இந்த வலையில் தேடவும்

Saturday, October 29, 2011

ஏழாம் அறிவு- போதிதர்மா இவர்களை மன்னியும்!

பொதுவாக நான் இங்கே சினிமா விமர்சனங்களை எழுதுவது இல்லை. சமுத்ராவின் பாலிசி என்ன என்றால் எவ்வளவோ பணம் செலவழித்து பலபேர் இரவு பகலாக உழைத்து வெளிவரும் சினிமா ஒன்றை நூறு ரூபாய் செலவு செய்து (ஐஸ் க்ரீமெல்லாம் சேர்த்து 150 ரூபாய்) பார்த்து விட்டு ஆபீசில் ஒசி இன்டர்நெட்டில் உட்கார்ந்து விமர்சனம் செய்வது கூடாது என்பதுதான் அது.

இருந்தாலும் இந்த விமர்சனத்தை எழுதுவது ஏன் என்றால் படம் வெளியாவதற்கு முன்னர் அவர்கள் கொடுத்த (கொஞ்சம் ஓவரான) பில்ட்-அப்.இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வு பொங்கி எழும்.தமிழனாகப் பிறந்ததற்கு பெருமைப்பட்டு நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை மேவி ரோட்டில் நடப்பார்கள் என்றெல்லாம் அதன் இயக்குனர் பேசிய வீர வசனங்கள். ஆனால் தியேட்டரில் படம் முடிந்து யாருக்கும் அப்படி அசம்பாவிதம் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.'டேய் மச்சான், அந்த ஃபிகரு என்னை திரும்பிப் பாத்திருச்சுடா' என்றும் 'என்ன லோடு இன்னும் வரவேயில்லை, நேத்தே சொன்னனே' என்றும் 'துணி காயப் போட்டிருந்தேன் எடுக்கவே இல்லை' என்றும் தான் படம் முடிந்து போதிதர்மர் அவதரித்த வீரமண்ணின் புதல்வர்கள் புதல்விகள் பேசிக் கொண்டு கலைந்து சென்றார்கள்.சினிமாக்களில் பிரச்சனை என்ன என்றால் என்னதான் மெனக்கெட்டாலும் ஒரு இரண்டரை மணிநேரத்தில் மக்கள் மனதில் அவ்வளவு எளிதாக
கருத்துகளைப் பதியவைத்து விட முடியாது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வராத தமிழ் உணர்வு வீரம் எல்லாம் ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலே வந்து விடும் என்று அதன் இயக்குனர் நினைப்பது அறியாமையா இல்லை வெறும் so -called வியாபார தந்திரமா தெரியவில்லை.

கடைசியில் மெசேஜ் சொல்லும் திரைப்படங்களை மக்கள் அவ்வளவாக வரவேற்பதில்லை.எதற்காக சினிமாவுக்கு வருகிறார்கள் என்றால் சில பேர் பொழுது போக்க, சில பேர் காதலியுடன் நெருக்கம் அதிகமாவதற்காக, சில பேர் ட்ரைலரை நம்பி ஏமாந்து போய், சில பேர் நண்பர்கள் அழைத்தார்கள் என்பதற்காக இப்படி ஒரு நாலைந்து வகைகளில் பிரித்து விடலாம். போதிதர்மரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சினிமா தேவையில்லை. இன்டர்நெட்டில் அவரைப் பற்றி ஏராளமான விஷயங்கள் காணக் கிடைக்கின்றன.சுருதி ஹாசன் சொல்வது போல ஓஷோ போதி தர்மரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருக்கிறார்.(Bodhidharma -
the greatest Zen master-Commentaries on the Teachings of the Messenger of Zen
from India to China
அதிலெல்லாம் போதியைப் பற்றி தெரிந்து கொண்டு புளகாங்கிதம் அடையாதவர்களுக்கு சினிமாவைப் பார்ப்பதால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.என்ன ஒரு ஆறுதல் என்றால் சூர்யா போதிதர்மராக நடித்ததால் இனிமேல் தமிழ்நாட்டில் போதிதர்மர் என்றால் பலபேருக்கு பரிச்சயம் இருக்கும். ஒரு மரியாதை இருக்கும். அவ்வளவு தான். அது அவர்கள் மூளையில் ஏறுமே தவிர அதன் இயக்குனர் எதிர்பார்ப்பது போல ரத்தத்தில் எல்லாம் கலக்காது.

மக்கள் திரைப்படங்களை விட ஒரு LIVELY EXAMPLE தேவை என்று நினைக்கிறார்கள்.நடிக்கும் போதிதர்மர் இல்லை ஒரு நடமாடும் போதிதர்மர்! பதினைந்து நிமிடம் சந்நியாசியாக நடித்து விட்டு பின்னர் ஹீரோயினுடன் ஈர உடையில் நடனமாடும் போதி தர்மர் அல்ல! படம் எடுத்து முடித்ததும் உண்மையான போதிதர்மர் செய்தது போல ஹீரோ எல்லாவற்றையும் துறந்து விட்டு துறவியாக போகத் தயாராக இருந்தால் மக்கள் உண்மையிலேயே ஏதோ விஷயம் இருக்கிறது என்று திரும்பிப் பார்ப்பார்கள். Otherwise it's just a film on the screen!

போதிதர்மரின் பெயரை வெறுமனே வியாபார ரீதியாக உபயோகித்திருக்கிறார்கள்.அவருக்கு ஒரு பெண் சந்நியாசி தீட்சை அளித்தது, அவர் ஒரு சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு வருடக்கணக்கில் தவம் செய்தது, தலையில் செருப்பை வைத்துக் கொண்டு நடந்தது இதையெல்லாம் இயக்குனர் ஏன் காட்டவில்லை என்று தெளிவாகவே நமக்குத் தெரியும்.தற்காப்புக் கலை, மருத்துவம், வசியம் இவையெல்லாம் போதிதர்மரின் இரண்டாம்பட்ச தொழில்கள். அவரின் கவனமெல்லாம் தன்னை அறியும் கலை தான். போதிதர்மரை ஏதோ கராத்தே மாஸ்டர் லெவலுக்கு காட்டியிருப்பது வேதனை.(ஒருவேளை படத்தில் வருவது மங்கி சங்கியோ?)

சரி விமர்சனம் என்று இறங்கியாகி விட்டது.முழுவதும் பார்த்து விடுவோம்.படத்தின் கதை இது தான்.கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசர் போதிதர்மர் சீனாவுக்குப் புறப்பட்டுப் போகிறார். அங்கே ஒரு கிராமத்தில் தங்கி அங்கே பரவி வரும் அம்மை போன்ற ஒரு வினோதமான மர்ம நோயில் இருந்து அந்த மக்களை மீட்கிறார். தான் கற்ற
தற்காப்புக் கலை மூலம் அவர்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கிறார்.தன் கலைகளை அங்கே வேரூன்றி விட்டு அங்கேயே இறந்தும் போகிறார்.

இனி நிகழ்காலம். சென்னை. சர்க்கஸ் ஒன்றில் வித்தைக்காரராக இருக்கிறார் ஹீரோ சூர்யா.ஹீரோயின் ஸ்ருதி (கமல)ஹாசன் டி.என்.ஏ எனப்படும் மரபணு பற்றி ஆராய்ச்சி செய்து வரும் மாணவி.எதைப் பற்றி ஆராய்ச்சி என்றால் Genetic memory எனப்படும் மரபணு நினைவுத் திறமை. உதாரணமாக நம் வம்சத்தில் யாரோ ஒரு முன்னோருக்கு ரசவாதம் செய்வது எப்படி என்று தெரிந்திருந்தால் அந்த ரகசியம் நம் ஜீன்களுக்குள்ளும் எங்கோ ஒளிந்திருக்கும் என்று நம்புவது.இது உயிரியில்
ரீதியாக எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.இது சாத்தியமானால் உலகில் நன்மையே நிகழும் என்று உறுதியாக சொல்ல முடியாது, ஹிட்லரின் வம்சத்தில் யாராவது ஒருவருக்கு ஹிட்லரின்
டி.என்.ஏ வைத் தூண்டி விட்டால் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை ஆகி விடும்)மேலும் ஒருவரது பண்புகள் மற்றும் திறமைகள் டி.என்.ஏ வால் மட்டுமே அவரின் சந்ததிக்குக் கடத்தப் படுகிறது என்று உறுதியாக சொல்லமுடியாது.Nature or nurture என்ற விவாதம் இது.சில திறமைகள் பிறப்பால்
வருகின்றன.சில வளர்ப்பால்! நம்முடைய தாத்தா ஒரு தேர்ந்த இசைமேதையாக இருக்கலாம். அதற்காக நாம் சங்கீதமே படிக்காமல் முந்தா நாள்
டி.என்.ஏ வைத் தூண்டி விட்டுக் கொண்டு மறுநாள் காம்போஜியில் ராகம் தானம் பல்லவி செய்யப் புறப்பட்ட கதை மாதிரி ஆகி விடும்.Anyway கதைக்காக இது சாத்தியம் என்று வைத்துக் கொள்ளலாம்.மருத்துவத்திலும்
தற்காப்புக் கலையிலும் சிறந்தவர்கள் பலர் இருக்கும் போது ஸ்ருதி ஹாசன் தேவையில்லாமல் ஞானம் பெற்று பிரபஞ்சத்தில் ஒன்றிக் கலந்து விட்ட போதிதர்மரை வம்புக்கு இழுக்கிறார்.படத்தில் போதிதர்மரைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள் இல்லை. இந்த
டி.என்.ஏ ஆராய்ச்சி பற்றியும் இல்லை. சூர்யாவுக்கு சில ஊசிகள் போடுகிறார்கள்.தண்ணீரில் ஒயர் எல்லாம் மாட்டி முங்கவைக்கிறார்கள்.இப்படியெல்லாம் செய்தால் கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த போதிதர்மர் சூர்யாவின் உடலில் (வில்லன் அடிக்கும் போது !) உயிர்பெற்று வந்து விடுவாரா என்றும் தெரியவில்லை.

இது இப்படி இருக்க சமகாலத்தில் சீனா ஒரு தந்திரம் செய்கிறது இந்தியாவுக்கு எதிராக. ஒருவித வைரஸை இங்கே பரப்பி விட்டு அம்மை போன்றதொரு தொற்று நோயைப் பரப்ப வேண்டியது.அதற்கு மருந்து போதிதர்மரின் சிஷ்ய பரம்பரைக்கு அதாவது சீனர்களுக்கு மட்டுமே அத்துப்படி. மருந்து கொடுக்கும் சாக்கில் இந்தியாவின் அரசியலில் தலையிட்டு மெல்ல மெல்ல அடிமைப் படுத்துவது அவர்கள் திட்டம்.வைரஸை பரப்பும் திருப்பணி டோங் லீ என்னும் நம் வில்லனிடம் கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் நம் ஹீரோயின் போதிதர்மரை எழுப்புகிறேன் பேர்வழி என்று தன் பேப்பர்களை சைனாவுக்கு அனுப்ப, அவர்கள் அலர்ட் ஆகி, ஹீரோயினை போட்டுத் தள்ளும் திருப்பணியும் வில்லனுக்கு கொடுக்கப்படுகிறது.

ஸ்ருதி நீண்ட தேடல்களுக்குப் பிறகு சூர்யா போதிதர்மரின் வம்சம் என்று அறிந்து கொல்கிறார்.சூர்யாவை
டி.என்.ஏ ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பதற்காக அவரைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுகிறார். இது தெரிந்து சூர்யா 1980 களில் வந்திருக்க வேண்டிய யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாட்டைப் பாடி வருந்துகிறார்.நம்மையும் வருத்துகிறார்.எப்படியோ கடைசியில் சூர்யா ஆராய்ச்சிக்கு ஒத்துக் கொள்கிறார்.இந்தியா வரும் வில்லன் ஒரு நாய்க்கு வைரஸை ஏற்றி தன் திருப்பணியை வெற்றிகரமாக தொடங்கி வைக்கிறார். தடுக்க வந்த போலீஸ்காரர்களை கண்ணாலேயே வசியம் செய்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளும்படி செய்கிறார்.டோங் லீ ஸ்ருதியைக் கொலை செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் ஹீரோ அவரை எதிர்பார்த்தது போல காப்பாற்றுகிறார்.ஹீரோவும் ஹீரோயினும் தக்காளி சாஸ் பூசிக் கொண்ட முகத்துடன் (சிறிய காயங்களாம்!) ஒரு கண்டெயினர் லாரியே மேலே விழுந்தபோதும் தமிழ் சினிமாவின் இலக்கணப்படி தப்பிக்கிறார்கள். .வில்லனை ரகசியமாகப் பின் தொடரும் இருவரும் சுருதியின் காலேஜ் ப்ரொபசர் இந்த திட்டத்துக்கு உடந்தை என்று அறிந்து கொண்டு அவர் வீட்டை குடைந்து சோதனை போட்டு விவரங்களை அறிந்து கொள்கிறார்கள்.வில்லன் பரப்பிய வைரஸ் நாய் மூலம் மனிதர்களுக்கும் பரவி ஆஸ்பத்திரிகள் விசித்திர கேசுகளால் நிரம்புகின்றன.மருத்துவர்கள் மருந்து இன்றி திணறுகிறார்கள்.

வில்லன் சூர்யாவையும் ஸ்ருதியையும் கொலைவெறியோடு துரத்துகிறார்.ஸ்ருதியின் நண்பர்கள் சிலர் பரவி வரும் வியாதியை கட்டுக்குள் கொண்டுவர சூர்யாவின்
டி.என்.ஏ வைத் தூண்டியே ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள்.இதற்காக வில்லன் கண்டுபிடிக்க முடியாத ஒரு மறையான இடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.(வெய்யில் படக்கூடாதாம்!) அவர்களுக்கு வெளியில் இருந்து உணவு மருந்து எல்லாம் கொண்டு வந்து உதவி செய்ய ஒரு ஆளை நியமிக்கிறார்கள்.முதலில் சொன்ன படி சூர்யாவின் உடம்பில் ஒயரை எல்லாம் இணைத்து போதிதர்மரை அழைக்கிறார்கள்.எல்லாரையும் கண்களாலேயே வசியம் செய்யும் வில்லனுக்கு அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரியவிஷயமா என்ன? எப்படியோ அங்கேயும் வந்து விடுகிறான்.அவனிடமிருந்து தப்பிக்க எல்லாரும் ஒரு வேனில் ஏறி வெளியேறுகிறார்கள். வில்லன் ஒரு மரத்தைப் பிடுங்கி (?!) வழியில் போட வேன் கவிழ்ந்து அரைகுறை ஆராய்ச்சியில் இருந்க்கும் சூர்யா கீழே விழுகிறார்.டோங் லீ சூர்யாவை அடித்து துவைக்கிறான். இப்போது நாமெல்லாம் எதிர்பார்த்தபடி போதிதர்மர் சூர்யாவின் உடலில் இறங்குகிறார்(?) பிறகு என்ன? வில்லன் க்ளோஸ். சூர்யா அந்த மருந்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து வியாதியையும் கட்டுப்படுத்துகிறார் .கடைசியில் ஒரு மொக்கை சொற்பொழிவு வேறு ஆற்றுகிறார். தியேட்டரில் திரை விழ நம் எதிர்பார்ப்பும் விழுந்து விடுகிறது.(நிறைய எதிர்பார்த்து விட்டோமோ?)

படத்தில் சில சபாஸ்-கள்:

* அரிய தமிழர் ஒருவரை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
*
டி.என்.ஏ, ஜெனெடிக் மெமரி என்று சயின்ஸ் பிக்ஷனை உள்ளே நெருடாமல் நுழைத்தது.
* சூர்யா-ஸ்ருதி காதலை அளவோடு நிறுத்திக் கொண்டது.
* நம் கலாச்சாரம் பண்பாடு இவற்றை மறக்கக் கூடாது என்று ஒரு மெசேஜ் சொன்னது.
* ஒரு மில்லி-செகண்ட்டாவது தமிழர்களை நாம் தமிழர் என்று பெருமைப்பட வைத்தது.விசில் அடித்து கை தட்ட வைத்தது.
* ஒரு மனிதனின் நல்லதை பார்க்க வேண்டும் என்றால் அவன் படிக்கும் புத்தகங்களில் பார், கெட்டதைப் பார்க்க வேண்டு
ம் என்றால் அவன் வீட்டு குப்பைத் தொட்டியில் பார் என்று சூர்யாவைப் பேச விட்டது. உடனே ஸ்ருதி ஜி-மெயிலின் Trash ஐப் பார்ப்பது.
* லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் , சந்தானத்தை சூர்யாவுக்கு நண்பனாகப் போட்டு இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதை செய்யாமல் இருந்தது.

படத்தில் சில (பல) சொதப்பல்கள்

* ஜென் மாஸ்டரான போதிதர்மரைப் பற்றி படம் எடுத்து விட்டு ஜென் என்று ஒரு இடத்தில் கூட குறிப்பிடாதது.

* சீனாவில் பரவி வரும் நோய் இந்தியாவுக்கு வந்து விடக்கூடாது என்று போதி புறப்பட்டு செல்கிறார். அங்கே செல்ல அவருக்கு சரியாக மூன்று வருடம் பிடிக்கறது.நோய் அதற்குள் பரவி இருக்காதா? சூர்யா குதிரையில் சென்றால் நோய் என்ன கழுதையில் ஏறியா இந்தியாவுக்கு வரும்?

*'மரணம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் போதிதர்மர் இளவயதிலேயே துறவறம் பூணுகிறார் என்பது தான் வரலாறு. ஆக அவர் கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்படியிருக்க அவருக்கு சந்ததி எங்கே வந்தது?

*இந்தியாவை கவிழ்க்க சீனா இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லை.காதை சுற்றி மூக்கை தொடுவது.டோங் லீ வை அனுப்பி இந்தியாவின் பிரதமரை முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடும் போது வசியம் செய்திருந்தால் மதி.

* நம் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்னொரு நாட்டை வஞ்சம் நிறைந்ததாகவும் துரோகியாகவும் காட்டியிருப்பது கண்டிக்கத் தக்கது.முதலில் நாம் மறந்து விட்ட போதிதர்மரை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பிறகு அதே நாட்டை வில்லன்களாக காட்டுவது.

* ஒருவரை ஹிப்னாடைஸ் செய்வது என்றால் அவரது பூரண ஒத்துழைப்பு வேண்டும். It's a time taking process! சும்மா ஒரு வினாடி முறைத்துப் பார்த்து விட்டு உன்னை நீயே சுட்டுக் கொள் என்று கட்டளை இடும் கதையெல்லாம் அங்கே நடக்காது.

* உயிரியல் பற்றி படம் எடுத்து விட்டு கெமிஸ்ட்ரியை மறந்து விட்டிருப்பது.பேசாமல் ஸ்ருதியை சூர்யாவின் சகோதரியாகப் போட்டிருக்கலாம். சரி முதல் தமிழ்ப்படம் என்பதால் உலகநாயகனின் மகளை மன்னிப்போமாக.

*கதையின் க்ளைமாக்சில் so called ட்விஸ்ட் இல்லாதது. கதை ஆரம்பித்த அரை மணியிலேயே முடிவை ஊகிக்க முடிகிறது.

* 'வானத்தைத் தொடலாம் பூமிப் பந்தை எட்டி உதைக்கலாம்' என்ற தன்னம்பிக்கைப் பாடல்களை தமிழ் சினிமா என்று தான் கைவிடுமோ தெரியவில்லை.

* பாடல்களின் போது தியேட்டர் கிட்டத்தட்ட காலியாகி விடுகிறது. (பாடல்கள் ரசிகர்களை சிகரெட்டை மறக்க வைக்க வேண்டும்)கதையோடு கொஞ்சமும் ஒட்டாத பாடல்கள்.போதிக்கு ஒரு பாடல் கொடுத்திருக்கலாமே! சுமாரான சில சமயம் புரியாத பாடல் வரிகள். (மதன்கார்கி கவனிக்கவும்)

* இந்த படத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டு போதிதர்மர் பற்றி ஒரு பி.ஹெச்.டி.செய்தோம் என்று பில்ட்-அப் கொடுத்தது. எனக்கு என்னவோ விக்கி-பீடியா வில் முதல் இரண்டு பேரா படித்திருந்தாலே போதும் என்று தோன்றுகிறது அந்த பதினைந்து நிமிட வேஷத்துக்கு.

* குழந்தைத் தனமான சண்டைக் காட்சிகள். உதாரணம் புழுதியை கிளப்பி விடுவது.

*சூர்யா , சிக்ஸ் பேக் மட்டும் இருந்தால் யாராக வேண்டுமானாலும் நடித்து விடலாம் என்று நினைக்கிறாரா? சில இடங்களில் immaturity வெளிப்படுகிறது.அது ஏனோ சில இடங்களில் தேவையில்லாமல் கத்துகிறார்.

தீபாவளிக்கு நாம் சில பட்டாசுகளை வெடிப்போம். டம் என்று பெரும் சத்தத்துடன் வெடிக்கும் என்று நினைத்து பற்ற வைத்து வழியில் வருபவர்களை நிறுத்தி, காதை மூடிக் கொண்டு எதிர்பார்ப்புடன் நிற்போம். அது கொஞ்ச நேரம் புகைந்து விட்டு கடைசியில் புஸ் என்று படுத்து விடும்.அது போல தான் இந்த தீபாவளி ரிலீஸ் 'ஏழாம் அறிவும்'.போதிதர்மா இவர்கள் சிறுபிள்ளைகள். இவர்களை மன்னியும்.(அவர் மன்னிக்க மாட்டாரோ என்று பயமாக இருக்கிறது . உன்னை நீயே வாளால் வெட்டிக் கொள் அப்போது தான் சுவற்றை விட்டு உன் பக்கம் திரும்புவேன் என்று சீடரிடம் சொன்னவர் ஆயிற்றே!)

சமுத்ரா

29 comments:

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

பதிவர் சந்திப்பு

naren said...

nice review of the film.

இதில் கமலின் பெண் நடிப்பதால், கமலின் தாக்கம் இருந்திருக்குமோ என்று சந்தேகம். தமிழ் மக்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி தெரியாது, நாங்கள் அதிமேதாவியாதலால் எங்களுக்கு மட்டும் தெரியும், அதை காட்ட படத்தை எடுத்தோம், என்பதை போல் உள்ளது.

போதி தர்மர் என்ற அரிய விஷயம் கிடைத்தவுடன், அதை வைத்து பட வியாபார செய்ய நினைத்து, அதிகமாக “பில்டப்” தந்து, ரசிகர்களை அதிக எதிர்ப்பார்ப்புக்கு ஆழ்த்தி, சாதாராண் மசாலாவை தந்ததால் இவ்வளவு “negative" சினிமா விமர்சனங்கள்.

ரிஷி said...

ஆழமான அருமையான விமர்சனம்.
பதிவர்கள் எழுதியதிலேயே இதுதான் பிடித்தது.

ramalingam said...

விஷயமுள்ள விமர்சனம்.

ஜயந்தன் said...

//போதிதர்மரின் பெயரை வெறுமனே வியாபார ரீதியாக உபயோகித்திருக்கிறார்கள்.//
my 3rd vote 4 nice review.

suvanappiriyan said...

ஆழமான அருமையான விமர்சனம்.

Jayadev Das said...

\\*'மரணம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் போதிதர்மர் இளவயதிலேயே துறவறம் பூணுகிறார் என்பது தான் வரலாறு. ஆக அவர் கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்படியிருக்க அவருக்கு சந்ததி எங்கே வந்தது?\\ அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளின் சந்ததிகளாக இருக்கலாம் , அல்லது சித்தப்பா , பெரியப்பா பிள்ளைகளின் சந்ததிகளாக இருக்கலாம்.

Jayadev Das said...

\\*இந்தியாவை கவிழ்க்க சீனா இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லை.காதை சுற்றி மூக்கை தொடுவது.டோங் லீ வை அனுப்பி இந்தியாவின் பிரதமரை முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடும் போது வசியம் செய்திருந்தால் மதி.\\ இப்போ இந்த மண்ணு மோகன் சிங்கு பண்ணுவதைப் பார்த்தால் அப்படித்தான் யாரோ பண்ணிட்டாங்க என்பது போலத்தான் தெரிகிறது.

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

உங்களது அடுத்த இயற்பியல் கட்டுரைக்காக காத்திருக்கிறேன். [ஆவலோடு!!] When?

Jayadev Das said...

\\* நம் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்னொரு நாட்டை வஞ்சம் நிறைந்ததாகவும் துரோகியாகவும் காட்டியிருப்பது கண்டிக்கத் தக்கது.\\ சொன்னாலும் சொல்லாட்டியும் சீனாக் காரனுங்க இந்தியாவுக்கு எதிராக வஞ்சம் கொண்டவர்கள்தான், துரோகிகள் தான்.

சந்துருவின் பால் விதி said...

Unbiased and complete.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுநிலையான, யதார்த்தமான விமர்சனம்...!

வடகரை வேலன் said...

Nice Review

Radhakrishnan said...

மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.

Anonymous said...

போதிதர்மன் தன் குருமாதாவின் கட்டளையின்பேரால் சீன தேசம் செல்வதாக ஏழாம் அறிவு திரைப்படத்தில் சொல்லப்படுகிறது.

Aba said...

//* நம் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்னொரு நாட்டை வஞ்சம் நிறைந்ததாகவும் துரோகியாகவும் காட்டியிருப்பது கண்டிக்கத் தக்கது.முதலில் நாம் மறந்து விட்ட போதிதர்மரை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பிறகு அதே நாட்டை வில்லன்களாக காட்டுவது.

* ஒருவரை ஹிப்னாடைஸ் செய்வது என்றால் அவரது பூரண ஒத்துழைப்பு வேண்டும். It's a time taking process! சும்மா ஒரு வினாடி முறைத்துப் பார்த்து விட்டு உன்னை நீயே சுட்டுக் கொள் என்று கட்டளை இடும் கதையெல்லாம் அங்கே நடக்காது.//

//இது உயிரியில் ரீதியாக எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.//


படம் பற்றிக் கேள்விப்பட்டதும் இதேதான் நானும் நினைத்தேன்... தமிழ் உணர்வை ஓவராகத் தூண்டி விட்டு காசுபார்ப்பதையும் எதிர்க்கிறேன். சமீபத்தில் ஒரு பட்டிமன்றத்தில் கூறப்பட்டதுபோல, தமிழை உணர்வுபூர்வமாக பார்ப்பதற்கு மட்டுமே தமிழன் பழக்கப்பட்டிருக்கிறான். தமிழ் அறிவுபூர்வமாக பயன்படுத்தப்படும்வரை தமிழனுக்கும் தமிழுக்கும் மோட்சமில்லை....

Aba said...

@Jayadev Das,

அதற்கு அவரது சகோதர சகோதரிகளும் ஜென வழியில் யோசித்து, தற்காப்புக்கலைகளில், மருத்துவத்தில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டுமே?

பாலா said...

மிகவும் அருமையான பதிவு நண்பா. எனது வலைப்பதிவை காண்க.
http://balaperiyar.blogspot.com/2011/10/blog-post_30.html

*anishj* said...

கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க...
போதி தர்மன் யார் என்று சொன்னதை தவிர(என்னை போன்ற தெரியாதவர்களுக்கு) படத்தில் சிறந்ததாய் எதுவும் இல்லை...! படம் மொக்கையோ மொக்கை...! தமிழ் ரசிகனின் தமிழ் உணர்வை ”சில இடங்களில்” தங்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்...!

Anonymous said...

mudhalil bodhidharmar thamizhara
enbadhu enakku iyyappadu ulladhu
kaaranam pallavargal thamizhargal alla endra oru karuththu nilavugiradhu theera pariseelikka vendiya vishayam nandri

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரிவ்யூல யே சிறப்பான இடம் ..சொதப்பல்கள் லிஸ்ட் தான் ..
செம சிரிப்பு :)

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல ஆழமான பார்வை..

அருமை..

Ashok said...

அப்படியிருக்க அவருக்கு சந்ததி எங்கே வந்தது?//

சந்ததி என்பது நேரடியான மகன்வழியாகவோ மகள்வழியாகவோ இருக்க வேண்டியதில்லை. தம்பி மகன்வழியாக கூட இருக்கலாம். மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை. ஏழாம் அறிவைப் பற்றி எனக்கும் இந்தக் கருத்துக்கள் எல்லாம் இருந்தாலும் கூட 'சில' விஷயங்களுக்காக அவற்றுக்கு முன்னுரிமை தந்து நான் விமர்சிக்கவில்லை. நண்றி.

VELU.G said...

நல்ல விமர்சனம்

Subash said...

உங்களின் விமர்சனத்தோடு 100% ஒத்துப்போகிறேன்

Katz said...

பட்சி மாட்டிருச்சு.

தம்பி உங்களுக்கு சினிமா விமர்சனம் நல்லா எழுத வருது.

அதனால சீக்கிரம் வேலாயுதம் பார்த்துட்டு விமர்சனம் போடுங்க.

Anonymous said...

As you told, you never review a film, after all you review this film means, this is showing the success of this film.

Basuvenky said...

excellent flow. sabash.