இந்த வலையில் தேடவும்

Wednesday, November 19, 2014

நான் கவிஞன்...

மலைச்சாரலில் சிலிர்த்துக் கொண்டு 
கீழிறங்கும் அனுபவம் வேண்டுமா உங்களுக்கு?
நிலவொளியின் கீழ் 
ஆரவாரமின்றி வந்துபோகும் 
கடலலைகளின் தரிசனம் வேண்டுமா உங்களுக்கு?
மாலைவானில் 
வெண்ணிறப் பறவைகளுடன் 
வீடுதிரும்பும் ஆனந்தம் வேண்டுமா உங்களுக்கு?
பின்னிரவின் நிசப்தத்தில் 
தலை நனைக்கும் பனியில் 
விண்மீன்களுடன் பேசும் வித்தை வேண்டுமா உங்களுக்கு?
அதிகாலைப் பொழுதொன்றில் 
கம்பளி உடையணிந்து 
சாலையோரக் கடையொன்றில் 
தேநீர் ருசிக்கும் அனுபவம் வேண்டுமா உங்களுக்கு?
யாருமற்ற அடர்ந்த 
கானகத்தில் 
கொஞ்சம் பயத்துடன் காலில் இலை சரசரக்க 
நடக்கும் தைரியம் வேண்டுமா உங்களுக்கு?
மனம் வாடிப் படுத்திருக்கையில் 
காதலி அருகில் வந்து 
தலைகோதும் இதம் வேண்டுமா உங்களுக்கு?
பாலைவனத்தில் பகலெல்லாம் நடந்து 
பின் 
நிழலில் இளைப்பாறி 
நீர் அருந்தும் ஆசுவாசம் வேண்டுமா உங்களுக்கு?
மழைச் சாரலில் குடையை உதறிவிட்டு 
மனதுக்குப் பிடித்தவருடன் 
நடந்து போகும் அதிர்ஷ்டம் வேண்டுமா உங்களுக்கு?


நான் கவிஞன் ...
என் கவிதை மூலம் 
இவை அத்தனையும் தருவேன்..

நான் கவிஞன் ...
என் எழுத்து மூலம் 
இவை யாவையும் தருவேன்.

நான் கவிஞன் ...
.

..

...

....


நீங்கள் கீழ்க்கண்ட என் 
வங்கிக் கணக்கு எண்ணுக்கு பணம் டெபாசிட் செய்தால் போதும் 

IFSC Code :HDFC0001866

Account no: 500000072890

சமுத்ரா 

5 comments:

Harishh The Blogger said...

கவிஞர் பின்றிங்க. நல்ல கவிதை. ஆனா கடைசியா வெச்சிங்க பாருங்க டிவிஸ்டு, ஓடிட்டேன்

Yuvaraj Poondiyan said...

விரைவில் இவை அத்தனையும் கிடைக்க சமுத்ராவிடம் பிராத்திக்கிறேன்

(பேங்க் மேட்டர் இல்லாம...)

Nagarajan T said...

super

G.M Balasubramaniam said...

சமுத்ராவே அத்தனையும் அடையட்டும் . செலவே இல்லாமல்.

இரசிகை said...

:)

unga katturaikalthaan remba nallayirukku