இந்த வலையில் தேடவும்

Saturday, November 29, 2014

நாவல் அறிவிப்பு :)

Write the  book that you want to read என்பார்கள். நல்ல புத்தகம் ஒன்றை நாம் படிக்க விரும்பினால் அது இன்னும் எழுதப்படவில்லை என்றால் அதை நாம் தான் எழுத வேண்டும்.:)

FB , ட்விட்டர் மற்றும் ப்ளாக் நண்பர்கள் சில பேர் சாட்டில் வந்து சமுத்ரா நீங்கள் கண்டிப்பாக ஒரு fiction நாவல் அட்டெம்ப்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சரி, எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போதைக்கு ப்ளாக்கில் எழுதலாம் என்று; அப்புறம் response ஐப் பொறுத்து புத்தகமாகப் போடுவதை யோசித்துக் கொள்ளலாம்.
சில நண்பர்கள் கலைடாஸ்கோப் ஐ முதலில் புத்தகமாகப் போடுங்கள்; நாங்கள் உதவி செய்கிறோம் என்கிறார்கள். பார்க்கலாம்.

சில விஷயங்களை கட்டுரையாக எழுதுவதை விட fiction நாவலில் சொல்வது சுலபம். கேரக்டர்களை வைத்து ஒரு கருத்தையும் அதன் மாற்றுக் கருத்தையும் சுலபமாக சொல்லி விடலாம். அந்த கேரக்டர் அப்படித்தான் என்று அந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் மேல் பழியைப் போட்டு விடலாம்.:) கட்டுரை ஒன்றில் ஒரு சினிமா நடிகரைத் திட்டியோ , ஒரு பெண்ணையோ காதலியையோ அழகுணர்ச்சியுடன் வர்ணித்தோ எழுதுவது நெருடலாய் இருக்கும். நாவலில் அவற்றை சுலபமாக கேரக்டர்கள் மூலம் செய்து விடலாம். Indirect Fulfillment!

ஆனால், கட்டுரையுடன் ஒப்பிடும் போது நாவலுக்கு அதற்கே உரித்தான சிக்கல்கள் இருக்கின்றன. கட்டுரை போல லீனியர்-ஆக எழுத முடியாது.
திருப்பங்கள் இருக்க வேண்டும். suspense முக்கியம்.க்ளைமாக்ஸ் சரியாகப் பொருந்தி வர வேண்டும். ஆரம்பத்தில் போட்ட முடிச்சுகளை அழகாக அவசரப்படாமல் ஒவ்வொன்றாய் அவிழ்த்து கிளைமாக்ஸில் எல்லாம் தெளிவாக வேண்டும். கிளைமாக்ஸ் 100% புரிந்து விடும்படி இருந்தால் இப்போது அது out of fashion ! வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு குழம்ப வேண்டும். There should be some room for reader's imagination! :P

so , ஒரு சைக்காலஜிகல் திரில்லர் எழுதலாம் என்று எண்ணம். கொஞ்சம்

சைக்காலஜி, கொஞ்சம் ஹிஸ்டரி, கொஞ்சம் திரில்லர், கொஞ்சம் சஸ்பென்ஸ் என்று ஒரு கமெர்சியல்  சினிமா போல. முழுக்க முழுக்க 
வாசகர்களின் மகிழ்ச்சிக்காக மட்டும். No String Attached

நாவலின் தலைப்பு : 
"நியூரான் நதி"

:)

சமுத்ரா

12 comments:

Harishh The Blogger said...

Congratulations 😤 நதியை வரவேற்கும் எங்கள் களத்துமேடு

nainar malik said...

Super ji... Super happy..

ஆனந்தி.. said...

கலைடாஸ்கோப் ஐ முதலில் புத்தகமாகப் போடுங்கள்// Yes...Please..proceed...

ஆனந்தி.. said...

நாவலின் தலைப்பு :
"நியூரான் நதி"// :-))wow...Resembles with thalaivar sujatha's :-) Looking forward to read your book..

G.M Balasubramaniam said...

இதிலும் பௌதிகப் பின்னணியா.?

சமுத்ரா said...

GMB sir, no physics :) only psychology

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள்

சுதர்ஷன் said...

வாழ்த்துகள் :)

G.M Balasubramaniam said...


உங்கள் சிறுகதை ஒன்றை வெகுவாக ரசித்தது நினைவுக்கு வருகிறது. பத்திரிக்கைகளில் அங்கீகாரம் கிடைக்காதவரை புத்தக வெளியீடு என்பது ஒரு சுய திருப்திக்கு மட்டுமே உதவும் என்பது என் அபிப்பிராயம்

இரசிகை said...

santhoshamum vazhthukalum.

Kodeeswaran Duraisamy said...

I'm waiting!!! :)

Muthalib said...

ப்ரீ ஆர்டர் செய்ய இப்பவே ரெடி. ;-)