கலைடாஸ்கோப்-10 உங்களை வரவேற்கிறது...
பயணங்களும் பாடங்களும்
=========================
போன தடவை ஊருக்குப் போயிருந்த போது, ரயிலில் நிறைய காமெடிக் காட்சிகள் காணக் கிடைத்தன.அது ஏன் நிறைய பேர் , 'ரிசர்வ்' செய்திருந்தாலும் முக்கால் மணி நேரம் நிற்கப்போகிற வண்டியில், வண்டி வந்து நின்றதும் அரக்கப் பறக்க லக்கேஜுகளுடன் உள்ளே முண்டியடித்து ஏறுகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் எட்டு,பத்து மணி நேரம்
பயணிக்கக் கூடிய ஒரு சீட்டையோ, 'பர்த்தையோ' விசுவாமித்திரர் கடும் தவம் இருந்து வரம் பெற்ற லெவலுக்கு தாங்கள் அடைந்ததாக பாவித்து அதில் யாராவது அப்பாவி தெரியாமல் ஏறியிருந்தால் அவரை நெற்றிக் கண் திறக்காத குறையாக குரோதப் பார்வை பார்த்து 'இது "என்" சீட்' என்று அலறுவது.
இன்னொன்று:சில பேர் இரண்டு நாள் தங்கும் படி செல்லும் பயணங்கள் என்றாலும் அதற்கு ஊர்பட்ட லக்கேஜுகளை சுமந்து கொண்டு கலர் கலராக பயணம் வெல்வது! நான் சென்ற போது அப்படி தான் ஒரு பெரிய FAMILY ரயிலில் ஏறியது. வீட்டையே காலி செய்து கொண்டு வருகிறார்களோ என்று சந்தேகப் படும் அளவு லக்கேஜுகள்.ஸ்டாப் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரேயே அவைகளை சரி பார்த்துக் கொள்ள 'எண்ணத்'(count ) தொடங்க வேண்டும் போலிருக்கிறது.பெட்டிகள் ,மஞ்சள் பைகள், கட்டைப் பைகள்,பிளாஸ்டிக் பைகள், ஹான்ட் பேக்குகள் தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் என்று பின்னால் வருபவருக்கு வழியை அடைக்கும் அளவுக்கு சுமைகள்..'ரீது அந்த போத்தீஸ் பாக்குல பழம் இருக்கு எடுத்துச் சாப்பிடு'..'அந்த பிரவுன் கலர் பேக்கை எங்கே காணோம்?' 'விகடன் இந்த பாக்குல தானே வெச்சேன் ' என்ற அலப்பறைகள் வேறு..'Why don't they keep the journey simple ?' மடியில் கனம் இல்லையேல் ...
மூன்றாவது: வீட்டில் குழந்தைகளையும் , மனைவிகளையும் நாயே பேயே என்று திட்டினாலும் சில பேர் பயணங்களில் அவர்கள் மீது ஓவர் அன்பு மழை பொழிவார்கள் .
(அதற்காக ரயிலிலும் நாயே பேயே என்று திட்டுங்கள் என்று சொல்லவில்லை) தம் குடும்பத்தின் மீதான மிகையான அன்பே சில சமயங்களில் சமூகத்தின் மீது புறக்கணிப்பாக உணரப்படுகிறது.நீங்கள் குழந்தை குட்டிகளுடன் திருவிழா போல லூட்டி அடித்துக் கொண்டு, செல்லம் கொடுத்துக் கொண்டு வரும் அதே கம்பார்ட்மெண்டில் தான் என்னைப் போன்ற குடும்பத்தை விட்டு விலகி வாழும் ஒண்டிக் கட்டைகளும் வருவார்கள்..அவர்கள் இதையெல்லாம் பார்த்து 'feel ' செய்யக் கூடும் என்று யாருமே நினைப்பதில்லை..அதே மாதிரி சில இளம் தம்பதியர்கள்.'நாங்க புதுசா கல்யாணம் ஆனவங்க,யார் கூடவும் பேச மாட்டோம், யாரையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்தது போல ஒட்டிக் கொண்டு பயணம் செய்வதும் எரிச்சலாக இருக்கிறது
பூக்காரிகளின் தரிசனங்கள்
========================
பயணம் என்றதும் ஞாபகம் வருகிறது. அதிகாலை நேரத்தின் நகர/கிராம டவுன் பேருந்துப் பயணத்தை ரசிப்பவரா நீங்கள்? அதாவது ஒரு ஆறு, ஆறரை மணி சுமாருக்கு.அலுவலகம் செல்வோரின் இறுகிப் போன முகங்கள் காணப் பெறாத, வியர்வை வாசனைகள் வீசாத, மொபைல் போன்களின் எரிச்சல் தரும் ரிங் டோன்கள் கேட்காத, நடத்துனர் முகம் சுளிக்காத ,இளம் தென்றல் வீசுகிற இனிமையான பயணங்கள் அல்லவா அவை? அந்த சமயத்தில் குறைந்தது இரண்டு பெண்களாவது பூக்கூடைகளுடன் பஸ்ஸில் ஏறுவார்கள்.கருவேப்பிலை வெளியே தெரியும் பைகளுடன் காய்கறி விற்பவர்கள் ஏறக் கூடும்.பஸ்ஸில் பெரும்பாலும் பக்திப் பாடல்/பழைய பாடல் ஒலிக்கும்.Lovely ! வாழ்க்கை இனிமையானது என்பதை அதிகாலை நேரத்தின் பயணங்கள் நினைவு படுத்துகின்றன..
புரியும் படி எழுதுங்க ப்ளீஸ்
========================
சில பேர் எழுதும் கவிதைகள் ஒரு வரி கூட புரிவதில்லை..யாருக்கும் புரியக் கூடாது என்றே எழுதுகிறார்கள் போலும்...இல்லை யாருக்கும் புரியாமல் எழுதினால் தான் உயர்ந்த தெய்வீக நிலை எய்திய கவிஞர் என்று ஒப்புப் கொள்வார்கள் என்று யாராவது புரளி கிளப்பி விட்டு விட்டார்களா என்று தெரியவில்லை..உதாரணத்திற்கு ஒன்று:
சூனியத்தில் கிளர்ந்து
முகிழ்ந்த ஓர் அன்னியம்
ஆகாயம் வரை நெகிழ்ந்து நீளுகிறது!
சொப்பனப் பிரதிமைகள்
பிம்பிக்கும்
தேவதைகளின் நீச்சல் குளத்தில்
உயிர்மை ஒப்பனையின்றி நீந்துகிறது !
(இப்பவே கண்ணக் கட்டுதே!)
அய்யா கவிஞர்களே , நீங்கள் வேண்டுமானால் 'ஜென்' நிலையை எய்தி விட்டிருக்கக் கூடும்..படிக்கும் அப்பாவிகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..
அந்நியம்
===========
உங்களுக்கு மிகப் பழக்கப்பட்ட இடங்களே உங்களுக்கு அந்நியமாகத் தோன்றுகின்ற நிலையை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்ததுண்டா? நாம் தினமும் போய் வந்த ஸ்கூல் தான் ..கல்லூரி தான்..நண்பர்களுடன் அரட்டை அடித்த அதே வகுப்பறைகள் தான்..அவையெல்லாம் தேர்வு நாளின் போது திடீரென்று வண்ணம் மாறி ஏனோ இறுக்கமாகக் காட்சி அளிக்கும்.நம் வீடே கூட சில சமயங்களில்..அக்காவைப் பெண் பார்க்க வரும் போது என்று வைத்துக் கொள்ளுங்கள்..ஒரு திடீர் அந்நியத் தன்மையுடன் தோன்றும்.சரி இப்போது ஒரு கவிதை:
வானமா பூமியா என் வாழ்கையில இருந்தவளே
வழியனுப்பி திரும்பையில வலியெடுத்து நோகுதடி
போனமாசம் வரைக்கும் பூத்திருந்த வயக்காடு-என்
பொன்னுமணி நீ போனதுமே அந்நியமாத் தெரியுதடி
பூனையும் கோழிகளும் பொடக்காலி மாடுகளும்
பொன்னாத்தா எங்கயின்னா பதிலொன்னும் தெரியலையே
போனவளே! தவிக்க விட்டு தனியாகப் போனவளே
பாவியையும் கூட்டிக்கடி புண்ணியாமாப் போகுமடி
டைம்
=====
இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும் இந்த வருடம் 'டைமே'சரியில்லை என்கிறார்கள்..2011 உண்மையிலேயே அத்தனை மோசமா என்ன?மாமா ஒருவரை ஏன் போனே பண்ணுவதில்லை என்று கேட்டதற்கு, "ஆமாம் யாராவது சந்தோஷத்திற்கு போன் செய்கிறார்களா? போன் பண்ணி 'இந்திராவுக்கு மூட்டு வலி ஆப்பரேஷன்', 'மாமனார் வழுக்கி விழுந்திட்டார்' அப்படின்னு கஷ்டத்தையே சொல்ல வேண்டியிருக்கு " என்றார்..அது என்னவோ நிஜம் தான்..என்ன தான் முற்போக்காக சிந்தித்தாலும் இந்த வருடத்தின் என் சொந்த அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது உண்மையிலேயே 2011 இல் எனக்கும் டைம் சரியில்லை போல் தான் தோன்றுகிறது.
இந்த அத்தியாயத்துடன் சமுத்ராவின் டுவிட்ஸ் ஆரம்பம் :)
சமுத்ரா'ஸ் டுவிட்ஸ்
===================
* //மார்க்கெட் போய் விட்டால் பணம் பார்க்க முடியாது என்று தான் நடிகைகள் அக்குள் வியர்வை விளம்பரங்களில் எல்லாம் நடிக்கிறார்களா?//
* //"கையில வாங்குனேன் பையில போடலை.காசு போன இடம் தெரியலை"...ஹ்ம்ம் நீங்களாவது கையிலாவது வாங்குனீங்க..இப்போ...//
*
கல்யாணத்திற்கு முன் பேச்சுலர் லைப்:
பிடித்த நேரத்தில் எழுந்திரித்து, பிடித்த நேரத்தில் சாப்பிட்டு, பிடித்த நேரத்தில் ஆபீசில் இருந்து வந்து, பிடித்த நேரத்தில் தூங்கி, பிடித்த நேரத்தில் குளித்து...
கல்யாணத்திற்கு பின் Married life :

(என்ன பாஸ் குழம்பிட்டீங்களா? இங்கே பிடித்த என்பதற்குப் பதில் 'மனைவிக்குப் பிடித்த' என்று படிக்கவும்)
என்ன கொடுமை சரவணன் இது
============================
ஆனந்த விகடன்: தமிழ் வார இதழ்களில் நம்பர் 1
குமுதம்: தமிழின் நம்பர் 1 வார இதழ்
குங்குமம்: இந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்
ஒரு ஓஷோ ஜோக்
=================
முல்லாவின் மனைவி இறந்து விட்டார்..இறுதிச் சடங்கின் போது முல்லா விக்கி விக்கி, கேவிக் கேவி ஓ வென்று அழுது கொண்டிருந்தார்....
அதைப் பார்த்து பக்கத்தில் இருந்த அவரது நண்பர் "முல்லா, உங்கள் மனைவி மீது நீங்க வைத்திருக்கும் அன்பைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.கவலைப் படாதீர்கள்..எல்லாம் சரியாகி விடும்.உங்களுக்கு சின்ன வயது தானே, ஒரு ரெண்டு மூணு வருஷம் கழித்து மீண்டும் நீங்கள் கல்யாணம் கூட செய்து கொள்ளலாம் " என்றார்...
அதற்கு முல்லா " ரெண்டு மூணு வருஷமா? நான் இன்னிக்கு ராத்திரி என்ன பண்றதுன்னு கவலைப்பட்டு அழுதுட்டு இருக்கேன்" என்றார்...
சமுத்ரா

12 comments:
//நீங்கள் குழந்தை குட்டிகளுடன் திருவிழா போல லூட்டி அடித்துக் கொண்டு, செல்லம் கொடுத்துக் கொண்டு வரும் அதே கம்பார்ட்மெண்டில் தான் என்னைப் போன்ற குடும்பத்தை விட்டு விலகி வாழும் ஒண்டிக் கட்டைகளும் வருவார்கள்..அவர்கள் இதையெல்லாம் பார்த்து 'feel ' செய்யக் கூடும் என்று யாருமே நினைப்பதில்லை..அதே மாதிரி சில இளம் தம்பதியர்கள்.'நாங்க புதுசா கல்யாணம் ஆனவங்க,யார் கூடவும் பேச மாட்டோம், யாரையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்தது போல ஒட்டிக் கொண்டு பயணம் செய்வதும் எரிச்சலாக இருக்கிறது//
but உங்க feelings எனக்கு புரியுது
கலைடாஸ்கோப் சீரீஸ் சில படிதேன். சுவாரஸ்யம். இந்த முறை நீங்கள் சொன்ன விகடன், குமுதம், குங்குமம் சமாசாரம் & கவிதை பற்றிய எழுதியது அருமை.
நிற்க 2011 சரியில்லை என்றெல்லாம் நீங்களாவே நினைக்காதீர்கள் அப்படி நினைத்தால் அப்படியே ஆகும். நினைப்பதை நன்றாக நினைப்போமே!
//நாம் தினமும் போய் வந்த ஸ்கூல் தான் ..கல்லூரி தான்..நண்பர்களுடன் அரட்டை அடித்த அதே வகுப்பறைகள் தான்..அவையெல்லாம் தேர்வு நாளின் போது திடீரென்று வண்ணம் மாறி ஏனோ இறுக்கமாகக் காட்சி அளிக்கும்.நம் வீடே கூட சில சமயங்களில்..அக்காவைப் பெண் பார்க்க வரும் போது என்று வைத்துக் கொள்ளுங்கள்..ஒரு திடீர் அந்நியத் தன்மையுடன் தோன்றும்.//
:) :)
3 MANI NERAM BUS LA PORTHUKITTU TRAVEL PANNI VARUVANGA... AANA BUS NIKKA PORA SAMAYATHULA ADICHIKITTU IRANGUVAANGA PAARUNGA.. YEMMADEEEE
SOLLI THANGAARTHU
www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.
New Classified Website Launch in India - Tamil nadu
No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com
பேச்சுலர் என்கிறீர் ஆனால், "கல்யாணத்திற்கு பின் வாழ்க்கையின் குறிப்பை எப்படி புட்டு புட்டு வைக்கின்றீர்? உங்களுக்கு நிறையவே கேள்வி ஞானம்உண்டு போலும்!
பயணங்களை அப்படியே வர்ணித்திருக்கிறீர்கள்:)
இப்படி ஒரு பார்வை இருக்கும் என்று தெரியாமல் போனது. !
க.மு க.பி வெகு சுவை. ஆவி
டாப் க்ளாஸில்ருந்து சறுக்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன. நான் இப்போது அதில் வரும் பொக்கிஷம் பக்கங்களை மட்டும் படிக்கிறேன்.
very nice and ineresting post.Thank you for sharing.
வணக்கம் நண்பரே பாராட்டுகள் உங்களின் கருத்துகள் எல்லாமே பரட்டுகளுக்குரியான . குறிப்பாக இந்த நறுக்குகள் (கவிதை )பற்றி எழுதிய்ள்ளமை உண்மையில் பரட்டுகளுக்குரியான . இவர்கள் யாருக்கு எழுதுகிறார்கள் என்பதே சிலவேளை விளங்குவதில்லை உங்களின் ஆக்கம் பரட்டுகளுக்குரியான .
மௌனமே இவ்வளவு பேசுதே .. அப்போ வார்த்தைகளில் எவ்வளவு பேசி இருப்பீங்க சமுத்ரசுகி..:)
அது சரி இந்தக் கவிதை கண்ணைக் கட்டலாம். என் கவிதை ஏன் கட்டுது..
இட்ஸ் சிம்பிள் பாஸ்..
வாய்தான் எதிரி..
அது எல்லாரையும் துண்டாடுது. குத்துது வெட்டுது.. இதுலெ ஜென் எதுவுமில்லை பாஸ்
வண்ணக் கலவை!
புரியாம எழுதறதுன்னு சொன்னா அடிக்க வராங்க.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணலியாம்..
பயண அனுபவங்கள் சுவாரசியம்..
அருமை...!
Post a Comment