இந்த வலையில் தேடவும்

Wednesday, September 21, 2011

கலைடாஸ்கோப்- 38

லைடாஸ்கோப்- 38 உங்களை வரவேற்கிறது

1
==

http://samudrasukhi.blogspot.com , http://samudrasukhi.com ஆக மாறியுள்ளது. யூ.ஆர்.எல் தான் சுருங்கி இருக்கிறதே தவிர கருத்துக்கள் சுருங்காது என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் ஒரு வருத்தம் http://samudrasukhi.com ஆபீசில் திறப்பதில்லை. Potentially Damaging content (?) என்று BLOCK ஆகி விடுகிறது. அப்படியிருந்தும் ஆபீசில் இருந்தே லைடாஸ்கோப் எழுதுகிறேன். (ஹி,ஹி இது சீக்ரெட்!) சமுத்ரசுகி என்பது ஏதோ தீவிரவாதி அல்லது போலி சாமியார் பெயர் போல இருக்கிறது போலிருக்கிறது . என்ன தான் சொன்னாலும் இந்தப் பெயரை மாற்றும் ஐடியா இல்லை.

உங்களிடம் ஒரு கிரெடிட் கார்டும், வருடம் பத்து டாலர் செலவு செய்யும் தாராள மனமும் இருந்தால் நீங்களும் .com டொமைனுக்கு மாறமுடியும். கல்யாணம் ஆகி இருந்தால் எதற்கும் மனைவியை ஒரு வார்த்தை கேட்டு விட்டு அப்புறம் மாறுங்கள். 'இவரு பெரிய எழுத்தாளரு, வெப் சைட்டுக்கு காசு போடறாரு, அந்த காசு இருந்தால் ஒரு மாசம் சிலிண்டர் செலவுக்கு ஆகி இருக்கும் ' என்ற புகழாரங்களை பின்னர் சூடிக்கொள்ள வேண்டி வரலாம்.

2
==

ஆங்கிலம் Un -phonetic பாஷை என்று அழைக்கப்படுகிறது. உலகில் பெரும்பாலான மொழிகள் எப்படி எழுதப்படுகின்றனவோ அப்படியே பேசப்படுகின்றன. ஆங்கிலம் இதற்கு விதி விலக்கு. உதாரணம் தமிழில் -ம்-மா அம்மா என்று வருகிறது. ஆங்கிலத்தில் மம்மியை MAMMI என்று எழுதாமல் MUMMY (மும்மை) என்று எழுதுகிறார்கள்.நீங்கள் இதைக் கவனித்திருக்கக் கூடும். Transliteration என்று எழுதினால் 'ற்றன்ச்ளிடேரடின் ' என்று வந்து பயமுறுத்தும். Invitation என்று எழுதினால் இன்விடடின் என்று வரும், நாம் INVITESHAN என்று எழுத வேண்டி இருக்கும். ஆங்கிலத்தின் இந்த unphonetic (எதிர்-சத்தம்) தன்மை அதை கற்பதற்கு சற்று கடினமான மொழியாக ஆக்குகிறது என்கிறார்கள். இதற்கு நேர் மாறாக முற்றிலும் PHONETIC (எழுதுவது மாதிரியே
அச்சு அசலாகப் படிப்பது) என்று நம் சமஸ்கிருதத்தை சொல்லலாம்.

சைனீஸ் பாஷை NOT EVEN UNPHONETIC ...BEYOND PHONETIC !.. 'எனக்குத் தாகமாக இருக்கிறது' என்பதை --க்-கு-த் தா--மா- என்று எழுதாமல் ஒரு மனிதனை வரைந்து பக்கத்தில் ஒரு காலி தண்ணீர் குடுவையை வரைவது! 'அவன் தண்ணீர் குடித்தான்' என்பதை --ன் -ண்-ணீ-ர் என்று எழுதாமல் அவனை வரைந்து தண்ணீர் குடுவையை விட்டு அவன் நகர்ந்து செல்வது போல
வரைவது. (நல்ல வேளை தமிழில் இப்படி இல்லை!) சண்டை என்பதைக் குறிக்க ஒரு மரத்தின் கீழ் இரண்டு பெண்களை வரைகிறார்கள். மரத்துக்கு பதில் தண்ணீர் பைப் போட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும். சைனீஸ் பாஷையை இப்போது அப்டேட் செய்தால் இப்படி வரைவார்களோ.

மௌனம்/ஊமை ( தலைப்பாகை கட்டிக் கொண்டு கண்ணாடி போட்ட தாடிக்காரர் )
அடிமை (ஒரு கம்
ப்யூட்டர் ;அதன் முன் ஒரு மனிதன் உட்கார்ந்திருத்தல்)
அதிசயம் (ஒரு குண்டு அம்மாவும் சொட்டைத்தலை ஆளும் கை குலுக்குதல்)


தமிழ் கூட முழுவதும் Phonetic இல்லை. Kavanam என்று எழுதி விட்டு gavanam என்று படிக்கிறோம். அஃது என்று எழுதி விட்டு அஹ்து என்று படிக்கிறோம். அவனுக்கு கொடு என்பதில் உள்ள 'கு' குழந்தை என்பதில் உள்ள 'கு' வைப் போல முழுவதுமாக ஒலிப்பதில்லை. இன்னும் எனக்கு தமிழில் ஏன் இரண்டு '' ('' '') இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் ஆங்கிலமோ, சைனீசோ, தமிழோ அது ஒருவருக்கு தாய்மொழி ஆகி விட்டால் அதைப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் எந்த சிரமமும் இருப்பதில்லை என்பதும் உண்மை தான்.

3
==

ஆங்கிலத்தில் உள்ள ஒரு பழமொழி PACKING IS THE FIRST SALESMAN FOR A PRODUCT . ஒரு சாதாரண குங்குமச் சிமிழைப் பரிசாகக் கொடுத்தாலும் அதை வண்ண வண்ண மின்னும் GIFT PACK செய்து மேலே பேர் எல்லாம் எழுதிக் கொடுக்கிறோமே அது தான். மனிதன் இரண்டு இடங்களில் ஏமாறுகிறான்அல்லது ஏமாற்றப்படுகிறான். ஒன்று விளம்பரத்தைப் பார்த்து. (இந்த க்ரீமைப் பூசிக் கொண்டால் நம் பின்னாலும் பெண்கள் ஓடி வருவார்களோ? )இன்னொன்று அதன் PACKING ஐப் பார்த்து.பல வண்ணங்களில் பல வடிவங்களில் பொருட்கள் நம்மை சுண்டி இழுக்கின்றன. கவர் சரியாக இல்லை என்றால் நாம் பல பொருட்களை வாங்குவதே இல்லை! 75 % சோப்புகளில்/கிரீம்களில் ஏதோ ஒரு முன்னாள்/இந்நாள் உலக அழகி சிரித்துக் கொண்டு இருக்கிறாள். காம்ப்ளான் ஹார்லிக்ஸ் போன்ற பேக்குகளில் சிறுவர்கள் உயரமாக எதையோ எட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.ஷாம்பூக்களில் எல்லாப் பெண்களுக்கும் முழங்கால் வரை கூந்தல் நீள்கிறது . அந்தக் காலத்தில் எல்லாம் சோப்போ, டூத்பேஸ்டோ,ஹார்லிக்சோ எதுவாக இருந்தாலும் கவரில் அதன் பெயர் மட்டுமே கொட்டை எழுத்தில் எழுதி இருக்கும் . இப்போது அமிர்தாஞ்சனின் PACKING கூட கலர்புல் ஆக மாறி விட்டது.இடமே இல்லாமல் குட்டிக் குட்டி எழுத்துகளில் என்ன என்னவோ எழுதி இருக்கிறது!



நம் எல்லாருக்கும் பரிச்சயமான கொக்க -கோலா வின் PACKING காலத்துக்கு தகுந்தவாறு எப்படி மாறி வந்திருக்கிறது பாருங்கள்.




4
==

'ஒவ்வொரு நொடியும்
யாரோ ஒரு நர்ஸ்
யாரோ ஒரு நோயாளிக்கு
பல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறாள்'

உலகத்தில் எத்தனையோ 'தினங்கள்' இருக்கின்றன. அன்னையர் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம், உழைப்பாளிகள் தினம் என்றெல்லாம். ஆனால் 'நர்ஸ் டே' என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள் அது. முதலில் நர்ஸ் படிப்பை படிக்க முடிவெடுத்த பெண்களுக்கு ஒரு சலாம் போட வேண்டும். விரல் அழுக்குபடாத சாப்ட்வேர் துறைக்கு போகலாம்; பேங்கில் வேலை செய்து விட்டு ஆறு மணிக்கு டான் என்று வீடு வந்து சேரலாம்; டீச்சராகி வருடம் முழுவதும் விடுமுறைகளை அனுபவிக்கலாம் ; அமெரிக்க மாப்பிளையைப் பிடித்து கல்யாணம் ஆனதும் அங்கே போய் செட்டில் ஆகிவிடலாம் என்ற இத்தனை வாய்ப்புகளையும் உதறி விட்டு நோயாளிகளுக்கு படுக்கை மாற்றிப் போடும், உடம்பு துடைத்து விடும்
வேலையைத் தேர்ந்தெடுத்ததற்காக இன்னொரு சலாம். நம் வீட்டில் ஒரே ஒரு நோயாளி இருந்தாலே நாம் ஒவ்வொரு சமயத்தில் சலித்துக் கொள்கிறோம். ஆனால் நர்சுகள் நோயாளிகளுடனேயே வாழ்கிறார்கள்.

ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்த்து விட்டு மருந்து எழுதித் தருவதோடு டாக்டர்களின் வேலை முடிந்து விடுகிறது. அதன் பிறகு நரம்பு கண்டுபிடித்து ஊசி போடுவது, பி.பி பார்ப்பது, பல்ஸ் பார்ப்பது ,வேளா வேளைக்கு மாத்திரை தருவது, 'என்ன சரஸ்வதி, இன்னும் ரெண்டு நாள்ல எழுந்து நடப்பீங்க பாருங்க' என்று இன்சொல் கூறி ஊக்குவிப்பது, தாத்தா உங்க அழகின் ரகசியம் என்ன? என்று ஜோக் அடிப்பது எல்லாமே நர்சுகள் தான். ஆண்கள் நர்சுகளாக வரமுடியாமல் போனதற்கும் நர்சுகளை 'சிஸ்டர்' என்றுஅழைப்பதற்கும் காரணம் தெளிவாகவே இருக்கிறது. எனக்கு என்னவோ 'மதர்' என்று கூட அழைக்கலாம் என்று தோன்றுகிறது.

மனிதனின் கர்வம் அழிந்து விடும் இடங்களில் ஆஸ்பத்திரியும் ஒன்று. 'என் பையனா, அவனுக்கு ஆஸ்பிடல்-னாலே அலர்ஜி' என்று நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்வின் மிக அழகான தருணங்களை அவர்கள் ஆஸ்பத்திரி போகவில்லை என்றால் இழந்து விடுவார்கள். உலகத்தையே வெல்வேன் என்று கிளம்பியவர்கள் கால் முறிந்து கட்டிலில் படுத்திருப்பது, ஆபரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருக்கும் கலவர முகங்கள், உறக்கம் துறந்து கணவன் அருகில் விழித்திருக்கும் மனைவி, நோயாளிக்கு மவுத் வாஷ் செய்து பவுடர் போட்டு விடும் நர்சுகள், கூடையில் உணவு எடுத்துப் போகும் பெண்கள்,கடவுளின் இடத்தைத் தாங்கள் எடுத்துக்கொண்டு விட்ட கர்வத்துடன் வலம் வரும் டாக்டர்கள், மூச்சு மட்டுமே ஒட்டி இருக்கும் மூட்டை போல படுக்கையில் நகரும் நோயாளிகள் என்று நிறைய அனுபவங்களை ஆஸ்பத்திரிகள் உங்களுக்கு வழங்கும்.

இரண்டு விஷயங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும். நீங்கள் அட்மிட் ஆகி இருக்கும் ஒரு நோயாளியுடன் இருந்தால் உங்களை உற்சாகமாகக் காட்டிக் கொள்ள வேண்டும். 'இப்படி ஆயிருச்சே' 'எல்லாம் போச்சே' என்று புலம்பிக் கொண்டிருக்காமல் காலையில் குளித்து விட்டு , தலைசீவி, நல்ல உடைகள் அணிந்து கொண்டு இன்முகத்துடன் நோயாளிக்கு ஒரு POSITIVE ENVIRONMENT ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சமூக சேவையில் உங்களுக்கு நாட்டம் இருந்தால் லீவு நாட்களில் நண்பர்கள் நான்கைந்து பேர் பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள். உங்களால் முடிந்த அன்பளிப்பை அங்கு அட்மிட் ஆகி இருக்கும் நோயாளிகளுக்கு கொடுத்து விட்டு 'சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்' என்று இன்முகத்துடன் சொல்லி வாருங்கள் . இதை விட சிறந்த ஒரு சமூக சேவை இல்லை! இறைவன் அன்பு செலுத்த நமக்குக் கொடுத்த தருணங்களை மங்காத்தா பார்த்துக் கொண்டும் இன்னும் எப்படி நிறைய சம்பாதிப்பது என்று யோசித்துக் கொண்டும் வீணடிக்காதீர்கள்.

அந்த
ஆஸ்பத்திரியில்
எல்லாவற்றுக்கும் சக்கரங்கள் இருந்தன-
படுக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், ஸ்ரெட்சர் ,நாற்காலிகள்
ஸ்க்ரீன்கள் என்று எல்லாவற்றுக்கும்!
சற்றே உற்றுப் பார்த்ததில்
நர்சுகளின் கால்களிலும் சூட்சுமமாக
சக்கரங்கள் தெரிந்தன!

5
==
ரவி உதயனின் ஒரு கவிதை

இன்றைய நாளிதழ் செய்தியில்
நேற்று இறந்து இருந்தான்

இன்று அதிகாலை வரை
உயிரோடு இருந்தவன்
வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து
சிறிது சிறிதாக
இறக்க தொடங்கியிருந்தான்

அன்றைய நாளிதழ் செய்திகளை
அன்றைக்கே வாசிக்க
இயலாதவர்களுக்காக
இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

பின்னொரு நாளில்
அவர்கள் அச்செய்தியை
வாசிக்க நேரும் தருணம்
மீண்டும் அவன்
இறக்க வேண்டியிருந்ததது.

6
==
ஓஷோ ஜோக்.

மனைவி : என்னங்க ,இன்னிக்கு எங்க அம்மா நடந்து வந்துட்டு இருந்தப்ப மேலே இருந்து நம்ம வீட்டு கடிகாரம் விழுந்து விட்டது. நல்ல வேளை அம்மா கொஞ்சம் முன்னாடி போயிட்டாங்க. கடிகாரம் கொஞ்சம் முன்னாடி விழுந்திருந்தா அவங்க உயிரே போயிருக்கும்.

கணவன்: எனக்குத் தெரியும். அந்த பாழாப்போன கடிகாரம் எப்பவும் லேட்டு!

ஒருவன்: எனக்கு சமையல் செய்து செய்து, துணி துவைத்து துவைத்து, பாத்திரம் கழுவி கழுவி ஒரே சலிப்பாயிருச்சுப்பா. அதனாலே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

இன்னொருவன்: அப்படியா, நீ சொன்ன அதே காரணங்களுக்காக நான் போன மாசம் டைவர்ஸ் வாங்கிக்கிட்டேன்.



முத்ரா


12 comments:

Katz said...

சைனிசை போலதான் கொரியன் ஜப்பானீஸ் மொழிகளும் என்று நினைக்கிறன்.

என் அக்கா பையன் 1 2 3 சைனா மொழியில் சொல்லுவான்.

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் நாம் நர்ஸ் என்றாலே வேறு நோக்கத்தில் தான் பார்க்கிறோம்.

//இறைவன் அன்பு செலுத்த நமக்குக் கொடுத்த தருணங்களை மங்காத்தா பார்த்துக் கொண்டும் இன்னும் எப்படி நிறைய சம்பாதிப்பது என்று யோசித்துக் கொண்டும் வீணடிக்காதீர்கள்.//

எனக்கு சுள்ளென்று உரைத்தது.

நர்ஸ் கவிதை சூப்பர். நீங்கள் எழுதியதா?

இறந்தவன் கவிதையும் அருமை.

ஓஷோ ஜோக் அசத்தல்.

Mohamed Faaique said...

வழமை போல் அருமையாக இருந்தது. சில வேளை நர்சுகளின் கவனிப்பால் சீக்கிரம் குண்மாகி வீடு நருவோர் உண்டு.(நர்சு குடுக்குர டார்ச்சர் அப்படி)

பொன் மாலை பொழுது said...

/// இறைவன் அன்பு செலுத்த நமக்குக் கொடுத்த தருணங்களைமங்காத்தா பார்த்துக் கொண்டும் இன்னும் எப்படி நிறைய சம்பாதிப்பது என்று யோசித்துக் கொண்டும்வீணடிக்காதீர்கள். ///

தலை வணங்குகிறேன் தங்களின் மொழிகளுக்கு. ஆனால் நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்துள்ளோம்??

மிக மென்மையான ஆனால் ஆழமான பதிவு. வாழ்த்துக்கள் . தொடருங்கள் அன்பரே!

bandhu said...

what to say? another ace in your sleeve!

Sugumarje said...

//மௌனம்/ஊமை ( தலைப்பாகை கட்டிக் கொண்டு கண்ணாடி போட்ட தாடிக்காரர் )
அடிமை (ஒரு கம்ப்யூட்டர் ;அதன் முன் ஒரு மனிதன் உட்கார்ந்திருத்தல்)
அதிசயம் (ஒரு குண்டு அம்மாவும் சொட்டைத்தலை ஆளும் கை குலுக்குதல்)//
I cant Control my Laugh:))

Philosophy Prabhakaran said...

// யூ.ஆர்.எல் தான் சுருங்கி இருக்கிறதே தவிர கருத்துக்கள் சுருங்காது என்று எதிர்பார்க்கிறேன் //

அடேங்கப்பா....

அப்பாதுரை said...

.காம் மாறுவதால் என்ன பயன்?

சமுத்ரா said...

.காம் மாறுவதால் நம் ப்ளாக் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போகாது என்று நினைக்கிறேன்.
அப்படிப் போனாலும் நான் பத்து டாலர் கொடுத்திருக்கிறேன் என்று கூகிளை காலரைப் பிடித்து கேட்க முடியும்.

Jayadev Das said...

\\PACKING IS THE FIRST SALESMAN FOR A PRODUCT \\ குழந்தைகள் வாங்கும் Bingo போன்ற சிப்ஸ் பாக்கெட்டுகள் அதன் கவர்கள் இல்லாமல் வெறும் பிளாஸ்டிக் கவரோடு வந்தால் எத்தனை விற்கும் என்பது கேள்விக் குறிதான்.

Anonymous said...

Nice blog if you ask me. Thank you for posting that info.

Greg Phillsen
cell jamming

Anonymous said...

hi!!!

Anonymous said...

Nice info, sweetie! I'll be happy to read more! Almost forgot, I suggest you should make this website a little more social.


Mell Tremblay
dominos coupon codes