இந்த வலையில் தேடவும்

Wednesday, January 19, 2011

கலைடாஸ்கோப்-3

லைடாஸ்கோப்-3 உங்களை வரவேற்கிறது

பின்புலத்தோர்
=============

எல்லாத் துறைகளிலும் BACKGROUND ARTISTS எனப்படும் பின்னாலிருந்து வேலை செய்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்..உண்மையாகச் சொன்னால் அவர்களால் தான் முக்கால்வாசி வேலைகள் நடக்கின்றன. உதாரணமாக சினிமாவில் ஹீரோவின் வேலை கேமரா முன்னர் நின்று வசனம் பேசுவது, ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்வது போன்றவை தான்..ஆனால் ஹீரோவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நாம் அந்தப் படத்தை உண்மையில் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் ஒளிப்பதிவாளர்களை, எடிட்டர்களை, தொழில்நுட்பக் கலைஞர் களை மறந்து விடுகிறோம். ஹோட்டலுக்கு சென்று வயிறு முட்ட சாப்பிடுகிறோமே தவிர வெப்பத்திலும் வியர்வையிலும் நனைந்து அதை நமக்காக சமைத்தவர்களை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. காசு கொடுக்கிறோம் என்பது வேறு விஷயம். நாம் சுகமாக அனுபவிக்கும் விஷயங்களின் பின்னே எத்தனை பேரின் கடின உழைப்பு மறைந்திருக்கிறது என்பது ஏனோ நமக்குத் தெரிவதில்லை.."There is a plenty of LABOR BEHIND EVERY LUXURY " என்பார்கள்..உதாரணமாக இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்து ஒரு பாடலை கேட்டு ரசிக்கிறோம்..அதன் பின்னே எடிசனில் இருந்து தொடங்கி அதை நமக்காக அப்லோட் செய்தவர் வரைக்கும் நிறைய பேரின் உழைப்பு அடங்கியிருக்கிறது. டிரைனில் ரிசர்வ் செய்து கொண்டு .சி. வகுப்பில் ஹாயாக பயணிக்கிறோம்..இரவு பஸ்சுகளில் தூங்கிக் கொண்டே செல்கிறோம்..நமக்காக தூக்கம் துறந்து வாகனத்தை செலுத்தும் டிரைவர்களை ஒரு தரம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை.கீழே இறங்கும் போது எத்தனை பேர் நம்மை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்த டிரைவரைப் பார்த்து 'நன்றி' என்று சொல்கிறோம்? சேவை நன்றாக இல்லை என்றால் வசை பாடுவதற்கு தயாராக இருக்கும் நாம் நன்றாக இருந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லக் கூடத் தயங்குகிறோம்..இனி மேல் வாழ்வில் சுகங்களைத் துய்க்கும் போது அந்த LUXURY யின் பின்னே உள்ள LABOR களை நினைத்துக் கொள்ளவாவது செய்வோம்..

ஒரு அட்வைஸ்
==============

சில பேருக்கு பஸ்ஸில் கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்கும் வரை பஸ்ஸில் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற நினைப்பே வருவதில்லை. பக்கத்தில் வந்து கேட்டதும் தான் அவசர அவசரமாக பேண்டில் இருந்து பர்சை எடுத்து அதில் எத்தனை ஆயிரம், ஐநூறு மற்றும் நூறு ரூபாய் நோட்டுகள் உள்ளன என்று எல்லாருக்கும் தரிசனம் காண்பிக்கிறார்கள். முன்பே எடுத்து வைத்து ஒரு பத்து ரூபாய், சில சில்லரைகளை பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் என்ன? அப்புறம் வெளியே எங்காவது கிளம்பினால் நிறைய சில்லரைகளை பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டு கிளம்புங்கள். எல்லா கண்டக்டர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். இரண்டு ரூபாய் 'change ' இல்லாததால் இறக்கிவிடப்பட்ட அனுபவங்கள் எனக்கு உண்டு.

கொஞ்சம் கோபம்
===============

இந்த இன்சுரன்ஸ் கம்பெனிகளின் தொல்லை தாங்க முடிவதில்லை. விளம்பரங்களில் 'நீ இன்னும் இன்சுரன்ஸ் செய்யவில்லையா? நீ எல்லாம் மனிதப் பிறவியே இல்லை ; என்ன மூணு லட்சத்திற்கு தான் இன்சுரன்ஸ் செஞ்சுருக்கீங்களா? உங்க மதிப்பு அவ்வளவு தானா?;இன்சுரன்ஸ் செய்யா விட்டால் உங்களுக்கு முக்தியே இல்லை" என்றெல்லாம் அபத்தமாக கத்திக் கொண்டு இருக்கிறார்கள்.."நான் எவ்வளவு இன்சுரன்ஸ் செய்திருந்தா உனக்கு என்ன? நீயா பிரிமியம் கட்டுற?" என்று கேட்கத் தோன்றுகிறது. மேலும் காசிக்கு சென்றும், காடுகளில் அலைந்தும், அந்த யோகம் இந்த யோகம் என்று செய்தும் முக்தியடைய மெனக்கெட வேண்டாம் என்று தோன்றுகிறது. சிம்பிளாக ஒரு இன்சுரன்ஸ் பண்ணி விட்டால் போதும்...

Reference
==========

உங்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் இந்த தளத்திருக்கு செல்லுங்கள்.பாடங்கள் மிக எளிமையாக உள்ளன. மேலும் சமஸ்கிருதம் பற்றிய சுவையான பல தகவல்கள் உள்ளன.மேலும் 'திண்ணை' தமிழ் இணைய இதழிலும் சமஸ்கிருதம் சொல்லித் தருகிறார்கள். ஆரியர்கள் என்றாலே துவேஷம் காட்டிய தமிழ்நாட்டில் இன்று சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவது சந்தோஷமாக இருக்கிறது

ஒரு சந்தேகம்
=============

BLOG என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? வலைப்பூ , வலைச்சரம், வலைமனை, வலைத்தளம் , வலையகம், வலையுலகம் ,வலைக்குடில் என்றெல்லாம் தங்கள் தங்கள் கற்பனைத்திறனுக்கு ஏற்றபடி பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் கஷ்டப்படுவதற்கு 'ப்ளாக்' என்றே மூன்றே எழுத்துகளில் சொல்லிவிடலாம் போலிருக்கிறது.

கொஞ்சம் ஆன்மிகம்
=================

ராமகிருஷ்ணர் சொல்வது :

கிராமத்தில் இருந்து ஏழை ஒருவன் தலைநகருக்கு ராஜாவைப் பார்க்க வருகிறான். அவன் இதற்கு முன்னர் நகரத்தையோ நகரத்து மக்களையோ அரண்மனைகளையோ பார்த்ததே இல்லை. முதலில் அரண்மனை வாசலில் நின்றிருக்கும் காவலாளியைப் பார்த்தான். அவன் கம்பீரமாக வாள்தாங்கி நின்றிருப்பதைப் பார்த்து "அரசே, வணக்கம்" என்றான் ..அதற்கு அவன் "நான் ராஜா இல்லை..இன்னும் உள்ளே போ" என்கிறான்..கிராமத்து மனிதன் கொஞ்சம் உள்ளே சென்றதும் படைத்தளபதி தென்படுகிறான்.. அலங்காரங்களுடன் இருந்த அவனைப் பார்த்து "நீங்கள் தான் ராஜாவா?"என்கிறான்..தளபதி "இல்லை, இன்னும் உள்ளே போ" என்று சொல்லவே மேலும் உள்ளே செல்கிறான்..வழியில் தென்பட்ட மந்திரி மற்றும் இளவரசனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கவே அவர்களும் 'இல்லை' என்கிறார்கள்..கடைசியில் அரசன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு வந்து ராஜாவைப் பார்கிறான். அவன் சிம்மாசனம், அவன் அமர்ந்திருக்கும் கம்பீரம், அவன் முகத்தில் தெரியும் ராஜகளை இவற்றைப் பார்த்து எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அவனை "அரசே" என்று விழுந்து சேவிக்கிறான்..

இதே மாதிரி சாதகத்தில் இருக்கும் ஒரு பக்தன் தன் பாதையில் பொய்யான தியான அனுபவங்களால் ஏமாற்றப்படுகிறான். உடல் மறந்த உணர்வு ஏற்பட்டாலோ ,தியானத்தில் ஒளி தெரிந்தாலோ , தெய்வீகக் காட்சி தோன்றினாலோ இது தான் இறுதி இறைநிலை என்று தவறாக நினைக்கிறான்..ஆனால் அந்த ஒப்பற்ற உண்மையான தெய்வீக அனுபவத்தை சந்திக்கும் போது அவனது சந்தேகங்களும் குழப்பங்களும் தானாகவே மறைகின்றன..சமாதி அனுபவத்தின் தன்மை அப்படிப்பட்டது..

ஒரு ஓஷோ ஜோக்--ரிலாக்ஸ்
========================

வெள்ளை மாளிகையில் ஒரு தொழிலாளி தரையைத் துடைத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே மாட்டப்பட்டிருந்த வாஷிங்க்டனின் போட்டோவை தற்செயலாகப் பார்த்த போது அதன் உதடுகள் அசைவதை கவனித்தான்..பயத்துடன் அருகில் சென்று பார்த்த போது அது "மகனே, பயப்படாதே, நான் மீண்டும் வந்து அமெரிக்காவை ஆளப் போகிறேன்..ஆனால் அதற்கு எனக்கு ஒரு குதிரை வேண்டும்..போய் கொண்டு வர முடியுமா? "என்றது..அவன் பயத்துடன் திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்து ஜார்ஜ் புஷ்சிடம் "சார், போடோ பேசுது, போடோ பேசுது " என்றான்..."போட்டோவாவது பேசறதாவது? நான் வந்து பார்க்கறேன், காட்டு" என்று அவனை அழைத்துக் கொண்டு ஜார்ஜ் புஷ் போட்டோவின் முன் வந்து நின்றார் ..அதற்கு அந்த போட்டோ "ஏம்பா, குதிரையைக் கொண்டு வரச் சொன்னா ஒரு பன்னியை கூட்டிட்டு வந்திருக்கியே" என்றது..

ஓஷோ quote
=============

சொர்க்கம் என்பது வேறு ஒன்றும் இல்லை..நம்பிக்கை(trust) ,அன்பு,பிரார்தனை, ஆனந்தம்,கொண்டாட்டம் (celebration ) இவையெல்லாம் தான்...

ரவி உதயனின் ஒரு கவிதை
======================
(பாராட்டுவதாக இருந்தால்
raviuthayan@gmail.com என்ற முகவரியில் ராட்டிக் கொள்ளவும்)

பிறந்த குழந்தையை உங்கள் கரங்களிட்டால்
மரத்துப்போன கரங்களை உடனே நீட்டிவிடாதீர்கள்.
மேகம் நிலவை மிதக்க வைப்பது போல்
மிக மெதுவாக எந்திகொள்ளுங்கள்.
விழி மூடியிருந்தால் எழுப்ப எத்தனிக்காதீர்கள்
அது இன்னும் கண்திறக்காத கடவுள்.
மருத்துவ விடுதி இரைச்சலையும் தாண்டி
மென்ஒலிகளால் உங்களுடன்பேச ஆரம்பித்தால்
பதிலுக்கு பேச முயற்ச்சிக்காதீர்கள்.
வாழ்க்கைப் புதிரின் மர்ம முடிச்சுகளை
அவிழ்க்கும் அதன் தேவபாஷையை
புரிந்து கொள்ள முயலுங்கள்.
அதுஅசைகிற கை,கால்களில்
அரூப சிறகுகளிருப்பதை அறிந்து தொடுங்கள்.
சட்டென அவசரத்தில் அதன் கன்னங்களில்
உங்களது உலர்ந்த உதடுகளால் முத்தமிட்டுவிடாதீர்கள்.
அது பூத்துத் தருகிற அபூர்வ சிரிப்பிற்காகக் காத்திருங்கள்.
நீங்கள் அமுத சுரபியை
கைகளில் வைத்திருக்க மட்டுமேஅனுமதிக்கப்பட்ட
அன்றாடங்காய்ச்சி என்பதை மறந்து விடாதீர்கள்


நீங்கள் கமெண்டு சொன்னால் எனக்கு உற்சாகமாக இருக்கும் ப்ளீஸ்..

~சமுத்ரா

10 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமையான கதம்ப பதிவ.. அருமை..
நம்ப கடை பக்கம் வரவதுன்டா?

Chitra said...

Blog is Web log. :-)


தமிழாக்கம் செய்ய வேண்டியதுதான்.

இந்த பதிவு - நல்ல தொகுப்பு.

THOPPITHOPPI said...

ஒரே பதிவில் இவ்வளவு தகவள்களா?

Anonymous said...

பசங்க படத்துல வர்ற அன்பு மாதிரி பாராட்ட கேட்டு வாங்குறிங்க. கேட்டாலும், கேக்காமபோனாலும் பாராட்டுக்கள்.

சமுத்ரா said...

பாராட்டை யார் கேட்டார்கள்? கமெண்டை தான் கேட்டேன்..

Anonymous said...

sorry mistaken.

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துக்கள், நல்ல தகவல்கள், தெளிவான, எழுத்துப் பிழையற்ற நடை. குறிப்பாக சம்ஸ்கிருத பாடங்கள் பற்றிய குறிப்பு நான் பாதியில் விட்ட பயிற்சியைத் தொடர உதவும்.

நன்றி, சமுத்ரா.

Aba said...
This comment has been removed by the author.
Aba said...

//BLOG என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன//

தமிழில் ஒரு சொல்லுக்கு பல ஒத்தகருத்து சொற்கள் இருந்தாலும், ஒரு சொல், ஒரு பொருளை, ஒரு குறிப்பிட்ட அளவில்தான் குறிக்கும் என்பார்கள். அவ்வாறே,

வலைப்பூ - Blog
வலைச்சரம் - small blogging community
வலைமனை - தெரியாது
வலைத்தளம் - A professional blog
வலையகம் - A blogging community
வலையுலகம் - The community of all worldwide bloggers and blogs
வலைக்குடில் - A blogging community

என நினைக்கிறேன்..

Aba said...

//ராமகிருஷ்ணர் சொல்வது//

அப்போ இதைத்தான் நாகேஷ் காப்பியடித்தாரா?

//ஓஷோ ஜோக்//

ஓஷோ காலத்தில் புஷ் அதிபரா??