அணு அண்டம் அறிவியல் -62 உங்களை வரவேற்கிறது.
கவுண்டமணி : டேய், நான் உன்னை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?
செந்தில்: ரெண்டு வாழப்பழம் அண்ணே
க: கடைக்கு போனியா?
செ: போனேன்
க: கடைக்காரன் எத்தனை பழம் கொடுத்தான்?
செ:ரெண்டு கொடுத்தான்
க: ரெண்டு கொடுத்தானா?
செ: கொடுத்தான்
க: சரி..அந்த ரெண்டுல ஒண்ணு இங்கே இருக்கு..இன்னொரு பழம் எங்கே?
செ: அதுதாண்ணே இது.
மேட்டர் என்றால் என்ன? (இன்றைய இளைஞர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டாம்) மேட்டர் என்பதை இயற்பியல்
* நிறை உள்ள ஒன்று
* வெளியை அடைத்துக் கொள்ளும் ஒன்று
* ஈர்ப்பால் இழுக்கப்படும் ஒன்று என்கிறது.
இந்த வரையறைகள் பொதுவாக ஆற்றலுக்கும் பொருந்தும். ஆற்றலுக்கும் (சிறிதே) நிறை உண்டு.சூடான காபி ஆறிய காபியை விட கொஞ்சம் அதிக நிறை இருக்கும்.ஆற்றல் ஈர்ப்பை உருவாக்கும். ஆற்றல் ஈர்ப்பால் பாதிக்கப்படும். பொதுவாக இயற்பியலில் ஆற்றல் நிறை இதற்கான DEMARCATION LINE மெலிந்து கொண்டே வருகிறது எனலாம்.சில சமயம் தூக்கம் வராவிட்டால் இந்த நிறை ஆற்றல் குழப்பம் என்னை மிகவும் பாதிக்கும். ஆற்றல் என்றால் என்ன?நகருவது தான் ஆற்றலா? சரி. ஓஷோவின் ஒரு மேற்கோள் :
"பிரபஞ்சம் ஆற்றல் மற்றும் நிறை என்ற இரண்டு தூண்களால் ஆக்கப்பட்டிருப்பதாக அறிவியல் சொல்கிறது; ஆனால் மூன்றாவதாக இருக்கும் ஒன்றை அது முற்றிலும் புறக்கணித்து விட்டது; அதுதான் பிரக்ஞைத்தன்மை (Consciousness ) .ஆற்றல் நிறையாகவும் நிறை ஆற்றலாகவும் தோன்றக் கூடும் என்று அறிவியல் சொல்கிறது.ஆனால் பிரக்ஞைத்தன்மை இந்த இரண்டாகவும் தோன்றக்கூடும் என்ற சாத்தியத்தை அது மறந்து விட்டது.பிரபஞ்ச விழிப்புணர்வு தன்னை ஆற்றல் அல்லது பொருளாக வெளிப்படுத்த முடியும்; ஆற்றலும் பொருளும் மறைந்தாலும் அது நிலைத்திருக்கும்"
கடவுள் மற்றும் அவர் படைத்த பிரபஞ்சம் என்று தனித்தனியாக DUALITY உடன் பார்ப்பதை ஓஷோ விரும்புவதில்லை. கடவுளே பிரபஞ்சம் என்கிறார். சரி.இன்னொரு முறை ஓஷோ என்று சொன்னால் என்னை அடிக்க வந்து விடுவீர்கள்.
மேட்டர் என்றால் என்ன என்று உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும்.ஆன்டி-மேட்டர் (எதிர்ப்பொருள்)பற்றியும் சொல்லி இருக்கிறோம்.இயற்கை இவை இரண்டையும் ஜோடிகளாகவே படைக்கிறது என்றும் , போதுமான ஆற்றல் இருந்தால் அதில் இருந்து பொருளும் எதிர்ப்பொருளும் மாயாபஜார் லெவலுக்கு தாமாகவே தோன்ற முடியும் என்றும் பார்த்தோம்.மேலும் பொருளும் எதிர்ப்பொருளும் சந்தித்தால் ஒன்றை ஒன்று முற்றிலும் அழித்துக் கொண்டு ஆற்றலாக வெளிப்படும் என்றும் பார்த்தோம். சரி.
இயற்கை ஆண் பெண் இருவரையும் பெரும்பாலும் சம எண்ணிக்கையிலேயே படைப்பது போல பொருளையும் எதிர்ப்பொருளையும் சம எண்ணிக்கையிலேயே படைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.ஆனால் பிரபஞ்சத்தில் இந்த எதிர் பொருளைத் தேடுவது இப்போது தமிழ் சினிமாவில் கதையைத் தேடுவது போல. மிக மிக சொற்ப அளவே கிடைக்கிறது. ஒரு மில்லியன் ஆண்களுக்கு ஒரே ஒரு பெண் இருந்தால் எப்படியோ அப்படி இது.(ஆமாம்.. அப்படி இருந்தால் எப்படி இருக்கும்?! யாரது ?அந்தப் பெண் ரெண்டே நாளில் செத்துப் போய் விடுவாள் என்று சொல்வது?) துகள் முடுக்கிகளில் by -product ஆக எலக்ட்ரானின் எதிர் துகள் பாசிட்ரான் கிடைக்கிறது. இதை எப்படி சொல்கிறார்கள் என்றால் எலக்ட்ரான் ஒரு காந்தப் புலத்தின் ஆதிக்கத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில் திரும்பும். ஆனால் இந்த வினோதத் துகள் அதற்கு எதிர்திசையில் திரும்பியது! (அதாவது இவைகள் ட்வின்ஸ்..ஆனால் இரட்டையர்கள் உருவத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் குணத்தில் ஒருவர் மூடி டைப்பாக இன்னொருவர் வாயாடியாக ஒருவர் வள்ளலாக இன்னொருவர் கஞ்சனாக ஒருவர் புத்திசாலியாக மற்றவர் முட்டாளாக இருக்கலாம் அல்லவா? அதே போல இவை இரண்டுக்கும் மின்சுமை (சார்ஜ்) தான் வேறுபாடு. மற்றபடி ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ).மேலும் கனமான தனிமங்கள் சுமை தாங்காமல் எளிய தனிமங்களாக சிதையும் போது(RADIOACTIVITY*) இயற்கையாகவே இந்த எதிர்பொருள் சிறிதளவு வெளிப்படுகிறது.
ஒண்ணு இங்கே இருக்கு; இன்னொண்ணு எங்கே என்பது போல பொருள் இங்கே இருக்கிறது. எதிர்ப்பொருள் எங்கே?இதற்கு இரண்டு சாத்தியங்கள் சொல்கிறார்கள்:
1 . கவனக் குறைவாக இருந்தோம்; பேபி FORM ஆயிடுச்சு என்று சிலர் சொல்கிறார்கள் இல்லையா? அது மாதிரி நாமெல்லாம் தப்பிப் பிறந்த பேபிகள்.பரிணாமம் என்பது கூட செல்கள் படியெடுப்பதில் வந்த தவறு என்று சொல்கிறார்கள். எனவே அடுத்த முறை கணக்கு தப்பாக போட்டு விட்டான் என்று பிள்ளைகளை அடிக்காதீர்கள். இப்போதெல்லாம் பிள்ளைகளை யாருமே அடிப்பதில்லை என்பது வேறு விஷயம்.ஒரு சின்ன ஜோக்:
பையன் 1 : எதுக்குடா எல்லார் பேக்கையும் டீச்சர் செக் பண்றாங்க?
பையன் 2 : யார் பேக்கிலாவது கத்தி துப்பாக்கி இதெல்லாம் இருக்கான்னு செக் பண்றாங்களாம்.
பிரபஞ்சம் தோன்றிய கணத்தில் பொ. வும் எதிர் பொ.வும் சமமாகவே தோன்றின என்கிறார்கள். பிறகு இரண்டும் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு ஆற்றலாக மாறின.பின்னர் இந்த ஆற்றல் துகள்கள் (?) ஒன்றுடன் ஒன்று மோதி மீண்டும் பொ. எதிர் பொ. தோன்றின.புனரபி ஜனனம் புனரபி மரணம்! இந்த களேபரத்தில் அழிந்து போகாமல் தப்பித்த சில பொருட்களால் தான் நம் பிரபஞ்சம் உருவானது என்கிறார்கள்.சில சமயம் என்ன தான் PERFECT ஆக டேலி செய்தாலும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மிஞ்சுமே(சில அரசியல்வாதிகளுக்கு ரெண்டு லட்சம்கோடி கூட மிஞ்சும்) அது மாதிரி நம் பிரபஞ்சம் என்பது கழுவிய மீனில் நழுவிய மீன்! UNIVERSE IS CREATED BY CHANCE. கடவுள் திட்டமிட்டுப் படைத்தார் ; டைம்டேபிள் போட்டுப் படைத்தார். ஜூஸ் குடித்துக் கொண்டே படைத்தார் என்பதெல்லாம் பொய் என்று தோன்றுகிறது.

2 . பிரபஞ்சம் தோன்றிய கணத்தில் பொ. வும் எதிர் பொ.வும் சமமாகவே தோன்றின.சில ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு ஆற்றலாகின.(அதுதான் இன்றைய CMBR ) மிஞ்சிய பொருட்கள் நம் பிரபஞ்சத்தைப் படைத்தன. மிஞ்சிய எதிர்ப்பொருட்கள் வேறொரு இணை எதிர் பொருள் பிரபஞ்சம் (ANTI MATTER UNIVERSE ) படைத்தன (படைத்திருக்கலாம்) என்கிறார்கள்.இந்த எ.பொ. பிரபஞ்சம் இங்கே தான் கூப்பிடு தூரத்தில் எங்கோ இருக்கிறதாம். மாய உலகம்! அங்கே எல்லாம் எதிர்ப் பொருட்களால் செய்யப்பட்டிருக்கும். பாசிட்ரான்கள் எதிர் ப்ரோடான்களை (ANTI QUARKS )சுற்றி வரும்.அங்கேயும் போட்டான்கள் இருக்கும். போட்டான்கள் தங்களுக்குத் தாமே எதிர்த் துகள்கள் என்பதால் போட்டான்கள் (அல்லது ஒளி) இந்த இரண்டு பிரபஞ்சங்களுக்கிடையே எந்த சிரமமும் இன்றி JUST LIKE THAT பயணிக்க முடியும்.இந்த பிரபஞ்சமும் எதிர் பிரபஞ்சமும் ஒன்றை ஒன்று சந்தித்து அழியாமல் ஒரு மாயவலை (?) இரண்டுக்கும் இடையே இருக்கலாம் என்று கூட ஊகிக்கப் படுகிறது. இந்த வலையை போட்டான்கள் ஊடுருவ முடியும்(INTER UNIVERSAL PERMIT ) .ஆனால் எலக்ட்ரான்களால் முடியாது. எனவே நாம் ஆகாயத்தில் காணும் ஒளி நம் சகோதரப் பிரபஞ்சத்தில் இருந்து கூட வந்திருக்கலாம்.மேலும் எதிர்பொருள் ஈர்ப்பினால் மேலே போகாது. கீழே தான் வரும்.இது ஏன் என்றால் நியூட்டன் விதிப்படி இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு அவற்றின் நிறைகளின் பெருக்கல் பலனோடு தொடர்பு உடையது. M1 * M2 = (-M1 ) * (-M2 ) என்பதால் இரண்டு பிரபஞ்சத்திலும் ஈர்ப்பு (+) ஆகவே இருக்கும்.
நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோமா அல்லது எதிர் பிரபஞ்சத்தில் இருக்கிறோமா என்று அதன் வாசிகள் அறிந்து கொள்ள இயலாதபடி CTP SYMMETRY தடை செய்கிறது.இது என்ன என்றால் பிரபஞ்சத்திலும் எதிர் பிரபஞ்சத்திலும் இயற்பியல் விதிகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்னும் விதி.கணித பாஷையில் சொல்வதென்றால்
2 * 2 = (-2) * (-2)
2 / 2 = (-2) / (-2)
இப்போது பார்த்தது C-reversed universe (CHARGE ) இன்னொரு சாத்தியக்கூறு P -Reversed universe (Parity ) இடவல மாற்றம். அந்தப் பிரபஞ்சம் நம் பிரபஞ்சத்தின் ஒரு MIRROR IMAGE ஆக இருக்கும்.அங்கே இருக்கும் மக்களுக்கு இதயம் வலப்பக்கம் இருக்கலாம். பெரும்பாலான மனிதர்கள் இடதுகை காரர்களாக இருக்கலாம்.ஆனால் நாம் ஒரு P -Reversed universe இல் வாழ்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது.[தூரம் என்பது ஒரு SCALAR . A யில் இருந்து B அல்லது B யில் இருந்து A .நியூட்டன் விதிகள் மாறாது. பெங்களூரில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து பெங்களூருக்கும் ஒரே தூரம் தானே (ஒரே ரூட்டில்).எனவே MIRROR இமேஜில் விதிகள் மாறாது.
ரிசார்ட் பெயின்மான் ஒரு கேள்வி கேட்கிறார். ஒருநாள் நாம் பகுத்தறிவு கொண்ட வேற்றுக்ரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.அவர்களுக்கு ரேடியோ சிக்னல்கள் மூலம் நம் பூமியைப் பற்றி விளக்குவதாகக் கொள்வோம்.அவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்ல முடியும். (நம் கணிதம், இயற்பியல், வேதியியல் எல்லாம்)ஆனால் எது இடது எது வலது என்று எப்படி சொல்ல முடியும்?எது CLOCKWISE எது ANTI -CLOCKWISE என்று எப்படி விளக்க முடியும்? ஒரு இயந்திரம் CLOCKWISE இல் சுற்றுகிறதா ANTI CLOCK WISE இல் சுற்றுகிறதா என்று இயற்பியல் விதிகளை வைத்துக் கொண்டு நம்மால் கண்டுபிடிக்க இயலாது.
ஆனாலும் 1957 ஆம் ஆண்டின் நோபல் பரிசு C .N YANG மற்றும் T .D LEE என்ற இவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அணுக்கரு மெலிய வினைகளில் PARITY break ஆகிறது என்பது அவர்கள் கண்டுபிடிப்பு. எனவே P -Reversed பிரபஞ்சம் சாத்தியம் இல்லை என அவர்கள் முன் வைத்தனர். எலக்ட்ரான்கள் SPIN என்று அழைக்கப்படும் ஒரு பண்பைக் கொண்டுள்ளன.தங்கள் அச்சைப் பற்றி இடப்பக்கம் சுழல்கிறதா வலப்பக்கமா என்று சொல்வது.சரி. எலக்ட்ரான் இந்தப்பக்கம் சுற்றினால் எதிர் பிரபஞ்சத்தில் பாசிட்ரான் அதற்கு எதிர் திசையில் சுழலலாம். இது PARITY BREAK ஆகாது. ஆனால் கோபால்ட்-60 என்ற கதிரியக்கத் தனிமம் சிதைந்து வெளிவரும் எலக்ட்ரான்கள் தங்கள் இஷ்டப்படி SPIN ஆவதை யாங் மற்றும் லீ கவனித்தார்கள். கண்ணாடிக்கு முன் இருவர் நிற்கும் போது கண்ணாடி பிம்பத்தில் மூன்று பேரைக் காட்டுவது போல இது.இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு OVERTHROW OF PARITY என்று அழைக்கப்படுகிறது.
யாங் மற்றும் லீயின் ரஃப் பேப்பர். தலை சுற்றினால் நான் பொறுப்பல்ல. |
1980 ஆம் ஆண்டு CP -symmetry கூட சாத்தியம் இல்லை (CP -Reversed பிரபஞ்சம் இருக்க முடியாது)என்பது James Cronin மற்றும் Val Fitch (நோபல் பரிசு) என்பவர்களால் நிரூபிக்கப்பட்டது.
CP symmetry என்றால் ஒரு துகளின் மின்சுமையையும் (charge ) இடவலத்தையும் (PARITY ) மாற்றி அமைத்தால் இயற்பியல் விதிகள் மாறாது என்பது. ஆனால் மாறும் என்று CP violation சொல்கிறது.CP symmetry உண்மை என்றால் பிக் பேங்கில் உருவான துகள்களும் எதிர்துகள்களும் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு பிரபஞ்சமே உருவாகி இருக்காது. எனவே நம் பிரபஞ்சம் தோன்றியதே ஒரு வித SYMMETRY VIOLATION தான்.சமச் சீர்மையின் சிதைவு நம் பிரபஞ்சம் !
இன்னொன்று இருக்கிறது. அதுதான் CPT symmetry . இதன் violation இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நீங்கள் நிரூபித்தால் நோபல் பரிசு நிச்சயம். அதாவது charge PARITY மற்றும் TIME மூன்றும் REVERSE செய்யப்பட ஒரு பிரபஞ்சம்.நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் முன்னோக்கிப் பாயும் காலத்துக்கும் பின்னோக்கிப் பாயும் காலத்துக்கும் மாறா என்பதால் CPT Reversed பிரபஞ்சத்தில் வாழ்க்கை சாத்தியம். ஆனால் CPT REVERSED பிரபஞ்சம் அபத்தமாக இருக்கும். அங்கே தாத்தாக்கள் பிறந்து குழந்தையாக மாறி செத்துப் போவார்கள். உடைந்த கண்ணாடித் துண்டுகள் மேஜை மீது ஏறி அழகிய கண்ணாடி ஜாராக மாறும். மக்கள் இறந்த காலத்தைப் பற்றித் தெரியாமல் எதிர்காலத்தை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்! முடி கருப்பாகிறதே,முகத்தில் சுருக்கம் மறைகிறதே என்று கவலைப்படுவார்கள்!
ஆனால் CPT REVERSED universe உடன் நாம் தொடர்பு கொள்ள முடியாது. [அவர்களுக்கு காலம் பின்னோக்கி நகர்வதால் நாம் சொன்ன எல்லாவற்றையும் உடனே மறந்து விடுவார்கள்]
*வரும் மார்ச் -8 பெண்கள் தினம். கதிரியக்கத்தைப் பற்றி ஆராய்ந்து நோபல் பரிசு வென்ற மேரி கியூரிக்கு ௮-௮-௮ சல்யூட் செய்கிறது. இரண்டு நோபல் பரிசு பெற்ற ஒரே ஆள் இவர்தான்.
சமுத்ரா
22 comments:
//அங்கே தாத்தாக்கள் பிறந்து குழந்தையாக மாறி செத்துப் போவார்கள்//
brad pitt -க்கு "curious case of benjamin button" படத்தில் அப்படிதான் ஆகிறது.
உங்களை மாதிரி இப்படி அழகாக காமெடி, சப்ஜெக்ட் இரண்டும் தூவிப் படிப்பிக்க, ஒரு டீச்சர் எனக்கு கிடைத்திருந்தால் எங்கேயோ போயிருப்பேனே?
பிரபஞ்ச விழிப்புணர்வு தன்னை ஆற்றல் அல்லது பொருளாக வெளிப்படுத்த முடியும்; ஆற்றலும் பொருளும் மறைந்தாலும் அது நிலைத்திருக்கும்"
அருமையான விளக்கம் ,,,
அருமையான விளக்கம்
//உடைந்த கண்ணாடித் துண்டுகள் மேஜை மீது ஏறி அழகிய கண்ணாடி ஜாராக மாறும். மக்கள் இறந்த காலத்தைப் பற்றித் தெரியாமல் எதிர்காலத்தை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்! முடி கருப்பாகிறதே,முகத்தில் சுருக்கம் மறைகிறதே என்று கவலைப்படுவார்கள்!// பிரபஞ்சத்தின் அபத்தம் எல்லோருக்கும் விருப்பமான கவலைகளாகிவிடும்... பொருள் (எ)அபொருள்...எங்கியோ கூட்டிட்டு போறிங்க
எளிமையான விளக்கமான பதிவு ..!
வழக்கம் போல் அருமை!
தொடர்கிறோம்!
நன்றி
அரிவியல் செய்திகளைத் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் பாங்கு, தத்துவத்தில் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது.
செய்திகளை முழுமையாகப் புரிந்து கொள்ள மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியிருக்கிறது.
நன்றி.....நன்றி.
\\மேலும் எதிர்பொருள் ஈர்ப்பினால் மேலே போகாது. கீழே தான் வரும்.இது ஏன் என்றால் நியூட்டன் விதிப்படி இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு அவற்றின் நிறைகளின் பெருக்கல் பலனோடு தொடர்பு உடையது. M1 * M2 = (-M1 ) * (-M2 ) என்பதால் இரண்டு பிரபஞ்சத்திலும் ஈர்ப்பு (+) ஆகவே இருக்கும்.\\ நிறையீர்ப்பு விசையைப் [Gravitational Force] பொறுத்தவரை ஈர்ப்பு விசை மட்டும்தான் உள்ளது. மின்னூட்டம்[+ve & -ve: like charges repel, unlike charges attract], காந்தபுலம் [north & south poles: same poles repel, opposite poles attract], போல நிறையீர்ப்பு விசையில் இரண்டு விதம் இல்லவே இல்லை. இங்கே ஆய்வுக் கூடத்தில் ஒரு ஆன்டி-புரோட்டானை உருவாக்கினாலும் நிறையீர்ப்பு விசையைப் பொறுத்த மட்டில் புரோட்டானைப் போலவே அதை மற்ற எல்லா பொருட்களும் ஈர்க்கும்.
தற்போதைக்கு Universe made up of anti-matter is just another science fiction-அவ்வளவே.
string theory இல், 11 dimensions வருகிறதே... அதாவது multiverses.. infinite universes... எது better உண்மை??
-parthi2929
interesting post bro,
waiting for the next one
string theory இல், 11 dimensions வருகிறதே... அதாவது multiverses.. infinite universes... எது better உண்மை??
that's called Parallel universe.
இணை பிரபஞ்சங்கள். குவாண்டம் கொள்கைப்படி ஒரு குவாண்டம்
துகள் பல நிலைகளில் இருக்கலாம். பிரபஞ்சம் பிளான்க் நீளத்திற்கு
குறுகி இருந்த போது அதுவும் குவாண்டம் விதிகளுக்கு
உட்பட்டிருந்தால் இணை பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று
கருதப்படுகிறது. இணை பிரபஞ்சம் வேறு. அது நம்முடையது
போலவே இருக்கலாம். Anti-universe என்பது வேறு.
முற்றிலும் எதிர் பொருட்களால் செய்யப்பட்டது.
பிரபஞ்சத்தில் எல்லாமே.. ஆக்கம், உயிர்.. etc எல்லாமே விபத்துக்கள் தான் என்பது என்னுடைய நம்பிக்கை. இணை பிரபஞ்சங்களும் இருக்கலாம்...
பதிவு வழக்கம்போலவே...
//ஆகாயத்தில் காணும் ஒளி நம் சகோதரப் பிரபஞ்சத்தில் இருந்து கூட வந்திருக்கலாம்.//
சமுத்திர சார் , நாம் வானில் இப்போது பார்க்கும் நட்சத்திரங்கள் அழிந்து போயிருக்கலாம் , அல்லது குறைந்த பட்சம் வேறிடங்களுக்கு நகர்ந்து போயிருக்கலாம் அல்லவா?
நமது முன்னோர்கள் காலத்தில் தோன்றிய அந்த ஒளி இப்போது தான் நம்மை வந்து அடைவது போல , நமது ஒளி பல ஆண்டுகள் கழித்து தானே அங்கே சென்று அடையும் .
வரும்காலத்தில் அந்த இடங்களுக்கு சென்று அங்கிருந்து ஒரு advanced தொலைநோக்கியின் துணை கொண்டு நமது பூமியை ஜூம் செய்து பாரத்தால் , அப்போது நமது முன்னோர்களை காணலாமா ?
தவறு என நமது நண்பர்கள் கருதும் சில வரலாற்றை ( பரிணாமத் தயே எடுதுக்கொள்வோமே ) அங்கிருந்து பார்க்க முடியுமா ?
இது சாத்தியமா ?
காலம் பின்னோக்கி நகர்கிறது.//
இதையா கமலஹாசன் தனது "மன்மதன் அம்பு" படத்தில் பாடல் காட்சி ஒன்றாக வைத்து இருக்கிறார்?
Neela Vaanam:
http://www.youtube.com/watch?v=qfTB6KhPzHU
Dr.Do Little,பூமியின் ஆதி காலங்களில் வாழ்ந்த யாராவது அப்போதைய நிகழ்வுகளை கேமெராவில் (?) படம் எடுத்து அதை ஒளித்துடிப்புகளாக மாற்றி அந்த சிக்னல்களை வெளியில் அனுப்பி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். WE NEED SOME RECORDING .
அப்படியே ஒருவேளை அனுப்பினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அது
வெளியில் மிக நீண்ட தூரம் பயணித்திருக்கும். நம்மால் அதை துரத்த முடியாது.
are you from wipro bangalore?
வழக்கம் போல சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்...
எளிமையான விளக்கமான பதிவு ..!
Dr.Dolittle கேட்டவை என்புரிதலின் படி இப்போது நாம் காணும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முந்தைய காட்சிதானே
அது போல சூரியனின் காட்சிகள் ஒளியின் வேகத்தில் பயணித்து கொண்டே இருக்கும் அல்லவா?
அதே போல்நமது பரிணாம வளர்ச்சியின் போது பூமியில் நடைபெற்ற காட்சிகளும் நூறு கோடி ஒளியாண்டுகள் உள்ள ஒரு இடத்திற்கு இன்னும் போய் சேர்ந்திருக்காது தானே!
(நமது பரிணாம வளர்ச்சி ஒரு நூறு கோடியாண்டுகளை கூட தொட வில்லை)
அவ்வளவு தூரத்தில் இருந்து திறன்மிக்க லென்சுகளை வைத்து பார்த்தால் இங்க புறப்பபட்ட காட்சிகளை பார்க்க முடியாதா என கேட்கிறார் எனது சந்தேகமும் அதுதான் சகோ!
Post a Comment