இந்த வலையில் தேடவும்

Monday, March 12, 2012

அணு அண்டம் அறிவியல் -63

அணு அண்டம் அறிவியல் -63 உங்களை வரவேற்கிறது.

God used beautiful mathematics in creating the world.

Pick a flower on Earth and you move the farthest star.

-
Paul Dirac

Everything we call real is made of things that cannot be regarded as real.

If quantum mechanics hasn't profoundly shocked you, you haven't understood it yet.

-Niels Bohr

- எதிர் பிரபஞ்சம் (ANTI universe ) என்பது வேறு. இணை பிரபஞ்சம் (PARALLEL universe ) என்பது வேறு. இரண்டும் ஒன்றாகவே இருந்தாலும் எங்களுக்கு என்ன என்கிறீர்களா? வாஸ்தவம் தான். GIRL FRIEND -க்கு மெசேஜ் அனுப்பி அரை மணி நேரம் ஆகிறதே, இன்னும் பதில் வரவில்லையே ; ATM இல் பணமே வரவில்லை, ஆனாலும் அக்கவுன்ட்-இல் இருந்து பணம் போய் விட்டதே, டெலிபோன் பில் கட்டவேண்டுமே, நாளைக்கு ஆடிட் இருக்கிறதே, இன்றைக்கு ராத்திரி தக்காளி ரசமே வைத்து விடலாமா என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் பிரபஞ்சத்தைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பது அனாவசியம் தான்.IT 'S NOT NEEDED ..சூரியன் ஒரு நட்சத்திரம் என்று கூட உங்களுக்குத்தெரியாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒரு பெரிய கம்பெனியின் எம்.டி யாக இருக்க முடியும்.பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு கட்டுக்குள் தங்கள் அறிவை அடக்க விரும்பாமல் பிரபஞ்சத்தை (யே) விலைபேசும் சுதந்திர எண்ணம் உள்ளவர்கள் அவர்கள்.(சைக்கிள் கேப்பில் என்னையே புகழ்ந்து கொள்வது போல இருக்கிறதா? PLS ADJUST !)

ஆபீசில் ஒருவரிடம் பூமி பெரியதா சூரியன் பெரியதா என்று கேட்டேன்.

'ரெண்டும் ஒரே சைஸு தான்னு நினைக்கிறேன்' என்றார்.CAN 'T HELP .. பூமியின் சைசுக்கு ஒரு நட்சத்திரம் சுருங்க முடியும் என்று நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். NEUTRON STAR ..விண்மீன் தன் நிறையால் தானே சுருங்கும் போது எலக்ட்ரான்கள் அமுக்கத்தை எதிர்த்து ஓடிவிட விண்மீன் முழுவதும் நியூட்ரான்களை மட்டுமே கொண்ட ஒரு பந்துபோல மாறும்.இதை மனதில் வைத்துக் கொண்டு தான் நண்பர் அப்படி சொல்லியிருப்பார் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

Listen: There's a hell of good universes next door; let's go - E.E.CUMMINGS

இந்த இணை பிரபஞ்சங்கள் கான்செப்ட் பாகவத புராணத்தில் வருவதாக சொல்கிறார்கள்:-

"எண்ணிறைந்த பிரபஞ்சங்கள் அவற்றின் அடுக்குகளில் உலவுகின்றன.காலம் என்ற சக்கரம் அவைகளை இயக்குகிறது. அவை உங்களுக்குள்ளும் நகர்கின்றன."-Bhagavata Purana 10.87.41

மேலும்,


[Quran 20.6] To Him belongs what is in the Heavens and what is on Earth and what is between them and what is under the soil.

சுவனத்தில் இருப்பதும் பூமியில் இருப்பதும் இடையே இருப்பதும் கீழே இருப்பதும் அவனுடையதே! -குர் ஆன்

மூன்று விதமான இணை பிரபஞ்சங்கள் சாத்தியம் என்கிறது இயற்பியல்

* HYPER SPACE - உயர் பரிமாண வெளி
* MULTIVERSE - பல பிரபஞ்சங்கள்
* QUANTUM PARALLEL universe - குவாண்டம் இணை பிரபஞ்சங்கள்


ஒவ்வொன்றாக சுருக்கமாகப் பார்ப்போம்.

ஹைப்பர் ஸ்பேஸ் என்பது நம் மூன்று பரிமாணங்களுக்கும் மேல் நான்காவது ஐந்தாவது பரிமாணங்களில் வெவ்வேறு வெளிகள், வெவ்வேறு உலகங்கள் இருக்கலாம் என்பது.

இதை முதன்முதலில் சொன்னவர் பெயரை ஏற்கனவே ௮-௮-௮ வில் சொல்லி இருக்கிறோம். ஞாபகப்படுத்த முயற்சி செய்யுங்கள்.என்னது ஞாபகம் வரவில்லையா? பரவாயில்லை.விக்ரம் நடித்த கடைசி படம் என்ன? வாழ்த்துக்கள். உடனே சொல்லி விட்டேர்களே? இப்படி தான் இருக்கணும்.

சாதாரணமாக நம்மால் மூன்று பரிமாணங்களை மட்டுமே கற்பனை செய்ய முடிகிறது. மேற்பட்ட பரிமா
ங்களுக்கான தேடல்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஈர்ப்பு விசை இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள தூரத்தின் இருமடிக்கு தகுந்தவாறு மாறும் என்று நமக்குத் தெரியும். இது வெளி முப்பரிமாணமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். இருபரிமாணத் தளத்தில் வரையப்பட்ட வட்டம் ஒன்றைக் கருதுவோம்.அதன் மையத்தில் தோன்றும் ஈர்ப்பு விசை அதன் சுற்றளவை ஆதிக்கம் செய்வதாகக் கொண்டால் ஈர்ப்பு விசை ~2 *pi * R ஆக இருக்கும். அதே வட்டத்தை முப்பரிமாண வெளியில் வரைந்தால் நமக்கு ஒரு கோளம்(SPHERE ) கிடைக்கும் . அதன் மையத்தில் பிறக்கும் ஈர்ப்பு விசை அதன் சுற்றளவு விரிய விரிய குறையும். எந்த அளவு குறையும் என்றால் கோளத்தின் சுற்றளவு 4 *pi *R *R . \!A = 4\pi r^2.எனவே ஈர்ப்பு விசை தூரத்தின் இருமடிக்கேற்ப குறைகிறது. எனவே 2 +1 =3 பரிமாணங்கள் மட்டுமே இருக்கின்றன என்று நம்பலாம்.நான்கு (வெளி) பரிமாணங்கள் இருக்குமானால் ஈர்ப்பு விசை தூரத்தின் மும்மடிக்கு (R ^ 3 )ஏற்ப குறையும். அப்படி அபாரமான வேகத்தில் ஈர்ப்பு குறைந்தால் நிலவு பூமியிடம் நிற்காது. பூமி சூரியனிடம் பந்தப்பட்டிருக்காது. வாழ்க மூன்று!

ஆனால் மற்ற பரிமாணங்கள் மிக மிகச் சிறிய முடிச்சுகளாக சுருட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 'ஸ்ட்ரா' ஒன்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு கோடு போல மட்டுமே தெரிகிறது.(ONE DIMENSIONAL ).ஆனால் பக்கத்தில் பார்த்தால் அதன் இரண்டாம் பரிமாணம் (சிறிய வளைவு) தெரிகிறது அல்லவா? அது மாதிரி.

4D இயேசு
நான்காம் வெளி அல்லது HYPER space என்பது கலை ஆர்வலர்களை மிகவும் கவர்ந்த ஒரு விஷயமாக இருந்து வந்துள்ளது. உதாரணமாக Salvador Dali என்பவரின் Christus Hypercubus என்ற ஓவியம்.இந்த ஓவியத்தில் அதை வரைந்தவர் நான்காம் பரிமாணத்தை கொண்டு வர முயன்றுள்ளார். இயேசு இதில் நான்கு பரிமாண சிலுவையில் அறையப்பட்டுள்ளார். இவரின் இன்னொரு பிரசித்தமான ஓவியம் Persistence of Memory கீழே உள்ளது.

La persistencia de la memoria


சார், இந்த ஓவியத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்கிறீர்களா? ஓகே.சொல்கிறேன்.ஒரு கடிகாரத்தை ஓவியமாக வரையும் போது அது ஓடுவது போல வரைய முடியாது (கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்வது வேறு விஷயம்) எனவே வரையப்படும் எல்லா கடிகாரங்களும் காலம் உறைந்து விட்ட நிலையைக் குறிக்கும். புகைப்படங்களில் உள்ள கடிகாரங்கள் கூட. ஒரு போட்டோவில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்து அது ஓடிக் கொண்டிருந்ததா அல்லது நின்று விட்ட கடிகாரமா என்று சொல்வது அசாத்தியம். அது போல இந்த ஓவியத்தில் வரும் உருகும் கைக்கடிகாரங்கள் ஒருவித காலமற்ற கனவு நிலையைக் குறிக்கின்றன. (சில பேர் இது ஐன்ஸ்டீனின் சார்பியலைக் குறிக்கலாம் என்கிறார்கள்) INCEPTION திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கனவு நிலை ஒன்றில் காலம் என்பது இயல்பை விட்டு விலகி கண்டபடி நகர்கிறது அல்லது உறைந்து விடுகிறது. ஒரு நிமிடமே நீடிக்கும் கனவு மனோ நிலையில் ஒரு வருடமாகத் தோன்றலாம். அந்தக் கனவில் இன்னொரு கனவு வருவதாக வைத்துக் கொள்வோம்.அப்போது அதன் கால அளவு இன்னும் நீட்டிக்கப்படும். எனவே நாம் ஒரு நொடி என்று நினைக்கும் ஒன்று (பிற கீழ்ப்பரிமாணங்களில்) தனக்குள் ஒரு யுகத்தையே அடக்கிக் கொண்டிருக்கலாம். நமக்கு ஒரு யுகமாகத் தோன்றும் கால அளவு சில உயர் பரிமாண ஜீவிகளுக்கு ஒரு நொடியாக இருக்கலாம்.HOW LONG IS A SECOND , ACTUALLY?


கிருஷ்ண பரமாத்மாவும் நாரதரும் ஒரு நீண்ட பாலைவனம் வழியாகப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.. அப்போது கிருஷ்ணர் களைத்துப் போய் அப்படியே உட்கார்ந்து விடுகிறார்... 'நாரதா நாரதா, ரொம்ப தாகமாக உள்ளது.. நீ போய் பெப்சியோ, கோக்கோ கிடைக்கிறதா என்று பார்த்து வா' என்று நாரதரை அனுப்புகிறார்... நாரதரும் தண்ணீர் தேடி அலைகிறார்... அப்படியே பாலைவனம் தாண்டி ஊருக்குள் வந்து விடுகிறார்...அங்குள்ள கிணறு ஒன்றில் அழகான பெண் ஒருத்தி நீர் எடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.. "முதன் முதலில் பார்த்தேன் , காதல் வந்தது" கேஸ் ஆகி இருவரும் காதலில் விழுகிறார்கள். (கிருஷ்ணர் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும் , தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் அறவே மறந்து விடுகிறார் நாரதர்.. ) இருவரும் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை குட்டிகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்....ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்த ஊருக்குள் வெள்ளம் வந்து விடுகிறது... எல்லாரும் அடித்துச் செல்லப் படுகிறார்கள்..நாரதர் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களும் வெள்ளத்தில் சென்று விடுகிறார்கள்..நாரதர் அந்த அதிர்ச்சியில் மயங்கி விடுகிறார்... கண் விழித்துப் பார்
க்கையில் தான் அவருக்குத் தான் கிருஷ்ணருக்காகத் தண்ணீர் தேடி வந்தது நினைவில் வருகிறது...உடனே நீர் எடுத்துக் கொண்டு அந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்கிறார்... கிருஷ்ணர் இன்னமும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்..."நாரதா ஏன் இவ்வளவு நேரம்? அரை மணி நேரமாகக் காத்திருக்கிறேன், என்கிறார் கிருஷ்ணர்..நாரதரின் குழப்பத்தை உணர்ந்த அவர், மகனே,உன் காலமும் என் காலமும் வேறு...உன்னுடையது மாயை என்னுடையது உண்மை என்கிறார்

Marcel Duchamp என்பவரின் NUDE DESCENDING A STAIRCASE என்ற ஓவியத்தையும் பாருங்கள். இது ஓவியம் தானா என்று நீங்கள் அப்பாவியாகக் கேட்டால் உங்களுக்கு CUBISM என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

Nude என்றதும் குஜாலான ஓவியத்தை எதிர்பார்த்தீர்களாக்கும்!


தமிழ் விக்கிபீடியாவில் இருந்து கியூபிசத்தின் விளக்கம்:

இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான கலை இயக்கம் கியூபிசம் (Cubism) என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில், ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமேயாகும்.
கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.

மூஞ்சூறு மேல் பிள்ளையார் அபய ஹஸ்தத்துடன் உட்கார்ந்திருப்பது, தமயந்தி அன்னத்தைத் தடவிக் கொடுப்பது,தாமரையில் உட்கார்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது, மோனாலிசா சிரிப்பது இந்த மாதிரி CONVENTIONAL TWO DIMENSIONAL ஓவியங்கள் கியூபிஸ்டுகளுக்கு அறவே பிடிப்பதில்லை .

கீழே இருப்பது கிட்டார் வாசிக்கும் ஒரு பெண்ணாம் (நம்பிட்டோம்)



The invisible என்ற திரைப்படத்தில் ஹீரோ யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்.அவரால் எல்லாரையும் பார்க்க முடியும். ஆனால் அவரை யாரும் பார்க்கவோ அவர் பேசுவதைக் கேட்கவோ முடியாது.[அதாவது பணக்கார உறவினர்கள் வீட்டு விஷேசத்துக்கு வாலண்டியராகப் போகும் ஏழை தூரத்து உறவினன் நிலை]


நியூட்டனின் INVERSE SQUARE LAW மிகச் சிறிய தூரங்களில் தோல்வியடைகிறதா என்ற சோதனை சமீபத்தில் (2003 ) செய்யப்பட்டது.அதாவது பிற பரிமாணங்கள் மிகச் சிறிய தூரங்களில் சுருங்கி இருந்தால் அங்கே ஈர்ப்பு தூரத்தின் N -1 (N -No .of dimensions )மடிக்கேற்ப மாறுபடும்.ஆனால் அப்படி மாறுவதாக சோதனையில் தெரியவரவில்லை. உயரிய பரிமாணங்கள் மிக மிகச் சிறிய தூரங்களில்(கிட்டத்தட்ட பிளான்க் நீளம்) சுருங்கி இருந்தால் இப்போது நம்மிடையே உள்ள கருவிகள் அவற்றை உணர இயலாது என்பதால் இந்த சோதனையை மீண்டும் அதிக துல்லியத்துடன் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.


படங்களில் EXTRA DIMENSION காட்டப்பட்டுள்ளது. விரிந்த இரண்டு பரிமாணங்களுக்கு மத்தியில்
மிகச் சிறிய சுருங்கிய , வளைந்த 3D காட்டப்பட்டுள்ளது.இரண்டாவது படத்தில் இரண்டு
பரிமாணங்கள் ஒருங்கே சுருங்கி உள்ளன.


நான்காம் பரிமாணம் சுருங்கி இருக்காமல் விரிவடைந்து இருந்தால் இன்று நாம் 'கிராபிக்ஸ்' என்று நினைக்கும் எல்லாமும் நடைமுறையில் சாத்தியமாகும்.


படத்தில் இருபரிமாண வெளியில் இரண்டு வண்டிகள் ஒன்றை நோக்கி ஒன்று வருகின்றன. அவை கண்டிப்பாக P என்ற புள்ளியில் மோதிக்கொள்ளும்.(இரண்டு வண்டிகளுக்கும் X மற்றும் Y அச்சுகள் சமமாக இருப்பதால்) ஆனால் இதே நிகழ்ச்சி முப்பரிமாண வெளியில் நிகழ்ந்தால் இரண்டு வண்டிகளும் மோதிக்கொள்ளாமல் தன் வழியில் செல்ல முடியும். X Y சமமாக இருந்தாலும் Z அச்சு வேறுபடுவதால். ஹாரி பாட்டர் படத்தில் இரண்டு வண்டிகள் ஒன்றை நோக்கி ஒன்று வந்தாலும் அவை மோதிக்கொள்ளாமல் ஒன்றை ஒன்று கடந்து செல்லும். நான்காம் பரிமாணம் ஒன்று இருந்தால் இது சாதாரணம். [IOW, நமக்கு சாதாரணம் என்று தோன்றும் விஷயங்கள் இருபரிமாண ஜீவிகளுக்கு பயங்கர அதிசயமாகத் தோன்றலாம்] இரண்டு பொருள்களுக்கு X Y மற்றும் Z அச்சுகள் சமமாக இருந்தாலும் அவை நான்காம் பரிமாணத்தில் ஒன்றை ஒன்று மோதாமல் கடந்து போக முடியும்.

அதே போல படத்தில் வண்டி A என்ற புள்ளியில் இருபரிமாணத்தை நீங்கி 3D யில் நுழைந்து கம்ப்யூட்டர் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து முப்பரிமாணத்தில் பயணித்து B என்ற புள்ளியில் மீண்டும் இருபரிமாண உலகில் நுழைகிறது.இது இருபரிமாண உலகில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு வண்டி A யில் இருந்து மாயமாக மறைந்து B யில் மகாவிஷ்ணு போல தோன்றுவது போலத் தெரியும்.(TELEPORTATION ) .ஒளி இப்படிதான் ஐந்தாம் பரிமாணத்தில் பயணிக்கிறது உண்மையில் நகர்வதில்லை என்று கூட சொல்கிறார்கள்.

மேலும் படத்தில் இருக்கும் மனிதர் வண்டியைப் பார்க்கும் போது அவருக்கு அது ஒரு கோடுபோல மட்டுமே தெரியும். வண்டியின் முழு உருவத்தை அவரால் பார்க்க இயலாது. அதே போல 3D யில் நாம் ஒரு பொருளை பார்க்கும் விதம் எல்லைகளுக்கு உட்பட்டுள்ளது,நான்காம் பரிமாணத்தில் இருந்து நம்மை (3D )ஒருவர் பார்த்தால் அவரால் நம் தலை முதுகு முகம் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.அப்படிப் பார்த்தால் நாம் அழகாகத் தெரியமாட்டோம்.(இப்ப மட்டும் அழகா தெரியற மாதிரி!) ஒரு மாடர்ன் கியூபிச பெயிண்டிங் போல அசிங்கமாக சொத சொத என்று இருப்போம்.

எனவே அடுத்த முறை ஒரு மாடர்ன் painting -ஐப் பார்த்தால் சே தூ இதெல்லாம் ஓவியமா என்று ஃபிலிம் கட்டாமல் அதற்குள்ளே பொதிந்திருக்கும் உண்மையை அறிந்து வியக்கவும்.


இப்போது பைபிளில் இருந்து:-


டேனியல் 2 :22

அவன் (நமக்கு) இருட்டான மறைக்கப்பட்ட இடங்களை அறிவான். அவனுக்குள் ஒளி உண்டு. அவன் பார்வையில் இருந்து மறைந்தது எதுவும் கிடையாது.

Hebrews 4:13 Nothing in all creation is hidden from God's sight. Everything is uncovered and laid bare before the eyes of him to whom we must give account.

முத்ரா

16 comments:

Marc said...

மிக மிக அருமைப்பதிவு.கற்பனைக்கெட்டாத விசயங்களின் ஆழம் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

நான்காம் பரிமாணம் சுருங்கி இருக்காமல் விரிவடைந்து இருந்தால் இன்று நாம் 'கிராபிக்ஸ்' என்று நினைக்கும் எல்லாமும் நடைமுறையில் சாத்தியமாகும்.


ஆழமான விளக்கங்களும், அற்புதமான படங்களும் .. பாராட்டுக்கள்..

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே
அருமை
//கோளத்தின் சுற்றளவு4 *pi *R *R . எனவே ஈர்ப்பு விசை தூரத்தின் இருமடிக்கேற்ப குறைகிறது.//

நீங்கள் கோளத்தின் சுற்றளவு என்பதை இருபரிமாணத்தில் மேற்பரப்பு என்னும் பொருளில் பயன்படுத்துகிறீர்கள் என புரிகிறது எனினும் இது த்வறான் விள்க்கம் போல் தெரியலாம்..வட்டத்திற்கு சுற்றளவு என்னும் சொல் சரி.கோளத்திற்கு அதன் மேற்பரப்பு[surface area] அல்லது சுற்றுப் பரப்பளவு என்றே சொல்லே சரியாக் இருக்கும்

முப்பரிமாணத்திற்கு அதிக்மான் பரிமான்ங்கள் இருக்க்லாம் என்ற அறிவியலின் தேடல் முடிவுக்கு வராத நிலையில் அது குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை..
நன்றி

suvanappiriyan said...

அருமையான ஆக்கம்.

சமுத்ரா said...

கோளம்-மேற்பரப்பு-Surface Area
நன்றி சார்வாகன்

Unknown said...

பல அறியாத விஷயங்கள் அறிந்து கொண்டேன், நன்றி.

//HOW LONG IS A SECOND , ACTUALLY?//

இதற்கு பலமுறை குழம்பியதுண்டு, யாராவாது கூற மாட்டார்களா என்று தேடுகிறேன், நீங்களும் ? போட்டால் என்ன செய்ய.

Aba said...

ஒரு கேள்வி. தயவுசெய்து பதிலளியுங்கள்.

அறிவியலில் பயன்படுத்தப்படும் Metric units of measurements இன் அடிப்படை மூன்று measurements ஆன, குருட்டாம்போக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட meter, kg, second ஆகியவற்றின் மதிப்புக்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒரு ஒத்துப்போகின்றன?

உதாரணத்துக்கு, கிலோகிராமுக்குப் பதிலாக பழைய இறாத்தலையே பயன்படுத்திக் கொண்டிருந்தால் E=mc^2 என அழகாக வாய்ப்பாடு வந்திருக்காதல்லவா? அப்படியென்றால் அடிப்படை அளவைகளுக்கிடையே ஏதேனும் solid ஆன தொடர்புகள் இருக்கின்றனவா?

சமுத்ரா said...

Abarajithan,
when ever you change the units of measurement of a physical quantity only its number called measurement will change, but the quantity never changes, and the same formula still holds. SI units are international units for measurement of physical quantities. in physics we can't proceed anywhere without measurement.
ex., velocity V = distance d / time t = 2 km / 1 hour = 2000 m / 3600 sec = 0.56 m/sec = 56 cm/sec

Aba said...
This comment has been removed by the author.
Aba said...

But when we take equations concerning different dimensions such as [E=mc^2] (I dont know the proof of this formula yet), If we use minutes instead of seconds, wont the equation change? wont it become [E=m(cx60)^2]?

ஷைலஜா said...

இத்தனை நாளாய் உங்கள் ப்ளாக்கை பார்க்காமல் போய்விட்டேனே என்று இருக்கிறது இத்தனைக்கும் நானும் பெங்களூர் தான்! ரசித்துப்படிக்கிறேன். சுஜாதாவைப்போல(தவிர்க்கமுடியவில்லைதான் இப்படிச்சொல்ல:)ஆனால் என்ன மிகுந்த ஒளி என்றால் ஆதவன் தானே நினைவுக்கு வருகிறான்?:) சகல துறைகளிலும் பரிமளிக்கும் எழுத்து. முழுக்க வாசித்துவிட்டு மறுபடி(அடிக்கடி) வருவேன்!

அப்பாதுரை said...

ரொம்ப நாளாச்சுங்க இங்க வந்து.. வழக்கம் போல் அருமை. நான்காம் பரிமாணத்தை இன்னும் சுரண்டிக் கொண்டிருப்பதால் படைப்புகள் வளரவில்லை என்று நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் சமுத்ரா.

இந்தப்பதிவு அருமை!!!!!

ஷர்புதீன் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் சமுத்ரா.

write more in this week than previous days! i don't need to explain why!

இராசகுமார் said...

சமுத்ரா,
அருமையான தொடர்.
உங்கள் நடை ரெம்ப எளிமையாவும் சுவாரசியமாவும் இருக்கு .
நானும் இத்தனை நாளா பாக்காம போய்விட்டேனே என்று நினைக்கிறேன்

"இத்தனை அருமையான அறிவியல் தொடரே எத்தனை நாளாய் எங்கிருந்தாய் !"

உங்கள் முதல் தொடரில் இருந்து தேடி தேடி படிக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள் .
நன்றி

வவ்வால் said...

சமுத்ரா,

அறிவியலை தமிழ் மற்றும் எளிமை படுத்துவதில் நல்ல முயற்சி!

//எனவே ஈர்ப்பு விசை தூரத்தின் இருமடிக்கேற்ப குறைகிறது. எனவே 2 +1 =3 பரிமாணங்கள் மட்டுமே இருக்கின்றன என்று நம்பலாம்.நான்கு (வெளி) பரிமாணங்கள் இருக்குமானால் ஈர்ப்பு விசை தூரத்தின் மும்மடிக்கு (R ^ 3 )ஏற்ப குறையும். அப்படி அபாரமான வேகத்தில் ஈர்ப்பு குறைந்தால் நிலவு பூமியிடம் நிற்காது. பூமி சூரியனிடம் பந்தப்பட்டிருக்காது. வாழ்க மூன்று!//

நான்கு பரிமாணம் இருக்குமானால் மும்மடிக்கு குறையாது அல்லது கூடாது ஏன் எனில் இன்வெர்ஸ் ஸ்கொயர் விதியின் படி தான் இந்த இருமடி எதிர் விகிதம் வருகிறது, அதன் கூற்றுப்படி புள்ளி நிறை(பாயிண்ட் மாஸ்) மற்றும் திசை (வெக்டர்) அடிப்படையில் தான் ஈர்ப்பு விசை செயல்படுகிறது. பரிமாணங்களின் அச்சின் எண்ணிக்கையில் அல்ல.

எனவே நான்கு பரிமாணம் இருந்தால் நாளாவது அச்சின் நேர்க்கொட்டு வடிவில் ஈர்ப்பு விசை கணக்கிடப்படும் போது மீண்டும் அதே தூரத்தின் இருமடி விகிதமே செல்லுபடியாகும் என நினைக்கிறேன்

நீங்கள் நிறை மற்றும் அடர்ர்தியை புறக்கணித்து விட்டு வடிவத்தினை மட்டுமே கொண்டு ஈர்ப்பு விசையை விளக்க முற்பட்டதால் அப்படி நினைத்து விட்டீர்கள் போல.

ஜூப்பீட்டர் பூமியை விட பெரியது எனவே அதன் ஆரம் பெரியதாக இருப்பதால் தூரம் கூட எனவே ஜூப்பிடர் மேற்பரப்பில் ஈர்ப்பு விசை குறைவாக இருக்க வேண்டும் ஆனால் பூமியை விட கூட ஏன் எனில் அதன் நிறையும் கூடுதலாக இருக்கிறது.

நிறை ,அடர்த்தியை கணக்கில் வைக்காமல் ஈர்ப்பு விசையை தூரத்தின் அடிப்படையில் சொல்வது சரியாக வராது என்பதற்கே ஜுபிட்டர் உதாரணம் சொன்னேன்.