இந்த வலையில் தேடவும்

Tuesday, March 29, 2011

அணு அண்டம் அறிவியல்-18

உங்கள் முன்னே ஒரே இருட்டாக இருக்கிறது. எதிரில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு பந்தை இருட்டில் எறிகிறீர்கள்..அது திரும்ப உங்களிடம் வருகிறது. அந்த பந்தின் வேகம், திரும்பி வர எடுத்துக் கொண்ட ROUND TRIP DELAY இவற்றை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு சுவர் இருக்கலாம் என்று அனுமானிக்கிறீர்கள். இது ஒரு அனுமானம் தானே தவிர அங்கே என்ன இருக்கிறது என்று நமக்கு திட்டவட்டமாகத் தெரியாது. சுவர் தான் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் அது எதனால் செய்யப்பட்டது? அது எப்படிப்பட்டது? அங்கே சுவர் தான் இருக்கிறதா இல்லை ஏதாவது பூதம் நின்று கொண்டு அது நாம் வீசிய பந்தைத் திரும்ப அடிக்கிறதா? எதுவும் தெரியாது ...

இது மாதிரி தான் இயற்பியலின் நிலைமையும். நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாத அணு மாதிரியான சமாசாரங்களை மறைமுகமாகத் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அணுவை 'காமா' துகள்கள் கொண்டு தாக்கும் போது பெரும்பாலானவை ஊடுருவிப் போய் சிலது மட்டும் 'யூ' turn அடித்துத் திரும்பி வந்தால் அணுவின் மையத்தில் மிகச் சிறிய இடத்தில் நேர் மின் சுமை கொண்ட ஏதோ ஒன்று இருக்கவேண்டும் ஒன்று ஊகிக்க வேண்டியிருக்கிறது.ஆனால் உண்மையிலேயே அணுக்கரு என்ற ஒன்று விலக்கியதால் தான் அவை திரும்பி வந்தனவா , இல்லை முதலில் சொன்னது போல ஒரு குவாண்டம் பூதம் உள்ளே அமர்ந்து கொண்டு நம்மையெல்லாம் ஏமாற்றுகிறதா என்பது தெரியாது.

உள்ளே அணுக்கரு இருக்கிறது என்ற ஒரு அனுமானம் நமக்கு Convenient ஆக இருக்கிறது. பெரும்பாலான கணக்குகளுடன் ஒத்து வருகிறது. உள்ளே பூதம் ஒன்று இருக்கிறது என்று கூட ஒரு model -ஐ நாம் முன் வைக்கலாம்..ஆனால் அது தேவையில்லாமல் நம் calculation - களை கடினமாக்கும்
ஒரு விதத்தில் பார்த்தால் இது குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்த கதை தான். யானையின் காலைப் பிடித்துப் பார்த்து விட்டு 'யானை தூண் மாதிரி இருக்கும்', காதைத் தடவிப் பார்த்து விட்டு 'யானை முறம் மாதிரி' இருக்கும் என்று குருடர்கள் சத்தியம் செய்து சொல்வதைப் போன்றது தான்..



அணுவை விடுங்கள்..நமக்கு முன் தோன்றி விரியும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சமே நமது "மாடல்" தான்.. உண்மை என்னவோ யாருக்குத் தெரியும்? பாக்டீரியா ஒன்று நம் வீட்டு சமையல் அறையின் சிந்திக் கிடக்கும் சிறிய கடுகுகளை கோள்கள் என்றும் நம் வீட்டில் எரியும் பல்புகளை தூரத்து நட்சத்திரங்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
நம் சூரியன் கூட யாருக்கோ இரவு 'பல்பாக' இருக்கலாம்..யார் கண்டது?

குதியாக உணர்ந்து கொள்ளப்பட்ட உண்மை 'பொய்க்கு'' சமம் என்கிறது உபநிஷத். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் இது வரை அறிவியல் மூலம் உணர்ந்து கொண்ட எல்லாம் பகுதியானவை தான்..அறுதியிட்ட உண்மைகளை நம்மால் விளக்க முடிந்ததில்லை..'இப்படி இருக்கலாம்' என்ற மாடல்களை மட்டுமே முன் வைக்கிறோம். அணு , அணுக்கரு, ப்ரோடான், எலக்ட்ரான், போட்டான், குவார்க் இவையெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா என்பது யாருக்கும் தெரியாது.
இந்த மாடல் நமக்கு சுலபமாக இருக்கிறது. சோதனை முடிவுகளுடன் ஒத்து வருகிறது. அவ்வளவு தான்...உள்ளே என்ன இருக்கிறது? அது எப்படிப்பட்டது என்பதை விளக்க நம்மிடம் எந்த வார்த்தைகளும் இல்லை..

ஒரு பொருள் இன்னொரு பொருளை ஈர்க்கும் 'ஈர்ப்பு' விசையை மிகச் சுலபமாக F ~ M1 M2 என்கிறோம்


இதில் ஒவ்வொரு பொருளின் உள்ளே உள்ள அணுவும் எப்படி இன்னொரு பொருளின் உள்ளே உள்ள அணுவுடன் விசையைப் பரிமாறிக் கொள்கிறது என்றெல்லாம் டூ மச்சாக கணக்கிடுவதில்லை. பொருளை 'மொத்தமான' ஒரு அலகாகவே இங்கே நாம் பார்க்கிறோம்..இது ஒரு விதமான 'பகுதி' உண்மை தான்..ஆனால் பொருளின் ஒவ்வொரு அணுவும் இன்னொன்றுடன் எப்படி ஈர்ப்பு விசையை பரிமாறிக் கொள்கிறது என்று கணக்கிட்டு பின்னர் அவற்றையெல்லாம் கூட்டி முடிப்பதற்குள் இந்த பிரபஞ்சமே அழிந்து விட்டிருக்கும்...

சாதாரண உலகில் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது.. ஒரு ஆள், 'குப்புசாமி' என்று வைத்துக் கொள்வோம்..அவர் ஆபீசில் இருந்தால் அதே சமயம் சினிமா தியேட்டரில் அவரால் இருக்க முடியாது.ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் குப்புசாமி மற்றும் கந்தசாமி ரெண்டு பேர் நிற்க முடியாது.ஆனால் இரண்டு எலக்ட்ரான்கள் எந்த சிரமமும் இன்றிஒரே இடத்தில்* இருக்க முடியும் என்கிறார்கள். (as long as their quantum states are not equal) ஒரே எலக்ட்ரான் இரண்டு இடங்களில் இருக்க முடியும் என்கிறார்கள்.
'சாமிப்' படங்களில் வருவது போல ''டுஷ்' என்று இங்கே மறைந்து மறுபடியும் 'அங்கே' டுஷ் என்று தோன்ற முடியும் அதனால்.

சாதாரண வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் 'classical physics ' இன் விதிகளை குவாண்டம் உலகில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று ஒரு கோஷ்டி சொல்கிறது .ஏனென்றால் பெரிய அளவில் (macroscopic scale ) பிரபஞ்சம் COSMOS (ஒழுங்குபடுத்தப்பட்ட) ஆகவும் சிறிய அளவுகளில் (microscopic ) அதுவே CHAOS (குழப்பம்) ஆகவும்
இருக்கிறது..COSMOS மற்றும் CHAOS (கேயாஸ்) என்பவை ஒரே குச்சியின் இரு முனைகள்..
பெரிய அளவில் இவ்வளவு சீராக இருக்கும் இந்த பிரபஞ்சம் சிறிய அளவுகளில் ஏன் தன்னை மிகவும் குழப்பம் நிறைந்ததாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் வியக்கிறார்கள்..(அல்லது மனிதனின் அறிவு மிகவும் limited !) மனிதனின் கட்புலனாகும் எல்லையைக் கடந்த பின் அது ஒரு மாய உலகம்...IT 'S A DIFFERENT DIMENSION ! ALICE IN WONDERLAND !

ஓஷோவின் 'DIMENSIONS BEYOND THE KNOWN ' என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? அதில் 'ஒருவர் இறந்த பின் அவரது ஆத்மா நகர்ந்து கொண்டிருக்குமா?' என்ற கேள்விக்கு விடையளிக்கும் போது அவர் சொல்கிறார்: அது நகர்ந்து கொண்டிருக்கும் அதே சமயம் நகராமலும் இருக்கும் (வரும் ஆனா வராது!) ஒரு சிறிய இடத்தில் ஆயிரக்கணக்கான
ஆத்மாக்கள் சிரமமின்றி இருக்க முடியும். ஏனென்றால் அவற்றுக்கான பரிமாணம் வேறு. உதாரணமாக ஒரு அறையை நாம் ஒளியால் நிரப்ப முடியும்..அதே சமயத்தில் ஒரு மெல்லிய இசையை அங்கே ஒலிக்கச் செய்ய முடியும்..ஒரு ஊதுபத்தியை ஏற்றி மணம் பரப்ப முடியும் .ஒன்றுக்கான இடத்தில் இன்னொன்று தலையிடுவதில்லை..

படத்தைப் பாருங்கள்...


ஒரு பரிமாண வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பேர் நிற்க முடியும் என்பது அசாத்தியமாகத் தோன்றுகிறது. ஆனால் இரண்டு பரிமாணத்தில் இது சாத்தியம்..

மிகச்சிறிய உலகங்களில் மூன்று பரிமாணத்திற்கு
ம் அதிகமான பரிமாணங்கள் சுருங்கி இருப்பதாகக் (wrapped ) கூறுகிறார்கள்..பத்து அல்லது பதினொன்று பரிமாணங்கள் இருக்கலாம் என்கிறார்கள்..

பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் ஒரு நாள் தீர்க்கமாக அளந்து விடமுடியும் என்று கனவு கண்டுகொண்டிருந்த விஞ்ஞானிகளின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட பெருமை வெர்னெர் ஹைசன்பெர்க் (Werner Heisenberg (5 December 1901 – 1 February 1976) என்பவருக்குப் போகிறது. பிரபஞ்சம் என்பது கடவுளின் கால்குலேட்டர் அல்ல..அது கடவுளின் 'பகடை' என்று அவர் அறிவித்தார் ...(GOD DOES PLAY DICE WITH THE UNIVERSE ) ஆமாம்...இது முன்னரே நிர்ணயிக்கப்பட்ட calculator அல்ல..கடவுளின் பகடை..சில சமயம் தாயம் விழலாம்..சில சமயம் மூன்று விழலாம்..ஆமாம் தன் 'மூடைப்' பொறுத்து ஒளி தன்னை அலையாகவோ அல்லது துகளாகவோ காட்டிக் கொள்ளலாம்..



ஒளி ஏன் இப்படி நமக்கு இப்படி இரண்டு முகம் காட்டுகிறது? அதன் உண்மையான முகம் தான் என்ன? முன்னரே இதைப் பற்றி பார்த்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்..

கண்ணே
உன் கண்களின் ஒளி தாக்கி
என்
இதயத்தில் மின்சாரம் ஒன்று
உற்பத்தியானது ...

என்று கவிர்கள் எழுதுவது அபத்தமாகத் தோன்றினாலும் கவிதைக்கு எப்போதும் பொய் அழகு அல்ல ..உண்மையும் அழகு..இது உண்மை தான் ....ஒளி மின்சாரத்தை உருவாக்கும்..இந்தக் கவிதையை உண்மையாக்கும் விதத்தில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த "ஒளி மின் விளைவு" அது..ஒளியை ஒரு உலோகத்தின் மீது பாய்ச்சும் போது அது உள்ளே ஊடுருவிச் சென்று அணுவுடன் பந்தப்பட்டுக் கிடக்கும் அதன் வெளிக்கூட்டு எலக்ட்ரான்களை விடுவித்து விமோசனம் தருகிறது. இந்த விடுபட்ட எலக்ட்ரான்களின் ஓட்டம் மின்சாரமாக உணரப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது ஒளி ஒரு 'பந்து' மாதிரி துகளாக இருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது.For example , தண்ணீரில் ஒரு வாத்து பொம்மை மிதந்து கொண்டிருப்பதாகக் கொள்வோம்..அதை ஒரு சிறிய கல்லை எடுத்து நேராக அடித்தால் அது உடனே நகர்ந்து விலகும்..அதே கல்லை தண்ணீரில் வீசினால் அந்த அதிர்வின் அலைகள் வட்ட வட்டமாக உருவாகி மெல்ல நகர்ந்து வாத்தை அடைந்து அதை கொஞ்சம் நகர்த்தும்..வாத்து கொஞ்சம் மெதுவாக மட்டுமே நகரும்..இங்கே வாத்து தான் எலக்ட்ரான்கள்...கல் தான் ஒளி..


ஒளியைப் பாய்ச்சிய அடுத்த மைக்ரோ செகண்டில் உலோகத்தில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளிவர ஆரம்பித்தன. (வலுக்குறைந்த ஒளியை பாய்ச்சினாலும்) ஒளி நாமெல்லாம் நினைப்பது போல அலையாக இருந்தால் அது மெதுவாக நகர்ந்து நகர்ந்து வாத்தை அடைந்து அதை நகர்த்த கொஞ்ச நேரம் பிடிக்க வேண்டும்..எனவே ஒளியை அடித்து கொஞ்ச நேரம் கழித்து தான் உலோகத்தில் மின்சாரம் தூண்டப்பட வேண்டும்..ஆனால் அப்படி நடக்கவில்லை..மேலும் அலை ஓய்வதற்கு கொஞ்ச நேரம் பிடிக்கும் என்பதால் வாத்து நிறைய நேரம் கழித்தும் கூட கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கும்..ஆனால் அப்படி நடக்கவில்லை...ஒரு கல்லை எடுத்து வீசியது போல எலக்ட்ரான்கள் திடுமென வெளிப்பட்டு பின் நின்று போயின..சரி இது ஒளியின் ஒரு முகம்..'துகள் முகம்' INTERFERENCE என்ற விளைவின் படி ஒளி தன் 'அலை' முகத்தைக் காட்டியது.. (இதைப் பற்றி அடுத்த பதிவில்!)

உபநிஷத் ஞான நிலையை பற்றி சொல்லும் போது அதை 'துரியா' (சதுர்தா ) என்கிறது..அந்த நிலைக்கு 'நான்கு' (??) என்று பெயர்...அது நாம் அறிந்த மூன்றைத் தாண்டி நாலாவது..அவ்வளவு தான் சொல்ல முடியும்..அதைப் பற்றி மேலும் கேட்காதீர்கள் என்கிறது..இதே போல சில
விஞ்ஞானிகள் ஒளியை 'மூன்றாவது' (திரியா) என்கிறார்கள்...போங்கடா முட்டாள்களா அது அலையும் அல்ல துகளும் அல்ல..அது மூன்றாவது! அதை விவரிக்க மனிதனின் ஏழை மொழியில் வார்த்தைகள் இல்லை என்கிறார்கள்..

சமுத்ரா


15 comments:

நெல்லி. மூர்த்தி said...

"அணுவை விடுங்கள்..நமக்கு முன் தோன்றி விரியும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சமே நமது "மாடல்" தான்.. உண்மை என்னவோ யாருக்குத் தெரியும்? பாக்டீரியா ஒன்று நம் வீட்டு சமையல் அறையின் சிந்திக் கிடக்கும் சிறிய கடுகுகளை கோள்கள் என்றும் நம் வீட்டில் எரியும் பல்புகளை தூரத்து நட்சத்திரங்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
நம் சூரியன் கூட யாருக்கோ இரவு 'பல்பாக' இருக்கலாம்..யார் கண்டது?"

சத்தியமான வார்த்தை! எனக்கு நினைவு புரிந்த மழலைப்பருவத்தில் என் ஆசிரியரிடம் வினவியிருக்கின்றேன். விடைதான் சரியாக கிடைக்கவில்லை. தங்களுடைய படைப்பும் அதற்கேற்றார் போல அமைந்திருக்கும் படமும், படிப்பதற்கான ஆர்வமும், புரிதல் உணர்வும் கிடைகின்றன.

பொன் மாலை பொழுது said...

படித்துவிட்டு வருகிறேன்.

அரபுத்தமிழன் said...

Very Interesting

Chitra said...

படங்களுடன் அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள்!

chandru said...

//ஏனென்றால் அவற்றுக்கான பரிமாணம் வேறு. உதாரணமாக ஒரு அறையை நாம் ஒளியால் நிரப்ப முடியும்..அதே சமயத்தில் ஒரு மெல்லிய இசையை அங்கே ஒலிக்கச் செய்ய முடியும்..ஒரு ஊதுபத்தியை ஏற்றி மணம் பரப்ப முடியும் .ஒன்றுக்கான இடத்தில் இன்னொன்று தலையிடுவதில்லை.// பரிமாணத்திற்கு அருமையான விளக்கம்.

ஷர்புதீன் said...

keep going man!!

Pranavam Ravikumar said...

நல்லா இருக்கு!

Aba said...

//அணுவை விடுங்கள்..நமக்கு முன் தோன்றி விரியும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சமே நமது "மாடல்" தான்.. உண்மை என்னவோ யாருக்குத் தெரியும்? பாக்டீரியா ஒன்று நம் வீட்டு சமையல் அறையின் சிந்திக் கிடக்கும் சிறிய கடுகுகளை கோள்கள் என்றும் நம் வீட்டில் எரியும் பல்புகளை தூரத்து நட்சத்திரங்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
நம் சூரியன் கூட யாருக்கோ இரவு 'பல்பாக' இருக்கலாம்..யார் கண்டது?//

Men in Black படத்திலும் இவ்வாறே வரும் (ending). எங்கள் IT sir உம் சொல்லுவார், "சிலவேளை எமது சூரியனும் சூரிய மண்டலமும் யாருக்கோ ஒரு அணுக்கருவாகவும் அணுவாகவும் இருக்கலாம்" என.

இராசகுமார் said...

") ஒளி நாமெல்லாம் நினைப்பது போல அலையாக இருந்தால் அது மெதுவாக நகர்ந்து நகர்ந்து வாத்தை அடைந்து அதை நகர்த்த கொஞ்ச நேரம் பிடிக்க வேண்டும்..எனவே ஒளியை அடித்து கொஞ்ச நேரம் கழித்து தான் உலோகத்தில் மின்சாரம் தூண்டப்பட வேண்டும்..ஆனால் அப்படி நடக்கவில்லை..மேலும் அலை ஓய்வதற்கு கொஞ்ச நேரம் பிடிக்கும் என்பதால் வாத்து நிறைய நேரம் கழித்தும் கூட கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கும்"

சமுத்ரா, எவ்வளவு எளிமையா இந்த விஷயத்தை விளக்கிட்டீங்க. அருமை

Hats off to you!

Grace Hughes said...

Visit for details Copyright (c) 2011 Jack Bosch Overconfidence Our rings will not cause skin irritations or turn your fingers green. Normal Quest Make sure that you do not skip any quests.

ரசிகன் said...

//ஒரு விதத்தில் பார்த்தால் இது குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்த கதை தான். யானையின் காலைப் பிடித்துப் பார்த்து விட்டு 'யானை தூண் மாதிரி இருக்கும்', காதைத் தடவிப் பார்த்து விட்டு 'யானை முறம் மாதிரி' இருக்கும் என்று குருடர்கள் சத்தியம் செய்து சொல்வதைப் போன்றது தான்//

உண்மைதான்..
ஆனால் சான்றுகளிற்கேற்ப விஞ்ஞானம் விதிகளை மாற்றிக்கொண்டிருப்பதால், அது சரியான திசையை நோக்கி எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கும்..

பல சிக்கலான விடயங்களை உதாரணங்களுடன் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்..

Allison said...

Visit for details Copyright (c) 2011 Jack Bosch Overconfidence Our rings will not cause skin irritations or turn your fingers green. Normal Quest Make sure that you do not skip any quests.

Unknown said...

Awesome

Unknown said...

ஆத்மானா எப்படி தமிழக முன்னாள் முதலமைச்சரின் ஆத்மாவிடம் பேசுவதாக சொல்கிறார்களே அப்படியே?

அதேபோல் ஆத்மாக்கள் அதாவது இறந்தவர்கள் உடல் மட்டும் ஆத்மாவாக செல்லுமா அல்லது நினைவுகளுமா?


ஏனெனில் ஒருவன் கோமா Stageக்கு போனாலே அவன் நினைவுகள் இழக்கபடுகிறதே
அடியிருக்க இறந்தபின் அந்த ஆத்மா மட்டும் உலா வருகிறதென்றால் கொஞ்சம் வேடிக்கையாதான் இருக்குது!



தேடலுக்கான முழு விடை கிடைக்கவில்லையெனில்
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றா?

Unknown said...

மனித கண்ணுக்கு Fanகளின் இறக்கை சுற்றும் திசை வேகத்திற்கேற்றார் போல் மாறும்


அது நமது கண்ணால் உணரகூடிய Frameகளின் பற்றாக்குறையேதவிர fan இறக்கைகள் சுற்றும் திசையில் மாற்றம் என்பதால் அல்லவே!


அது போலவே இந்த Quantum leap
ஆர்பிட்டால் போன்றவையும் நமது பற்றாக்குறையினாலே இருக்கலாம் தானே!