இந்த வலையில் தேடவும்

Wednesday, June 30, 2010

ஹைக்கூ

ஹைக்கூ என்பது மேலும் சுருக்க முடியாத ஒரு வடிவம். அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்தாலும் அது பொருள் அற்றதாகி விடுகிறது. ஒரு புத்தகம் நூற்றுக்கணக்கான பக்கங்களில் உணர்த்த முடியாத கருத்தை ஹைக்கூ இரண்டே வரிகளில் உணர்த்தி விடுகிறது. - ஓஷோ

ஹைக்கூ கற்பனை அல்ல. அது ஒரு SNAPSHOT. கண்ணில் காணும் நிகழ்ச்சிகளை அப்படியே படம் பிடித்து சொல்வது. ஹைகூவின் கடைசி வரியில் வரும் திருப்பம் அதற்கு மேலும் அழகை தருகிறது. -சுஜாதா

இதையெல்லாம் படித்த பின்னால் எனக்கு ஹைக்கூ எழுத வேண்டும் என்ற ஆசையே விட்டு விட்டது. ( :D) இருந்ததாலும் Try செய்யலாம் என்று நினைத்து எழுதிய சில ஹைக்கூ கள்.

சிக்னலில்
வரிசையாக
வாகனங்கள்...
திடீரென்று
விதியை மீறும் ஒரு சைக்கிள்....

பஸ்சின்
முன் சீட்டில்
குழந்தை முகம்...
ரசிக்க முடியவில்லை
T.V.யில் கிளைமாக்ஸ்...

அதிகாலையில்
FAN ஐ நிறுத்திய பின்

குளிர் இன்னும்
அதிகமாத் தெரிகிறது...

பரபரப்பான ஹோட்டலின்
முன்னே-
எலும்புகளால்
ஆன
ஒரு நாய்...

ஆயிரம்
சூரியன்கள்
இருந்தும்
இருட்டு...
இரவு வானம்....

பட்டாம் பூச்சிக்குத்
தெரியுமா
அதன்
உடலில்
உள்ள வண்ணங்கள் பற்றி?

கோவிலில்
சாமி முன்பு
பக்தி வயப்பட
முயலும் போது
திடீரென
கவனத்தை
ஈர்க்கும்
ஒரு மனித முகம்.......


இன்றைக்கு இது போதும்....

~ samudra sukhi


1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

அனைத்துக் குறுங்கவிதைகளுமே அருமை

நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா