இந்த வலையில் தேடவும்

Sunday, November 16, 2014

Interstellar -I



As an அறிவியல் ஆர்வலர், இன்னும் I S விமர்சனம் எழுதவில்லையே என்று நண்பர் ஒருவர் கேட்டார். எழுதிடுவோம், அதற்கென்ன? :) ஆனால் இது விமர்சனம் அல்ல; விளக்கம் :))(1)விண்வெளிப் பயணம், மற்றும் (2)extra dimensions என்று இரண்டு விஷயங்கள் இதில் இருப்பதால் இரண்டு பதிவுகளாகப் பார்க்கலாம்.

முதலில், Interstellar என்பது ஒரு misnomer :) Intergalactic என்பதே சரி. படத்தில் கூப்பர் என்ற கதாநாயகன் வேறு ஒரு காலக்ஸிக்கு செல்வதால் அது inter-galactic travel ஆகும்! சரி, பெயரில் என்ன இருக்கிறது, அதை விடுவோம்.

இன்னொரு விஷயம் இந்த black-hole, wormhole, 5th dimension இந்த concept எல்லாம் இயற்பியலில் கிட்டத்தட்ட  நூறு ஆண்டுகள் பழமையானவை. 12 ஆம் வகுப்பு இயற்பியலில் கூட blackhole எல்லாம் வருகிறது என்று நினைக்கிறேன். Interstellar பார்த்து விட்டு , நிறைய பேர் இந்த விஷயங்களை  முதன்முதலில் கேட்பது போல் பரவசமடைகிறார்கள். ஏதோ அந்த concept களை நோலனே கண்டுபிடித்தது போல! NO ! physics ஐ சுவாரஸ்யமாக மாற்றக் கூட ஒரு திரைப்படம் வரவேண்டி இருக்கிறது.

விண்கலத்தின் மெயின் Operating system , மனிதனைப் போல பேசுவது, ஜோக் அடிப்பது, humor setting , trust setting இவற்றைக்  கூட சுஜாதா தன் விஞ்ஞானச் சிறுகதை ஒன்றில் ஏற்கனவே எழுதி இருக்கிறார். பூமியில் இருந்து வரும் தகவல்களை வேண்டுமென்றே அது fake செய்வதாக ஹீரோ நம்புகிறான். அவனுடன் பயணிக்கும் பெண், 'அது வெறும் ரோபோட் அதற்கு ஏமாற்றத் தெரியாது' என்கிறாள். நாம் இருவரும் சேர்ந்து பாஸ்வேர்ட் கொடுத்து இயந்திரத்தை முடக்கி விட்டு manual pilot மோடுக்குப் போய் விடலாம் என்கிறான் ஹீரோ. கடைசியில் என்ன ஆகிறது என்பது கதை.

இப்படித்  தெரிந்த விஷயங்களைக் கூட இங்க்லீஷ்காரன் படம் எடுத்துக் காட்டும் போது தான் நாம் வியக்கிறோம். :( பிற்காலத்தில் அறிவியலை திரைப்படங்கள் வாயிலாக கற்பிக்கும் நிலை கூட வரலாம் போலிருக்கிறது .

Well , பூமிக்கு ஆபத்து என்று வேறொரு புதிய பூமியை நாடுவது பழமையான ஒரு science fiction concept ..அதை நேர்த்தியாக, creative ஆக கற்பனை வளத்துடன் திரைப்படம் ஆக்கியிருப்பது பாராட்டுக்குரியது. Quickr இல் விளம்பரம் பார்த்து  packers and movers ஐக் கூப்பிட்டு வீடு மாற்றி விடுவது போல் அல்ல வேறொரு கிரகத்தில் குடியேறுவது.கொஞ்சம் சிக்கலான விஷயம்.முதலில் கிட்டத்தட்ட பூமியைப் போல் உள்ள கிரகம் ஒன்றைக் கண்டறிய வேண்டும். கடல்மணலில் கடுகைத் தேடுவது போல இது. தொலைநோக்கியில் விண்மீன்களை ஆராய்ந்து அதன் பிரகாசத்தில் periodic மங்கல் ஏற்படுவதை வைத்து கோள்களைக் கண்டறிகிறார்கள். கோள் கிரகத்தை சுற்றி வருகிறது என்று அர்த்தம். விண்மீனின் ஒளியை spectrometer இல் வைத்து அதில் என்னென்ன தனிமங்களுக்கு உரிய அலைநீளங்கள் இல்லாமல் இருக்கின்றன என்று கண்டறிந்து விண்மீனில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்று கண்டறிகிறார்கள். கோள் என்பது ஒருவிதத்தில் அதன் தாய் விண்மீனின் சாம்பல் என்பதால் கோளிலும் எந்த மூலங்கள் (ஆக்ஸிஜன் ,கார்பன் etc ) இருக்கலாம் என்று தோராயமாகத் தீர்மானிக்கிறார்கள்.

இன்னொரு சிக்கல் மனித இனம் பூமியின் சூழ்நிலைக்கு ஏற்ப evolve ஆகியுள்ளது. பூமியைப் பிரிந்தால் தலைவனைப் பிரிந்த அகநானூற்று தலைவி போல் பசலை வந்து விடும்!மனித இனம் ரொம்பவே sensitive , நம்மால் அம்மோனியாவை சுவாசிக்க இயலாது. ஓசோன் படலம் இல்லாமல் தோல் வெந்து போகும். அதிக பிரகாசத்தை கண்கள் தாங்காது;  கோளின் மிகக் குறைந்த ஈர்ப்பு அதன் வளிமண்டலத்தை நழுவ விட்டுவிடும்.ஆக்சிஜன் கொஞ்சம் குறைந்தால் மூச்சு வாங்கி வியர்த்து விடுவோம்.  வளிமண்டல அழுத்தம் குறைந்தால் கஷ்டப்படுவோம்; temperature மாறினால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்...இன்னொரு கிரகத்துக்கு சென்று ஹெல்மெட் போட்டுக் கொண்டு தான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்குப் போகாமலே இருக்கலாம். சரி, அப்படியே போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்...


பிரபஞ்சத்தில் random ஆக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது வெற்றிடமாக இருக்க 99.999 % வாய்ப்புகள் உள்ளன என்கிறார் கார்ல் சாகன் ..பிரபஞ்சம் 99.999% வெற்றிடம் தான். குளிர்ந்த, இருண்ட , எந்த விதமான சுவாரஸ்யமும் அற்ற அநாதி வெற்றிடம். ஒரு விண்மீனுக்கும் இன்னொன்றுக்கும் அபார தூரம். ஒரு காலக்ஸிக்கும் இன்னொன்றுக்கும் எண்ணிப் பார்க்க இயலாத தூரம்.(காலக்ஸி என்பது விண்மீன்களின் குழுமம்) பிரபஞ்சத்தின் density ரொம்பவே குறைவு. ஒரு கால்பந்து மைதானத்தில் கடுகை வைத்தது போல! இத்தனை தூரத்தைக் கடக்க நமக்கு மில்லியன் கணக்கில் வருடங்கள் பிடிக்கும். அனால் நம் ஆட்களுக்கு எல்லாவற்றிலும் shortcut தேடும் கெட்ட பழக்கம் உள்ளது. எனவே இந்த wormhole என்ற concept கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. ரொம்பவே மெனக்கெட்டு நேர்வழியில் போக வேண்டாம். சந்தில் புகுந்து போய் விடலாம் என்று ஒரு  நம்பிக்கை.இதைப் பற்றி பகுதி இரண்டில் பார்க்கலாம்.

விண்கலம் பற்றி... விண்வெளியில் மனிதன் பயணம் செய்ய சாதா தீபாவளி ராக்கெட்டுகள் ஆகாது.தீபாவளி ராக்கெட் என்று சொல்வது நாம் இப்போது செவ்வாய்க்கு அனுப்பினோமே அது. ஸ்பெஷல் எரிபொருள் ஒன்று தேவை. விண்வெளிப் பயணத்தில் ஒரு நிம்மதி என்ன என்றால் நியூட்டனின் முதல் விதி. ஒரு குறிப்பிட்ட வேகத்தை விண்கலத்துக்கு கொடுத்து விட்டால் அது பாட்டுக்கு அதே வேகத்தில்  வெளியில் சிவனே என்று போய்க் கொண்டிருக்கும் constant எரிபொருள் தேவையில்லை.எரிபொருள் விண்கலத்தின் திசையை மாற்றவும் , accelerate செய்யவும் (வேகத்தை கூட்ட, குறைக்க ) மட்டுமே தேவைப்படும். எரிபொருள் தீர்ந்து போய் விட்டால் விண்கலத்தின் பாகங்களை  கழற்றி விட்டு அதற்கு எதிர்த் திசையில் உந்தி முன்னேற முடியும். இது நியூட்டனின் மூன்றாம் விதி. இதைப் பயன்படுத்தி திரைப்படத்தில் விண்கலத்துக்கு push கொடுப்பதை கவனித்திருக்கலாம். இன்னொரு டெக்னிக் கூட இருக்கிறது. gravity push ....sling shot என்பார்கள்.கோள் ஒன்றை நோக்கித் தாழ்வாகப் பறந்து அதை ஏமாற்றி விட்டு அதன் ஈர்ப்பை (வேகத்தை) திருடிக் கொண்டு மீண்டும் பறப்பது! இவையெல்லாம் எரிபொருளை மிச்சம் செய்யும் டெக்னிக்குகள்.


சிலர் ஹைட்ரஜனை எரிபொருளாக முன்வைக்கிறார்கள். பிரபஞ்சம் எங்கும் நீக்கமற வியாபித்து இருக்கிறது அது. வாழைப்பழம் போல எங்கேயும் எந்த சீசனினும் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி எரித்தால் விண்கலத்தில் ஒரு குட்டி சூரியன் உருவாகி, வெப்பத்தால் ஹைட்ரஜன் இணைந்து fusion முறையில் ஏராளமான ஆற்றலை வெளியிடும். சிலர் anti matter என்ஜின் களை suggest செய்கிறார்கள். ஹைட்ரஜனை எரித்தால் அதன் நிறையில் ஒரு சிறிய பங்கு மட்டுமே ஆற்றலாக மாறுகிறது; ஆனால் பொருளும் அதன் எதிர்ப்பொருளும் சந்தித்தால் 100% நிறையும் ஆற்றலாக மாறி விடும். இவையெல்லாம் நம் விண்கலத்தை கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு முடுக்கத்(accelerate ) தேவைப்படும் எரிபொருட்கள். ஆனால் இந்த anti மேட்டர் என்னும் எதிர்ப்பொருளை பிரபஞ்சத்தில் தேடுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்கே என்பது போல. பொருளும் அதன் எதிர்ப்பொருளும் சேர்ந்தே தோன்றின என்று நம்பப்படுகிறது. ஆனால் எதிர்ப் பொருள் எங்கே ஒளிந்துள்ளது என்று தெரியவில்லை. ஐந்தாம் பரிமாணத்தில் ஒளிந்திருக்கலாம் என்கிறார்கள்.

Interstellar படத்தில் சில நேரங்களில் அவர்கள் எடையில்லாமல் மிதந்து கொண்டும் சில நேரங்களில் எடையுடனும் இருப்பதை கவனித்து இருப்பீர்கள். ஏன்? ஈர்ப்பு இல்லை என்றால் எடை இருக்காது என்று தெரியும் ; அல்லது விண்கலம் கிரகத்தை freefall என்ற முறையில் சுற்றிக் கொண்டிருந்தாலும் உள்ளே எடை இருக்காது. ஒரு கிரகத்துக்கு சென்று land ஆகும் போது சும்மா சக்திமான் போல ஜிங் என்று குதித்து விட முடியாது.safe landing வேண்டுமென்றால் கிரகத்தை முதலில் சுற்றி வரவேண்டும். அப்போது நமக்கு எடை இருக்காது. இது ஏன் என்றால் விழும்போது நமக்கு எடை இருப்பதில்லை. விழுந்து கிடப்பதால் நமக்கு எடை இருக்கிறது. மலை மலை உச்சியில் இருந்து குதித்துப் பாருங்கள்; எடை அற்ற தன்மையை உணர்வீர்கள் .கிரகத்தை சுற்றுவது என்பது அதை நோக்கித் தொடர்ச்சியாக விழுவதே அன்றி வேறில்லை. எனவே நோ எடை.படிப்படியாக ஆர்பிட்டைக் குறைத்துக் கொண்டு May I come in Sir என்று கேட்டுக் கொண்டு டைரக்டர் வீட்டில் முதல் சான்ஸ் கேட்டு உள்ளே நுழையும் இசையமைப்பாளர் போல உள்ளே நுழைய வேண்டும். முதன்முதலில் கால் வைக்கும் போது எங்கே வினோதமான வேற்றுக் கிரக உயிரிகள் வந்து தாக்கி விடுமோ என்ற பயத்துடன் இறங்கவும்!

சரி...I S படத்தில் மனிதர்களுக்கு விண்கலத்தின் உள்ளே எப்படி எடை வந்தது? Thanks to Einstein! ஐன்ஸ்டீன் ஈர்ப்பும், முடுக்கமும் ஒன்றே(equivalence principle) என்கிறார். படத்தில் set 1G level  என்று பைலட் சொல்வதை நீங்கள் கவனித்து இருக்கலாம். விண்கலத்தின் உள்ளே எடை இல்லாமல் இருக்க முடியாது. ரொம்ப பேஜார். சாப்பிட முடியாது; உச்சா போக முடியாது. செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. எனவே பூமியின் தரையில் இருப்பது போன்ற உணர்வை பயணிகளுக்குத் தர வேண்டும். பூமியின் ஈர்ப்பினால் ஏற்படும் முடக்கம் 1G என்று நமக்குத் தெரியும். Acceleration due to Gravity 9.8 m/S2. இது எதைக் குறிக்கிறது என்றால் நாமெல்லாம் பூமியை நோக்கி 1 G முடுக்கத்துடன் விழுந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். அல்லது பூமியின் தரை நம்மை அந்த acceleration இல் மேல்நோக்கி சதா  தள்ளுகிறது என்றும் கொள்ளலாம்.எனவே விண்கலத்தை தொடர்ச்சியாக 9.8 m /s2 என்ற நிலையான முடுக்கத்தில் நகர்த்திக் கொண்டிருந்தால் உள்ளே இருப்பவர்கள் பூமியில் இருப்பது போலவே உணர்வார்கள். உள்ளே எதிர்த் திசையில் ஒரு செயற்கை ஈர்ப்பு உருவாக்கப் படுகிறது. ஆனால் இப்படிச் செய்வதற்கு கணிசமான எரிபொருள் செலவாகும். சும்மா ஒரே வேகத்தில் போய்க்கொண்டிருந்தால் எரிபொருள் தேவையில்லை.வேகத்தை மாற்ற எரிபொருள் தேவை. ஆனால் ஒரே வேகத்தில் போய்க் கொண்டிருந்தால் உள்ளே வெட்டவெளியில் ஈர்ப்பு இருக்காது. எடையும் இருக்காது. வேடிக்கைக்காக சில நேரம் எடையற்ற நிலை வேண்டும் என்றால் எரிபொருள் சப்ளையை நிறுத்தினால் போதும்! ஜாலி!

இத்தனை மெனக்கெட்டு மனிதர்களை அனுப்ப வேண்டுமா? probe களை இயந்திரங்களை முதலில் அனுப்பக் கூடாதா எரிபொருளை மிச்சம் செய்யலாமே (எடையற்ற நிலையில் மனித உடல் ஆற்றலை வெகுவேகமாக இழக்கிறது; எலும்புகள் மிக வேகமாகத் தேய்கின்றன என்கிறார்கள்)என்றால் இதற்கான விடை I S படத்திலேயே உள்ளது. Survival instinct ..இது ரோபோட்டுகளுக்குக் கிடையாது. ஒரு ஆபத்து வந்தால் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது. என்ன தான் ப்ரோக்ராம் செய்தாலும் அதற்கு வராது. Artificial Intelligence இல் இது பெரிய சவால். நம்மை நோக்கி வேகமாக கல் ஒன்று வந்தால் உடனே நகர்ந்து கொள்வது. இதை ரோபோட்டுகள் செய்யாது. உன்னை நீயே dismantle செய்து கொள் என்றால் சிரித்துக் கொண்டே செய்து கொள்ளும். ஏன்? No நான் வாழ விரும்புகிறேன் என்று எதிர்க்கேள்வி கேட்காது. மனிதன் இனப்பெருக்கம் செய்வது கூட இந்த survival instinct தான். என் மகன் மூலம் பேரன் மூலம் ஏதேனும் ஒரு வடிவில் நான் வாழ மாட்டேனா என்ற சுயநலம். காதல் என்பது தெய்வீகம் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது; utter சுயநலம்! காதலின் மூலம் சாசுவதம் காண முயல்கிறான் மனிதன்!இந்த survival instinct இல்லாததால்தான் ரோபோட்டுகள் காதலில் விழுவதில்லை. இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ என்று பாடுவதும் இல்லை!

 next , கூப்பர், அப்படியே ரஜினி மாதிரி இளமையாய் இருக்க, அவர் மகள் Murphy , அனுஷ்கா மாதிரி அரைக்கிழவி ஆகி விடும் time dilation . காலம் இரண்டு விதத்தில் மெதுவாக நகரலாம். ஒன்று விண்கலத்தில் செல்பவர் அதிவேகத்தில் செல்கையில்; காலம் மெதுவாக செல்கிறது (special relativity)
இன்னொன்று கிரகத்தின் அதீத ஈர்ப்பினால் காலம் மெதுவாக நகர்கிறது. (General relativity )பூமியை விட அதிக கனமான கிரகம் ஒன்றில் காலம் மந்தமாக நகர்கிறது.(பூமியின் காலத்துடன் ஒப்பிடுகையில்)இதனால் தான் time is a resource என்கிறாள் அந்தப் பெண். பூமிக்குத் திரும்பிப் போகவேண்டாம் என்றால் காலத்தைப் பற்றிக் கவனம் வேண்டாம். திரும்பிப் போகவேண்டும் என்றால் கவனமாக இருக்க வேண்டும். இங்கே நாம் செலவழிக்கும் ஒவ்வொரு மணியும் பூமியில் ஏழு ஆண்டுகளை விழுங்கி விட்டிருக்கும் என்று அவர்கள் சொல்வதை கவனிக்கவும். blackhole  ஒன்றின் event horizon அருகில் நாம் சில வினாடிகள் நிற்க முடிந்தால் பூமியில் மில்லியன் கணக்கில் காலம் உருண்டோடி விட்டிருக்கும்.

இந்தக் கால நிகழ்வுகளை ஏற்கனவே அணு அண்டம் அறிவியலில் விளக்கி இருக்கிறோம். interest இருந்தால் படித்துக் கொள்க.

http://samudrasukhi.blogspot.in/2011/06/34-b.html

http://samudrasukhi.blogspot.in/2011/09/48.html

http://samudrasukhi.blogspot.in/2011/10/50.html


படத்தில் வரும் இன்னொரு விஷயம் இந்த suspended அனிமேஷன். ஜிப் மாட்டிய பைக்குள் போய் நீண்ட காலம் hibernate செய்வது. Planet of the Apes படத்தில் கூட இது வருகிறது. மனித   உடலின் வெப்பநிலையை கிட்டத்தட்ட ஜீரோ டிகிரிக்கு இறக்கி இதயத்துடிப்பு, முச்சு இவைகளை மிக மிக மிக மெதுவாக்குவது இது இன்னும் ஆராய்ச்சி  நிலையில்தான் உள்ளது..கோமா நிலை.இதன் மூலம் பயணிகளை இளமையாக வைத்திருக்க முடியும். இன்னும்கூட உடலின் இறப்பு என்பது தற்காலிக முடக்கம் தான் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். மம்மியாய் மாற்றி ஐஸ் பெட்டியில் வைத்திருந்தால் என்றோ ஒருநாள் எழுந்து வருவார் என்று நம்புகிறார்கள்.

உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. (339)

தொடரும்.

8 comments:

சீனு said...

Superb...

G.M Balasubramaniam said...


என்னென்னவோ சொல்கிறீர்கள் என்னவென்றுதான் இந்த சிற்றறிவுக்கு எட்டவில்லை. எனக்குப் புரியாத பல விஷயங்கள் சூப்பர்..!

G.M Balasubramaniam said...


the lonely sailor blogspot இப்போதுதான் கவனித்தேன். பசலை நோயால் வாடுவது மிக அழகு. வாழ்த்துக்கள்

Unknown said...

1 எவ்வளவு நாட்கள் ஆச்சு உங்களிடமிருந்து இந்தமாதிரியான பதிவை
பார்த்து.
2 ஒரே மாதிரியான சலிப்பான வாழ்கையில் இந்த மாதிரியான பதிவுகள் ஒரு சிலரை வியக்கவைக்கிறது. ஓ! அப்படியா, சாத்தியமா என்று ஒரு கணம் சிந்திக்க வைத்து, அதிசயக்க வைத்து, ஏன் இவை எல்லாம் யாருகாக இத்தனை மெனகடல் என்று கேள்வி கேட்க வைக்கிறது.
3 ஒரு ஆண்மீக பதிப்புக்கு கிடைக்கும் வரவேற்பும், செல்வாக்கும் ஒரு அறிவியல் பதிப்புக்கு கிடைபதில்லையே. முதலில் கூறியதில் எவ்வளவு உண்மை என்பதை யாராலும் கூற முடியாது. but இரண்டாவதை நம்மால் நீருபிக்க முடியும் இருந்தும் ஏன்?
4 நீங்க சொன்ன அந்த சுஜாதா சார் நாவல் “ஆகாயம்” ரெம்ப அருமையாக இருக்கும்.
5 எல்லா மதம் மற்றும் ஆண்மீகம் எல்லாமுமே அன்பை அறிவுறுத்தி கூறி இருப்பார்கள் but Interstllar படத்தில் அதை கூறி இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆண்மீகமும் அறிவியலும் இந்த அன்பு என்ற கான்செப்டில் ஒத்துபோவதாக எனக்கு தெரிகிறது.
6 ஏன் கடவுளை 5 –ம் பரிணாமத்திற்கு ஒப்பிட்டிருக்கிறீர்கள் ஏனெனில் 11 – பரிணாமம் இருபதாக சொன்னிர்கள் அப்படியென்றால் மாற்ற பரிணாமத்தில் குறைபட்டவராக போய்விடுவர் இல்லையா.

சமுத்ரா said...

நன்றி நாகராஜன்...உண்மையில் கடவுள் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றே தோன்றுகிறது.

சமுத்ரா said...

நன்றி நாகராஜன்...உண்மையில் கடவுள் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றே தோன்றுகிறது.

Unknown said...

காதல் என்பது தெய்வீகம் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது; utter சுயநலம்! காதலின் மூலம் சாசுவதம் காண முயல்கிறான் மனிதன்!

ஏன் இந்த கொலைவெறி.....

BASU said...

எதற்காக கடவுள் வேண்டும்!?