இந்த வலையில் தேடவும்

Friday, December 30, 2011

அணு அண்டம் அறிவியல் -56

அணு அண்டம் அறிவியல் -56 உங்களை வரவேற்கிறது மறுபடியும் ஒரு மாறுதலுக்காக வேறு ஒரு டாபிக். Artificial Intelligence (AI ) - செயற்கை அறிவு.




செயற்கை அறிவை வைத்து உலக அளவில் I , Robot டில் இருந்து எந்திரன் வரை படங்கள் வந்து விட்டன.ஆனால் அவையெல்லாம் அதீத கற்பனைகள்.ஒரு ரோபோ நாட்டைக் குறிஞ்சியில் ஹுசேனி கலந்து விட்டது என்றெல்லாம் கண்டு பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும். இதற்கு ஒன்று உண்மையிலேயே அதற்கு சங்கீத அறிவை உட்செலுத்த வேண்டும். ரோபோ, 'ரொம்ப போரடிக்கிறது மதுரை சோமுவின் வாசஸ்பதி ஆர்.டி.பி போடு' என்று அதுவாகவே சொல்லவேண்டும். அதுதான் AI ...இல்லையென்றால் ரோபோவின் உள்ளே ஒரு FREQUENCY DETECTOR வைத்து இசை எந்த விதமான ஆரோகண அவரோகன அதிர்வெண் கிரமத்தில் வருகிறது என்று கண்டுபிடித்து முதலிலேயே உட்செலுத்தப்பட்ட ராக Data base டேபிள்-ஐப் பார்த்து ,அதனுடன் ஒப்பிட்டு இது நாட்டைக்குறிஞ்சி என்று சொல்ல வேண்டும்.ஆனால் இது மீண்டும் மனிதனின் தர்க்க அறிவே தவிர இயந்திரத்தின் AI அல்ல.இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு டிடெக்டர் அது இது என்று வைத்துக் கொண்டே இருந்தால் ரோபோட் ஒரு டைனோசர் அளவுக்குப் பெரிதாகி விடும்.ரஜினி போல
ஸ்லிம்மாக கண்டிப்பாக இருக்காது.

முதலில் அறிவு என்றால் என்ன?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


ஒன்றை நல்லதா கெட்டதா என்று பிரித்துப் பார்ப்பது தான் அறிவு என்கிறார் வள்ளுவர். ஒரு கணிப்பொறிக்கு அது நாம் நல்லது செய்கிறோமா (ஆஸ்பத்திரியில் புதிய மருந்து கண்டுபிடிக்க) அல்லது கெட்டது செய்கிறோமா (தீவிரவாதிகள் கையில் இருக்கிறோமா) என்று தெரியாது.


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

தனக்கு அழிவு நேரிடாமல் காத்துக் கொள்வது அறிவு. ஒரு ரோபோவை நோக்கி உருட்டுக் கட்டையால் அடிக்கப் பாருங்கள். அது கையை உயர்த்தி தானாகவே உங்களைத் தடுத்தால் அது தான் A .I

இங்கே இரண்டு விதமான வாதங்கள் இருக்கின்றன. ஒன்று : அறிவு என்பது பிரக்ஞைத்தன்மையின் துணைப்பொருள் என்று நம்புவது (Intelligence is the by-product of consciousness) .நாம் சிந்திக்கிறோம் என்றால் நமக்குள்ளே ஒரு விழிப்புணர்வு அல்லது ஆத்மா என்ற ஒன்று
இருப்பதால் தான் என்ற வாதம்.இன்னொன்று பிரக்ஞைத்தன்மை என்பது அறிவின் துணைப்பொருள் என்ற நம்பிக்கை (consciousness is the by-product of Intelligence) அறிவு இருப்பதால் தான் நாம் நம்மை உணர்கிறோம் என்பது.டெஸ்கார்டசின் Cogito ergo sum என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.I think therefore I'm ! நான் நினைக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன்.இரண்டாவது வாதத்தில் I'm therefore I think ! நான் இருக்கிறேன் அதனால் நான் சிந்திக்கிறேன்! இந்த இரண்டாவது வாதம் உண்மை என்றால் Artificial Intelligence சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஒரு இயந்திரத்திற்கு நம்மால் செயற்கை இதயம், நுரையீரல் ஏன் மூளையைக் கூட வைக்க முடியும். ஆனால் அதற்கு 'உயிர்' கொடுக்க முடியாது.திரைப்படங்களில் வருவது போல மோட்டார்களையும் ஒயர்களையும் சென்சார்களையும் இணைத்து
'சிந்தனை செய் சிட்டி' என்றால் அது சிந்திக்காது.ஆனால் இன்னும் சில வி
ஞ்ஞானிகள் இயந்திரங்களை சிந்திக்க வைக்க முடியும் என்று நம்புகின்றனர். கிளாடி என்ற விஞ்ஞானியிடம் Can Machines think? என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதிலளித்தாராம்.'எப்படி'? என்று கேட்டதற்கு "I think, don't I?" என்றாராம். இவர்கள் மனிதனை வெறுமனே 'சிந்திக்கும் இயந்திரம்' என்று நம்புபவர்கள்.

இயந்திரங்களை சிந்திக்க வைத்தால் அவற்றால் தியானம் செய்ய முடியுமா ?

வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்? - என்ற பரவச நிலையை அவை அடையுமா தெரியவில்லை.

சரி.தத்துவம் ஒருபக்கம் இருக்கட்டும். இனி செயற்கை அறிவின் அறிவியலுக்குள் நுழைவோம்.

மெசின்களை சிந்திக்க வைப்பதற்கு முதலில் மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்பது தெரிய வேண்டும். ஏரோப்ளேன் கண்டுபிடிப்பதற்கு முன் பறவை எப்படிப் பறக்கிறது என்று ஆராய்வது போல. ஆனால் இன்றுவரை மனிதமூளை என்பது கைதேர்ந்த
விஞ்ஞானிகளுக்குக் கூட ஒரு மிகப்பெரும் சவாலாக,விடுவிக்க இயலாத புதிராக இருக்கிறது.மூளையின் சர்க்யூட்டுகள் அதாவது நியூரல் நெட்வொர்க்ஸ் எப்படி இயங்குகின்றன என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. குத்துமதிப்பாக இந்த இடத்தில் தூண்டினால் கோபம் வருகிறது இந்த இடத்தில் தூண்டினால் ஆள் ரொமாண்டிக்-மூடுக்குப் போகிறான் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்களே தவிர எப்படி மூளை இதை செயல்படுத்துகிறது என்று தெரியவில்லை. உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒருமொழியில் பத்தாயிரம் வார்த்தைகள் தெரியும் என்று
வைத்துக்கொள்வோம். உடனே அவன் பேப்பர் பேனா எடுத்துக் கொண்டு கவிதை எழுதப் புறப்பட்டு விடுகிறான். ஆனால் ஒரு சாதாரண வீட்டுபயோக கம்ப்யூட்டரில் உலகின் அத்தனை மொழிகளின் அகராதிகளையும் ஒருங்கே சேமித்துவைக்க முடியும்.ஆனால் அது அத்தனை சொற்களையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் தேமே என்று உட்கார்ந்திருக்கிறது. வைரமுத்து அளவுக்கு கவிதை எழுதாவிட்டாலும் 'பெண்ணே நீ பேரழகு' என்ற அளவுக்கு எழுதினால் போதும். ஆபீசுக்கு வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து பார்த்தால் அது ஒரு கவிதை எழுதி வைத்திருந்தால் எப்படி
இருக்கும்? [ஒன்று மட்டும் நிச்சயம் சினிமா கவிர்களுக்கு வேலை போய் விடும்] 'அறிவுள்ள' ஒரு
கம்ப்யூட்டருடன் வேலை செய்வது சுவாரஸ்யமான விஷயம். இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்.

ஆள்: ஹலோ என் கணினியே? GM .
கணினி: ஹலோ, மார்னிங்..என்ன இன்னைக்கு சீக்கிரம் ஆபீசுக்கு வந்துவிட்டாய்?
ஆள்: மனைவியுடன் சண்டை
கணினி: உன் ஜி-மெயில் சேட்-டை எல்லாம் உன் மனைவிக்கு Forward செய்யவா?
ஆள்: என்ன மிரட்டுகிறாயா? உன் மதர் போர்டை பிடுங்கி விடுவேன்.
கணினி: அதையெல்லாம் எப்போதோ back -up எடுத்துக் கொண்டாகி விட்டது.
ஆள்: ரொம்ப பேசற நீ, சரி நேற்றைய பாலன்ஸ் சீட் ஒப்பன் பண்ணு
கணினி: நானே டேலி செய்து விடவா?
ஆள்: சரி செய். நான் போய் ஒரு காபி எடுத்து வருகிறேன்.இறுதியில் என் பெயர் போட மறக்காதே.
கணினி: மனிதர்களே இப்படித்தான் :(

இயற்பியல், நியூட்டனின் பிறப்புக்குப் பின்னர் மள மள என்று வளர்ந்தது.அது போல Artificial Intelligence -இன் நியூட்டன் என்று ஒருவர் இன்றுவரை பிறக்கவில்லை என்கிறார்கள். (ஒருவேளை அது நான் தானோ ?:) )ஆனாலும் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்சிகள் செய்து Father of ai என்று அழைக்கப்படுபவர் ALAN TURING (23 June 1912 – 7 June 1954) என்ற பிரிட்டிஷ்
விஞ்ஞானி ,அறிவாளிகள் நீண்டநாள் வாழ்வதில்லை என்ற விதியை பொய்யாக்க விரும்பாமல் இவரும் தன் 41 -வது வயதில் வைகுண்டப்ராப்தி அடைந்தார்.




நமக்கு தான் -- வில் விஞ்ஞானிகளின் குறைகளை அலசுவது ரொம்பப் பிடிக்குமே? ஹி ஹி .டியூரிங் ஒரு ஹோமோ-செக்ஸுவல்.(Of course இது ஒரு குறை அல்ல) ஆனால் அந்தக் காலத்தில் ஓரினச்சேர்க்கை ஒரு தண்டிக்கத் தக்க குற்றமாக இருந்ததால் இவர் ஆபரேஷன் செய்து கொண்டு முழுவதும் பெண்ணாக மாறி விட முடியுமா என்று
யோசித்தார்.
ஹோமோ-செக்ஸுவல் களுக்கு சாதாரணமாகவே பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப இவரும் ஒரு Aggressive ஹோமோ-செக்ஸுவல் ஆக இருந்தார். பொது நூலகங்களில் மறைவிடங்களில் 'பையன்களிடம்' தவறாக நடந்து கொண்டதாக இவர்மேல் வழக்குகள் கூட உண்டு. டியூரிங்கின் உயிர்காதலராக இருந்தவர் அர்னால்ட் முர்ரே. (பெண் அல்ல, ஆண்) இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் இருவரையும் கைது செய்து கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று அறிவித்தது.(இரண்டாம் உலகப் போரின் போது இவர் வீட்டில் போராட்டக் காரர்கள் புகுந்து விட்டனர் என்று சொல்லி இவர் போலீசை அழைத்தார்.போலீஸ் வந்த போது இவரும் இவர் பாய்-பிரண்டும் எக்குத்தப்பாக இருந்ததை பார்த்து அவர்களை கைது செய்து விட்டது போலீஸ்.[போலீசை கூப்பிட்டு விட்டு ஏன் ஜல்சா செய்தீர்கள் டியூரிங் ??])இதனால் மனம் உடைந்த டியூரிங், அரசாங்கத்தின் கட்டளைக்கு பணிந்து பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதில் முழுத்திருப்தி ஏற்படாமல் (He didn't like the breasts !)அடுத்த ஒரு வருடத்திலேயே சயனைடு கலந்த ஆப்பிளைத் தின்று தற்கொலை செய்து கொண்டார்.ஆப்பிள் நிறுவனத்தின் கொஞ்சம் கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ இவரை கவுரவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். டியூரிங் இறப்பிற்குப் பிறகு இயற்கைக்கு எதிரான காதல்களை குறிக்க கூட இந்த கடிக்கபப்ட்ட ஆப்பிள் சின்னம் பயன்படுகிறது.



இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் 'எனிக்மா' என்ற யுத்த மெசினின் நிரல்களை (code) உள்ளே புகுந்து அழிக்கும் எதிர் மெசின்களை வடிவமைத்தவர் டியூரிங்

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு பெருகி வரும் இன்றைய நாட்களில், சமீபத்தில் 2009 ஆம் ஆண்டில் ஜான் க்ராஹாம் என்பவர் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானியை அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற ஒரே காரணத்துக்காக கேவலமாக நடத்திய செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடர்ந்தார்.பிரிட்டிஷ் பிரதமர் ,We cant reverse the clock என்று கூறி பேசிய மன்னிப்பு உரையை அப்படியே பார்க்கலாம்.

"Thousands of people have come together to demand justice for Alan Turing and recognition of the appalling way he was treated. While Turing was dealt with under the law of the time and we can't put the clock back, his treatment was of course utterly unfair and I am pleased to have the chance to say how deeply sorry I and we all are for what happened to him ... So on behalf of the British government, and all those who live freely thanks to Alan's work I am very proud to say: we're sorry, you deserved so much better "

மிக அதிக பாலின உணர்வு உள்ளவர்கள் மிக அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள் என்ற பேச்சுக்கு டியூரிங் விதிவிலக்கு அல்ல.கணிதத் துறைக்கும் கணினித் துறைக்கும் இவர் கொடுத்த பங்குகள் அளப்பரியவை.
Godel

கணிதத்தில் இருக்கும் ஒரு முக்கியமான தேற்றம் கோடலின் INCOMPLETENESS THEOREM .அதாவது கணிதத்தில் நிரூபிக்கவே முடியாத சில தரவுகள் (axioms )இருக்கின்றன என்பது.[எந்த ஒரு முழு எண்ணையும் இரண்டு பகா எண்களின் கூடுதலாக எழுத முடியும் என்பதற்கு நிரூபணம் இன்றுவரை இல்லை.ஆனால் இது உண்மை ] கணிதம் என்பது முழுமையானது என்ற கருத்தை இந்த தேற்றம் பொய்யாக்கியது. எப்படி ஹைசன்பெர்க்- இன் நிச்சயமில்லாத் தத்துவம் இயற்பியல் உலகை ஆட்டம் காண வைத்ததோ அப்படி கோடலின் தேற்றங்கள் கணித உலகையே உலுக்கின.அதே போல டியூரிங் ஒரு கொள்கையை முன்வைத்தார்.

இன்றைய கணிப்பொறியின் உள்ளீடு (INPUT ) , CPU மற்றும் வெளியீடு (OUTPUT ) மாடலை முதன்முதலில் உருவாக்கியவர் டியூரிங்.இது டியூரிங் இயந்திரம் என்று அழைக்கப்படுகிறது [Turing Machine ]ஒரு
டியூரிங் இயந்திரம் , ஒரு கணக்கீட்டை செய்ய ஒரு கணிக்கத்தக்க நேரம் எடுத்துக் கொள்ளுமா அல்லது முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்ளுமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இயந்திரம் முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் நாம் அளித்த உள்ளீடு கணக்கிட இயலாதது (In computable ) அல்லது நிரூபிக்க முடியாதது என்று அர்த்தம். எனவே டியூரிங்-கின் இயந்திர மாடல் மீண்டும் கோடலின் கணிதவியல் தேற்றங்களை உறுதிப்படுத்தியது.

Artificial Intelligence இன் முதல் படி என்ன என்றால் ஒரு இயந்திரம் Turing Test என்ற ஒரு டெஸ்டை பாஸ் செய்ய வேண்டும்.( என்ட்ரன்ஸ் எக்ஸாம் மாதிரி!) ஒரு மனிதனையும் மெஷினையும் சீல் செய்யப்பட பெட்டிகளில் அடைக்க வேண்டியது. எந்தப் பெட்டியில் எது இருக்கிறது என்று வெளியில் இருந்து யாருக்கும் தெரியாது.இரண்டு பெட்டிகளையும் நோக்கி
கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டியது. விடைகளை வைத்து அது மெஷின் சொன்னதா அல்லது மனிதன் சொன்னதா என்று வெளியிலிருந்து அனுமானிக்க முடியாவிட்டால் அந்த மெஷின் Turing டெஸ்டை பாஸ் செய்து விட்டது என்று அர்த்தம்.

உதாரணமாக நான் செத்துப் போகிறேன்; பிறகு எனக்கு ஒரு குழந்தை பிறக்கிறது ; அதன் பெயர் என்ன? என்று கேட்டால் 'தெரியாது' என்று விடை வந்தால் அது மெஷின். 'டேய் பேரிக்காய் மண்டையா, செத்துப் போனதுக்கப்பறம் எப்புடிடா பாப்பா பொறக்கும்' என்று (கவுண்டமணி வாய்சில்)பதில் வந்தால் அது மனிதன்.

ஒரு அறிவாளி ரோபோட்டை வடிவமைப்பதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று Top -down இன்னொன்று Bottom -up .எந்திரன் படத்தில் இந்த இரண்டு அணுகுமுறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

TOP DOWN - ஒரு ரோபோட்டின் உள்ளே சி.டி. அல்லது சிப் ஒன்றை நுழைத்து அதை திடீரென அறிவாளியாக ஆக்குவது

BOTTOM UP - அடிப்படை அறிவு (?) உள்ள ஒரு ரோபோட்டை உருவாக்கி விட்டு பின்னர் மற்ற எல்லாவற்றையும் 'நீயே அறிந்து கொள்' என்று விட்டு விடுவது.

இந்த இரண்டைப் பற்றியும் விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

சமுத்ரா

15 comments:

சார்வாகன் said...

/எந்த ஒரு முழு எண்ணையும் இரண்டு பகா எண்களின் கூடுதலாக எழுத முடியும் என்பதற்கு நிரூபணம் இன்றுவரை இல்லை/
நண்பருக்கு வணக்கம்
இங்கே எந்த ஒரு இரட்டை முழு எண்ணையும்[even integer] என்றே இருக்க வேண்டும்.ஏனெனில் ஒரு ஒற்றை எண்=ஓர் ஒற்றை எண்+ஓர் இரட்டை எண் என்று மட்ட்டுமே எழுத முடியும்.
இரட்டை எண்களில் 2 மட்டுமே பகா எண்.Soooooooooo not possible
எ.கா 11 ஐ எழுத முடியாது.

11=2+9 மட்டுமே
http://en.wikipedia.org/wiki/Goldbach's_conjecture
Every even integer greater than 2 can be expressed as the sum of two primes.[1]
நன்றி

பொன் மாலை பொழுது said...

கடித்து வைக்கப்பட்ட ஆப்பிள் சின்னம் - அதற்கு பின்னால் இருப்பது ஆலன் டியுரிங் என்ற அறிவாளியின் கதை. புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

அகல்விளக்கு said...

அட்டகாசம்...

Mohamed Faaique said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் வகுப்புக்கு வந்திருக்கிறேன். அருமையான தலைப்பு. இனிமேல் தொடர்ந்து வர முயற்ச்சிக்கிறேன்.

Jayadev Das said...

ரோபோட்டுகள் Why this kolaveri Di போன்ற ஒரு பாடலை ஹிட் பாடல் என்று சொல்லுமா, அல்லது, "என்ன கொடுமை சார் இது" என்று பிரபு சீரியசாகப் பேசிய வசனத்தை காமெடி ஆக எடுத்துக் கொள்ளுமா என்பதெல்லாம் சந்தேகமே.

அப்பாதுரை said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். செமர்களை (செயற்கை மனிதர்) பற்றியச் சிந்தனை சற்றே குறுகலாகத் தோன்றுகிறது. இருபதாயிரம் வருடங்களுக்கு முன்பும் லட்சம் வருடங்களுக்கு முன்பும் சிந்தனை இருந்தது. தற்கால மனித சிந்தனையில் எள்ளளவுகூட அன்றைய சமகாலச் சிந்தனைகளில் இடம்பெற்றிருக்கச் சாத்தியமில்லை. சூரியன் பூமியைச் சுற்றிவருகிறது என்று தான் சில நூற்றாண்டுகள் முன்புவரை கூட சொல்லிக்கொண்டிருந்தோம். artificial intelligence can evolve as well இல்லையா? இன்றைக்கு artificial என்பது நாளைக்கு native ஆகலாம். ஆகும் :) ஒரு வேளை அதைத்தான் சொல்ல வருகிறீர்களா?

Jayadev Das said...

"அறிவியலால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை, அறிவியலுக்கு வானமே எல்லை" இப்படியெல்லாம் நாமாக ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறோம். காரணம், "நாங்கள் நாளை சந்திரனில் குடியேறுவோம், அடுத்து செவ்வாய் கிரஹத்துக்கு டூர் போவோம்" என்று இவர்கள் விடும் புருடாக்க்களை கேட்டு கேட்டு நாமும் இவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து விடுகிறோம். உண்மையில் இவர்களை எந்தளவுக்கு நம்பலாம்? "கூரை மீதேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை கிழித்து வைகுண்டத்தையா காட்டப் போகிறான்?" என்ற கதை இவர்களுக்கு சாலப் பொருந்தும். நாம் வாழும் பூமியை அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாசமாக்கிவிட்டு, அதை சரி செய்யத் தெரியாமல் விழி பிதுங்கி இவர்கள் நிற்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். அறிவியலால் பல கண்டிபிடிப்புகள் நிகழ்ந்துள்ளது உண்மை, ஆயினும் சில விடயங்கள் நடக்கவே நடக்காது. உதாரணத்துக்கு, perpetual motion machines [பெட்ரோலோ போடாம ஓடும் பைக்கு], Time Travel [கடந்த காலத்துக்கு போயி நம்ம கொள்ளு தாத்தா முதல் கரிகால் சோழன் வரைக்கும் எல்லாத்தையும் பாத்துட்டு வாரேன் என்பது, Artificial Intelligence [மனுஷனை மாதிரியே சிந்திக்கும் இயந்திரம்]. எதை வைத்து இதை சொல்கிறேன்? அறிவியலால் எல்லாம் முடியும் என்றால் முதலில் ஓசோன் ஓட்டையை அடைத்து இப்புவியை அவர்கள் காக்கட்டும், அப்புறம் யோசிப்போம் கருவாட்டை மீனாக்க முடியுமா என்பது பற்றி!!

Aba said...

உங்கள் எழுத்தில் சுஜாதா சார் நடை தெரிகிறது என்றார் நம் தாஸ் சார். எனக்கு அப்போது புரியவில்லை (சுஜாதாவின் ஒரே ஒரு நாவலை படித்துவிட்டு..:)) இப்போது புரிகிறது..

//ஆத்மா என்ற ஒன்று இருப்பதால் தான் என்ற வாதம்.//

மீண்டும் ஜீனோவின் கடைசிப் பக்கங்களில் இதே கேள்வி எழுப்பப்பட்டிருக்கும்... எனவே, ஒரு மிஷினை சிந்திக்க வைத்தால் போதும், பல்லாயிரம் ஆண்டுகள் கட்டியெழுப்பிய இந்தியாவின் ஆன்மீக அறிவியல் தரைமட்டமாகிவிடும்... ஆன்மா என்ற வஸ்து இல்லை என நிரூபிக்கப்பட்டுவிடும்...

//அடிப்படை அறிவு (?) உள்ள ஒரு ரோபோட்டை உருவாக்கி விட்டு பின்னர் மற்ற எல்லாவற்றையும் 'நீயே அறிந்து கொள்' என்று விட்டு விடுவது.//

இதுதான் சரிவரும் என நினைக்கிறேன். தற்போதைய கம்ப்யூட்டரின் பிரச்சனையே, தன் தரவுகளுக்கிடையில் குழப்பம் வந்தால் எரர் மெசேஜ் காட்டிவிட்டு ஓய்ந்துவிடுவது. அதையே கொஞ்சம் மாற்றி ஏன் குழப்பம் வந்தது என பழைய தரவுகளைத் தேடவிட்டால் புத்திசாலித்தனத்தை கொண்டுவரலாம் என நினைக்கிறேன்...

Aba said...

சிந்திக்க முடிந்த மிஷின்களை அஃறிணையில் கூப்பிடக்கூடாது. நவீன அறிவியல்ல செத்துப்போன மனுஷனுக்கும் (ஆண்) குழந்தை பிறக்கலாம்-னு சிலபல உண்மைகள நான் சொன்னா, அப்புறம் "குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்."-னு தருமி ரேஞ்சுக்கு கத்தி துரத்தி விட்டுடுவீங்க.. எஸ்கேப்..

Aba said...

@ஜெயதேவ் சார்,

//அறிவியலால் எல்லாம் முடியும் என்றால் முதலில் ஓசோன் ஓட்டையை அடைத்து இப்புவியை அவர்கள் காக்கட்டும், அப்புறம் யோசிப்போம் கருவாட்டை மீனாக்க முடியுமா என்பது பற்றி!!//

சார், அறிவியலால் (ஏறத்தாழ) எல்லாம் முடியும்.. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல். ஓசோன் ஓட்டையை அடைக்க பல வழிகள் உள்ளன.. ஆனால் அதில் எந்த வழியில் நட்டம் வராது, எந்த வழியை சொன்னால் அமெரிக்காவும் சீனாவும் ஒத்துக்கொள்ளும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பதால்தான் ஓசோன் இன்னும் அடைபடவில்லை... இதுதான் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் உள்ள வித்தியாசம்...

Jayadev Das said...

@ Abarajithan

தேர்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியுள்ள தங்கள் வரவு நல்வரவாகுக!! நவீன அறிவியல் பற்றி பல அடிப்படை விவரங்கள் தங்களுக்கு இல்லை. இவற்றை பட்டியலிட்டு விளக்குவது அவ்வளவு எளிதல்ல. அவ்வளவு விரிவாக இங்கே எழுதுவதும் நன்றாக இருக்காது. அப்படியே எழுதினாலும் அதைப் புரிந்து கொள்ளும் logical abilities வேண்டும். அப்படியே புரிந்து கொண்ட பின்னரும், அறிவியல் மேல் அதீத பக்தி கொண்டவர்களுக்கு அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள ஈகோ விட்டுக் கொடுக்காது. இவையெல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை. மற்றபடி தங்களுக்கு பதில் எழுதலாம், ஆனால் அவை மிக நீளமாக இருக்கும், காலம் பிடிக்கும், மிகுந்த முயற்சி செய்து நான் எழுத வேண்டும்.... வேண்டாம், நீங்கள் உங்கள் கொள்கையோடே இருங்கள். ஹா....ஹா..ஹா...

Anonymous said...

/ நவீன அறிவியல் பற்றி பல அடிப்படை விவரங்கள் தங்களுக்கு இல்லை. இவற்றை பட்டியலிட்டு விளக்குவது அவ்வளவு எளிதல்ல. அவ்வளவு விரிவாக இங்கே எழுதுவதும் நன்றாக இருக்காது. அப்படியே எழுதினாலும் அதைப் புரிந்து கொள்ளும் logical abilities வேண்டும். அப்படியே புரிந்து கொண்ட பின்னரும், அறிவியல் மேல் அதீத பக்தி கொண்டவர்களுக்கு அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள ஈகோ விட்டுக் கொடுக்காது. இவையெல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை. மற்றபடி தங்களுக்கு பதில் எழுதலாம், ஆனால் அவை மிக நீளமாக இருக்கும், காலம் பிடிக்கும், மிகுந்த முயற்சி செய்து நான் எழுத வேண்டும்.... /

நண்பர்கள் யாரும் திரு ஜெயதேவ் ___ஸ் ன் பொன்னான கருத்துகளை மறுக்க வேண்டாம்.அவர் இப்படி சொல்பவ்ர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பார்.அவர் அனுபவங்களை ஒரு ப்ளாக் எழுதாமல் இருப்பதே நமக்கெலாம் செய்யும் மிகப் பெரிய தொண்டு.அவர் மட்டும் ப்ளாக்கில் அறிவியல் எழுதினால் அவ்வவ்வேஏஏஏஏஏஏ அவ்வளவுதான்!!!!!
ஆகவே ஜெயதேவ் ___ஸ் ஜாக்கிரதை

Aba said...

@Jayadev Das,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி. தேர்வுகள் பரவாயில்லை.. ஒருவழியாக முடித்தாகிவிட்டது.. இன்னும் இரண்டு மாதங்களில்தான் முடிவுகள் வெளியாகும். நமது பரிணாமம் பற்றிய விவாதத்தை தற்போது தொடர முடியவில்லை. சில வாரங்கள் நான் ஊருக்கு வந்திருப்பதால் Broadband இல்லை. Wireless Internet-க்கு மணிக்கு 15 INR செலவாவதால், தாராளமாக இணையம் பயன்படுத்தமுடியவில்லை.. மன்னிக்கவும்.

//நவீன அறிவியல் பற்றி பல அடிப்படை விவரங்கள் தங்களுக்கு இல்லை.//

நான் அறிவியலை இன்னும் ஆழமாக, தொழில்ரீதியாகக் கற்கவில்லை. அவ்வாறு கற்பதற்கு எனக்கு வயதும், resources களும் போதுமானவரை இல்லை. எனவே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். அடுத்த சில வருடங்களில் தான் தொழில்ரீதியாக இயற்பியலும் கணிதமும் கற்கப்போகிறேன். பார்க்கலாம்.

//இவையெல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை. மற்றபடி தங்களுக்கு பதில் எழுதலாம், ஆனால் அவை மிக நீளமாக இருக்கும், காலம் பிடிக்கும், மிகுந்த முயற்சி செய்து நான் எழுத வேண்டும்....//

நானும் எனது இதே பிரச்சினையை வேறு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. உண்மைதான். திருத்திக்கொள்ள முயற்சித்துவருகிறேன். அதுவரை எனது கருத்துக்களை வெளியிடுகின்றேன். தவறாக இருந்தால் இதுபோல சுட்டிக்காட்டிவிட்டு மன்னித்துவிடுங்கள். நன்றி..

Jayadev Das said...

@ Anonymous December 31, 2011 8:48 PM

நீங்க சொந்த ID வந்திருந்தா மூச்சி முகரை எல்லாம் பேந்திடும் என்று தெரிஞ்சுகிட்டு அனானியாக முகமூடி போட்டுக்கிட்டு வந்து பின்னூட்டம் போடும் அளவுக்கு என் மேல பயம் கலந்த மரியாதை வச்சிருக்கீங்க! அதை நான் மதிக்கிறேன். முட்டாள்களை புத்தி சொல்லி புரிய வைப்பது கஷ்டம் என்று தெரிஞ்சும் சில சமயம் நான் அந்த தப்பை செய்திருக்கிறேன், இனி செய்ய மாட்டேன், எனவே இங்கே என்னை அனாவசியமாகச் சீண்டும் வேலை வேண்டாம், மீறினால் சூரியனைப் பார்த்து குறைக்கும் நாயாகி விடுவீர்கள். அப்புறம் உங்கள் இஷ்டம். [பி.கு.:அனானிகள், கெட்ட வார்த்தை பயன்படுத்துபவர்கள், முட்டாள்கள், லாஜிக் இல்லாமல் பேசுபவர்களுக்கு இனி நாம் பதிலளிக்கப் போவதில்லை.]

இராஜராஜேஸ்வரி said...

ஆபீசுக்கு வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து பார்த்தால் அது ஒரு கவிதை எழுதி வைத்திருந்தால் எப்படி
இருக்கும்? [

கம்ப்யூட்டரே ஒரு கவிதை எழுது

சுஜாதாவும் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு என்று ஒரு கதை எழுதினாரே!