இந்த வலையில் தேடவும்

Monday, June 11, 2012

அணு அண்டம் அறிவியல் -68

The Surest Sign That Intelligent Life Exists Elsewhere In The Universe

Is The Fact That It Has Never Tried To Contact Us.



அணு அண்டம் அறிவியல் -68
உங்களை வரவேற்கிறது

அறிவுள்ள வேற்றுகிரக உயிர்களைத் தேடுவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

முதலில்,
அறிவில் வளர்ந்த வேற்றுக் கிரக மனிதர்கள் தங்கள் தொலைத் தொடர்புக்கு லேசரை உபயோகிக்கலாம்.லேசர், செறிவு மிகுந்த மிகக் குறைந்த அலைநீளம் உள்ள ஒளி என்பதால் அதில் நிறைய செய்திகளை PACK செய்து (ஒளி விரிந்து விடாமல்) நிறைய தொலைவுகளுக்கு அனுப்ப முடியும். லேசருடைய மிகக் குறுகலான frequency band இற்கு நம் ரிசீவர்களை டியூன் செய்வது மிகக் கடினம்.மேலும் வேற்றுக் கிரக மனிதர்கள் சில Compression techniques ஐ உபயோகப்படுத்தி செய்திகளை முழுவதும் அனுப்பாமல் packet களாகப் பிரித்து அனுப்பலாம். ஒரே லக்கேஜை வெவ்வேறு ட்ரெயின்களில் பிரித்து அனுப்புவது போல.இது தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் VIRTUAL CONCATENATION எனப்படும் (VCAT) பார்க்க படம்.இப்படிப்பட்ட packet களை நம்மால் உணர முடிந்தாலும் அது அர்த்தமற்ற சத்தம் (NOISE ) போலவே உணரப்படும்.


anyway , நம்மால் ஏன் பிற நாகரீகங்களின் சிக்னல்களை உணர முடிவதில்லை (FERMI PARADOX)என்பதற்கு விடையாக கீழ்க்கண்ட பதில்களை சொல்கிறார்கள்:

FILTER answer :-

வி
ஞ்ஞானம் என்பது ஒரு கற்பக விருட்சம் போன்றது.அதற்குக் கீழே நின்று கொண்டு நல்லதோ கெட்டதோ எது கேட்டாலும் அப்படியே கிடைக்கும். அது போல விஞ்ஞானத்தால் வளர்ந்த நாகரீகங்கள் முட்டாள்தனமாக தங்கள் விஞ்ஞானத்தால் தங்களையே அழித்துக் கொண்டு வழக்கொழிந்து போகும்.

நந்த வனத்திலோர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி !

Socioeconomic answer :

வேற்றுக் கிரக மனிதர்கள் தங்கள் கலாச்சாரத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

Cosmic Zoo answer :

வேற்றுக் கிரக மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு நம்மைப் பற்றி தெரியும். இந்த உலகத்தையே ஒரு ஜூ போல வேடிக்கை பார்க்கிறார்கள்.

Suburbia answer :

வேற்றுக் கிரக மனிதர்கள் இருக்கிறார்கள்; காலக்ஸிகளின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தும் இருக்கிறார்கள்;ஆனால் அவர்கள் பூமியைத் தொடர்பு கொள்வதை மிகவும் சலிப்பான விஷயமாகக் கருதுகிறார்கள்.

Hungarian answer

ஹங்கேரியன்
விஞ்ஞானி லியோ ஜிலார்ட் என்பவரால் இந்த பதில் முன்வைக்கப்பட்டது. வே.கி.வாசிகள் ஏற்கனவே நம் பூமியை அடைந்து ஒற்றர்கள் போல நம்முடன் இருந்து கொண்டு வேவு பார்க்கிறார்கள். ஹங்கேரி நாட்டவர்கள் தான் வேற்றுக் கிரக வாசிகள் என்று அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார். ஹங்கேரி மொழி மற்ற எந்த மொழியுடனும் ஒத்துப் போகாதது இதற்குக் காரணமாக இருக்கலாம்.



The null Answer

பிரபஞ்சத்திலேயே வேறு எங்கும் (நாகரீகமடைந்த) உயிர்கள் இல்லை.எல்லாரும் போய் புள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கவும்.


விண்கலம் 1977 ஆம் ஆண்டு பூமியில் இருந்து ஏவப்பட்டு இப்போது சூரிய மண்டலத்தைத் தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறது. சூரிய மண்டலத்தை துல்லியமாக ஆராயும் நோக்கில் இந்த விண்கலம் ஏவப்பட்டது. எதற்கும் இருக்கட்டும் என்று இந்த விண்கலத்தில்
வெளியுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் VOYAGER GOLDEN RECORD வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மின்காந்தத் தகடு. (கேசட்) இதில் நம் பூமியின் பல்வேறு சிறப்புகள் படங்களாகவும் ஒலிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பூமியின் படங்கள், மனிதர்களின் படங்கள், பல்வேறு ஓசைகள்,மொழிகள், இசைத் துணுக்குகள் etc .தகடில் இடம்பெற்றுள்ள
ன. அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜிம்மி கார்டரின் செய்தி இப்படி சொல்கிறது:

"பிரபஞ்சத்தை நோக்கி இந்த செய்தியை அனுப்புகிறோம். 200 பில்லியன் நட்சத்திரத் தொகுதிகளை நோக்கி ; பிரபஞ்சத்தில் இருக்கும் அறிவார்ந்த நாகரீகங்களில் ஒன்று இந்த செய்தியை அறிந்து கொள்ள முடிந்தால் அவர்களுக்கு எங்கள் செய்தி: நாங்கள் எங்கள் பூமியைக் கடந்தும் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.உங்களுடன் கைகோர்த்து புதிய உலக நாகரீகங்களின் சேர்க்கைக்குத் தயாராக உள்ளோம்"

52 மொழிகளில் வாழ்த்துச் செய்தி இதில் இடம் பெற்றுள்ளது.(தமிழ் இதில் இல்லை) ஹலோ, நாங்கள் தான் பூமியின் குழந்தைகள் ; உங்களை வாழ்த்துகிறோம், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. பிறகு மழை, கடல்,எரிமலை,காற்று, சிம்பான்சி, தவளை, நாய், யானை,குதிரை,திமிங்கலம்,ரயில், இதயத்துடிப்பு, முத்தம் போன்ற சத்தங்கள் இடம்பெற்றுள்ளன.பிறகு உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் இசை இடம் பெற்றுள்ளது.இந்திய இசையில்ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ராகம் பைரவ் (கர்நாடக இசையில் தோடி)இடம்பெற்றுள்ளது.

மேலும் இதில் 116 வெவ்வேறு படங்கள் இடம் பெற்றுள்ளன. பூமி, சூரிய மண்டலம்,மனிதர்கள்,மனித உடல் பாகங்கள்,சீனப் பெருஞ்சுவர், தாஜ்மஹால்,etc .

இதில் இடம்பெற்றுள்ள ஆண் மற்றும் பெண் நிர்வாண ஓவியங்கள் முதலில் 'இது தேவை தானா?' என்ற சர்ச்சையைக் கிளப்பின.ஆனாலும்
மனித உடல் பாகங்களை சரிவர தெரிந்து கொள்ள இவை உதவும் என்ற நோக்கில் இவை இடம்பெற்றுள்ளன. கார்ல் சாகன் முதலில் இரண்டு பேரும் கை கோர்த்துக் கொண்டு இருப்பது போல ரொமான்டிக் ஆக வரையலாம் என்று சொன்னதும் பிற
விஞ்ஞானிகள், அப்படி வரைந்தால் இரண்டும் ஒரே உயிரினம் என்று அவர்கள் தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால் ஆண் பெண் உருவங்கள் தனித்தனியாக வரையப்பட்டன.


தப்பித் தவறி கூட யுத்தம், அணுகுண்டு, சண்டை இவை கேசட்டில் இடம் பெறவில்லை (இன்னொருவரிடம் நம்மை நல்லவர்களாகக் காட்டுவதில் தான் நமக்கு எவ்வளவு ஆர்வம்!)

அடுத்து, வேற்றுக் கிரக உயிர்கள் எப்படி இருக்கும் என்ற விவாதம். ஆங்கிலப் படங்களில் வருவது போன்று மண்டை கொஞ்சம் பெரிதாக பச்சைக் கலர் குள்ள மனிதன் இருப்பானா? வே.கி. உயிர்கள் மனிதனைப் போலவே இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் அவைகளுக்கு

* சுற்றுப்புறத்தை Sense செய்ய கண்கள் போன்ற அமைப்பு. 3D vision
கிடைப்பதற்கு இரண்டு கண்கள் வேண்டும்.

* இடப்பெயர்ச்சி செய்ய கால்கள் போன்ற அமைப்பு. முதுகெலும்பின் அமைப்பைப் பொறுத்து இரண்டு அல்லது நான்கு கால்கள்

* சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொள்ள குரல்.



அடுத்து வே.கி.வாசிகளின் சைஸ் .சயின்ஸ் பிக்ஷன் கதை ஒன்றில் பூமிமனிதர்கள் வேற்றுக் கிரகம் ஒன்றில் லேண்ட் ஆவார்கள்.அங்கே உயிரினங்களே இருக்காது. பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டும் இருக்கும். அதிலெல்லாம்புகுந்து பார்த்து விட்டு யாரும் இல்லை என்று டேக்-ஆப் ஆகி விடுவார்கள்.சிறிது நேரம் கழித்து கட்டிடங்கள் கொஞ்சம் நகர்ந்திருக்கும்! இன்னொரு கதைஒன்றில் வேற்றுக் கிரக உயிரினங்கள் பூமியில் இறங்குவார்கள். அது ஒரு பெரிய கரிய நிறத் தீவு. அதைச் சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைவெள்ளை நிறத் திரவம் இருப்பதைப் பார்ப்பார்கள்.ஹீரோ தன் கண்ணில் ஏதோ உறுத்துகிறது என்று கண்ணைக் கசக்குவார்!

இப்படிப்பட்ட மெகா சைஸ், மற்றும் மினிசைஸ் உயிரினங்கள் இருப்பதைஇயற்பியலின் ஸ்கேல் லா limit செய்கிறது. ஒரு பொருளின் (உயிரியின்)அளவுபத்து மடங்கு அதிகரிக்கும் போது அதன் எடை ஆயிரம் மடங்கு (கன அளவு) அதிகரிக்கும்என்கிறது இந்த விதி.ஆனால் அந்த உயிரியின் சக்தி ,பலம், அளவைப் போன்று நூறு மடங்கு மட்டுமே அதிகரிக்கிறது. எனவே சாதாரண குரங்கை விட கிங்கான்க் குரங்கின் பலம் பத்து மடங்கு குறைவாகவே இருக்கும். கிங் காங் எழுந்து நின்றதும் தன் எடையைத் தானே தாங்க முடியாமல் தொடை எலும்புமுறிந்து கீழே விழுந்து விடும்.மேலும் பெரிய சைஸ் உயிரினங்களில் புவிஈர்ப்பை
எதிர்த்து மூளைக்கு ரத்தத்தை பம்ப் செய்வதும் பிரச்சினை தான் .இதற்குப்பெரிய இதயம் வேண்டும். உயிரியின் மார்புக் கூடில் பெரும்பாலான இடத்தை இதயமே ஆக்கிரமித்து விடும்.(திமிங்கலங்கள் பெரிதாக இருக்கின்றன. அது ஏன்என்றால் தண்ணீர் அவைகளை மேலே தூக்கி விடுகிறது. திமிங்கலங்கள் தரையில் வாழ்ந்தால் அவற்றின் சொந்த இடையே அவைகளை கொன்று விடும்)
இதிலிருந்து அறிவுள்ள வேற்றுக் கிரக உயிரினங்கள் கிட்டத்தட்ட மனிதனின் அளவிலேயே இருக்கும் என்று ஊகிக்கலாம்.

அடுத்து UFO எனப்படும் Unidentified Flying Objects .(
அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்??) சாத்துக்குடி பிழியும் டப்பாவின் மூடி போன்ற ஒரு சமாச்சாரம் வானில் பறந்து வருவது. வேற்றுக் கிரக வாசிகள் தங்கள் வட்ட வடிவ வாகனங்களில் வந்து இறங்கினார்கள் என்ற கட்டுக்கதைகள் காலம் காலமாக பூமியில் வழங்கி வருகின்றன. அவை வெறும்Sensational stories மட்டுமே. ஆனால் அப்படி உண்மையிலேயே UFO க்களை பார்த்தேன் என்றாலும் அவை பெரும்பாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட spacecraft , பலூன்கள் மற்றும் வட்ட வடிவ வண்ணமயமான Lenticular மேகங்கள் மட்டுமே.காரில் பயணிக்கும் போது நம்மைத்தொடரும் வெள்ளிக் கிரகம் கூட சிலசமயம் UFO என்று எடுத்துக்கொள்ளப்படுவதுண்டு,வெப்பநிலை வேறுபாடுகளால் ஏற்படும் காற்றுச் சுழல், கலங்கரை விளக்கங்களின் ஒளி, ரேடார்களின் எதிரொலி, இவையெல்லாம் கூட இருக்கின்றன.எனவே UFO க்களைப் பற்றி ஒரு தெளிவான அறிவியல் பூர்வ கொள்கை இதுவரை இல்லை.

UFO or cloud??



சரி. நட்சத்திரங்களுக்கு இடையேயான அபார தூரம், மற்றும் ஒளியின் எல்லைக்குட்பட்ட வேகம் (C)ஆகியவை நம்முடைய 'வேற்றுக்கிரக' ஆர்வத்துக்கு கடிவாளம் போடுகின்றன.மனிதன் தான் ஏடாகூடமாக சிந்திப்பதில் வல்லவன் ஆயிற்றே? வே.கி. உயிரிகளுடன் தொடர்பு கொள்ள வேறு ஏதாவது வழிமுறைகள் , குறுக்கு வழிகள் இருக்கின்றனவா என்று ஒரு கோஷ்டி சிந்தித்துக் கொண்டு இருக்கிறது. டெலிபதி, ஒளியைவிட வேகம், ஸ்பேசில் குறுக்கு வழிகள் (புழுத்துளைகள்) என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. இவைகள் இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இவற்றின் அறிவியல் சாத்தியக் கூறுகளை அடுத்த சில அத்தியாயங்களில் ஆராய்வோம். வேற்றுக் கிரக ஆர்வத்தை இதோடு முடித்துக் கொள்ளலாம்.


சமுத்ரா

8 comments:

Caricaturist Sugumarje said...

Hi. Your Site (11-06-2012) redirected to uvlavu.com before it loaded. Check it.
You can remove some other gadget scripts... it works bad.

Vadielan R said...

உங்களிடம் ஒரு கேள்வி நண்பா பூமியின் எடை நாளுக்கு நாள் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரிக்குமா அதிகரிக்காது. முதிலில் எல்லாம் சிறு வீடுகள் தான் இப்பொழுது ஒவ்வொரு வீடும் பெரியதாகவும் வானுயுர்ந்த கட்டிடங்களும் உள்ளதால் இந்த கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பதில் சொல்லுங்கள். நன்றி

Vadielan R said...

உங்களிடம் ஒரு கேள்வி நண்பா பூமியின் எடை நாளுக்கு நாள் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரிக்குமா அதிகரிக்காது. முதிலில் எல்லாம் சிறு வீடுகள் தான் இப்பொழுது ஒவ்வொரு வீடும் பெரியதாகவும் வானுயுர்ந்த கட்டிடங்களும் உள்ளதால் இந்த கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பதில் சொல்லுங்கள். நன்றி

சமுத்ரா said...

Vadivelan R. said...,

பூமியின் எடை அதிகரிக்காது.
கட்டிடங்களுக்கான மூலப் பொருட்கள் பூமியில் இருந்தே எடுக்கப்படுவதால்
பூமியின் எடை மாறாமல் இருக்கும். மக்கள் தொகை அதிகரித்தாலும்
பூமியின் எடை மாறாது.மனிதர்களின் உடல் பாகங்கள் பூமியில் இருந்தே
எடுக்கப்படுவதால்.

Tamil CC said...

உங்கள் டொமைன் பிற்பகலில் இருந்து செயற்படவில்லை. samudrasukhi.com

http://samudrasukhi.blogspot.com/ ஊடாகவே வந்தேன்.

Aba said...

வானில் வேற்றுகிரகவாசிகளைக் கண்டறிவதற்கு அவர்களின் சிக்னல் கிடைக்கவேண்டும். சரி. எந்த நாகரீகமாவது பலநூறு ஆண்டுகளுக்கு எல்லாத் திசையிலும் மிகவும் சக்திவாய்ந்த செய்திகளை விட்டியாக அனுப்பிக் கொண்டு இருப்பார்களா? நாம்கூட அப்படிச் செய்வதில்லையே? ஏதோ ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து சில பல நாட்கள் சிக்னல் அனுப்பிவிட்டு பிறகு சொந்த விலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றோம். உதாரணத்துக்கு வேற்றுகிரகவாசிகள் நம் கிரகத்தைக் கண்டறிவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சரியாக சிகள் போய்ச் சேரும் சில நாட்களுக்கு தங்கள் ரிசீவரை ஓபன் பண்ணி நமது கிரகம் நோக்கி இமைவெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த நிகழ்வு எந்தளவு சாத்தியம் குறைவானது என்பது இதிலிருந்தே தெரிகின்றதே?

Mitchellccso said...

Hi. Your Site (11-06-2012) redirected to uvlavu.com before it loaded. Check it. You can remove some other gadget scripts... it works bad.

Anonymous said...

Hi Samudra,

The total mass of the earth seems to be increasing with the debris of meteors - tonnes of such material (incl. the burnt ash) keep reaching earth.

And add to this the rare ones like the Tunguska event and the recent Feb 2013 event in the Russian Ural Mountains - added over time I think this mass addition is not negligible if not substantial related to earth's mass.

Thank You,
Bharath R