இந்த வலையில் தேடவும்

Wednesday, December 22, 2010

உங்களுக்கு ஒரு Memory டெஸ்ட்!

மனித மூளை என்பது பெரிய ஆச்சரியம் தான். ஒரு செய்யுளை பத்து முறை திரும்பத் திரும்ப சொன்னால் அப்படியே அது மனதில் பதிந்து விடுகிறது இல்லையா ?. உலகில் மிக அபாரமான ஞாபக சக்தி வாய்ந்த மனிதர்களெல்லாம் இருக்கிறார்கள். இதெல்லாம் நாம் எப்படி மூளையைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. துரதிர்ஷ்ட வசமாக நாம் மூளையை "இவன் தானே நம்மைப் பார்த்து அன்னிக்கு நீ எல்லாம் ஆம்பளையா? ன்னு கேட்டவன்" என்று ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.சரியாகப் பயன்படுத்தினால் உலகில் உள்ள புத்தகங்களை எல்லாம் மூளையில் சேமித்து வைக்க முடியுமாம். இதோ இந்தக் கதையைப் படியுங்கள்.

அலெக்சாண்டர் இந்தியாவிற்குப் படையெடுக்கும் முன் தன் குரு அரிஸ்டாடிலைப் பார்த்து "உங்களுக்கு இந்தியாவில் இருந்து என்ன வேண்டும்?" என்று கேட்டானாம் ...அதற்கு அவர் "இந்தியாவில் இருந்து இந்துக்களின் நான்கு வேதங்களையும் கொண்டு வா..ரொம்ப நாளாக அவற்றைப் படித்துப் பார்க்க ஆசை" என்றாராம் . ஆனால் இந்தியாவில் வேதங்களின் "hard copy " யைப் பார்ப்பது அலெக்சாண்டருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பிராமணரிடம் அவை இருப்பதாக் கேள்விப்பட்டு அங்கே சென்று "பார், எனக்கு உனது நாலு வேதங்களின் ஓலைச் சுவடிகளும் வேண்டும்,இல்லை என்றால் ஒரே வீச்சில் உங்கள் எல்லாரையும் கொன்று விடுவேன்" என்று மிரட்டுகிறான் . அதற்கு அவர் "நான் தருகிறேன்..ஆனால் இப்போது சூரிய அஸ்தமன நேரம்.இப்போது தருவதற்கு இல்லை. காலையில் வாருங்கள்" என்கிறார் .அவன் சென்றதும் தனது நான்கு மகன்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு வேதத்தைக் கொடுத்து "விடிவதற்குள் அப்படியே மனப்பாடம் செய்து விடுங்கள்" என்றாராம். அந்த நான்கு மகன்களும் ஆளுக்கு ஒன்றாக வேதங்களை மனப்பாடம் செய்து விட்டார்களாம். காலையில்
அலெக்சாண்டர் வருவதற்குள் அந்த முனிவர் அவற்றை நெருப்பில் போட்டு எரித்து விட்டாராம்.

அந்தக் காலத்தில் எல்லாம் மனிதர்களின் ஞாபக சக்தி மிகவும் அபாரமாக இருந்திருக்கிறது. நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் முழுவதையும் அப்படியே ஒப்புவிப்பவர்கள் இருக்கிறார்கள். த்யாகராஜரின் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை மனப்பாடமாக வைத்திருந்த பாடகர்கள் இருந்திருக்கிறார்கள். டைரி எதுவும் எழுதாமல் பால்காரனுக்கு இவ்வளவு பாக்கி, வண்ணானுக்கு இவ்வளவு பாக்கி, காய்கறிக்காரனுக்கு இவ்வளவு என்று சொன்ன 'மாமிகள்' இருந்தார்கள். ஆனால் இன்றைய நவீன உலகில் மனிதர்களின் ஞாபக சக்தி மிகவும் மழுங்கி விட்டது போலத் தோன்றுகிறது . (கம்ப்யூடர் எல்லாம் வந்த பிற்பாடு) பள்ளிகளில் ஒரு நாலு வரி மனப்பாடச் செய்யுள் வைத்தாலே குழந்தைகள் முகம் சுளிக்கிறார்கள். ஒரு நாலு அயிட்டங்களை சொல்லி கடைக்குப் போய் வாங்கி வா என்றால் கண்டிப்பாக ஒன்றை (அதுவும் முக்கியமானதை) மறந்து விடுகிறார்கள். இன்று எத்தனை பேருக்கு தங்கள் மொபைல் நம்பரை விட்டு ஒரு மூணு நாலு மொபைல் நம்பராவது மனப்பாடம் இருக்கிறது? மொபைல் தொலைந்து விட்டால் inform செய்ய குறைந்த பட்சம் மனைவியின் நம்பரையாவது மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும். நாலு நம்பர் கொண்ட ஏ .டி.எம் பின்னைக் கூட மொபைலில் 'பதிவு' பண்ணி வைக்கிறார்கள்.

எனவே கூடுமானவரை உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள். சில suggestions :

* பிரபலமாகாத திரைப்படப் பாடல்களைத் (.தா: எந்திரன் பாடல்கள் ) திரும்பத் திரும்பக் கேட்டு அப்படியே மனப்பாடம் செய்யவும் .கேட்கும் போது இயர் போன் மாட்டிக் கொள்ளவும். வார்த்தைகள் புரியவில்லை என்றால் பழைய பாடல்களுக்கு மாறவும்.

*உங்கள் மனைவி/ கணவன் தூரத்து சொந்தங்களின் பெயர்களை எல்லாம் கேட்டு அப்படியே மனப்பாடம் செய்து கொண்டு, சந்தர்ப்பம் வரும் போது "இது உன்னோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட wife -ஓட அண்ணன் சம்சாரத்தோட அக்கா பையன் தானே? என்று கேட்டு கைத்தட்டல் வாங்கிக் கொள்ளவும்

* உங்கள் பிள்ளைகளின் தமிழ் புக்கை வாங்கி அதில் உள்ள திருக்குறள் கம்ப ராமாயணம் எல்லாவற்றையும் சிவகுமார் லெவலுக்கு மக்-அப் செய்யவும்

*பேருந்தில் பயணிக்கும் போது வெளியே தெரியும் "இசக்கி மளிகை" "மாசாணியம்மன் கவரிங்" "திருமலை ட்ரேடர்ஸ்" போன்ற போர்டுகளை மனதில் வாங்கிக் கொண்டு திரும்பச் சொல்வதற்கு முயற்சிக்கவும்

*இல்லத்தரசிகள் காலை 'மகள்' தொடங்கி இரவு 'இதயம்' வரை உள்ள சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரு பெரிய பேப்பரில் ஒன்று விடாமல் எழுதிப்பார்க்கவும். மேலும் திருமதி.செல்வத்தில் வாசுவின் மாமனார் பெயர் என்ன? என்பது போன்ற self -test செய்து கொள்ளவும்.

*ஆபீசில் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்தால் உங்களுக்கு வரும் மெயில்களை ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து எழுதிப் பார்க்கவும்


சரி இப்போது உங்கள் மெமரிக்கு நிஜமாகவே ஒரு டெஸ்ட். நாம் காலையிலிருந்து இரவு வரை தொலைக்காட்சி விளம்பரங்களால் சூழப்பட்டுள்ளோம். விளம்பரம் வந்தாலே சானலை மாற்றி விடுகிறோம். ஆனால் விளம்பரங்களிலும் நம் மெமரிக்கான ஒரு FORMULA ஒளிந்து கொண்டிருக்கிறது. எங்கே கீழே உள்ள கேள்விகளுக்கு answer சொல்லுங்கள் பார்க்கலாம்.
பதினைந்து கேள்விகள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஸ்கோர் ஒன்று.

உங்கள் மொத்த ஸ்கோர்:

0 -5 : மெமரியில் நீங்க ரொம்ப வீக். வெண்டைக்காய் நிறைய சாப்பிடுங்கள். மேலும் நான் சொன்ன suggestions எல்லாம் கடைபிடியுங்கள்

5 -10 : நீங்கள் மெமரியில் ஆவரேஜ். கொஞ்சம் improve பண்ணிக்கங்க.

10 -15 : excellent . நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். (
வெண்டைக்காய் உட்பட. முடிந்தால் ஒரே இரவில் பகவத் கீதையை மனப்பாடம் செய்ய முயற்சிக்கவும்)

டெஸ்ட் இது தான். கீழே உள்ள டையலாக்குகள் எந்த விளம்பரங்களில் வருகின்றன என்று சொன்னால் போதும்: ஸ்டார்ட் 1 2 3 ...

1 . ஒரு கொசு இருந்தாலும் ஆபத்து தான்...

2 . CC மட்டும் போதுமா? PTW ...power to weight ratio ...

3 . முடி மாசத்துக்கு ஒரு முறை இயற்கையாகவே வளரும்

4 . ஜீரோ % Purchase பிளான்... பூம்பா

5 அர்ஜுன்......ஒரு நிமிஷம்...

6 . எனக்கு மேங்கோ வேணும்... எனக்கும் எனக்கும்...

7 . அவர் இப்ப சமோசா ஆர்டர் பண்ணுவார்...எனக்கு தான் உங்க இதயத்தைப் பத்தி நல்லாத் தெரியும். ...

8 .ஒரு குழந்தைக்கு இரவுன்னா இன்னொன்னுக்கு பகல்..

9 . உங்கள் உலகில் நீங்கள் உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களிடம் இருந்து ஒரு போதும் பிரிவதில்லை...

10 .ஆயிஷா, அப்படின்னா அவங்க கண்டிப்பா...ச்சே

11 . இது என்னோட family ...ஐயோ மழை... பூர்வி.........

12 . இவ்வளவு நேரம் சிரிச்சு சிரிச்சு யார் கூட பேசிட்டு இருந்தீங்க?

13 . உங்கள் fairness கிரீம் பாதி வேலையைத் தான் செய்கிறதா?

14 . சூரியனைச் சுற்றி சுத்தி வரும் பூமி...

15 . மூன மூனால பெருக்கினா எவ்வளவு?

உங்கள் ஸ்கோரை மட்டும் பின்னூட்டத்தில் சொல்லவும். விடைகளை சொன்னால் திரில் போய் விடும்..தயவு செய்து உங்க கமெண்ட சொல்லிட்டுப் போங்க ப்ளீஸ்////////


சமுத்ரா

7 comments:

நெல்லி. மூர்த்தி said...

என் மண்டையிலே எவ்வளவு மசாலா இருக்குதுன்னு தலைக்கனத்துடன் திரிந்திருந்தேன். இப்பதிவை படித்தபின்பு தான் இலேசாக இருப்பதை உணர்ந்தேன். மனசுல மட்டுமில்லீங்கோ மன்டையிலும் ஒன்னும் நிக்கமாட்டேங்குதுன்னு இப்பத் தான் உரைக்குது. - நெல்லி. மூர்த்தி, சவூதி அரேபியா. (http://nellimoorthy.blogspot.com)

கணேஷ் said...

நான் விளம்பரமே பார்ப்பதில்லை..பின்னே எப்படி சோதித்து பார்க்க..எனவே போட்டிக்கான கேளவிகளை மறுபரிசீலனை செய்யுமாறு..கனம நடுவர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்)))

test said...

அவ்வ்வ்வவ்! முடியல! நான் டி.வி.சீரியல் பார்த்துதான் மெமரிய.....?
எனக்கு மெமரியே வேணாம்

பனித்துளி சங்கர் said...

நமக்கு பதிலெல்லாம் சொல்லத் தெரியாதுங்க ஒன்லி கேள்வி மட்டும்தான் எப்படி வசதி !?

adhvaithan said...

ada poyya yov... naa tv pathae romba naal aachu...

வானம் said...

என்ன இது, சின்னபுள்ளத்தனமா இருக்கு?

KaRa said...

இப்பதான் தெரியுது நான் விளம்பரம் நெறைய பார்கிறேன்னு