இந்த வலையில் தேடவும்

Monday, April 18, 2011

கலைடாஸ்கோப்-14

லைடாஸ்கோப்-14 உங்களை வரவேற்கிறது

What a plenty of things
=================

இன்றைய ஷாப்பிங் மால்களுக்குள் நுழைந்தால் "What a plenty of things I don't need " என்று யாரோ சொன்னது எவ்வளவு உண்மை என்பது தெரிய வரும். அங்கே இருப்பவைகளில் என்பது சதவிகிதத்திற்கும் மேல் நமக்குத் தேவையில்லாதவை. We can do without them ! ஷாப்பிங் முடிந்து பில் போடுவதற்காக கியூவில் நின்றிருக்கும் போது மற்றவர்கள் பர்சேஸ் செய்த பொருட்களைக் கவனிப்பதே ஒரு ஆனந்தம் தான் ..விதம் விதமான , எத்தனை வேறுபட்ட பொருட்கள்! இது வரை நாம் பார்த்திராத, பெயர் தெரியாத டப்பாக்கள்.ஸ்நாக்ஸ் கவர்கள்,பொம்மைகள் . கியூவில் நிற்கும் இரண்டு பேர்வாங்கிய பொருட்கள் எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது..பில் கவுண்டரில்அமர்ந்திருப்பவர்கள் இந்த மனிதர்கள் எத்தனை CRAZY ஆக இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்ப்பார்களோ இல்லையோ தெரியவில்லை ..(எதை வைத்தாலும் வாங்கி விடுகிறார்கள்) அண்ணாச்சிக் கடைகளில் நின்று அரைக்கிலோ வெல்லம், கால் கிலோ பருப்பு என்று 'கேட்டு' வாங்கி விட்டு கடைசியில் மிஞ்சும் சில்லறையில் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்த காலம் இப்போது பெரும்பாலும் இல்லை.'அனுராகமுலேனி' என்ற பாடலில் த்யாகராஜர் சொல்கிறார் "வக வககா புஜியிஞ்சி' ..வகைவகையாக சாப்பிட்டும் மனிதன் திருப்தி அடையவில்லையே என்று..நவநாகரீக ஹோட்டல் ஒன்றின் 'மெனு' க்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஒரு கிரந்தம் போல தூக்கிவந்து வைக்கிறார்கள்.முழுவதும் படித்து முடிக்க ஒரு அரைநாள் ஆகும் போலிருக்கிறது.அதில் சத்தியமாக எனக்கெல்லாம் 70 % க்கும்மேல் அது கருப்பா சிவப்பா என்று தெரியாது.'மலாய் கோஃப்தா ' என்றெல்லாம் வாயில் நுழையாத பெயர்கள்!..வாழ்வின் அத்தனை ருசிகளையும் மனிதன் சுவைத்துப் பார்க்க ஆசைப்படுவது சரி தான்..ஆனால் where is the limit ? ஏசுநாதர் பிராத்தனை செய்யும் போது கடவுளிடம் 'இறைவா எங்களுக்கு தினப்படி ரொட்டியும் வெண்ணையும் கொடு' என்று தான் ப்ரார்த்திக்கிறாரே தவிர 'ஒரு தவா நான், ஒரு கோபி மஞ்சூரியன், ஒரு சின்ச்வான் பிரைடு ரைஸ் என்று லிஸ்ட்டெல்லாம் போடவில்லை..Be simple !

சாரிகே நமஸ்கார மாடு
=====================

கலைடாஸ்கோப் -இற்கு டாபிக் கிடைக்கவில்லை என்றால் வெளியே கிளம்பிச்சென்று மனிதர்களை நோட்டம் விடுவது வழக்கம்.(எப்படியோ இந்த வாரம் ரெண்டு டாபிக் கிடைத்து விட்டது:)) சனிக்கிழமை அன்று 'Forum' சென்று ஒரு டூத் பேஸ்ட் (?) வாங்கிக் கொண்டு வெளியே வந்த கொஞ்ச தூரத்தில் ஒரு ஏழைத் தம்பதி (அழுக்கான,கிழிந்த உடைகள் என்றெல்லாம் உயர்வு நவிற்சி அணியில் எழுத விரும்பவில்லை) என்னை நெருங்கி காலில் விழாத குறையாக 'சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது..கருணை காட்டுங்க' என்று கெஞ்சினார்கள்..பக்கத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தன.
அந்த குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும் போது ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை நெருடியது. அவசரமாக முப்பது ரூபாய் கொடுத்து விட்டு 'மொதல்ல குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்க' என்று கூறி விட்டு நகர்ந்தேன்..அந்தப்பெண் தன் குழந்தைகளிடம் 'சாரிகே நமஸ்கார மாடு' என்றார்..அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்..மாலின் உள்ளே குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து கரடி பொம்மை வாங்கித்தந்தவர்களையும் ஒரு முறை நினைத்துக் கொண்டேன்...Can 't help !

Reality Squares
============


Magic square கள் பற்றித்தெரியும் என்று நினைக்கிறேன்..எப்படிக் கூட்டினாலும் ஒரே எண் விடையாக வருவது. அது எப்படி வருகிறது என்ற கணிதத் தந்திரத்தை எல்லாம் இப்போது டிஸ்கஸ் செய்து போரடிக்க விரும்பவில்லை..(தெரியாதுன்னு சொல்லு!) எனக்கு என்னவோ அவை மாய சதுரங்கள் அல்ல வாழ்வின் நிதர்சனத்தை நமக்கு எடுத்து உரைக்கும் Reality squares என்று தோன்றுகிறது .வாழ்க்கையில் பல சமயங்களில் நாம் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறோம். அவன் கார் வாங்கி விட்டானே, அவன் பங்களா கட்டிவிட்டானே, என்னோடு படித்தவன் வெளிநாடு போய்விட்டானே என்றெல்லாம்..ஆனால் இவையெல்லாம் வாழ்க்கைக்கான நமது PARTIAL VIEWS ! வாழ்வை முழுமையாகப் பார்க்கும் போது அது எல்லாருக்கும் கடைசியில் ஒரேவிதமான கூட்டுத்தொகையைத்தான் தருகிறது.யாராக இருந்தாலும் கடைசியில் விடை ஒன்று தான்..சதுரத்தின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்துவிட்டு அவனுக்கு 10,15,30,50 என்று ஏறிக்கொண்டே போகிறது..எனக்கு இறங்குகிறது என்று கூறுவது போல தான் இது..முழு சதுரத்தையும் பொறுமையாகக் கடைசி வரை முழுமையாகப் பாருங்கள்..மாய சதுரங்கள் அமைப்பதில் கடவுளைப் போல ஒரு கணித மேதை யாரும் இல்லை என்று தெரியவரும்.Yes ...கடைசியில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் எல்லாருக்கும் ஒரே கூட்டுத்தொகை தான் இங்கே

பசவண்ணா
==========கர்நாடகாவில் பசவண்ணரை எல்லாரும் தெய்வமாக மதிக்கிறார்கள். பதினோராம் நூற்றாண்டில் அங்கே வாழ்ந்த மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிஅவர். பசவண்ணரின் வசனங்கள் கன்னடத்தில் மிகவும் பிரபலம். நீதிநெறிகளையும் உயர்ந்த தத்துவங்களையும் எளிமையான வசன கவிதையில் சொல்வது.மூட நம்பிக்கைகளை அப்போதே சாடி எதிர்த்தவர் அவர்:

அவரது வசனங்களில் ஒன்றின் தமிழாக்கம்

நெய்யை விட்டு நெருப்பை வளர்த்து
நீயே தெய்வம் என்று வணங்குவீர்
செய்யும் சடங்கில் சிதறிய தீப்பொறி
சடுதியில் வளர்ந்தால் சடங்கையா செய்வீர்?
உய்யும் படிக்கே உயிருக்கு அஞ்சி

உதகம் எடுத்து ஊற்றி அணைப்பீர்
குய்யோ முறையோ என்று கதறி
கூடி இருப்போரை உதவிக்கழைப்பீர்

பாரதியார் படத்தை சட்டைப்பையில் வைத்திருக்கும் ஒரு இளைஞரை தமிழ்நாட்டில் பார்க்க முடியுமா? இங்கே நாம் பாரதியாரையும் திருவள்ளுவரையும் பேச்சுப் போட்டியில் பரிசு வாங்குவதற்கும், பஸ்ஸில் எழுதிவைப்பதற்கும் மட்டும் பயன்படுத்துகிறோம்!

samudra 's twits
================

நாதெள்ளா வருது..எழுநூறு வருஷ பாரம்பரியம் வருது..ஏராளமான நகைகள் வருது # எங்களுக்கு பணம் எங்கேயிருந்து வருது?

ஒரு ஓஷோ ஜோக்
================

ஒரு ஆள் பாருக்கு (BAR ) போய் ஒரு மார்டினி ஆர்டர் செய்தான்..கோப்பையில் ஊற்றி அதை குடிக்கப் போகையில் அவசரமாக அவனுக்கு ஒன் பாத்ரூம் வந்ததால் எழுந்து போனான்..
தான் திரும்பி வருவதற்குள் மார்டினியை யாரும் குடித்துவிடக் கூடாது என்று நினைத்து ஒரு துண்டுச்சீட்டில் "நான் இதில் எச்சில் துப்பி இருக்கிறேன்" என்று எழுதி வைத்து விட்டுப் போனான்

திரும்ப வந்ததும் அங்கே இன்னொரு துண்டுச்சீட்டு வைக்கப்பட்டு அதில் எழுதியிருந்தது "நானும் தான்"


முத்ரா

15 comments:

சுந்தர்ஜி said...

நிஜமான கலைடாஸ்கோப்தான் சமுத்ரா.

நிறையப் பார்த்து நிறைய யோசித்து அழகாக எழுதுகிறீர்கள்.

அற்புதம்.

Katz said...

கலர்புல் கலைடாஸ் கோப். நீங்கள் சொல்வது உண்மைதான். எழுதுவதற்கு டாபிக்ஸ் தேடுவது மிக சிரமாமான காரியம். நிறைய ஊர் சுற்ற வேண்டும். தொலைகாட்சி பார்க்க வேண்டும். மக்களிடம் பழக வேண்டும். சிவாஜி ரஜினியை போல அல்ல. புத்தகம், செய்திதாள் படிக்க வேண்டும். சினிமா அரசியல் தாண்டி விதவிதமான தலைப்புகளில் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்தின் மேல் பொறாமை கொள்வது பழகி விட்டது எனக்கு.

கடைசி ஜோக் சூப்பர். ஜோக்குக்காகவே ஓஷோவை படிக்க விரும்புகிறேன். ;-)

Mohamed Faaique said...

"be simple" உண்மைதான்...
உங்க பார்வை எனக்கு புடிச்சிருக்கு....

இராஜராஜேஸ்வரி said...

நாம் பாரதியாரையும் திருவள்ளுவரையும் பேச்சுப் போட்டியில் பரிசு வாங்குவதற்கும், பஸ்ஸில் எழுதிவைப்பதற்கும் மட்டும் பயன்படுத்துகிறோம்!//
உண்மை பார்வை...

பாரத்... பாரதி... said...

"வக வககா புஜியிஞ்சி' என்பதற்கு அர்த்தம் ..வகைவகையாக சாப்பிட்டும் மனிதன் திருப்தி அடையவில்லையே- என சொல்லியிருப்பது உண்மையா?

பாரத்... பாரதி... said...

ஓஷோ ஜோக் அசத்தல்.. மிக ரசித்தேன்...இனி எப்போதும் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்..

பாரத்... பாரதி... said...

தங்களுடைய பார்வையும், விமர்சிக்கும் திறனும் தனித்தன்மை உடையதாக இருக்கிறது. உங்களுக்கு எம் வந்தனங்கள்..

Chitra said...

நல்ல தொகுப்பு!

கக்கு - மாணிக்கம் said...

நல்ல தலைப்புத்தான். வெவ்வேறான செய்திகள், அனுபவங்கள்.ரிலாக்ஸாக படிக்க முடிகிறது.Reality Squares சிந்திக்க வைக்கிறது. இதில் உள்ள அந்த உண்மை புரிந்துகொண்டால் எல்லோருக்கும் வாழ்கை என்பது எவ்வளவு அழகான ஒரு அனுபவம்?

சமுத்ரா said...

பாரத் பாரதி..வகைவகையாக சாப்பிடுபவர்களுக்கு எப்படி திருப்தி உண்டாகுமோ அப்படி இறைவனை (பல்வேறு) உருவ வழிபாடு செய்பவர்களுக்கு திருப்தி
உண்டாகும் என்று அந்த 'அனுராகமுலேனி' கிருதிக்கு விளக்கம் அளிக்கிறார்கள்..ஆனால் தியாகராஜர் இப்படி சொல்லி இருப்பாரா என்று சரியாகத் தெரியவில்லை.
உண்மையான அன்பு இருந்தால் தான் ஞானமும் கிடைக்கும் என்கிறார்..விதம் விதமாக சாப்பிடும் போது ஏற்படும் திருப்தியை அவர் உயர்ந்த பக்தியுடன்
ஒப்பிடுவாரா தெரியவில்லை..அவரது நிறைய பாடல்களுக்கு அவர் உண்மையாக என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று இன்றும் தெரியவில்லை.
நான் சொன்னதில் தவறு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்..

நெல்லி. மூர்த்தி said...

கர்நாடகாவில் பசவண்ணரை எல்லாரும் தெய்வமாக மதிப்பதற்கு அவர் எழுதிய வசனங்களை மேற்கோள் காண்பித்திருந்தீர். அருமை! இதையேத் தான் இன்னும் சொல்லப்போனால் இவைகளை விட அதீதமாக சமூக நோக்குடன் பலக் கருத்துக்களை தந்தை பெரியார் தன் வாழ்நாளில் தெரிவித்திருக்கின்றார். அவர் நாத்திகத்தை பின்பற்றுவதாலும், மூட நம்பிக்கைகளைச் சாடியதாலும், சமூக நீதிக்காக போராடியதாலும் அவரைப் புரிந்துக்கொள்ள இன்னமும் ஒரு பக்க சமூகம் கண்மூடித்தனமாக மறுக்கின்றது.

Nagasubramanian said...

Reality Squares concept is superb

Ohedas said...

//ஏசுநாதர் பிராத்தனை செய்யும் போது கடவுளிடம் 'இறைவா எங்களுக்கு தினப்படி ரொட்டியும் வெண்ணையும் கொடு' என்று தான் ப்ரார்த்திக்கிறாரே தவிர 'ஒரு தவா நான், ஒரு கோபி மஞ்சூரியன், ஒரு சின்ச்வான் பிரைடு ரைஸ் என்று லிஸ்ட்டெல்லாம் போடவில்லை..Be simple !//

Simply soup no.no super

ஆனந்தி.. said...

samu..I am a diehard fan of Kaleidoscope:))) as usual..so good..:))

Yuvaraj Poondiyan said...

வாழ்க்கையின் நிதர்சனம் Reality Squares போல தான்னு நீங்க சொல்றது என்னால் ஏற்றுக்கொள்ள முடியல...

B'coz diagonal லா பாத்தா சரியா வரலயே...