இந்த வலையில் தேடவும்

Thursday, December 6, 2012

கலைடாஸ்கோப்-79

லைடாஸ்கோப்-79 உங்களை வரவேற்கிறது.

 
 மீபத்தில் தீவிரவாதி ஒருவனுக்கு இந்தியா தூக்கு தண்டனை அளித்தது. (அருமையான தீர்ப்பு! நியாயம் நீதி வென்றது! சத்தியத்தின் (?) வெற்றி, பாவத்தின் சம்பளம் என்றெல்லாம் உணர்ச்சி பொங்க நம் மக்கள் வழக்கம் போல ஆன்லைனில் கருத்து சொல்லிவிட்டு சூப்பர் சிங்கர் பார்க்கப்போய்  விட்டார்கள்.) சமீபத்திய திரைப்படம் ஒன்றில் ஹீரோ தீவிரவாதியின் கப்பலுக்கு கிளைமாக்ஸில் குண்டு வைக்கிறார். அதாவது தீவிரவாதி கொலை செய்தால் நாமும் அவனை கொலை செய்கிறோம்.தீவிரவாதி குண்டு வைத்தால் நாமும் அவனுக்கு குண்டு வைக்கிறோம் என்றாகிறது . 

திரைப்படங்கள் , தீவிரவாதியை அல்லது ஸ்லீப்பர்-செல்களை நடுரோட்டில் நாய் மாதிரி சுட்டு வீழ்த்தினாலும் தவறு இல்லை என்று சொல்லாமல் சொல்கின்றன.ஏனென்றால் சுடுபவன் நல்லவன்.. சுடப்படுபவன் BAD-BOY !சரி..அப்படியே  Hard feelings உடன் அவர்களை சுட்டு வீழ்த்தினால் தீவிரவாதம் ஒழிந்து விடுமா என்று தெரியவில்லை. திரைப்படங்கள் Commercial நோக்கத்துடன் எடுக்கப்படுபவை. அவை அப்படி தான் இருக்கும். so called நல்லவன்-கெட்டவன் விளையாட்டு. ஹீரோ மெயின் (?!) தீவிரவாதியை சுட்டு விட்டார். எல்லாம் சுபம்..இனிமேல் இந்தியா வல்லரசு ஆகி விடும் என்று சினிமா முடிந்து விடுகிறது... தீவிரவாதி அல்லது தீவிரவாதம் என்பது ஓர் இலை தான் ;அதன் வேர் வேறு எங்கோ இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம் .இலையை பிடுங்கி விட்டால் மரமும் சாய்ந்து விடும் என்று தப்புக் கணக்கு போடுகிறோம்.இது எப்படி இருக்கிறது என்றால் நகச்சுத்து  வந்தால் விரலை வெட்டிவிடு என்பது போல! அறிகுறிகளை (symptom )கவனிக்கும் நாம் அதன் மூல காரணத்தை (Cause )தேட மறந்து விடுகிறோம்...தீவிரவாதத்தின் வேர் எங்கே?(பாகிஸ்தான் என்று சொல்லக் கூடாது ஆமாம்!) அதற்கு எங்கே தண்ணீர் ஊற்றப்படுகிறது என்று ஆராய மறந்து விடுகிறோம்.தீவிரவாதியா அடி அவனை ,கொல்லு அந்த தேசத் துரோகியை என்று கை தட்டி விசில் அடித்து நம் போலியான தேசபக்தியை வெளிப்படுத்திகிறோம்.நம்முடைய இந்த weakness ஐ நன்றாக பயன்படுத்திக் கொண்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன சினிமாக்கள். 

'தீமை விரும்பிகளை அல்லாஹ் விரும்புவதில்லை ; ஒரு சிறந்த முஸ்லிம் என்பவன் முதலில் ஒரு நல்ல மனிதன்' என்றெல்லாம் மனித நேயத்தை வலியுறுத்தும் மதத்தை ஏனோ தீவிரவாதிகளின் மதமாக சித்தரிக்கிறோம்! தீவிரவாதத்தின் விதை மிக மிகச் சிறியது தான் ; அது எங்கு வேண்டுமானாலும் விதைக்கப்படலாம் ..பசி, வேலையின்மை, தீண்டாமை, Rejection என்று எது வேண்டுமானாலும் அதன் விதையாக இருக்கலாம்... சும்மா விளையாட்டுக்கும் ஹாபியாகவும் தீவிரவாதம் யாரும் செய்வதில்லை..எனவே 200 ரூபாய் கொடுத்து தியேட்டருக்கு சென்று ஹீரோ தீவிரவாதியை அடிப்பதைப் பார்த்து கைதட்டுவதை விட பசியால் வாடும் ஒருத்தருக்கு சாப்பாடு வாங்கித் தந்தால் அல்லது அவருக்கு சாப்பாடு நிரந்தரமாகக் கிடைக்க நம்மால் ஆன ஏற்பாடு செய்தால் தீவிரவாதத்தின் விதை ஒன்றை முளைவிடாமல் நசுக்கிய புண்ணியம் நமக்குக் கிடைக்கும்...


'அனஸ்தீசியா' தெரியும்..சினஸ்தீஸியா (Synesthesia) தெரியுமா?   Do You see what I hear, மஞ்சள் சப்தம், இவை எல்லாம் அதனுடன் தொடர்புடையவை. புலன்களுக்கு இடையே ஏற்படும் ஒரு Cross -connection ! ...காது என்றால் கேட்க வேண்டும்...நாக்கு என்றால் ருசிக்க வேண்டும் கண் என்றால் சைட் அடிக்க வேண்டும்.சாரி பார்க்க வேண்டும் என்ற Default வரையறையை மீறி ஒரு புலன் செயல்படும் போது மற்றொரு புலனின் அனுபவத்தையும் (தேவையில்லாமல்) தூண்டுவது தான் சினஸ்தீசியா  என்று சொல்லப்படுகிறது.

'அவளை ஐந்து புலன்களாலும் பார்த்தேன்' என்னும் அபத்தக் கவிதை சினஸ்தீசியா விஷயத்தில் ஓரளவு உண்மை.சுஜாதா, ஒரு கதையில் கண் தெரியாத ஒருவனுக்கு நிறங்களை காதுகளின் அனுபவமாக அதாவது ஸ்வரங்களாக விளக்க முயற்சி செய்திருப்பார்...அங்கே பசுமையான வயல்கள்...பஞ்சமம்...மேலே பரவிக் கிடக்கும் நீலம் ...அது இனிமையான காகலி நிஷாதம்...அடிவானில் சிவப்பு...அது ஆதார சட்ஜம்...என்று..அந்த ஆளுக்கு பார்வை வந்தால் அவனுக்கு நீலக் கலரைப் பார்க்கும் போதெல்லாம் காதில் நிஷாதம் ஒலிக்கும் படி ஒரு cross -connection ஏற்படலாம்.

இந்த விஷயத்தை சயின்ஸ் பிக்ஷன் எழுத்தாளர்கள் ஏகத்துக்கும் கையாண்டிருக்கிறார்கள். இன்னொரு சம்பவம் :ஒரு ஆள் கணக்கே தெரியாமல் கணக்கு போடுகிறான்.எப்படி என்று கேட்டதற்கு எனக்கு ஒவ்வொரு நம்பரும் ஒவ்வொரு வடிவமாகத் (Shape )தெரிகின்றன;அதை வைத்து நான் கணக்கு போடுகிறேன் என்கிறான் . மேலும்,போதை மருந்து  எடுத்துக் கொண்டவர்களுக்கும் வலிப்பு நோய் வருவதற்கு அறிகுறியாகவும் இந்த சினஸ்தீசியா நிகழலாம் என்கிறார்கள்.யாராவது 'எனக்கு கேட்கும் இந்த சத்தம் ரொம்பவே மஞ்சளாக இருக்கிறது' என்றால் உஷார்...ஏதோ டேஞ்சர்!! 

நம் எல்லாருக்கும் மிகச் சிறிய அளவில் இந்த cross connection இயல்பாகவே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட டேபிளில் நாக்கையும் கண்ணையும் பொருத்துங்கள் பார்ப்போம்.

காரம்                - மஞ்சள்
இனிப்பு             - சிவப்பு 
புளிப்பு             -  பச்சை 
கசப்பு              -  பிரௌன் 
உவர்ப்பு           -  நீலம் 


என்னுடைய அனுபவப்படி இப்படி பொருந்துகிறது. அதாவது கண்ணை மூடிக் கொண்டு நாக்கில் அந்த சுவையை நினைத்துக் கொண்டால் தெரியும் கலர்.


காரம்   -  சிவப்பு 
இனிப்பு - நீலம் 
புளிப்பு  -பிரௌன் 
கசப்பு - பச்சை 
உவர்ப்பு -மஞ்சள் 

உருவத்துக்கும் ஒலிக்கும் சம்பந்தம் உண்டு என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.


மேலே உள்ள இரண்டு வடிவங்களில் எது  பூபா? (Bouba ) எது கிக்கி  (kiki ) என்றால் 99% பேர் முதலில் இருப்பது கிக்கி என்றும் இரண்டாவது இருப்பது பூபா என்றும் சொல்வார்களாம். கிக்கி என்று உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அந்த வடிவத்தைப் போல கூர்மையான விளிம்புகளுடன் இருப்பதால்! பூபா என்று சொல்லும்போது வரும் ஒலி மொண்ணையாக ஒலிக்கிறது!


 சில பேர்வழிகள் தொடுதல் உணர்வுக்கும் கலருக்கும் முடிச்சு போடுகிறார்கள்.ஒவ்வொரு விதமான தொடுதலின் போதும் ஒவ்வொரு கலர் கண்ணில் தோன்றுகிறதாம். வெற்றுக் கிரக வாசிகளுக்கு நிறங்களை 'நுகரும்' திறன் இருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்.


இதை வைத்து யாராவது தமிழில் ஒரு பிக்சன் நாவல் எழுதலாமே!!!! :)
 ஹீரோ ஒரு synesthesiac  என்று!

I must follow the people. Am I not their leader?
Benjamin Disraeli

தனித்தனியாக மிக சிறப்பாக Perform செய்யும் சிலர் leader அல்லது manager என்று வரும்போது சொதப்பி விடுவது ஏன் என்று யோசிக்கலாம்.

* A Leader should be a leader to oneself first: நமக்கு நாமே தலைமை வகிப்பது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். நம்மிடம் நமக்கே control இல்லை என்றால் வேலைக்கு ஆகாது. கேண்டீனில் சூடாக வடை போட்டிருப்பார்கள். அதை சாப்பிட்டு வந்து இதை update செய்தால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது என்று நினைக்கையில் நம்மிடமே நமக்கு Determination இல்லை.அதை நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது அபத்தம்.

* We are not leading Sheep: நாம் தலைமை வகிப்பது ஆட்டு மந்தைக்கு அல்ல..மனிதர்களுக்கு..எல்லாரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம். சில பேர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இதை இன்றைக்குள் செய்து முடி என்று ஒருவித commanding வாய்சில் சொன்னால்தான் செய்வார்கள். சில பேர் 'என்னப்பா ,வீட்டில் அப்பாவுக்கு உடம்பு முடியலை என்றாயே, இப்ப பரவா இல்லையா , வாட்ச் புதுசா?உன் ப்ளாகிற்கு இப்ப எத்தனை followers? ..அப்புறம் அந்த weekly report ...என்று மாமன் மச்சான் லெவலுக்கு உறவாடினால்தான் காரியத்தை முடிப்பார்கள்.எனவே ஒரு தலைமையாளனுக்கு யார் யார் எப்படி ?யார் யாரிடம் எப்படி வேலை வாங்குவது என்று தெரிந்திருக்க வேண்டும்...ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்!

* Give them directions...Not Goals: sofware tester ஒருவர் வேலைக்கு புதிதாக சேருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் டீம் லீடர் ஒருவர் "பாருப்பா , இந்த ரிலீசுக்குள்ள நீ 100 bugs file பண்ணனும் " என்று சொன்னால் அது வெறுமனே குறிக்கோளை தருவது.....இந்த மாட்யூலை முதலில் எடுத்துக்க...அதில் நிறைய defects கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் defects ஐ refer பண்ணு.. interface களை தனித்தனியா டெஸ்ட் பண்ணு...backup restore வேலை செய்யுதா பாரு...கொஞ்சம் Regression டெஸ்டிங் பண்ணு என்று இப்படியாக directions கொடுத்தால் அவர்தான் சிறந்த லீடர்.

*Do not change the coins unless absolutely necessary: யார் யாருக்கு என்ன வேலை தர வேண்டும்...இவர் இதனை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே ஒரு visualization தேவை...சும்மா சும்மா மாற்றினால் என்னடா இவன் சரியான planning -கே இல்லை என்று நினைத்துக்  கொள்வார்கள்.... அதே சமயம் தேவைப்படும் பட்சத்தில் assignments ஐ மாற்ற வேண்டும்.. ஒரே வேலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கும் போர் அடித்து விடும்... மேலும் ஒரே வேலையை இரண்டு பேர் செய்தால் இருவரின் திறமையும் அதற்கு மெருகூட்டும்!ஆனால் ஜெயலலிதா மாதிரி வாரம் ஒரு டிபார்ட்மெண்டில் வேலை செய் என்று மாற்றுவது bad leadership !

* Have Plan -B :  ஒரே ஒரு process ஐயோ நபரையோ நம்பி இருக்கக் கூடாது. டீமில் ஒருத்தர் வந்து தாத்தா இறந்து விட்டார் ஒரு நாலு நாள் லீவ் வேண்டும் என்றால் அதற்கு ஒரு alternate plan இருக்க வேண்டும்...time management என்பதும் முக்கியம்.

*Do not micro manage:  ஒருவருக்கு ஒரு task assign செய்து விட்டால் அதை அவர் முடிக்கும் வரை அவர் பொறுப்பில் விட்டுவிடுவது நல்லது. பக்கத்திலேயே போய் உட்கார்ந்து கொள்வதும் ஒரு மணிநேரத்துக்கு ஒருதரம் போய் update கேட்பதும் கேபினில் இருந்து silly -யாக என்ன செய்கிறான் என்று எட்டிப் பார்ப்பதும் bad leadership !!!நமக்கு கீழ் பணி செய்பவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்..அதே சமயம் ஒரு மாயக் கயிற்றினால் அவர்களைப் பிணைத்திருக்கவும் வேண்டும்.

*Involve : நான் ஒரு லீடர்...அல்லது மேனேஜர்...என் பணி உன்னை மேலாண்மை செய்வது மட்டுமே என்று விறைப்பாக இருக்காமல் வேலையில் தானும் பங்கு கொள்ள வேண்டும்....ஒவ்வொரு technical details உம் நுணுக்கமாக தெரியவில்லை என்றாலும் மேலோட்டமாக என்ன நடக்கிறது எந்தெந்த module கள் என்னென்ன செய்கின்றன என்ற broad knowledge முக்கியம். இப்படி நாமே பிரச்சினைகளில் involve ஆகும் போது டீமில் இருப்பவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை பிறக்கிறது.

*Take responsibility : சில பேர் இருக்கிறார்கள்.. டீமுக்கு ஏதேனும் அவார்டு கிவார்டு வந்தால் நாந்தான் இதற்கு லீடர் என்று முன் வரிசையில் பல்லிளித்துக் கொண்டு போஸ் தருவார்கள். அதே, ஏதேனும் தப்பு நிகழ்ந்து விட்டால் அதை அதோ அவன்  தான் செய்தது என்று சுட்டிக் காட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். லீடர் ஒருவருக்கு இருக்கக்கூடாத அல்லது இருக்கவே கூடாத பண்பு இது.தப்பு நிகழ்ந்து விட்டால் அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என்கிற பெருந்தன்மை வேண்டும்...உண்மையில் தப்பு செய்தவன் நான் செய்த தப்புக்கு இன்னொருவர் பொறுப்பு ஏற்கிறாரே என்ற குற்ற உணர்ச்சியில் அந்த தவறை மீண்டும் செய்யவே மாட்டான்...



ரலாற்றை மாற்றக் கூடிய கண்டுபிடுப்புகள் அபூர்வமாகவே நிகழும். மற்றவை எல்லாம் வெறும் நீட்சிகளாகவே (extension )இருக்கும் என்கிறார் ஓர் அறிர். உதாரணமாக டெலிபோன்! அதன் முக்கிய நோக்கம் பேசுவது நெடிய தூரம் தாண்டியும் கேட்க வேண்டும் என்பது. அது முதன்முதலில் கிரகாம் பெல் மூலம் சாத்தியம் ஆன போது உண்மையில் அது மிகப் பெரிய மைல்கல்..அதற்குப் பின் வந்த எஸ்.எம்.எஸ்.  எம்.எம்.எஸ், வாய்ஸ் மெயில் , கால் பார்வேர்ட் , காலர் ஐ.டி. ப்ளா ப்ளா இப்படி எல்லாம் வெறுமனே enhancement features !!!! இப்போது மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான விஷயங்கள் இப்படி enhancement ஆகத் தான் வருகின்றன. ப்ளூ டூத், வை-பை இப்படி ஆயிரத்தெட்டு நீட்சிகள்...காலேஜில் ப்ராஜெக்ட் செய்யும் மாணவர்களும் இப்படிப்பட்ட enhancement -களிலேயே கவனம் செலுத்துகிறார்கள்....மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கேள்வியை தங்களுக்குத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்: நான் வெறும் நீட்சிகளில் கவனம் செலுத்தப் போகிறேனா இல்லை வரலாற்றை திருப்பிப் போடும் கண்டுபிடிப்பை நிகழ்த்தப் போகிறேனா என்று....



பாபர் மசூதி இடிப்பு நாளில் (டிசம்பர் -6) ஒரு கவிதை - வைரமுத்து 


கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப்பட்ட பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்


ஷோ ஜோக்.


ஒரு புவியியல் ஆசிரியை ஒருநாள் மேப்-ரீடிங் வகுப்பிற்குப் பிறகு  மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாள்...


மாணவர்களே, நான் உங்களிடம் லஞ்ச் -இற்கு இன்று நீங்கள் என்னை இங்கிருந்து  23 டிகிரி 45 நிமிடம் வடக்கு அட்ச ரேகையில் மற்றும் 35 டிகிரி 15 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையிலும் சந்தியுங்கள் என்றால் என்னை எங்கே சந்திப்பீர்கள் "? என்று கேட்டாள் .


நீண்ட மௌனத்திற்குப் பிறகு வகுப்பின் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது.

"டீச்சர்,, அப்படியானா நீங்க இன்னிக்கு லஞ்ச்சை தனியாதான் சாப்பிடனும்"


சமுத்ரா 

7 comments:

சுவனப் பிரியன் said...

அருமையான நடுநிலையான பகிர்வு!

Kodeeswaran Duraisamy said...

டிகிரி சரி, நிமிடம் சரியா?

பாகை னு தமிழ்ல இருக்கே!

Tamil Online said...

மிகவும் அருமையான பதிவு.
மிக்க நன்றி.

G.M Balasubramaniam said...


மேலாண்மை (management) பற்றி ஏதேனும் புத்தகம் வெளியிட எண்ணமா.?

Caricaturist Sugumarje said...

மேலாண்மை (management)பாடம் படிப்பது போல இருக்கிறது... ஆனால் இந்தியாவில் இத்தனை எம்பிஏ இருந்தும் நாடு நடுங்கித்தான் வருகிறது...

Jegan said...

ஹாய் சமுத்திர நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன். நிறைய முதிர்ச்சி. வாழ்த்துக்கள். நான் விரும்பி படிக்கும் பொரு சில ப்லோகுகளில் ஒன்று இது. என்னுடைய நபர்கள் பலர் உங்கள் followers.

Arun Prakash said...

//நம் எல்லாருக்கும் மிகச் சிறிய அளவில் இந்த cross connection இயல்பாகவே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.//

உண்ர்வுகள் எல்லாம் subjective...

நீங்களும் நானும் ஒரு ரோஜாவை(பூ) பார்க்கிறோம், எனக்கு(அதே மாதிரி உங்களுக்கும்) உன்மையிலே red'அ தெரியறத சின்ன வயசில இருந்தே rose னு சொல்லியிருந்த, ( because we wouldn't have any idea about colors, we just accepted what we perceive as rose color), நம்ம இரண்டு பேரும் ரோஜாவை(பூ...) rose colorனு தான் சொல்லுவோம்.

எங்கிட்ட காரமான உணவு (காரம் வார்த்தை கேட்டாலும்)கொடுத்தா எனக்கு ரெட் கலர் தான் தோன்றும்.(மிளகாய் ரெட் தான)....இனிப்புனா வ்யிட் (சர்க்கரை)...இது ஒவ்வொருத்தருக்கும் அவுங்க experience அ பொருத்து வேறுபடலாம்...இதுக்கு auditory cortex ம் visual cortex ம் cross connect ஆகல மாறாக ஒருங்கினைக்க படுதுனே தோனுது... it is pure subjective which is impossible to estimate and to compare with others subjective feelings...Thank you