இந்த வலையில் தேடவும்

Thursday, March 22, 2012

கலைடாஸ்கோப்-59

லைடாஸ்கோப்-59 உங்களை வரவேற்கிறது.


~
எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கன்னட, தெலுங்கு, மராட்டி, சிந்தி, கொங்கனி, மணிபுரி, பஞ்சாபி மக்களுக்கு நாளை
புத்தாண்டு பிறக்கிறது. [தமிழர்களுக்கு மட்டும் ஏனோ மற்ற எல்லாவற்றையும் போல NEW YEAR -உம் different ]அதுவும் தை முதல் நாளா சித்திரை முதல்நாளா என்று குழம்பிக் கொண்டு இருக்கிறோம்.பொதுவாக சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்களில் நாளை புத்தாண்டு பிறக்கிறது.(சைத்ர சுத்த பாட்யமி).தமிழர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரை FOLLOW செய்வதால் அவர்களுக்கு வேறொரு நாளில் புத்தாண்டு.தமிழனை தனித்து விடாமல் கேரளா அந்த நாளில் தானும் புத்தாண்டு கொண்டாடி (விஷு) அவர்களுக்குக் கைகொடுக்கிறது.என்னைப் பொறுத்த அளவில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலண்டர் better என்று தோன்றுகிறது. சந்திரன் நமக்கு அருகில் இருப்பதால் அது சூரியனை விட பூமியை அதிகம் பாதிக்கும் என்று தோன்றுகிறது.

மார்ச் 20 ஆம் தேதி Equinox என்ற சம இரவு நாள் நிகழ்வு நடக்கிறது.
சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். பூமியின் சாய்வு அச்சு சூரியனை பொறுத்து விலகியும் இல்லாமல் நெருங்கியும் இல்லாமல் சூரியனின் மையம் நிலநடுக்கோட்டோடு ஒன்றி வருவது. இந்த சம இரவு நாள் (இதற்கப்புறம் ஆறுமாதங்கள் பகல்பொழுது அதிகமாக இருக்கும்) நிகழ்வு நடந்த பின் அடுத்த புது நிலவு உதிக்கும் ஒரு நன்னாளில் யுகாதி
கொண்டாடப்படுகிறது.

நாம் தான் அவசரப்பட்டு குளிர் சரியாக விலகாத ஜனவரி -ஒன்று அன்றே முட்டாள்தனமாக இந்தியத் திருநாட்டில் புதுவருடம் கொண்டாடி விடுகிறோம்.சரி.நம்மில் எத்தனை பேருக்கு இன்றைய தேதியின் (மார்ச் 22 ) தமிழ் மாதம் , தேதி தெரியும் என்று தெரியவில்லை. well , எனக்கும் தெரியாது.!

யுகாதியின் போது கன்னட மக்கள் கடைபிடிக்கும் ஒரு பழக்கம் அர்த்தம் நிறைந்தது. வசந்த காலம் என்பதால் வேப்ப மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து புதிய இளம் தளிர்களை விட்டிருக்கும். (வேப்பம் பிஞ்சு) அந்த கசப்பான தளிர்களையும் வெல்லத்தையும் சேர்த்து சட்னி போல செய்து 'பேவு சிஹி, பெல்ல கஹி'
.(வேம்பு இனிப்பு வெல்லம் கசப்பு)என்று சொல்லி விட்டு சாப்பிடுகிறார்கள். யுகாதி மெனுவில் இந்த சட்னி கண்டிப்பாக இருக்கும். நம் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாகவே பாவிப்போம் என்று இந்த புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்கிறார்கள்.இது தான் எதார்த்தம். இனி உன் வாழ்வில் வசந்தங்கள் மட்டுமே இருக்கட்டும். May your way be filled with only success என்றெல்லாம் புத்தாண்டு வாழ்த்து சொல்வது சுத்த அபத்தம்.NOT PRACTICAL ..

எனவே நாம் தமிழ் வருடப்பிறப்புக்கு காத்திருக்காமல் நாளை யுகாதியையும் கொண்டாடுவோம்.[அதை ஏதோ அன்னியப் பண்டிகை போலப் பார்க்காமல்]சந்தோஷமாக இருப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் ஏன் விடவேண்டும்? சொல்லப்போனால் வருடத்தின் ஒவ்வொரு நாளும் புத்தாண்டுதான்.

~~


* நேற்று வந்திருந்த ஒரு இ-மெயிலின் தமிழாக்கம்:

ஒருநாள் ஒரு ஆளை மரணம் நெருங்கி 'இன்று உன் நாள்' என்றது.

அவன் மிகவும் பயந்து போய் 'நான் இன்னும் இளைன் தானே, எனக்கு வயதே ஆகவில்லையே' என்றான்.

மரணம் 'அதெல்லாம் எனக்குத் தெரியாது; இன்று உன் நாள். என் பட்டியலில் உன் பெயர் தான் next ' என்றது.

அவன் மரணத்திடம் 'சரி. நான் உன்னுடன் வருகிறேன். நீ கடமை செய்து செய்து மிகவும் களைத்திருக்கிறாய்.கொஞ்சம் ஏதாவது குடித்து விட்டு ஓய்வெடு ' என்றான். மரணம் ஒப்புக் கொண்டது.

அவன் மரணத்திற்கு பழரசம் வாங்கி வந்தான். ஆனால் அதற்குத் தெரியாமல் அதில் தூக்க மாத்திரை கலந்து விட்டான். மரணம் சில மணி நேரம் தூங்கி விட்டது. அதற்குள் அந்த ஆள் அதன் பட்டியலை எடுத்து அதில் இருந்த தன் பெயரை அழித்து விட்டு அதை லிஸ்டின் கடைசியில் எழுதி விட்டான். கடைசி பெயர் வர ரொம்ப வருடம் ஆகும் என்று நினைத்துக் கொண்டு.

மரணம் விழித்துக் கொண்டு 'ரொம்ப நன்றி. புத்துணர்வாக உணர்கிறேன். என்னை யாருமே இப்படி உபசரித்ததில்லை. எல்லாரும் திட்டவே செய்தார்கள். எனவே உனக்கு ஒரு உதவி செய்ய நினைக்கிறேன்' என்று சொல்லி விட்டு 'என் வேட்டையை பட்டியலின் கடைசி பெயருடன் ஆரம்பிக்கிறேன்' என்றது.


~~~


உங்கள் உயரம் என்ன? எல்லாம் நார்மல் ஹைட் தான் என்கிறீர்களா? சரி.'நார்மல்' ஹைட் என்றால் என்ன? மற்றவருடன் பேசும் போது இயல்பாக கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் உயரம். திரிவிக்ரமப் பெருமாளை பார்ப்பது போல தலையை உயர்த்தியோ வாமனரைப் பார்ப்பது போல தலையை தாழ்த்தியோ பேசினால் இருவரில் யாரோ ஒருவருக்கு உயரம் நார்மல் இல்லை என்று சொல்லலாம். 'உயரம்' என்பது ஒரு பெரிய மேட்டர் இல்லை தான். ஆனால் இது நிறைய பேரை
மனதளவில் பாதித்து அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விடுகிறது. குறைந்த உயரமும் பிரச்சனை தான். அதிக உயரமும் பிரச்சனை தான்.அபூர்வ சகோதரர்கள் கமல் போல ஒருவருக்கு எல்லாரும் தனக்கு ஒருவிதத்தில் மேலே இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னொருவருக்கு தசாவதாரம் கமல் போல எல்லாரும் தனக்குக் கீழே இருப்பது போலத் தோன்றி தர்மசங்கடம் அளிக்கிறது.குள்ளமான ஹீரோக்கள் ஹீரோயினுடன் டான்ஸ் ஆடும் போது ஹை ஹீல்ஸ் போட வேண்டி வருகிறது.அதுவும் பெண்கள் இயல்புக்கு மீறிய உயரத்தில் இருந்து விட்டால் பெரிய பிரச்சனை தான்.அவளை ஒரு ஆண் மாதிரி தான் இந்த சமூகம் treat செய்கிறது.அவளுக்கு கல்யாணம் ஆவதிலும் சிக்கல் இருக்கிறது.

ஓஷோ ஒரு கேள்வி கேட்கிறார்; ஒரே ராத்திரியில் நம்மை சுற்றியுள்ள எல்லாம்(நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரியதாகி விட்டால் அது நமக்குத் தெரியுமா?உதாரணமாக உங்கள் வீடு, வீட்டு நாய்க்குட்டி, மேஜை, சேர், செல்போன் டவர்,கோபுரம், சூரியன் எல்லாமே இரண்டு மடங்கு பெரியதாகி விட வேண்டும்.அப்போது அது நமக்குத் தெரியாது.எல்லாம் பெரிதாகி நாம் மட்டும் அப்படியே நின்று விட்டால் தான் ஏதோ நடந்திருக்கிறது என்று நமக்குத் தெரிய வரும்.எனவே உயரம் என்பது ஒரு RELATIVE term .உலகில் எல்லாருமே அழிந்து போய் நாம் மட்டும் தனித்து நின்று விட்டால் நம் உயரம் என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

ஒருவருக்கு VIRTUAL HEIGHT என்று ஒன்று உள்ளது என்று தோன்றுகிறது.யானை அதன் மீது பாகன் ஒருவன் உட்கார்ந்து விட்டால் அவனுடைய உயரத்தையும் சேர்த்தே தன் உயரத்தைக் கணக்கிடும் என்று கேட்டிருக்கிறேன். அது போல நமக்கு virtual உயரம் ஒன்று இருக்கிறது.ஒருவரைப் பற்றி நாம் நிறைய கற்பனை செய்து வைத்திருப்போம். அவரின் பேச்சை எழுத்தை எல்லாம் பார்த்து விட்டு. ஆனால் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தால் ஆள் சராசரி உயரத்துக்கும் குறைவாக இருந்தால் அவரைப் பற்றிய நம் கற்பனைகள் மறைந்து 'இவரா' என்று DISILLUSION ஆகி விடுவோம்.ஆனால் அவருடைய VIRTUAL உயரத்தை நாம் அளக்க மறந்து விடுகிறோம். உருவத்தில் சிறுத்தாலும் அவரது கண்ணுக்குத் தெரியாத உயரம் அபாரமானது. அதைப் பார்க்க நமக்கு ஒருவித ஆழமான கண்கள் வேண்டும்.அதே போல உயரமான ஒரு பெண் தன் Virtual height ஐ குறைத்தே வைத்திருக்கிறாள்.உயரமான பெண் நடந்து வரும் போது கவனித்தால் நமக்குத் தெரியும்.

உயரமாக இருப்பது ஒரு Added advantage அவ்வளவு தான். உயரமாக இருந்தால் ராணுவத்தில் சுலபமாக சேரலாம்; மாடலிங் செய்யலாம். சினிமாவில் சிக்ஸ் பேக் + சிக்ஸ் ஃபீட் காட்டலாம். ஸ்டூல் போடாமல் அம்மாவுக்கு அரிசிமாவு டப்பா எடுத்துத் தரலாம் . அவ்வளவு தான். ஆனால் அகத்தியரால் மலையை உருக்க முடியும்.நெப்போலியனால் தேசங்களை வெல்ல முடியும். வாஷிங்டன்-ஆல் நாட்டை ஆள முடியும்.இந்த வெப்சைட்டில் பாருங்கள்.இங்கே உள்ள சாதனையாளர்கள் அனைவரின் உயரமும் 5 .7 அடிக்குக் குறைவு தான்.

~~~~
* என்ன செய்வது? சில சமயம் கற்பனை வறண்டு விட்டால் எழுதிய கவிதையையே மீண்டும் போட வேண்டி உள்ளது.

கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...
அலுவலகங்களில்,
கல்லூரிகளில்,
மார்கெட்டுகளில்,
கோவில்களில்,
எல்லா இடங்களிலும்...
வயிற்றை விடவும்
நாக்கை விடவும்
நுரையீரலை விடவும்
அதிகமான பேராசையுடன்
அகோரப்பசியுடன்..
கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...


** கற்றுக் கொள்ளும் போது எனக்கு எதுவுமே தெரியாது என்று கற்றுக் கொள்.
மேடையில் perform செய்யும் போது எனக்கு தான் எல்லாமே தெரியும் என்று perform செய்.

-Carnatic music Idol நிகழ்ச்சியில் அருணா சாய்ராம்.

~~~~~
ஒரு ஜென் கதை. அர்த்தம் தேவையில்லை.

ஹக்குயின் ஜென் மாஸ்டரிடம் ஒரு ராணுவ வீரன் வருகிறான்.
'எனக்கு சொர்க்கம் என்றால் என்ன நரகம் என்றால் என்ன?' என்று சொல்லும்படி கேட்கிறான்.
'நீ யார்' என்று கேட்கிறார் ஹக்குயின்.
'நான் ஒரு பெரிய ராணுவ வீரன்' என்கிறான் அவன்.
'அப்படியா ,ஆனால் பார்
ப்பதற்கு பிச்சைக் காரன் போல இருக்கிறாய்' என்கிறார் மாஸ்டர்.
வீரன் கோபத்துடன் 'யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிறீர்கள்' என்று தன் வாளை உருவுகிறான்.
'ஓ உன்னிடம் வாள் வேறு இருகிறதா, மொன்னையான இந்த வாளை வைத்துக் கொண்டு என்னை வெட்டி விட முடியுமா' என்கிறார்
இப்போது வீரன் தன் நிலை இழந்து வாளை அவர் மீது வீசுகிறான்.
'இங்கே நரகத்தின் கதவுகள் திறக்கின்றன' என்கிறார் ஹக்குயின்.
எதையோ உணர்ந்தவனாக வீரன் வாளை உறையில் போட்டு விட்டு குருவின் காலில் விழுந்து வணங்கி 'என்னை மன்னியுங்கள்' என்கிறான்.
'இங்கே சொர்கத்தின் கதவுகள் திறக்கின்றன' என்கிறார் ஹக்குயின்.

~~~~~~~

ஓஷோ ஜோக்.

ஒரு பெண் தன் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள்.

அதைப் பார்த்த பஸ் டிரைவர் யாரிடமோ 'இதுவரை நான் பார்த்ததிலேயே அசிங்கமான குழந்தை இதுதான்' என்றான்.

இதை அந்தப்பெண் கேட்டு விட்டாள்.

தன் சீட்டில் போய் உட்கார்ந்ததும் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் 'அந்த டிரைவர் என்னை ரொம்பவும் இன்சல்ட் செய்து விட்டான்.என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்று பொரிந்தாள்.

இன்னொரு பெண் 'அப்படியா, இதை அப்படியே விடாதீங்க..போய் நியாயம் கேளுங்க..நீங்க வர்ற வரைக்கும்
நான் வேணா உங்க குரங்கை வைத்துக் கொள்கிறேன்' என்றாள்.

முத்ரா

18 comments:

Jayadev Das said...

\\ஓஷோ ஒரு கேள்வி கேட்கிறார்; ஒரே ராத்திரியில் நம்மை சுற்றியுள்ள எல்லாம்(நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரியதாகி விட்டால் அது நமக்குத் தெரியுமா?\\

http://www.worsleyschool.net/science/files/scalefactor/factors2.html

Jayadev Das said...

http://www.worsleyschool.net/science/files/scalefactor/factors.html

ஹாலிவுட்ரசிகன் said...

//ஸ்டூல் போடாமல் அம்மாவுக்கு அரிசிமாவு டப்பா எடுத்துத் தரலாம் .//

என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க? மனசுக்கு கஷ்டமாயிருக்கு. ஹி ஹி.

ஹாலிவுட்ரசிகன் said...

ஜென் கதையும் ஓஷோவின் ஜோக்கும் சூப்பர்.

ammuthalib said...

குள்ளமா இருப்பவர்கள் எவ்ளோ சாதனையாளர் பார்னு சொல்றது கூட ஒரு வகைல நாம குள்ளமா இருக்கோமேன்னு வர்ற inferior feeling தானோ ?

Anonymous said...

கவிதை பழசென்றாலும்
ரசித்தேன்..

ஹேமா said...

நட்சத்திர வாழ்த்து இன்னும் தொடர்கிறது சமுத்ரா !

bandhu said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. கொஞ்சம் அதிகமாத்தான் எழுதுங்களேன்!

ப.கந்தசாமி said...

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை யுகாதிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். வேப்பம்பூ, வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை கலந்ததை கடவுளுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அதை விழுங்குவதுதான் முதல் ஆகாரம்.

நாங்கள் சுத்தமான தமிழர்கள்தான்.

அப்பாதுரை said...

முழுக்க renderஆக மாட்டேங்குதே? 'transferring data from tamil10.com' என்று சுற்றுகிறது..

kaialavuman said...

சமுத்ரா, கன்னட தெலுங்கு மராட்டியர்கள் பயன்படுத்துவது வெறும் சந்திர நாட்காட்டி அல்ல. அது சந்திர-சௌர நாட்காட்டி; அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சூரிய நாட்காட்டி. அதனால் தான் அந்த மீதமுள்ள நாட்களை equinox-உடன் சரிகட்ட (reconcile) "அதிக” மாதம் என்ற ஒன்றை 4-5 வருடங்களுக்கு ஒரு முறைக் கூட்டுகிறார்கள். முழு சந்திர நாட்காட்டி என்பது இஸ்லாமியர்கள் கடைபிடிப்பதே.

சமுத்ரா said...

//குள்ளமா இருப்பவர்கள் எவ்ளோ சாதனையாளர் பார்னு சொல்றது கூட ஒரு வகைல நாம குள்ளமா இருக்கோமேன்னு வர்ற inferior feeling தானோ ?//
May be...

ஆர்வா said...

ஆயிரம் அர்த்தம் சுமந்துட்டு இருக்கிற அந்த ஜென் கதைக்கு இன்னொரு அர்த்தம் தனியாக வேண்டுமா என்ன?
மரணம் குறித்த கதையும் செம....

நட்புடன்
கவிதை காதலன்

G.M Balasubramaniam said...

சாதனை புரிந்தவர்கள் உயரம் என்னவென்று சொன்னீர்கள்.அட நம்ம உயரம்தானா.? ரசித்தேன்.

பால கணேஷ் said...

‌ஓஷோ ஜோக்கும், மரணம் பற்றிய அந்த எஸ்.எம்.எஸ்.ஸையும் மிக ரசித்தேன். நன்று!

Anonymous said...

nice one.

முனைவர் இரா.குணசீலன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சமுத்ரா

சமுத்ரா said...

//சமுத்ரா, கன்னட தெலுங்கு மராட்டியர்கள் பயன்படுத்துவது வெறும் சந்திர நாட்காட்டி அல்ல. அது சந்திர-சௌர நாட்காட்டி; அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சூரிய நாட்காட்டி. அதனால் தான் அந்த மீதமுள்ள நாட்களை equinox-உடன் சரிகட்ட (reconcile) "அதிக” மாதம் என்ற ஒன்றை 4-5 வருடங்களுக்கு ஒரு முறைக் கூட்டுகிறார்கள். முழு சந்திர நாட்காட்டி என்பது இஸ்லாமியர்கள் கடைபிடிப்பதே.//

OK thank you for the info