எப்படியும் விடிந்து விடுகின்றன
இரவுகள்..
இரவுப் பேருந்து ஒன்றின்
பின்சீட்டுப் பயணங்களின் போதும்..
தேர்வு பயத்தில்
விடிய விடிய பாடங்களைப் படிக்கும் போதும்...
துணையுடன்
பின்னிப் பிணைந்து
துயில் கொண்டிருக்கும் போதும்..
எப்படியும் விடிந்து விடுகின்றன
இரவுகள்..
இறந்து கொண்டிருக்கும்
தாத்தாவின்
கட்டில் அருகே அமர்ந்திருக்கும் போதும்
வயிற்று வலியில்
தூங்காது புரண்டு கொண்டிருக்கும் போதும்
மெத்தென்ற படுக்கையில்
உலகம் மறந்து
படுத்திருக்கும் போதும்
எப்படியும் விடிந்து விடுகின்றன
இரவுகள்..
கனவுகளில் மூழ்கி
களித்திருக்கும் போதும்
கணவன் வரவில்லையே
என்று
காத்திருக்கும் போதும்
விடாது அழும்
குழந்தையுடன்
விழித்திருக்கும் போதும்
எப்படியும் விடிந்து விடுகின்றன
இரவுகள்..
சிவராத்திரி என்று
விழித்திருக்கும் போதும்
நண்பர்களுடன் சேர்ந்து
கொட்டமடிக்கும் போதும்
தூக்கமின்றி
தனிமையில் தவிக்கும் போதும்
எப்படியும் விடிந்து விடுகின்றன
இரவுகள்..
~சமுத்ரா
4 comments:
அருமை! வாழ்த்துக்கள்!
எப்படியும் விடிந்து விடுகின்றன
இரவுகள்..
அருமை! வாழ்த்துக்கள்!
மூடிய விழிகள் திறவாதுபோனாலும் கூட... இரவுகள் விடிய மறப்பதில்லை :D
எப்படியும் விடிந்துவிடுகின்றன இரவுகள் !!! Superb :)
மூடிய விழிகள் திறவாதுபோனாலும் கூட... இரவுகள் விடிய மறப்பதில்லை :D
எப்படியும் விடிந்துவிடுகின்றன இரவுகள் !!! Superb :)
Post a Comment