இந்த வலையில் தேடவும்

Tuesday, January 25, 2011

எதிர்பாராது வரும் விடுமுறைகள்!

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?

வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...

தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..

தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..

காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..

மனைவியின் சமையலை
நேரலையா
ய் கண்டு ரசிக்கலாம்..

நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...

நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...

ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...

என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,,


~முத்ரா

13 comments:

rvelkannan said...

உண்மைதான் .. ஆனால் எப்படியெல்லாம் கழிக்கலாம் என்பதற்குள் முடிந்த விடுகிறது சமுத்திர.
(பெயர் நல்லாயிருக்கு )

ரேவா said...

என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,,

உண்மைதான் .

Chitra said...

இப்படி ஒரு பதிவு போடலாம். ஹி,ஹி,ஹி,ஹி...

கோநா said...

எதிர்பாரத விடுமுறைகள் எப்போதும் இன்பமானதுதான் samudra.

மனோ சாமிநாதன் said...

நல்ல பதிவு!
"என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,"
அழ‌கான‌ அர்த்த‌முள்ள‌ வ‌ரிக‌ள்!!

Philosophy Prabhakaran said...

அருமையான கவிதை... வரிக்கு வரி கலக்கி இருக்கீங்க...

சித்ராக்கா பின்னூட்டம் அதைவிட கலக்கல்...

Kurinji said...

மிகவும் அருமை!
குறிஞ்சி குடில்

arasan said...

ம்ம்ம் நல்ல பதிவு ..
எதிர் பாரா விடுமறை மகிழ்வு கொஞ்சம் அதிகம் தாங்க

சிவகுமாரன் said...

என்னைப் போன்று ஷிப்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ( அதிலும் management cadre இல் இருப்பவர்களுக்கு ) வழக்கமான் விடுமுறை கூட கிடைப்பதில்லை நண்பரே. இன்று எல்லோருக்கும் விடுமுறை. நான் ஆலையில் ஆணி புடுங்கிக் கொண்டிருக்கிறேன்.
எதிர்பாரா விடுமுறைகள் படிக்கும் போதொடு சரி.
கவிதை நன்றாக உள்ளது.

Anonymous said...

நிஜ வாழ்க்கையில், நடப்பவை எல்லாம் மனைவியின் பதில் களாக!

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?

வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...
அன்பு மனைவி - ஏங்க, இன்னிக்கி லீவு தான, கொஞ்சம் குழந்தை யா பார்த்து கிட்டு தூங்க வைச்சிடுங்களேன்

தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..
- சும்மாவே இருக்க மாட்டீங்களா? நேத்து தான் தண்ணி ஊத்துனேன், இதுல மழை வேற பெஞ்சது.
உதவி பண்ணலனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாம் ல?

தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..
அன்பு மனைவி- எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க? சீரியல் எ வர்ற பொண்ண கூட சைட் அடிக்கனுமா?

காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..
அன்பு மனைவி- ஒரே நியூஸ் பேப்பர எத்தன தடவ படிப்பீங்க? இந்த பழைய பேப்பர் எல்லாம் அடிக்கி வைச்சீங்கன்ன, போட்டு எவர் சில்வர் பாத்திரமாவது வாங்கலாம்.

மனைவியின் சமையலை
நேரலையாய் கண்டு ரசிக்கலாம்..
அன்பு மனைவி - வந்து கிச்சன் ல வேடிக்கை பாக்குறத விட, இந்த தேங்காய் கொஞ்சம் உடைச்சி குடுங்க.

நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...
அன்பு மனைவி - இன்னிக்கி ஒரு நாள் எதோ லீவு. இன்னிக்காச்சும் போன் ஆப் பண்ணி வைங்க. எப்ப பார்த்தாலும் பேச வேண்டியது. அப்படி என்னத்த தான் வேல பாப்பங்களோ?

நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...
அன்பு மனைவி - என்னங்க, அது பக்கத்துக்கு வீடு. நம்ம வீட்ட விட்டுட்டு வேற எல்லாத்துலயும் ஒட்டடை அடிங்க...கடவுளே.. (தலையில் அடித்து கொள்கிறார்)

ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...
அன்பு மனைவி- அதான், உங்களுக்கு வராதுல்ல...அப்புறம் என்ன இன்னும் சின்ன பையன் மாதிரி..மானம் போகுது. ப்ளீஸ் வீடுக்குள்ள வாங்க.

என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,,

அன்பு மனைவி- அதெப்படி அழகா இல்லாம போகும் னு கேக்குறேன். வேல வெட்டி எதுவும் இல்லாம, நாள் பூரா சாப்டுட்டு தூங்கிட்டு இருந்தா, இப்படி லாம் கவிதை வேற வரும். எல்லாம் எங்க அப்பா வ சொல்லணும். இப்படி ஒருத்தர எங்க தான் தேடி பிடிச்சி.....ம்ம்ம்ம்
--------- அன்பு மனைவி

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

யாருங்க அது Anonymous? கொஞ்சம் அந்த மொத்து வாங்குன மூஞ்சிய காட்டுறது

நம்பிக்கைபாண்டியன் said...

உங்கள் கவிதைகளில் சிறந்தவற்றில் ஒன்று இது.