இந்த வலையில் தேடவும்

Sunday, January 23, 2011

இந்தக் கவிதைக்கு இரண்டு முடிவுகள்!

அறிவியலை எழுதினேன்
சுஜாதாவின் நடை போல் இருக்கிறது என்றார்கள்..

ஆன்மீகத்தை எழுதினேன்
பாலகுமாரன் சாயல் தெரிகிறது என்றார்கள்..

சமூகத்தைப் பற்றி சாடி எழுதினேன்
ஞானியின் வாடை வீசுகிறது என்றார்கள்..

மர்மக் கதை ஒன்று எழுதத் துணிந்தேன்..
இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியது என்றார்கள்..

துப்பறியும் கதை ஒன்றை தொடங்கத் துணிந்தேன்
ராஜேஷ் குமாரின் காப்பி என்றார்கள்..

சரித்திரக் கதை ஒன்று சொல்லலாம் என்றால்
சாண்டில்யனின் சாயல் என்றார்கள்..

(இந்தக் கவிதைக்கு இரண்டு முடிவுகள்..எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்)

1 .

பிறகு

யாருக்கும் புரியாதபடி ஏதேதோ கிறுக்க ஆரம்பித்தேன்
ஆகா
"என்ன தனித்துவமான நடை!" என்றார்கள்...

2.

ஒப்புக் கொள்கிறேன்,

எனக்கே உரியதாய்
நான் மட்டும் சொந்தம் கொண்டாடுவதாய்
என் தனித்துவத்தின் அடையாளமாய்
என்-
மௌனம் மட்டுமே இருக்கிறது..
அதை
எப்படி
எழுத்தில் வடிப்பது என்று
யாரேனும் கூறுங்கள்....


முத்ரா

12 comments:

ஆனந்தி.. said...

choice 1 is nice...different view and differnt poem...nice..

ரேவா said...
This comment has been removed by the author.
ஜீ... said...

//எனக்கே உரியதாய்
நான் மட்டும் சொந்தம் கொண்டாடுவதாய்
என் தனித்துவத்தின் அடையாளமாய்
என்-
மௌனம் மட்டுமே இருக்கிறது..
அதை
எப்படி
எழுத்தில் வடிப்பது என்று
யாரேனும் கூறுங்கள்...//

இது மட்டுமே தனியாக ஒரு சூப்பர் கவிதை பாஸ்!

அரசன் said...

ம்ம்ம் ... நீங்கள் சொல்வது சரிதான் ,,,
இரண்டு முடிவுகளும் எடுத்துகொள்ள வேண்டியவைகளாக இருக்கின்றன நண்பரே

ரேவா said...

எனக்கே உரியதாய்
நான் மட்டும் சொந்தம் கொண்டாடுவதாய்
என் தனித்துவத்தின் அடையாளமாய்
என்-
மௌனம் மட்டுமே இருக்கிறது..
அதை
எப்படி
எழுத்தில் வடிப்பது என்று
யாரேனும் கூறுங்கள்...

நான் ரசித்த வரிகள் இது... வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி said...

இரண்டு பின்னூட்டங்கள்.

1.அடுத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பாத்து எழுதாதீங்க.உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் சீக்கிரமே செட் ஆயிடும்.

2.போகப் போக எழுத்தின் மௌனம் வார்த்தைகளில் வெளிப்படத்துவங்கும்.இது எழுத எழுதப் பிடிபடும்.

கனாக்காதலன் said...

இரண்டாவது முடிவு அமர்க்களம்.

கோநா said...

nice samudra.

பா.ராஜாராம் said...

yaa..

sundharji!

ஆமினா said...

சூப்பர்ங்க

நெல்லி. மூர்த்தி said...

முதல் முடிவு.. ஆர்ப்பாட்டம்! இரண்டாம் முடிவு... அனுபவ்ம்!! (மன முதிர்ச்சி/பக்குவம்).

வே.சுப்ரமணியன். said...

வேப்பமரம் என்பது வேப்பமரம்தான்! புளியமரம் என்பது புளியமரம்தான்! இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றாக தோன்றினாலும், அதனின் தன்மை வெவ்வேறானது.