கலைடாஸ்கோப்-61 உங்களை வரவேற்கிறது.
+
சார் லோன் வேணுமா? சார் கிரெடிட் கார்ட் வேணுமா? இது போன்ற அழைப்புகளால் எரிச்சல் அடையாதவர்கள் யாரேனும் இருந்தால் அது அதிசயம். அதுவும் ஏதாவது முக்கியமான காலை எதிர்பார்த்து செல் மேல் செவி வைத்துக் காத்திருக்கும் போது அடுத்த முனையில் 'We are calling from HDFC bank ' என்றால் எப்படி கடுப்பாக இருக்கும்? நம்மில் பெரும்பாலானோர் NOT INTERESTED என்று கடுப்புடன் சொல்லி போனை வைத்து விடுவோம்.அடுத்தமுறை அப்படி வைக்காமல் இப்படி ஏதாவது CREATIVE பதில்களை சொல்லலாம்.
போன்: சார், எல்,ஐ.சி பாலிசி வேணுமா?
பதில்: ஹலோ, நானே ஒரு எல்,ஐ.சி ஏஜென்ட் தாங்க.. உங்களுக்கு ஒரு பாலிசி வேணுமா? உங்க details சொல்லுங்க
போன்: சார், பெர்சனல் லோன் வேணுமா?
பதில்: நான் RBI ல மேனேஜரா வேலை பண்றேன். கொஞ்ச நாள்ல RBI கவர்னர் ஆயிருவேன். ரூபாய் நோட்டுல நான் தான் கையெழுத்து போடுவேன்,
போன்: சார், HOME LOAN வேணுமா?
பதில்: சுர மந்திர தரு மூல நிவாசக , பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட மதே!
(அந்த ஆள் சத்தியமாக இன்னொரு முறை கால் பண்ண மாட்டார்)
போன்: சார், நாங்க ....இன்வெஸ்ட்மென்ட் கம்பெனில இருந்து கால் பண்றோம். எங்க பிளான்...
பதில்: ஹலோ, எனக்கு சுவிஸ் பேங்க்ல நூறு கோடி அக்கவுன்ட் ஆல்ரெடி இருக்கு.
போன்; சார், நாங்க ....Orphanage ல இருந்து கால் பண்றோம். உங்க டொனேஷன்..
பதில்: மேடம், நான் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கேன். பிச்சை எடுத்து தான் செல்போன் வாங்கியிருக்கேன்.
போன்: சார், EXCELLENT ஹனிமூன் பேக்கேஜ்
பதில்: சாரி , நேத்து தான் மனைவியை டைவர்ஸ் பண்ணேன்.
போன்: சார், உங்க போன்ல எக்ஸ்ட்ரா ஃபெனிபிட்ஸ் பிளான் வேணுமா?
பதில்: ஹலோ. நான் அம்பானியோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட மருமகனோட சகலை.
போன்: சார், ...கம்பெனில உங்களுக்கு matching job இருக்கு.
பதில்: சாரி, எனக்கு நேத்து தான் IBM ல vice president job கெடச்சிருக்கு,.
போன்: சார், எங்க MENTAL ASYLUM டொனேஷன் விஷயமா நேத்து கால் பண்ணி இருந்தனே?
பதில்: ஹி ஹி ஹி, காசு, காசு, டொக் டொக் பிச்சா பிச்சா நான் ஏரோப்ளேன்ல போறனே , டுர்ர் டுர்ர் ஹே பாப்பா எனக்கு பொம்மை வேணும்.
++
+
சார் லோன் வேணுமா? சார் கிரெடிட் கார்ட் வேணுமா? இது போன்ற அழைப்புகளால் எரிச்சல் அடையாதவர்கள் யாரேனும் இருந்தால் அது அதிசயம். அதுவும் ஏதாவது முக்கியமான காலை எதிர்பார்த்து செல் மேல் செவி வைத்துக் காத்திருக்கும் போது அடுத்த முனையில் 'We are calling from HDFC bank ' என்றால் எப்படி கடுப்பாக இருக்கும்? நம்மில் பெரும்பாலானோர் NOT INTERESTED என்று கடுப்புடன் சொல்லி போனை வைத்து விடுவோம்.அடுத்தமுறை அப்படி வைக்காமல் இப்படி ஏதாவது CREATIVE பதில்களை சொல்லலாம்.
போன்: சார், எல்,ஐ.சி பாலிசி வேணுமா?
பதில்: ஹலோ, நானே ஒரு எல்,ஐ.சி ஏஜென்ட் தாங்க.. உங்களுக்கு ஒரு பாலிசி வேணுமா? உங்க details சொல்லுங்க
போன்: சார், பெர்சனல் லோன் வேணுமா?
பதில்: நான் RBI ல மேனேஜரா வேலை பண்றேன். கொஞ்ச நாள்ல RBI கவர்னர் ஆயிருவேன். ரூபாய் நோட்டுல நான் தான் கையெழுத்து போடுவேன்,
போன்: சார், HOME LOAN வேணுமா?
பதில்: சுர மந்திர தரு மூல நிவாசக , பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட மதே!
(அந்த ஆள் சத்தியமாக இன்னொரு முறை கால் பண்ண மாட்டார்)
போன்: சார், நாங்க ....இன்வெஸ்ட்மென்ட் கம்பெனில இருந்து கால் பண்றோம். எங்க பிளான்...
பதில்: ஹலோ, எனக்கு சுவிஸ் பேங்க்ல நூறு கோடி அக்கவுன்ட் ஆல்ரெடி இருக்கு.
போன்; சார், நாங்க ....Orphanage ல இருந்து கால் பண்றோம். உங்க டொனேஷன்..
பதில்: மேடம், நான் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கேன். பிச்சை எடுத்து தான் செல்போன் வாங்கியிருக்கேன்.
போன்: சார், EXCELLENT ஹனிமூன் பேக்கேஜ்
பதில்: சாரி , நேத்து தான் மனைவியை டைவர்ஸ் பண்ணேன்.
போன்: சார், உங்க போன்ல எக்ஸ்ட்ரா ஃபெனிபிட்ஸ் பிளான் வேணுமா?
பதில்: ஹலோ. நான் அம்பானியோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட மருமகனோட சகலை.
போன்: சார், ...கம்பெனில உங்களுக்கு matching job இருக்கு.
பதில்: சாரி, எனக்கு நேத்து தான் IBM ல vice president job கெடச்சிருக்கு,.
போன்: சார், எங்க MENTAL ASYLUM டொனேஷன் விஷயமா நேத்து கால் பண்ணி இருந்தனே?
பதில்: ஹி ஹி ஹி, காசு, காசு, டொக் டொக் பிச்சா பிச்சா நான் ஏரோப்ளேன்ல போறனே , டுர்ர் டுர்ர் ஹே பாப்பா எனக்கு பொம்மை வேணும்.
++
பெங்களூருவின் ஒரு பிஸியான சாலை ஒன்றில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது.
*ஒருநாள் காலை வேளை பஸ்ஸில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு இருந்த போது (IN OTHER WORDS ஃ பிகர் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது) திடீரென 'டொம்' என்று பெருத்த சத்தம் கேட்டது.ஏதோ தவறாக நடந்து விட்டது என்று மனம் உணர்ந்த போது இஷ்ட தெய்வத்தின் பெயர் கூட மறந்து விட்டது.என்ன நடந்தது என்று புலன்களுக்கு எட்டி பின்னர் புத்திக்கு எட்ட சில வினாடிகள் ஆயின.சர்வீஸ் ரோடில் சென்று கொண்டிருந்த பஸ் சாலையின் நடுவில்
இருந்த 'டிவைடர்' இல் முட்டி கண்ணாடி உடைந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட்டிருந்தது.'ஸ்டியரிங்' லாக் ஆகி விட்டது என்று டிரைவர் சொன்னார்.நல்ல வேளை சர்வீஸ் ரோடில் சென்று கொண்டிருந்ததால் பரவாயில்லை. பெரிதாக எதுவும் சேதம் இல்லை. என் கண்ணாடி மட்டும் ஒரு சில அடிகள் சென்று முன்னால் விழுந்து விட்டது.இதே மெயின் ரோடில் இப்படி ஏதாவது நடந்து தொலைத்திருந்தால் samudrasukhi .com இல் கலைடாஸ்கோப்-60 கடைசிப் பதிவாக இருந்திருக்கும்.அது சரி, இந்த ஸ்டியரிங் நடுரோட்டில் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் லாக் ஆகுமா? எனக்கு வாகனங்களைப் பற்றிய அறிவு கிட்டத்தட்ட ஜீரோ. ஸ்டியரிங் லாக் என்றால் என்ன?
** வேன் ஆட்டோ ஒன்றும் ஏதோ ஒரு கருமமும் கொஞ்சம் இடித்துக் கொண்டு ஆட்டோவின் கண்ணாடி கொஞ்சம் விரிசல் அடைந்து விட்டது.ஆட்டோ டிரைவர் அன்று பக்திப் பரவச நிலையில் இருந்திருப்பார் போலும். இடித்தவனைப் பிடித்துக் கொண்டு கன்னட கஸ்தூரியின் மணம் கமழக் கமழ அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.தன் தற்காலிக எதிரியை கைநீட்ட முயன்று கொண்டிருந்தார் (ன்) நம் மக்களுக்குத் தான் வேடிக்கை பார்ப்பது என்றால் ரொம்பப் பிடிக்குமே? டூ-வீலரில் செல்பவர்கள், லாரி ஓட்டுபவர்கள் பாதசாரிகள் எல்லாம் தத்தம் வாகனங்களை சிறிது நேரம் மறந்து விட்டு சண்டையை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த ஜுஜுபி சமாச்சாரத்துக்கு ஒரு கிலோமீட்டர் வரை ரோட் ப்ளாக் ஆகி ட்ராபிக் ஜாம் வேறு ஆகி விட்டது.அய்யா வேடிக்கை பார்ப்பவர்களே? உங்களுக்கு அவசியம் என்றால் வாகனத்தை ஒதுக்குப்புறமாக நிறுத்தி விட்டு யாருடைய வழியையும் அடைக்காமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கண்குளிர வேடிக்கை பாருங்கள்.இன்ஜினை ஆஃப் செய்யாமலேயே வேடிக்கை பார்த்தல் தேவையா?
*** சிவப்பு சிக்னல் இருக்கிறதே என்ற தைரியத்தில் ஒருவர் ரோடை கடந்தார். ஆனால் சிவப்பில் ஐந்து இருக்கும் போதே வாகனங்களை உர் உர் என்று உறுமி கிளப்பி விடவேண்டும் என்ற எழுதப்படாத விதியை நம் வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது அவருக்குப் பாவம் தெரியவில்லை போலும்.அவர் பாதி சாலையைக் கடக்கும் போதே டூ வீலர்கள் சீறிப்பாயும் சிறுத்தை போல சிவப்பில் அடைபட்டிருந்த கடுப்பில் கிளம்பிப் பாய்ந்தன. அவருக்கு எந்தப்பக்கம் போவது என்று தெரியவில்லை.இந்தத் தடையை எதிர்பாராத வாகன ஓட்டிகளுக்கும் எப்படி அதை எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. இந்த மாதிரி சமயங்களில் கல்லூளிமங்கன் போல ஒரே இடத்தில் நின்று விடுவது நல்லது.டூ வீலர்கள் சூரியனின் ஈர்ப்பினால் வளையும் ஒளி போல அவரை சுற்றி வளைந்து கொண்டு சென்றார்கள். சில பேர் சாவு கிராக்கி என்று அர்ச்சனை செய்தார்கள். கடைசியாக அவர் எப்படியோ ரோட்டை கடந்து போனார். பாத சாரிகளுக்கு ஒரு விண்ணப்பம். சிவப்பு கவுன்ட் டவுன் பத்து அல்லது பத்துக்குக் குறைவாக இருந்தால் தயவு செய்து சாலையை கடக்க எத்தனிக்காதீர்கள். நம் கணக்கு வேறு. வாகனங்களின் கணக்கு வேறு.மேலும் நாம் எதற்கு நம் வீட்டு சாப்பாட்டை நம் உழைப்பில் சாப்பிட்டு விட்டு கண்டவன் வாயில் எல்லாம் விழ வேண்டும்?Objects in the mirror are closer than they appear என்பது மட்டும் அல்ல.the seconds are shorter than they are என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
+++
கடவுள்களில் யாருக்கும் இல்லாத பெருமை நம் பிள்ளையாருக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.அது என்ன என்றால் Being in many forms!ஒரு சரஸ்வதியையோ முருகனையோ ராமரையோ ஒரு நாலைந்து வெவ்வேறு டிசைன்களில் வரையலாம் அவ்வளவு தான்.பிள்ளையாருக்கு மட்டும் எத்தனை விதா விசித்திர வடிவங்கள்?
குழல் ஊதும் விநாயகர், வீணை வாசிக்கும் விநாயகர், துப்பாக்கி ஏந்தி போருக்குப் போகும் விநாயகர், ஸ்கூலுக்குப் போகும் விநாயகர், கம்ப்யூட்டர் விநாயகர்,டெண்டுல்கர் விநாயகர், அன்னா ஹசாரே விநாயகர் ,நர்தன விநாயகர், தூங்கும் விநாயகர், குழந்தை விநாயகர், ரொமாண்டிக் விநாயகர் (?),எழுதும் விநாயகர், இப்படி எவ்வளவோ. ஆனால் பிள்ளையாரை எப்படி வடிவமைத்தாலும் அவர் தொந்தி மட்டும் எல்லா உருவங்களிலும் பொதுவாக இருக்கிறது. தொந்தி இல்லாத சிக்ஸ்-பேக் விநாயகரை இதுவரை நான் பார்த்ததே இல்லை.சிவன் மட்டும் நன்றாக அந்தப் பனியிலும் சோம்பல் பாராமல் காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டு 'கைலாசா மாடர்ன் ஜிம்' முக்குப் போய் உடம்பை 'கின்' என்று வைத்திருக்கிறார். ஒரு நாளாவது இந்த பிள்ளையாரை அழைத்துப் போகக் கூடாதோ?இத்தனை பெரிய தொந்தி இருப்பதால் தான் இன்னும் கல்யாணமே ஆகவில்லையோ என்னவோ?
கீழ்க்கண்ட பிள்ளையார் வடிவங்கள் வந்தால் ஆச்சரியம் இல்லை.
* பல் விளக்கும் பிள்ளையார்
* மொபைல் போனில் பேசும் பிள்ளையார்
* காதில் இயர் போன் கையில் ஐ-பாட் பிள்ளையார்
* டூ வீலர் பிள்ளையார்
* கோக-கோலா பிள்ளையார்
* ஜீன்ஸ் பிள்ளையார்
பிள்ளையாரின் சில அபூர்வமான படங்களை இங்கே பார்க்கலாம்.
++++
ஆங்கிலத்தில் Euphemism பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு பச்சையான வார்த்தையை கொஞ்சம் டீசன்டாக சொல்வது. முன்னர் எல்லாம் கக்கூசுக்குப் போகிறேன் என்று கவுண்டமணி மாதிரி பச்சையாக சொல்லாமல் கால்கழுவப் போகிறேன் பொடக்காலிக்குப் போகிறேன் என்றெல்லாம் சொல்வார்களே அது மாதிரி.இப்போது இன்னும்
டீஜன்டாக REST ROOM ...அந்த ஒரு ரூமில் தான் மனிதன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறான் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்கள்.IM GOING TO URINATE என்று சொல்லாமல் I 'M GOING TO PISS என்று சொல்லலாம். I 'M GOING TO PEE என்று கூட சொல்லலாம்.. அனால் தமிழில் கேட்கும் போது ஒரு மாதிரி இருக்கிறது.இப்போது ஒருவரைப் பார்த்து HANDICAP என்றால் அது கிட்டத்தட்ட குற்றம். DISABLED ,PHYSICALLY CHALLENGED (உடல்ரீதியாக சவால் விடப்பட்டவர்??!) அல்லது DIFFERENTLY ABLED மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்க வேண்டும். ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.
லிட்டில் ஜானி யின் வீட்டில் அவனை ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.அதற்கு முன் , "இதப் பார் ஜானி , அந்த வீட்ல ஒரு புதுப் பாப்பா பொறந்துருக்கு, ஆனா அதுக்கு ரெண்டு காதும் இல்ல. நீ அதைப்பத்தி அங்கே எதுவும் பேசக்கூடாது"என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.
அங்கே அந்த குழந்தையைப் பார்த்து விட்டு எல்லாரும் அவன் மூக்கு அழகா இருக்கு, முடி அழகா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
லிட்டில் ஜானி திடீரென்று 'இந்தப் பாப்பாவின் கண்ணு எவ்ளோ அழகா இருக்கு, இவனுக்கு ஆயுசு முழுதும் நல்ல கண் பார்வை இருக்கும்' என்றான்.
இதைக் கேட்டு மகிழ்ந்த அதன் அம்மா 'ஜானி, ரொம்ப நன்றி, குழந்தையைப் பற்றிய உன் பாராட்டுக்கு' என்றாள்
அப்போது லிட்டில் ஜானி ' கண் பார்வை நல்லா இருந்தாதான் நல்லது. இல்லைன்னா மூக்குக் கண்ணாடியை இவன் எதுல மாட்டிப்பான்? என்றான்.
'Differently abled ' பற்றி இன்னொரு ஜோக். இது A ஜோக். புத்தர்கள் காந்திகள் அடுத்த பாராவுக்கு போய் விடவும்.
இளம் விதவை ஒருத்தி மறுமணத்துக்காக விளம்பரம் செய்திருந்தாள்.
மறுநாள் கதவு தட்டப்பட்டது. இரண்டு கைகளும் கால்களும் இல்லாத ஒரு ஆள் நின்றிருந்தான். தான் அவளுக்குக் கணவனாக வரலாமா என்று கேட்டான்.
அவள்,விளம்பரத்தில் நான் 'என் கணவர் என்னை அன்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்லியிருந்தேனே என்றாள்
'OF COURSE , DEAR நான் உன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வேன்" என்றான் அவன்
விளம்பரத்தில் நான் 'என் கணவர் எனக்கு நான் என்ன கேட்கிறேனோ அதை வாங்கித் தரவேண்டும் என்று சொல்லியிருந்தேனே' என்றாள்
''OF COURSE , DEAR , I WILL . என்னிடம் நிறைய பணம் இருக்கிறது' என்றான் அவன்
கடைசியாக அவள் 'விளம்பரத்தில் நான் என் கணவர் என்னை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்ய வேண்டும் என்று போட்டிருந்தேனே. உனக்கு தான் ரெண்டு கையும் காலும் இல்லையே , எப்படி சாத்தியம் ?' என்றாள்.
''OF COURSE , DEAR , I WILL , நான் கதவை எப்படித் தட்டினேன் என்று நினைக்கிறாய்?' என்றான்.
சரி.
தினத்தந்தி பேப்பரைப் பார்த்தால் அதில் 'கார் மோதி வாலிபர் சாவு' ' முதியவர் மரணம்' என்று பச்சையாக இருக்கும். மரணம் என்பது Euphemism -தில் மிக அழகாக சொல்லப்படுகிறது. இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார், டிக்கெட் வாங்கினார், வைகுந்தம் புக்கார்,மீளாத் துயரில் ஆழ்ந்தார் என்று சொல்வது கூட Euphemism தான். அதே போல ஒருவரை ஹோமோ என்று அழைக்காமல் Confirmed Bachelor என்று அழைக்க வேண்டும். பிட்டுப்படம் , போர்ன்,செக்சு வீடியோ ப்ளூ பிலிம் என்றெல்லாம் கிராமத்தான் (?) மாதிரி சொல்லாமல் ADULT MATERIAL என்று சொன்னால் போதும். அவன் ஒரு DRUG ADDICT என்று சொல்லாமல் HE IS CHEMICALLY DEPENDENT என்று சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் CALL GIRL என்ற பதத்தை உபயோகிக்காமல் ESCORT என்று சொல்வது நல்லது. உதாரணம் (ஹஸ்கி வாய்சில்) (ஹோட்டல் அட்டெண்டரிடம்) WHERE CAN I GET AN ESCORT ?
அந்த ஆள் சொட்டை என்று சொல்லாமல் HE IS A LITTLE THIN ON TOP .. என்று சொன்னால் மதி.
Dysphemism என்பது இதற்கு அப்படியே OPPOSITE ..பச்சை பச்சையாக அப்படியே சொல்வது. மலத்தை ஏன் GIFT WRAPPER இல் சுற்றி வைக்க வேண்டும் என்பது இவர்கள் பாலிசி.
உதாரணம் TERRORIST (Dysphemism ) Striker (Euphemism )
Queer (Dysphemism ) Gay (Euphemism )
+++++
ஒரு கவிதை
குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி ஒன்று
நடந்தது.
பாரதி வேடம் போட்ட குழந்தை
'நீ யார்' என்றதற்கு 'பாரதி' என்றது.
காந்தி வேடம் போட்ட குழந்தை
'நீ யார்' என்றதற்கு 'நான் தான் காந்தி' என்றது.
ஆண்டாள் வேஷத்தில் வந்த குழந்தை
'நீ யார்' என்றதும் 'ஆண்டாள்' என்றது.
'அவ்வை' வேஷக் குழந்தை நான் அவ்வை என்றது.
புத்தர் வேடத்தில் வந்த குழந்தையை
'நீ யார்' என்றதும் அது திரு திருவென முழித்து எச்சில் முழுங்கி
'தெரியலை' என்றது.
பார்ப்பதற்கு அன்று
புத்தர் அந்தக் குழந்தை வேஷத்தில் வந்தது போல இருந்தது.
++++++
ஜோக்.
சிரியுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கை சில காலம் தான். ஏன் இறுகிய முகத்துடன் இருக்கிறீர்கள்? -ஓஷோ.
டாக்டர்: என்ன ப்ராப்ளம் சொல்லுங்க?
ஆள்: டாக்டர், காலைல என் பக்கெட் உடைந்து விட்டது..
டாக்டர்: என்ன லூசு மாதிரி உளர்றீங்க? பக்கெட் உடைந்தால் இங்கே ஏன் வந்தீங்க?
ஆள்: நீங்க ஒரு பெரிய 'பிளாஸ்டிக் சர்ஜன்' ன்னு கேள்விப்பட்டேன்.
உங்களுக்காக இன்னொன்று இங்கிலிபீஸில்:
Once Banta Singh attended an Interview.
Interviewer : Give me the opposite words.
Banta Singh : Ok
Interviewer : Made in India
Banta Singh : Destroyed in Pakistan
Interviewer : Good... Keep it Up
Banta Singh : Bad.... Put it Down
Interviewer : Maxi Mum
Banta Singh : Mini Dad
Interviewer : Enough! Take your Seat
Banta Singh : Insufficient! Don’t take my seat
Interviewer : Idiot! Take your seat
Banta Singh : Clever! Don’t take my seat
Interviewer : I say you get out!
Banta Singh : You didn’t say I come in
Interviewer : I reject you!
Banta Singh : You appoint me
Interviewer : ....!!!!!!!
சமுத்ரா
18 comments:
Euphemism is a new thing I've learnt. Keep rocking.
வாழ்த்துக்கள்....இந்த வாரம் என் விகடன் வலையோசையில் இடம்பெற்றமைக்கு....
விகடன் வழியாக உங்கள் அறிமுகம்.. வாழ்த்துக்கள்.... " போன்: சார், HOME LOAN வேணுமா?
பதில்: சுர மந்திர தரு மூல நிவாசக , பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட மதே!
(அந்த ஆள் சத்தியமாக இன்னொரு முறை கால் பண்ண மாட்டார்)" -- வாய்விட்டே சிரித்து விட்டேன்.. அருமை..
//அடுத்தமுறை அப்படி வைக்காமல் இப்படி ஏதாவது CREATIVE பதில்களை சொல்லலாம்.//
நம்ம ஆட்கள் சிலபேர் நீங்கள் சொல்வது போல வித்தியாசமாய் தான் பதில் சொல்கிறார்கள்.
போன்: சார், HOME LOAN வேணுமா?
மேடம், உங்க வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு. உங்க வயசு என்ன? உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
நான் நடந்து போகும் போது, வாகனத்தில் போவோர்களை திட்டுவேன். வாகனத்தில் போகும் போது நடந்து போவோர்களை திட்டுவேன். த்தா!
//இத்தனை பெரிய தொந்தி இருப்பதால் தான் இன்னும் கல்யாணமே ஆகவில்லையோ என்னவோ?//
LOL
எ ஜோக்: இது பள்ளிகூடத்தில் கேட்டது. புது ஜோக்காக சொல்லுங்கப்பா!
கவிதையை ரசித்தேன்.
இந்த வார கலைடாஸ்கோப் அருமை, ஜோக்குகளை தவிர்த்து.
சமுத்திரா,
கலைடாஸ் கொஞ்சம் பழைய சமாச்சாரமா இருக்கு.கஷ்டமர் கேர், டெலி மார்கெட்டிங் கால் களை எல்லாம் இப்போ டைம் பாஸுக்கு ஆ நினைச்சு எஞ்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. சிடு மூஞ்சு ஆசாமிகள் தான் அய்யோனு சலிச்சுக்கிறாங்க.
ஹி..ஹி அவங்களா கால் செய்து ,அதுவும் பொண்ணு பேசினா விடுவாங்களா நானாவது லைட்டா ஓட்டுவேன், நம்ம மக்கள் ,வீக் எண்ட் ஃப்ரியானு கேட்கிற அளவுக்கு போய்டுவாங்க. சிலர் பிக் அப் கூட செய்து இருக்காங்க.
லோன் வேணுமா கேட்ட பொண்ணுக்கிட்டே நான் விட்ட கதைய கேட்டு ச்சோனு ஃபீல் ஆகி எனக்கு மார்கெட்டிங் வேலை வாங்கி தரேன்னு சொல்லிச்சு .
கற்பனை எல்லாம் வற்றிப் போய் விட்டது.
INTERESTING. !
superb
இந்த முறை கலைடாஸ்கோப்பில் சென்ற பதிவு போல நிறைய விடயங்கள் இல்லை.
Dysphemism, Euphemism பற்றிச் சொல்லியிருந்தது புதிது. ஜோக்ஸும் ஏற்கனவே வாசித்தது தான். ஆனால் பதிவு சுவாரஸ்யமாக இருந்தது.
வாழ்த்துகள் சமுத்ரா,வலையோசை(என் விகடன் -கோவை) அறிமுகத்துக்கு.
# Creative replies
கடைசி சூப்பர்...
# Euphemism
சிலர் urination ஐ call of the nature என்றும் சொல்வார்கள்.
//மிக அழகாக சொல்லப்படுகிறது. //
சிவலோக பிராப்தி அடைந்தார் -ஐ விட்டுவிட்டீர்களே?
//மீளாத் துயரில் ஆழ்ந்தார்//
மரணம் துயரமா?
//பார்ப்பதற்கு அன்று
புத்தர் அந்தக் குழந்தை வேஷத்தில் வந்தது போல இருந்தது.//
applause...
# Interview
Super
transmission failureஐ steering lock என்கிறார்களோ? ஒரு தடவை என் காரில் டமால் சப்தத்தோடு அப்படியே transmission failure - chain நடுரோடில் அறுந்து நானும் steering அசைக்க முடியாமல் medianல் மோதி நின்றேன். பிழைத்தது winding median புண்ணியம். transmission மாத்துறதுக்கு வேறே காரே வாங்கலாம் போலிருந்ததால் ஒரு பாகெட் பேரீச்சம்பழத்தோடு திரும்பினேன்.
விகடனில் அறிமுகமானதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். கலைடாஸ்கோப்பில் இந்த முறை குறிப்பிட்டுப் பாராட்ட இயலாதபடி எல்லாப் பகுதிகளுமே மனம் கவர்ந்தன.
விகடன் வாழ்துக்கள்
nice one...
keep continuing !!!
ஆனந்தவிகடனில் சமுத்ரா..மகிழ்ச்சி வாழ்த்துகள்.. கோவைக்காரர் (பல்லடம்) என அறிந்தது கூடுதல் மகிழ்ச்சி....
சமுத்ரா சார்! அணு அண்டம் அறிவியல் எங்கே? ரொம்ப நாளா காத்திருக்கிறோம்!
nice one... keep continuing !!!
Post a Comment