இந்த வலையில் தேடவும்

Wednesday, December 28, 2011

கலைடாஸ்கோப்-48

லைடாஸ்கோப்-48 உங்களை வரவேற்கிறது

#
You can't just ask customers what they want and then try to give that to them. By the time you get it built, they'll want something new -Steve Jobs

'புதிய' என்ற இந்த வார்த்தை நமக்கெல்லாம் மிக கவர்ச்சிகரமானது.இது புதிய சோப்புக்கும் பொருந்தும் புதிய காருக்கும் பொருந்தும்.புதிய வீட்டுக்கும்! நீண்ட காலங்களுக்கு முன்பு வீட்டுக்கு முதன்முதலில் டி.வி. வந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.டி.வி என்றால் இப்போது இருப்பது போல எல்,ஈ.டி , வால் மவுன்ட் , டாடா ஸ்கை போன்ற அதீத மிகைகள் இல்லாத தூர்தர்ஷன் மட்டுமே தெரியக்கூடிய சின்ன கறுப்பு வெள்ளை போர்டபிள் டி.வி.கேபிள் டி.வி கூட அப்போது வழக்கத்தில் இல்லை. One and only தூர்தர்ஷன் ! ரிமோட் என்பது அப்போது கேள்விப்படாத ஒரு பெயர்.டி.வியில் டொக்கு டொக்கு என்று சானலைத் திருப்பும் குமிழ் ஒன்று இருக்கும். கேபிள் டி.வி இல்லாததால் அது உபயோகிக்கப் படாமலேயே இருக்கும்.

இப்படிப்பட்ட டி.வி முதன்முதலில் வீட்டுக்கு வந்த போது ராமர் தன் வீட்டுக்கு வருவதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்த சபரி போல உணர்ந்தோம்.டி.வி யுடன் வரும் ஒரு சுகமான அவஸ்தை ஆண்டெனா.அப்போதெல்லாம் வீட்டின் மேல் ஆண்டெனா இருந்தாலே அவர்கள் கொஞ்சம் 'பெரிய ஆள்' . நம் ஒட்டு வீடு மீது அண்டெனா ஏறி அமர்ந்ததும் சமூக அந்தஸ்து ஒரு படி உயர்ந்து விட்டது போல (?) உணர்ந்தோம்.ஆன்டெனாவின் கரங்கள் சினிமா நடிகையின் பல் வரிசை போல ஒரே சீராக இருந்தால் தான் கீழே படம் நன்றாகத் தெரியும். காற்றில் கலைந்து விட்டால் தம்பியை ஓட்டின் மீது ஏறி வானரசேஷ்டை செய்யும்படி பணிக்க வேண்டி இருக்கும்! தூர்தர்சனில் பெரும்பாலும் 'பென்சில்' என்று செல்லமாக அழைக்கப்படும் சிம்பல் ஒன்று கூஊஊஊஊஊய் என்ற சத்தத்துடன் வந்து கொண்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மகாபாரத், சந்திரகாந்தா போன்ற சரித்திரத் தொடர்கள், சித்ரஹார் , சித்ரமாலா மேலும் சமந்தர்,சுவாபிமான்,ஔரத் போன்ற சீரியல்கள்..!!தூர்தர்சனைப் பார்த்தே பாட்டியும் அம்மாவும் அக்காவும் பாதி ஹிந்தி கற்றுக் கொண்டு விட்டிருந்தார்கள்.

டி.வி வந்த புதிதில் அதை ஒரு Royal guest போல பாவித்து, அதை கவர் போட்டு மூடி வைக்க வேண்டும்.(நீலக்கலர் கவர் போட்டால் கறுப்பு-வெள்ளை-நீல(கலர்) டி.வி என்ற பெருமை வேறு) .தினமும் ஒருவர் சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மணிநேரத்துக்கு மேல் தொடர்ச்சியாகப் போடக்கூடாது (ஹீட் ஆகி விடுமாம்) ,குமிழ்களை தேவையில்லாமல் திருகக் கூடாது, ஸ்டேபிலைசர் போடாமல் டி.வி போடக்கூடாது என்ற விதிமுறைகளை நாங்களே வகுத்துக் கொண்டோம் !!

வந்த புதிதில் அப்படி உலக அதிசயமாகத் தோன்றிய டி.வி இப்போது வீட்டில் குப்பை துடைக்க ஆள் இன்றி பரிதாபமாக
உட்கார்ந்திருக்கிறது.
(of course , இது வேறு டி.வி)

பழகப் பழக பால் மட்டும் அல்ல டி.வி, செல்போன், கார், ஐ-பாட் ,மனைவி எல்லாமும் புளிக்கும்.

##
[மலரும் நினைவுகளில் ஆழ்ந்து போகாமல் இந்தக் காலத்துக்கு வரவும்]

-வோடபோனில் இருந்து 123 டயல் செய்தால் சினிமா நட்சத்திரங்களின் height , வெயிட், டயட் எல்லாம் தெரிந்து கொள்ளலாமாம். சரி. முதலில் நான் ஏன் அவர்களின் வெயிட்டை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. அது எந்த விதத்தில் எனக்குப் பயன்படும் என்றும் தெரியவில்லை.இது மாதிரி அபத்தங்களை செய்யாமல் இருப்பது நமக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது. நமக்கு எப்படி நல்லது என்றால் அந்த நேரத்தில் நாம் வாழ்க்கைக்குத் தேவையான வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

நட்சத்திரங்களை மிகையாக தலையில் தூக்கிக்கொண்டு ஆடாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது.பின்னாளில் அதே ரசிகர்களால் பரிதாபகரமாகப் புறக்கணிக்கப்படும் போது அவர்களுக்கு அது பெரிதாக வலிக்காமல் இருக்கும்.

-- இப்போதெல்லாம் இந்திய தடகள வீராங்கனைகள் தங்கம் வென்றார்கள் என்ற செய்தியைக் கேட்டு சந்தோஷப்பட முடிவதில்லை. மிக விரைவிலேயே அவர்கள் ஜெயித்தது செல்லாது. ஊக்க மருந்து சாப்பிட்டார்கள் என்று இன்னொரு செய்தி வருகிறது. வீராங்கனைகளே, வீரர்களே, உலகிலேயே சிறந்த, ஆனால் (இன்னும்) தடைசெய்யப்படாத ஒரு ஊக்கமருந்து இருக்கிறது. அதன் பெயர்--------------------------'மனம்'


###

மனம் ஒரு சிறந்த ஊக்க மருந்து என்று சொன்னோம். ஆனால் இது நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு.'ஓஷோ' என்ன சொல்கிறார் என்றால் ஜப்பானின் சாமுராய்கள் ஒரு மனமற்ற நிலையில் சண்டை போடுகிறார்கள் என்கிறார். ஏனென்றால் மனம் அல்லது மூளை என்பது காலத்தால் இயங்குவது.மனம் செயல்படுவதற்கு காலம் வேண்டும்.அதனால் ஆக்ரோஷமான ஒரு சண்டையில் மனத்தை நம்பி இறங்க முடியாது. சாமுராய்கள் தங்கள் சக்தியை தொப்புளுக்குக் கீழே இருக்கும் 'ஹரா' என்ற மையத்தில் குவிக்கிறார்கள்.ஹரா, காலம் கடந்த ஒரு பரிமாணத்தில் இயங்கக் கூடியது.அந்த மையத்தில் சக்தியைக் குவித்த சாமுராய்-களுக்கு எதிரி தாக்கும் முன்பே அவன் எங்கே தாக்கப் போகிறான் என்று தெரிந்து விடுகிறது.எனவே எதிரி தாக்கும் முன்பே அவர் தன்னைத் தற்காப்பு செய்து கொள்ளத் தயாராகி விடுகிறார்.

போதிதர்மர் இந்த மாதிரி ஒரு சண்டைப்பயிற்சி தான் மேற்கொண்டார். ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யா (போதிதர்மர்) சண்டை போடும் போது அவர் முகத்தில் ஒரு வித அமைதி, ஒருவித தியான நிலை நிலவுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் . பரிட்சையில் வரும் கேள்வி எல்லாம் முதல் நாளே தெரிந்து விட்டால் நம் முகம் எப்படி டென்ஷன் இன்றி அமைதியாக இருக்குமோ அப்படி. எதிரி என்னதான் கொம்பனாக இருந்தாலும் அடுத்து அவன் எங்கே தாக்கப்போகிறான் என்று அவர்களுக்குத்
தெரிந்து விடுகிறது.இரண்டு சாமுராய்கள் சண்டை போட்டால் அது இன்னும் அழகானது. இன்று பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் நாம் பார்க்கும் சண்டைகள் அசிங்கமானவை.ஹீரோ கண் சிவந்து, முடி கலைது
ந், பல்லைக் கடித்து,நரம்பை முறுக்கி,,,,,,Can 't help !

உலகின் மிகப் பெரிய கணித மேதையான ஹார்டி , ஒரு குறிப்பிட்ட புதிரை விடுவிக்க ஆறுமணிநேரம் எடுத்துக் கொண்டாராம். அதே புதிரை நம் ராமானுஜத்திடம் சொன்னபோது அவர் ஒரு சில வினாடிகளில் விடையை சொல்லி விட்டாராம். ராமானுஜம் அவர் முன் பிறவியில் ஹரா சக்கர பயிற்சி பெற்ற ஒரு சாமுராயாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார் ஓஷோ.

####

இப்போதெல்லாம் போர்கள் நடப்பதில்லை. விலங்குகள் நல அமைப்புகள் பெருகி வருகின்றன.'புற்கள் மீது நடக்காதீர்கள்' என்று போர்டுகளைப் பார்க்கிறோம்.ஜீவ காருண்யம் மலிந்து எல்லாரும் வள்ளலார், புத்தர் ஆகி விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் ஒன்று நிச்சயம்.Torture என்பது Physical என்ற நிலையில் இருந்து Mental என்ற நிலைக்கு நகர்ந்து உள்ளது. உடல் அளவில் ஒருவரைக் கொடுமைப்படுத்தாமல் மன அளவில் டார்ச்சர் கொடுப்பது.இப்போதெல்லாம் கணவன் மனைவியை கைநீட்டி அடித்தால் (கைநீட்டாமல் எப்படி அடிப்பது?) குறைந்த பட்சம் ஆறுமாதம் உள்ளே போட்டு விடுகிறார்கள்.ஆனால் கோபத்தில் அடித்து விடுவது கூட நல்லது தான்.(அடிக்கிற கைதான் அணைக்கும்) ஆனால் மனைவியை/கணவனை மனவியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவது என்பது அடிப்படை விட மிகவும் வேதனை தரக்கூடியது. தாத்தா சண்டை போட்டுக் கொண்டு பாட்டியிடம் இரண்டு நாள் பேசாமல் இருந்தால் பாட்டி அவளே வாலண்டியராக அவரிடம் போய் சொல்வாள் "வேணும்னா என்னை நாலு அறை அறைஞ்சுருங்க, இப்படி பேசாமல் இருக்காதீங்க" என்று.

மெண்டல் டார்ச்சர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? போய் முதலில் ஏதாவது ஒரு மெகா சீரியலைப் பார்க்கவும்.

#####

என்.சொக்கன் தினம் ஒரு பா வெப்சைட்டில் தினமும் ஒரு தமிழ் செய்யுள் சொல்லி அழகாக விளக்கம் சொல்கிறார். நம் மக்கள் அதையெல்லாம் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும்.இருந்தாலும் ஒரு நப்பாசைக்கு சொல்கிறேன்.

அதில் என்னைக் கவர்ந்த ஒரு கம்பராமாயணப் பாடல்:

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்தபோதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன்மேல் இனி ஈவது என்னோ?

எனக்கு எந்த வருத்தமும் இல்லை- என் உள்ளம் கவர்ந்தவரின் அன்பு அத்தகையது. அதனால் காரியம் முடியும் வரை எதையும் அருந்த (க்கூட)மாட்டேன். தேன் போன்ற உன் அன்பினால் என்னை கட்டிப் போட்டாய்.அதுவே எனக்கு இங்கு தங்கி இளைப்பாறி நுகர்ந்த சுகத்தைத் தந்து விட்டது, இனி எனக்கு நீ எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை. வழியை விடு என்று ராமகாரியத்திற்காக ஏகிய அனுமன் தன்னைத் தடுத்த மலைப்பெண்ணை நோக்கி சொல்கிறான்.

மனைவியைப் பிரிந்து நீண்ட நாள் வெளியூர் செல்லும் ஆண்கள் தங்கள் முன் எதிர்ப்படும், பழகும் பெண்களைப் பார்த்து இந்த பாடலை மனதுக்குள் சொல்லிக் கொள்வது நல்லது.ஒரு சின்னத் திருத்தத்துடன் : வருந்தேன் அது என் துணை ஆனவள் வைத்த காதல்.. மீதிப் பாட்டில் எந்த மாற்றமும் வேண்டாம். கம்பர் மன்னிப்பாராக!


//நம் மக்கள் அதையெல்லாம் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும்// இதற்காகக் கோபப்படாதீர்கள். உதாரணம்:

-ஏழாம் அறிவு -திரைப்பட விமர்சனம் ( 34 கமெண்ட்ஸ்)
-ஆண்டாள் திருப்பாவை (மார்கழி ஸ்பெஷல்) (1 கமெண்ட்)

#####

ஒரு கவிதை. கவிதை என்பதை விட ஒரு ரெக்கார்டிங்.


மணி 1.00: டேபிள் 8- கே ஒந்து சின்ச்வான் ஃபிரைட் ரைஸ், கோபி மன்சூரி

மணி 1:45: டேபிள் -5 க்கே நூடுல்ஸ், மோசம்பி ஜூஸ்

மணி 2:00: டேபிள் -2 கே பட்டர் நான் , கோபி சில்லி, ஒந்து பாலக் பனீர்

மணி 2:45:
டேபிள் 8- கே மசாலா பப்பட், பட்டர் குல்ச்சா, ஜீரா ரைஸ்,வாடர் பாட்டில்

மணி 3:15: டேபிள் 1- கே சப்பாத்தி, ஆலு கோபி, ஆரஞ் ஜூஸ், பெப்சி

மணி: 3:30 : டேபிள் -4 க்கே ரொட்டி, சன்னா மசாலா , ஆப்பிள் ஜூஸ், ரவா தோசா பார்சல்

மணி 4.15 :குரு , ஒந்து அன்னா சாம்பார் கொடி..
(சர்வர் சாப்பிட உட்காருகிறார்)

(அன்னா சாம்பார்=சாதம் + சாம்பார்)



######

என்னைக் கவர்ந்த ஓர் எஸ்.எம்.எஸ்:

Breakup Story:

Girl - Hi baby :)
Boy - Hi my Love :)
(Sending Failed)

Girl- Are you there?
Boy - Yes Darling. I'm all here
(Sending Failed)

Girl- R U ignoring me or what?
Boy - Honey I'm not
(Sending Failed)

Girl: It's over. Don't ever talk to me..Good bye :(
Boy: Damn! Go to Hell
(Message Sent)

#######

சுபாஸ் என்ற நண்பர் பிங் செய்து லைடாஸ்கோப் ஆண்டாள் எல்லாம் இருக்கட்டும் முதலில் ௮-௮-௮ தொடர்ந்து எழுதுங்கள். நூறு எபிசோடு முடிந்ததும் புத்தகம் போடுங்கள்.முதல் ஆளாக நான் வாங்குகிறேன் (இதை அவர் சொல்லவில்லை. அப்படியே Flow -வில் வந்து விட்டது) என்றார். மேலும் 'ஒளியின் வேகம் மாறக்கூடியது ' என்பதை அப்போதே நீங்கள் கணித்து ௮-௮-௮ வில் சொல்லியிருக்கிறீர்கள் .இப்போது அதை நிரூபித்திருக்கிறார்கள்.(?!)நீங்கள் பெரிய ஆள் (well . இதையும் அவர் சொல்லவில்லை. FLOW !)என்றெல்லாம் சொன்னார்.

அ௮-௮ எழுதலாம் என்று உட்காரும் போது ஏனோ தூக்கம் தான் வருகிறது. இயற்பியல் கட்டுரைகளை படித்தால் இப்போதெல்லாம் எரிச்சல் தான் வருகிறது.எழுத்தாளர் சுஜாதா டெல்லியில் ஒரு தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுக்குப் போயிருந்தாராம். திரும்பும் வழியில் ரோட்டில் ஒரு ஏழைச் சிறுமி கவனிப்பாரற்று டிசம்பர் குளிரில் நடுங்கியபடி உட்கார்ந்திருந்தாளாம்.'உலகின் அத்தனை புத்தகங்களையும் எரித்து அவளுக்கு குளிர் காய்ச்சலாம் போல இருந்தது' என்று கற்றதும் பெற்றதும் -இல் எழுதி இருந்தார்.

நேற்று வழக்கம் போல ஆபீசுக்கு வந்த போது வெளியே ஒரு கிழவி பரிதாபமாக நின்று கொண்டு வருவோர் போவோரைப் பார்த்து கையேந்திக் கொண்டிருந்தாள்.செக்யூரிட்டிகள் , டிப்-டாப்பான ஆசாமிகள் நடமாடும் ஓர் எம்.என்.சி யின் வாசலில் இப்படி ஒரு 'காட்சி உறுத்தல் ' (eye -sore ) போல அவள் நின்று கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் 'இல்லி எல்லா நில்ல பாரது; ஆகடே ஹோகு..' என்று வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.ஒரு சில அடிகளில் தான் மனித வாழ்வில் எத்தனை வித்தியாசம்? ஏழைக் கிழவி ஒருத்தியின் ஒருவேளை பசிக்கு உதவாத சாப்ட்வேர் என்ஜினீயரிங்,
குவாண்டம் பிசிக்ஸ் இவையெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.

########

சரி. வழக்கம் போல கடைசியில் ஒரு ஓஷோ ஜோக்.

ஒரு பெண் கைரேகை ஜோசியக்காரரிடம் போனாள்.

அவள் கையைப் பார்த்த அந்த ஆள் " மனதைத் திடப்படுத்திக்கங்க.உங்க கணவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்" என்றான்

அவள் " அப்படியா, சரி. அப்படியே எனக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கான்னு கையைப் பார்த்து சொல்றீங்களா" என்றாள்.

என்னது அடல்ட் ஜோக் வேண்டுமா? கடைசியில் என்னையும் எழுத வைத்து விட்டீர்களே, ஓஷோவின் ஒரு அடல்ட் ஜோக்.

ஒரு அமெரிக்கப் பெண் ஒரு கறுப்பு ஆப்பிரிக்கனைக் காதலித்தாள்.அதை சிறிதும் விரும்பாத அவளது பெற்றோர் எப்படியாவது இதைத் தடுக்க வேண்டும் என்று அந்த ஆளை வீட்டுக்கு அழைத்து,

இதப்பாருப்பா "எங்க மகளுக்கு கல்யாணத்துக்குப் பின்னாடி 'உலகிலேயே சிறந்த மாளிகை' இருக்கணும்" என்றார்கள்

அதற்கு அவன் "Big Sam காதலிக்கிறான்; big Sam கட்டுவான்" என்று சொல்லிச் சென்றான்.

ஆறு மாதம் கழித்து ஒரு அழகான மாளிகையைக் கட்டிக் காண்பித்தான்.மீண்டும் வந்தான்.

இந்த முறை அந்த பெற்றோர்கள் "
இதப்பாருப்பா எங்க மகளுக்கு கல்யாணத்துக்கு உலகிலேயே காஸ்ட்லி டயமன்ட் பரிசாக அளிக்கணும்' என்றனர்.

அதற்கு அவன் "Big Sam காதலிக்கிறான்; big Sam வாங்குவான்"என்று சொல்லிச் சென்றான்.

ஒருமாதம் கழித்து உலகிலேயே விலை உயர்ந்த வைரத்துடன் வந்து நின்றான்.

கடைசியாக இதை எப்படியாவது தடுத்துவிட நினைத்த அவர்கள் "
இதப்பாருப்பா எங்க மகளுக்கு 'அது' பன்னண்டு இன்ச் இருக்கணும், இல்லைன்னா வேலைக்கு ஆகாது" என்றனர்.

அதற்கு அவன் "Big Sam காதலிக்கிறான் ; Big Sam வெட்டுவான் " என்றான்.

முத்ரா

12 comments:

adhvaithan said...

இல்லி எல்லா நில்ல பாரது; ஆகடே ஹோகு..//

material world.. kalapadam illatha sangeethamae commercial aanaprom ithellam enna solrathu...

intha ulagathula commercial aagama irukkara orae vishayam thaai paal, thanthaiyin idhayam matum taan.

பால கணேஷ் said...

தும்ப சந்தோஷா. எல்லாப் பகுதிகளும் ரசிக்க வைத்தன. (குறிப்பாக டி.வி. சம்பந்தப்பட்ட ஏரியா என்னையும் ப்ளாஷ்பேக்க வைத்தது.) அருமை. உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

bandhu said...

டி வி ரிமோட் வந்தவுடன் அதற்க்கு கூடவே வந்த வித வித ரிமோட் கவர்களை விட்டு விட்டீர்களே.. (இன்னும் அவை வழக்கத்தில் இருக்கிறதா?)

Aba said...

உலகிலேயே சிறந்த, ஆனால் (இன்னும்) தடைசெய்யப்படாத ஒரு ஊக்கமருந்து இருக்கிறது. அதன் பெயர்--------------------------'மனம்'//

மெண்டல் டார்ச்சர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? போய் முதலில் ஏதாவது ஒரு மெகா சீரியலைப் பார்க்கவும்.//

மிகச்சரி

-ஏழாம் அறிவு -திரைப்பட விமர்சனம் ( 34 கமெண்ட்ஸ்)
-ஆண்டாள் திருப்பாவை (மார்கழி ஸ்பெஷல்) (1 கமெண்ட்)//

ஆனால், உங்கள் 7ம் அறிவு பதிவைவிட ஆண்டாள் பதிவுதான் மறக்க முடியாதது என்பதில் சந்தேகமில்லை..

என்.சொக்கன் தினம் ஒரு பா வெப்சைட்டில் தினமும் ஒரு தமிழ் செய்யுள் சொல்லி அழகாக விளக்கம் சொல்கிறார். //

பகிர்வுக்கு மிக்க நன்றி.. கண்டிப்பாக படிக்கிறேன்..

மேலும் 'ஒளியின் வேகம் மாறக்கூடியது ' என்பதை அப்போதே நீங்கள் கணித்து ௮-௮-௮ வில் சொல்லியிருக்கிறீர்கள்//

அடடா... எங்களையும் ஸ்டாக்ஹோமுக்கு கூப்பிடுவீர்கள் அல்லவா? (No serious pls) :))

Jayadev Das said...

\\பழகப் பழக பால் மட்டும் அல்ல டி.வி, செல்போன், கார், ஐ-பாட் ,மனைவி எல்லாமும் புளிக்கும்.\\ சூப்பர் ..!! [நான் கூட கேபிளை பிடுங்கி விட்டுட்டேன்.]

Jayadev Das said...

\\வோடபோனில் இருந்து 123 டயல் செய்தால் சினிமா நட்சத்திரங்களின் height , வெயிட், டயட் எல்லாம் தெரிந்து கொள்ளலாமாம்.\\ நீங்க ஒன்னு பாஸ், சினிமா நட்சத்திரங்களின் வீட்டு நாயோட டயட் என்னன்னு போட்டாலே நம்ம சனம் அடிச்சி பிடிச்சிகிட்டு டயல் பண்ணும், நடிகன்/நடிகை சமாசாரத்தை சும்மா விடுமா! தீபாவளி பொங்கல் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் எல்லா டி.வி. சேனலிலும் இந்த மேட்டர் தானே ஓடுது.

Jayadev Das said...

\\போதிதர்மர் இந்த மாதிரி ஒரு சண்டைப்பயிற்சி தான் மேற்கொண்டார். ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யா (போதிதர்மர்) சண்டை போடும் போது அவர் முகத்தில் ஒரு வித அமைதி, ஒருவித தியான நிலை நிலவுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் .\\ ஆஹா, நம்ம முருகதாசு இவ்வளவு டீடெயிலாவா படத்தை எடுத்திருக்காரு?

Jayadev Das said...

\\ராமானுஜம் அவர் முன் பிறவியில் ஹரா சக்கர பயிற்சி பெற்ற ஒரு சாமுராயாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார் ஓஷோ.\\ இந்தியாக்காரன் பிறவியிலேயே திறமையுடன் இருந்தாலும் அதுவும் வெளிட்டு இறக்குமதி என்று தான் சொல்வார்களா? என்ன கொடுமை சார் இது?

Jayadev Das said...

\\ விலங்குகள் நல அமைப்புகள் பெருகி வருகின்றன.'புற்கள் மீது நடக்காதீர்கள்' என்று போர்டுகளைப் பார்க்கிறோம்.ஜீவ காருண்யம் மலிந்து எல்லாரும் வள்ளலார், புத்தர் ஆகி விட்டார்கள் என்று தோன்றுகிறது. \\ காட்டு விலங்குகள் ஒவ்வொன்னா காணாம போன காலம் போய் இப்போ உழவு செய்யும் காளைகளே இல்லாமல் போய் விடுமோ என்ற நிலைக்கு வந்து விட்டது பாஸ். எந்த காலத்துல இருக்கீங்க? கோழிகளும் ஆடுகளும் மட்டும் தான் மிஞ்சும் போல, ஏன்னா சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்ய அவை வேண்டும், இல்லாட்டி அதுவும் காலிதான்.

Jayadev Das said...

\\மணி 4.15 :குரு , ஒந்து அன்னா சாம்பார் கொடி..
(சர்வர் சாப்பிட உட்காருகிறார்)\\ மணிப்பால் மருத்துவமனை ஊழியர்கள் அதே மருத்துவ மனையில் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியாதாம், அதன் நிர்வாகம், அவர்களுக்கு ESI ஸ்கீமில் பணத்தைக் கட்டி தேவைப் பட்டால் அங்கே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறதாம், இது எப்படி இருக்கு!!

Jayadev Das said...

\\ஏழைக் கிழவி ஒருத்தியின் ஒருவேளை பசிக்கு உதவாத சாப்ட்வேர் என்ஜினீயரிங்,
குவாண்டம் பிசிக்ஸ் இவையெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.\\ இதுக்கு நாம் என்ன செய்ய முடியும் பாஸ்? இப்படிப் பார்த்தால் நாம் எதையுமே செய்ய முடியாது.

G.M Balasubramaniam said...

ஒரு முறை எழுதுபவன் கஷ்டம் ஏதும் தெரியாமல் ஒரு வார்த்தையில் பின்னூட்டம் இடுபவர் பற்றி அங்கலாய்த்திருந்தது நினைவுக்கு வருகிறது. இருந்தும் எழுதுகிறேன் “அருமை”.