இந்த வலையில் தேடவும்

Monday, January 3, 2011

பசியும் பிணியும்...


ஆஸ்பத்திரி ஒன்றின்
பின்புறத்தில் குவிந்து கிடக்கும்
சிரிஞ்சுகளைப் போல
குவிந்து பெருகிக் கிடக்கின்றன
மனிதர்கள்
உண்டு வீசிய காகிதத் தட்டுகள்..
பசிப்பிணி என்று
அழைப்பது
பொருத்தம் தான் போலும்!

@@@@


நோய்களோடு தொடர்பு படுத்தப்பட்டிருந்தாலும்
ஆஸ்பத்திரிகளுக்கு ஏதோ ஒரு வித அழகு இருக்கிறது..
அது-
நன்றாக தலை சீவி,
சிரித்த முகத்துடன்
தங்கள் உறவுகளுக்கு
சாப்பாடு எடுத்துச் செல்லும்
பெண்களால் கூட வந்திருக்கலாம்


@@@@@

பசிப்பிணி மருத்துவன் இல்லம்
பக்கத்தில்லா தூரத்திலா என்று
பழங்காலப் புலவன் ஒருவன் பாட்டெழுதினானாம்
இப்போதெல்லாம்
புதுவீடு வாங்கும் போது
மருத்துவன் இல்லம் பக்கத்திலா
என்று கேட்கிறார்கள்...

@@@@@

கர்ப்பிணிகளைப் பார்த்தால்
பொறாமையாக இருக்கிறது
ஆஸ்பத்திரிக்கு
வந்தும்
நோயாளி என்ற பட்டம் இல்லாமல்
அம்மா என்ற அடைமொழியுடன் செல்கிறார்கள்

@@@@@

கல்யாணத்தின் போது
பாணிக்கிரகணம் செய்து
உன் கையை விடமாட்டேன்
என்று சத்தியம் செய்த கணவன்
ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறான்
அருகில்
குளுக்கோஸ் ஏற்றிய ஊசி
அசையாமல் இருக்க
அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு
அவன் மனைவி!


சமுத்ரா

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பசிப்பிணி குறித்த சிந்தனை அருமை..

மிகவும் ரசித்தேன்!

arasan said...

அசத்தலான சிந்தனைகள் நண்பரே ...
தொடரட்டும் உங்கள் பயணம் ...

Unknown said...

கர்ப்பிணிகளைப் பார்த்தால்
பொறாமையாக இருக்கிறது
ஆஸ்பத்திரிக்கு
வந்தும்
நோயாளி என்ற பட்டம் இல்லாமல்
அம்மா என்ற அடைமொழியுடன் செல்கிறார்கள்//

அருமை நண்பா

ரேவா said...

கர்ப்பிணிகளைப் பார்த்தால்
பொறாமையாக இருக்கிறது
ஆஸ்பத்திரிக்கு
வந்தும்
நோயாளி என்ற பட்டம் இல்லாமல்
அம்மா என்ற அடைமொழியுடன் செல்கிறார்கள்

அழகான கவிதை... இன்று தான் உங்கள் வலைத்தளம் பற்றி நண்பர் பால் அவர்கள் தளம் மூலம் அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி

Unknown said...

சூப்பர்! அதிலும் கர்ப்பிணிகள் பற்றியது அருமை!