இந்த வலையில் தேடவும்

Friday, February 24, 2012

அணு அண்டம் அறிவியல் -61

அணு அண்டம் அறிவியல் -61 உங்களை வரவேற்கிறது

[௮-௮-௮ கொஞ்சம் லேட் ஆகி விட்டது. இதை தவறாமல் படிக்கும் ஓரிரு (?) அறிவியல் வாசகர்களுக்கு SORRY. As I have been telling , இந்த அவசர யுகத்தில் இதையெல்லாம் யார் படிக்கிறார்கள்? Most of them want Entertainment, not education..டேய், நீ என்ன பெரிய அப்பாடக்கரா? எல்லாம் தெரியும் என்ற நினைப்பா? என்று கேட்காதீர்கள். எல்லாம் தெரியும் என்று நிரூபிக்க இதை எழுதவில்லை. [In fact , எனக்கு எதுவும் தெரியாது என்று நிரூபிக்கவே இதை எழுதுகிறேன் ] பிரபஞ்சத்தைப்பார்த்து நான் வியந்த , அதிசயித்த சில அரும்கணங்களை உங்களுடன் என்னால் இயன்ற முறையில் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறுமுயற்சியே இது.நூறு எபிசோடுகள் முடிந்ததும் சமர்த்தாக முடித்து விடுகிறேன் DO NOT WORRY ]

பார்த்தால் அது ஒரு சூனியம்
பரவிக் கிடக்கும் பாழ்வெளி !

ஆனால் அது ஓர் அமுத சுரபி
அனைத்தும் அதனிடமிருந்தே வருகின்றன
அதிலேயே மீண்டும் ஒடுங்குகின்றன!

ஒன்றுமே இல்லாததற்குள்
எல்லாமே இருக்கிறது! -லவோத் சூ Tao Te Ching



ஃபெயின்மேன் வரைபடங்களை எப்படி வரைவது என்று பார்க்கலாம். நம் வசதிக்கேற்ப காலத்தை X அச்சிலும் வெளியை Y அச்சிலும் வரையலாம், OR VICE -VERSA ..X Y அச்சுகளை வரைய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் எதில் காலம் எதில் வெளி என்று முதலில் சொல்லி விட வேண்டும்.இதில் பொதுவாக எலக்ட்ரான் நேர்க் கோடுகளாகவும் ஃபோட்டான் வளைந்த ஸ்ப்ரிங் போலவும் குறிக்கப்படும். எலக்ட்ரான் நேராக செல்கிறது ஃபோட்டான் வளைந்து வளைந்து செல்கிறது என்று அர்த்தம் அல்ல. இவை வெறும் குறியீடுகள் மட்டுமே.பொதுவாக எலக்ட்ரான் முதலிய துகள்களுக்கு மேலே ஓர் அம்புக்குறி போடப்படும்.அது காலத்தில் எந்த திசையில் பயணிக்கிறது என்று குறிப்பிட . ஆனால் ஃபோடான்களுக்கு காலம் பற்றிய கவலை இல்லை.எனவே அவற்றின் மீது அம்புக்குறி தேவையில்லை.

வயதாகி விட்டது எங்களுக்கு
அந்த இளமை எங்கு சென்றது? இனி வருமோ?

-போன்ற புறநானூற்றுக் கவலைகள் அவைகளுக்கு இல்லை. காலம் கடந்தவை அவை. ஒருவர் எல்லாப் பிறந்த நாளுக்கும் ஒரே வயது சொன்னால் எப்படி இருக்கும்? போட்டான்களைப் பொறுத்தவரை இதுதான் உண்மை. பிக் பாங்கில் இருந்து அவற்றின் வயது ஏறவே இல்லை.கால ஓட்டத்தில்
போட்டான்களின் ஆற்றல் குறையலாமே தவிர , அவைகளுக்கு நரை திரை மூப்பு இல்லை.

சரி. கீழே உள்ளது ஓர் எளிய பெயின்மேன் வரைபடம். படத்தில் உள்ளது போல, ஒரு எலக்ட்ரானும் போடானும் இப்படித்தான் வினை புரியும் என்று அர்த்தம் இல்லை. இருக்கின்ற மில்லியன் கணக்கான சாத்தியங்களில் இது ஒன்று. சில சமயங்களில் இவை இரண்டும் கண்டும் காணாமல் தம் வழியில் சென்று விடலாம். சில சமயம் எலக்ட்ரான் ஒளியை ஸ்வாகா செய்து விடலாம்.சில சமயம் ஒளியை உமிழலாம் etc


t =0 என்ற காலத்தில் இரண்டு எலக்ட்ரான்கள் e1 மற்றும் e2 நிலையாக இருக்கின்றன.e1 நகர்ந்து (சிறிது காலம் நகர்ந்ததும்) வெளியில் A என்ற புள்ளியை அடைகிறது.அங்கே ஒரு போட்டானை உமிழ்கிறது.பிறகு பாதை மாறி இறுதியில் X என்ற புள்ளியில் உணரப்படுகிறது.போட்டான் B என்ற புள்ளிக்கு நகர்கிறது. போட்டான் A யில் இருந்து B க்கு நகரும் போது காலம் நகருவதில்லை என்பதை கவனிக்கவும்.இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.ஆனால் எலக்ட்ரான் களுக்கு இது அனுமதி இல்லை. அதாவது காலத்தில் மாறாத ஒரு செங்குத்துக் கோட்டை (நேர்கோடு) ஃபெயின்மன் வரைபடத்தில் வரைய முடியாது.எனவே போட்டான் வெளியில் இரண்டு புள்ளிகளுக்கு இடையே காலமே இன்றி நகருகிறது! இப்படி B யில் வந்து சேர்ந்த போட்டானை அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்த e2 கிரகித்துக்கொள்கிறது.e2 வின் பாதை விலகுகிறது.அது இடத்தில் Y என்ற புள்ளியில் உணரப்படுகிறது.

[எலக்ட்ரான் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியாது. எனவே எலக்ட்ரான் NOT EQUAL TO போட்டான்.ஒயரின் உள்ளே மின்சாரம் ஒளிவேகத்தில் பயணிக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும். மின்சாரம் (charge ) ஒரு நத்தை.ஒருநாளுக்கு அது இரண்டு மீட்டர்கள் மட்டுமே நகர்கிறது என்று கணக்கீடுகள் சொல்கின்றன. பின்னர் சுவிட்சைப் போட்டதும் லைட் எத்தனை தூரத்தில் இருந்தாலும் உடனடியாக எரிகிறதே என்று நீங்கள் கேட்பது நியாயமான சந்தேகம். வரிசையாக வைக்கப்பட்டுள்ள சைக்கிள்களில் முதலாவதைத் தள்ளினால் கடைசி சைக்கிளும் விழுகிறதே அதுபோலத்தான் இது.ஒரு பெரிய குழாய் முழுவதும் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் ஒரு
முனையில் சிறிது தண்ணீரை எக்ஸ்ட்ரா-வாக ஊற்றினால் அடுத்த முனையில் உள்ள தண்ணீர் உடனடியாக வெளியேறி விடும் அல்லவா? தண்ணீர் ஒளிவேகத்தில் பயணித்தது என்று சொல்ல முடியாது. இது போல தான் மின்சாரமும் பயணிக்கிறது.]

பெயின்மேன் வரைபடங்களில் கீழ்க்கண்ட சாத்தியங்களும் இருக்கின்றன.


சரி. இந்தப் படத்தைப் பார்க்கவும்.



படத்தில் இரண்டு எலக்ட்ரான்-களின் பாதைகள் காட்டப்பட்டுள்ளன.e1 எலக்ட்ரான் A என்ற புள்ளியில் இருந்து கிளம்பி X என்ற புள்ளியில் ஒரு போட்டானை உமிழ்கிறது.பிறகு அது காலத்தில் திரும்பி Y என்ற புள்ளியை அடைகிறது .B என்ற புள்ளியில் புறப்படும் e2 T1 என்ற நேரத்தில் ஓர் போட்டானை உமிழ்ந்து விட்டு தன் திசையில் பயணிக்கிறது. இந்த போட்டான் T2 நேரத்தின் போது Y என்ற புள்ளியில் (காலத்தில் பின்னோக்கி பயணித்து) வந்து சேரும் e1 எலக்ட்ரான்-ஆல்
கிரகிக்கப்பட்டு C என்ற புள்ளியை அடைகிறது. e2 அதே நேரத்தில் D என்ற புள்ளியை அடைகிறது.இங்கே நாம் T2 என்ற புள்ளியில் போட்டான் ஒன்று எலக்ட்ரான்-பாசிட்ரான் இணைகளை உருவாக்கிகிறது என்றும் சொல்ல முடியும்.ஆற்றலில் இருந்து பொருள்-எதிர்பொருள் ஜோடிகள் தோன்றுவது!பின்னர் T3 என்ற புள்ளியில் இவை மீண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஆற்றலை (போட்டானை) வெளிப்படுத்துகின்றன.

.படத்தில் ஒரு முக்கோணம் தோன்றுகிறது அல்லவா.இதுவும் அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஒன்றுமே இல்லாத வெட்டவெளியில் இருந்து பொருளும் எதிர்ப்பொருளும் மாயமாகத் தோன்றுவது.பின் மறைவது!இப்படி தான் நம் பிரபஞ்சமும் அதன் எதிர்ப்ரபஞ்சமும் சூனியத்தில் இருந்து தோன்றி இருக்கலாம் என்கிறார்கள்.

மேலும் நாம் ஒன்றும் இல்லாத சூனியம் என்று நினைப்பது தவறு. அதில் மில்லியன் கணக்கான பொருள்-எதிர்ப்பொருள் ஜோடிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கலாம்.(ஆற்றல் இல்லாமலேயே கூட!)இவற்றையெல்லாம் நாம் ௮-௮-௮ வில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனாலும் இவற்றை பெயின்மன் வரைபடங்கள் மூலம் மீண்டும் விளக்கினோம்.

இப்போது ஒரு பௌத்தத் தத்துவம்:


"வடிவம் என்பதோ வெற்றிடம். வெற்றிடம் என்பதும் வடிவமே. வடிவம் வெற்றிடத்தில் இருந்தோ, வெற்றிடம் வடிவத்திலிருந்தோ வேறுபட்ட ஒன்றல்ல. எது வடிவமோ அதுவே வெற்றிடம்,எது வெற்றிடமோ அதுவே வடிவம்:


சமுத்ரா

28 comments:

Marc said...

அருமை தங்கள் பதிவு வரலாறாகிறது.தமிழில் நீங்கள் தான் முதலில் இதை பதிவு செய்கிறீர்கள்.வாழ்த்துகள்.

quantum electrodynamics by fiemen

Tamil CC said...

(மின்சாரம் ஒருநாளுக்கு அது இரண்டு மீட்டர்கள் மட்டுமே நகர்கிறது என்று கணக்கீடுகள் சொல்கின்றன.)

10A, I 10 minutes பாய்ந்தால் 6000Q பாய்ந்து இருக்க வேண்டும் அல்லவா?
இது எவ்வாறு சாத்தியம்?

Aba said...

//இது.நூறு எபிசோடுகள் முடிந்ததும் சமர்த்தாக முடித்து விடுகிறேன் DO NOT WORRY //

சார், இணையத்தில் அறிவியலைத் தமிழில் விளக்கிவரும் இருவரில் நீங்கள் ஒருவர், மற்றவரும் நேரமின்மை காரணமாகவோ அல்லது வேறு காரணத்தால் தொடர்ந்து எழுதுவதில்லை. அறிவியல் எழுத்தாளர்களுக்காக இணையம் முழுவதும் அலசி உங்களைக் கண்டுபிடித்து subscribe செய்திருக்கிறேன். நீங்களும் நிறுத்திவிட்டால் என்ன ஆவது? தொடர்ந்து எழுதுங்கள். அறிவியலில் எழுத விஷயமும் இருக்கிறது, படிப்பதற்கு நாங்களும் இருக்கிறோம். எனவே நிறுத்திவிடாதீர்கள்.


நன்றாகக் குழப்பிவிட்டது பதிவு. நேரம் கிடைக்கும்போது வரைபடங்களை கவனமாகப் பார்க்கவேண்டும். (வரைபடங்களை வேறொரு மென்பொருள் வைத்து வரைந்தால் கொஞ்சம் ப்ரோபெஷனலாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து)

வவ்வால் said...

சமுத்திரா,

நல்ல முயற்சி , 100 அடிக்கணுமா மஹா பொறுமைசாலி தான் நீங்க :-))

முன்னர் எப்போதோ உங்க பதிவைப்பார்த்து இருக்கேன், பரிட்சைக்கு படிக்கிறாப்போல படிக்க வேண்டி இருக்குமோனு ஓடிப்போயிட்டேன்(பரிட்சைக்கே படிக்க மாட்டேன் ). உங்க அளவுக்கு தீவிரமா எல்லாம் எழுத வராது, நாம எல்லாம் ஜல்லி அடிக்கிற வகையறா.:-))

தொடர்ந்து எழுதுங்கள், தமிழில் இது போன்ற அறிவியல் எழுத்துகள் தேவை.

வவ்வால் said...

//(மின்சாரம் ஒருநாளுக்கு அது இரண்டு மீட்டர்கள் மட்டுமே நகர்கிறது என்று கணக்கீடுகள் சொல்கின்றன.)

10A, I 10 minutes பாய்ந்தால் 6000Q பாய்ந்து இருக்க வேண்டும் அல்லவா?
இது எவ்வாறு சாத்தியம்?//

சமுத்திரா சொல்லி இருப்பதற்கும் நீங்க கேட்பதற்கும் என்ன சம்பந்தம்.?

இடப்பெயர்ச்சியை சொல்கிறார், நீங்க , மின்னூட்டம்(கூலும்) சொல்றிங்க, அது இடம்பெயர்வதையே மெதுவாக இருக்கும்னு சொல்கிறார்.

ஏன் எனில் மின்சாரம் கடத்தப்படுகிறது ஓடுவதில்லை,ஆனால் ஓடுவது போல இருக்கும். கட்டிடம் கட்டும் போது சித்தாட்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு செங்கல்லை அடுத்தவர் கைக்கு மாற்றி விட்டு செங்கல்லை இடப்பெயர்ச்சி செய்வது போல தான் மின்சாரத்தில் எலெக்ட்ரான் நகர்வு. அணுவில் கட்டற்ற எலெக்ட்ரான்கள் அடுத்தடுத்து நகர்கிறது.(சரியா தான் சொல்கிரேனா?)

அப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக மின்சக்தி நகர்கிறது போல அதைத்தான் நத்தை என்கிறார்.

சந்தேகம் என்று கேட்டு இருந்தால் எலெக்ட்ரான் பீம் ஆக வெற்றிடத்தில் பாய்கிறதே அப்போது ஒளியின் வேகத்தில் பாயுமா என்று கேட்டு இருக்கலாம்.

எங்கே இருந்து அந்த கேள்வி எடுத்திங்களோ அங்கேயே பதில்
இருந்து இருக்குமே :-))

கூலும்= ஆம்பியர்*நேரம் ,பெருக்கி பாருங்க வரும்,

ஆனால் அதே போல கூலும் (மின்னூட்டம்) பில்ட் ஆக ஒரு கெபாசிட்டர் மாட்டனும் :-))

Anonymous said...

மலரும் நினைவுகள் வர்றது....
PDFல போடுங்க...
தொடருங்கள்...

Subash said...

Long time back,
Excellent post.
really impress with the images. have to read it again. there are so many things to learn.
முந்தய பதிவுகளைவிட இந்த பதிவு செம standard and quality.
பெயின்மன் வரைபடங்கள் பற்றியும் நீங்கள் சொல்லியிருக்கும் விடயங்களையும் இன்னும் 2 தடவை ஆழமாக படிக்கவேண்டும். இந்த பதிவு வழமையான பதிவுகளை விட கொஞ்சம் பாரமாக எனக்குப்படுகிறது. இந்த பதிவிலுன்ன எல்லாமே எனக்கும் புதிய விடயங்கள். நன்றி நண்பரே

Jayadev Das said...

\\நூறு எபிசோடுகள் முடிந்ததும் சமர்த்தாக முடித்து விடுகிறேன் DO NOT WORRY \\ This is worrying me.... :(

Jayadev Das said...

ஒளிக்கு காலம் கிடையாது...!! இது போல நிறைய முன்பு அறிந்திராத விஷயங்களை உங்கள் எழுத்தில் இருந்து கற்றிருக்கிறேன், எழுதுவதை ஒரு போதும் நிறுத்த வேண்டாம்.

Jayadev Das said...

\\10A, I 10 minutes பாய்ந்தால் 6000Q பாய்ந்து இருக்க வேண்டும் அல்லவா? இது எவ்வாறு சாத்தியம்?\\
Electric current is measured in amperes, symbol A.
An ampere is the flow of 1 coulomb of charge per second.
When the flow of charge past any cross section is 1 coulomb (6.24 billion billion electrons) per second, the current is 1 ampere.

Jayadev Das said...

There is often some confusion between charge flowing through a circuit and voltage being impressed across a circuit.

Consider a long pipe filled with water.
Water will flow through the pipe if there is a difference in pressure across the pipe or between its ends.
Water flows from high pressure to low pressure.
Similarly, charges flow through a circuit because of an applied voltage across the circuit.
You don’t say that voltage flows through a circuit.
Voltage doesn’t go anywhere, for it is the charges that move.
Voltage causes current.

Jayadev Das said...

The electrons inside a metal wire have an average speed of a few million kilometers per hour due to their thermal motion.
This does not produce a current because the motion is random. There is no net flow in any one direction.
When a battery or generator is connected, an electric field is established inside the wire.

A pulsating electric field can travel through a circuit at nearly the speed of light.
The electrons continue their random motions in all directions while simultaneously being nudged along the wire by the electric field.
The conducting wire acts as a “pipe” for electric field lines. Inside the wire, the electric field is directed along the wire.

Conduction electrons are accelerated by the field.
Before the electrons gain appreciable speed, they “bump into” metallic ions and transfer some of their kinetic energy.
Collisions interrupt the motion of the electrons. Their actual drift speed, or net speed through the wire, is extremely low.
In the electric system of an automobile, electrons have a net average drift speed of about 0.01 cm/s

Jayadev Das said...

In an AC circuit, the conduction electrons don’t make any net progress in any direction.
In a single cycle they drift a tiny fraction of a centimeter in one direction, and then the same distance in the opposite direction.
They oscillate rhythmically about relatively fixed positions.

Jayadev Das said...

You can buy a water hose that is empty of water, but you can’t buy a piece of wire, an “electron pipe,” that is empty of electrons.
The source of electrons in a circuit is the conducting circuit material itself.
Electrons do not travel appreciable distances through a wire in an AC circuit. They vibrate to and fro about relatively fixed positions.

When you plug a lamp into an AC outlet, energy flows from the outlet into the lamp, not electrons.
Energy is carried by the electric field and causes a vibratory motion of the electrons that already exist in the lamp filament.
Most of this electrical energy appears as heat, while some of it takes the form of light.
Power utilities do not sell electrons. They sell energy. You supply the electrons.

VELU.G said...

அறிவியல் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு end இல்லை. அது போல தங்கள் தொடருக்கும் end தேவையில்லை.

Aba said...

@Das sir,

மின்சாரம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி. சில மாதங்களுக்கு முன்தான் மின்சாரத்துக்கு வேகம் குறைவு என அறிந்துகொண்டேன். ஒரு சந்தேகம்:

வயர் எவ்வளவு நீளமாக இருந்தாலும் சுவிட்ச் போட்ட அதே வினாடியில் பலப் எரியுமா? விசையொன்று எலெக்ட்ரான்களுக்குள் கடத்தப்படுவதற்கு கொஞ்ச நேரம் தேவைப்படுமே?

முனுசாமி said...

சமுத்ரா....நீங்கள் எழுதுவதை நிறுத்தப்போவதாக கூறினால் REACTION எப்படி இருக்கும் என்று பார்க்கும் முயற்சியா?..........AS I THOUGHT THE REACTION IS POSITIVE - SO IT'S YOUR DUTY TO CONTINUE - KEEP WRITING

சமுத்ரா said...

நல்ல வேளை ...யாரும் ஃபெயின்மன் வரைபடங்கள் பற்றி சந்தேகம் கேட்கவில்லை:) one of the characteristics of a good things is , it must end:) I assume this A-A-A is good:)
எனவே இது முடிந்து விடும். ஆனால் அறிவியலை தவறாமல் வேறு தலைப்புகளில் எழுதுவேன்
என்று நினைக்கிறேன்.

Dr.Dolittle said...

தண்ணீரில் பந்து மிதக்கிறது , அப்ப தண்ணீர் கனம் மிக்கதா ?பந்து கனம் மிக்கதா ?

வெற்றிடத்தில் பூமி மிதக்கிறது ( அண்டமே மிதக்கிறது ) , அப்போ வெற்றிடம் தானே பெரியது ஆற்றல் மிக்கது .

வெற்றிடத்தின் ஆற்றல் என்ன ? அதை யாரேனும் அளந்துள்ளனரா ? விளக்குவீர்களா நண்பரே .

இது பல நாள் என்னை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி

சமுத்ரா said...

Dr .Dolittle ,//தண்ணீரில் பந்து மிதக்கிறது , அப்ப தண்ணீர் கனம் மிக்கதா ?பந்து கனம் மிக்கதா ?//
it depends ! கப்பல் மிதப்பதால் தண்ணீர் கனமானது என்று சொல்ல முடியாது.ஆர்கிமிடிஸ்
விதிகள், தண்ணீரில் இயல்பான பொருட்களை மேலே தூக்கும் தன்மை.Surface tension
என்று நிறைய விஷயங்கள் மிதத்தலுடன் தொடர்புடையவை.

//வெற்றிடத்தில் பூமி மிதக்கிறது ( அண்டமே மிதக்கிறது ) , அப்போ வெற்றிடம் தானே பெரியது ஆற்றல் மிக்கது .//
பூமி மிதக்கிறது என்று சொல்ல முடியாது. வெளியில் கீழே மேலே இடம் வலம் போன்ற திசைகள்
அர்த்தம் அற்றவை.எங்கே ஈர்ப்பு இருக்கிறதோ அங்கே பொருட்கள் நகரும்.வெற்றிடம் என்பது என்ன
என்பதற்கு சரியான வரையறை இல்லை. அது பொருட்களுக்கும் , ஆற்றலுக்கும் ஒரு இருப்பிடம்.

//வெற்றிடத்தின் ஆற்றல் என்ன ? அதை யாரேனும் அளந்துள்ளனரா ?//பிரபஞ்சம் விரிவடைந்து
கொண்டிருப்பதற்கு Dark energy காரணம் என்று சொல்கிறார்கள்.இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
வெற்றிடம் என்பது என்ன? வெளி என்பது என்ன? IS IT A SUBSTANCE ? தெரியவில்லை.பிரபஞ்சத்தை
வியப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சில சமயங்களில் தோன்றுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் அது ஓர் அமுத சுரபி
அனைத்தும் அதனிடமிருந்தே வருகின்றன
அதிலேயே மீண்டும் ஒடுங்குகின்றன!

ஒன்றுமே இல்லாததற்குள்
எல்லாமே இருக்கிறது! -

வியப்பதை தவிர வேறு
வழியில்லை தான்.

Dr.Dolittle said...

எனது ஐயப்பாட்டை போக்கிய அற்புத பதில் , நன்றி சார்

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும்.3 said...

மின்சாரம் என்பது தண்ணீரிலிருந்து தயாரிப்பதால் தண்ணீரீன் குணத்தை ஒத்து இருக்கிறது. தண்ணீர்க் குழாயின் அளவு அதன் ஆம்பியரைக் குறிக்கிறது. தண்ணீரீன் வேகம் அதன் ஓல்ட்டைக் குறிக்கிறதாக கொள்ளலாம்.குழாயின் அளவையும் அதன் வேகத்தையும் பொறுத்தான் தண்ணிரீன் அளவைக் கணக்கிடமுடியும். அது போல் ஆம்பியர் X ஓல்ட் என்பது மின்சாரத்தின் அளவு.
எது எப்படியோ மின்சாரத்தின் வேகம் ஒளியின் வேகம்தான் என்பது மறுக்கமுடியாதது.
சமுத்ரா கீழே கொடுக்கப்பட்டுள்ளவை
1)http://www.sciencedaily.com/releases/2009/12/091209171152.htm.
2) http://blogs.scientificamerican.com/guest-blog/2011/08/23/a-higgs-setback-did-stephen-hawking-just-win-the-most-outrageous-bet-in-physics-history/

3)http://theresonanceproject.org/research/scientific
பற்றியும் தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்

பத்மநாபன் said...

பின்னூட்டத்திற்கு வராவிட்டாலும் , அ.அ.அ எப்படியாவது படித்துவிடுவதில் குறியாக இருப்பேன். பதிவும் பின்னூட்டங்களும் வியக்கவைக்க்கின்றன...இயற்பியல் அறிவு கூடக் கூட பிரபஞ்சத்தின் மீதான வியப்பின் விஸ்தாரம் கூடிக்கொண்டே போகும்... இதுவும் பெரிய சமுகசேவை..சிறப்பாக செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள் ... என்னுடைய ’’வாத்தியாருக்கு வந்தனம்’’ பதிவில் உங்களை குறிப்பிட்டுள்ளேன்...

தறுதலை said...

தமிழில் வரும் தரமான பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. அதுவும் அறிவியல் தமிழை எளிமையாகவும், அலுப்பு ஏற்படாமலும் நீங்கள் எழுதுவது தனிச் சிறப்பு.

சில நேரங்களில் சுஜாதாவே எழுதுவது போல் இருக்கிறது. உண்மையாக சொன்னால் சுஜாதாவிற்குப் பிறகு நான் தேடிப்படிப்பது அ.அ.அ தான்

இது பொத்தகமாக வரவேண்டும் என்பது என் ஆசை. 'பிரபஞ்சத்தின் கதை' க்கு பிறகு அறிவியலை அழகாக, ஆழமாக அலசும் பொத்தகமாக இந்தத் தொடர் வரவேண்டும்.

கால வரை இன்றி, வெளியில் உலவ உவகை இருக்கு. பின் ஏன் சூனியமாய் சுருக்கி முற்றுப் புள்ளி? தொடருங்கள்.

----------------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - 'மார் '2012)

'பசி'பரமசிவம் said...

கடவுளின் பெயரால் அளவிறந்த மூட நம்பிக்கைகள் பெருகுவதற்குப் போதிய அறிவியல் அறிவு இல்லாததும் காரணம்.

அறிவியலை எளிய தமிழில் தரும் அரிய செயலைச் செய்ய முன் வந்த தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

எக்காரணம் கொண்டும் தொடரை நிறுத்தாதீர்கள்.

கணிசமான அளவில் எழுதி முடித்ததும் நூலாக வெளியிடுவது மிக முக்கியம்.

தங்களால் முடிந்தவரை எழுதிக் கொண்டே இருங்கள்.

மிக்க நன்றி.

BASU said...

//அருமை தங்கள் பதிவு வரலாறாகிறது.தமிழில் நீங்கள் தான் முதலில் இதை பதிவு செய்கிறீர்கள்.வாழ்த்துகள்.//

அதே! :)

Maha said...

அருமை