இந்த வலையில் தேடவும்

Friday, February 17, 2012

கலைடாஸ்கோப்-54

லைடாஸ்கோப்-54 உங்களை வரவேற்கிறது.

ಒಂದು
====

பெங்களூருவில் குளிர் மெல்ல மெல்ல மறைந்து குளிரும் இல்லாத வெம்மையும் இல்லாத மழையும் இல்லாத ஒரு வானிலை நிலவுகிறது. பிப்ரவரி , மார்ச் மாதங்கள் சிலருக்கு மிகவும் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கொஞ்சம் முன்னே ஜனவரி என்றால் குளிர் வாட்டி எடுக்கும். ஏப்ரல் வந்து விட்டால் விளம்பரங்களில் வருவது போல ஒரு பனிக்கரடி நம்மை கட்டிப் பிடித்துக் கொண்டு ஆடாதா என்று ஏங்க வைக்கும் வெய்யில்!இது இரண்டுக்கும் நடுவே உள்ள ஒரு Pleasant weather இப்போது.

ஹ்ம்ம்.., பருவங்கள் ,இயற்கை, வானிலை, மழை எதுவும் மாறவில்லை..மனிதன் மாறிவிட்டான்!

ಎರಡು
====

* ப்ளாக்கின் STATS பார்த்துக் கொண்டிருந்தபோது 'தற்கொலை செய்து கொள்வது எப்படி' என்ற கூகிள் தேடலுக்கு விடையாக Samudrasukhi .com வந்திருந்தது.
'தற்கொலை செய்து கொள்வது எப்படி'என்று நான் போஸ்ட் எதுவும் எழுதியதாக நினைவு இல்லை. இந்த ப்ளாகைப் படிப்பதுவே தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்று கூகிள் நினைத்து விட்டதோ என்னவோ?:(

** மனிதர்களுக்கு 'கலவி' மிகவும் முக்கியம் (நண்பன் படம் போன்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல. 'கலவி' தான்) உலகம் இயங்குவதற்கு 'அந்த' ஆசையும் ஒருவிதத்தில் காரணம். மனிதனின் எல்லா செயல்களுக்குப் பின்னும் செக்ஸ் மோட்டோ இருக்கிறது என்கிறார் ஃப்ராய்ட் .(குறைந்த பட்சம் நாற்பது வயது வரை) இதனால் தான் 40 + 50 + மக்கள் சாதனை செய்வது குறைவாகவே இருக்கிறது. அப்படி செய்தாலும் பிஸினசில் தான் முன்னேறுவார்கள்.(பணம் என்பதே காமம் என்பதன் இன்னொரு வடிவம் என்று சொல்பவர்களும் உண்டு)இள வயதினரின் (நன்றாகப் பாடுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, ஏன் ஆபீசில் வேலை செய்வது) செயல்களுக்குப் பின் காமமே முன்நிற்கிறது (அல்லது பின்னிற்கிறது) என்பது அவருடைய வாதம். சரி. மனிதர்களுக்கு மட்டுமே COLORFUL SEXUAL LIFE வாய்த்திருக்கிறது. பிட்டுப்படத்தில் தொடங்கி ,புத்தகத்தில் நடிகையின் படத்தை ஒளித்து வைப்பதில் தொடங்கி, காமசூத்திரா வரை எத்தனை சம்பிரமங்கள்? கோலாகலங்கள்?. ஆனால் விலங்குகளுக்கு? பாவம் கிடைக்கும் அற்ப நேரத்தில் அவை தங்கள் அவஸ்தையை முடித்துக் கொள்ள வேண்டும். இந்தத் தளம் விலங்குகளின் செக்ஸ் வாழ்க்கை எப்படி விநோதமாக,சுவாரஸ்யமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக விவரிக்கிறது. சில அப்பட்டமான சொற்கள் உங்களுக்கு நெருடலாகப் படலாம். ஆனால் அதை மறந்து விட்டு அறிவியலை ரசிக்கவும்.

ಮೂರು
=====

சமீபத்தில் வெப் சைட் ஒன்றில் படித்த ஒரு திருக்குறள்.

கண் களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்
செம்பாகம் அன்று, பெரிது!

-திருக்குறள் என்றால் நாம் பெரும்பாலும் ஒரு TAKE IT FOR GRANTED அணுகுமுறையுடன் தான் அணுகுவோம். திருக்குறள் தானே எல்லாம் தெரிந்தது தான் என்ற ஒருவிதமான் அலட்சியப் போக்கு. ஆனால் நம்மிடம் ஒரு பத்து தி.கு. இப்பவே சொல்லு என்றால் அதோ என் பஸ் வந்து விட்டது; நாளைக்குப் பார்க்கலாம் என்றோ மௌனமான செல்போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு சும்மானாச்சும் ஹலோ என்று சொல்லியோ எஸ் ஆகி விடுவோம்.சரி.

'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்' என்னைக் கட்டி இழுத்தாய் என்று சினிமாவில் பாடுவார்கள். ஆனால் உண்மையில் முழுப் பார்வையை விட,இரண்டு கண் பார்வையை விட, கள்ளப் பார்வையே (ஒன்றரைக்கண், ஒரு கண், அரைக்கண், முக்கால் கண் இவைகளில் குமரிமுத்து போல நோக்குதல்) காதலனை திக்குமுக்காட வைக்கிறது.ஆயிரம் பேர் கூடி இருக்கும் ஒரு பரபரப்பான இடம் என்று வைத்துக் கொள்ளலாம்.அதில் காதலன் காதலிக்கு நூல்விட்டுக் கொண்டு இருக்கிறான்.இந்த களேபரத்தில் அவள் ஒரே ஒரு முறை , அப்படி, பார்த்தும் பார்க்காதது போல், ஓரக் கண்ணால் அவனை நோக்குகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது காதலனுக்கு கிடைக்கும் பக்திப் பரவசம், ஆஹா, நீங்கள் காதலித்துப் பார்த்தால் தான் தெரியும்.

-கலமனு முக2 கள கலிகி3 ஸீத
குலுகுசு(னோ) கன்னுலனு ஜூசு

- என்கிறார் தியாகராஜர். சீதை மட்டும் விதிவிலக்கா என்ன? அவளும் ராமனை 'ஏண்டி இந்த வளையல் மேட்ச்சாவே இல்லையே 'என்று தோழியிடம் சொல்லும் சாக்கில் தலையை உயர்த்திப் பார்க்கிறாளாம்!

* hello , இவ்ளோ பெரிய வில் , கொஞ்சம் ஓவர் * மாலையை கீழே வை அம்மணி, வில்லு முழுசா உடைஞ்சதுக்கு அப்புறம் போட்டுக்கலாம்.


பாற்கடலில் உதித்த திருமணியே- சௌ
பாக்யலக்ஷ்மி என்னைக் கடைக்கணியே

என்கிறார் பாபநாசம் சிவன். திருமகளின் கடைக்கண் பார்வை போதும் என்கிறார். முழுவதும் பார்த்தால் எங்கே தங்க மழை பொழிந்து என்னையே மூழ்கடித்து விடுமோ என்ற (லேசான)பயம் போலும்!

தனக்கு நெல்லிக்கனி அளித்த ஏழைப்பெண்ணுக்கு கனகதாரா
ஸ்தோத்திரம் பாடி தங்கமழை வரவழைக்கிறார் சங்கரர்


ஆதிசங்கரர் கூட திருமகளின் கடைக்கண் பார்வை போதும் என்கிறார்.தன் கனகதாரா ஸ்தோத்திரத்தில்:

காமப்ரதா பகவதோ()பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

(பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே)


கடாட்சம் என்றால் சைடில் ஓரமாக ஒரு GLANCE ...பார்த்தும் பார்க்காமல்

ஆனால் ஒருசில மகான்கள் கடைக்கண் பார்வை என்ற பிசினஸே வேண்டாம். , பார்ப்பதென்றால் முழுவதும் பார் , என்னதான் நடக்கிறது, ஒளிவெள்ளத்தில் மூழ்கி நான் செத்துப் போய் விடுவேனா என்ன தான் நடக்கிறது பார்த்து விடலாம் என்ற தொனியில் பாடுவார்கள்.

'கடெகண்ணில் ஏகென்ன நோடி- பிடுவே
கொடு நின்ன தியானவ மனசுத்தி மாடி'

-இது புரந்தரதாசர்.


நம் ஆண்டாளும் இதே கேஸ் தான் போலிருக்கிறது சும்மா இப்படி அப்படி பார்த்தால் அவளுக்குப் பிடிக்காது போல.அப்படியே ரெண்டு கண்ணையும் கொண்டு சீரியலில் வரும் வில்லி போல எங்கள் மீது முறைத்துப் பார் என்கிறாள்:

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர்

சைடு பிட்: காண்பது என்றால் நம்மை விட உயர்ந்தவர்களை நோக்குவது. 'கண்டேன் சீதையை' ..பார்ப்பது என்றால் நம்மை விட சிறியவர்களை நோக்குவது 'சீதை அனுமனைப் பார்த்தாள்'

ನಾಲ್ಕು
=====

இரண்டு படங்கள்.
இரண்டாவதைத் தமிழில் திருத்த இயலவில்லை. அப்படியே படித்துக் கொள்ளவும்.




ಐದ್ಹು
===

இந்தத் தளத்தில் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிப்பது போல நம் பிரபஞ்சம் முழுவதையும் வியப்புடன் தரிசிக்கலாம்.ஒரு குறிப்பிட்ட ஸ்கேலுக்கு மேல் நம்மால் வெறும் கண்களால் பிரபஞ்சத்தைப் பார்க்க முடியாது இல்லையா? ஆனால் இங்கே VIRTUAL ஆகப் பார்த்துக் கொள்ளலாம்.பிரபஞ்சத்தின் பெரிய எல்லை OBSERVABLE UNIVERSE ..ஒரு சக்தி வாய்ந்த தொலைநோக்கியால் எதுவரை பார்க்க முடியும் என்ற எல்லை.சில காலக்ஸிகளில் இருந்து வரும் ஒளி இன்னும் நம்மை வந்து அடையவில்லை என்றால் அவற்றை நம்மால் பார்க்க முடியாது.அதனால் நம்மால் பார்க்க முடிந்த பிரபஞ்சத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.அதே போல சிறிய எல்லை.அணுவின் உள்ளே அணுத்துகளின் உள்ளே , குவார்க்குகளின் உள்ளே என்ன இருக்கும்? சங்கு சக்ர தாரியாக மகாவிஷ்ணு இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு முட்டை மார்க்.அப்படி இல்லை. என்ன இருக்கிறது என்று நீங்களே சென்று பார்த்துக் கொள்ளவும்.

ಆರು
===

ஓஷோ ஜோக்.


இது ஒரு A ஜோக். படிப்பதோ படிக்காமல் விடுவதோ உங்கள் இஷ்டம்.

A ஜோக் என்றதும் கிளுகிளுப்பான படம் எதிர்பார்த்தீர்களாக்கும்
ஆசை தோசை!


நிர்வாண பீச் ஒன்றில் ஒரு பெண் ஒருவனுடைய 'பைப்பில்' (அதை வேறு எப்படி அழைப்பது??) WY என்று எழுதி இருப்பதைப் பார்த்து அது என்ன வார்த்தை என்றாள்.அதுவா WANDY என் GIRL FRIEND பெயர். சுருங்கி இருக்கும் போது WY என்று இருக்கும். மூடு வந்தால் அதில் என் காதலி பெயர் தெரியும்படி பச்சை குத்தி இருக்கிறேன் என்றான். சரி என்று அவள் கொஞ்ச தூரம் போனதும் இன்னொரு ஆளை சந்தித்தாள். அவனுடையதிலும் WY என்று எழுதி இருந்தது. ஹலோ என்ற அவள் 'உன் காதலி பேரும் WANDY யா ?' என்று கேட்டாள்.இல்லையே என்றான் அவன். பின் அங்கே என்ன பச்சை குத்தி இருக்கிறாய் என்று கேட்டாள்.அதுவா? அது தான் WELCOME TO THE BEACH AND HAVE A NICE DAY!

(பெண் இப்போது மயங்கி விழுகிறாள்!)

உங்களுக்காக இன்னொன்று. வாழ்வைக் கொண்டாடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். நாளை என்பதே இல்லை என்பது போல இன்றை அனுபவியுங்கள்!

சர்கஸில் மிருகங்களை பழக்கும் வேலைக்கு ஒரு ஆண் ஒரு பெண் இரண்டு பேரும் வந்திருந்தனர்.சர்க்கஸ் முதலாளி LADIES FIRST என்று முதலில் பெண்ணை சிங்கத்தின் கூண்டுக்கு அனுப்பினார். சிங்கம் அவளை நோக்கி பாய்ந்து வந்தது. உடனே அந்தப் பெண் தன் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றாள். திடுக்கிட்ட சிங்கம் உடனே பணிந்து அவள் கையை நக்கி விட்டு ஓரத்தில் சென்று படுத்துக் கொண்டது.

சர்க்கஸ் முதலாளி , 'இதப் பாருப்பா இப்ப உன் முறை. அதை விட சிறப்பாய் உன்னால பண்ண முடியுமா? முடியாதுன்னா அப்படியே வெளியில் போய் விடு' என்றார்

'கண்டிப்பா முடியும் சார். அதை விட ரொம்ப சிறப்பாகவே செய்வேன். அந்த முட்டாள் சிங்கத்தை மட்டும் எப்படியாவது கூண்டில் இருந்து வெளியேற்றுங்கள்' என்றான் அவன்...

சமுத்ரா

9 comments:

முனுசாமி said...

அன்பு சமுத்ரா....மிகவும் நன்று........விரைவில் முடிந்து விட்டதால் (கோபமாக சொல்கிறேன்) அடுத்த முறை அதிகமாக எழுதவும்.

Kumaran said...

இப்படிங்க எப்படிங்க எழுதுறீங்க..?? ஒரு புது அனுபவத்தை உணர்கிறேன்..தங்களது பதிவில்..மிக்க நன்றிங்க.

பால கணேஷ் said...

ஹா...ஹ்...ஹா... கடைசி இரண்டு ஜோக்குகளில் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்... மற்ற அனைத்து அனுபவங்கள் தந்த மகிழ்ச்‌சியையும் இவை தூக்கிச் சாப்பிட்டு விட்டன. ஹா... ஹா...

Jayadev Das said...

\\ஹ்ம்ம்.., பருவங்கள் ,இயற்கை, வானிலை, மழை எதுவும் மாறவில்லை..மனிதன் மாறிவிட்டான்!\\ என்ன சமுத்ரா அக்கம் பக்கம் குடியிருக்கிறவங்க கிட்ட அரட்டையடிக்க மாட்டீங்களா? இப்படி அப்பிராணியா இருக்கீங்களே? முப்பது வருடங்களுக்கு முன்னர் இதே பெங்களூரில் ஏப்ரல் மே மாதங்களில் கூட பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஸ்வெட்டர் போட்டு அனுப்புவார்களாம், மின்விசிறி, ஏ.சி. இதெல்லாம் எப்படி இருக்கும் என்று பெங்களூர் வாசிகளுக்குத் தெரியாதாம். இப்போ நிலைமை எப்படி இருக்கிறதென்று உங்களுக்கே தெரியும். மனிதன் சுற்றுப் புறச் சூழ்நிலையை இந்த அளவுக்கு பாழ் படுத்தி விட்டான், எந்த காலத்துல இருக்கீங்க நீங்க இன்னமும் கண்ணதாசன் பாட்டை பாடிகிட்டு!!

Jayadev Das said...

\\ப்ளாக்கின் STATS பார்த்துக் கொண்டிருந்தபோது 'தற்கொலை செய்து கொள்வது எப்படி' என்ற கூகிள் தேடலுக்கு விடையாக Samudrasukhi .com வந்திருந்தது.\\ அது ஒண்ணுமில்லை, Samudra என்ற வார்த்தை இருக்கிறதே அதை தற்கொலை பண்ணிக் கொள்ள சமுத்திரத்தில் விழலாம் என்பதற்கு தப்பாக எடுத்துக் கொண்டிருக்கும் என நினைக்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

/// !இது இரண்டுக்கும் நடுவே உள்ள ஒரு Pleasant weather இப்போது.//

உங்கள் தளம் வரும்போதெல்லாம் இப்படித்தான் இருக்கும் எனக்கும்,
The Known Universe By AMNH மிக அபூர்வமான வீடியோ அனைவரும் பார்த்து உணர வேண்டியது. பகிர்ந்தமைக்கு நன்றி.

Anonymous said...

Interesting

Anonymous said...

தெரியாமல் உங்கள் வலையில் நுழைந்தேன்...சுவாரஸ்யமாய் கலக்கியிருக்கிறீர்கள்...
தொடர்கிறேன்...

Riyas said...

interesting post.. samudra