இந்த வலையில் தேடவும்

Friday, July 8, 2016

கலைடாஸ்கோப்-112

கலைடாஸ்கோப்-112 உங்களை வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைடாஸ்கோப்பில் சந்திக்கிறோம்.

காந்தம் என்பது சிறுவயதில் இருந்தே நமக்கு அறிமுகமான ஒன்று. காந்தத்தையும் ,பேப்பரையும், மணல் துகள்களையும் வைத்து பேய் உருவம் நகர்த்தி இருப்போம். மூன்றாம் வகுப்பு அறிவியல் பாடத்திலேயே
காந்தம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன். காந்தம் என்பதற்கான வரையறைகள் circular ஆக இருக்கின்றன. உதாரணமாக, A magnet is a material that possesses magnetism.  Magnetism is a force produced by a magnet. இப்படி.

காந்தவிசை என்பது பிரபஞ்சத்தின் ஆதாரமான விசைகளில் ஒன்று. ஆச்சரியமாக அது மின் விசைக்கு (electrical )இரட்டையாக இருக்கிறது. மின் விசையால் காந்தமும்,காந்தத்தால் மின் விசையும் தோன்றுகின்றன.
இன்று நாம் அனுபவிக்கும் எல்லா luxury யிலும் காந்தம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குவகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. நிலை காந்தங்களை சுற்றி மின் கடத்திகளை அசைக்கும் போது அதில் மின்சாரம் வருகிறது.

மோட்டார் ஒன்றை ஓட விட்டு அதில் ஒரு ஜெனெரேட்டரை இணைத்து அந்த ஜெனெரேட்டரில் இருந்து வரும் பவரை மறுபடியும் அந்த மோட்டாருக்கே கொடுத்து இப்படி இயக்க முடியுமா? இல்லை. ஏன் என்று இன்டர்நெட்டில் படித்துக் கொள்ளுங்கள். அதே போல கீழ்க்கண்ட படத்தில் இருக்கும் வண்டி ஓடாது. troll physics.


ஒரு காந்தத்தை இரண்டாகப் பிளக்கும் போது ஒன்றில் அதன் வட துருவமும் இன்னொன்றில் அதன் தென் துருவமும் சென்று விடுவதில்லை. மாறாக பிளக்கப்பட்ட ஒவ்வொரு துண்டும் N S  N S என்று தனித்தனி காந்தம் ஆகி விடுகிறது. (பூரணத்தைப் பிளந்தால் பூரணம் வருவது போல. i .e ., கொழுக்கட்டை பூரணம் அல்ல) முழுக்க முழுக்க வடதுருவம் மட்டுமே உள்ள , அல்லது தென் துருவம் மட்டுமே உள்ள காந்தம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இதை ஒரு analogy உடன் ஒப்பிடலாம். 100% ஆண் என்றோ 100% பெண் என்றோ யாரும் கிடையாது. after all , ஆண் ஒரு பெண்ணிடம் இருந்தும் பெண் ஓர் ஆணிடம் இருந்தும் பிறப்பதால். இரண்டு துருவங்களும் ஒருவரிடம் இருக்கின்றன.(N மற்றும் S ). முழுக்க முழுக்க ஒரு பெண்ணிடம் இருந்து பிறந்த ஆணை 100% ஆண் என்றும் முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து பிறந்த பெண்ணை 100% பெண் என்றும் சொல்ல முடியும். (Or should it be other way?) ஏவாள் ஒரு ஆணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறாள். ஏசு ஒரு பெண்ணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறார் .
ஏவாள் 100% பெண்ணா? opposite உதாரணம் இந்து மதத்தில் கிடைக்கிறது. பிரம்மா முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து மட்டுமே தோன்றுகிறார். (அவர் தான் 100%ஆணா ?) சீதை முழுக்க முழுக்க அம்மாவிடம் (பூமி) இருந்து பிறக்கிறாள். 

செக்ஸ் என்னதான் fascinating  ஆக இருந்தாலும் இந்த இரண்டு பேரிடமும் இரண்டு துருவங்களும் இருப்பதால் சீக்கிரமே சலித்தும் விடுகிறது. It's not a sex between N and S; it is between NS - NS . orgasm ஏற்பட்டு சமாச்சாரம் வெளியேறியதும் எல்லாமே சோபை இழந்து  என்னடா இந்தக் கருமத்துக்காகவா இத்தனை ஓட்டம் ஓடினோம் என்று சலிப்புத் தட்டுகிறது. அந்த சமயத்தில் மனிதனின் creativity பன் மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள். creative ஆன சமாச்சாரங்களை ஆரம்பிக்கும் முன் masturbate செய்து விடுங்கள் என்கிறார்கள். (இன்டெர்வியூ வுக்கு போகும் முன்னர் கூட) இதனால் உடல் கொஞ்சம் சோர்வடைந்தாலும் மூளை புத்துணர்வாகும். இத்தனை நேரம் செக்ஸ் சிந்தனைகளுக்கு சென்று கொண்டிருந்த எனெர்ஜி இப்போது கவிதை எழுத உபயோகிக்கப்படும். நிற்க. இன்னும் கூட அர்த்த ராத்திரி சானல்களில் சுய இன்பம் உலகமகா பாவம் என்ற ரேஞ்சில் டுபாக்கூர் டாக்டர்கள் ஓர் அழகிய பிகரை அருகில் அமர்த்திக் கொண்டு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். 'இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்வேன்' என்கிறார் ஒருவர். 'என்னப்பா, வாழ்க்கையா வீணா போச்சே, பொண்டாட்டி உன்னை டைவர்ஸ் பண்ணிருவா ப்ளா ப்ளா  '......ஓகே . back to physics .

முழுக்க முழுக்க ஒரே துருவத்தால் ஆன காந்தத்தை magnetic molopole என்று அழைக்கிறார்கள்.( காந்தத்தின் சகோதரி மின்சாரத்தில் இது எப்போதும் சாத்தியம். முழுக்க முழுக்க + சார்ஜ். அல்லது - சார்ஜ்.)  இது சீதை, ஏவாள், ஜீசஸ், பிரம்மா போல மிகுந்த ஆற்றல் மிக்கது. இன்னொன்றின் கலவையே இல்லை. ஜீஸஸும் ஏவாளும் சந்தித்தோ, பிரம்மாவும் சீதையும் சந்தித்தோ செக்ஸ் வைத்துக் கொண்டால் அது சரித்திரமாக இருக்கும். அந்த காமத் தீயில் அவர்கள் வெந்து ஒன்றும் இல்லாமல் அழிந்தே போய் விடுவார்கள். well , புராணப்படி அவர்களுக்கு அம்மா-மகன் உறவு வருவதால் இது சாத்தியமில்லை. (unless incest fetish) அது போல north molopole ஒன்றும் south molopole ஒன்றும் சந்தித்துக் கொண்டால் ஒன்றை ஒன்று இடம் தெரியாமல் அழித்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் பூமியையே சில வினாடிகளில் துகள் துகளாக வெடித்துச் சிதற வைத்து விடும். உண்மையான காதல், அல்லது காமம் என்பது அழிவு, பேரழிவு என்கிறார்கள் சிந்தனையாளர்கள்.
'காதலில் மரணம் ஏழாம் நிலை' என்று வைரமுத்து சொல்வதாக ஞாபகம். 

'நான்' என்பதன் அழிவு. ஆண், பெண் என்ற அடையாளங்களின் ,துருவங்களின் அழிவு. நம்முடைய அடையாளத்தை உருத்தெரியாமல் முற்றிலும் அழித்து விடும் another half ஐத் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் எல்லாரும் ஆண் பெண் கலந்தவர்கள் என்பதால் அந்த perfect சங்கமத்துக்கு வாய்ப்பே இல்லை. ஒருவரை '9' என்று கேலி செய்யும் முன்னர் இந்த விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மோனோபோல் என்பதை இன்னும் விஞ்ஞானிகள் தேடி வருகிறார்கள். துகள் முடுக்கிகளில். கிராவிட்டான் போல. ஒவ்வொரு 10 ^ 28 துகள்களுக்கு ஒரு துகள் மோனோபோல் ஆக இருக்கலாம் என்கிறார்கள். 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி Blas Cabrera என்பவர் magnetic molo pole ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். (Valentine 's day mono pole )ஆனால் அது equipment malfunction !!

பூமி கூட ஒரு மெகாசைஸ் காந்தம் என்கிறார்கள்.பூமியின் உள்ளகத்தில் இருக்கும் இரும்புக் குழம்புகள் வழியே ஓடும் மின்சாரத்தால் இந்தக் காந்தப்புலம் பூமிக்கு கிடைக்கிறது. காம்பஸ் ஒன்றின் வடதுருவம் பூமியின் வடதுருவத்தைக் காட்டுகிறது. வெயிட், வடக்கும் வடக்கும் ஒன்றை ஒன்று விலக்க வேண்டும் அல்லவா?நாம் உண்மையில் வடதுருவம் என்று அழைப்பது பூமி காந்தத்தின் தென் துருவம். (magnetic south pole ).பூமியின் இந்தக் காந்தப்புலம் நம்மை தீங்கு செய்யும் காஸ்மிக் கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது.பூமியினுடைய geographic south pole பற்றிக் கொஞ்சம் பேசலாம். பூமியின் சாய்வினாலும், வருடத்துக்கு 6 மாதங்கள் சூரிய ஒளி கிடைக்காததாலும் வெண்பனி கொஞ்சநஞ்ச  சூரிய ஒளியையும்  திரும்பப் பிரதிபலித்து விடுவதாலும் , கடல் மட்ட உயரம் காரணமாகவும் south pole மிக மிகக் குளிராக இருக்கிறது. வடதுருவத்தை விட. (வெம்மையில் இருந்து தப்பிக்க உங்கள் வீட்டு மொட்டை மாடி தளத்துக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கவும். வீடு கூலாக இருக்கும்) . ஆறு மாதங்களுக்கு ஒரு முறையே சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் நடக்கின்றன.' நாளை சூரியன் உதிக்க மறந்தாலும் நான் இந்தக் காரியத்தை செய்வேன்' போன்ற 
புராண கால சபதங்களை நாம் துருவங்களில் மேற்கொள்ள இயலாது. மார்ச் முதல் செப்டெம்பர் வரை சூரியன் மறையாமல் தொடுவானிலேயே ரவுண்ட் அடிக்கும். temperature 30 டிகிரிக்கு வந்தாலே சென்னைவாசிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் எல்லாம் தேடுகிறார்கள். தென் துருவத்தில் வெப்பநிலை -89 டிகிரி செல்ஸியஸ் வரை விழுகிறது. எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத அண்டார்டிக் பிரதேசத்தில் இந்நாளில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி  செய்பவர்கள். இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்களை அமைத்துள்ளது. அங்கே என்ன ஆராய்ச்சி என்றால் புவி வெப்பமயமாதல், நுண்ணுயிரி etc மேலும் விண்கல் ஆராய்ச்சி. வெண்பரப்பின் மீது விண்கல் ஏதேனும் விழுந்தால் சுலபமாகப் பார்க்க முடியும்.

விண்கல் என்றதும் ஞாபகம் வருகிறது. பூமி மீது இரவில் தினமும் தீபாவளி நடந்து கொண்டிருக்கிறது. மேலிருந்து விழும் விண்கல் வளிமண்டலத்தில் உராய்ந்து எரிந்து விடுவதால். மற்றபடி ஒன்றிரண்டு எப்படியாவது தப்பித்து விழுந்து விடும். இவை பொதுவாக asteroid belt எனப்படும் பகுதியில் இருந்து விழுகின்றன. நம் நம் சூரிய தேவன் இரண்டு அழகான பெல்ட்-களை அணிந்து கொண்டுள்ளான். ஒன்று செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடைப்பட்ட asteroid belt .இன்னொன்று கிரகங்கள் எல்லாம் முடிந்தபின் கிட்டத்தட்ட 50 AU தொலைவுக்குப் பரவிக்கிடக்கும் 
kuiper belt .இதில் உள்ள புளூட்டோ உட்பட்ட இப்படிப்பட்ட பெரிய பாறைகள் trans neptunian objects என அழைக்கப்படுகின்றன. btw செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே ஒரு கோள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தற்போது மிஸ்ஸிங். அஸ்டிராய்டு பெல்ட்டை அப்படி இருந்து அழிந்து போன ஒரு கிரகத்தின் மீதிகள் என்றும் , கோள் ஆவதற்கு முயற்சி செய்து தோற்றுப்போன கற்கள் என்றும் சொல்கிறார்கள்.Paul Davies என்பவர் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தை ஆக்கிரமித்த ஏலியன்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கிரகத்தை உபயோகித்துவிட்டு பின்னர் வெடிக்கச் செய்திருக்கலாம் என்கிறார்.

topic change 

யூ டியூப்பில் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன.
ஜான் ஜெபராஜ் போன்றோரின் 'சத்தாய் நிஷ்களமாய் ' போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நிற்க. ஸ்தோத்திரம், சுதன்,
கிருபை, மாட்சிமை, ஜபம், பரலோகம், பரிசுத்தம், சகாயம், கர்த்தர்,
பிதா, ரட்சகம் ,மகிமை, பராக்கிரமம், துதி, பலி, ஆசிர்வாதம்,
கீதம், பாக்கியவான், சத்துரு, நாமம், ஜீவன் , விஷேஷம், ஐஸ்வரியம் 
அதிசயம், தரிசனம் ,தயை ,ஆத்துமா ,ஜீவிதம் போன்ற பெரும்பாலும் சமஸ்கிருத வேர் உள்ள சொற்கள் கிறிஸ்துவத்தின் உதவியால் இன்னும் தமிழில் வழங்கிக் கொண்டுள்ளன.

தேவனே என்னை ஆசீர்வதியும் 
ஜீவனுள்ள பிதாவே 
பரலோகப் பிதாவே போன்ற பிரயோகங்கள் பெருமாளுக்கும் பொருந்தும். ஆனால் கேட்டதுமே கிறிஸ்துவ வாசனை வீசிவிடும் சொற்கள்.

.ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறது போல தம்முடைய ஜனங்களை கடாட்சிகிறவரே ¨C ஸ்தோத்திரம்,

போன்ற வினோத வார்த்தைப் பிரயோகங்கள்.


நிற்க.

பேஸ்புக்கில் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை. இந்துவாக இருந்து 
பின்னர் சமீபத்தில் கிறிஸ்துவர் ஆன come live (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் , தன் சுவரில், சர்வலோகப் பிதாவை ஸ்தோத்திரம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பிற மதத்து துர் ஆத்மாக்களை 'பாவிகளே, நீங்கள் கர்த்தரிடத்தில் வரும் வரை உங்களுக்கு மீட்பு இல்லை' என்று நான் டீசண்ட் ஆக சொன்னதை கொஞ்சம் harsh ஆக நிந்தித்து  எழுதிக் குவிக்க இந்துக்கள், முஸ்லிம்கள் இவர்கள் அனல்பறக்கும் கமெண்டுகளை தந்து நமக்கு பொழுது போக வைக்கிறார்கள்.

இந்த மதச் சண்டை புராண காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
வைணவ-  சைவ, சைவ- சமண, சமண- பௌத்த, வைணவ- பௌத்த,
சண்டைகள். அப்போது கிறிஸ்துவம் உள்ளே வரவில்லை போலும். வைணவர்களைக் கேட்டால் ராமானுஜர் சமணர்களை வாதத்தில் வென்று சீடர்கள்  ஆக்கினார் என்பார்கள். சமணர்களைக் கேட்டால் கதை வேறு விதமாக இருக்கும். எது உண்மையான தெய்வம்?
சிவ வாக்கியர் சொல்வதைக் கேளுங்கள் 

“கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
“வெட்டவெளி” தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.. 

கட்டை மட்டையை எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருக்கும் மூடனே என்கிறார்.


கல்யாண்ஜி யின் கவிதைகள் இரண்டு
========================

அடிக்கடி
பார்க்க முடிகிறது யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண் புழுவைப் பார்த்து


காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.

ஓஷோ ஜோக்
===========


அடல்ட் ஒன்லி.

ஸ்பிரோஸ்கி. போலந்து விவசாயி. தன் பண்ணைக்கு ஆள் எடுக்கிறான்.

ஒருவன் வந்து நின்றான். நேர்முகத் தேர்வு ஆரம்பமானது.

"ஏம்ப்பா , நீ மூக்கை எப்படி சிந்துவாய்? பண்ணிக் காட்டு"

அவன் அசூசையாக உணர்ந்தாலும், வேலை கிடைக்க வேண்டும் என்பதால், விரலால் மூக்கை மூடி , பலமான ஒலியெழுப்பி மூக்கை சிந்திக் காட்டினான்.

"உன்னை வேலைக்கு எடுத்துக்கிறேன்" என்றான்.

"அவ்ளோதானா அய்யா? வேற கேள்விகள் எதுவும் இல்லையா?"

"இல்லைப்பா, அவ்ளோதான். ஏன்னா, இதுக்கு முன்னாடி இருந்தவன் தினமும் மூக்கை சிந்தி குட்டி குட்டி பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி என்னோட மனைவி படுக்கையில் போட்டுக் கொண்டிருந்தான்"


சமுத்ரா 
6 comments:

G.M Balasubramaniam said...

நௌ பாக் டொ ஃபிசிக்ஸ்.. ரசித்தேன் . பௌதிகம் இல்லாத சமுத்ராவின் படைப்பா.?இதுவே ஃபேஸ்புக்கில் பல லைக்குகளைப் பெற்றிருக்கும் நான் சென்னை வருகிறேன் வேளச்சேரியில் சந்திக்க முடியுமா விஜயநகர் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 200மீட்டர் தூரம் 100அடி பைபாஸ் ரோடில் சாய் சரோவரில் என் மகன் வீட்டில்17-ம் தேதி காலை பத்து மணி அளவில் சில பதிவர்களும் வருகிறார்கள் வருகை குறித்து மெயில் அனுப்புங்கள் ப்ளீஸ்

விஸ்வநாத் said...

நன்றி. தொடர்ந்து சிந்திக்கவும்/எழுதவும், படிக்கிறோம்.

Anonymous said...

Recently Watched The Wizard of Oz(1939) ...,Remind Me Of "NEURON NADHI"

Often - FB

Once In A While - BLOG

Anyway , GLAD , You Are Back , On BLOG

Can't Wait For
கலைடாஸ்கோப்-113
அணு அண்டம் அறிவியல் -83.

https://couponsrani.in/ said...

அனைவருக்கும் வணக்கம்

புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon

nareshkumar said...

ஏவாளும் சந்தித்தோ, பிரம்மாவும் சீதையும் சந்தித்தோ செக்ஸ் வைத்துக் கொண்டால் அது சரித்திரமாக இருக்கும். அந்த காமத் தீயில் அவர்கள் வெந்து ஒன்றும் இல்லாமல் அழிந்தே போய் விடுவார்கள். well , புராணப்படி அவர்களுக்கு அம்மா-மகன் உறவு வருவதால் இது சாத்தியமில்லை
This is too much அனாகரியமான பேச்சு நாவு அடக்கம் தேவை

Alexa said...

Thank you for sharing us education, please kindly visit mine :D

SITUS JUDI ONLINE RESMI
SITUS POKER ONLINE RESMI
BANDAR POKER ONLINE TERBAIK