அணு அண்டம் அறிவியல் -56 உங்களை வரவேற்கிறது மறுபடியும் ஒரு மாறுதலுக்காக வேறு ஒரு டாபிக். Artificial Intelligence (AI ) - செயற்கை அறிவு.
செயற்கை அறிவை வைத்து உலக அளவில் I , Robot டில் இருந்து எந்திரன் வரை படங்கள் வந்து விட்டன.ஆனால் அவையெல்லாம் அதீத கற்பனைகள்.ஒரு ரோபோ நாட்டைக் குறிஞ்சியில் ஹுசேனி கலந்து விட்டது என்றெல்லாம் கண்டு பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும். இதற்கு ஒன்று உண்மையிலேயே அதற்கு சங்கீத அறிவை உட்செலுத்த வேண்டும். ரோபோ, 'ரொம்ப போரடிக்கிறது மதுரை சோமுவின் வாசஸ்பதி ஆர்.டி.பி போடு' என்று அதுவாகவே சொல்லவேண்டும். அதுதான் AI ...இல்லையென்றால் ரோபோவின் உள்ளே ஒரு FREQUENCY DETECTOR வைத்து இசை எந்த விதமான ஆரோகண அவரோகன அதிர்வெண் கிரமத்தில் வருகிறது என்று கண்டுபிடித்து முதலிலேயே உட்செலுத்தப்பட்ட ராக Data base டேபிள்-ஐப் பார்த்து ,அதனுடன் ஒப்பிட்டு இது நாட்டைக்குறிஞ்சி என்று சொல்ல வேண்டும்.ஆனால் இது மீண்டும் மனிதனின் தர்க்க அறிவே தவிர இயந்திரத்தின் AI அல்ல.இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு டிடெக்டர் அது இது என்று வைத்துக் கொண்டே இருந்தால் ரோபோட் ஒரு டைனோசர் அளவுக்குப் பெரிதாகி விடும்.ரஜினி போல ஸ்லிம்மாக கண்டிப்பாக இருக்காது.
முதலில் அறிவு என்றால் என்ன?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
ஒன்றை நல்லதா கெட்டதா என்று பிரித்துப் பார்ப்பது தான் அறிவு என்கிறார் வள்ளுவர். ஒரு கணிப்பொறிக்கு அது நாம் நல்லது செய்கிறோமா (ஆஸ்பத்திரியில் புதிய மருந்து கண்டுபிடிக்க) அல்லது கெட்டது செய்கிறோமா (தீவிரவாதிகள் கையில் இருக்கிறோமா) என்று தெரியாது.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
தனக்கு அழிவு நேரிடாமல் காத்துக் கொள்வது அறிவு. ஒரு ரோபோவை நோக்கி உருட்டுக் கட்டையால் அடிக்கப் பாருங்கள். அது கையை உயர்த்தி தானாகவே உங்களைத் தடுத்தால் அது தான் A .I
இங்கே இரண்டு விதமான வாதங்கள் இருக்கின்றன. ஒன்று : அறிவு என்பது பிரக்ஞைத்தன்மையின் துணைப்பொருள் என்று நம்புவது (Intelligence is the by-product of consciousness) .நாம் சிந்திக்கிறோம் என்றால் நமக்குள்ளே ஒரு விழிப்புணர்வு அல்லது ஆத்மா என்ற ஒன்று இருப்பதால் தான் என்ற வாதம்.இன்னொன்று பிரக்ஞைத்தன்மை என்பது அறிவின் துணைப்பொருள் என்ற நம்பிக்கை (consciousness is the by-product of Intelligence) அறிவு இருப்பதால் தான் நாம் நம்மை உணர்கிறோம் என்பது.டெஸ்கார்டசின் Cogito ergo sum என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.I think therefore I'm ! நான் நினைக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன்.இரண்டாவது வாதத்தில் I'm therefore I think ! நான் இருக்கிறேன் அதனால் நான் சிந்திக்கிறேன்! இந்த இரண்டாவது வாதம் உண்மை என்றால் Artificial Intelligence சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஒரு இயந்திரத்திற்கு நம்மால் செயற்கை இதயம், நுரையீரல் ஏன் மூளையைக் கூட வைக்க முடியும். ஆனால் அதற்கு 'உயிர்' கொடுக்க முடியாது.திரைப்படங்களில் வருவது போல மோட்டார்களையும் ஒயர்களையும் சென்சார்களையும் இணைத்து
'சிந்தனை செய் சிட்டி' என்றால் அது சிந்திக்காது.ஆனால் இன்னும் சில விஞ்ஞானிகள் இயந்திரங்களை சிந்திக்க வைக்க முடியும் என்று நம்புகின்றனர். கிளாடி என்ற விஞ்ஞானியிடம் Can Machines think? என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதிலளித்தாராம்.'எப்படி'? என்று கேட்டதற்கு "I think, don't I?" என்றாராம். இவர்கள் மனிதனை வெறுமனே 'சிந்திக்கும் இயந்திரம்' என்று நம்புபவர்கள்.
இயந்திரங்களை சிந்திக்க வைத்தால் அவற்றால் தியானம் செய்ய முடியுமா ?
வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்? - என்ற பரவச நிலையை அவை அடையுமா தெரியவில்லை.
சரி.தத்துவம் ஒருபக்கம் இருக்கட்டும். இனி செயற்கை அறிவின் அறிவியலுக்குள் நுழைவோம்.
மெசின்களை சிந்திக்க வைப்பதற்கு முதலில் மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்பது தெரிய வேண்டும். ஏரோப்ளேன் கண்டுபிடிப்பதற்கு முன் பறவை எப்படிப் பறக்கிறது என்று ஆராய்வது போல. ஆனால் இன்றுவரை மனிதமூளை என்பது கைதேர்ந்த விஞ்ஞானிகளுக்குக் கூட ஒரு மிகப்பெரும் சவாலாக,விடுவிக்க இயலாத புதிராக இருக்கிறது.மூளையின் சர்க்யூட்டுகள் அதாவது நியூரல் நெட்வொர்க்ஸ் எப்படி இயங்குகின்றன என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. குத்துமதிப்பாக இந்த இடத்தில் தூண்டினால் கோபம் வருகிறது இந்த இடத்தில் தூண்டினால் ஆள் ரொமாண்டிக்-மூடுக்குப் போகிறான் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்களே தவிர எப்படி மூளை இதை செயல்படுத்துகிறது என்று தெரியவில்லை. உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒருமொழியில் பத்தாயிரம் வார்த்தைகள் தெரியும் என்று
வைத்துக்கொள்வோம். உடனே அவன் பேப்பர் பேனா எடுத்துக் கொண்டு கவிதை எழுதப் புறப்பட்டு விடுகிறான். ஆனால் ஒரு சாதாரண வீட்டுபயோக கம்ப்யூட்டரில் உலகின் அத்தனை மொழிகளின் அகராதிகளையும் ஒருங்கே சேமித்துவைக்க முடியும்.ஆனால் அது அத்தனை சொற்களையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் தேமே என்று உட்கார்ந்திருக்கிறது. வைரமுத்து அளவுக்கு கவிதை எழுதாவிட்டாலும் 'பெண்ணே நீ பேரழகு' என்ற அளவுக்கு எழுதினால் போதும். ஆபீசுக்கு வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து பார்த்தால் அது ஒரு கவிதை எழுதி வைத்திருந்தால் எப்படி
இருக்கும்? [ஒன்று மட்டும் நிச்சயம் சினிமா கவிஞர்களுக்கு வேலை போய் விடும்] 'அறிவுள்ள' ஒரு கம்ப்யூட்டருடன் வேலை செய்வது சுவாரஸ்யமான விஷயம். இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்.
ஆள்: ஹலோ என் கணினியே? GM .
கணினி: ஹலோ, மார்னிங்..என்ன இன்னைக்கு சீக்கிரம் ஆபீசுக்கு வந்துவிட்டாய்?
ஆள்: மனைவியுடன் சண்டை
கணினி: உன் ஜி-மெயில் சேட்-டை எல்லாம் உன் மனைவிக்கு Forward செய்யவா?
ஆள்: என்ன மிரட்டுகிறாயா? உன் மதர் போர்டை பிடுங்கி விடுவேன்.
கணினி: அதையெல்லாம் எப்போதோ back -up எடுத்துக் கொண்டாகி விட்டது.
ஆள்: ரொம்ப பேசற நீ, சரி நேற்றைய பாலன்ஸ் சீட் ஒப்பன் பண்ணு
கணினி: நானே டேலி செய்து விடவா?
ஆள்: சரி செய். நான் போய் ஒரு காபி எடுத்து வருகிறேன்.இறுதியில் என் பெயர் போட மறக்காதே.
கணினி: மனிதர்களே இப்படித்தான் :(
இயற்பியல், நியூட்டனின் பிறப்புக்குப் பின்னர் மள மள என்று வளர்ந்தது.அது போல Artificial Intelligence -இன் நியூட்டன் என்று ஒருவர் இன்றுவரை பிறக்கவில்லை என்கிறார்கள். (ஒருவேளை அது நான் தானோ ?:) )ஆனாலும் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்சிகள் செய்து Father of ai என்று அழைக்கப்படுபவர் ALAN TURING (23 June 1912 – 7 June 1954) என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ,அறிவாளிகள் நீண்டநாள் வாழ்வதில்லை என்ற விதியை பொய்யாக்க விரும்பாமல் இவரும் தன் 41 -வது வயதில் வைகுண்டப்ராப்தி அடைந்தார்.
நமக்கு தான் ௮-௮-௮ வில் விஞ்ஞானிகளின் குறைகளை அலசுவது ரொம்பப் பிடிக்குமே? ஹி ஹி .டியூரிங் ஒரு ஹோமோ-செக்ஸுவல்.(Of course இது ஒரு குறை அல்ல) ஆனால் அந்தக் காலத்தில் ஓரினச்சேர்க்கை ஒரு தண்டிக்கத் தக்க குற்றமாக இருந்ததால் இவர் ஆபரேஷன் செய்து கொண்டு முழுவதும் பெண்ணாக மாறி விட முடியுமா என்று
யோசித்தார்.ஹோமோ-செக்ஸுவல் களுக்கு சாதாரணமாகவே பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப இவரும் ஒரு Aggressive ஹோமோ-செக்ஸுவல் ஆக இருந்தார். பொது நூலகங்களில் மறைவிடங்களில் 'பையன்களிடம்' தவறாக நடந்து கொண்டதாக இவர்மேல் வழக்குகள் கூட உண்டு. டியூரிங்கின் உயிர்காதலராக இருந்தவர் அர்னால்ட் முர்ரே. (பெண் அல்ல, ஆண்) இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் இருவரையும் கைது செய்து கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று அறிவித்தது.(இரண்டாம் உலகப் போரின் போது இவர் வீட்டில் போராட்டக் காரர்கள் புகுந்து விட்டனர் என்று சொல்லி இவர் போலீசை அழைத்தார்.போலீஸ் வந்த போது இவரும் இவர் பாய்-பிரண்டும் எக்குத்தப்பாக இருந்ததை பார்த்து அவர்களை கைது செய்து விட்டது போலீஸ்.[போலீசை கூப்பிட்டு விட்டு ஏன் ஜல்சா செய்தீர்கள் டியூரிங் ??])இதனால் மனம் உடைந்த டியூரிங், அரசாங்கத்தின் கட்டளைக்கு பணிந்து பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதில் முழுத்திருப்தி ஏற்படாமல் (He didn't like the breasts !)அடுத்த ஒரு வருடத்திலேயே சயனைடு கலந்த ஆப்பிளைத் தின்று தற்கொலை செய்து கொண்டார்.ஆப்பிள் நிறுவனத்தின் கொஞ்சம் கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ இவரை கவுரவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். டியூரிங் இறப்பிற்குப் பிறகு இயற்கைக்கு எதிரான காதல்களை குறிக்க கூட இந்த கடிக்கபப்ட்ட ஆப்பிள் சின்னம் பயன்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் 'எனிக்மா' என்ற யுத்த மெசினின் நிரல்களை (code) உள்ளே புகுந்து அழிக்கும் எதிர் மெசின்களை வடிவமைத்தவர் டியூரிங்
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு பெருகி வரும் இன்றைய நாட்களில், சமீபத்தில் 2009 ஆம் ஆண்டில் ஜான் க்ராஹாம் என்பவர் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானியை அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற ஒரே காரணத்துக்காக கேவலமாக நடத்திய செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடர்ந்தார்.பிரிட்டிஷ் பிரதமர் ,We cant reverse the clock என்று கூறி பேசிய மன்னிப்பு உரையை அப்படியே பார்க்கலாம்.
"Thousands of people have come together to demand justice for Alan Turing and recognition of the appalling way he was treated. While Turing was dealt with under the law of the time and we can't put the clock back, his treatment was of course utterly unfair and I am pleased to have the chance to say how deeply sorry I and we all are for what happened to him ... So on behalf of the British government, and all those who live freely thanks to Alan's work I am very proud to say: we're sorry, you deserved so much better "
மிக அதிக பாலின உணர்வு உள்ளவர்கள் மிக அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள் என்ற பேச்சுக்கு டியூரிங் விதிவிலக்கு அல்ல.கணிதத் துறைக்கும் கணினித் துறைக்கும் இவர் கொடுத்த பங்குகள் அளப்பரியவை.
Godel
கணிதத்தில் இருக்கும் ஒரு முக்கியமான தேற்றம் கோடலின் INCOMPLETENESS THEOREM .அதாவது கணிதத்தில் நிரூபிக்கவே முடியாத சில தரவுகள் (axioms )இருக்கின்றன என்பது.[எந்த ஒரு முழு எண்ணையும் இரண்டு பகா எண்களின் கூடுதலாக எழுத முடியும் என்பதற்கு நிரூபணம் இன்றுவரை இல்லை.ஆனால் இது உண்மை ] கணிதம் என்பது முழுமையானது என்ற கருத்தை இந்த தேற்றம் பொய்யாக்கியது. எப்படி ஹைசன்பெர்க்- இன் நிச்சயமில்லாத் தத்துவம் இயற்பியல் உலகை ஆட்டம் காண வைத்ததோ அப்படி கோடலின் தேற்றங்கள் கணித உலகையே உலுக்கின.அதே போல டியூரிங் ஒரு கொள்கையை முன்வைத்தார்.
இன்றைய கணிப்பொறியின் உள்ளீடு (INPUT ) , CPU மற்றும் வெளியீடு (OUTPUT ) மாடலை முதன்முதலில் உருவாக்கியவர் டியூரிங்.இது டியூரிங் இயந்திரம் என்று அழைக்கப்படுகிறது [Turing Machine ]ஒரு டியூரிங் இயந்திரம் , ஒரு கணக்கீட்டை செய்ய ஒரு கணிக்கத்தக்க நேரம் எடுத்துக் கொள்ளுமா அல்லது முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்ளுமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இயந்திரம் முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் நாம் அளித்த உள்ளீடு கணக்கிட இயலாதது (In computable ) அல்லது நிரூபிக்க முடியாதது என்று அர்த்தம். எனவே டியூரிங்-கின் இயந்திர மாடல் மீண்டும் கோடலின் கணிதவியல் தேற்றங்களை உறுதிப்படுத்தியது.
Artificial Intelligence இன் முதல் படி என்ன என்றால் ஒரு இயந்திரம் Turing Test என்ற ஒரு டெஸ்டை பாஸ் செய்ய வேண்டும்.( என்ட்ரன்ஸ் எக்ஸாம் மாதிரி!) ஒரு மனிதனையும் மெஷினையும் சீல் செய்யப்பட பெட்டிகளில் அடைக்க வேண்டியது. எந்தப் பெட்டியில் எது இருக்கிறது என்று வெளியில் இருந்து யாருக்கும் தெரியாது.இரண்டு பெட்டிகளையும் நோக்கி
கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டியது. விடைகளை வைத்து அது மெஷின் சொன்னதா அல்லது மனிதன் சொன்னதா என்று வெளியிலிருந்து அனுமானிக்க முடியாவிட்டால் அந்த மெஷின் Turing டெஸ்டை பாஸ் செய்து விட்டது என்று அர்த்தம்.
உதாரணமாக நான் செத்துப் போகிறேன்; பிறகு எனக்கு ஒரு குழந்தை பிறக்கிறது ; அதன் பெயர் என்ன? என்று கேட்டால் 'தெரியாது' என்று விடை வந்தால் அது மெஷின். 'டேய் பேரிக்காய் மண்டையா, செத்துப் போனதுக்கப்பறம் எப்புடிடா பாப்பா பொறக்கும்' என்று (கவுண்டமணி வாய்சில்)பதில் வந்தால் அது மனிதன்.
ஒரு அறிவாளி ரோபோட்டை வடிவமைப்பதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று Top -down இன்னொன்று Bottom -up .எந்திரன் படத்தில் இந்த இரண்டு அணுகுமுறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
TOP DOWN - ஒரு ரோபோட்டின் உள்ளே சி.டி. அல்லது சிப் ஒன்றை நுழைத்து அதை திடீரென அறிவாளியாக ஆக்குவது
BOTTOM UP - அடிப்படை அறிவு (?) உள்ள ஒரு ரோபோட்டை உருவாக்கி விட்டு பின்னர் மற்ற எல்லாவற்றையும் 'நீயே அறிந்து கொள்' என்று விட்டு விடுவது.
இந்த இரண்டைப் பற்றியும் விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
சமுத்ரா