கலைடாஸ்கோப்-11 உங்களை வரவேற்கிறது
Body language
===============
போன வாரம் 'நாதஸ்வரம்' சீரியல் ஒரு எபிஸோடை வசனமே இல்லாமல் ஒளிபரப்பினார்கள்..வசனம் இருந்தாலே அதில் எல்லாரும் முக்கால்வாசி மூக்கால் அழுது கொண்டிருப்பார்கள்.
வசனம் வேறு இல்லையென்றால் கேட்க வேண்டுமா ? எல்லாரும் ஒரு பத்து மில்லி லிட்டர் அதிகமாகவே கண்ணீர் விட்டு எதுவும் பேசாமல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்கள்..சரி இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் சீரியல் இயக்குனர்கள் இப்படியெல்லாம் புதுமையாக (?!) யோசிப்பதற்குக் காரணம் BODY LANGUAGE என்ற ஒன்று இருப்பதால்தான்..நம் communication இல் ஒரு எழுபது சதவிகிதம் இந்த body LANGUAGE மூலம் நடக்கிறது என்கிறார்கள்.(பேசுவது ஒரு முப்பது சதவிகிதம் தானாம்!)இதனால் தான் ஒருவரிடம் பேசும் போது நியூஸ் வாசிப்பவர் போல ஆடாமல் அசையாமல் நம்மால் பேச முடிவதில்லை...டி.வியில் ஒரு மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டு மக்களுக்கு பாட்டுகளை ஒளிபரப்பும் மகத்தான பணியை செய்யும் 'வீடியோ ஜாக்கி' களை (esp . கைகளை! )கவனித்திருக்கிறீர்களா?
அந்தக் காலங்களில் ரேடியோவில் நாடகங்களை ஒலிபரப்புவார்களே? நாடகங்கள் என்ன தான் அருமையாக இருந்தாலும் அதனுடன் நம்மால் ஒன்ற முடியாது. yes..BL was missing! Body language
===============
போன வாரம் 'நாதஸ்வரம்' சீரியல் ஒரு எபிஸோடை வசனமே இல்லாமல் ஒளிபரப்பினார்கள்..வசனம் இருந்தாலே அதில் எல்லாரும் முக்கால்வாசி மூக்கால் அழுது கொண்டிருப்பார்கள்.
வசனம் வேறு இல்லையென்றால் கேட்க வேண்டுமா ? எல்லாரும் ஒரு பத்து மில்லி லிட்டர் அதிகமாகவே கண்ணீர் விட்டு எதுவும் பேசாமல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்கள்..சரி இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் சீரியல் இயக்குனர்கள் இப்படியெல்லாம் புதுமையாக (?!) யோசிப்பதற்குக் காரணம் BODY LANGUAGE என்ற ஒன்று இருப்பதால்தான்..நம் communication இல் ஒரு எழுபது சதவிகிதம் இந்த body LANGUAGE மூலம் நடக்கிறது என்கிறார்கள்.(பேசுவது ஒரு முப்பது சதவிகிதம் தானாம்!)இதனால் தான் ஒருவரிடம் பேசும் போது நியூஸ் வாசிப்பவர் போல ஆடாமல் அசையாமல் நம்மால் பேச முடிவதில்லை...டி.வியில் ஒரு மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டு மக்களுக்கு பாட்டுகளை ஒளிபரப்பும் மகத்தான பணியை செய்யும் 'வீடியோ ஜாக்கி' களை (esp . கைகளை! )கவனித்திருக்கிறீர்களா?
கர்நாடக இசைப் பாடகர்களுக்கு body Language ரொம்பவும் முக்கியமாக இருக்கிறது..சில பேர் கையால் முறுக்கு பிழிவார்கள்; சில பேர் பூக் கட்டுவார்கள்..வாலி பால் விளையாடுவார்கள்.டயர் ஓட்டுவார்கள்.பக்க வாத்தியக்காரர் ஒரு Safely distance க்கு உள்ளே தப்பித் தவறி உட்கார்ந்து விட்டிருந்தால் அவரைக் கண்ணைக் குத்தி விடுவார்கள்.
முகத்தை அஷ்ட கோணலாக்கி நவரசமும் காட்டுவார்கள்.. (இப்போதெல்லாம் பின்னே பெரிய திரையில் தெற்றுப்பல் தெரியும் அளவு close -up வேறு! சென்னையில் திருவையாறுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்..அந்த close -up வேண்டாமே ப்ளீஸ்! ) இதையெல்லாம் நிறைய பேர் 'குரங்கு சேஷ்டை' என்று சொன்னாலும் THEY ARE NEEDED ...அவர்கள் குரலுக்கும் உடம்புக்கும் ஒரு Synchronization இல்லை என்றால் அவர்களால் பாட முடியாது.நிரவலில் அவர்கள் குரல் நடுங்கும் போது கைகளும் நடுங்க வேண்டும்.மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்கும் போது கைகளும் மேலே போக வேண்டும்.இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு ஜானகி ..'சிங்கார வேலனே தேவா' போன்ற கமகங்கள் அதிகம் உள்ள பாடல்களைக் கூட அவரால் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், எந்த அசைவுகளும் இன்றி சிலை போல நின்று கொண்டு பாட முடிகிறது..என்னைக் கேட்டால் I 'd say Janaki has invisible Hands and Face!
அவர் பாடும் போது அந்த கண்ணுக்குத் தெரியாத மாய முகமும் கைகளும் களி நடனம் ஆடிக் கொண்டிருக்குமோ என்னமோ?
மேலும் இதில் INTIMATE ZONE என்று ஒன்று சொல்கிறார்கள். அதாவது நம் உடலைச் சுற்றி உள்ள ஒரு 18 இன்ச் . பரப்பு.அதற்குள் நாம் நமக்கு மிக நெருக்கமானவர்களை மட்டுமே
அனுமதிக்கிறோம் என்கிறார்கள்..உங்களை ஒருவருக்குப் பிடிக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள சினிமாவில் காட்டுவதைப் போல் என்னென்னவோ செய்து மெனக்கெட வேண்டாம்..அவரின் INTIMATE ZONE -க்குள் மெதுவாக நுழைந்து பாருங்கள்..அவர் ஆட்டோமேடிக்காக அசௌகர்யமாக உணர்ந்து நகர்ந்து பின் வாங்கினால் bad luck ! He /She Does not like you !

Tongue Twisters
====================
வீரத்தமிழர்கள் (அப்படி யாராவது இன்னும் இருந்தால்) கோபித்துக் கொள்ள வேண்டாம்..தமிழில் சமஸ்கிருதம் போல ஓர் எழுத்துக்கு நான்கு சப்தங்கள் இல்லாத காரணத்தால்
தமிழைப் பேசும் போது அது ரொம்பவே FLAT ஆகக் கேட்கிறது. சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகத்தை சப்தம் பிசகாமல் சத்தமாக சொல்லி முடித்த பின்பு நமக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டிருக்கும்.ஆனால் இந்த ஒரு Oral Exercise தமிழில் கிடைப்பதில்லை. ச, ஷ, ஸ, எல்லாமே நமக்குக் குழப்பம் தான்..ஆங்கிலத்தில் இதைப் பாருங்கள் ..
She sells sea-shells on the sea-shore.
The shells she sells are sea-shells, I'm sure.
For if she sells sea-shells on the sea-shore
Then I'm sure she sells sea-shore shells.
The shells she sells are sea-shells, I'm sure.
For if she sells sea-shells on the sea-shore
Then I'm sure she sells sea-shore shells.
இதை சொல்லி முடித்தவுடன் உங்கள் நாக்கு ஒரு அரை நாளுக்கான லீவ் லெட்டரை உங்களிடம் நீட்டினால் ஆச்சரியம் இல்லை..'தமிழில் நாக்கு திருப்பிகள் (?) இல்லை என்று எந்த மடையன் சொன்னது?' என்று யாராவது குற்றம் கண்டுபிடிக்கும் முன்னர் same side goal போட்டு விடுகிறேன்...காளமேகப்புலவரின் இந்த பாடலைப் படித்துப் பாருங்கள்.சிவபெருமான் யானையின் தோலை உரித்து அணிந்து கொண்டதை எப்படி சொல்கிறார் என்று:
இவரோவீ ரட்டர் எனும் நாமம் உள்ளோர்?
இவரோ வழுவூரில் ஈசர்?- இவரோ
கடத்தடக்க தக்கரிப்பி டித்திழுத் தழுத்தி மெத்த
அடித்தறுத் துரித்துடுத்த வர் ?
(நான் இந்த விளையாட்டுக்கு வரலை!:))
இன்று வரைந்த ஓவியமே!
========================
நீங்கள் ஓவியரா என்று சில பேர் கேட்கிறார்கள்..Yes ..I think so ..:) மேலும் என்னை ஓர் ஓவியன் என்று சொல்லிக் கொள்வதில் தான் நான் பெருமை அடைகிறேன்.
கவிதை எழுதுவதை விடவும்,கதை எழுதுவதை விடவும், பாட்டுப் பாடுவதை விடவும், கொஞ்சம் உயர்ந்த தளத்தில் இயங்கும் விஷயம் அது.
நீங்கள் வேறு வேலை செய்து கொண்டே ஒரு கவிதையை யோசிக்க முடியும்..வேறு வேலை செய்து கொண்ட ஒரு பாடலைப் பாட முடியும். ஆனால் ஓவியத்தில் இது நடக்காது.
அது ஒரு தவம் மாதிரி. உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் அதில் ஈடுபடவேண்டும்..It demands whole of your energy ! ஓவியத்தை வரைந்து முடித்த பின்னர் ஒவ்வொரு ஓவியனுக்கும்
தோன்றக் கூடிய கவிதை இது:
நான் வரைந்த ஓவியம்
இதுவரை-
இங்கு தான் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது.
காற்றிலோ,
தூரிகையிலோ
காகிதத்திலோ
பிரபஞ்சப் பெருவெளியிலோ
நான் இதை வரையவில்லை,
நான் செய்ததெல்லாம்
என் கைகளில் மூலம்
அதை
சூனியத்தில் இருந்து
துழாவி
வெளிக் கொணர்ந்ததைத்தான்..
ஒரு கவிதை
===========
கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...
அலுவலகங்களில்,
கல்லூரிகளில்,
மார்கெட்டுகளில்,
கோவில்களில்,
எல்லா இடங்களிலும்...
வயிற்றை விடவும்
நாக்கை விடவும்
நுரையீரலை விடவும்
அதிகமான பேராசையுடன்
அகோரப்பசியுடன்..
கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...
சமுத்ரா'ஸ் ட்விட்ஸ்
===================
# அது எப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லா சோப்புகளும் 99 .9 % கிருமிகளை அழிக்கின்றன?
# யானை ஊருக்குள் வந்துருச்சு என்று தினமும் செய்திகளில் சொல்கிறீர்களே, மனுஷன் காட்டுக்குள் போய்விட்டான் என்று ஒரு நாளாவது சொல்கிறீர்களா?
ஓஷோ ஜோக்
============
ஒரு கிராமத்திற்கு பெரிய பணக்காரன் ஒருவன் வந்தான். அவனுக்கும் அங்கிருக்கும் ஏழை விவசாயி ஒருவன் மகளுக்கும் எப்படியோ தொடர்பு ஏற்பட்டு விட்டது.
ஒரு நாள் அந்தப் பெண் அழுது கொண்டே அவள் அப்பாவிடம் வந்து " அப்பா நான் அந்த ஆளு கிட்ட மோசம் போயிட்டேன்" என்றாள்...
அந்த விவசாயி கோபத்தில் கொதித்தெழுந்து நியாயம் கேட்க அந்த பணக்காரனிடம் சென்றான்..
பணக்காரன் அவனை சமாதானப்படுத்தி "தப்பு தாங்க,,ஏதோ அவசரத்துல நடந்துருச்சு .மன்னிச்சுக்கங்க..என் சமூக அந்தஸ்து காரணமாக உங்க மகளை நான் எல்லார் முன்னிலையிலும் மனைவி ஆக்கிக்க முடியாது. ஒரு வேளை அவள் கர்ப்பம் தரித்தால் அதற்கான எல்லாப் பொறுப்புகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..நீங்கள் கேட்பதெல்லாம் தருகிறேன்..
அந்த குழந்தையின் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்..உங்களுக்கு ஒரு புது வீடு கட்டித் தருகிறேன்" என்றான்
"அய்யா, என் மகள் அந்த சிறுக்கி ஒருவேளை கர்ப்பமாகலைன்னா இன்னொரு வாய்ப்பு தருவீங்களா எசமான்?"

சமுத்ரா
7 comments:
அனைத்தும் அருமை பாஸ்!
கர்நாடக இசையில் ஜேசுதாசின் கச்சேரிகள் அவ்வளவு அவஸ்தைகள் இல்லாமல் அமைதியானதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
ஓவியம் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான். அது ஒரு வகையான தியானம் மாதிரி! ஒன்றில் வரைவதற்கு ஒரு அமைதியான மனநிலை வேண்டும். அல்லது ஓவியம் வரைய மனம் அமைதியடையும் - இது மிகக் கடினம்.
//நான் வரைந்த ஓவியம்//
செம்ம கலக்கல்!
ஓஷோ கதை ஏற்கனவே படித்தது....மீண்டும் ரசித்தேன்!
Arumai... ungal eluthu nadai sirapaaka ullathu.
ஓவியக் கவிதை பிரமாதம்
அவர் பாடும் போது அந்த கண்ணுக்குத் தெரியாத மாய முகமும் கைகளும் களி நடனம் ஆடிக் கொண்டிருக்குமோ என்னமோ?//
அனைத்தும் அருமை
அருமை பதிவு!
"அவர்கள் குரலுக்கும் உடம்புக்கும் ஒரு Synchronization இல்லை என்றால் அவர்களால் பாட முடியாது."
Dear Samudra,உங்கள் எழுத்துக்களில் ஒரு முதிர்ச்சி தெரிகின்றது. ஒரு தனித்தன்மையும் உள்ளது. தொடரவும். உங்கள் Blog தான் என்னுடைய ரசனைக்கு தகுந்த மாதிரி உள்ளது. ரசிக்கிறேன். தொடர்ந்து அறிவியல் தொடர்பான கட்டுரைகள் நிறைய எழுதவும். பொதுவாக Technology என்ற தலைப்பில் YouTube லிருந்து எப்படி Download செய்வது என்ற ரீதியில் எழுதுவார்கள். நீங்கள் எழுதும் விஷயங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்ள சவாலான விஷயங்கள். அதை புரிந்துக்கொள்ள அந்த கட்டுரையை நான்கு முறை படிப்பதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. Hats of you Samudra. Keep it. I have vote. Is there any கள்ள வோட்டு option..?
ஓஷோ ஜோக் அருமை.
//Tongue Twisters //
தமிழ் Flat என்று யார் சொன்னது? ஆங்கிலத்தில் கடைசி எழுத்துக்களையும், அடுத்த எழுத்தையும் வைத்து உச்சரிப்பு உறுதி செய்யப்படுவதுபோல தமிழிலும் அடுத்தடுத்த எழுத்துக்கள் ஒரு எழுத்தின் சரியான உச்சரிப்பைத் தீர்மானிக்கின்றன. (அதை இப்போது யாரும் கவனிப்பதில்லை என்பது வேறு விஷயம்)
Post a Comment