கலைடாஸ்கோப்- 81 உங்களை வரவேற்கிறது ..
“Everybody wants to save the Earth; nobody wants to help Mom do the dishes.”― P.J. O'Rourke
21-12-12 அன்று ஒன்றுமே நடக்கவில்லை (not even a jerk!) என்று கொஞ்சம் ஏமாற்றமடைந்த ஜீவன்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்.... பூமி தனக்கு காலண்டர்களைப் பற்றிக் கவலை இல்லை, நான் என் பாட்டுக்கு இருப்பேன் என்று ( ஜோசியர்கள் கணிப்பை பொய்யாக்கி நூறு வயது வரை வாழும் பாட்டியம்மா போல) மறுபடியும் நிரூபித்து விட்டது...வானத்தில் திடீரென்று சிவப்பாக ஒரு புள்ளி தோன்றி படிப்படியாக வளரும்; '2 hours left for us' என்று செய்திச் சானல்கள் அலறும் ...அல்லது வானத்தில் இருந்து வட்ட வடிவ வெளிச்ச வாகனங்களில் பச்சை மனிதர்கள் பலர் தோன்றி நம்மை எல்லாம் லேசர் முனையில் அவர்கள் கிரகங்களுக்குக் கடத்தி செல்வார்கள் என்றெல்லாம் மனதின் ஓரத்தில் ஒரு (அல்ப )எதிர்பார்ப்பு இருந்தது... கடைசியில் 21-12-2012 சுஜாதா சொல்வது போல 'நாளை மற்றொரு நாளே'..பால்கார ஆயா வருவதில் இருந்து பத்து மணி சீரியல் வரை எதிலும் மாற்றம் இல்லை... 22 ஆம் தேதி மறுபடியும் ஆபீஸ் செல்ல படு பேஜாராக இருந்தது...அதே ஆபீஸ்... அதே ஜாவா ஸ்கிரிப்ட்,[Assertion failed at line 727; OSPF neighborship not established...!] அதே மனிதர்கள், அதே முகம், (என்னை சொன்னேன்!) அதே அபத்தங்கள்..உண்டதே உண்டு நித்தம் உடுத்ததே உடுத்து....So boring ....
மாயன் காலண்டருக்கு எதிர்பார்த்ததை விட்டு இனிமேல் 2013 முருகன் படம் போட்ட ராணிமுத்து காலண்டரை எதிர்பார்ப்போம் என்கிறார்
ஆர்.ஜே.பாலாஜியின் BIG FM பேச்சை கேட்டிருக்கிறீர்களா ? Express டிரெயினை முழுங்கியவர் போல பேசுகிறார். சாம்பிளுக்கு ஒன்று:
Fundamentally sorry! :):)
Fundamentally sorry! :):)
..
92.7 BIG FM's BEST OF TAKE IT EASY WITH BALAJI - HEMALATHA PREMALATHA VA VA VA !!! by RJ BALAJI 92.7 BIG FM
பாலாஜியின் Cross talk 100% உண்மையா இல்லை சில ஜோடிக்கப்பட்டவையா என்று தெரியவில்லை...ஏனென்றால் நமக்கு வேலை மெனக்கெட்டு கால் செய்து மூன்று நிமிடங்களுக்கும் மேல் கலாய்க்க இன்று ஆர்.ஜே க்களை விட்டு வேறு யாருக்கும் நேரம் இல்லை... எனவே ஒரு நிமிடம் ஆனாலே நம்முடன் பேசுவது ஒரு ஆர்.ஜே தான் என்று கணித்து விடலாம். ... எனக்கு பாலாஜியின் இரண்டு மூன்று cross-டாக் கேட்டவுடனேயே போர் அடித்துவிட்டது.(இது எனக்கு மட்டுமே உள்ள வியாதியோ?!)

நமக்கு வரும் ஒவ்வொரு அழைப்பையும் நாம் ஏதோ ஒருவித பயத்துடனேயே attend செய்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அது மிக
நெருக்கமான நண்பரின் அழைப்பாகட்டும் காதலியின் அழைப்பாகட்டும் ஒவ்வொரு
அழைப்பும் ஒரு இனம் புரியாத பயத்தையே தாங்கி வருகிறது.
பிடித்த எஸ்.எம்.எஸ்:
Words of wisdom:
Seeing a cockroach on your bed is nothing..! ......The real problem starts when it disappears...
இன்றைய சினிமா , சண்டைக் காட்சிகளில் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. பழைய எம்.ஜி.ஆர். படம் ஒன்றை வாங்கி அதில் வரும் சண்டைக் காட்சியை பாருங்கள்....நல்ல நகைச்சுவையாக இருக்கும்...ஈஸ்ட்மென் கலர்....அதில் பெரும்பாலும் சிவப்புக்கலர் தான் பிரதானமாக இருக்கும்...தொட்டாலே அறுந்துவிடும் கயிறு ஒன்றில் ஈரோயின் பிணைக்கப்பட்டிருப்பார் ..ஹீரோ மஞ்சள் சட்டை சிவப்பு பேன்ட் + பெல்ட் சகிதம் எங்கிருந்தோ வந்து தடாலடி என்ட்ரி கொடுப்பார்..தேவையே இல்லாமல் தகர டிரம்கள் உருளும்... (அது என்ன மண்ணெண்ணெய் ட்ரம்மா ?!) ஈரோயின் வாயில் துணியுடன் பயந்தபடியே போஸ் கொடுப்பார்...இரண்டு பேர் இரண்டு பக்கங்களில் இருந்து ஹீரோவைத் தாக்க வர , அவர் குனிந்து கொள்ள இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மயங்கி (?) விடுவார்கள்..மாடியில் இருந்து ஹீரோ ராட்சச விளக்கின் உதவியுடன் கீழே குதிப்பார்..அல்லது தயாராக ஆலம் விழுது போல ஒரு கயிறு அவருக்காய் காத்திருக்கும்.
இதையெல்லாம் விட சகிக்கவே முடியாத காமெடி என்ன என்றால் காமெடியன்கள் , பெண்கள் முட்டாள் வில்லன்களுடன் சண்டை போடுவது, கிச்சு கிச்சு மூட்டுவது.. கடைசியில் டிராயர் அணிந்த போலீஸ் காரர்கள் கடமை தவறாமல் ஸ்பாட்டுக்கு வந்து சேருவார்கள்... சரி இன்றைய சினிமா சண்டைக் காட்சிகள் தொழில்நுட்பத்தில் ஓரளவு improve ஆகி இருக்கிறதே தவிர இந்த அபத்தங்கள் தொடர்கின்றன...எந்திரன் , துப்பாக்கி எதுவுமே இதற்கு விதிவிலக்கு அல்ல...நேற்று சன் .டி .வி யில் ஒரு திரைப்படம்...ஹீரோ வில்லனைப் பார்த்து சீரியசான முகத்துடன் 'நீ அடிச்சாதான் ரத்தம் வருமா? நான் அடிச்சா வராதா? , வரும்...நீ உடைச்சா தான் கை உடையுமா என்று டையலாக் பேசுகிறார்....Childish !! சரி என்னதான் ஆம்னி வேனை பெட்ரோல் டேங்கில் சுட்டாலும் அது வானம் வரை பறந்து வந்தா கீழே விழும்?? திருந்துக்கப்பா...இயல்பான சண்டைக் காட்சிகளை தமிழ் சினிமா எடுக்கவே எடுக்காதா , இல்லை இயல்பான சண்டைக் காட்சி என்பதே ஒரு oxymoron ஆ?

“Why does a woman work ten years to change a man, then complain he's not the man she married?”
― Barbra Streisand
― Barbra Streisand
எல்லா ஆண்களும் இப்படித் தானோ?!
No need to fear a growling bear
Or a dark foreboding stranger.
But all you women on this earth
Beware of one grave danger!
பெண்களே பெண்களே
பயமோ கரடியின் பெருங்குரல் கேட்டு?
அரையிருட்டில் வரும் அன்னியர் கண்டு?
இல்லை இல்லை இவ்வுலகின் பெண்களே-நீர்
அனைவரும் அஞ்ச ஓர் அபாயம் உண்டு
There are many of them in the world,
Different, yet they're all the same.
How often has one said "I love you",
Then next week forgets your name?!
Different, yet they're all the same.
How often has one said "I love you",
Then next week forgets your name?!
ஆண்கள் உலகில் ஆயிரம் உண்டு
அனால் அவர்கள் அனைவரும் ஒன்று
ஒருநாள் நீதான் என் உயிரெலாம் என்பார்
பிறிதொருநாள் உம் பெயரையே மறப்பார்
Where do they get the lines they use?
"Do you come here often?" "Beautiful eyes!"
It may sound good to hear them talk
But we know they're full of lies.
"Do you come here often?" "Beautiful eyes!"
It may sound good to hear them talk
But we know they're full of lies.
எங்கே பிடிப்பார் அவர் எழில்மிகு சொற்களை
என்னவொரு கண்கள் ஆகா இளந்தளிர் கைகள்
கேட்க என்னவோ காதுக்கு இன்பம்
ஆனால் பெண்களே அத்தனையும் பொய்கள் !
Make sure to watch for subtle tricks
Like "Loosen up, have a drink."
You'll know what his true motives are,
If you have the time to think.
Like "Loosen up, have a drink."
You'll know what his true motives are,
If you have the time to think.
தந்திர நரிகள்! தேன்போலும் சொற்கள்!
தளர்த்துவீர் உடையை , அருந்துவீர் பானம்!
அவனது நோக்கம்நீர் அறிந்து கொள்வீரே
கொஞ்சம் சிந்தித்தால் கிடைத்திடும் ஞானம்!
You'd think they'd change as they mature,
Since wisdom comes with age.
But truthfully they never do
Outgrow that youthful stage.
You'd think they'd change as they mature,
Since wisdom comes with age.
But truthfully they never do
Outgrow that youthful stage.
காலம் அவர்களை மாற்றுவதில்லை
வயதும் ஞானம் வழங்குவதில்லை
வாலிபன் என்ன வயோதிகன் என்ன ?
ஆண்கள் என்றும் மாறுவதில்லை
The world would be a better place.
Without men. But still I doubt
That I would be much happier because
"Can't live with them....or without.
Without men. But still I doubt
That I would be much happier because
"Can't live with them....or without.
ஆண்கள் என்பதே இல்லா உலகம்
அருமையாய்த் தான் அழகாய் இருக்கும்
என்ன செய்வது ஆனால் ஆண்கள்
இருந்தாலும் கஷ்டம் இல்லையென்றாலும் !
இன்று மார்கழி-16ஆம் நாள்...மார்கழியில் திருப்பாவை இல்லாமல் எப்படி?
எம்.எல்.வி.பாடுவதைக் கேட்கவும்...ராகம் மோகனம் .
எம்.எல்.வி.பாடுவதைக் கேட்கவும்...ராகம் மோகனம் .
Day 16: Nayaganai Ninra by R Kashyapmahesh
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்
-சாமியிடம் வரம் வாங்குவதற்கு முன் பூசாரியிடம் வாங்குகிறாள் ஆண்டாள். பையன்கள் லேடீஸ் காலேஜ் ஹாஸ்டல் வாட்ச்மேனை முதலில் 'கரெட்' செய்யும் அதே ட்ரிக் !!!இவள் வைகுண்டத்தின் வாட்ச் மேனையே தாஜா செய்கிறாள்... பெருமாள் கோயில்களில் நீங்கள் இந்த இரண்டு பேரை பார்த்திருக்கக் கூடும்...Gateway போல, firewall போல இவர்களைக் கடந்து தான் நாம் அனுப்பும் IP (Intimate prayer )பாக்கெட்டுகள் இறைவனை reach செய்யும்..எனவே எதற்கு வம்பு என்று இவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தான் பெருமாளை தரிசிக்க வேண்டும்.[நம்மில் பெரும்பாலானோர் இந்த இரண்டு பேரையும் கவனிப்பதே இல்லை என்பது வேறு விஷயம்] திருப்பதியிலும் இந்த இரண்டு பேர் இருக்கிறார்கள்... பாலாஜியை பார்க்கவே பதற்றம் என்னும் போது பாவம் இந்த பாடி கார்டை யார் பார்ப்பார்கள்?
இந்த இரண்டு பேர்களையும் கவனித்தால் ஒரு Object overloading நடந்திருப்பது தெரியும்.. அச்சு அசல் விஷ்ணு போலவே இருப்பார்கள்.. 4 கை..சங்கு, சக்கரம் கதை, தாமரை அப்படியே டிட்டோ...ஏனிந்த தத்-ரூபம்?? பெருமாள் சிலருக்கு தன் ரூபத்தை கொடுத்திருக்கிறான்...சிலருக்கு தன் குணத்தை , சிலருக்கு தன் பராக்ரமத்தை..ஆனால் இவையெல்லாம் சேர்ந்து 100% அவனிடம் தான் இருக்குமாம்...அவன் தான் main class...சில derived class கள் அவனது சில property களை inherit செய்யலாம் அவ்வளவே... இந்த பாடி கார்ட்ஸ் -இற்கு ரூபம் லட்சணமாக இருந்தாலும் குணம் இன்னும் தமோ குணம் தான்....மூக்கின் மேல் கோபம்...எனவே, இவர்கள் உருவத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள்,,,,உள்ளே இருப்பவனும் இதே உருவம் தான்...அனால் அவன் எங்களை விட எல்லாவற்றிலும் பரி பூரணன் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்! சரி....ஒரு டவுட்...அரசியல் வாதி ஒருவர் செக்யூரிட்டி வைத்துக் கொள்வது சரி...அவருக்கு தான் தெனாலி கமல் போல நடந்தாலும் பெயம் , நின்றாலும் பெயம், நடந்து வந்து அமர்ந்தாலும் பெயம் ...பகவானுக்கு எதற்கு பாடி கார்ட்ஸ்? பக்தர்களை filter செய்வதற்கா? இல்லையே,,,பாகவதர்களை விட பாவிகளுக்கு தானே பகவானின் தரிசனம் முக்கியம்...! Any comments ????

New year என்றாலே அலர்ஜியாய் இருக்கிறது....மாயன் காலெண்டர் சும்மா டுகாக்கூர் , பூமி காலண்டர் எல்லாம் பார்க்காது என்று கூவியவர்கள் பத்து நாள் கழித்து நியூ இயர் கொண்டாடுவது வேடிக்கையாய் இருக்கிறது... எனிவே , சலிப்பூட்டும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் தேடிக் கொள்ள அல்ப முயற்சிகள் இவை ..இன்று apartment -இல் விடிய விடிய drinks பார்ட்டி , music , ஆண் பெண் பேதம் மறக்க வைக்கும் அத்வைத நடனம் எல்லாம் இருக்கிறது... மண்டைக்கு 400 ரூபாயாம் ...காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு போர்த்திக் கொண்டு , மொபைலை ஆப் செய்து விட்டு தூங்கி விடலாம் என்று இருக்கிறேன்..யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் நியூ இயர் தான்...டிசம்பர் 31 கூட NY தான். இன்று இருக்கும் இந்த நிலைக்கு வர பூமி இன்னும் ஒரு வருடம் சுற்ற வேண்டி இருக்கும்...Why ஜனவரி 1st ??? நீள்வட்டத்துக்கு (சுற்றுப்பாதை) தொடக்கமும் முடிவும் ஏது ?? anyway ,Don't want to sound too pessimistic....ஆப்பி நியூ இயர் 2012 சாரி 2013....
ஓஷோ ஜோக்..
* கோர்ட்டில் ஒரு பெண் "நீதிபதி அவர்களே, எனக்கு டைவர்ஸ் வேண்டும்" என்றாள் அழுதுகொண்டே.
நீதிபதி: " ஏனம்மா?"
பெண்: "எனக்கு என் கணவர் துரோகம் செய்து விட்டார் அய்யா"
நீதிபதி: "அப்படி என்ன துரோகம் செய்தார் என்று சொல்ல முடியுமா?"
பெண்: "எங்களுக்குப் பிறந்த குழந்தைகளில் ஒன்று கூட அவர் மாதிரி இல்லை..."
இன்னொன்று....பல்வேறு புரளிகளை தனக்குள் வைத்துக் கொண்டு பயம் காட்டிய 2012 க்கு இனிதே விடை கொடுப்போம்!
ஒருநாள் பீட்டர் தூங்கி எழுந்த போது பக்கத்தில் படுத்திருந்த தன் மனைவி இறந்து போய் இருப்பதை பார்த்தான்..
பீட்டர் அரக்கப் பறக்க எழுந்து தலைகால் புரியாமல் நாலுகால் பாய்ச்சலில் மாடியில் இருந்து கீழே ஓடி வந்து வேர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்கியபடி வேலைக்காரியை அழைத்தான்..
"மேரி, இங்க ஒடனே ஓடிவா,,,சீக்கிரம்..அவசரம்...ஓடி வா" என்றான்.
ஓடிவந்த வேலைக்காரி "என்னய்யா, இப்ப தான் உள்ள நுழைஞ்சேன் " என்றாள் ...
"அப்பாடா ... இன்னும் பிரேக்பாஸ்ட் பண்ணலையே, இன்னியில் இருந்து டிபனுக்கு இரண்டுக்கு பதில் ஒரு முட்டை அவித்தால் போதும் " என்றான்...
சமுத்ரா...