இந்த வலையில் தேடவும்
Thursday, January 27, 2011
கலைடாஸ்கோப்-5
கலைடாஸ்கோப்-5 உங்களை வரவேற்கிறது.
* ஜெர்மனியில் இருந்து கொண்டு கால்பந்து ஆட்டத்தின் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லிக் கொண்டிருந்த 'ஆக்டோபஸ்' இறந்து விட்டதாம். அதற்கு அங்கே ஞாபகார்த்தமாக சிலை எல்லாம் வைத்திருக்கிறார்கள். நம் நாட்டிலும் கிளிகள் காலம் காலமாக ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதற்கு சிலை எல்லாம் வைக்கா விட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அதை ஒரு மனித, சாரி கிளி ஜென்மமாகவாவது நடத்துகிறார்களா என்பதே சந்தேகம் தான்...
* 127 hours பார்த்தேன். மலை ஏறும் ஆசாமி ஒருவரின் கை மேலிருந்து விழுந்த பாறையின் இடுக்கில் நன்றாக மாட்டிக் கொள்கிறது. வெறும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டே மனிதர் 127 மணி நேரங்கள் சமாளிக்கிறார். கடைசியில் கையை அறுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறார்...அருமையான படம்..பாறையில் சிக்கித் தவிக்கும் நரகத் தருணங்களில் தன் பெற்றோரை நினைத்துக் கொள்கிறார்..காதலியை எண்ணி கனவு காண்கிறார். மட்டமான சீனா கத்தியை வாங்காதீர்கள் என்று ஜோக் வேறு அடிக்கிறார்.எல்லாம் சரி,,ஒரு விஷயம் மட்டும் நெருடுகிறது. ஒரு முறை கூட வானத்தைப் பார்த்து "கடவுளே என்னைக் காப்பாற்று" என்று சொல்வதில்லை..அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தந்தை பெரியாராக இருந்தாலும் ஒருமுறை கடவுளை நினைத்துக் கொள்வார்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
* இந்தியா குடியரசு ஆனதற்கும் போக்கிரி படத்தில் விஜய் எதிரிகளை அடித்து ரயில் கம்பிகள் வளைவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..அதே மாதிரி எப்படி எல்லா தமிழ்ப்படங்களிலும் சொல்லி வைத்தமாதிரி 'டீசன்ட்' ஆன ஹீரோயின்கள் எப்படி ரவுடிகள், வேலை இல்லாத பொறுக்கிகள் (கதா பாத்திரத்தை தான் சொன்னேன்) பின்னே லோ லோ என்று அலைகிறார்கள் என்று தெரியவில்லை..
* பெங்களூருவில் போன வாரம் பந்த் நடந்தது...இந்தியத் திருநாட்டில் பந்த் என்றால் சில எழுதப்படாத விதிகள் இருக்கின்றன ...குறைந்தது இரண்டு பஸ்ஸாவது கொளுத்தப்பட வேண்டும், குறைந்தது பத்து பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட வேண்டும் என்றெல்லாம்...வருமானத்தை இழக்க விரும்பாத சில கடைகள் சிவபெருமான் கண் மாதிரி பாதி திறந்தும் பாதி மூடியும் செயல்பட வேண்டும் என்பதும் இதில் அடக்கம்..(இனி மேல் முழு அடைப்பு என்று சொல்லாமல் பாதி அடைப்பு என்று சொன்னால் நன்றாக இருக்கும்) நம் எல்லாரின் உள்ளேயும் வன்முறை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த 'பந்து' கள் அதை வெளிப்படுத்த ஒரு சாக்காக அமைந்து விடுகின்றன..மேலும் வன்முறை என்பது ஒரு தொற்று வியாதி..நீங்கள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது எல்லாரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் போட்டுச் சாத்திக் கொண்டும் இருந்தால் நீங்கள் என்னைப் போல யாராவது அப்பிராணி ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தால் குறைந்த பட்சம் அவன் கன்னத்தில் ஒரு அறை விடுவீர்கள் என்று நான் சொல்ல வில்லை...சைக்காலஜி சொல்கிறது
* டி. வி யில் ஜட்ஜுகளும் , 'மாஸ்டர்களும்' கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது. அவர்களை அங்கேயே நிறுத்தி வைத்து காதலனும் காதலியும் நூறு பேர் பார்க்க ஒன்றாக டான்ஸ் ஆடும் போது என்னென்ன வேதியியல் வினைகள்(?) உள்ளே நிகழும் , எந்த அமிலம் எந்த அமிலமாக மாறும் என்பதை சமன்பாடாக எழுதி ரெண்டு பக்கத்தையும் பாலன்ஸ் செய்து காட்டு என்று கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது
கொஞ்சம் மானேஜ்மென்ட்:
=======================
மானேஜ்மென்ட்டில் 'சிக்ஸ் சிக்மா' என்ற ஒரு தத்துவம் இருக்கிறது. ஒரு கம்பெனியில் 'குவாலிடியை' (QUALITY ) அதிகப்படுத்த அது மெனக்கெடுகிறது.DMAIC (define , Measure , Analise , Improve , Control ) ப்ளாக் பெல்ட், கிரீன் பெல்ட் என்றெல்லாம் என்னென்னவோ சொல்கிறது. ஒரு கம்பெனியில் உள்ள ஒவ்வொருவரும் என்னைப் போல மானேஜருக்குத் தெரியாமல் ப்ளாக் எல்லாம் எழுதாமல் சின்சியராக வேலை செய்தாலே QUALITY தொண்ணூறு சதவிதிதம் உயர்ந்து விடும் என்று தோன்றுகிறது
ஒரு ஓஷோ ஜோக்
================
மிகவும் சீரியஸ் ஆகி விட்டீர்கள்...சரி இப்போது ஒரு ஓஷோ ஜோக்
சுவாமி தேவ கோகனட் ஒருநாள் எம்.ஜி. ரோட்டில் நடந்து கொண்டிருந்த போது ஒரு மாட்டு வண்டி தாக்கி இறந்து விட்டார்..அவர் சொர்கத்துக்குப் போகிறார். ஓர் இடத்தில் நிறைய கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கவே , சொர்கத்தை சுற்றிக் காட்டுபவரிடம் "அவை எல்லாம் என்ன"? என்று கேட்டார்..அதற்கு அவர் " இவை எல்லாம் பாவ கடிகாரங்கள்..உலகில் உள்ள ஒவ்வொருவரும் எந்த ரேட்டில் பாவங்களைச் செய்கிறார்கள் என்பதை இந்த கடிகாரங்களின் முட்கள் நகர்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்..உதாரணமாக போப்பின் கடிகாரம் எழுபது வருடங்களில் இரண்டு நிமிடங்கள் மட்டும் நகர்ந்திருக்கிறது...அன்னை தெரசாவின் கடிகாரம் ஒரு நிமிடம் மட்டும்.." என்றார்..
சுவாமி தேவ கோகனட் ஆர்வமாக "அப்படியானால் ஓஷோவின் கடிகாரம்?" என்றார்..
அதற்கு அவர் "ஓ அது இங்கே இல்லை..அதை ஆபீஸ் ரூமில் டேபிள் ஃபேனாக உபயோகிக்கிறார்கள்"
இனி சமுத்ராவின் ஒரு க(வி)தை (ஹி..ஹி..)
====================================
அவன் சுடுதண்ணீர் காய்ச்சி
பாட்டிலில் நிரப்பிக் கொண்டான்..
டூத் பேஸ்ட், பிரஷ், சோப்பு
எடுத்து வைத்துக் கொண்டான்..
ரப்பர் தலையணை, போர்வை,துண்டு
பேக் செய்தான்..
பயணத்தின் போது படிக்க
புத்தகங்கள், குமுதம், விகடன் மறக்காமல்
சைடு ஜிப்பில் வைத்தான்..
ஐ-பாட் சார்ஜ் செய்து உள்ளே வைத்தான்..
எல்லா விளக்குகளையும்
மறக்காமல் அணைத்தான்..
ஹீட்டரை ஆஃப் செய்தான்...
டி.வியின் கேபிளைத் துண்டித்தான்..
வீட்டைப் பூட்டி சாவியை
பத்திரமாக பர்சின் உள்ளறையில் போட்டான்..
ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தி
ஏறிக் கொண்டான்..
..
..
டிராயரின் மேல் அறையில்
வைத்திருந்த
டிரெயின் டிக்கெட்
அப்படியே இருந்தது...
~சமுத்ரா
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
எப்படி எல்லா தமிழ்ப்படங்களிலும் சொல்லி வைத்தமாதிரி 'டீசன்ட்' ஆன ஹீரோயின்கள் எப்படி ரவுடிகள், வேலை இல்லாத பொறுக்கிகள் (கதா பாத்திரத்தை தான் சொன்னேன்) பின்னே லோ லோ என்று அலைகிறார்கள் என்று தெரியவில்லை..
.... yes.......ரியாலிட்டிக்கு சம்பந்தமே இருக்காது....
//இந்தியா குடியரசு ஆனதற்கும் போக்கிரி படத்தில் விஜய் எதிரிகளை அடித்து ரயில் கம்பிகள் வளைவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..அதே மாதிரி எப்படி எல்லா தமிழ்ப்படங்களிலும் சொல்லி வைத்தமாதிரி 'டீசன்ட்' ஆன ஹீரோயின்கள் எப்படி ரவுடிகள், வேலை இல்லாத பொறுக்கிகள் (கதா பாத்திரத்தை தான் சொன்னேன்) பின்னே லோ லோ என்று அலைகிறார்கள் என்று தெரியவில்லை..//
:)
\\டி. வி யில் ஜட்ஜுகளும் , 'மாஸ்டர்களும்' கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது.///
ஆமாங்க. அந்த சமயத்தில வீட்டுல எல்லோரும் chemistry படிச்ச என்னை நக்கலா பாக்கும் பொது எனக்கு பத்திக்கிட்டு வருமுங்க .
சமுத்ரா நீங்க கேட்ட கவிதை நம்ம வலையில .( மீன் மாட்டுச்சோ இல்லையோ.. கவிதை மாட்டுச்சு )
// இந்தியா குடியரசு ஆனதற்கும் போக்கிரி படத்தில் விஜய் எதிரிகளை அடித்து ரயில் கம்பிகள் வளைவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..அதே மாதிரி எப்படி எல்லா தமிழ்ப்படங்களிலும் சொல்லி வைத்தமாதிரி 'டீசன்ட்' ஆன ஹீரோயின்கள் எப்படி ரவுடிகள், வேலை இல்லாத பொறுக்கிகள் (கதா பாத்திரத்தை தான் சொன்னேன்) பின்னே லோ லோ என்று அலைகிறார்கள் என்று தெரியவில்லை.. //
செம லைன்ஸ்...
:)
உங்கள் பதிவிற்கு நன்றி .நீங்கள் சொன்ன ஓஷோ ஜோக் கேட்டு வயிறு குலுங்கியது
joke superb..
Post a Comment