இந்த வலையில் தேடவும்

Friday, October 14, 2011

தேநீர்ப்பேச்சு -1


தேநீர்ப் பேச்சு -1 உங்களை வரவேற்கிறது.

(கலைடாஸ்கோப் போல தேநீர்ப் பேச்சு நீண்டதாக இல்லாமல் நண்பர்களுடன் தேநீர் இடைவெளியில் அரட்டை அடிப்பது போல இருக்கும்.ஒவ்வொரு டீ-டைமுக்கும் கற்பனை கதாபாத்திரங்கள் வருவார்கள். அவரகள் ஃ பிகரில் இருந்து பீத்தோவான் வரை நிறைய விஷயங்கள் பேசுவார்கள் )


ரகு : என்ன மீனா? ரொம்ப பிசியா? Pantry பக்கம் வரதே இல்லை போல இருக்கு?

மீனா: ஹ்ம்ம் இந்தக் கொடுமையைக் கேளு..டைலி நாலு டெஸ்ட்-கேஸ் பண்ணனுமாம். எங்க மானேஜர் சொல்லிட்டார்.

ரகு: சரி விடு..எப்பவும் போல 'பாஸ்' தான பண்ணப் போறே..

மீனா: டேய், அடி வாங்குவ..

ரகு: சரி சரி விடு..உனக்கு தான் ஹைக்கூ என்றால் பிடிக்குமே. ஒண்ணு சொல்லேன்.

மீனா: டேய், திங்கக்கிழமை காலைல பத்து மணிக்கு ஆபீஸ்ல ஹைக்கூ கேட்கறியே? சைக்கோவா நீ?

சரி: கூல்டவுன்...நானே ரெண்டு மூணு சொல்லறேன்..ராஜு என்பவர் எழுதி இருக்கார். தமிழ்ல சொல்றேன்..

I
ride on long lonely road
horizon on one side darkness on other ...
destination unknown ..

ஒரு நீண்ட சாலையில் நடக்கிறேன்.
ஒருபக்கம் தொடுவானம்; ஒருபக்கம் இருட்டு
செல்லும் இடம் தெரியவில்லை.

மீனா: இப்ப சாப்ட்வேர்ல இருக்கறவங்க எல்லாம் இப்படி தான் இருக்கறாங்க.அதுக்க என்ன இப்போ?

ரகு: இன்னொன்னு கேளு..

I want to fly,
the sky wants me,
but earth has me by feet

நான் பறக்கவேண்டும்
வானம் என்னை அழைக்கிறது
ஆனால் என் வேர்கள் பூமியில் இருக்கின்றன.

மீனா: உனக்கு என்ன ஆச்சு? உன் கேர்ள் பிரென்ட் விட்டுட்டு போயிட்டாளா?

ரகு: ஹி ஹி
..கேர்ள் பிரென்ட் என்றதும் ஞாபகம் வருது..அவரது இன்னொரு ஹைக்கூ..


A boy so afraid of the dark
but now in the dark with her
so afraid of being a
boy

ஆணாக இருந்தாலும்
இருட்டு என்றால் பயம்
இன்று உன்னுடன் இருட்டில்
ஆணாக இருப்பதற்கே பயம்!

மீனா: எல்லாப் பசங்களும் இப்படி தானா?..சரி நல்லா தான் எழுதி இருக்கார்.எப்படி தான் உனக்கு ஆபீசில் ஹைக்கூ எல்லாம் படிக்க டைம் இருக்கோ?அது சரி.நிறைய பேர் இந்த ஹைக்கூ பைத்தியம் பிடித்து அலையறாங்களே? உண்மையில் ஒரு ஹைக்கூ எப்படி இருக்கணும்?

ரகு: சுஜாதா ,ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் னு ஒரு புக் எழுதி இருக்கார். உன் ஜி.மெயில் ஐ.டி.கொடு ..அனுப்பறேன்.
SONET,SDH கருமம் எல்லாம் கொஞ்ச நேரம் மறந்து விட்டு படிச்சுப் பாரு.அந்த புக்கே இப்படி தான் ஆரம்பிக்குது.

நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது.

மீனா: டேய், உன்னை நான் இப்போ சாத்தப் போறேன்..டைம் ஆயிடுச்சு..கதவு சாத்தறது, காப்பி குடிக்கறது எல்லாம் கவிதையா?

ரகு: கவிதை இல்லை மீனா.ஹைக்கூ.அனுபவத்தை குறைந்த பட்ச சொற்களால் வடிப்பது.சரி ரெண்டு நிமிடத்தில் முடிச்சுர்றேன். பாஷோ என்பவர் எழுதிய இந்த ஹைக்கூ வை அடித்துக் கொள்ள இது வரை ஒரு ஹைக்கூ எழுதப்படலை என்கிறார்கள்.

பழைய குளம்
தவளை குதிக்கையில்
தண்ணீரில் சத்தம்.

சுருக்கமாக சொல்வது என்றால் ஹைக்கூ என்பது ஒருவித தியானநிலையை படம் பிடிக்கும் ஒரு கேமரா 'க்ளிக்'. சில சமயம் நமக்கு உணர்வுப் பூர்வமான அனுபவங்கள் சில ஏற்படும். 'உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது;அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது' என்று கமல் சொல்வாரே. அது மாதிரி ...அந்த உணர்சிகளின் பிரவாகத்தில் நம்மால் அதை வார்த்தைகளில் கொண்டு வர முடியாது. ஆனாலும் கொண்டு வர முயலும் ஒரு முயற்சி தான் ஹைக்கூ.எவன் வேண்டுமானாலும் ஹைக்கூ எழுதி விட முடியாது. ஒரு வித புத்தா நிலையில் இருக்கிறவர் மட்டுமே எழுத முடியும். இந்த இயந்திர வாழ்வில் இயந்திரமாகப் போய்விட்ட நம்மால் தூரத்தில் சார்த்தப்படும் கதவையும், தவளை குதிக்கும் சத்தத்தையும்
கவனிக்க முடியுமா? கவனிக்க வேண்டும்.அப்ப தான் ஹைக்கூ எழுதும் தகுதி நமக்கு வரும்.

மீனா: நினைவு எங்கோ நீந்திச் செல்ல கனவு வந்து கண்ணைக் கிள்ள ,நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா கண்ணே அப்படின்னு ஜோதிகாவைத் தொலைத்த சூர்யா மாதிரி திரிந்தால் தான் ஹைக்கூ வருமா?

ரகு: இல்லை. புத்தா நிலையில் கனவு வராது.

மீனா: அப்ப யாருக்குமே புரியாம எழுதுனா தான் அது ஹைக்கூ இல்லையா?எழுதுறவருக்காவது புரியுமா?

ரகு: விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்கற?

மீனா: சரி 'கேப்புசினோ' ஆறியே போயிருச்சு. எனிவே, ஹைக்கூ பற்றி மொக்கை போட்டதற்கு நன்றி..சரி உன்னோட ஹைக்கூ ஒண்ணு சொல்லேன்..

ரகு: Here you go..

சிக்னலில் வரிசையாக
வாகனங்கள்
திடீரென்று விதியை மீறும் -ஒரு
சைக்கிள்.

மீனா: இப்பவே கண்ணைக் கட்டுதே.. இதுக்கு அந்த தவளை ஹைக்குவே பரவால்லை.

ரகு: சரி சரி அங்கே என் மேனேஜர் சொட்டைத் தலை முறைச்சு முறைச்சு பாக்குது..See you later...

சமுத்ரா

9 comments:

Sugumarje said...

Well... Thats Nice :)

suryajeeva said...

சரி ஹைக்கூ நா என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா என்ன என்னமோ சொல்லி ஒண்ணுமே சொல்லாம... அதானே இனிப்பு காரம் மனம் இவற்றை பற்றி வார்த்தைகளில் வடிக்க முடியுமான்னு கேக்கறது புரியுது... நான் ஜகா வாங்கிக்குறேன்

சேலம் தேவா said...

//சுருக்கமாக சொல்வது என்றால் ஹைக்கூ என்பது ஒருவித தியானநிலையை படம் பிடிக்கும் ஒரு கேமரா 'க்ளிக்'.//

ஹைக்கூ-வை வைத்து ஒரு புகைப்பட ஆல்பம் தயாரிக்கலாம் என்று ஆசை.நல்ல தொகுப்பை பரிந்துரையுங்கள்... :)

G.M Balasubramaniam said...

நீங்கள் “நதியில் விழுந்த இலை “நாகசுப்பிரமணியத்தின் பதிவுகளைப் படித்திருக்கிறீர்களா.குட்டி கவிதைகள் அவருடைய ஸ்பெஷாலிடி.

Mohamed Faaique said...

ஹைக்கூ - ஐயகோ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

அரபுத்தமிழன் said...

பெண்களூரில்
சிவந்த நிறத்தோடு ஒரு கடலை
தேநீர்ப் பேச்சு :)

Shakthiprabha said...

சுவாரஸ்யமும் ஹாஸ்யமும் கலந்த பதிவு. அழகான ஹைக்கூ முயற்சிகள். எளிமையான
முறையில் விளக்கங்களும் அருமை. இந்த வலைப்பதிவை
வலைச்சரத்தில் இணைத்துள்ளேன். நன்றி. :)

உங்கள் பதிவினை இணைத்த
என் இடுகை