. இந்தப் படத்தின் திரைக் கதை கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இது Time travel அல்ல என்று source code ஐ வடிவமைத்தவர் படத்தில் சொல்கிறார்.ஒவ்வொரு செயலுக்கும் ALTERNATE TIME LINE  ஒன்று இருக்கிறது என்ற குவாண்டம் தத்துவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. படத்தில் நிறைய இணை சாத்தியங்களைக் காட்டுகிறார்கள். ஒன்றில் ஸ்டீவன்ஸ் ரயிலில் பயணிக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார். அவனுடன் கீழே இறங்கி அவனது மாஸ்டர் ப்ளானுக்காக வைத்திருக்கும் வேனைக் கண்டுபிடித்து அதன் நம்பரை போலீசுக்கு தகவல் சொல்கிறார். இதன் மூலம் அந்த ட்ரெயின் விபத்துக்கு உள்ளானாலும் பின்னால் வரும் விபத்துகள் தவிர்
க்கப்படுகின்றன. இன்னொரு சாத்தியத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் ஸ்டீவன்ஸ் அவனை ரயிலிலேயே கட்டிப் போட்டு விட்டு பாமை செயலிழக்கச் செய்கிறார். பாம் வெடிப்பதே இல்லை. ரயில் பாதுகாப்பாக சிகாகோ வருகிறது. அவரும் அவர் காதலி கிறிஸ்டினாவும் ஸ்டேஷனில் இறங்கி சிரித்துக் கொண்டே நடந்து செல்கிறார்கள்.

கொஞ்சம் நம் 12B திரைப்படம் போல இருக்கிறது அல்லவா? வாழ்க்கையில் நாம் பல சமயங்களில் பஸ்ஸை மிஸ் செய்து விடுகிறோம். அப்படி பஸ்ஸை மிஸ் செய்வது நம் வாழ்வில் ஒரு (Quantum ) BRANCHING -ஐ ஏற்படுத்துகிறது. பஸ்ஸை மிஸ் செய்யாமல் அதில் ஏறி இருந்திருந்தால் நம் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்? ஒரு வேலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.அந்த வாழ்க்கையும் இப்போது ஏதோ ஒரு சூக்சும பரிமாணத்தில் நடந்து கொண்டிருக்கலாம் என்பது குவாண்டம் விதிகளின் படி சாத்தியம்.ஆனால் நாம் நம்மை ஒரு இடத்தில் மட்டும் தானே உணர்கிறோம்?I can't see myself Split- Bryce DeWitt


source code திரைப்படத்தில் இரண்டு சயின்ஸ் பிக்ஷன் கான்செப்டுகள் வருவதை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஒன்று இந்த குவாண்டம் Branching .நம் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரே LINEAR LIFE HISTORY இல்லை. எண்ணிலடங்காத LIFE HISTORIES இருக்கின்றன என்பது. இன்னொன்று ஒரு ஆளை அவன் இறந்த பின் அவன் மூளையை மட்டும் வைத்துக் கொண்டு அவனுக்கு புலன்களின் அனுபவத்தை வெளியில் இருந்து simulate செய்து நான் உயிரோடு இருக்கிறேன் என்று நம்ப வைக்க முடியுமா? என்பது.இது ஒரு தத்துவார்த்த விசாரமும் கூட.BRAIN IN A VAT என்று அழைக்கப்படும் இந்த கருத்து நிறைய Science Fiction கதைகளில் வந்திருக்கிறது. மனித மூளையைத் தனியாக எடுத்து அதை திரவத்தில் முங்க வைத்து,அதில் கலர்கலர் ஒயர்களை இணைத்து ஒரு விதமான VIRTUAL REALITY ..அப்போது அந்த மூளை தன்னை ஒரு மனிதன் என்று உணருமா? தான் ஒரு உடம்பில் இல்லை ஒரு விதமான மாயைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பது அதற்குத் தெரியுமா? தான் நடப்பது போல, படிப்பது போல, பேசுவது போல கனவு காணுமா? இந்த சாத்தியக்கூறு 'நான்' என்றால் என்ன என்ற அடிப்படையையை ஆட்டம் காண வைக்கிறது.நான் என்பது புலன்களின் பிம்பம் தானா? சு வாங் சி என்ற ஜென் ஞானியின் பட்டாம்பூச்சி கனவு மிகவும் பிரபலமானது.

ஒரு நாள் காலையில் தன் சீடர்களை அழைத்து 'நான் ஒரு பெரிய மனக்குழப்பத்தில்' மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்றாராம்.சீடர்கள் என்ன என்று கேட்டதற்கு நேற்று இரவு ஒரு கனவு கண்டேன் என்றாராம். 'கனவு தானே' 'அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்' என்று கேட்டதற்கு
'நேற்று நான் என் கனவில் நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருந்தேன். சுதந்திரமாக சுற்றித் திரிந்து மலருக்கு மலர் தாவினேன்.காலையில் அந்தக் கனவு
கலைந்து விட்டது. என்னுடைய கேள்வி என்ன என்றால் சுவாங்சி பட்டாம்பூச்சியாக இருப்பது போல கனவு கண்டாரா? இல்லை பட்டாம்பூச்சி சுவாங்சி யாக இருப்பது போல (இப்போது)கனவு காண்கிறதா? என்பது தான்' என்றாராம்.
ஒருவேளை நாம் நிஜமா? இல்லை நாமெல்லாம் BRAIN IN A VAT ஆ?
திரவத்தில் இருந்து கொண்டு கனவு காணும் மூளைகளா?

நான் என்பது யார்? பிரபஞ்சமே கடவுளின் கனவு தானா?

ஹலோ, இது இயற்பியல் வகுப்பு என்று பின்னாலிருந்து யாரோ சொல்வது கேட்கிறது. OK BACK TO THE TOPIC ..

QUANTUM MANY WORLDS approach என்பது காலப் பயணத்தை (TIME TRAVEL ) ஓரளவு சாத்தியம் ஆக்குகிறது.கடந்த காலத்தில் பயணித்து உங்கள் தாத்தாவைக் கொன்று விட்டால் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு பதிலாக இது அங்கே இரண்டு இணை பிரபஞ்சங்கள் உருவாகலாம் என்கிறது. ஒன்றில் தாத்தா இறந்து அவருக்கு கல்யாணம் ஆகாமல் நீங்களும் பிறக்காமல். இன்னொன்றில் தாத்தா உயிருடன் இருந்து கல்யாணம் ஆகி , நீங்கள் பிறந்து , கடந்த காலத்தில் பயணிப்பது. சரி. எனவே இது எண்ணிலடங்காத இணை பிரபஞ்ச சாத்தியக்கூறுகளைத் தருகிறது.அதாவது WHENEVER A CHOICE IS MADE , A PARALLEL UNIVERSE SPLITS IN ..உலகப் போரே நடக்காத ஒரு உலகம் இருக்கலாம்.டைட்டானிக் மூழ்காத ஒரு உலகம் இருக்கலாம். இயேசு சிலுவையில் அறையப்படாத ஓர் உலகம் இருக்கலாம்.டைனோசர்கள் அழிந்து போகாத ஓர் உலகம் கூப்பிடு தூரத்தில் இருக்கலாம்.விஷப்பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட பூனையைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பூனை, சிதையும் யுரேனியம் கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்படுகிறது.யுரேனியம் சிதைவது ஒரு QUANTUM PROBABILITY ..ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது சிதையலாம் சிதையாமலும் இருக்கலாம்.சிதைந்தால் அது ஒரு சுத்தியலை நகர்த்தி விஷக்குப்பியை உடைத்து பூனை இறந்து விடும். யுரேனியம் சிதையவில்லை என்றால் பூனை உயிரோடு இருக்கும். சரி. பெட்டியானது வெளி உலகத்தில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யுரேனியம் அணு குவாண்டம் விதிகளுக்கு உட்பட வேண்டும். அணு சிதைந்த மற்றும் சிதையாத நிலைகளின் SUPERPOSITION (மேற்பொருந்துதல்) ஆக இருக்கிறது.எனவே பூனை இறந்து விட்ட மற்றும் உயிரோடு இருக்கிற இருநிலைகளிலும் ஒரே சமயத்தில் இருக்கிறது.அது எப்படி ஒன்று உயிருடன் இருக்க வேண்டும் இல்லை இறந்து போய் இருக்க வேண்டும். எப்படி ஒரே சமயத்தில் இரண்டு நிலைகளிலும் இருக்க முடியும்?இதற்கு விடையாக இரண்டு வாதங்கள் வருகின்றன. ஒன்று : பெட்டியைத் திறப்பதற்கு முன் பூனை உயிருடனும் உயிர் இல்லாமலும் ஒருங்கே (?) இருக்கிறது. பெட்டியைத் திறக்கும் போது கவனிப்பவர் குறுக்கிடுவதால் குவாண்டம் DECOHERENCE நடைபெற்று பூனையின் WAVE FUNCTION COLLAPSE ஆகி விடுகிறது,. எனவே பூனை ஒன்று இறந்தோ இல்லை உயிருடனோ இருக்கிறது. அதாவது கவனிக்கப்படாதவரை அலை(WAVE ). கவனிக்கப்படும் போது துகள்.(PARTICLE )

1963 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் Eugene Wigner என்பவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் ஹிந்து மதத்தில் உள்ள வேந்தாந்த தத்துவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கும் விழிப்புணர்வுத் தன்மை , பிர
க்ஞைத் தன்மை பற்றிப் பேசுகிறது வேதாந்தம்(universal consciousness ) ஒரு பொருளின் STATE அதாவது குறிப்பிட்ட நிலையை விளக்குவதற்கு அது  ஒரு விழிப்புணர்வால் கவனிக்கப்பட வேண்டி உள்ளது.அப்படி கவனிக்கப்படவில்லை என்றால் அதன் ஸ்டேட் அர்த்தம் அற்றது. உதாரணம் அணுவை எலக்ட்ரான் சுற்றுகிறது என்பதை ஒரு பிரக்ஞைத் தன்மை கொண்டுள்ள மனிதன் கவனிக்க வேண்டி உள்ளது. எனவே நம் பிரபஞ்சம் ஒரு DEFINITE state , குறிப்பட்ட நிலையைக் கொண்டு இருப்பதால் அதை கவனிக்கும் ஒரு உயரிய பிரபஞ்ச விழிப்புணர்வு இருக்கவேண்டும் என்பது அவரின் வாதம்.(Using science to prove god ??)

ப்ருகதாரண்யக உபநிஷத் இவ்வாறு சொல்கிறது:

"அதி உன்னதமான சாரம் எதுவோ அதை இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் தன்னுடைய ஆன்மாவாகக் கொண்டுள்ளது.அதுவே மெய்ப்பொருள்;
அது ஜீவாத்மா; நீயும் அதுவே"

சரி. சில பேர் (Hugh Everett ) விழிப்புணர்வாவது மண்ணாவது , கவனிக்கப்படும் போது, பிரபஞ்சம் இரண்டாகப் பிரிந்து ஒரு பாதியில் உயிருள்ள பூனையும் இன்னொரு பாதியில் உயிரற்ற பூனையும் வைத்துக் கொண்டு அது பாட்டுக்கு நகர்கிறது என்கின்றனர்.

குவாண்டம் பிரபஞ்சங்கள்
=================

 
ஒரு குவாண்டம் துகள் பல நிலைகளில் இருக்க முடியும் என்று குவாண்டம் இயற்பியல் சொல்கிறது.நாம் BIG BANG தியரியை நம்பினால் நம் பிரபஞ்சம் ஒரு காலத்தில் பிளான்க் நீளத்துக்கு சுருங்கி மிக மிக சிறியதாக இருந்தது என்றும் நம்ப வேண்டும். பிரபஞ்சத்தில் விதிகள் காலத்துக்கேற்ப மாறாது ;இடத்துக்கேற்ப மாறாது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது கார்பனுக்கு பூமியிலும் ஆறு எலக்ட்ரான் தான். பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள இன்னொரு கிரகத்திலும் ஆறு எலக்ட்ரான் தான்.தண்ணீர் ஆறாம் நூற்றாண்டிலும் நூறு டிகிரியில் தான் கொதித்தது. இப்போது
ம் அதே வெப்பநிலையிலேயே கொதிக்கிறது.
எனவே குவாண்டம் இயற்பியல் விதிகள் நம் குழந்தை பிரபஞ்சத்துக்கும் கண்டிப்பாகப் பொருந்த வேண்டும். எனவே பிரபஞ்சமும் அப்போது ஹைசென்பெர்க் நிச்சயமின்மை விதிகளுக்கு உட்பட்டு (ஒரே சமயத்தில்) பல நிலைகளில் இருந்திருக்கும்.DECOHERENCE WAVE FUNCTION COLLAPSE என்பதெல்லாம் வெளியில் இருந்து ஒரு கவனிப்பவர் துகளை உற்று நோக்கும் போது (ஃபோடான்) நடக்கும் விஷயங்கள். பிரபஞ்சம் உருவான போது அதற்கு வெளியே ஒரு CONSCIOUS OBSERVATION நடந்திருக்க
வாய்ப்பு இல்லை.(கடவுள் இருந்தால் ஒழிய)எனவே பிரபஞ்சத் துகளின் அலைசார்பு (WAVE FUNCTION )ஒரே சமயத்தில் பல்வேறு மதிப்புகளை கொண்டிருந்திருக்கும். எனவே ஒவ்வொரு மதிப்புக்கும் ஒவ்வொரு பிரபஞ்சம் இருக்க வேண்டும். ஆனால் இப்படி தோன்றிய இணை பிரபஞ்சங்களில் பெரும்பாலானவை தோன்றிய மறுகணமே ஏனோ
சுருங்கி (BIG CRUNCH IMMEDIATELY AFTER BIG BANG ) மடிந்து விட்டன என்கிறார்கள்.இன்றுமற்ற வெறுமையில் இப்படி முளைத்த குமிழிகளில் ஒன்று மட்டும் ஏனோ சுருங்காமல் தொடர்ந்து மெல்ல மெல்ல விரிவடைய ஆரம்பித்தது. அது தான் நாம் இன்று காணும் பிரபஞ்சம். OUR UNIVERSE IS A FREE LUNCH என்கிறார் Alan Guth என்பவர்.
ஸ்டீபன் ஹாகிங் ஒன்றும் இல்லாத வெறுமையில் இருந்து பிரபஞ்சம் வந்தது என்ற கருத்தை ஆமோதிக்கிறார்.பிரபஞ்சத்திற்கு தாமரை இலைமேல் அமர்ந்து ஓலைச்சுவடி ஏந்திய  பிரம்மா எல்லாம் வேண்டியதில்லை.பிரபஞ்சத்தில் உள்ள நேர் மற்றும் எதிர் சுமைகளைக் கணக்கிடும் போது (+ve and -ve charges )இரண்டும் சரிசமமாகவே
உள்ளன. மேலும் இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு மிக மிகக் குறைவு.எனவே நாம் ரோட்டில் போகும் போது கிட்ட நடந்து வருபவர் மீது மோதிக் கொள்வதில்லை.பச்சக் என்று ஒட்டிக் கொள்வதில்லை. (புதிதாக கல்யாணம் ஆனவர்களைத் தவிர்த்து) இருவர் உடம்பிலும் உள்ள நேர் மற்றும் எதிர் மின் சுமைகள் கச்சிதமாக BALANCE ஆகி விடுவதால் அப்படி நடப்பதில்லை.அப்படி மட்டும் balance ஆக வில்லை என்றால் மின்காந்த விசை (ஈர்ப்பை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது) ஒரு நொடியில் மில்லியனில் ஒரு பங்கு நேரத்தில் உங்கள் இருவரையும் இழுத்து ஒட்ட வைத்து விடும். உங்கள் மனதுக்குப் பிடித்த பெண்/ஆண் வரும்போது CHARGE IMBALANCE ஆகி விட வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ளலாம்.

அதே போல MATTER x  ANTI MATTER ENERGY x NEGATIVE ENERGY விஷயங்கள் பிரபஞ்சம் ஒன்றுமில்லா வெறுமையில் இருந்து தோன்றி இருக்கலாம் என்ற கருத்தை வலுவாக்குகின்றன.பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்றும் மைனஸ் ஒன்றும் வருவது போல இது.


அடுத்த அத்தியாயத்தில் நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி பார்க்கலாம்.


சமுத்ரா

14 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

சூப்பர் பதிவு சார். எங்கோ ஒரு இயற்பியல் தத்துவ லெக்சருக்குள் போய்விட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங். மிக மிக நன்றி.

Kumaran said...

சார்,, நீங்க பெரிய எழுத்தாளர், சிந்தனையாளர்..உண்மையை சொல்லனுமுனா எனக்கு சரியா நீங்க சொன்னது புரியில..இன்னொரு முறை வாசிக்கனும்.அந்த படத்தையும் பார்க்கனும்..மிக்க நன்றி சார்.

சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

POWER Thaz said...
This comment has been removed by the author.
POWER Thaz said...

ஏழ் கடலை அணுவில் வைத்தார் வள்ளுவர்,
அண்டத்தை சுருக்கி ஒரு பதிவில் வைத்தார்...

சதுரங்கமும் ஜோதிடமும் said...

அறிவியலார் குழம்பியுள்ளனர். ஏதோ ஒருமின்னல் அடித்தார் போல் ஒருவர் புதிய கொள்கையுடன் வருவார் அப்பொழுது சில புதிர்கள் அவிழும். ஆனால் புதிர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே
/-Auinas 's Cosmological Proof/
தாமஸ் அக்கினோவைத்தான்[Thomas Aquino] குறிப்பிட வருகிறீர்கள் என நினைக்கிறேன்.இப்போதைய பல மத பிரச்சாரங்களின் தத்துவார்த்த அடிப்படையே இந்த கத்தோலிக்க துறவிதான்.
http://en.wikipedia.org/wiki/St._Thomas_Aquinas

Thomas believed that the existence of God is neither obvious nor unprovable. In the Summa Theologica, he considered in great detail five reasons for the existence of God. These are widely known as the quinque viae, or the "Five Ways."
The Five Ways Philosophers Have Proven God's Existence
1. Change: Some things are undoubtedly undergoing change, though cannot cause their own change. Since Thomas believed there can be no infinte chain of causes of change, this leads to the conclusion there must be a first cause of changing that is not itself changed by anything else, and this is what everyone understands by God.
2. Causation: Like change, nothing can cause itself, and like change there must be a First Cause, called God
3. Existence of necessary and the unnecessary: Our experience includes things certainly existing but apparently unnecessary. Not everything can be unnecessary, for then once there was nothing and there would still be nothing. Therefore, we are compelled to suppose something that exists necessarily, having this necessity only from itself; in fact itself the cause why other things exist.
4. Gradation: If we can notice a gradation in things in the sense that some things are more hot, good, etc., there must be a superlative which is the truest and noblest thing, and so most fully existing. This then, we call God -->note Thomas does not ascribe actual qualities to God Himself!
5. Ordered tendencies of nature: A direction of actions to an end is noticed in all bodies following natural laws. Anything without awareness tends to a goal under the guidance if one who is aware. This we call God --> Note that even when we guide objects, in Thomas' view the source of all our knowledge comes from God as well.[76]
இதில் என்ன வியப்பு எனில் நீங்கள் சொன்ன வெறுமையில் இருந்து உலகம் என்பதும் இங்கே குறிப்பிடப்படுகிறது.
/ then once there was nothing and there would still be nothing/

நன்றி!!!!!!!!

சுவனப்பிரியன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு நண்பரே! வாழ்த்துக்கள்.

Katz said...

fantastic.

Abarajithan Gnaneswaran said...
This comment has been removed by the author.
Abarajithan Gnaneswaran said...

//-Auinas 's Cosmological Proof//

அப்படிப்பட்ட ஒருவரையும் யாரோ நகர்த்தியோ, நிகழ்த்தியோ, படைத்தோ இருக்கவேண்டும் அல்லவா? அவ்வாறு யார்துணையும்இன்றி கடவுள் தன்னைத்தானே படைக்கலாம் என்றால், இந்தச் சித்தாந்தமே இடறுகின்றதே? அவ்வாறே பிரபஞ்சமும் தன்னைத்தானே உருவாக்கியிருக்கலாம் அல்லவா? அல்லது if god is infinite by time, பிரபஞ்சமும் அவ்வாறே இருக்கலாம் அல்லவா?

# Source Code

நல்ல கற்பனை. ஆனால் ஒரு முரண். அந்த மனிதரின் மூளைக்குள் அவர் ட்ரெயினில் கவனித்த மனிதர்களும், சென்ற இடங்களும் மட்டுமே ஒரு வீடியோ காட்சி போலப் பதிவாகியிருக்கும். அதை சும்மா போட்டுப் பார்க்கலாமே தவிர, கணினி விளையாட்டுப்போல வேறு ஒரு ஆப்ஷனை தேர்வு செய்ய முடியாது. (உ+ம்) : அவரை வேறொரு திசையில் நடக்க வைக்க வேண்டுமானால், அந்தத் திசையின் புலன் தரவுகளை அவரது மூளைக்கு வழங்கவேண்டும், கொலைகாரனின் முகம், நடத்தை, பாம் வைக்கும் காட்சிகள் உட்பட. இதெல்லாம் தெரிந்தால் போலிஸ் ஏன் அவ்வளவு மெனக்கட வேண்டும்?)

//நான் என்பது புலன்களின் பிம்பம் தானா?//

I believe in this. பரிணாமம் மூலமாக மனிதனுக்குக் கிடைத்த புத்தியைப் பெற்றதனாலேயே, தான் ஒரு supernatural being என மனிதன் நம்பிக்கொள்கிறான். சொர்க்கம், நரகம், ஆன்மா...etc எல்லாமே அடிப்படையில் இதன் வெளிப்பாடுதான் என நம்புகிறேன்.

//திரவத்தில் இருந்து கொண்டு கனவு காணும் மூளைகளா?//

The Matrix???

//இயேசு சிலுவையில் அறையப்படாத ஓர் உலகம் இருக்கலாம்.டைனோசர்கள் அழிந்து போகாத ஓர் உலகம் கூப்பிடு தூரத்தில் இருக்கலாம்.//

இப்படியே சின்னச்சின்ன ஆப்ஷன்களுக்கும் தனித்தனி பிரபஞ்சம்கள் இருக்கக்கூடும். There must be infinite number of quantum universes out there..

//பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்றும் மைனஸ் ஒன்றும் வருவது போல இது.//

அந்த ஒன்றும் மைனஸ் ஒன்றும் தம்மைத்தாமே மறுபடியும் பூச்சியமாக்கிக்கொள்ளாமல் தடுப்பது எது?

Dr.Dolittle said...

super post sir

Guna said...

UNGALATHU INTHA IDUGAYAY VALAISARTTHIL INAITHU ULLEN .http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_15.htmlNANDRI,

GUNA

யோவ் said...

நல்ல அறிவியல் பதிவு..

ammuthalib said...

OMG. Im speechless. Hats off.