இந்த வலையில் தேடவும்

Saturday, January 15, 2011

நான் ஓர் ஊடகம்!


என்னை
அறிஞன் என்று
புகழாதீர்கள்
பின்னர் நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையிலும் -அதை
நான் நிரூபிக்க வேண்டும்..

என்னை
அழகன் என்று
சொல்லாதீர்கள் -
நான் பார்க்கும்
ஒவ்வொரு பார்வையிலும் அதை
நிரூபிக்க வேண்டும்...

என்னை நல்ல
ஓவியன் என்று
வர்ணிக்காதீர்கள்!
என் தூரிகையின்
ஒவ்வொரு அசைவிலும் அதை நான்
மெய்ப்பிக்க வேண்டும்!

என்னை நல்ல
இசைக் கலைஞன் என்று
இயம்பாதீர்கள்!
நான் பாடும்
ஒவ்வொரு சுரத்திலும்
அதை நான் நிரூபிக்க வேண்டும்..

என்னை சிறந்த
கவி
ஞன் என்று
கருத்துரைக்காதீர்கள்!
நான் எழுதும் ஒவ்வொரு
வார்த்தையிலும் அதை
மெய்ப்பிக்க வேண்டும்!

என்னை சிறந்த
காதலன் என்று
கூறி விடாதீர்கள்
பின்னர் என்
ஒவ்வொரு செயலிலும் அதை
நான்
உண்மையாக்க வேண்டும்..

சிறந்த பக்தன் என்று
என்னை
செப்பி விடாதீர்கள்
என்
செயல்கள் ஒவ்வொன்றும் பின்
தெய்வீகமாக இருக்க வேண்டும்..

என்னை தயவு செய்து
நானாக இருக்க
விடுங்கள்!
எப்போதேனும்
அசாதாரணமாக
என்னிடம்
ஏதேனும் வெளிப்பட்டால்
அது-
இறைவனிடம் இருந்து எழுந்தது
என்றும்
நான் வெறும்
ஊடகம் என்றும்
உணர்ந்து கொள்ளுங்கள்...


சமுத்ரா

4 comments:

தினேஷ்குமார் said...

ரசித்த வரிகள் அனைத்தும்...
உயிர் தாங்கும் ஊடகமே பொய்யான நாடகம்தான்

ரேவா said...

என்னை தயவு செய்து
நானாக இருக்க
விடுங்கள்!
எப்போதேனும்
அசாதாரணமாக
என்னிடம்
ஏதேனும் வெளிப்பட்டால்
அது-
இறைவனிடம் இருந்து எழுந்தது
என்றும்
நான் வெறும்
ஊடகம் என்றும்
உணர்ந்து கொள்ளுங்கள்...

நான் அதிகம் ரசித்த வரிகள்.... வாழ்த்துக்கள் நண்பரே!!!

சிவகுமாரன் said...

என்னிடம்
ஏதேனும் வெளிப்பட்டால்
அது-
இறைவனிடம் இருந்து எழுந்தது
என்றும்
நான் வெறும்
ஊடகம் என்றும்
உணர்ந்து கொள்ளுங்கள்...

-- Good escapism

Samudra said...

சிவகுமாரன்,
Escapism என்பதை உயர்ந்த விஷயங்களுக்கு உபயோகிக்க மாட்டார்கள்..ஒரு நல்ல கவிதையை எழுதினால் அதை நான் தான் எழுதினேன் என்பார்கள்..
ஒருவரை கண்ட படி திட்டி விட்டு எனக்குள் இருந்த கடவுள் தான் திட்டினார் என்று சொன்னால் அது தான் Escapism ..
கவிஞரான நீங்கள் இதை யோசிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது