இந்த வலையில் தேடவும்

Wednesday, February 20, 2013

கலைடாஸ்கோப்-84

லைடாஸ்கோப்-84 உங்களை வரவேற்கிறது.. 


“Quality means doing it right when no one is looking.” - Henry Ford


ஒரு பொருளின் Quality அல்லது தரம் என்றால் என்ன என்பதற்கு இதுவரை எந்த வரையறையும் கிடையாது என்கிறார்கள்..ஆனாலும் இந்த 'தரம்' என்பது இன்றைய எல்லா தொழிற்சாலைகளிலும் , கம்பெனிகளிலும் ஒரு வேத வார்த்தை..We never compromise on quality என்று சொல்லி Total Quality Management (TQM) CMMI என்று என்னவோ செய்கிறார்கள்..சரி..

ஒரு பொருள் தரமானதா இல்லையா என்று எப்படி சொல்வீர்கள்? ஒரு induction அடுப்பு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்....அது தரமானது தான் என்று எப்படி சொல்வீர்கள்?

* FAF , முதலில் அது  தன்னுடைய வேலையை செய்ய வேண்டும்....[ அடுப்பில் தண்ணீர் வைத்தால் சூடே ஆகவில்லை என்றால் Gone case ...]

Q -  Quotable என்று சொல்லலாம்...மற்றவர்களுக்கு நீங்கள் quote செய்யும்படி அந்த ப்ராடக்ட் இருக்க வேண்டும்...."போன வாரம் ப்ரீத்தி கரண்ட் அடுப்பு வாங்கினேன்...பாலெல்லாம் என்ன சீக்கிரமா காயுது, நீயும் வாங்கு"

U - Usable  -உபயோகிக்க எளிதாக இருக்க வேண்டும்...induction அடுப்பில் 72 கண்ட்ரோல் இருந்தால் எப்படி இருக்கும்? 

A- Adaptable  - வோல்டேஜ்  கொஞ்சம்  நடுங்கினாலே அடுப்பு off ஆகி விடக் கூடாது.. சூழ்நிலைக்கு ஓரளவேனும் தன்னை adjust செய்து கொள்ள வேண்டும்...

L -Lasting 

நீண்ட காலத்துக்கு உழைக்கவும் வேண்டும்...சும்மா ஒரு வாரம் வேலை செய்து விட்டு  விட்டு பின்னர் பியூஸ் ஆகக் கூடாது...

I - Immune 

கீழே தவறி விழுந்து விட்டால், தண்ணீர் பட்டு விட்டால், பெரிதாக ஒரு பாதிப்பும் இருக்கக் கூடாது...ஓரளவு எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்..

T - Timely

  வேலையை செய்தால் மட்டும் போதுமா? பல்பு ஒன்று ஸ்விட்ச்சைப் போட்டு பத்து நிமிடம் கழித்து எரிந்தால் ஒத்துக் கொள்வீர்களா? அது வேலையை தக்க நேரத்துக்குள் செய்ய வேண்டும்..

 
Y -Yielding 

தனக்குரிய உற்பத்தியை அல்லது வேலையை பெரிதாகக் தேய்மானம் , குறைவு இல்லாமல் குறிப்பிட்ட காலத்துக்கு தர வேண்டும்...

ஒரு விஷயம்...இது எல்லாம் இருந்தால் கூட ஒரு தயாரிப்பு தரமானது என்று சொல்லி விட முடியாது...மேலும் ஒரு தயாரிப்பு 100% தரமானதாக தயாரிக்கப்படவும் முடியாது ...Quality is more  than  Q-U-A-L-I-T-Y


 “The quality of food is in inverse proportion to a dining room's altitude, especially atop bank and hotel buildings (airplanes are an extreme example).”-Bryan Miller



 ஆபீசில் ' appraisal இன் போது பொதுவாக இந்தக் கேள்வியைக் கேட்பார்கள்...உங்களுடைய short term goal என்ன? long term goal என்ன? என்று? short term goal கேட்-13 க்கு சென்று சமோசா சாப்பிடுவது, long term goal பக்கத்து க்யூபிகலில் இருக்கும் பிகரை கரெட் செய்வது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் 'to enhance my technical abilities and to..'என்று ஏதோ  வாய்க்கு வந்ததை உளறி வைப்போம்..நமக்குள் இரண்டு மனங்கள் இருக்கின்றன என்று தெரிகிறது...ஒன்று நம்முடைய long term goal -களை சதா நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...நீ பணக்காரன் ஆக வேண்டுமே? வீடு கட்ட வேண்டுமே? பகவானை அடைய வேண்டுமே(?) என்றெல்லாம்....இன்னொரு மனம் நம்முடைய STG களை நினைவு படுத்துகிறது....அட முட்டாளே! இன்னும் கரண்ட் பில் கட்டவில்லையே , பச்சை மிளகாய் தீர்ந்து போச்சே, பெட்ரோல் போடணுமே என்றெல்லாம்...long term என்பதை விட short term கோல்களில் அதிக கவனம் செலுத்துங்கள் என்கிறார்கள்... short term  சரியாக இருந்தால் தான் long term சரியாக இருக்கும்...'இன்று இந்த பாலன்ஸ் சீட்டை சரியாக செய்து முடிப்பேன்' ' இந்த ப்ரோக்ராம்மை சிறப்பாக பிழை இன்றி எழுதி முடிப்பேன்' என்று உங்கள் குறிக்கோள்களை குறுக்கிக் கொள்ளுங்கள்.. பிறகு long term இல் தானாக things will fall in place..


 மேலும் உங்கள் குறிக்கோள்கள் measurable ஆக இருக்க வேண்டுமாம்...உதாரணமாக 'உப்புமா செய்து முடிக்க வேண்டும்' என்று நினைப்பது ரொம்பவே மேலோட்டமான குறிக்கோள்...இன்று காலை ஒன்பது மணிக்குள் அரைக் கிலோ ரவையில் நான்கு பேருக்கு ஆகும்படி சம்பா ரவை உப்புமா (வாயில் வைக்கும்படிக்கு) செய்து முடிப்பேன் என்பது தான் measurable குறிக்கோள்..சும்மா 'பணக்காரன் ஆவேன்' என்று மட்டும் குறிக்கோள் வைத்துக் கொள்ளாமல் ''இன்னும் ஐந்து வருடத்துக்குள் பத்து லட்சம் ரூபாய் சம்பாதிப்பேன்' என்று அளவிடக் கூடிய குறிக்கோள் வைத்துக் கொள்வது practical அல்லவா? இந்த practice ஐ உங்கள் குழந்தைகளிடமும் செயல்படுத்தலாம்...நன்றாகப் படித்து முதல் மார்க் வாங்கு என்று குருட்டாம் போக்கில் சொல்லி நச்சரிப்பதை  விட்டு , ஒவ்வொரு பாடத்திலும் அவனது திறமையை கணக்கில் கொண்டு ஆங்கிலத்தில் இவ்வளவு மார்க் வாங்கு , கணக்கில் இவ்வளவு குறிக்கோள் செட் பண்ணு , இந்த தேதிக்குள் இந்த அரியர் கிளியர் பண்ணு என்று சொல்லிப் பார்க்கவும்...


மேலும்,  ஒரு விஷயத்தை சிறப்பாக செய்து முடிக்க , mind map  என்ற விஷயம் இருக்கிறதாம்...mind map என்பது மனதுக்குள் (அல்லது ஒரு சாணிக்காகிதத்தில்) நாமே வரைந்து கொள்ளும் ஒரு தோராய வரைபடம்..5 மனைவி ஒரு கணவன் (5 W 's 1H  ) என்பதன் படி ஒரு விஷயத்தை எங்கே, எப்படி, யார் மூலம் எப்போது செய்து முடிப்பது என்று மனதுக்குள் ஒரு மேப் வரைந்து கொள்வது...உதாரணமாக ஒரு ஆளை கொலை செய்வதற்கான mind map ஐப் பார்க்கலாம்...[disclaimer :இதை வைத்து நீங்கள் யாரையாவது கொலை செய்தால் இந்த ப்ளாக் பொறுப்பல்ல...]







ரு டாபிக்கைப் பற்றிப் பேசலாம்....Anthropomorphism...பெயரைக் கேட்டு பயந்து விடாதீர்கள்...மேட்டர் சிம்பிள் தான்...





சிம்பிளாக சொல்வதென்றால் , குரங்குக்கு சட்டை போட்டு விடுவது...குரங்கு கூட விடுங்கள்...யானைக்கு சட்டை போட்டு விடுவது..அதாவது மனிதனின் பண்புகளை, பழக்கங்களை, குணாதிசயங்களை, மன நிலையை விலங்குகள் மீதும் உயிரற்ற பொருட்கள் மீதும் project செய்வது...புராணம், இதிகாசங்களில் இதற்குப் பஞ்சமே இல்லை எனலாம்..பாம்பு பேசியது மலை பட்டிமன்ற நடுவராக இருந்தது, குரங்கு பாடியது,நதி நடந்து வந்தது,கடல் அழுதது என்றெல்லாம்... விலங்குகளை விடுங்கள்...கடவுளுக்கே  மனித உருவம் கொடுத்து விட்டனர்...கடவுளுக்கு கல்யாணம் செய்து வைத்து, குடும்பம் குட்டி எல்லாம் உருவாக்கி ...இதனை சில தத்துவ வாதிகள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்...ஒரு யானை யானை தான்..அதற்கு ஏன் மனிதனின் பண்புகளைத் திணிக்க வேண்டும்? யானை ஒன்று, மனிதனைப் பார்த்து அவன் மேல் யானையின் பண்புகளை திணிக்கிறதா ? ராமன் மனைவியைப் பிரிந்து வாடும் போது குரங்குகள் எல்லாம் ஏன் உதவி செய்ய வேண்டும்? ஒரு குரங்கு தன் மனைவியைக் காணோம் என்று வருந்தினால் ராமன் தன் ஆட்களை அனுப்புவானா? ....




 மனிதன் தன்னுடைய மனிதத் தன்மை என்ற கண்ணாடியை மாட்டிக் கொண்டு பிரபஞ்சத்தைப் பார்க்கிறான்.ஒரு ஒட்டகச் சிவிங்கி எப்படிப் பிரபஞ்சத்தைப் பார்க்கும்? திமிங்கலம் எப்படி பார்க்கும்? ஒரு மரம் எப்படி பிரபஞ்சத்தை உணரும்? ஒரு பாக்டீரியா எப்படி உணரும்? என்று நினைத்துப் பார்ப்பதில்லை....எல்லாவற்றுக்கும் 'மனித சாயம்' பூசி விடுகிறான்.

கடவுளுக்கும்.... சிலர், கடவுள் மனிதனின் புலன்களுக்குள், அறிவுக்குள், எல்லைக்குள் வராத ஒரு பொருள் என்று சொல்கிறார்கள்..அதற்கு மனித சாயம் பூசுவது ஆகாயத்தை அஞ்சறைப் பெட்டியில் அடைக்கும் முட்டாள்தனம்..'என்னுடன் பேசமாட்டாயா' 'கண் திறக்க மாட்டாயா' 'இதயம் உருகாதா' 'காதால் என் முறை கேளாயோ' 'திருவாய் மலர்வாய்''என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்(?), உன் அருட் கரத்தில் என்னை அரவணைக்க மாட்டாயா? காலடியில் சேர்த்துக் கொள்ள மாட்டாயா? என்றெல்லாம்...ஆனால் என்ன செய்வது? மனிதன் helpless ...புலன்களைக் கடந்த ஒரு super human நிலையில் அவனால் சிந்திக்கவும் முடிவதில்லை..bottom line என்ன என்றால் Nature must not be humanized!!! 




ஆனாலும் இதுபோன்ற பாடல்கள் அழகாகவே இருக்கின்றன:



  
தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத்
தந்த பேருதவிக் கைம்மாறா,
தோள்களை யாரத் தழுவி தென்னுயிரை
அறவிலை செய்தனன் சோதீ,
தோள்களா யிரத்தாய் முடிகளா யிரத்தாய்.
துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய்.
தமியனேன் பெரிய அப்பனே. 


  

When they discover the center of the universe, a lot of people will be disappointed to discover they are not it -   Bernard Bailey

நேற்று விஞ்ஞானி கோபர்நிகஸ் -ஸின் பிறந்த நாள்...இவர் கொஞ்சம் ஸ்பெஷல்...'பூமி தான், அதாவது நாம் தான் பிரபஞ்சத்தின் மையம், எல்லாம் நம்மையே சுற்றுகின்றன என்ற பழைய மதவாத நம்பிக்கையை நடு வீதியில் போட்டு உடைத்தவர்..பூமி தான் மையம் என்று நம்புவது சுலபம்..பூமி நகர்வதை நாம் உணர்வதில்லை....சூரியன் நகர்கிறது... விண்மீன்கள் நகர்கின்றன எனவே அவை நம்மை தான் சுற்ற வேண்டும் என்பது obvious ...ஆனால் mistrust the obvious !-தெளிவாக இருப்பதை நம்பாதே!  

முதலில் , சில திரிகோணமிதி விகிதங்களின் படி நட்சத்திரங்களின் தூரம் கணக்கிடப்பட்டது... அவை பூமியில் இருந்து அபார தூரத்தில் இருப்பதாகத் தெரிந்தது...அப்படியென்றால் அவை (பூமியை விட)மிக மிக பெரியவையாக இருக்க வேண்டும்..அத்தனை தூரத்தில் இருக்கும் மிகப் பெரிய வான் பொருட்கள் எதற்கு இத்தனை சிறிய பூமியை மெனக்கெட்டு சுற்ற வேண்டும்?' என்று மைல்டாக ஒரு டவுட் வந்தது...அங்கே தான் என் ஒரே மைந்தன் பிறக்கிறான்; எனவே பூமியை சுற்றுங்கள்' என்று கடவுள் ஆணையிட்டாரா?

சரி....லாஜிக் ஒரு பக்கம் இருக்கட்டும்...பொறுமையாக வானத்தை ஆராய்ந்ததில் கிடைத்த சில தகவல்கள் கிரகங்கள் பூமியை சுற்றவில்லை என்ற கொள்கையை மேலும் வலுவாக்கின..


 வழக்கமாக கிழக்கில் இருந்து மேற்கில் நகரும் சில கிரகங்கள் சில சமயங்களில் ஏனோ தங்கள் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி மீண்டும் ரிவர்சில் நகர்ந்து பின்னர் மீண்டும் தங்கள் சுழற்சியைத் தொடங்கின...கிரகங்களுக்கு இரண்டு சுற்றுப் பாதைகள் உள்ளனவா, ஒன்று பெரிய வட்டம் , இன்னொன்று அதற்குள் ஒரு குட்டி வட்டம் என்று கூட சிலரை யோசிக்க வைத்தன..


படத்தில் சூரியன், பூமி,மற்றும் செவ்வாய் காட்டப்பட்டுள்ளன..பூமி செவ்வாயை விட வேகமாக சூரியனை சுற்றி வந்து விடுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்..தூரத்தில் உள்ள (கிட்டத்தட்ட நிலையாக தோன்றும்) விண்மீன் ஒன்றை Reference -ஆக வைத்து செவ்வாயின் நிலை கணக்கிடப்படுகிறது.நிலை 1 மற்றும் 2 இல் செவ்வாயின் நிலை கவனிக்கப் படுகிறது...அது ஒரே திசையில் நகருகிறது...நிலை மூன்றில் பூமி செவ்வாயை முந்தி விடுகிறது..வட்ட வடிவ மைதானம் ஒன்றின் உள் பாதையில் (inner orbit )கார் ஒன்றில் நீங்கள் பயணிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்..அதன் வெளிப் பாதை ஒன்றில் உங்களை விட மெதுவாக இன்னொரு கார் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் கொள்ளுங்கள்..நீங்கள் அந்த மெதுவான காரை நெருங்க நெருங்க , முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் அது, நீங்கள் ஓவர் டேக் செய்யும் போது நிலையாகத் தோன்றி பின் உங்களுக்குப் பின்னோக்கி நகருவதாகத் தெரியும்...மீண்டும் நீங்கள் வேகமாக சுற்றி வந்ததும் உங்களுக்கு முன்னே நகரத் தொடங்கும்... அது போல நிலை 3 இல் செவ்வாய் கொஞ்சம் ஊஞ்சல் போல முன்னும் பின்னும் swing ஆகி பின்னர் நிலைபெறுகிறது...


கோபர்நிகஸ் -ற்குப் பிறகு இப்போது helio-centrism கூட பொய் என்று ஆகி விட்டது. சூரியன் பிரபஞ்சத்தின் மையம் அல்ல...ஏன்? எதுவுமே பிரபஞ்சத்தின் மையம் அல்ல...

மையம் இல்லாமல் 
வரையப்பட்ட வட்டம் 
பிரபஞ்சம் 

என்று ஹைக்கூ வேண்டுமானால் எழுதலாம்...


 ஓஷோ ஜோக்...

முல்லா மிகவும் சோம்பேறி...சாக்ஸை துவைக்கவே மாட்டார்....ஒருநாள் அவர் நண்பர் ஒருவர் , "இதப் பாரு முல்லா, நாளைக்கு ஒரு பார்ட்டி இருக்கு...பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க..அதுக்கு நாமளும் போகணும்....கண்டிப்பா சாக்ஸை மாத்தாம வந்துராதே...வேற சாக்ஸ் மாத்திக்கிட்டு வா" என்று பல முறை எடுத்து சொன்னார்...

மறுநாள் பார்ட்டி...முல்லா வந்து அமர்ந்தார்...சிறிது நேரத்திலேயே எல்லாரும் மூக்கை பிடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்....எரிச்சல் அடைந்த நண்பர், முல்லாவிடம் திரும்பி "முல்லா, நான் சாக்ஸை மாத்து மாத்துன்னு  எத்தனை முறை சொன்னேன்?" என்றார்...

முல்லா "மாத்துனேன் பா....இதை சொன்னா நம்ப மாட்டேன்னு தான் பாரு  அந்த பழைய சாக்ஸை கோட்டு பாக்கெட்டில் போட்டு கொண்டு 
வந்திருக்கேன் பாரு" என்றார்...

சமுத்ரா 




6 comments:

G.M Balasubramaniam said...


தரம் பற்றிய அடிப்படைச் செய்திகளை நான் எளிதில் (?) விளங்குமாறு எழுதி இருக்கிறேன். படித்திருக்கிறீர்களா? (பழைய பதிவு.)கடவுள் நம்பிக்கை என்றெல்லாம் எழுதி இருக்கிறேன். அதன் சாராம்சங்கள் உங்கள் பதிவில் காணும்போது, கேள்வி கேட்க நினைக்கும் பலரும் இருக்கிறார்கள்(பதிவுலகில்) என்று அறிவதில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

thanks.. pala thagavalkal

Suresh

Unknown said...

Really interesting...

Unknown said...

Really interesting...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மிகப் பெரிய பதிவு நல்ல விளக்கங்கள். அரசு பள்ளிகளில் 6-8 வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி முறை என்ற ஒன்று பின்பற்றப் படுகிறது. அதில் பாடங்களுக்கேற்ற Mind Map வரைவது ஒரு பகுதி. அரசு பள்ளிகளில் மட்டுமே இவை நடை முறையில் உள்ளது.