இந்த வலையில் தேடவும்

Tuesday, January 28, 2014

கலைடாஸ்கோப் -105

கலைடாஸ்கோப் -105 உங்களை வரவேற்கிறது.


Any fool can criticize, condemn and complain ... and most fools do.
-Dale Carnegie

If you have something nice to say, please say it.
-Seth Godin


Positive feedback அல்லது constructive criticism என்பதைப் பற்றி முதலில் கொஞ்சம் பேசுவோம் .ஒரு பொருள் அல்லது சேவை சரியாக இல்லை என்றால் உடனே கஸ்டமர் கேருக்கு அழைத்து கண்டபடி திட்டும் நாம் பொருள் அல்லது சேவை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறோம்.feedback email களை பெரும்பாலும் நாம் கவனிப்பதே இல்லை.ஹோட்டல்களிலும் ரிஸார்ட்டுகளிலும் வைக்கப்பட்டிருக்கும் feedback form களை  ஏனோதானோ என்று தான் நிரப்புகிறோம். ஒரு நிறுவனம் தன் சேவைகளை மேம்படுத்த feedback என்பது மிகவும் முக்கியம். அதிலும் positive feedback என்பது அவர்களுக்கு மிகுந்த motivation ஆக அமையும். இதை நாம் தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கப் பழகிக் கொள்வோம். சில உதாரணங்கள்

* furniture டெலிவரி வரவில்லை என்றால் உடனே போன் செய்து ஏன் வரவில்லை என்று கேட்கிறோம். வந்த பின்பு அவரை மறந்து விடுகிறோம். எந்தப் பொருள் டெலிவரி ஆனாலும் உடனே போன் செய்து டெலிவரிக்கு ஒரு சின்ன நன்றி சொல்லலாம்.

* நோய் சரியானதும் டாக்டரை மறந்து விடுகிறோம். அவரை casual ஆக சென்று சந்தித்து நன்றி சொல்லலாம்.

* இன்னொருவர் ப்ளாக்குகளில் நாம் சும்மா சென்று படிக்கிறோமே தவிர கமெண்ட் போடுவதில்லை. நன்றாக இருந்தால் நன்று என்று சொல்லலாமே, template comment என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்ல வேண்டாம்.குடியா முழுகி விடும்? திட்டுவதற்கு மட்டும் நம் வாய் சாரி விரல் சீக்கிரம் நீள்கிறது!!! எழுத்தாளர்களின் ஆன்லைன் அல்லக்கைகள் போல ஜல்லியடிக்கச் சொல்லவில்லை . just 2 lines !!!

* 'அதான் காசு வாங்குறானே, மாவுக்கேத்த பணியாரம்' என்ற மனநிலை நம்மில் இருக்கிறது. காசு வாங்கினாலும் சேவை சேவை தான். எனவே எல்லா இடங்களிலும் உங்கள் positive feedback கை அவசியம் தரவும். 'உணவு நன்றாக இருந்தது' என்றோ ' I had a great stay' என்றோ 'நல்லாப் பாடினீங்க ' என்றோ (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சொல்வதில் தவறேதும் இல்லை. நாமும் நன்றாக உணர்வோம். நம் தேவையற்ற ஈகோ கரையும். அவர்களும் They will have their day!


next

Cyber culture என்கிற ஒரு term . இன்டர்நெட் யுகத்துக்குப் பிறகு தோன்றியிருக்கும் ஒரு புது கலாச்சாரம். recent and juvenile  ! பழமையில் வேரூன்றி பல்வேறு விற்பன்னர்களால் காலம் காலமாக கூர் தீட்டப்பட்டு, புடம் போடப்பட்டு இதெல்லாம் இல்லை. இந்த culture ருக்கென்று தனி மொழி இருக்கிறது. தனி உணர்வுகள், தனி கடவுள், தனி மதம், தனி character எல்லாம்..உதாரணமாக facebook ஒரு virtual world ! அதில் நுழையும் போது ஒரு உண்மையில்லா அல்லது உண்மையொத்த
ஓர் உலகில் நாம் சஞ்சரிக்கிறோம். பேசுகிறோம், குலாவுகிறோம், கொஞ்சுகிறோம் , குடுமிப்பிடி சண்டை போடுகிறோம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு இந்த virtual இமேஜ் இருக்கவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி என்றால் அவர் வடக்குப்பட்டி ராம சாமி தான். அவரது physical presence தான்! v.ramasamy@facebook.com அல்லது  v.ramasamy@twitter.com அல்ல . ஒருவரது இந்த virtual image அல்லது cyber image  ஜினால் நாம் மிகவும் குழம்பிப் போகிறோம். நேரில் பார்க்கும் போது இவரா நம்முடன் chat செய்தவர் , இவரா போட்டோவில் உலக அழகி போல் திரிந்தவர், வீடியோவில் உயரமாக இருந்தாரே என்றெல்லாம் ஆச்சரியப்படுகிறோம். நம் virtual காதல்கள் தோற்றுப் போகின்றன.

சீதை மற்றும் ராமன் எப்படி அன்னியோன்னிய தம்பதிகளாக வாழ்ந்தார்கள் என்றால் கற்பு ஒ.ஒ என்ற நெருடலான சமாசாரங்களை விட்டு விட்டு யோசித்தால் அந்தக் காலத்தில் இந்த virtual image கிடையாது. ஆண் என்றால் இப்படித்தான் , பாலைவனத்தில் பைக் ஓட்ட வேண்டாம். ரூபா பனியன் போட வேண்டும் , Axe deo போட வேண்டும், பெண் என்றால் veet உபயோகிக்க வேண்டும் dove ஷாம்பூ போட வேண்டும், dandruff நோ டென்ஷன் போன்ற விளம்பரங்கள் கிடையாது.ஓடும் ரயில் மேல் ஓடியபடி 100 பேரை ஹீரோ அடித்து நொறுக்கும் (?) ஹீரோ இமேஜ்கள் கிடையாது. சீதை தன் அப்பாவை மட்டுமே பார்த்து வளர்ந்தவள்.ராமன் தன் அம்மாக்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவன். இருவரும் மற்றவரின் real image ஐயே சந்தித்தனர். தன் தந்தை போன்ற ஆண் மகனைக் காணும் சீதையும் தன் தாய் போன்ற பெண்ணைக் காணும் ராமனும் மனமொன்றி விடுகிறார்கள். Simple ! 


"கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! "


என்று ராமன் அகலிகையைக் கொன்றேன் என்று status போடவில்லை. சீதை அதற்கு லைக்கும் போடவில்லை.


[btw , பையனுக்கு health drink கொடுத்தவுடன் அவன் ஸ்கூலில் ஆளுயர மைக்கின் முன் நின்று எதையோ ஒப்பிப்பது, வீட்டுக்கு அடி உயர கோப்பையுடன் ஓடி வருவது. இவன் என் பையனாக்கும் என்று சொல்வது பையன் ஐன்ஸ்டீன் போல் வேடமணிந்து வீட்டுக்குள்ளேயே லேபில் உட்கார்ந்திருப்பது இதெல்லாம் தேவையில்லை என்கிறார் டாக்டர். ரேச்சல். (சூரிய வணக்கம்) அளவுக்கதிகமான health drink கள் உடலில் சேர்ந்து கொண்டு கிட்னி கற்கள் போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிறார். கண்ட drink களை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் பழ ஜூஸ்கள் , இரவில் வெறும் பால் இவை கொடுத்தால் போதும் என்கிறார்.

மேலும் , சாப்பிட்டு முடித்தவுடன் கோக் , பெப்ஸி என்று எடுத்துக் கொள்ளும் நவீன trend  unhealthy ஆனது என்கிறார். சாப்பிட்டவுடன் சுடு தண்ணீர் குடிப்பது தான் மிகவும் நல்லது.

மேலும் பார்க்க :

http://www.youtube.com/watch?v=iCayNAP192I ]


ஒரு மொழியை, காலம் காலமாக புழங்கி வரும் ஒன்றை, அதன் எழுத்து வடிவத்தை மாற்றும் வல்லமை cyber culture -ற்கு உண்டு..

Btw, M doin gr8. & was^ with U?
nm bro.
Oic
brb
bak. LOL
K ^-^
cya ltr,,zzz...
ttyl
Gd n8 ya!

இதைப் படிப்பதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் நீங்கள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

[ கொசுறு: ஆங்கிலத்தில் அதிகப்படி உபயோகப்படும் வார்த்தையான THE என்பதை அதன் 27ஆவது எழுத்தாக சேர்க்க சிலர் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன் குறியீடு கீழே!


]


நல்லவேளை. இன்டர்நெட்டில் தமிழ் சிதையாமல் இருக்கிறது. இன்டர் நெட்டின்ஆட்சி மொழியாக தமிழ் இருந்திருந்தால்.

_ ^_ (வணக்கம்)
நலமா?
இலை
விவிசி (விழுந்து விழுந்து சிரி )
எ .ஆ ?    (என்ன ஆயிற்று)

தமிழ் phonetic ஆக இருப்பதால் அதை சுருக்குவது கொஞ்சம் கஷ்டம் என்றே தோன்றுகிறது . ஆங்கிலம் அப்படியல்ல.awesome என்பதில் உச்சரிப்புக்கும் எழுதுவதற்கும் தேவையில்லாத நிறைய எழுத்துகள் உள்ளன. எனவே Ahsum என்று எழுதலாம்!cyber culture க்கு பாவம் ஆங்கிலம் victim ஆகி விட்டது.


ஸ்கூலில் டெலக்ராம் எழுதும் பயிற்சிகள் கொடுப்பார்கள்.

அம்மா போய் விட்டாள் என்பதை

If I were hanged on the highest hill, 
Mother o' mine, O mother o' mine! 
I know whose love would follow me still, 

என்றெல்லாம் எழுத முடியுமா 

MOTHER SERIOUS. START SOON  என்று தான் சொல்ல முடியும். ஒரு வாக்கியத்தை முடிந்தவரை சுருக்குவது என்பது ஒரு கலை. exercise ! கார்பொரேட் நிறுவனங்களில் புதிதாகச் சேர்பவர்களுக்கு நிறைய பயிற்சிகள் கொடுப்பார்கள்.நான் சேர்ந்த போது effective communication கிளாஸில் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் கட்டிங்குகள் சிலவற்றைக் கொடுத்து அதற்கு பொருத்தமான தலைப்பு என்ன  என்று யூகிக்க வேண்டும். உதாரணமாக கீழ்க்கண்ட கட்டிங்-கிற்கு தலைப்பு (ஆங்கிலத்தில்)என்ன என்று யோசியுங்கள்.விடை கடைசியில்.




ட்விட்டரில் கதை எழுதுவதைப் பற்றி நண்பர் ஒருவர் கேட்டார். எழுதலாம் ஆனால் ஆழம் இருக்காது. மர்மக் கதைகளுக்கு சில சமயம் சர்ப்ரைஸ் , ட்விஸ்ட், எல்லாம் கொடுத்து கொஞ்சம் ஜவ்வுத் தன்மை இருந்தால் தான் மனதில் நிற்கும். 140 வார்த்தைகளில் என்ன எழுதுவது?காதல் கதை எழுதலாம் ஆனால் படிப்பவர்கள் அதனுடன் ஒன்ற முடியாது!It will remain detached!


"தன் காதலி வேறொருத்தனுடன் சுற்றுகிறாள் என்று இருவரையும் கொலை செய்யப் போனான் அவன்; முதலில் அவள் வீட்டுக்குப் போனபோது அவள் கொலையாகிக் கிடந்தாள்"

- இந்த ட்விட்டர் மர்மக் கதையில் உள்ள மெல்லிய திகில் புரிய வேண்டும். புரிந்தாலும் பெரிதாக அனுதாபமெல்லாம் வராது.

சரி.

*"நான் கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கி வந்தேன் "

இதை சுருக்குவது எளிது. பார்த்திபனின் "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" strategy யில் சுருக்கினால் 

'நான் போகாமல் பின்னே நாயா போகும்?

*கடைக்கு சென்று சாக்லேட் வாங்கி வந்தேன் 

கடைக்கு செல்லாமல் கல்கத்தாவுக்கா செல்வார்கள் 

*சென்று சாக்லேட் வாங்கி வந்தேன் 

செல்லாமல் எப்படி வாங்குவதாம்?

*சாக்லேட் வாங்கி வந்தேன்.

வராமல் அங்கேயேவா குடும்பம் நடத்துவார்கள்?

*"சாக்லேட் வாங்கினேன்"

மேட்டர் முடிந்தது.

சில வாக்கியங்களை creative ஆக மட்டுமே சுருக்க முடியும்.

உதாரணமாக,

"மீரா கண்ணனைக் காதலித்தாள் " - ஆதாரமாக , subject , verb , object மூன்று மட்டுமே வரும் இதை எப்படி சுருக்குவது?

விடை 



தம்பூரா, ஒரு லவ் சிம்பல் , ஒரு புல்லாங்குழல்.


Next

ச .ப.பு:

இன்பம் x துன்பம்  , நல்லது x கெட்டது , அழகானது x அசிங்கமானது , உணவு x மலம் என்று வாழ்க்கையை நாம் இருமையாகவே பார்த்துப் பழகி விட்டோம் என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது பெருமாள் முருகனின்  'பீக்கதைகள்' (you read it right !).. எல்லாக் கதைகளிலும் மனித மலம் வருகிறது.in fact அது தான் மெயின் கேரக்டர்.முகம் சுளிக்காதீர்கள். நம் எல்லார் உடம்பிலும் எப்போதும் ஒரு அவுன்ஸ் மலம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்று கமலஹாசன் சொல்வது போல 

பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே

என்று பட்டினத்தார் சொல்வது போல எல்லாருக்குள்ளும் மலம் இருக்கிறது.

வேக்காடு என்ற கதையில் ஒரு கிழவி வறட்சி தாக்கிய குக்கிராமத்தில் தனியாக வாழ்கிறாள். கண் வேறு மங்கி விட்டது. வீட்டில் குடிப்பதற்கு மட்டும் கால் பானை நல்ல தண்ணி இருக்கிறது  போவோர் வருவோரை எல்லாம் ஒரு குடம் உப்புத் தண்ணி கிடைக்குமா என்று கேட்டுப் பார்க்கிறாள். அந்த ஊரின் மைனர் ஒருவன் வீட்டில் மட்டும் கிணறில் தண்ணீர் இருக்கிறது. அதை வைத்து எல்லாரையும் கொடுமைப்படுத்துகிறான் அவன். கிழவி எல்லாரிடமும் கெஞ்சிப் பார்த்து விட்டு காட்டுக்குப் போய் வந்து 'கழுவாமலேயே' படுத்துக் கொள்கிறாள். ராத்திரி இரண்டு மணிக்கு எழுந்து கிழவி யாரேனும் தண்ணீர் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களா என்று பார்க்கிறாள். யாரும் வைத்திருக்கவில்லை என்று முடிகிறது கதை!

'மஞ்சள் படிவம்' என்ற சிறுகதையில் பிள்ளைகளை சார்ந்து இருக்காமல் இன்னொரு கிழவி தன்மானத்துடன் தனியாக வாழ்கிறாள். மகள் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறாள். மகன்களோ மருமகள்களோ எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.கிழவிக்கு நல்ல சாவே வராது என்கிறார்கள் மருமகள்கள். ஒருநாள் கிழவி வழுக்கி விழுந்து படுக்கையோடு படுக்கையாய் படுத்து விடுகிறாள். மகள் மட்டும் வந்து பணிவிடை செய்து கொண்டு அங்கேயே தங்கி விடுகிறாள். ஒருநாள் பாட்டியின் சேலையில் மஞ்சள் படிவத்தைப் பார்க்கும் மகள் 'என்னம்மா, வெளிக்கு வருதுன்னா கூப்பிட வேண்டியது தானே, இப்ப யார் இதை துவைக்கறது' என்று அலுத்துக் கொள்கிறாள். அதன் பிறகு கிழவி என்ன சொல்லியும் கேட்காமல் வைராக்கியமாக பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் கடும் பட்டினி இருந்தே செத்துப் போகிறாள்.!

பின்பக்க இருக்கை என்று ஒரு கதை..


சரி. போதும்.யாராவது சாப்பிட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்.


ஜென் ஹைக்கூ..



என்
கெண்டைக் கால்கள் சூம்பி இருந்தாலும்
செல்கிறேன்
பூக்கள் மலருமிடத்துக்கு

-பாஷோ

பிடித்த படம்:(FB )





ஓஷோ ஜோக்.


முல்லா தன் மார்டினியை நன்றாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வயதான பெண்மணி அவரை அணுகி "அன்பரே, நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது ஸ்லோ பாய்சன் " என்றாள் .

"பரவாயில்லை மேடம், எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை" என்றார் முல்லா.



இன்னொன்று

ஒரு சேவல் சண்டைப் போட்டியில் ஒரு பாகிஸ்தானியை எப்படித் தெரிந்து கொள்வது?

அங்கே கையில் ஒரு வாத்துடன் நிற்பவன்.

ஒரு இத்தாலிக் காரனை?

அவன் அந்த வாத்தின் மேல் பணம் கட்டுகிறான்.

ஒரு சேவல் சண்டையில் அமெரிக்கன் இருக்கிறான் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

வாத்து வெற்றி பெறுகிறது!


விடை:

RBI surprises again, raises repo rate by 25bp to 8%, keeps CRR unchanged

 Please give your CC  :)





சமுத்ரா ..

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Google Analytics, Visitors Time, Visitors Clicks என்று பல தெரியாத................... (வேண்டிய சொற்களை நிரப்பிக் கொள்ளலாம்) உள்ளனர்... Group Group-யாக பல அல்லக்கைகள் பற்றி அறிய எனக்கு தகவல் அனுப்பலாம்...! ஹிஹி...

ஜோக் செம...

மற்றவை : ‰ √ - நன்றி...

பின்பக்க இருக்கை கதையை அடுத்த பகிர்வில் வருமா...?

வாழ்த்துக்கள்...

Vijayan Durai said...

இந்த முறை கலைடாஸ்கோப் சின்னதா இருப்பது மாதிரி தோன்றியது!! ஒருவேளை எடுத்துக்கொண்ட கன்ட்டென்ட் இப்படி ஒரு பிரமையை கிரியேட் செய்யுதானு தெரியவில்லை..,
!//cyber culture க்கு பாவம் ஆங்கிலம் victim ஆகி விட்டது.//
:) :)

btw I enjoy the designs ;)

Vijayan Durai said...

b <3 = very Nice

வவ்வால் said...

இன்னொருவர் ப்ளாக்குகளில் நாம் //////சும்மா சென்று படிக்கிறோமே தவிர கமெண்ட் போடுவதில்லை. நன்றாக இருந்தால் நன்று என்று சொல்லலாமே, template comment என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்ல வேண்டாம்.குடியா முழுகி விடும்? திட்டுவதற்கு மட்டும் நம் வாய் சாரி விரல் சீக்கிரம் நீள்கிறது!!! எழுத்தாளர்களின் ஆன்லைன் அல்லக்கைகள் போல ஜல்லியடிக்கச் சொல்லவில்லை . just 2 lines !!!//

ஹி...ஹி!

bandhu said...

வழக்கம் போல் நன்றாக இருந்தது. மீரா கண்ணனை காதலித்தார்.. அருமை..

வவ்வால் said...

//முல்லா தன் மார்டினியை நன்றாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வயதான பெண்மணி அவரை அணுகி "அன்பரே, நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது ஸ்லோ பாய்சன் " என்றாள் .

"பரவாயில்லை மேடம், எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை" என்றார் முல்லா.//

எனக்கு முன்னோடியா முல்லா இருப்பார் போல அவ்வ்!

# //விடை:

RBI surprises again, raises repo rate by 25bp to 8%, keeps CRR unchanged//

இப்படிலாம் ஹெட்லைனில் கதை சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்,பின்னர் செய்தி காலத்தில் என்ன எழுதுவது அவ்வ்!

சுருக்கமாக,

"RBI raises repo rate by 25 bps to 8%"

அவ்ளோ தான் தலைப்பு ,மேலும் தெரிந்துக்கொள்ள செய்திப்படிக்கணும் :-))

விஸ்வநாத் said...

உள்ளேன் ஐயா;

G.M Balasubramaniam said...


நான் 18-ம் நூற்றாண்டில்தான் வாழ்கிறேன் போல. ப்லாகில் சென்று படித்தால் கமெண்ட் போடக் கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு என்று ஏதும் கருத்து இல்லாவிட்டாலும், எழுதியவ்ரின் வரிகள் சிலவற்றை கோட் செய்து ஆஹா ஓஹோ என்று புகழலாம். அதுவும் பாசிடிவ் feedbackதான். மனதில் தோன்றுவதை அப்படியே எழுதிப்போகும் சாதுர்யம் நன்றாக இருக்கிறது. பாசிடிவ் பின்னூட்டம்தானே....!

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://aagayam.blogspot.in/2014/01/anu-andam-ariviyal.html

இரசிகை said...

vazhakkam pola interesting :)

thambura pullaanguzhal...." sindubairavi padathil, mruthangam veenai" kb kaanbichurupaar athai ninaivu paduthiyathu.

yellaam nallaayirunthathu samuthra.

kalaidascope - ovvoru yezhuthaiyum color la poduveengalla ,athu nallaayirukum.
:)

vaazhthukal.

Anonymous said...

Excellent. As usual.
-Raj.

இரசிகை said...

b<3=

puriyala enakku

இரசிகை said...

b<3=

puriyala enakku

sury siva said...

அண்மையில் எனது வீட்டிற்கு வந்து எனை சந்தித்த
திரு ஜி.எம். பி அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது
உங்கள் வலை பற்றி சொன்னார்.

நீங்கள் எழுதியதில் சில மாலிகுலர் பிசிக்ஸ் உடன் தொடர்பு உடையதாகவும் காண்கிறேன்.

எனக்கு க்வாண்டம் பிசிக்ஸ், நானோ டெக்னாலஜி, மட்டுமன்றி, மெட பிசிக்ஸ் பற்றியும் சற்று துல்லியமாக கவனிப்பவர் யாரேனும் தமிழ் பதிவாளர்களில் இருக்கிறார்களோ என்று தேடிக்கொண்டு இருந்தேன்.

அதற்கு மேல் ஒரு படி மேல் போய் வட மொழி மற்றும் பிலாலாஜி யிலும் உங்களது இன்டரஸ்ட் இருப்பது எனக்குத் தெரிகிறது.

அண்மையில், ராபர்ட் லான்சா எம்.டி. அட்வான்ஸ்ட் செல்லுலர் டெக்னாலஜியில் சீனியர் சயண்டிபிக் ஆபீசராக ஆராய்ச்சி செய்பவர் ஒரு ஆய்வுக்கட்டுரையில்,

மனிதன் இறந்து போனபின், அவன் உடல் புதைக்கப்பட்டு அல்லது எரிக்கப்பட்டு போன பின்னும், அவனுள் இருக்கும் 20 வாட்ஸ் எனெர்ஜி அழியாமல் தொடர்கிறது என்ற

முடிவினை ஒரு கருத்தாய்வு குழுவின் முன் சமர்ப்பித்தார்.
இறப்புக்குப்பின்னே இன்னும் ஒரு வாழ்வு துவக்கம் என்பது இயலுமா என்னும் தலைப்பிலே பயோ சென்றிசம் என்னும் டிசிப்லினில் இவர் செய்த ஆராய்ச்சி அத்வைத கோட்பாடுகளுக்கு நடுவிலே பயனிப்பதைக் கண்டு வியக்கும் வண்ணம் உள்ளது.
ஆயினும் இவருக்கோ இந்து மதம் பற்றிய அறிவோ அல்லது வேத ங்களைப் பற்றிய ஈடுபாடோ இருப்பதற்கும் .வாய்ப்பு இல்லை.
இறந்த பின்னும் மனித உடலில் இருக்கும் ஒரு இருபது வாட் திறன் கொண்ட சக்தி தொடர்கிறது என்கிறார் இவர்.
இந்த எனெர்ஜி அதற்க்குப்பிறகு எங்கே செல்கிறது என்பதை எதிர்கால ஆராய்ச்சிகள் தான் சொல்லவேண்டும் என்றார்.

அவரது ஆய்வுக்கட்டுரையின் சாராம்சம் இங்கே இருக்கிறது.
http://www.independent.co.uk/news/science/is-there-an-afterlife-the-science-of-biocentrism-can-prove-there-is-claims-professor-robert-lanza-8942558.html
அதை இயன்றபோது படித்து கருத்து சொல்லவும்.


சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

waeltakashima said...

Wynn Casino Resort Launches New Mobile App For
Wynn Resorts, the parent 의정부 출장안마 company of Wynn Las Vegas and 서산 출장안마 Encore Boston Harbor, today announced it is launching a 삼척 출장마사지 mobile app for 사천 출장샵 gaming 고양 출장샵 and dining.