இந்த வலையில் தேடவும்

Thursday, December 22, 2011

கலைடாஸ்கோப்-47

லைடாஸ்கோப்-47 உங்களை வரவேற்கிறது

இந்த லைடாஸ்கோப்-பை ஒரு கவிதையுடன் ஆரம்பிப்போம்

1
==
இவர்களும் தெய்வம்
----------------------

இவர்களும் தெய்வம்

காலை நேர கூட்ட நெரிசல்
நகரப் பேருந்தில்
ஐநூறு ரூபாய் நீட்டுகையில்
புன்னைகை மாறாமல் மீதி
சில்லரை எண்ணித்தரும் கண்டக்டர்...

நண்பர்களுடன் கூத்தடித்துவிட்டு
நள்ளிரவு தாண்டி வீடு திரும்பி
கதவு தட்டுகையில்
உடனே திறந்து
'சாப்பிட்டீங்களா' என்று கேட்கும் மனைவி

பயத்துடனும்
பதட்டத்துடனும்
ஆஸ்பத்திரி செல்கையில்
புன்னகை முகத்துடன்
'ரிலாக்ஸ்' என்று ஆறுதல் தரும் டாக்டர்

தனியான ரோட்டில்
தவித்து நின்று 'லிப்ட்' கேட்கையில்
உடனே நிறுத்தி
ஏற்றிக் கொள்ளும் இளை
ர்

எதிர்பாராமல் விடுமுறை
எடுத்துத் திரும்பிய போதும்
எரிந்து விழாமல்
HOW WAS THE VACATION என்று கேட்கும்
மேனேஜர்

1 .1
====

ஹலோ! என்னது? சாரி இவர்களையெல்லாம் இந்த லிஸ்டில் சேர்க்க முடியாது.

- வீட்டுக்கு வந்த உடனேயே கிளம்பி விடும் விருந்தாளி
- வார இறுதியில் ஊருக்கு கிளம்பி விடும் மனைவி
- Progress Report டில் கேள்வி கேட்காமல் கையெழுத்துப் போடும் அப்பா
- பேங்க்கில் நம் முகத்தைப் பார்த்து பதில் சொல்லும் வங்கி ஊழியர்


2
==

இன்று தான் பண்டிகை. உங்களிடம் இருக்கும் சிறந்த ஆடைகளை இன்றே அணியுங்கள் -யாரோ

மனிதர்களைப் பொதுவாக இரண்டு பிரிவுகளில் கொண்டுவரலாம்.(1 ) எதிர்காலத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்பவர்கள்.(2 ) அப்படி அலட்டிக்கொள்ளாமல் நிகழ்காலத்தை அனுபவிப்பவர்கள்.

இன்று பெருகி வரும் ஜோசியக்காரர்களாலும் , ஷேர் மார்க்கெட், இன்சூரன்ஸ் ஆசாமிகளாலும் டைப்-2 மக்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு ஜென் ஞானியைப் பார்த்து நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதன் காரணம் என்ன? என்று கேட்க அவர் இப்படி சொல்கிறார்."என் எதிர்காலத்தைப் பற்றி இரண்டு சாத்தியக்கூறுகள் தான் இருக்கின்றன. ஒன்று: அது மிக மோசமாக , துன்பங்கள் நிறைந்ததாக இருப்பது.அப்படி இருந்தால் அதைப் பற்றி நான் இப்போதே ஏன் கவலைப்பட வேண்டும்? எதிர்காலம் தான் நன்றாக இல்லை. அதனால் இந்தக் கணத்தை முழுவதுமாக அனுபவித்து நிகழ்காலத்திலாவது மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று நினைப்பேன். இரண்டாவது , நம் எதிர்காலம் மிகவும் ஆனந்தமாக , துன்பங்கள் இன்றி இருப்பது.
சரி, அப்படி இருந்தால் சந்தோஷம் தானே, நிகழ்காலத்திலும் மகிழ்ச்சியாக இருப்பேன்"

ஆனால் இப்படிப்பட்ட பக்குவம் நம்மில் பலபேருக்கு இருப்பது இல்லை.எதிர்காலத்தைப் பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கவே செய்கிறது . எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். (திட்டமிடுங்கள்) ஆனால் கவலைப்படாதீர்கள் என்று சொல்வார்கள். அதாவது நாளை காலை என்ன டிபன் செய்யலாம் என்று சிந்தித்து உப்புமாவா அப்படியென்றால் ரவை, ப.மிளகாய், கருவேப்பிலை,கொத்தமல்லி, இஞ்சி இதையெல்லாம் இன்றே வாங்கி வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.ஆனால் 'உப்புமா நன்றாக வருமா? அவருக்கு பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? அடியில் தீய்ந்து போய் விடுமா?உப்பு ஜாஸ்தியாகப் போட்டு விடுவோமா? என்றெல்லாம் ராத்திரியே ஓவராகக் கவலைப்படுவது வேண்டாம்.

நாம் பள்ளியில் படித்த காலத்தில் நமக்கு இந்த இரண்டு வகை நண்பர்களும் இருந்திருப்பார்கள்.அடுத்த மாதம் பரீட்சை என்றால் இன்றைக்கே அவர்களுக்கு கைகால் உதற ஆரம்பித்து விடும்.'The dates in the Calendar are closer than they appear' என்று நினைப்பவர்கள் அவர்கள் . அடுத்து, நாளை பரீட்சை என்ற போதும் இன்று கூலாக இருப்பவர்கள்.[அரைகுறையாகப் படித்தவனுக்கு தான் பயம் இருக்கும். முழுதாகப் படித்தவனுக்கும் எதுவுமே படிக்காதவனுக்கும் பரீட்சை பயம் நஹி]

இவர்கள்,
நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பணும்
நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்
நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதனுக்கு என்று ஜாலியாகப் பாடும் ஐஸ்வர்யாராய் டைப்.

இரண்டு வகைகளிலும் Extreme ஆகப் போகாமல் இருப்பது நல்லது. நாளைய கவலையில் இன்றின் இனிமைகளை இழந்து விட்டு பைத்தியம் ஆகவும் வேண்டாம். Tomorrow doesn't exist என்று ஹிப்பி போல திரியவும் வேண்டாம். நாளைக்கு என்று சாக்ஸை இன்றைக்கே துவைத்து உலர்த்தி விடுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் பக்கத்தில் உட்காருபவருக்காகவாவது சாக்ஸைத் துவைத்து அணியவும்.

4
==

சன் டி.வியில் வெள்ளிக்கிழமை தோறும் காலை எட்டுமணிக்கு 'இனி அச்சம் இல்லை' நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 'கோபுடோ' கிருஷ்ணமூர்த்தி என்பவர் கராத்தே எனப்படும் தற்காப்பு கலையின் நுணுக்கங்களை பொறுமையாக , 'பாருங்கல், இதை நன்றாகப் பயிற்சி செய்யுங்கல், ஆனால் உங்கலுக்கு ஒரு சரியான கராத்தே பல்லியில் பயிற்சி அவசியம் (?) என்பதை மறந்து விடாதீர்க
ல் என்று அலகு தமிழில் மன்னிக்கவும் அழகு தமிழில் உரையாற்றுவார். வேலைக்குப் போகும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்( + ஆண்கள்) இந்த தற்காப்பு உத்திகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தான். btw, எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்:-

தமிழ் சினிமாக்களில் (அல்லது இந்திய சினிமாக்களில்) ஏன் ஹீரோயின்கள் சண்டை போடுவதே இல்லை? So called பெண்ணியவாதிகள் கவனிக்க. உதாரணமாக , கொழுக் மொழுக் என்று அமுல் பேபி போல இருக்கும் ஹீரோயின்கள் வில்லன் க்ரூப்பிடம் சிக்கி அலறுவார்கள்; கதறுவார்கள்; கண்ணீர் விடுவார்கள். 'என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா' என்று அபலையாக டயலாக் பேசுவார்கள். ஏம்மா? ஆப்பிள் ஜூஸ், கேரட் ஜூஸ் எல்லாம் குடித்து உடம்பை நன்றாக வளர்த்து வைத்திருக்கிறாயே , குறைந்த பட்சம் காலால் ஒரு ரவுடியை எட்டி உதைக்கக் கூடவா முடியாது? இல்லை. ஹீரோயின்கள் உதைக்க மாட்டார்கள். கொத்தவரங்காய் உடம்பு வைத்திருக்கும் ஒல்லிப்பிச்சி ஹீரோ வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அந்த ஒ.பி ஹீரோ அந்த உடம்பை வைத்துக் கொண்டு பறந்து பறந்து இயற்பியல் விதிகளை மீறி ஒரு ஐம்பது பேரை அசால்ட்டாக அடித்துப் போட்டு விட்டு , நெற்றியில் ஒரு சிறிய தக்காளி சாஸ் மார்க்குடன் ஹீரோயினை மீட்பார்.ஒல்லியாக இருந்தாலும் ஹீரோ தான் சண்டை போட வேண்டும்.அது நமீதாவாக இருந்தாலும்,ஹீரோயின் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிர்கதியாக நிற்க வேண்டும் என்ற ஆணாதிக்கமா இது?

3
==
[ நாலுக்கு அப்புறம் மூணு. நாங்களும் நான்-லீனியர் ஆக எழுதுவோம் இல்ல?சாரு நிவேதிதா மன்னிக்கவும் ]

எதற்கு சொல்கிறேன் என்றால் பெண்கள் தற்காப்பு உத்திகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. எப்போதாவது ஆபத்தில் மாட்டிக் கொண்டால் 'நாம் அழுது கொண்டே நிற்போம். எங்கிருந்தாவது கொத்தவரங்காய் ஹீரோ வந்து காப்பாற்றுவார் 'என்று காத்திருப்பது முட்டாள்தனம். அந்த கொத்தவரங்காய் ஹீரோ அந்த சமயத்தில் வீட்டில் மனைவிக்காய் சின்சியராய் வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்.எனவே தன் கையே தனக்கு உதவி.

ஆனால் இப்படி வாராவாரம் டி.வியில் வந்து புதிய புதிய 'உத்திகளை' சொல்லித் தருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. Jack of all fruits ; but master of none என்ற கதை ஆகி விடக்கூடாது.பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்! ரவுடி வந்து தாக்கும் போது ஃபிரன்ட் கிக் கொடுக்கலாமா எல்போ ப்ளாக் செய்யலாமா ,ஹைப்பர் ட்விஸ்ட் பண்ணலாமா என்று யோசிப்பதற்குள் மேட்டர் முடிந்து விடும். தற்காப்பு உத்திகள் தெரிந்திருப்பதை விட முக்கியமானது 'Presence of Mind ' எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்ற சுய அறிவு. நாம் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும் சமூகத்தில் நம்மை எடுத்துக் காட்டுவது இந்த Presence of mind தான் என்றால் மிகையாகாது.உதாரணமாக நாம் ஒரு கூட்டத்திலோ கான்ஃபரன்சிலோ பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட வார்த்தை நமக்குக் கிடைக்காமல் திண்டாடுவோம்.அது எளிமையான, நமக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் அது எப்போது வரவேண்டுமோ அப்போது வரவில்லையே ! பின்னர் நாம் அந்த கவலையிலேயே மீதியை சொதப்பி விடுவோம்.கடுகு சிறய பொருள் தான். ஆனால் அது தேவையான போது , எண்ணெய் காய்ந்து வாணலியில் ரெடியாக இருக்கும் போது, பக்கத்தில் கைக்கு எட்டும்படி இருக்க வேண்டுமே?It's not the availability, it's availability when needed!

எதையுமே எண்ணிக்கையில் அளவுக்கு அதிகமாகக் கற்றுக் கொள்வதில் சிக்கல் தான். மாமி ஒருவர் இருக்கிறார். நவராத்திரிக்கு பாடச் சொன்னால் தயங்கித் தயங்கி யோசித்து யோசித்தே கடைசிவரை பாடாமல் விட்டு விடுவார். ஏன் என்று கேட்டால் 'அது என்னன்னா ஒரே ஒரு பாட்டை கத்துண்டா பிரச்சினை இல்லை.எங்க போனாலும் 'மனசுலோனி' என்றோ 'ப்ரோசேவாரெவருரா' என்றோ தைரியமாக (அபஸ்வரமாக) ஆரம்பிச்சுரலாம். ஆயிரம் பாட்டு தெரிண்டுண்டதால தான் சிக்கலே' என்று சொல்வார்!


5
==

'நான் ரொம்ப சின்ன ஆள்' 'சராசரிக்கும் குறைவான உயரம்' 'நான் ஒரு பூச்சி' -இப்படியெல்லாம் புலம்புவதை இனிமேல் நிறுத்திக் கொள்ளவும், Intelligence எனப்படும் புத்திக்கூர்மையை ஆய்வு செய்யும் வி
ஞ்ஞானிகள் பெரிய உருவத்துக்கு புத்திக் கூர்மை குறைவு என்கிறார்கள்.(Bigger Not Necessarily Better, When It Comes to Brains ) டைனோசர்கள் அழிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். டைனோசர்கள் உருவத்தில் பெரியவை என்றாலும் அவை அடிமுட்டாள்கள். யானைகளைப் பொதுவாக புத்திசாலி விலங்குகள் என்று சொன்னாலும் எது ஏன் லூசு மாதிரி மனிதனுக்கு அடங்கி நடக்கிறது என்று கேள்வி கேட்கிறார்கள் சிலர்.சில மரங்கள் எத்தனையோ அடி உயரம் வளர்ந்து ஓங்கி உயர்ந்து நிற்கின்றன.ஆனால் மரங்களுக்கு ஒரே ஒரு அறிவு தான் என்று நமக்குத் தெரியும்.உருவத்தில் தக்கனூண்டு இருக்கும் சில பூச்சிகள் (உ.தா: தேனீ) மனிதனை விட பலமடங்கு புத்திசாலித்தனம் மிக்கவை என்கிறார்கள். ஏனென்றால் நமக்கு ஒரு சிங்கிள் ரூமைக் கட்டுவது என்றாலும் கூட அதற்கு வரைபடம், சர்வே, அது இது என்று எத்தனையோ Paperwork தேவைப்படுகிறது.ஆனால், தேனீ இஞ்சினியரிங் டிராயிங், Span -length ratio ,slenderness ratio , critical load இதையெல்லாம் படிக்காமலேயே ஏர் கண்டிஷன் வசதியுடன் அருமையான கூடு கட்டுகிறது. தேனியை விட எறும்பு இன்னும் புத்திசாலித்தனமானது.

மனிதன் சில(பல) சமயம் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறான்.இது ஏன் என்றால் மனித உடலின் சைசுடன் ஒப்பிடும் போது அவன் மூளை தேவையில்லாமல் பெரிய சைஸுடன் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனித உடலின் அளவுக்கு அவன் மூளை ஒரு நெல்லிக்காய் சைசுக்கு இருந்தால் போதுமாம்! மனித மூளையை ஆராய்ச்சி செய்யும்
விஞ்ஞானிகள், அதில் தேவையில்லாமல் ஒரே விதமான சர்க்யூட்டுகள் மீண்டும் மீண்டும் வருவதாக சொல்கின்றார்கள். தேவையில்லாமல் இயற்கை ஏன் மனிதனுக்கு ஒரு மெகா சைஸ் மூளையைத் தேர்ந்தெடுத்தது என்று இன்னும் தெரியவில்லை.ஒரு வேளை சின்ன மூளையுடன் மனிதன் இன்னும் புத்திசாலியாக இருந்து எங்கே தனது ரகசியங்களை அறிந்து கொண்டு விடுவானோ என்று இயற்கை நினைத்திருக்கலாம். மனிதன் கொஞ்சம் அல்பமாக 'ச்சே நேத்து திருமதி செல்வம் பார்க்கவில்லையே, அர்ச்சனாவுக்கும் செல்வத்துக்கும் சண்டை வந்ததா தெரியலையே, கண்டக்டர் இன்னும் மூணு ரூபாய் பாக்கி கொடுக்கலையே, நேத்து வாங்கின சட்டை சரியா ஃபிட் ஆகுமா' போன்ற கவலைகளில் ஈடுபட்டு கலங்கும் வண்ணம் இயற்கை படைத்திருக்கிறது.

மேலும் சொல்வதென்றால் அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர்கள் மெகா சைசில் இருந்தன. இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்லும் கணக்கைப் போடும்
கம்ப்யூட்டர்கள் ஒரு பெரிய ஹால் சைசுக்கு இருந்தன.மேலும் இரண்டும் இரண்டும் நாலு என்று சொல்ல பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு ஏதோ பெரிய வேலையை செய்து விட்டது போல வேகமாக சூடு வேறு அடைந்தன. ஆனால் இன்று VLSI தொழில்நுட்பத்தில் ஒரு குட்டியூண்டு பிராசசர் எமகாதகக் கணக்குகளைக் கூட அனாயாசமாக மைக்ரோ செகண்டுகளில் செய்து முடிக்கிறது. நேனோ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் இன்னும் உள்ளே போய் ஒவ்வொரு எலக்ட்ரானையும் ஒவ்வொரு டிரான்சிஸ்டராக செய்யமுடியுமா என்று யோசிக்கிறார்கள்.

சரி உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கலாம். அத்தனை பெரிய மூளை சும்மா தானே இருக்கிறது?

கீழே உள்ள வாக்கியங்களைப் படியுங்கள். அப்படியே படிக்காமல் அவை எந்த வண்ணத்தில் உள்ளனவோ அதைப் படியுங்கள். உதாரணம் பச்சை என்று படிக்காமல் நீலம் என்று படிக்கவும்.

சிவப்பு

நீலம்

கிளிப்பச்சை

கறுப்பு

ஆரஞ்சு

மஞ்சள்

கருநீலம்

வெள்ளை

பிங்க்


வயலட்

6
===

இது ஒரு ஸ்பெஷல் கவிதை. என்ன ஸ்பெஷல் என்று யாராவது கண்டுபிடிக்கிறீர்களா பார்க்கலாம்.கவிதையிலேயே க்ளூவும் இருக்கிறது.

அறுவை ! சே! கணிதம் !
ஒ! வடிவத்தை
வீசியெ
றிந்துவிட்டு
நீர்
வாழ்க்கையினை
போதிப்பீர்
இங்கே!
சூத்திரம்
தேற்றங்கலெலாம்
சலிப்பாயிருக்குது
வெளியுலகிற்கு
கூட்டிச்செல்லுவீர்
எம்மை!

7
===

ஒரு ஓஷோ ஜோக்.

ஒரு பெண்மணி டாக்டரிடம் சென்று "டாக்டர் கண்ணாடில பார்த்தேன்,.என் முகம் பூராவும் சுருக்கங்கள். தலைல நிறைய வெள்ளை முடிகள். தாடைக்குக் கீழே சதை கூட கொஞ்சம் தொங்குகிறது.உதடு கருத்துப் போச்சு. எனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது போல இருக்கு. இதை மாற்ற முடியுமா? எனக்கு நல்ல செய்தியே இல்லையா? என்றாள் கவலையாக.

டாக்டர் 'ஏன் இல்லை? இப்போதே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன்' என்றார்....

பெண்மணி : ' என்ன டாக்டர் அது'?

டாக்டர்: 'வாழ்த்துக்கள்..உங்கள் கண்பார்வை நன்றாக இருக்கிறது'முத்ரா


13 comments:

Jayadev Das said...

\\கொழுக் மொழுக் என்று அமுல் பேபி போல இருக்கும் ஹீரோயின்கள்\\ இந்த மாதிரி இருக்கிறவங்க அடிச்சா எங்கே பாஸ் வலிக்கும்? இதுங்க அடிக்கிறது வேற விதத்துல. ஆண் அடிச்சா உடம்புதான் வலிக்கும், இவளுங்க லவ்வு பண்ணுறேன்னு சொல்லி டிமிக்கி குடுத்துடுவாளுங்க, இவளுங்க கிட்ட ஏமாந்தவனுக்கு வாழ் நாள் முழுக்க நெஞ்சு வலிதான். இல்லைன்னா ஏதாவது பொய்யைச் சொல்லி மாட்டி விட்டுடுவாளுங்க, மாட்டினவன் செத்தான். [But, பெண்களிலும் நல்லவர்களும் இருக்காங்க என்பதையும் ஒத்துக்கறேன் பாஸ். ஹி..ஹி..ஹி..ஹி..ஹி....]

Jayadev Das said...

\\எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். (திட்டமிடுங்கள்) ஆனால் கவலைப்படாதீர்கள் என்று சொல்வார்கள்.\\ இது எனக்கு ரொம்பவும் தேவையான யோசனை பாஸ், ரொம்ப நன்றி.

Jayadev Das said...

\\மனிதன் சில(பல) சமயம் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறான்.இது ஏன் என்றால் மனித உடலின் சைசுடன் ஒப்பிடும் போது அவன் மூளை தேவையில்லாமல் பெரிய சைஸுடன் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\\ இயற்கையின் படைப்பு என்னக்குமே பெர்பெக்ட் பாஸ். எதுவுமே காரணமில்லாமல் இல்லை, ஏன் மனித மூளை அந்த சைசில் இருக்கிறது என்று இந்த மாங்கா மடையனுங்களுக்கு பின்னால் ஒரு நாள் தெரியவரும், அன்னைக்கு சொல்லுவானுங்க, காரணத்தோடுதான் படைக்கப் பட்டிருக்கிறதுன்னு!!

Jayadev Das said...

\\கீழே உள்ள வாக்கியங்களைப் படியுங்கள். அப்படியே படிக்காமல் அவை எந்த வண்ணத்தில் உள்ளனவோ அதைப் படியுங்கள். உதாரணம் பச்சை என்று படிக்காமல் நீலம் என்று படிக்கவும்.\\ இதில என்ன சூட்சுமம் இருக்குன்னு சொல்லுங்களேன்?

Jayadev Das said...

\\டாக்டர்: 'வாழ்த்துக்கள்..உங்கள் கண்பார்வை நன்றாக இருக்கிறது'\\ Good point!!

இரா. கண்ணன் said...

Color : VIBGYOR

சமுத்ரா said...

//இந்த மாங்கா மடையனுங்களுக்கு//
என்னையும் சேர்த்து தானே?

சமுத்ரா said...

//இதில என்ன சூட்சுமம் இருக்குன்னு சொல்லுங்களேன்?//
மூளைக்கு இது ஒரு நல்ல Exercise .
மூளை பொதுவாக வார்த்தையை அப்படியே படிக்க முயலும்
அதை மாற்றி அதன் கலரைப் படிக்க வைப்பது கஷ்டம்.

Jayadev Das said...

\\என்னையும் சேர்த்து தானே? \\ ஹா...ஹா...ஹா.... இல்லை பாஸ். நம் உடல் உறுப்புகள் முதற்கொண்டு இந்த பிரமாண்டம் வரையிலும் ஒவ்வொன்னையும் கொஞ்சம் உத்து கவனிச்சுப் பார்த்தா எவ்வளவு துல்லியமாக கணக்கிடப் பட்டு உருவாக்கப் பட்டுள்ளது என்பது தெரியும். நமது கண்களையே எடுத்துக் கொள்ளுங்கள், உலகின் மிகச் சிறந்த கேமராவின் தொழில் நுட்பத்தையும் மிஞ்சும் நேர்த்தி அதில் உள்ளது. ஒவ்வொன்றும் பக்காவாகத் திட்டமிடப் பட்டு உருவாக்கப் பட்டுள்ளது. மூளை சைஸ் மட்டும் என்ன சும்மாவா உருவாக்கப் பட்டிருக்கும்? அதையும் நேர்த்தியாகவே வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும், இவர்களுக்கு இப்போது புரியவில்லை, அவ்வளவுதான்.

ஷர்புதீன் said...

nice!

கத்தார் சீனு said...

இவர்களும் தெய்வம்....அருமை !!!

எனக்கு ரொம்ப நாளா இந்தப்பாட்டில் ஒரு சந்தேகம்
"நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பணும்"
எனும் கவிஞர் , மறுபடியும் இப்படியும் சொல்றாரு...
இது முரண் தானே???
"நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனுவுகள் பலிக்காதோ
கனவே கை சேர வா "

சமுத்ரா said...

கத்தார் சீனு, எனக்கும் அதே சந்தேகம் தான்:)

Sri said...

:-) - nice one as usual.....