இந்த வலையில் தேடவும்

Thursday, January 27, 2011

வார்த்தை பொம்மைகள்!


குழந்தை ஒன்று
பொம்மைகளுடன் விளையாடுவது போல
நான்
வார்த்தைகளுடன் விளையாடுகிறேன்..

தூங்கும் போதும் அது
பொம்மைகளைக் கட்டிக் கொண்டு தூங்குவது போல
நானும்
வார்த்தைகளைக்
கட்டிக் கொண்டு தூங்குகிறேன்..

இரண்டு குழந்தைகள்-
பொம்மைகளை முன்னிறுத்திப் பேசிக் கொள்வதைப்
போல
இறந்து போன
வார்த்தைகளால் உங்களிடம் பேசுகிறேன்..

குழந்தை
பொம்மைகளைக் குளிப்பாட்டி
பொட்டிட்டு
அலங்கரிப்பது போல
நானும் வார்த்தைகளை அலங்கரித்து
ஜாலங்கள் செய்கிறேன்..

பொம்மை தொலைந்தால்
அழுது தவிக்கும் குழந்தை போல
என்
வார்த்தைகள் தொலைந்தால்
வருத்தம் கொள்கிறேன்..

இன்னொரு குழந்தையின் கையில்
இருக்கும்
பொம்மையைப் பார்த்துப்
பொறாமைப்படுவதைப் போல
இன்னொருவரின் வார்த்தைகளில்
பொறாமைப்படுகிறேன்..

முன்னைக் காட்டிலும்
அழகிய பொம்மை கிடைத்தால்
பழையதை மறந்து விடும் குழந்தை போல
பொருத்தமான வார்த்தை கிடைத்ததும்
பழைய வார்த்தையை அழித்து விடுகிறேன்..


போதும்
வார்த்தைகள் என்ற
உயிரற்ற பொம்மைகளுடன் விளையாடியது..

வயது
வந்ததும்
எல்லா பொம்மைகளையும்
தூக்கி எறிந்து விடும் குழந்தை போல
வார்த்தைகளை எறிந்து விட
வாய்ப்பிற்காய்க்
காத்திருக்கிறேன்...


முத்ரா





5 comments:

Chitra said...

"Playing with words....." :-)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த முதிர்ச்சியான கவிதை.

வார்த்தைகளிலிருந்து பொருள் பொதிந்த நிசப்தத்திற்கு என்பது பெரும் தத்துவம்.

அற்புதமான கவிதை சமுத்ரா.வாழ்த்துக்களும் மகிழ்வும்.

Ashok D said...

நல்லாயிருக்குங்க சமுத்ரா :)

gaja said...

This picture belongs to me. I'm glad you like it, but please pay for using it. As you can see, it is watermarked and copyrighted.

It will only cost you a dollar or two, so why use it illegally? http://www.dreamstime.com/sleeping-child-rimage9227165-resi746229

Kavinaya said...

அற்புதம்! எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன இந்த்க் கவிதையில்!