இந்த வலையில் தேடவும்

Monday, September 3, 2012

கலைடாஸ்கோப்-71

லைடாஸ்கோப்-71 உங்களை வரவேற்கிறது.


١
=


If you had to identify, in one word, the reason why the human race has not achieved, and never will achieve, its full potential, that word would be 'meetings.'

Dave Barry


'மனிதன் இன்னும் முன்னேறவில்லை என்பதற்கு இந்த மீட்டிங்குகள் தான் காரணம்' என்கிறார் ஒரு அறிர். ஒரு மேனேஜருடைய டைமில் ஐம்பது சதவிகிதம் மீட்டிங்குகளிலேயே கழிக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது (எந்த ஆய்வு என்று கேட்கப்படாது!). இந்த மீட்டிங்குகள் உண்மையிலேயே தேவை தானா, இவற்றால் ஏதாவது value -add இருக்கிறதா என்பது மேனேஜருக்கே தெரியுமா என்பது சந்தேகம் தான். டீம் மீட்டிங்-கினால் எனக்குத் தெரிந்து என்ன ஒரு நிச்சயமான நன்மை என்றால் சில பேரை இவர்கள் இன்னும் நம் டீமில் தான் இருக்கிறார்களா என்று அவ்வப்போது confirm செய்து கொள்ள அது உதவுகிறது. மேலும் டீம் மீட்டிங் -கின் போது தூக்கம் வராமல் இருக்க எதிர்வரிசை டீம்-மேட்டின் சுடிதாரில் எத்தனை கண்ணாடி சதுரங்கள் இருக்கின்றன என்றும் எண்ணலாம்.

மீட்டிங்- இற்கு சில Suggestion -கள்:

* மீட்டிங் வைக்கவில்லை என்றால் உயிர் போய் விடும் என்று இருந்தால் மட்டும் மீட்டிங் -இற்கு அழையுங்கள். இ-மெயில் இருப்பதால் தனி ஆட்களின் அப்டேட்களை
இ-மெயில் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.

* மீட்டின்-கை எவ்வளவு சுருக்கமாக வைக்க முடியுமோ அவ்வளவு சுருக்கமாக வைத்து முடிக்கவும். அரைமணி நேரத்துக்கு மேலே போகும் மீட்டிங் சிறப்பானதல்ல.ஒரு மணிநேரம் முடிந்த பின்பும் இவர் எதற்கு மீட்டிங்-இற்கு அழைத்தார் என்று மற்றவர்கள் குழம்பும் படி நடந்து கொள்ள வேண்டாம்.

* எந்த மீட்டிங்கிலும் இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். இது தான் சாக்கு என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை தாட்சண்யம் பார்க்காமல் Let's come to the point. we will discuss other things offline என்று மேனேஜர் சொல்லி விட வேண்டும்.

* இன்னும் சில பேர் கல்யாண மண்டபம் போல இரண்டு பேர் மூன்று பேர் கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களையும் கறாராக Please tell your views to everyone என்று கண்டித்து வைக்கவும். சில பேர் மீட்டிங் என்றதும் குஷியுடன் சண்டை போட ரெடியாக வருவார்கள். அவர்களையும் அடக்கி வைப்பது பாவம் மேனேஜராகிய உங்கள் பொறுப்பு.

* மீட்டிங் இற்குப் போகும் முன் என்ன சொல்லப் போகிறோம் எதையெல்லாம் discuss செய்யப் போகிறோம் எதை முதலில் சொல்லப் போகிறோம்
யாரையெல்லாம் திட்டப் போகிறோம் என்று ஒரு Agenda வைத்துக் கொள்வது நல்லது. agenda வில் இல்லாத விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்கவும். கடைசியில் எதற்காக மீட்டிங் ஐ வைத்தோமோ அதை விட்டு விட்டு வேறு எல்லா விஷயங்களையும் பேசி விட்டோமே என்று நினைக்கக் கூடாது.

* டீமில் தேவையானவர்களை மட்டும் மீட்டிங்-இற்கு அழையுங்கள். சிவில் இஞ்சினியர்கள் மீட்டிங்கில் பெயின்ட் அடிப்பவருக்கு என்ன வேலை?

* மீட்டிங்-ஐ சில சுவாரஸ்யமான விஷயங்களுடன் தொடங்குங்கள். அதற்காக சினிமா குத்துப்பாட்டு வீடியோ போட்டுக் காண்பிக்கவும் என்று சொல்ல மாட்டேன். யாருக்காவது சிறப்பாக வேலை செய்ததற்கு அவார்ட் கொடுக்க வேண்டும் என்றால் அதை முதலில் வைத்துக் கொள்ளலாம். டீமுடன் எல்லாரும் வெளியே outing போக வேண்டும் என்றால் அதை முதலில் விவாதிக்கலாம். சலிப்பான விஷயங்களை கடைசியில் வைத்துக் கொள்வது நல்லது. உதாரணம் இந்த வருஷம் சாலரி ஹைக் இல்லை என்பதை முந்திரிக்கொட்டை மாதிரி முதலிலேயே சொல்லி விடக் கூடாது. எல்லாரும் ஆர்வம் இழந்து விடுவார்கள். மீட்டிங் முடிந்து எல்லாரும் கலைந்து செல்லும் போது கூட சொல்லலாம். மேலும். மீட்டிங் வருபவர்களுக்கு சொந்த செலவில் சமோசா டீ வாங்கிக் கொடுக்கலாம்.

* ஒவ்வொரு மீட்டிங்கிலும் ஒருவரை MoM எனப்படும் minutes of meeting எடுக்கச் சொல்வது நல்லது. மீட்டிங்-இல் நடக்கும் விஷயங்களை அப்படியே ரெகார்ட் செய்து கொள்வது போல.இதைப் பார்த்து என்ன என்ன தேவையில்லாத விஷயங்களை அடுத்த முறை தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.


٢
=

லவ் என்பது இப்போது கிட்டத்தட்ட தமிழ் வார்த்தை ஆகி விட்டது. யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டால் நீங்கள் தமிழர் அல்ல என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இதைப் பற்றி இரண்டு விஷயங்கள். ஒன்று காமெடி. இன்னொன்று காமெடி அல்ல.

டி.வி.யில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர்..

ஹலோ வியூயர்ஸ், இன்னிக்கு நீங்க லவ் பண்றப்ப நடந்த காமெடிகளைப் பற்றிப் பேசலாம்.

முதல் காலர்: ஹலோ..

தொகுப்பாளர்:
ஹலோ, உங்க பேர் சொல்லுங்க..

காலர்: நான் ரமேஷ். உங்க ப்ரோக்ராம்மை தொடர்ந்து பார்ப்பேன். ரொம்ப நல்லா இருக்கு.உங்க கூட பேசுனது ரொம்ப சந்தோஷம். என்ன பேசறதுன்னே தெரியலை.

தொகுப்பாளர்: நன்றி.சரி. நீங்க லவ் பண்ணறீங்களா?

[இது வரை நன்றாக பேசிக் கொண்டிருந்த காலர் காலை கட் செய்கிறார்]

சரி. கட் ஆயிருச்சு ....இப்ப ஒரு பாட்டு பார்க்கலாம்.

காலர்: ஹலோ.

தொ: உங்கள் பேர் சொல்லுங்க.

கா: நான் ரவி பேசறேன்.

தொ: யாரையாவது லவ் பண்ணறீங்களா?

கா: ஹலோ..எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆறது.

தொ: ஹா ஹா அப்படின்னா உங்க வொய்ஃபை லவ் பண்ணலாமே?
[கால் கட் ஆகிறது]

லவ்வுன்னா ஏன் எல்லாரும் பயந்துக்கராங்கன்னு தெரியலை. இப்போ இன்னொரு பாட்டு பார்க்கலாம்.அதற்கு முன்னாடி ஒரு குட்டி ப்ரேக்.

காலர்: ஹல்லோ
தொ: ஹலோ யார் பேசறது.
கா: நான் தினேஷ் பேசறேங்க.
தொ: சரி.தினேஷ், நீங்க யாரையாவது லவ் பண்ணறீங்களா?
கா: ஹலோ?
தொ: நீங்க யாரையாவது காதலிக்கி
றீங்கலான்னு கேட்டேன்.
கா: ஆமா.
தொ: அப்ப நீங்க
லவ் பண்றப்ப நடந்த காமெடி எதாச்சும் சொல்லுங்களேன்.
கா: நான் லவ் பண்றதே ஒரு காமெடி தானங்க..

கடைசி பாட்டுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைகிறது.
தமிழனுக்குதான் எத்தனை entertainment-கள் !



*சன் டி.வி யில் நேற்று ஒரு திரைப்படம் வந்தது. வழக்கம் போல வேலை வெட்டி இல்லாத ஒரு இளைர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். மேலும் தன் காதலி வேறு ஒருவனைக் காதலிக்கிறா
ள் என்று தெரிந்தும் கூட அவர்கள் இருவரின் காதலை சேர்த்து வைக்க முனைகிறார். என்ன ஒரு தெய்வீகக் காதல்!

சரி. அந்தத் திரைப்படத்தில் ஏழெட்டு குழந்தைகள் எப்போதும் ஹீரோவை சூழ்ந்து கொண்டு லூட்டி செய்கின்றன. சரி லூட்டி செய்யலாம். குழந்தைகள் என்றால் அப்படித் தான் இருப்பார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் குழந்தைகள் ஹீரோவிடம் 'அங்கிள் உங்களுக்கு லவ் பண்ணவே தெரியலை, அங்கிள், உங்க லவ்வருக்கு என்ன கிப்ட் கொடுத்தீங்க, லவ் யூ சொல்லிட்டீங்களா?உங்க ஆளோட லவ் புட்டுக்கிச்சாம்' என்று காதலில் கரை கண்டது போல அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசுகின்றன. குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் பதினாலு வயது ஆகும் வரை லவ் என்றால் என்ன என்று
தெளிவாகத் தெரியுமா? இப்படி குழந்தைகளை அதிகப்ப்ரசங்கித் தனமாக பேச வைக்கும், நடிக்க வைக்கும் தமிழ் சினிமாக்கள் எப்போது தான் திருந்துமோ தெரியவில்லை.


٣

=

ஒரு ஹைக்கூ...

பரபரப்பான சாலையொன்றில்
மாடு
ரோட்டை கடந்த போது
எனக்கும் வழி கிடைத்தது.



சில பொன்மொழிகள்:

மிக அபத்தமாகத் தோன்றும்
கனவுகளுக்குள்ளும் ஏதோ ஒரு அர்த்தமுள்ள விஷயம் பொதிந்திருக்கிறது -சிக்மன்ட் பிராய்ட்

பல நேரங்களில் நாம் இந்த பூமிக்கு Return டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம் -யாரோ

பெரிய காரியத்தை மோசமாக செய்வதை விட சிறிய காரியத்தை சிறப்பாக செய்வது சிறந்தது -சாக்ரடீஸ்

ஒரு வெற்றியாளனுக்கு முதலில் தோற்றுப்போவதைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்- மால்கம் போர்ப்ஸ்

இந்த பூமியில் வாழ்வது விலையுர்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் நமக்கு ஒவ்வொரு வருடமும் சூரியனைச் சுற்றி இலவச சுற்றுலா கிடைக்கிறது -யாரோ

எனக்கு உயரங்களைப் பார்த்துப் பயம் இல்லை. உயரத்தில் இருந்து விழுவதைப் பற்றித் தான் பயம் - ஜார்ஜ் கார்லின்

பாட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு எப்படியோ ஒரு பாட்டு கிடைத்து விடுகிறது -ஸ்வீடன் பழமொழி

ஒரு காலத்தில் பாவமாக இருந்தவைக
ளெல்லாம் இப்போது நோய்களாக இருக்கின்றன -பில் மாஹெர்

கேக்கை விட மெழுகுவர்த்திக்கு அதிகம் செலவானால் உங்களுக்கு வயதாகி விட்டது என்று அர்த்தம். -யாரோ

٤

=


Paul Kuczynski (உங்கள் வாய்க்கு வந்தபடி படித்துக் கொள்ளவும்) என்பவரின் சித்திரங்கள் பொருள் பொதிந்தவை. சாம்பிளுக்கு சில:

காலம் எப்படி நமக்கான சவக்குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது என்று இந்தப் படம் காட்டுகிறது.


இவருக்கு தன் பூனை மீது அலாதிப் பிரியம்!


சில முட்டாள்கள் ஏணியை எரித்து குளிர் காய்கிறார்கள்!




٥
=

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பார்கள். இந்தக் காலத்தில் கற்றது கடுகளவு கல்லாதது பிரபஞ்ச அளவு என்று சொல்ல வேண்டும்.ஒரு உதாரணம்.விக்கிபீடியா சென்று Random Article என்பதை க்ளிக் செய்துகொண்டே வரவும்.

கீழே உள்ள லிஸ்ட் எனக்குக் கிடைத்தது.

Seoul International Cartoon and Animation Festival
Arabtech Jardaneh
Craig Nevill-Manning
Undertone (advertising company)
Autovía A-231
Barcelona Metro line 13
Krasnosulinsky District
To Live Forever (novel)
Robusta Lionata
alpha-Ketovaleric acid
Frank Knox
Plasmodium garnhami
Patrick Ross
List of placental mammals in Order Artiodactyla
Emprise to Avalon
Hoare logic
Leper War on Kauaʻi
Gilmar Popoca
RADARSAT Constellation
MAC-11
Clostridium formicaceticum


இவையெல்லாம் நான் இதுவரை கேட்டது கூட இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு டாபிக் வரும் வரை விடுவதில்லை என்ற உறுதியுடன் ஒருமணிநேரம் க்ளிக் செய்து கொண்டே இருந்தேன். கடைசியில் தெரிந்த டாபிக் ஒன்று வந்தது . அது என்ன தெரியுமா?
.
..
...
....
Dinner Date ! ஹி ஹி...

நம் அறியாமை எத்தனை பெரிதாக இருக்கிறது! சரி ரொபஸ்டா லியனோடா வையும் கில்மர் பபோகா வையும் நான் எதற்கு அய்யா தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா? உண்மை தான். தெரிந்து கொண்டு ஒரு ---ருக்கும் பிரயோஜனம் இல்லை. நண்பர்களுடன் பேசும் போது ஹோயர் லாஜிக் படி இது தப்பு , பிரான்சிஸ் பெக்கன் என்ன சொல்கிறார் என்றால்... என்று அடிக்கடி பீலா விடலாம். ஆனால் பிறகு உங்கள் நண்பர்கள் உங்களை வேற்றுக் கிரக ஜீவி போல பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். நண்பர்களுடன் இன்று காலையில் காண்டீனில் பார்த்த பெண்ணைப் பற்றியோ , இந்த கார் எத்தனை மைலேஜ் கொடுக்கிறது என்பதைப் பற்றியோ தான் பேச வேண்டும். நம்முடைய அறிவு வட்டம் எத்தனை குறுகியதாக இருக்கிறது! :(

٦
=

ஒரு இசைக் கலைன் காதல் கவிதை எழுதினால் இப்படித்தான் எழுதுவானோ?

-எனக்குப்
பிடித்த ஸ்வரம் நீ!


-மோகனத்துக்கு
நீ இல்லை.
என் மோகனாவைப் பார்த்த நொடியில்
இருந்து நானே இல்லை!


-வீணையை தூக்கி செல்வது
கஷ்டமாம்.-நீ
உன் தொண்டையை எப்படி
அனாயாசமாய் சுமந்து செல்கிறாய்?


-உன் குரலை கேட்கையில்
வீணை
காற்று வாத்தியமோ என்று
சந்தேகம் வருகிறது.

-நீ
ஆஹிரி பாடுகையில் என்
காதுக்கு
கல்யாண சாப்பாடு கிடைத்தது!


-உன்னைப் பார்த்ததும்
காதல் வருகிறதே
உன் பெயர் சஹானாவோ?


-ஒரு
தென்றலே
மலயமாருதம் பாடுகிறதே!?


(இதுக்குதான் சங்கீதம் கத்துக்கப் போன எடத்துல கார்த்திக் மாதிரி சைட் அடிக்கக் கூடாதுங்கறது! )

٧

=

ஒரு ஓஷோ அடல்ட் ஜோக்.
ஆச்சாரமானவர்கள் யாரும் இல்லாத போது படித்துக்கொள்க.


ஒருத்தன் வியாபார விஷயமாக தூரதேசம் ஒன்றுக்குப் போனா
ன். ஆனால் அங்கே பெண்களே யாரும் இல்லை. அவன் க்ளப் ஒன்றுக்கு சென்று அங்கிருந்த கௌ- பாய்ஸிடம் 'எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்?' என்று கேட்டான். அதுவா? என்ன செய்வது? அங்கே இங்கே மேய்ந்து கொண்டிருக்கும் குதிரை, மாடு, ஆடு இதையெல்லாம் வைத்துக் கொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது தான் என்றார்கள்.

இவன் மறுநாளே ஒரு அழகான பிங்க் கலர் பன்றியுடன் பாருக்குள் நுழைந்து எனக்கு ஒரு ஸ்காட்ச், மற்றும் என் புதிய அழகான பிங்க் கேர்ள் பிரண்டுக்கு ஒரு குவார்டர் என்று ஆர்டர் செய்தான். சற்று நேரம் அங்கே பலத்த மௌனம் நிலவியது. பிறகு பத்துபதினைந்து பேர் அவனை சூழ்ந்து கொண்டு துப்பாக்கி முனையில் 'ஹான்ட்ஸ் அப்' என்றார்கள்.

இவன் அப்பாவியாக 'நீங்கள் தானே ஏதோ ஒரு துணையை தேடிக் கொள்ளுங்கள்' என்று சொன்னீர்கள் ?' என்றான்.

அதற்கு அவர்கள் 'துணையை தேடிக் கொள் என்று தான் சொன்னோம். இப்போது நீ தள்ளிக் கொண்டு வந்திருப்பது எங்கள் சேர்மனின் மனைவி' என்றார்கள்.

சமுத்ரா

20 comments:

VENTURER said...

நான் தங்களின் வல்யூடத்தை சிறிது நாளாக தான் படித்து வருகிறேன். எனக்கு புத்தகம் அல்லது அதிகம் படிக்கும் பழக்கம் கிடையாது என்றாலும், செவிச்செல்வம் எனக்கு பிடித்த விஷயம். உங்களுடைய எழுத்துக்கள் சுவாரஸ்யமாகவும் எளிதில் புரியும்படியும் இருப்பது நான் மிகவும் வரவேற்கிறேன்.

MATHI said...

Interesting

MARI The Great said...

எப்போதும் செவிக்கு விருந்தளிக்கும் உங்கள் எழுத்துக்கு நன்றி, பதிவை முழுமையாக படித்துவிட்டு மீண்டும் வருவேன்! :)

Sathish Murugan . said...

Hi,
This is the first time I am visiting your blog. I got your blog id from this week issue of Anantha vikadan...They mentioned like,all of your post's are really good. So thought to look your blog..

Its really Awesome. I'm fond of reading.. Not any particular topic...

Your blog is having mixing of posts in so many topics.. This is what imprssed me first...

I know, you have to put so much of effort for each post.. For collecting the information..Presenting in a attractive way.. Finding and attaching pictures for the post, etc..etc..

Magazines, Newspapers also doing the same work..But they are getting benefit in the form of money.. Without expecting any benefit ( I didn't see any ad in your blog) you are doing a great contribution...

Tons of thanks for your efforts and time...

வவ்வால் said...

சமுத்திரா,

வழக்கம் போலவே இருக்கு!

நீங்க தேடின ரேண்டம் ஆர்ட்டிகிளில் 3-4 போல நான் கேள்விப்பட்டது இருக்கு.


ஹி..ஹி அப்போ நான் கொஞ்சம் தேறிடுவேன் போல :-))

பார்சிலோனா மெட்ரோ லைன் கூட நான் மெட்ரோ டிரெயின் சம்பந்தமா பதிவு போடும் போது படிச்சுட்டேன், உலகத்தில் இருக்க எல்லா மெட்ரோ லைன் பத்தியும் அப்போ ஒருப்பார்வைப்பார்த்தேன். விக்கில ஒரே பக்கத்தில இருக்கு.

http://fakeisthenewreal.org/subway/

இந்த தளத்தில் எல்லா மெட்ரோ மேப்பும் இருக்கு.

சியோல் அனிமேஷன் போல இந்தியாவிலும் கொச்சி, அப்புறம் ஃபிக்கி என்ற அமைப்பும் ஆண்டு தோறும் நடத்துது,கடந்தாண்டு ஃபிக்கி அனிமேஷன் ஃபெஸ்டிவல் சீப் கெஸ்ட் கமலஹாசர் தான் சென்னையில் நடந்துச்சு. வான்கூவர் லவும் நடக்குது, எல்லாம் மெயில் சப்ஸ்கிரப்ஷனில் வருது :-))

நீங்க செய்திகள் அதிகம் கவனிப்பதில்லைனு நினைக்கிறேன்.

bandhu said...

நீங்க தான் உங்க சப்ஜெக்ட் கோவேராஜின் வீச்சில் பயமுறுத்துகிறீர்கள் என்றால் வவ்வாலும் அவர் பங்குக்கு பயமுறுத்துகிறார், என்ன சொல்வது?

வழக்கம் போல் அசத்துகிறீர்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஆலோசைனைகள்...

பொன்மொழிகள் சூப்பர்....

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

சமுத்ரா said...

Venturer , mathi , வரலாற்று சுவடுகள் ,bandhu , திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றிகள்.

வவ்வால், I agree ...//நீங்க செய்திகள் அதிகம் கவனிப்பதில்லைனு நினைக்கிறேன்.//
நியூஸ் பேப்பர் படிப்பதே இல்லை. மேலும் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது.தினமலர் மட்டும் ஆன்லைனில் படிப்பேன். ஆங்கில நியூஸ் பேப்பர் என்றால் அப்படியே ஓடி விடுவேன். anyway , உங்கள் விஷய ஞானம் என்னை வியக்க வைக்கிறது.
நன்றி

சமுத்ரா said...

சதீஷ் முருகன், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
விகடன் வரவேற்பறையில் இருந்து வந்தவர்கள் என்னடா இது
விகடனையே திட்டி எழுதி இருக்கிறாரே என்று நினைப்பார்கள் என்று அவசரமாக இன்னொரு கலைடாஸ்கோப் எழுதி விட்டேன் :)
நான் ப்ளாக்கை அனுப்பவில்லை. அவர்களே எடுத்திருப்பார்கள் என்று
நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

Kodees said...

//
பெரிய காரியத்தை மோசமாக செய்வதை விட சிறிய காரியத்தை சிறப்பாக செய்வது சிறந்தது -சாக்ரடீஸ்//

ஆனாக்க வள்ளுவர் 'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேலேந்த லினிது' னு சொல்லியிருக்காரே!

யாரை ஏற்றுக்கொள்வது?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தொகுப்பு.

VELU.G said...

தல என்ன ஆச்சு அஅஅ

சமுத்ரா said...

Kodeeswaran Duraisamy said...வள்ளுவர் பெரிய காரியத்துக்கு AIM செய்வது
சிறந்தது என்கிறார். சாக்ரடீஸ், பெரிய காரியம் ஒன்றை எனக்கு எல்லாம் வரும் என்ற மிதப்பில்
vision இல்லாமல் மோசமாக செய்வதை விட சிறிய செயல்களை சிறப்பாக செய்வது சிறந்தது
என்கிறார்.

சமுத்ரா said...

என்ன ஆச்சு அஅஅ,
Expect soon!

இந்திரபோகன் said...

மீட்டிங் போடுவதைப் பற்றிய நல்ல பதிவு கொடுத்துள்ளீர்கள். humour sense அதிகம் தெரிகிறது தங்கள் எழுத்துக்களில். மதிய உணவு இடைவேளையில் " பல வீட்டுச் சாப்பாடுகளையும் " பகிர்ந்து கொண்டது போல இருக்கிறது கதம்பமான தங்கள் பதிவைப் படித்ததும். அந்த " மாடு சாலையைக் கடக்கும் " ஹைகூவும், " இசைக்கலைஞனின் காதல் கவிதையும் அருமை "

சிவகுமாரன் said...

நாளைக்கு மீட்டிங் இருக்குது ஞாபகப் படுத்தி விட்டீர்கள் .Bye

Anonymous said...

fter study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.

Anonymous said...

I couldn't have really asked for a much better blog. You are always at hand to provide excellent information, going straight away to the point for easy understanding of your subscribers. You're really a terrific pro in this arena. Many thanks for remaining there humans like me.

ammuthalib said...

இங்க எல்லாருக்கும் ஒன்னு விளிக்க விரும்புகிறேன்... இந்த சமுத்ரா என்னோட கலீக் கலீக் கலீக் .. (முதல்வனாய் இரு; அல்லது முதல்வனோடு இரு பிரின்சிபல்)

ஆளு பரம சாது... எழுத்துதான் தீயா இருக்கு... கீப் ராக்கிங்...

Matthew said...

தல என்ன ஆச்சு அஅஅ