இந்த வலையில் தேடவும்

Monday, August 8, 2011

கலைடாஸ்கோப் -32

லைடாஸ்கோப் -32 உங்களை வரவேற்கிறது

1
==

'சுபம் என்று போட்ட பின்னும் தொடர்கின்றன
தொடரும் என்று சொன்ன போதும் முடிந்து விடுகின்றன
சீரியல்களைப்
போல அல்ல வாழ்க்கை'

-எங்கேயோ படித்தது (எழுதியது:பொன்.சுதா??)

இந்த 'கவிதைகள்' தான் சங்க காலத்தில் இருந்து எத்தனை வித விதமான வடிவங்களை எடுத்து வந்திருக்கின்றன? அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று மண்டை காய வைக்கும் செய்யுள்களில்(படித்தால் இது தமிழ் தானா என்று நமக்கே சந்தேகம் வரும்) இருந்து எதைவாவது எழுதி கடைசியில் ஆச்சரியக்குறி போட்டு விட்டால் அது கவிதை ஆகி விடும் என்று நினைப்பவர்கள் எழுதும்(கிறுக்கும்)ஹைக்கூ டைப் கவிதைகள் வரை விதம் விதமாக தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு காலத்தில் உரைநடை என்பது இருக்கவில்லையாம். எல்லாரும் கவிதையில் தான் பேசிக்கொண்டார்களாம். இந்தக் காலத்தில் எல்லாரும் கவிதையில் தான் பேச வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விட்டால் நாம் எல்லாம் ஊமையாகி விடுவோம். எப்போதாவது இது மாதிரி முயற்சி செய்து (மனைவியிடம்) பேசினால் தான் உண்டு:

பேர்வாங்க வேண்டுமென்று பெருங்கனவு காண்பவனை
கார்வாங்க
வேண்டுமென்று கதைக்கின்றாய் - சோர்வாச்சே
ஆகாத கதையெல்லாம் அப்புறமாய் பேசலாம்போய்
ப்ரூகாபி போட்டெடுத்து வா!

சங்கீதத்தில் ராக ஆலாபனை என்று ஒன்று உண்டு..என்ன தான் அருமையாக ஒரு ராகத்தை ஆலாபனை செய்தாலும் ஏதோ சம்திங் மிஸ்ஸிங் என்று நமக்குத் தோன்றும்.(என்னைப் போல சில பேர் ஆலாபனை செய்தால் 'Everything missing' என்று தோன்றுவது வேறு விஷயம் !) இது ஏன் என்றால் பின்னணியில் ஒரு அடிநாதமான தாளம் இல்லை.அதே போல கவிதைக்கும் சந்தம், இலக்கணம் எல்லாம் இருந்தால் அதன் அழகே தனி தான். சமீபத்தில் வாலியின் கிருஷ்ண விஜயம் ஒருவழியாகப் படித்து முடித்தேன். ஒருவழியாக என்று ஏன் சொல்கிறேன் என்றால் வாலி போல ஒரு கவியுலக ஜாம்பவான்களில் ஒருவரால்
எழுதப்பட்டிருந்தாலும் அந்த PATTERN சலிப்பாக இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் படிக்கவே கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வாலியே முன்னுரையில் சொல்கிறார்: வாழ்வின் இலக்கணம் விளக்கிய இறைவனை தான் இலக்கணம் விலக்கிய கவிதையில் பாட முனைகிறேன் என்று! ஆனால் நாமெல்லாம் இலக்கணமே வேண்டாம் எங்காவது ஆடிக்கு ஒருதரம் அமாவாசைக்கு ஒருதரம் எதுகை மோனை போட்டு கவிதையில் பேசு என்றால் கூட பேசமாட்டோம்.(பேசத் தெரியாது) இப்படி:

அம்மா ! நான்
அங்காடிக்குச் செல்லேன்!
அப்பா 'அகல் விளக்கு' பார்த்துக் கொண்டு
ஹாயாகத்தான் இருக்கிறார்
அவரைப்
போகச் சொல்லேன்!

பேசலாம். ஆனால் நாம் பேச மாட்டோம்! தமிழ் மொழி ஒரு சமுத்திரம். நாமோ அதன் கரையில் நின்று கொண்டு ஒரு டம்ப்ளரில் தண்ணீரை அள்ளி தலையில் போட்டுக் கொண்டிருக்கிறோம்!


2
=

ஆங்கிலத்தில் ACROSTIC என்று ஒரு கவிதை வடிவம் உண்டு. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரியிலும் வரும் முதல் எழுத்தையோ வார்த்தையையோ ஒன்றாக இணைத்துப் பார்த்தால் ஒரு பொருளுள்ள வார்த்தையோ வாக்கியமோ வரும். ACROSTIC என்பதில் நிறைய வடிவங்கள் உள்ளன. ஓர் எளிய உதாரணம்:'அகிலா' என்ற பேரை எடுத்துக் கொள்ளலாம்.

வள் அழகாக இருந்தாள்
கிட்ட நெருங்கி பேர் கேட்டேன்
லாவண்யமாக சிரித்து
'அகிலா' என்றாள் என்று எழுதலாம்

ழுக்கான
கிழிந்த உடைகளுடன்
லாட்டரி சீட்டு விற்ற அவள் இன்று கோடீஸ்வரியாம்! என்று கூட எழுதலாம்.

இப்படி கூட எழுதலாம்:-

ங்கீதம் என்பது சந்தோஷ மயக்கம் -காதில்
ரீங்காரம் செய்து பாங்காய் மயக்கும்
வலையை இசை கடிதினில் விரட்டும்
கிழ்ச்சியால் கேட்பவர் மனதினைப் புரட்டும்
ரமனை இழுத்து பக்கத்தில் அழைக்கும்
ன்னிலை மறந்து கண்ணீர்வர வ
ழைக்கும் -
நித்தமும் மனதில் புத்துணர் வளிக்கும் !
ங்கீதம் என்பது சந்தோஷ மயக்கம்!!

கலைடாஸ்கோப்பில் அவ்வப்போது போட்டி வைப்பதுண்டு..சரி அகிலா மாதிரியே இப்போது இதை வைத்துக் கொண்டு ஒரு ACROSTIC கவிதை எழுதுங்கள். வார்த்தை 'வானரமே' தமிழில் வார்த்தைகள் 'ன' என்று தொடங்காது என்பதால் 'ந' வை உபயோகிக்கலாம். ராவணன் தன்னிடம் தூது வந்த அனுமானைப் பார்த்து (இளக்காரமாக) சொல்வதாக கவிதை இருக்க வேண்டும்!


3
==
ACROSTIC தொடர்கிறது.

இதன் இன்னொரு வடிவம் கவிதையில் ஓவ்வொரு வரியின் முதல் வார்த்தைகளைப் பயன்படுத்துவது. உதாரணம்:

நேற்று நம் காதல் உயர்ந்தது என்றாய்; தேவதை
போல் என் கண் முன் நின்றாய்
இன்று என்னை தனியாக்கி சென்றாய் ; என்னிடம் காதல்
இல்லை என்றாய் ! வாழ்க நீ நன்றாய்!

இன்னொரு வடிவம் ஒவ்வொரு வரியும் தொடங்கிய எழுத்திலேயே முடிவது:

மாமா மாமா ஜு- வுக்குப் போலாமா?
புலியைப் பார்க்கலாம்; வந்திடும் பூரிப்பு
சிங்கம் பார்த்து சிரித்திடுவாள் தங்கச்சி
ரடியைப் பார்க்கலாம் கண்ணுக்கு நேரா
குரங்குக் கூட்டத்தைப் பார்க்கலாம் அங்கு
மான்களைப் பார்த்து மயங்கலாம் மாமா
மீன்கள் இருக்கும் இடத்தையும் காமீ
யானையும் பார்க்கலாம் கூட்டிப் போவாயா

ஆங்கிலத்தில் இந்த கவிதையைப் பாருங்கள்:

JANet was quite ill one day.
FEBrile trouble came her way.
MARtyr-like, she lay in bed;
APRoned nurses softly sped.
MAYbe, said the leech judicial
JUNket would be beneficial.
JULeps, too, though freely tried,
AUGured ill, for Janet died.
SEPulchre was sadly made.
OCTaves pealed and prayers were said.
NOVices with ma'y a tear
DECorated Janet's bier.

இன்னொரு விதமான ACROSTIC கூட இருக்கிறது. அதாவது ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை சாமார்த்தியமாக ஒரு வாக்கியத்தில் புகுத்துவது. மாதவி என்பதை 'கொஞ்சம் பேசலாமா தவிக்கிறேன் நீயின்றி' என்று உள்ளே வைப்பது. கர்நாடக சங்கீத பாடல்களில் திறமையான வாக்கேயகாரர்கள் ராகத்தின் பெயர்களை இப்படி பாட்டில் புகுத்துவது வழக்கம். 'ஹேமவதி ப்ரியே' 'ஹம்சத்வனி ப்ரியே' என்று சொல்லாமல் கொஞ்சம் ட்ரிக் செய்வது!

சில POPULAR உதாரணங்கள்:

ஆர் அபிமானம் கொள்வார்? -ஆரபி
கடினமோ கனமோ கூறடா - மோகனம்
சகா நான் அல்லவோ உன் சகா நான் அல்லவோ -சஹானா
அம்பிகை வராள் இதோ - வராளி

4
==

கம்ப்யூட்டர் மூலம் வைரஸ் பரவும்..பாக்டீரியா பரவுமா? பரவும் என்கிறது ஓர் ஆய்வு. ஒரு டாய்லெட்டுக்கு சமமான பாக்டீரியா கிருமிகள் நாம் உபயோகப்படுத்தும் கீ-போர்டில் இருக்கலாமாம்.(கடைசியாக உங்கள் கீ போர்டை எப்போது கிளீன் செய்தீர்கள் என்று யோசித்துப் பார்க்கவும்) நாம் பெரும்பாலான சமாசாரங்களை
கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்து கொண்டு தான் சாப்பிடுகிறோம்.டீ, காபி, சாண்ட்விட்ச், பீஸா, பர்கர்,சிப்ஸ், பிஸ்கட், பப்ஸ் என்று ஒரு மினி ஹோட்டல் லெவலுக்கு..இந்த உணவுத் துணுக்குகள் எல்லாம் கம்ப்யூட்டர் விசைகளுக்கு இடையே சென்று ஒளிந்து கொண்டு பாக்டீரியாக்கள் குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு உள்ளே குடும்பம் நடத்த ஆரம்பிக்குமாம் . எனவே உங்களுக்கு உங்கள் கீ போர்டு மூலம் கூட நோய் வரலாம். எதற்கும் வாரம் ஒருமுறை கீபோர்டை DISCONNECT செய்து விட்டு நன்றாக துடைத்து சுத்தம் செய்து விடுங்கள்..டெட்டால் போட்டு கழுவ வேண்டும் என்றால் அது உங்கள் இஷ்டம்.

5
==
மனிதன் பொழுதுபோக்குக்காக கண்டு பிடித்து வைத்திருக்கும் விஷயங்களை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்டர்நெட், வீடியோ கேம்கள், ஐ-பாட், நூற்றுக்கணக்கான டி,வி சானல்கள் , எப்,எம், சினிமா, புத்தகங்கள்! இப்படி எல்லாம் இருந்தும் சிலபேர் பணம் செலவு செய்து 'தீம் பார்க்' குகளுக்கு செல்கிறார்கள். சமீபத்தில் ஆபீசில் பெங்களூருவில் இருக்கும் 'ஒன்டர் லா' கூட்டிச் சென்றார்கள். ஐ.டி கம்பெனிகளில் வருடா வருடம் 'team outing ' என்று ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து எங்காவது ரிசார்டுகளுக்கு சென்று கூத்தடித்து விட்டு வர அனுமதிப்பார்கள். இதற்கு முன் பெங்களூருவில் இருக்கும்
'குஹந்தாரா' என்ற ஒரு ரிசார்ட். முழு ரிசார்டையும் பூமியைக் குடைந்து உள்ளே குகை போல கட்டி இருக்கிறார்கள். உள்ளே ஹனிமூன் ஜோடிகளுக்கு அறைகளை கரையான் புற்று போன்ற வடிவத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள்.
(இந்த ரிசார்ட் 'ஈசன்' படத்தில் கூட வரும்) உள்ளே போவதற்கு ஒரு கிலோமீட்டர் குகை வழியே நடந்து செல்ல வேண்டும்! உள்ளே ஒரு செயற்கை அருவி வேறு இருக்கிறது. 'ரெயின் டான்ஸ்' என்று மேலே இருந்து செயற்கையாக மழை பெய்ய வைத்து கீழே எல்லாரும் ஆடுகிறார்கள்.ok back to wonderla ...

அங்கே சில ரைடுகள் பயங்கரமாக இருக்கின்றன. நம்மை மேலே தூக்கிச் சென்று அந்தரத்தில் தலைகீழாக நிற்க வைக்கின்றன. கண்டபடி சுழல்கின்றன. (ஹெவி மீல்ஸ் ஏதாவது தின்று விட்டு சென்றால் கண்டிப்பாக வாந்தி எடுத்து விடுவோம்!) மேலே உயரத்துக்கு சமர்த்தாக அழைத்துச் சென்று திடும் என அந்த பிடிப்பும் இல்லாமல் கீழே விழும் FREE FALL என்று கொஞ்சம் திகிலான ரைடுகள்.அப்புறம் ஸ்பெஷல் கண்ணாடி அணிந்து பார்க்கும் 3D ஷோ காட்டுகிறார்கள். அந்த ஷோவின் போது நாம் அமர்ந்திருக்கும் சீட் கூட பயணித்து நாம் காட்டில் பயணிப்பது போல ஒரு VIRTUAL REALITY யை உருவாக்குகிறார்கள்.
அப்புறம் தண்ணீர் விளையாட்டுகள்.!! மிக முக்கியமாக மழை நடனம். உள்ளே இருட்டில் விளக்குகள் விட்டு விட்டு எரிய மேலிருந்து துளைகள் மூலம் (செயற்கை) மழை பெய்கிறது.கீழே எல்லாரும் ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான் என்ற அத்வைத சித்தாந்தத்தை உண்மையாக்கும் படி அரைகுறை ஆடைகளில் ஆடுகிறார்கள். பின்னணியில் 'ரிங்க ரிங்கா' பாடல் அதிர்கிறது! அடியேனையும் மழை நடனம் ஆடும் படி நண்பர்கள் சிலர் அழைத்தார்கள். ஆனால் ஏதோ ஒன்று அப்படி செய்வதைத் தடுத்தது. (நாங்கெல்லாம் ரொம்ப 'டீசன்ட்' டாக்கும்!)

6
==

வேறென்ன? ஓஷோ ஜோக்! :D

ஒரு அமெரிக்கன் ஒரு ஜெர்மன் ஒரு பாகிஸ்தானி மூன்று பேரும் ஓர் அடர்ந்த
ஆப்பிரிக்கக் காட்டில் வேட்டையாட சென்றார்கள். மூன்று பேரும் தனித்தனியாக வேட்டையாடி மாலையில் சந்திக்கலாம் என்று கூறி பிரிந்து சென்றார்கள். மாலையில் மூன்று பேரும் மறுபடியும் சந்தித்தார்கள்.

அமெரிக்கன் 'நான் இன்று மூன்று புலிகள், ஒரு சிங்கம், இரண்டு கரடியை வேட்டையாடினேன்' என்றான்

ஜெர்மன் 'அவ்வளவு தானா? நான் இரண்டு யானைகள்,ஆறு புலிகள் மற்றும் நிறைய பறவைகளை வேட்டையாடினேன்' என்றான்

இருவரும் பாகிஸ்தானியைப் பார்த்து ' நீ என்ன வேட்டையாடினாய்? உன் அனுபவம் எப்படி இருந்தது?' என்றார்கள்.

பாகிஸ்தானி 'நான் இன்று அறுபத்து எட்டு நோ-நோ க்களை வேட்டையாடினேன்' என்றான்.

மற்ற இருவருக்கும் அது என்ன விலங்கு என்று தெரியவில்லை ...'நோ-நோ'வா? என்ன மாதிரியான மிருகம் அது? அதை நாங்கள் இது வரை பார்க்கவில்லையே? எப்படி இருக்கும் அது?' என்றார்கள்

பாகிஸ்தானி 'அது தான் கருப்பாக உயரமாக சுருள் சுருள் முடியுடன் பெரிய உதடுகளோடு இருக்குமே? அதற்கு முன் துப்பாக்கியை நீட்டினால் 'நோ நோ' என்று கத்துமே? அது!


முத்ரா



30 comments:

தமிழ் உதயம் said...

உண்மை தான். கவிதை என்று வாலி எதையாவது எழுதி விடுகிறார். பிரசுரிக்க பத்திரிகைகள் இருப்பதால் அவர் பாடு கொண்டாட்டம். நம் பாடு திண்டாட்டம்.

G.M Balasubramaniam said...

நானும் எது கவிதை என்று ஒரு பதிவு எழுதினேன். திருவெழுகூற்றிருக்கையை ரதபந்தனக் கவிதையாக கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோவிலில் பார்த்து , படித்து பொருள் புரியாமல் விழித்து, நாம் எழுதுவதெல்லாம் எழுத்தா என்ற எண்ணம் வந்து எழுதியது, யோசித்துப் பார்க்கும்போது அழகுபட சந்தத்துடன் எழுதினால் அதனைக் கவிதை எனக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. நீங்கள் கூறும் ACROSTIC வகையறக்கள் மொழியில் சிறிது ஆளுமை இருந்தால் எழுத முடியலாம்.(விருப்பமிருந்தால் )

kaialavuman said...

வான் வழியே வந்திங்கு
நன் சமரம் புரிந்தாலும்
ரதி பதிபோல் எரிந்திடுவாய்
மேக நாதன் அஸ்திரத்தால்

- சுமாராக வந்திருக்கிறதா?

சேலம் தேவா said...

ACROSTIC பற்றி அறிமுகத்திற்கு நன்றி.ஒஷோ ஜோக் அருமை.

Mohamed Faaique said...

வாடா...
நகரயே
ரணகளப் படுத்திய
மந்தியே.....

சமுத்ரா said...

thank u all .. வேங்கட ஸ்ரீனிவாசன், நல்ல கவிதை : )

சமுத்ரா said...
This comment has been removed by the author.
சமுத்ரா said...

Mohamed Faaique , short and sweet :D ஆனால் அது மே, ம அல்ல..

Krishna said...

sir! i want ur experiance in interview and job. plz share

Aba said...

சுயவெண்பா... LOL!!

//பேசலாம். ஆனால் நாம் பேச மாட்டோம்! தமிழ் மொழி ஒரு சமுத்திரம். நாமோ அதன் கரையில் நின்று கொண்டு ஒரு டம்ப்ளரில் தண்ணீரை அள்ளி தலையில் போட்டுக் கொண்டிருக்கிறோம்! //

உண்மை...

// 'வானரமே' //
வேணாம்...

//பாகிஸ்தானி 'அது தான் கருப்பாக உயரமாக சுருள் சுருள் முடியுடன் பெரிய உதடுகளோடு இருக்குமே? அதற்கு முன் துப்பாக்கியை நீட்டினால் 'நோ நோ' என்று கத்துமே? அது! //

nice one...

நெல்லி. மூர்த்தி said...

என்ன சமுத்ரா... கவிதை மழையில் தாங்கள் நனைந்தது போதாதென்று எங்களையும் நனைய வைத்துவிட்டீர்கள்! மிகவும் அருமை! என்னுள் மலரும் (கல்லூரி) நினைவுகளைக் கிளர்ந்தது. உதாரணத்திற்க்கு சில ’கரந்துறைப் பாட்டு’ (acrostic)கவிதை...

சுதந்திரத்தை சுருக்கிக் கொண்டாய்
ஜாலிக்கு வேலியிட்டாய்
தாவணிக்கு மாறியதலா?!


பாவினை இசைப்பதிலும்
புன்னகை பூப்பதிலும்
உனக்கு நிகர் நீயே!

பிரிய கீதங்களை
ரிங்காரிமிட்டு
யாதுமாகிக் கவர்ந்தவள்

ohedasindia said...
This comment has been removed by the author.
Sugumarje said...

வந்தாயா என் மாளிகைக்கு?
நன்றாக இருக்கிறானா உன் ராமன்
ரம்மியமாக இருக்கிறாள் உங்கள் சீதை
மேகம் மறைத்த நிலவு போலவெ

Sugumarje said...

வானர குலத்தோனே
நரன் ராமன் தூதுவனே
ரத்தத்தை சிந்தியே
மேலுலகம் போவாயே!

Sugumarje said...

சும்மா இருப்பதே
குலத்திற்கு அழகென்று
மாத்தி யோசிக்கிறாய்
ரத்தினமான நேரத்தையெல்லாம்
ஜில்லி அடித்துகொண்டிருக்கிறாய்!


என் பெயர்தானப்பா :)

நவின் குமார் said...

தல நான்தான் young_singam@twitter.com நவீன் குமார் கேவலமான என் ப்லோகுக்கு பெங்களூரில் இருந்து வந்து லைக் போட்டதுக்கு நன்றி

Chitra said...

பேசலாம். ஆனால் நாம் பேச மாட்டோம்! தமிழ் மொழி ஒரு சமுத்திரம். நாமோ அதன் கரையில் நின்று கொண்டு ஒரு டம்ப்ளரில் தண்ணீரை அள்ளி தலையில் போட்டுக் கொண்டிருக்கிறோம்!

.....அருமையாக எழுதி இருக்கீங்க..

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பா இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன்.இனி தொடர்ந்து வருவேன் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் மொழி ஒரு சமுத்திரம். நாமோ அதன் கரையில் நின்று கொண்டு ஒரு டம்ப்ளரில் தண்ணீரை அள்ளி தலையில் போட்டுக் கொண்டிருக்கிறோம்!

கவிதை கடலையில் மகிழவைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

வானில் பறந்து வந்த
நரனின் தூதுவனே
ரசிக்க முடியாத
மேகமாய் தீயை மூட்டியவனே!!

Unknown said...

பல்வேறு வண்ணங்களை உள்வாங்கி, இந்த கலைடாஸ்கோப் பகுதியை வண்ணமயமான நிறமாலையாக்கி இருக்கிறீர்கள். ஒவ்வொரு பகுதியும் வேறுபட்ட கலை ரசனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது,.

சமுத்ரா said...

அனைவருக்கும் நன்றி...வானரமே கவிதை சொன்னவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி..

aotspr said...

நல்ல கவிதை...
பாராட்டுகள்...
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

அம்பாளடியாள் said...

அறிவுரையும் நகைச்சுவையும் அழகைப்பாய்ந்தோடும்
இந்த அருவிதனில் இன்றுதான் நனையக்கிடைத்ததது
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் சிறப்புற.
நன்றி பகிர்வுக்கு.......

சந்துரு said...

அருமை!!

கவிதையில் ஆர்வம் இருந்தால் இதையும் படியுங்கள்.கவிதையின் தேவை என்ன அல்லது கவிதை உருவான வரலாறு என்ன?
Tuesday,Oct 26,

http://chandroosblog.blogspot.com/2010/10/blog-post_25.html
தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )
Sunday,Apr 11,


http://chandroosblog.blogspot.com/2010/04/tcp-ip.html

அப்பாதுரை said...

இது ஓஷோ ஜோக்கா? disgusting.

மற்றவை ரசிக்க முடிந்தது.

adhvaithan said...

arumaiyana venba...

adhvaithan said...

வானுலகும் என் வசவமே
நல்ல பூவுலகும் என் வசமே
ரம்மியம் மிகு இலங்கையிலே
மேதினில் போற்றும் என்முன் வந்ததேனோ, வானரமே?

சமுத்ரா said...

தண்டப்பயல் (?) கவிதை அருமை..நன்றி

adhvaithan said...

தண்டப்பயல், இது தான் எனக்கும், என் வலை பூ விற்கும், பொருத்தமான பெயராய் இருக்கும் என்று நினைத்தேன். பாராட்டுக்கு நன்றி நண்பா..