இந்த வலையில் தேடவும்

Monday, April 11, 2011

கலைடாஸ்கோப் -13

லைடாஸ்கோப் -13 உங்களை வரவேற்கிறது

Public sense
=========

எவ்வளவு மெதுவாக நடக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக நடங்கள் என்று புத்தர் சொல்கிறார்..இது நாம் காலையில் மார்னிங் வாக் போகும் போது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்..பரபரப்பான சாலைகளில்,இன்று நிறைய பேர் குறுகிய வழித்தடங்களில் பின்னால் நிறைய பேர் வந்து கொண்டிருக்கிறார்களே என்ற பிரக்ஞையே இல்லாமல் செல்போனில் பேசியபடியே புத்த பிக்ஷுக்கள் போல மெதுவாக நடந்து செல்கிறார்கள்..வயதானவர்கள் என்றால் ஒப்புக் கொள்ளலாம்..இளைஞர்களே இப்படி நடந்து கொண்டால்? மிஸ்டர்.பீனில் அவர் மாடியில் இருந்து படியில் கீழே இறங்கும் போது அவருக்கு முன்னால் ஒரு கிடு-கிடு பாட்டி ஆமை வேகத்தில் கீழே இறங்கிக் கொண்டிருக்கும்..என்ன என்னவோ செய்து அவளைக் கடந்து வந்து பெருமூச்சு விட்டு விட்டு முன்னால் பார்த்தால் இப்போது ஒரு குடு-குடு தாத்தா இன்னும் மெதுவாக வழியை அடைத்துக் கொண்டு இறங்கிக் கொண்டிருப்பார்..தாத்தா பாட்டி என்றால் பாவம் அவர்களை மன்னிக்கலாம்..ஆனால்?

பொது இடங்களில் தாம் மட்டுமே இருக்கிறோம் என்ற நினைப்புடன் நிறைய பேர் வலம் வருகிறார்கள்..சில பேர் பஸ்ஸில் இரண்டு சீட்டிலும் உட்கார்ந்திருப்பார்கள்..அப்பாவியாக யாராவது ஒருத்தர் வந்து நின்று இடம் கேட்டால் வேண்டாவெறுப்பாக முறைத்துப் பார்த்து விட்டு ஒரு அரை சீட்டு இடம் தருவார்கள் ..

ஏ டி.எம் இல் பின்னால் நிறைய பேர் நிற்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் சிலர் எவ்வளவு பணம் வேண்டும் என்பதில் தீர்மானமாக இல்லாமல் நாலைந்து முறை எடுப்பார்கள்..மினி ஸ்டேட்மென்ட் பார்ப்பார்கள்!கடைசியில் பாலன்ஸ் வேறு செக் செய்வார்கள்!

சில ஹோட்டல்களில் (பெரும்பாலும் ஆஸ்பத்திரிகளில்) முதலிலேயே டோக்கன் வாங்கி விட வேண்டும்..பின்னால் நிறைய பேர் நின்று கொண்டிருக்கும் போது சில பேர் இப்படியெல்லாம் செய்வார்கள்..

கவுண்டரில் அப்பாவியாக ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள்..

"ஏம்மா , என்ன இருக்குது?"

"போர்டைப் பாருங்க சார்"

போர்டைப் பார்க்கிறார்..

" சரி ரெண்டு மசால் தோசை, ரெண்டு பொங்கல்...இல்ல.. கொஞ்சம் இருங்க..மசாலா வேண்டாம் ரெண்டு ப்ளைன் தோசை ..ஒரு நிமிஷம்"

"தோசை சாப்பிடறயா பாப்பா?"

"எனக்கு வடை வேணும் "

"சரி மசாலாவே குடுத்துருங்க..அப்பறம் ரெண்டு வடை..வடை எவ்வளவு?"

"பத்து ரூபாய் சார்"

"ரெண்டா?"

"ஒண்ணு"

"அப்படின்னா ஒண்ணு போதும்,,அப்புறம் உப்புமா ஒரு ப்ளேட் "

"உப்புமா வேண்டாம்..எனக்கும் ஒரு தோசையே சொல்லுங்க"

"சரி இன்னொரு மசாலா தோசை..அந்த பொங்கல் பார்சலுக்கு "

"சரி அவ்ளோ தான்..எத்தனை ஆச்சும்மா?"

"---"

ஐநூறு ரூபாயை நீட்டுகிறார்

சில்லறையை நிறுத்தி நிதானமாக எண்ணுகிறார்..

பில் அச்சடித்து வந்ததும்

"ஆங், ரெண்டு காபி"

ஜா,ஆ உடன் ஒரு நாள்
=====================

ஜான் ஆப்ரஹாமின் பேட்டி ஒன்று ஸ்டார் டி.வி.யில் சமீபத்தில் ஒளிபரப்பாகியது. அவருடன் என்னவெல்லாம் செய்ய தங்களுக்கு விருப்பம் என்பதை இளம் பெண்கள் 'பப்ளிக்' ஆக பேசினார்கள்..ஒரு பெண் 'யாரும் இல்லாத ஒரு தனித் தீவில் அவருடன் ஒரு வாரம் இருக்க வேண்டும்" என்கிறாள் ..இன்னொரு பெண் "ஒரு அழகிய ரிசார்ட்டில் அவருடன் மூன்று நாள் தங்க விருப்பம்" என்கிறாள்.."கடற்கைரையில் அவருடன் விளையாட வேண்டும்" " ஒரே ஒரு இரவு மட்டும் அவருடன் இருந்தால் போதும்" "முதலில் அவர் கன்னத்தில் ஒரு முத்தம்...பின்னர்..."என்றெல்லாம் பகிரங்கமான விருப்பங்களை வெளிப்படுத்தினார்கள்..இந்தியக் கலாச்சாரம் , பண்பாடு என்றெல்லாம் நான் இப்போது ஆரம்பிக்கப் போவதில்லை..இன்றைய தலைமுறை எந்த அளவு 'உடல் சார்ந்ததாக ' (body oriented ) மாறிக் கொண்டு வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கிறேன்..டி.வியை ஆன் செய்தால் "ஒரு வாரத்தில் அழகாகலாம்' 'பளிச்சுன்னு ஒரு ஏமாற்றம், சாரி மாற்றம் "இப்படி தான் விளம்பரங்கள் நிறைய வருகின்றன,,உடலை வைத்து அடுத்தவரை வெகு சீக்கிரம் IMPRESS செய்து விட முடிகிறது. (உள்ளே மசாலா இல்லாவிட்டாலும்) ஆனால் அறிவை வைத்து அடுத்தவரை impress செய்வது கடினம்.அது உடனே நடக்காது. அதற்கு ப்ளாக் எல்லாம் ஆரம்பித்து 'டேய் நீ என்ன பெரிய பருப்பா' என்று வசை எல்லாம் வாங்க வேண்டியிருக்கும்.இதை விட கடினம் நம்முடைய குணத்தால் ஒருவரை impress செய்வது. இப்போதெல்லாம் நல்லவனாக இருந்தால் கூட "பாரு என்னமா நடிக்கறான் " என்கிறார்கள் ...கடைசியாக எல்லாவற்றையும் விட கடினம் 'ஆன்மீகத்தால்' ஒருவரை impress செய்வது.நித்யானந்தாவின் ஆன்மீகத்தைப் பற்றி சொல்லவில்லை..'ஆன்மா'வின் மூலம் ஒருவரை impress செய்வது..அரவிந்தருக்கும் அன்னைக்கும் இருந்ததே அந்த மாதிரியான ஒரு தொடர்பு!

அவரா நீங்கள்?
==============

கேப்டன் விஜயகாந்திற்கு என்ன ஆயிற்று? ரமணாவில் வந்தது போன்ற கம்பீரமான, 'டீசன்ட்' ஆன , intelligent ஆன ஒரு கேப்டனை அல்லவா அரசியலில் எதிர்பார்த்தோம்? ஏன் இப்படி பிரசாரங்களில் தடுமாறுகிறார்? அப்படியென்றால் திரைப்படங்களில் பக்கம் பக்கமாக மூச்சு விடாமல் பேசுவது எல்லாம் மனப்பாடம் பண்ணி பேசியது தானா?(இன்னொரு எரிச்சல்: எல்லா பிரசார மேடைகளிலும் ஆதரித்துப் பேசப்படும் அந்த வேட்பாளர் அனுமார் மாதிரி தொடர்ந்து கை கூப்பிக் கொண்டு அருகே நின்று கொண்டிருப்பது. )

காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது? விஜய் டி.வியில் நேற்று சுசீலா பாடிக் கொண்டிருந்தார்..சில பேர் வயசு ஆனதும் மேடைகளில் பாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது .அவருக்கு குரல் மேல் சட்ஜத்தில் நிற்காமல் தடுமாறி வழுக்கியது ..அபஸ்வரம் கேட்டது. 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? சுசீலா பாடுவதைக் கேட்கும் போது 'உங்கள் குரலுக்கும் அமுதென்று பேர்' என்று சொல்லத் தோன்றும்.. ஆனால் இன்று? அவரா நீங்கள்?

சமுத்ரா's twits
=================

எம்.ஜி.ஆருக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்? #வைகைப்புயல் வடிவேலு.. உங்களுக்கும் 'புயலுக்கும்' என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம் தான் ..

வரவேற்பதற்கும் விடை கொடுப்பதற்கும் சில இன்ச் இடைவெளி தான் - பேரூராட்சி ஒன்றின் வரவேற்புப் பலகை..


ஒரு ஓஷோ ஜோக்
=================

ஒரு டூரிஸ்ட் கைடு ஒரு ஒல்லியான வெளிநாட்டுப் பயணியை உலகிலேயே உயரமான ஒரு கட்டடத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றார்..

அந்த ஆள் நடுங்கிக் கொண்டே "தலை சுத்துது..கீழே தப்பிப் தவறி விழுந்தா என்ன ஆகறது ..வாங்க இங்கேயிருந்து இறங்கிரலாம்" என்றார்

டூ.கைடு கூலாக "சார் அப்படி ஒரு வேளை விழுந்
துட்டீங்கன்னா விழறப்ப உங்களுக்கு வலது பக்கம் பாருங்க..சுப்பர் வியூ தெரியும்"

Tourist guides are tourist guides - Osho

முத்ரா


10 comments:

Nagasubramanian said...

nice as always

இராஜராஜேஸ்வரி said...

காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது? .. Interesting.

Mohamed Faaique said...

நல்ல பதிவு..

ஜான் ஆப்ரஹாம்... இந்த மாதிரி விசயங்கலெல்லாம் பப்லிக்’காக நடத்தும் டி.வி நிறுவனங்கலை நினைத்தால் கேவலமாக இருக்கு....

Katz said...

hmm. gud but something is missing...

adhvaithan said...

nothing wrong with TV shows and channels.. we can very well tune ur television to some other channel when if you dont like that program.. :)

சமுத்ரா said...

Katz, what is missing??...I had more topics for kaleidoscope-13..but just did not want to overload readers :)

Chitra said...

எம்.ஜி.ஆருக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்? #வைகைப்புயல் வடிவேலு.. உங்களுக்கும் 'புயலுக்கும்' என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம் தான் ..


..... Great punch! :-)))))))

Katz said...

I meant the less topics only...

we will not be overloaded with kaleidoscope... may be with AAA (Anu, Andam, Ariviyal)

ponraj said...

first time i came into your blog, simply superb!!!

ஆனந்தி.. said...

//எல்லா பிரசார மேடைகளிலும் ஆதரித்துப் பேசப்படும் அந்த வேட்பாளர் அனுமார் மாதிரி தொடர்ந்து கை கூப்பிக் கொண்டு அருகே நின்று கொண்டிருப்பது. )///

சமுத்ரா..இதை நானும் பலமுறை யோசிச்சதுண்டு...

//காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது? விஜய் டி.வியில் நேற்று சுசீலா பாடிக் கொண்டிருந்தார்..சில பேர் வயசு ஆனதும் மேடைகளில் பாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது .அவருக்கு குரல் மேல் சட்ஜத்தில் நிற்காமல் தடுமாறி வழுக்கியது ..அபஸ்வரம் கேட்டது. 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? சுசீலா பாடுவதைக் கேட்கும் போது 'உங்கள் குரலுக்கும் அமுதென்று பேர்' என்று சொல்லத் தோன்றும்.. ஆனால் இன்று? அவரா நீங்கள்?//
சுசிலாம்மா கூட பரவால சமூ...வாசு சார்,சௌந்தராஜன் அவங்கலாம் பாடியதையும்(??) கேட்டு இப்படி தான் தோனுச்சு..

//வரவேற்பதற்கும் விடை கொடுப்பதற்கும் சில இன்ச் இடைவெளி தான் - பேரூராட்சி ஒன்றின் வரவேற்புப் பலகை..//

ஸோ ஸ்வீட்...

பின்னூட்டத்தில் ஒரு சகோ ..சம்திங் மிஸ்ஸிங் சொல்லி இருந்தார்..அதை வன்மையாக மறுக்கிறேன்...:)))) அதுக்கு நீங்க சொன்ன பதிலை ரொம்பவே ரசிச்சேன்..அது போகட்டும்...தளும்ப தளும்ப ரசிச்சேன் சமுத்ரா வழக்கம்போலே..உங்க கலைடாஸ் கோப் க்கு நான் பயங்கர விசிரியாகிட்டு வரேன்...பட் கொஞ்சம் லேட் ஆ வரேன் இல்லையா...:(( but you just dont want to over load readers இல்லையா...ஹ ஹ..that s y coming late and read...:)))