இந்த வலையில் தேடவும்

Tuesday, November 29, 2011

கலைடாஸ்கோப் -45

லைடாஸ்கோப் -45 உங்களை வரவேற்கிறது.

ஒன்று
======


Good project management is not so much knowing what to do and when, as knowing what excuses to give and when.

ஒரு மீட்டிங்-கின் போது எங்கள் மேனேஜர் 'I have been managing this project for...' என்று சொல்வதற்குப் பதிலாக 'I have been damaging this project' என்று சொல்லி விட்டார்.உண்மையை சொல்ல வேண்டும் என்று சொன்னாரா இல்லை நாக்கு குழறி விட்டதா தெரியவில்லை.மேனேஜர் -களுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள உறவு மாமியார்-மருமகள் உறவு போல எப்போதும் உராய்வுகள் நிறைந்ததாகவே இருக்கிறது. அவன் தான் சரியில்லை என்று இவனும் இவன் தான் சரியில்லை என்று அவனும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வது!

உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒன்று: இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் மாங்கு மாங்கு என்று தன் வேலையை (மட்டும்)பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். இன்னொன்று, தான் வேலை செய்யாமல் பிறரை நிர்வாகம் மட்டும் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். இந்த இரண்டு வேலைகளில் எது சுலபம் எது கடினம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லுவார்கள். மேனேஜரைக் கேட்டால் பத்து பேரை கட்டி மேய்க்கும் வேலை தான் சவாலானது என்று சொல்வார். தொழிலாளியைக் கேட்டால்
'அவரை ஒருநாள் நாங்கள் செய்யும் வேலையை செய்து பார்க்கச் சொல்லுங்க; அப்ப தான் எங்க கஷ்டம் புரியும்' என்று சொல்வார்கள்.

மேனேஜரைப் பற்றி கேலியாக இப்படி சொல்வார்கள் 'ஒரு பெண் ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற்றால் ஒன்பது பெண்கள் சேர்ந்து ஒரு மாதத்தில் ஒரு குழந்தையைப் பெற முடியும் என்று நினைப்பவர்' ...மேலும், you can relax and take your own time..but make sure that the work is completed before this Friday!?! போன்ற அருமையான அர்த்தம் பொதிந்த வாசகங்களை உதிர்ப்பது மேனேஜர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

ஆனால் நிர்வாகம் செய்வது என்பது ஆடுகளை மேய்ப்பது போல சுலபமான வேலை அல்ல. ஏனென்றால் ஆடுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒன்றுக்குப் பின் ஒன்று வசியம் செய்து விட்டது போல சமர்த்தாக நடக்கும்.ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம், ஒவ்வொருவருக்கும் ஒரு குணம்!மேலும் இப்போதெல்லாம் தினம் பதினாறு மணிநேரம் வேலை வாங்கும் அடிமைமுறை நடைமுறையில் இல்லை. கொஞ்சம் ஏதாவது மாறுதலாக சொல்லிவிட்டாலே மோப்பக் குழையும் அனிச்சம் போல H .R இடம் போட்டுக் கொடுத்து விடுவார்களோ SKIP LEVEL MEETING வைத்து விடுவார்களோ என்று மேனேஜர்களும் இன்று பயப்பட வேண்டி இருக்கிறது.மேனேஜருக்கு கஸ்டமரிடம் பதில் சொல்ல வேண்டும்;திடீரென்று வந்து நாலுநாள் லீவ் கேட்கும் ஆளை Handle செய்ய வேண்டும். அடுத்த ரிலீசுக்கு Resource Management செய்யவேண்டும்;எதிர்பார்க்காமல் வந்து ரிசைன் செய்யும் ஆளுக்கு back -up பிளான் இருக்க வேண்டும்.இப்படி எத்தனையோ!

கடைசியாக : Good project managers know when not to manage a project.


இரண்டு
=========

தனியாக இருக்கும் போது பயமாக இருந்தால் உடனே லாப்-டாப்பை ஆன் செய்து ஏதாவது ஒரு பேய்ப்படம் பார்ப்பது வழக்கம்(?) . it works ! Law of Reverse Effects என்பார்கள். திகில் படம் என்பதற்கான வரையறை காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறி வருகிறது.மிகப் பழைய படங்களில் மண்டை ஓடு, எலும்புக் கூடு இதையெல்லாம் காட்டினால் போதுமானதாக இருந்தது. பிறகு வெள்ளைப்புடவை கட்டிக் கொண்டு வந்தால் போதும் அது தான் பேய் என்று நம்பி எடுக்கப்பட்ட படங்களும் இருந்தன. ஆனால் உண்மையிலியே ஜகன் மோகினியில் வரும் சிவப்புத் தலை வெள்ளை உடல் பேய்கள் கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கும்.

'வா அருகில் வா' பொம்மையைப் பார்த்து விட்டு அடுத்த மூன்று மாதம் ராத்திரியில் உச்சா போக அம்மாவை எழுப்பியது நினைவில் வருகிறது.இப்போதெல்லாம் (பெரும்பாலான) திரைப்படங்களில் ஆவி, பேய், போன்றவை Out -dated concepts ஆகி விட்டன. மக்கள் கற்பனைத் திறன் மிக்க திகில் கதைகளை எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் பார்த்த ஒரு படம்
WRONG TURN ! ஆங்கிலத் திகில் திரைப்படங்களில் பெரும்பாலும் ஒரு ஏழெட்டு பேர் (கல்லூரி மாணவர்கள் குறிப்பாக) ஒரு தனிமையான காடு, மலைப் பிரதேசங்களுக்கு விடுமுறையைக் கழிக்கப் புறப்படுவார்கள். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அந்தப் பருவத்துக்கே உரிய குறும்புகளை செய்து கொண்டு குதூகலமாக இருப்பார்கள். அப்புறம் அங்கே வாழும் ஒரு முகமூடி சைக்கோ கொலைகாரனோ இல்லை மனித மாமிசம் தின்னும் விகாரமான மனிதர்களோ இருப்பார்கள். ஒவ்வொருவராக விதம் விதமாகக் கொலை செய்வார்கள். சில பேரை அப்படியே கத்தி ஒரே துண்டாக தலையை வெட்டி விடும். சில பேர் பாவம். பக்கத்தில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்க கைகால் கட்டி படுக்க வைத்து ஒவ்வொரு சதையாக அறுத்து வறுத்து ருசித்து சாப்பிடுவார்கள்.பக்கத்தில் பசியில் அழும் குழந்தைக்கு வாயில் கட்டைவிரலை வெட்டி சப்ப வைப்பார்கள்.சரி இதற்கு மேல் வேண்டாம். கடைசியில் ஒருத்தரோ இரண்டு பேரோ எப்படியோ அந்த ஆபத்தில் இருந்து தப்பி வெளியே வருவார்கள்.SAW போன்ற திகில் படங்களில் ஒருவரை எத்தனை விதமாக Creative ஆக சாகடிக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்திருப்பார்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு விதத்தில் Cannibal தான் என்று உளவியல் சொல்கிறது .அதாவது மனிதன் உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் தன் இனத்தின் மாமிசத்தை ஒருமுறையாவது சாப்பிட்டு ருசி பார்க்கவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கிறதாம். காதலில் ஈடுபடும் இருவர் LOVE BITE செய்வதும், partner இன் உடம்பை ஈரமாக்குவதும் இந்த ஆழ்மன ஆசையின் வெளிப்பாடுகள் தானாம்.சரி இந்த டாபிக் எனக்கு ஒருமாதிரி இருக்கிறது. முழுதாக முடிக்கக் கூடத் தோன்

மூன்று
=======

விஜய் டி.வி. யின் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா? போட்டியாளர்களில் ஒருவருக்கு ஒரு வார்த்தை கொடுக்கப்படும். அவர் தன்னுடைய பார்ட்னருக்கு தொடர்புடைய ஒற்றை வார்த்தை க்ளூ-க்களைக் கொடுத்து அவரை சரியான விடையை ஊகிக்க வைக்க வேண்டும். கண்டிப்பாக தமிழ் வார்த்தைகளைத் தான் உபயோகிக்க வேண்டும். அவ்வப்போது அந்த நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட காமெடிகள் நடக்கும்.

ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை 'வகுப்பு'. இதற்குத் தொடர்புடைய ஒருசொல் வார்த்தைகளை சொல்லி பதிலை ஊகிக்க வைக்க வேண்டும். அதிக பட்சம் மூன்று க்ளூ!

பெண் 1 : பல்லி (அவர் சொல்ல நினைத்தது பள்ளி!)
பெண் 2 : பூரான் ?
பெண் 1: நடப்பது (பள்ளியில் நடப்பது வகுப்பு)
பெண் 2 : கரப்பான்பூச்சி?
பெண் 1 : புத்தகம்
பெண் 2: புழு (புத்தகப் புழுவாம்!)

நிகழ்ச்சி நடத்துபவர்: இதுக்கு தான் தமிழ்ல ல, ள எல்லாம் சரியா படிச்சுட்டு வரணும்கறது.

சில வார்த்தைகள் நமக்கு இயந்திரத்தனமாக வேறு ஒரு வார்த்தையுடன் இணைப்பைத் தருகின்றன. கடல் என்றால் நம்மில் நிறைய பேர் அடுத்த வார்த்தை அலை என்று தான் சொல்வோம்.இதே போல எதிரெதிரான விஷயங்கள் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. (வார்த்தைகளில்) நண்பன்-எதிரி , இரவு-பகல், வானம்-பூமி, இன்பம்-துன்பம்.

வார்த்தை இணைப்பு என்பதை மூளை பல வழிகளில் செய்கிறது. சில உதாரணங்கள்:

எதுகை : மயில் -குயில்,பட்டி-தொட்டி
மோனை : ஆடி- அமாவாசை,சூடு-சொரணை
உறவு : அம்மா- அப்பா, சித்தி-சித்தப்பா
பாகம் : கடல் - அலை, மரம்-இலை
எதிர்: சிரிப்பு -அழுகை, ஆண்-பெண் ,குண்டு-ஒல்லி
பட்டப்பெயர் : நிழல்கள் -ரவி, வால்டர்- வெற்றிவேல்,வெண்ணிற ஆடை- நிர்மலா
பணி : கடிகாரம்- நேரம், உழவன் -விவசாயம்
உணர்ச்சி : பேய் -பயம், நாய் -நன்றி
உணவு : இட்லி -சாம்பார் , பூரி-கிழங்கு , சரக்கு-ஊறுகாய் (?)

(இன்னும் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்)

இந்த Association பெரும்பாலும் எல்லாருக்கும் இப்படி தான் இருக்கும். ஒருவர் எந்த அளவு நார்மல் என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். உதாரணமாக,டாக்டர் என்று சொன்னால் மருந்து, ஊசி, நர்ஸ்,ஸ்டெதஸ்கோப் இப்படி எதையாவது சொல்ல வேண்டும். சாமியார் என்று சொன்னால் ஆசிரமம், காவி, அருள்வாக்கு, ரஞ்சிதா என்று எதையாவது சொல்ல வேண்டும். டாக்டர் என்றால் கேரம்போர்ட் என்றோ சாமியார் என்றால் டைனோசர் என்றோ சம்பந்தம் இல்லாமல் உளறினால் ஒன்று அவர் ஜோக் செய்ய வேண்டும்.இல்லை Something Wrong !

ஒருவர் ஒரு வார்த்தையை எதனுடன் இணைக்கிறார் என்பதை வைத்துக் கொண்டு அவரை எடை போடமுடியும். உதாரணமாக பொங்கல் என்று சொன்னதும் தை என்றோ தீபாவளி என்றோ சொன்னால் அவர் விழாக்களை விரும்புபவர் என்று ஊகிக்கலாம். அனால் முந்திரிப்பருப்பு என்றோ அன்னபூர்ணா என்றோ சொன்னால் அவர் சரியான தீனிப்பண்டாரம் என்று அர்த்தம்.
சரி அம்மா என்றால் பெரும்பாலும் எல்லாரும் அப்பா என்றோ அன்பு என்றோ பாசம் என்றோ குழந்தை என்றோ சொல்வார்கள். சரிதானே?

என்னது? உங்களுக்கு அம்மா என்றதும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஞாபகம் வருகிறதா? கைகொடுங்கள்..உங்களுக்கு அரசியலில் சேர நேரம் வந்துவிட்டது.

நான்கு
======

சில பேருக்கு சாப்பாடு சூடாக இருந்தால் தான் உள்ளே இறங்கும். எங்கள் சொந்தக்காரர் ஒருத்தர் இருக்கிறார். காபி சுடச்சுட இருக்க வேண்டும் அவருக்கு.நாமெல்லாம் அப்படிக் குடித்தால் நாக்கு வெந்து விடும்! கொஞ்சம் சூடு குறைந்து இருந்தாலும் தயவு பார்க்காமல் தரையில் வீசி விடுவார். சாப்பாடு சூடாக இல்லை என்று ஹோட்டலில் சர்வருடன் சண்டை போடும் சிலரை நாம் பார்த்திருப்போம்.சூடு என்பதை ஏழாவது ருசி என்பார்கள் சிலர்.என்னைப் போன்ற சில பேருக்கு அப்படியே Opposite ! சூடு என்பது உணவின் ருசியை மறைத்து விடுகிறது என்று நம்பும் ரகம்.

மீன்குழம்பு கொதிக்கக் கொதிக்க சாப்பிடுவதை விட நேத்து வைத்த மீன்குழம்பு தான் ருசியாமே? வெஜிடேரியன் என்பதால் இதை சரிபார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.ஆனால் இங்கே பிசிபேளே பாத் என்ற ஒரு சமாச்சாரம் இருக்கிறது.பிசி என்றால் சூடு என்று அர்த்தம். ஆனால் எனக்கு என்னவோ அது ஆறி இருந்தால் தான் மிகவும் ருசிக்கிறது.

ஒரு பெண் தன் கணவனுக்கு தினமும் கீரைக்கறி செய்து போட்டாளாம்.(வறுமை பாவம்!) ஒரு நாள் அவன் கோவித்துக் கொண்டு 'என்னடி தினமும் இந்த கருமம் தானா' என்று அதை அப்படியே சுவரில் தூக்கி எறிந்து விட்டானாம். கோவித்துக் கொண்டு வெளியே போனவன் சாயங்காலம் வயிறு காய்ந்து திரும்பி வந்து 'செவுத்துக் கீரையை வழிச்சுக் கொட்டடி செவுட்டு வெள்ளாட்டி' என்றானாம். ஆம். இந்த அனுபவம் நமக்கும் ஏற்பட்டிருக்கும். காலையில் என்ன இன்னிக்கும் உப்புமா தானா என்று சலித்துக் கொண்டு சாப்பிடாமல் போய் விட்டு சாயம்காலம் திரும்பி வந்து 'அந்த உப்புமா இருந்தா போடேன்' என்று அசடு வழிந்த தருணங்கள் நமக்கு இருந்திருக்கும். சாயங்காலம் உப்புமா ஆறிப்போய் இன்னும் சுவையாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஐந்து
======

சில பேர் 'நான் கடைசி வரையில் ஒரு மாணவனாக கற்றுக் கொண்டே இருக்க விரும்புகிறேன்' என்று சொல்வார்கள். இது எப்போதும் உண்மை இல்லை. சில பேர் உண்மையிலேயே வயதை மறந்து எதையாவது புதிதாகக் கற்றுக் கொண்டே இருப்பார்கள். எங்கள் அத்தை ஒருவருக்கு 75 + வயது ஆகிறது. தினமும் ஒரு கீர்த்தனையாவது மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார் இன்னும். 'பாவயாமி' ல முகாரி பல்லவி மறந்துருச்சு , ஆரபிக்கு நிஷாதம் வருமா என்று எதையாவது ஆர்வக்கோளாறில் கேட்டுக் கொண்டே இருப்பார்.

வயது ஏற ஏற கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.ஒன்று உடல் சார்ந்தது. புத்தகத்தை விரித்தால் கண் சொக்கும். கால் மரத்துப் போய் விடும். முதுகு வலிக்கும் இப்படி. மன ரீதியான காரணம் இதையெல்லாம் படித்து என்ன ஆகப் போகிறது என்ற விரக்தி.என்னோடு படித்த கடைசி ரேங்க் வாங்கியவன் ,எல்லாப் பாடத்திலும் ஃபெயில் ஆனவன் எல்லாம் ஃபாரினில் செட்டில் ஆகி இருக்கும் போது நான் தேவையில்லாமல் Godel's incompleteness theorem , Space time curvature , சங்க இலக்கிய வரலாறு என்றெல்லாம் ஏன் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற விரக்தி. சரி ஒரு கட்டத்துக்கு மேல் எக்ஸாம் ஹாலில் உட்காரவும் முடிவதில்லை.இஞ்சினியரிங்-இல் சுமார் ஐம்பது பேப்பர்களை மூன்று மணிநேரம் உட்கார்ந்து எழுதிய உடம்புக்கு இப்போது பேங்க் எக்ஸாம் -இரண்டு மணிநேரம் உட்கார முடிவதில்லை. ஒருவரை , அவரது திறமைகளை மூன்று மணிநேரம் அவர் உட்கார்ந்து எழுதும் விடைகளை வைத்து எடை போடும் அமைப்பு எனக்குப் பிடிப்பதில்லை.மேலும் இப்படி எல்லாம் கேள்விகள் வந்தால் அதைப் பொறுமையாகப் பிரித்து விடை கண்டுபிடிக்கும் பொறுமையும் இல்லை :-(
எனவே முதல் கேள்விக்கு A எழுதினோமா இதற்கு C எழுதலாம் என்ற ரேஞ்சில் தான் எழுதி விட்டு வந்தேன்.இதையும் மீறி எனக்கு பேங்கில் வேலை கிடைத்தால் அது போன ஜென்மப் புண்ணியமாகத்தான் இருக்கும்.

ஆறு
=====

ஒரு கவிதை :-

தான் இருக்கும் பாத்திரத்தின்
வடிவத்தை எடுத்துக் கொள்ளுமாம் தண்ணீர்- சரிதான்
கீழே ஊற்றியதும்
பிரபஞ்சத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும்
ஆசையில் விரைந்து ஓடுகிறது!

ஏழு
====

|அவசரத்துக்கு வேறு ஜோக் கிடைக்கவில்லை.மன்னிக்கவும்|

ஒருநாள் ஹெல்த் அதிகாரி ஒருவர் விவசாயி ஒருவருக்கு உள்ளாடை அணிவதன் நன்மைகளை விளக்கினார்.

'பாருப்பா , ரெண்டு நன்மை இருக்கு, ஒண்ணு, இது ரொம்ப சுத்தமானது, இன்னொன்னு இது வெதுவெதுப்பா இருக்கும்"

அதிக வற்புறுத்தலுக்குப் பிறகு விவசாயி அதை அணிந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து அவனுக்கு இயற்கையின் அழைப்பு வந்தது. புதர்ப்பக்கம் ஒதுங்கினான்.ஆனால் பழக்கதோஷத்தில் உள்ளாடையைக் கழற்ற மறந்து போய் விட்டான்.

மேட்டர் முடிந்ததும் திரும்பிப் பார்த்தான். 'அட அவரு சொன்னது நெசம் தான் இது உண்மையிலேயே சுத்தமானது' என்று நினைத்துக் கொண்டான்.அப்புறம் தன் ட்ராக்டரில் போய் உட்கார்ந்தான் .இப்போது 'அட அவரு சொன்னது இன்னொன்னும் நெசம் தான்..எவ்வளவு கதகதப்பா இருக்கு' என்றான்.


முத்ரா



18 comments:

SURYAJEEVA said...

பலர் மூக்கால் சுவை அறிபவர்கள்... அவர்களுக்கு சூடாக சாப்பிட்டால் தான் சுவை தெரியும்..
என்னை போல் உள்ள சிலர் நாக்கால் ருசி அறிபவர்கள்.. அவர்களுக்கு ஆரி இருந்தால் தான் சுவை தெரியும்...
கோல்ட் காபி குடிப்பவர்கள் இந்த ரகம்
அது என்ன பழைய கருவாட்டுக் குழம்பு...
பழைய கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டதில்லையோ...

adhvaithan said...

lol.. joke super...

Jayadev Das said...

\\மேனேஜரைக் கேட்டால் பத்து பேரை கட்டி மேய்க்கும் வேலை தான் சவாலானது என்று சொல்வார். தொழிலாளியைக் கேட்டால்
'அவரை ஒருநாள் நாங்கள் செய்யும் வேலையை செய்து பார்க்கச் சொல்லுங்க; அப்ப தான் எங்க கஷ்டம் புரியும்' என்று சொல்வார்கள்.\\ ரெண்டு பிரிவுமே வேணும், அப்பத்தான் வேலை நடக்கும், அவரவருக்கு தான் செய்யும் வேலை எளிது, [அதனால் தானே செய்கிறார்கள்!], மற்றவர்களுக்கு அது கடினமாகத் தோன்றலாம். ஆனால், மேனேஜ் செய்யத் தெரிந்தவர்கள் எண்ணிகையில் குறைவாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது, ஏன்னா அவங்களுக்கு அதனால் தானே சம்பளம் ஜாஸ்தி!

Jayadev Das said...

\\அதாவது மனிதன் உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் தன் இனத்தின் மாமிசத்தை ஒருமுறையாவது சாப்பிட்டு ருசி பார்க்கவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கிறதாம்.\\ உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே..........

\\காதலில் ஈடுபடும் இருவர் LOVE BITE செய்வதும், partner இன் உடம்பை ஈரமாக்குவதும் இந்த ஆழ்மன ஆசையின் வெளிப்பாடுகள் தானாம்.\\ இது இவர்களே கற்பனை செய்து கொண்ட ஆதாரமற்ற புருடா

Jayadev Das said...

\\சூடு என்பதை ஏழாவது ருசி என்பார்கள் சிலர்.\\ நானும் இதே ராகம் தான், அதென்னவோ பெரும்பாலும் சூட இருக்கும் போது சாப்பிட்டா ஒரு மாதிரி, கொஞ்சம் ஆறிப் போனாலும்.. சுவையே மாறிடுது. நீங்க சொன்ன மாதிரி சில விதிவிலக்குகளும் உண்டு.

Mohamed Faaique said...

இஸ்லாம் சொல்கிறது, சூட்டில் பரக்கத் (அபிவிருத்தி, பிரயோசனம்) இல்லை’யென்று..

நானும் பழைய சாப்பாட்டு விரும்பிதான். ஆறிய சாப்பாட்டில் சுவையை ரசித்து சாப்பிடுவது போல் சூடானதில் ரசித்து சாப்பிட முடியவில்லை.

naren said...

//மன ரீதியான காரணம் இதையெல்லாம் படித்து என்ன ஆகப் போகிறது என்ற விரக்தி.என்னோடு படித்த கடைசி ரேங்க் வாங்கியவன் ,எல்லாப் பாடத்திலும் ஃபெயில் ஆனவன் எல்லாம் ஃபாரினில் செட்டில் ஆகி இருக்கும் போது நான் தேவையில்லாமல் Godel's incompleteness theorem , Space time curvature , சங்க இலக்கிய வரலாறு என்றெல்லாம் ஏன் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற விரக்தி.//

என் மன ஒட்டத்தை எப்படி எப்படி சரியாக பதிவு செய்தீர்கள்!!!

Philosophy Prabhakaran said...

முதல் ஐந்து பிரமாதமாக இருந்தது... கவிதையும் ஜோக்கும் சுமார்...

சினிமாவில் A,B,C சென்டர்கள் இருப்பது போல உங்கள் எழுத்துநடை A சென்டருக்கே உரித்தான எழுத்துநடை...

சேலம் தேவா said...

//உங்களுக்கு அம்மா என்றதும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஞாபகம் வருகிறதா? கைகொடுங்கள்..உங்களுக்கு அரசியலில் சேர நேரம் வந்துவிட்டது.//

:) சரியான ஜோக்...

G.M Balasubramaniam said...

எல்லாம் ரசித்தேன்.கவிதை எக்ஸ்ட்ராவாக. குசும்பு கூடிக்கொண்டே போகிறதே. (ரசிக்க வைக்கும் )

நெல்லி. மூர்த்தி said...

”ஒருவரை , அவரது திறமைகளை மூன்று மணிநேரம் அவர் உட்கார்ந்து எழுதும் விடைகளை வைத்து எடை போடும் அமைப்பு எனக்குப் பிடிப்பதில்லை.”

’நச்’சுன்னு சொன்னீங்க... இந்த தேர்வமைப்பு முறை ‘நச்சு’ன்னும் சொன்னீங்க. இக்கருத்தை பலமாக ஆமோதிக்கின்றேன்.

Unknown said...

சூப்பரான எழுத்து நடை, ஒவ்வொரு முறை உங்கள் கலைடாஸ்கோப் படிக்கும் போதும் அருமையாக உள்ளது, சொல்லப்போனால் டெம்ப்ளேட் கமெண்ட் மட்டுமே போட வேண்டி வருமோ என நினைத்தே கமெண்ட் போடாமல் சென்று கொண்டு இருக்கிறேன், ஆனாலும் வேறு வழி இல்லை, அருமை

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

உங்கள் கலைடாஸ்கோப் படிக்கும் போதெல்லாம் எனக்கு சுஜாதா ஞாபகம் தான் வருகிறது.
சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.
Management பற்றி எழுதியவை தினமும் நான் அனுபவித்துக் கொண்டிருப்பவை.
ஒரு வார்த்தை ஒரு லட்சம் நான் தினமும் விரும்பி பார்ப்பது.
முழுக்க தமிழில் பேச தடுமாறுபவர்களை பார்த்து எனக்கு கோபம் வந்து திட்டுவதை என் மனைவியும் மகனும் கேலி செய்கிறார்கள்.

gandhi said...

nAnum Attaikku uNdu,
ungaL ezhuththu nadai migavum siRappAga irukkiRthu !
vAzhththukkaL !!
gandhi35lakshmanan@gmail.com

Anonymous said...

super samudra.

Subash said...

enjoyed everything
:) thx

Radhakrishnan said...

//உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒன்று: இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் மாங்கு மாங்கு என்று தன் வேலையை (மட்டும்)பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். இன்னொன்று, தான் வேலை செய்யாமல் பிறரை நிர்வாகம் மட்டும் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். //

ஹா ஹா! ரொம்பவே சுருக்கிடீங்களே.