இந்த வலையில் தேடவும்

Sunday, April 3, 2011

கலைடாஸ்கோப்-12

லைடாஸ்கோப்-12 உங்களை வரவேற்கிறது

குழந்தைகளைக் கிழிக்கும் புத்தகங்கள்
=================================



இப்போதெல்லாம் ஏழு வயதிலேயே குழந்தைகள் எல்.ஐ.சி. பாலிசி பற்றி பேசுகிறார்கள். அப்படியானால் பதினேழு வயதில் "இஹ சம்சாரே பஹு துஸ்தாரே" என்று சன்யாசம் வாங்கிக் கொள்ளப் போகிறார்களா? உலகில் மிகப் பெரிய சாதனை படைத்த சாதனையாளர்கள் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளாகத் தான் இருந்தார்கள்..'பிஞ்சிலேயே' பழுத்த கனிகள் என்றுமே ருசிப்பதில்லை தான்..

குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும்..மணலில் விளையாடட்டும், மரங்கள் மீது ஏறட்டும், மழையில் நனையட்டும்..நமது அசிங்கமான இன்சூரன்ஸ் பாலிசிகளை இப்போதே அவர்கள் மீது திணிக்கவேண்டுமா? சில பேர் குழந்தை பிறந்த அடுத்த நாளில் இருந்தே அதற்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்து விடவேண்டும் என்ற 'கொலை' வெறியுடன் அலைகிறார்கள்...எதுவுமே சொல்லித்தர வேண்டாம் என்று சொல்லவில்லை..அதீதமான டெக்னாலஜி வேண்டாமே ! உங்கள் குழந்தை செல்-போனை எடுத்து
காதில் வைத்துக் கொண்டாலோ, டி.வியின் முன் நின்று ரிமோட் பட்டனை அழுத்தினாலோ பெருமைப்படக் கூடிய விஷயம் அல்ல அது..He has been corrupted !

குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டும்..சில விஷயங்களை அவர்களாகவே கற்றுக் கொண்டால் தான் நல்லது..அவர்கள் பிஞ்சிலேயே பழுத்து விடும் அபாயத்திற்கான சூழ்நிலைகளை தயவு செய்து உருவாக்காதீர்கள்....

கம்பியூட்டர், இன்டர்நெட், செல்போன் இவைகள் இன்றி தான் நம் குழந்தைப் பருவம் கழிந்தது..நாமெல்லாம் இன்றைக்கு பின் தங்கிப் போய் விட்டோமா என்ன?

அப்துல் ரகுமானின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது:

புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்

குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்!

மூன்று தானங்கள்
================

மூன்று வகை தானங்கள் இருப்பதாக தமிழ் சொல்கிறது. 'ஐயம், பிச்சை மற்றும் வரிசை'...ஐயம் என்றால் வரையறை இல்லாமல் வாரி வாரி வழங்குவது. 'ஐயம் இட்டு உண்' என்று சொன்ன நம் பெரியோர்களின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. ஆனால் இந்தக் காலத்தில் ஐயம் இட்டு எல்லாம் உண்டால் நாம் 'போண்டி' ஆக வேண்டியது தான்..ஒருத்தர் வரையறை இன்றி வாரி வாரி வழங்கினால் 'எந்த வழியில் ,என்ன பாவ காரியம் செய்து சொத்து சேர்த்தானோ,அது தான் பாவத்தைக் கழுவ இப்படி கொடுக்கிறான் போலும் " என்று சில பேர் 'ஐயப்'படலாம் என்பதால் இதற்க்கு 'ஐயம்' என்று பேர் வந்திருக்கலாம். அடுத்து 'பிச்சை' இது என்ன என்றால் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கொடுப்பது. பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று இதனால்தான் சொல்கிறார்கள்.கடைசியாக 'வரிசை' இது என்ன என்றால் நம்மை சரமாரியாக புகழ்ந்து தள்ளுபவர்களுக்கு கொடுப்பது. அந்தக் காலத்தில் ராஜாக்கள் எல்லாம் 'புகழ்' விரும்பிகளாக இருந்தார்கள்..இதைப் பயன்படுத்திக் கொண்டு சில ஜால்ராக்கள் 'உன்னைப் போல் உண்டா' 'உன்னைப் போல் யாரும் பிறந்ததும் உண்டா?' என்று புகழ்ந்து பாடினால் போதும் ..காதும் மனதும் குளிர்ந்து போய் 'யானை குதிரை' என்று பரிசளித்து விடுவார்கள்.இதை அறிந்த 'புலவர்கள்' சும்மா இருப்பார்களா? ராத்திரி எல்லாம் 'உட்கார்ந்து யோசித்து' உயர்வு நவிற்சி அணியில் கவிதை எழுதியோ இல்லை 'தருமி' ரேஞ்சுக்கு இன்னொருவரிடம் 'சுட்டுக்' கொண்டோ அரண்மனை வாசலை மொய்ப்பார்கள்..இத்தனை பேர் வருவதைப் பார்த்த காவல்காரர்கள் எல்லாரும் 'வரிசையில் வாருங்கள், வரிசையில் வாருங்கள்' என்று சொல்வதால் கூட இதற்கு வரிசை என்று பேர் வந்திருக்கலாம்..பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுப்பதை 'சீர் வரிசை' என்கிறார்கள்..'நீங்க செய்வீங்க, ஒரே பொண்ணு, அவளுக்கு செய்யாமலா இருப்பீங்க, நீங்க யாரு? ராயல் பேமிலி, பொண்ணுக்கு பாதி சொத்து கூட எழுதி வைப்பீங்க' என்று மாப்பிள்ளை விட்டார் பெ.வீட்டாரைப் புகழ்வதால் இந்தப் பெயர் ஏற்பட்டதா என்று தெரியாது

'ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி' என்று சொல்லும் ஆண்டாள் மறந்தும் கூட வரிசை என்று சொல்வதில்லை என்பதை எண்ணிப்பாருங்கள்..

வெள்ளி நீ வாழி!
===============

உலகத்திலேயே பாவமானவர்கள் சனிக்கிழமை ஆபீஸ் செல்பவர்கள் என்று தோன்றுகிறது. வெள்ளிக் கிழமை மாலை தரும் ஓர் இனிய சுகத்தை அவர்கள் MISS செய்கிறார்கள்..
ஒவ்வொரு IT கம்பெனியிலும் வெள்ளிக் கிழமை சாயங்காலங்கள் ஒரு திருவிழா போல இருக்கின்றன. நல்ல வேளை! சனிக்கிழமை ஆபீஸ் வா என்று சொல்லும் மேனேஜர் எங்களுக்குவாய்க்கவில்லை..இப்போது மட்டும் இல்லை..பள்ளி நாட்களில் இருந்தே வெள்ளிக் கிழமைகள் ஒரு வரம் தான்..அரசினர் பள்ளி என்பதால் சனிக்கிழமை 'ஸ்பெஷல் கிளாஸ்' போன்ற தொந்தரவுகள் இல்லை..வெள்ளிக் கிழமை மத்தியானமே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.கடைசிப் 'பீரியட்' வாத்தியாரும் மாணவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு 'எல்லாரும் சத்தம் போடாம படிங்க'(?) என்று சொல்லி விட்டால் ஒரே குஷி தான்..who wants Pythagoras theorem on a Friday evening???

வெள்ளிக் கிழமை சாயங்காலம் மழையும் சேர்ந்து கொண்டால் கொண்டாட்டம் தான்..

I walk in the streets
================


இப்போதெல்லாம் ஊருக்குப் போவது என்பது காற்றில் தொலைத்து விட்ட பழைய ஞாபகங்களைத் தேடுவதற்காகவே இருக்கிறது..Why Past is so fascinating ? எல்லாக் கவிதைகளும் தமிழுக்குப் பொருந்துவதில்லை..எனவே இது ஆங்கிலத்தில்


I walk in the streets , in the roads
that I passed through in the childhood
to pick up a few memories lying there
I could again be in that hilarious mood

I walk in the way I used to return from school
to pick up some memories of schooling
I can be an unworried student again
and come back home flying, rolling!

I walk in the way my mother took me to market
searching for a few memories
I can be a child again holding her soft fist
with no burdens, no worries

I walk in the way me and my sister ran
chasing the bullock cart
Hoping that I could go back in time
and again live a life by heart!!!


samudra's twits
=============

# சில விஷயங்கள் எப்போதும் நமக்கு எதிராகவே இருக்கும்..உதாரணம் டிராபிக் சிக்னல்..#

# இலவசமாகக் கிடைக்கிறது என்றாலே சில விஷயங்கள் எல்லாருக்கும் இளக்காரம் தான் -உதாரணம் Blog ..#

# கலைஞர் எதிரிகளையும் ஆதரிப்பவர்..ஆமாம்..
கலைஞர் இலவச தொலைக்காட்சியில் ஜெயா டி.வியும் வருகிறது #

ரொம்ப சீரியஸ் ஆன விஷயங்களைப் பேசி விட்டோம்..இப்போது ஒரு ஓஷோ ஜோக்

ஓஷோ ஜோக்
=============


அந்தக் கிராமத்தில் முல்லா நசுருதீன் 100 வயதை அடைந்தவர். அவரைப் பேட்டி காண பத்திரிகை நிருபர்கள் கூடினார்கள்.அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு
முல்லா பேட்டி கொடுத்தார். அப்போது ஒரு நிருபர் ' மிஸ்டர் முல்லா, நீங்கள் இப்படி 100 வருடம் வாழ்ந்த ரகசியம் என்ன?" என்பர் கேட்டார்.

முல்லா 'எனக்குத் தெரியாது, ஆனால் நான் மது அருந்துவது இல்லை.புகைபிடிப்பது இல்லை..பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பது இல்லை..அதுதான் காரணமாக இருக்கலாம்" என்றார்

அப்போது வீட்டின் உள்ளே இருந்து 'கடமுடா' என்று ஏதோ சத்தம் கேட்டது..யாரோ ஓடுவது போலவும், தடுமாறி விழுவது போலவும் சத்தம் கேட்டது..நிருபர்கள் குழப்பத்துடன் 'உள்ளே என்ன சத்தம்?" என்று கேட்டார்கள்..

முல்லா "அது ஒன்றும் இல்லை.. என் அப்பா தான் அது..கிழம் நன்றாகக் குடித்து விட்டு வேலைக்காரியைத் துரத்திக் கொண்டிருக்கிறது" என்றார்..


முத்ரா



19 comments:

ஷர்புதீன் said...

:)

Katz said...

//உலகில் மிகப் பெரிய சாதனை படைத்த சாதனையாளர்கள் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளாகத் தான் இருந்தார்கள்..'//


mikavum sari...

அரசு பள்ளியில் படிச்சிட்டு, இலக்கியம், அறிவியல், ஆன்மிகம், தகவல் தொழிநுட்பம் எல்லாத்திலேயும் அசத்துறீங்க. எப்படி பாஸ்? இது 'வரிசை'யில் வராது என்று நம்புகிறேன்.

Katz said...

unga twitter id ennanga?

சமுத்ரா said...

katz...no twitter :(
gmail id : madhu.sukhi@gmail.com

அமுதா கிருஷ்ணா said...

குழந்தைகள் பற்றிய வரிகளும்,வெள்ளி கிழமை சாயங்காலமும் அருமை..

ரேவா said...

கம்பியூட்டர், இன்டர்நெட், செல்போன் இவைகள் இன்றி தான் நம் குழந்தைப் பருவம் கழிந்தது..நாமெல்லாம் இன்றைக்கு பின் தங்கிப் போய் விட்டோமா என்ன?

சூப்பர்..உண்மை தான் நண்பரே... நாம் வளர்ந்த சூழல் வேறு..இப்பொழுது குழைந்தைகள் வளரும் சூழல் வேறு...ஆனாலும் நீங்கள் சொன்னது போல் குழந்தைகள் குழந்தைகளாகவே வளர்த்தல், வளர்தல் நல்லது... நல்லக் கருத்து....மனதில் பதித்துக் கொண்டேன்....

ரேவா said...

அந்தக் காலத்தில் ராஜாக்கள் எல்லாம் 'புகழ்' விரும்பிகளாக இருந்தார்கள்..இதைப் பயன்படுத்திக் கொண்டு சில ஜால்ராக்கள் 'உன்னைப் போல் உண்டா' 'உன்னைப் போல் யாரும் பிறந்ததும் உண்டா?' என்று புகழ்ந்து பாடினால் போதும் ..காதும் மனதும் குளிர்ந்து போய் 'யானை குதிரை' என்று பரிசளித்து விடுவார்கள்.



ஹ ஹ இப்போ மட்டும் என்னவாம்... இந்த கதைதானே நாட்டிலும் வீட்டிலும் நடக்குது...

ரேவா said...

வெள்ளிக் கிழமை மத்தியானமே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.கடைசிப் 'பீரியட்' வாத்தியாரும் மாணவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு 'எல்லாரும் சத்தம் போடாம படிங்க'(?) என்று சொல்லி விட்டால் ஒரே குஷி தான்..who wants Pythagoras theorem on a Friday evening???

வெள்ளிக் கிழமை சாயங்காலம் மழையும் சேர்ந்து கொண்டால் கொண்டாட்டம் தான்..

ஹ ஹ நீங்களும் அப்படித்தானா... என் பள்ளிபருவத்தை இந்த பகுதியைப் படிக்கையில் உணர்ந்தேன்...

ரேவா said...

Hoping that I could go back in time
and again live a life by heart!!!

super.......

ரேவா said...

# கலைஞர் எதிரிகளையும் ஆதரிப்பவர்..ஆமாம்..கலைஞர் இலவச தொலைக்காட்சியில் ஜெயா டி.வியும் வருகிறது #

பார்டா... ஹி ஹி இதுகூட நல்லா இருக்கே...

ரேவா said...

நகைச்சுவையும் அருமை சமுத்ரா..வாழ்த்துக்கள்

நெல்லி. மூர்த்தி said...

"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்!"

ஹூம். உண்மை தான்! சர்வதேச இந்தியப் பால்வாடியில் பயிலும் என் மகளைக் காணும் பொழுது நிறையவே நினைத்துக் கொள்வேன். பள்ளியில் முதலாவதாக தன் குழந்தை தான் வரவேண்டும் எனும் எண்ணம் தந்தையை விட தாயிற்கு சற்று அதீதமாகவே இருக்கும்! வாணலியில் இவள் வறுப்பதை விட, சும்மா வளவளன்னு பேசாம விளையாட்டுத்தனமாக இருக்காம இதைப்படி அதை எழுது என்று தன் மழலையை வறுக்கும் இளந்தாய்மார்கள் தான் அதிகமாக இருக்கின்றனர்.

Chitra said...

good ones... :-)

ஆனந்தி.. said...

ஹாய் சமுத்ரா...இப்போ தான் இந்த பதிவு படிக்க முடிஞ்சது...காலை நேரம் இப்போனாலும்...ஏதோ மாலை நேர தென்றல் காற்று அனுபவித்த திருப்தி...ரொம்ப கிளாஸ் ...குழந்தைகள் பற்றி நீங்க சொன்ன கருத்துக்கள் நானும் பயங்கரமா யோசிச்சிருக்கேன்...இன்சூரன்ஸ் பற்றி விளம்பரத்தில் பேச விடுறாங்க..அதை விட்டு தள்ளலாம்..ஆனால் நிஜத்தில் சில குழந்தைகளின் வயசுக்கு மீறிய பேச்சினை ரசிக்கும் பெற்றோர்கள் பார்த்து பயங்கரமா கோவபட்டிருக்கேன்...அரட்டை அரங்கம் மாதிரி சில நிகழ்ச்சிகளில் கூட சில அதிகப்ரசங்கி பேச்சு குழந்தைகளை நான் ரசிப்பதில்லை...மழலை போன பெரிய மனுஷ குழந்தைகள்...ம்ம்...குழந்தைகளாகவே இருக்கட்டும்...

அப்பரம்...அந்த saturday fever...:) சொன்ன விதம் மிக்க அழகு..அந்த poem கூட சூப்பர் சமு..!! தானங்கள் பற்றிய உங்கள் விளக்கங்களில் உண்மையில் நான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்...நன்றி வாத்யாரே...:))

ஓஷோ கதை கலக்கலோ கலக்கல்...ட்விட் டில் ரெண்டாவது ரொம்ப பிடிச்சது...:)))

இராஜராஜேஸ்வரி said...

புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்!
Interesting.

Nagasubramanian said...

//உலகில் மிகப் பெரிய சாதனை படைத்த சாதனையாளர்கள் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளாகத் தான் இருந்தார்கள்//
நச் வரிகள் !!!

Mohamed Faaique said...

/////உலகில் மிகப் பெரிய சாதனை படைத்த சாதனையாளர்கள் குழந்தைப் பருவத்தில் குழந்தைகளாகத் தான் இருந்தார்கள்//
நச் வரிகள் !!! ////

அற்புதமான ஒரு விசயம் நன்பா... உன்மையாகவே, ரசித்து படித்தேன்...

RVS said...

kaleidoscope அற்புதம். பல டிசைனில் பலப்பல வண்ணங்கள் தெரிகிறது. ;-))

arul said...

காதில் வைத்துக் கொண்டாலோ, டி.வியின் முன் நின்று ரிமோட் பட்டனை அழுத்தினாலோ பெருமைப்படக் கூடிய விஷயம் அல்ல அது..He has been corrupted !

its true