இந்த வலையில் தேடவும்

Sunday, December 19, 2010

அணு அண்டம் அறிவியல்-8


ஒரு கேள்வி..ஒரு அணுவினுள் என்ன இருக்கிறது ? "கடவுள்" என்றெல்லாம் பக்தி முத்திப் போய் பதில் சொல்லக் கூடாது ஆமாம்..ஒரு வகையில் பார்த்தால் இந்த பதிலும் சரியானது தான்...ஆனால் இன்னும் நாம் கடவுளை குவாண்டம் தியரியில் நுழைக்க வில்லை..

கீழே உள்ள வாசகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அதாவது ஒரு ஆன்மீகவாதி தன் பயணத்தை அறிவியல் பூர்வமாக தொடங்க வேண்டும்...எந்த விதமான ஊகங்களும் முன் நம்பிக்கைகளும் இன்றி...ஒரு விஞ்ஞானி தன் பயணத்தை ஆன்மீகப் பூர்வமாக முடிக்க வேண்டும்..அதாவது நிறைய நிறைய ஆராய்சிகள் செய்து கடைசியில் என்னால் எப்படி என்று மட்டுமே விளக்க முடியுமே தவிர 'ஏன்' என்பதற்கான பதிலைக் கூற முடியாது என்று ஒத்துக் கொள்ளும் நிலை..முதல் பகுதிக்கு உதாரணமாக ரமண மகரிஷியை சொல்லலாம்...அவர் முதலில் எந்த கடவுளையுமே நம்பவில்லை... மாலை போட்டுக் கொண்டு எந்த மலையையும் ஏறவில்லை..."நான் யார்' என்று அறிவியல் பூர்வமான ஒரு "self inquiry " யுடன் தன் பயணத்தை ஆரம்பித்த ஆன்மீகவாதி அவர்... இரண்டாவதற்கு உதாரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...அவர் தன் வாழ்நாளின் கடைசியில் தனக்குள்ளே பயணிக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டியதாக சொல்கிறார்கள்...இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் விஞ்ஞானியாக மட்டும் பிறக்க மாட்டேன் என்று அவர் கூறினாராம்...இதற்குக் காரணம்: என்னதான் உயிரைக் கொடுத்து ஒரு அபாரமான கொள்கையை நாம் அறிவியலில் கண்டுபிடித்தாலும் அது ஒரு "தற்காலிகமான" மற்றும் "தோராயமான" ஒன்றாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது...இது தான் சர்வ நிச்சயம் என்று சொல்லாமல் இந்த கொள்கை இந்த விளைவை ஓரளவு பொருத்தத்துடன் விளக்குகிறது என்று தான் கூற முடியும்..

இது மாதிரி விஷயங்களால் வெறுப்படைந்த ஒரு இயற்பியல் ஆசாமி ஜான் வீலர் என்பவர் கடுப்பாகி "ஏன்டா எல்லாரும் அடுச்சுக்கறீங்க, பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு எலக்ட்ரான் தான் இருக்கிறது..அது ஒன்று தான் ஒபாமாகவும் ஒசாமாவாகவும் மன்மோகனாகவும் காட்சி தருகிறது" (one electron universe theory * ) என்று கொஞ்சம் ஓவராகப் போய் ஒரு அறிக்கை விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...அந்த ஆசாமி எதனால் அப்படி சொன்னார் என்றால் முந்தாநாள் இரவு நாலு பெக் உள்ளே தள்ளியதாலோ அல்லது சங்கராச்சாரியாரின் அத்வைத வேதாந்த மஞ்சரியை விடிய விடிய புரட்டியதாலோ அல்ல...நிறைய ஆராய்ச்சி செய்து தான் சொன்னார்...இயற்பியலில் விஞ்ஞானிகள் கண்டு வியக்கும் ஒரு விஷயம் "indistinguishability of elementary particles " என்பது,,,அதாவது ஒரு கார் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு நிறைய கார்கள் தயாரிக்கப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம்.. என்ன தான் அவை வெளியே வரும் போது எந்திரன் ரோபோ மாதிரி பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றின் இடையே சின்னச் சின்ன வித்தியாசங்கள் ஆயிரம் இருக்கும்...(உ.தா) பெயிண்டின் அடர்த்தி, காரின் மொத்த எடை, என்று மைன்யூட் ஆக நிறைய வேறுபாடுகள் இருக்கும்... ஆனால் இயற்கை தயாரித்த இரண்டு "எலக்ட்ரான்" (அல்லது ப்ரோடான், ந்யூட்ரான் ) களுக்கு இடையில் பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு நாள் பூராவும் நோக்கினாலும் ஒரு இம்மி அளவு வித்தியாசம் கூட பார்க்க முடியாது... exactly identical ...மனிதர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க "GOD DOES NOT MAKE CARBON COPIES " (நீ உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடத் தேவை இல்லை) என்று ஒரு வாக்கியத்தை அடிக்கடி சொல்வார்கள்... ஆனால் மிகச் சிறிய உலகங்களில் எலக்ட்ரான் போன்ற துகள்களைப் படைக்கும் போது கடவுள் கொஞ்சம் பொறுமை இழந்து தன் assistant இடம் "பாருப்பா,ஒரு எலக்ட்ரான் ...ஒரு லட்சம் காப்பி டபுள் சைடு ஜெராக்ஸ் போட்டுடு" என்று கூறி விட்டது போலத் தான் தெரிகிறது...

சரி முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம்... இயற்பியல் முன்னோர்கள் என்னவெல்லாமோ செய்து பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்ற ஒரு குத்து மதிப்பான முடிவுக்கு வந்திருந்தார்கள்... ஆனால் ஒரு அணுவினுள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை...அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.. அணுவுக்குள் what yaa ? இன்டர்நெட்டில் பார்த்து விட்டு "ந்யூட்ரான்" "எலக்ட்ரான்" என்றெல்லாம் சீன் காட்ட வேண்டாம்... கம்ப்யூட்டர் எல்லாம் வருவதற்கு முன்னரே இந்த கேள்வி வந்து விட்டது... பிரச்சனை என்னவென்றால் அணுவிற்குள் என்ன இருக்கிறது என்று தெரிய வேண்டும் என்றால் அதை விட சிறிய ஏதேனும் ஒன்றை அணுவினுள் அனுப்ப வேண்டும்...ராணுவங்களில் மனித ஒற்றர்கள் புக முடியாத சந்து பொந்துகளில் நண்டு போன்ற வடிவம் உள்ள குட்டி ரோபோட்டுகளில் கேமரா வைத்து உள்ளே அனுப்புவார்களே, அது மாதிரி!

அதிர்ஷ்ட வசமாக அப்படி இயற்கையிலேயே ஒரு ஒற்றன் ரோபோட் உண்டு...காளிதாசனிடம் "எறும்பின் வாயை விட சிறியது எது?" என்று கேட்டதற்கு "அது உண்ணும் உணவு" என்று பதில் சொன்னானாம்... அது மாதிரி அணுவை விட சிறியது எது? சிம்பிள்...அது வெளியிடும் ஒரு துகள்...அதன் பெயர் "ஆல்பா துகள்" (ALPHA PARTICLE ) ..இதை எப்படி உருவாக்கினார்கள் என்றால் உருவாக்கவெல்லாம் வேண்டாம்... யுரேனியம் போன்ற தனிமங்கள் தம் அணுக்கருவின் கனம் தாங்காமல் கருவின் உள்ளே உள்ள சில துகள்களை "நீ ஒண்ணும் வேண்டாம் போ" என்று ஆக்ரோஷமாக மிக அதிக வேகத்துடன் இயற்கையாகவே வெளித் தள்ளுகின்றன... வல்லவனுக்கு புல்லும் ஆய்தம் என்பார்களே அது மாதிரி "ஜே.ஜே. தாம்சனுக்கு" (J .J .Thomson ) ஆல்பா துகள்களும் ஆயுதம்...இயற்கை தந்த இந்த ஒற்றனுக்கு அவர் நிறைய வேவு பார்க்கும் உத்திகளை சொல்லிக் கொடுத்து "சென்று வா மகனே வென்று வா" என்று வெற்றித் திலகம் இட்டு அது வரை இயற்பியல் உலகில் தகர்க்கப் படாமல் இருந்த அணுவின் ரகசியக் கோட்டைக்குள் அனுப்பி வைக்கிறார்...அந்த ஒற்றன் என்ன கண்டு பிடித்தான்? வெற்றியுடன் திரும்பினானா? கொஞ்சம் பொறுத்திருங்கள்...

(as usual : பிடித்திருந்தால் உங்கள் கமெண்டுகளை தவறாமல் இடுங்கள்..இது அடுத்த பாகம் எழுதுவதற்கு உற்சாகமாக இருக்கும்)

சமுத்ரா

14 comments:

கணேஷ் said...

அருமையான தகவல்கள் தொடருங்கள ...

Anonymous said...

நன்றாக இருக்கிறது.என்னை போன்றவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் தருகிறீர்கள்.நன்றி

வானம் said...

ம்ம்ம். இன்னும் வேகமா

Anonymous said...

// ஆனால் மிகச் சிறிய உலகங்களில் எலக்ட்ரான் போன்ற துகள்களைப் படைக்கும் போது கடவுள் கொஞ்சம் பொறுமை இழந்து தன் assistant இடம் "பாருப்பா,ஒரு எலக்ட்ரான் ...ஒரு லட்சம் காப்பி டபுள் சைடு ஜெராக்ஸ் போட்டுடு" என்று கூறி விட்டது போலத் தான் தெரிகிறது...
// Read sujatha a lot? ... but no harm. it s fantastic. your placement of sarcasm is absolutely good and the narration is very appropriate. If you practice writing continuously and seriously you will come up as a fabulous writer...! best wishes.

சமுத்ரா said...

anonymous ,அமாம் அறிவியலை தமிழில் சுவைபட எழுதுவதில் அவர் தானே எல்லாருக்கும் முன்னோடி, எனவே என்ன தான் தனித்துவமாக எழுத முயற்சித்தாலும் அவரது பாணி வந்து விதுகிறது... :)

Anonymous said...

very interesting journey.don't stop.....

Fero said...

Super.......

Shawnqkkw said...

நன்றாக இருக்கிறது.என்னை போன்றவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் தருகிறீர்கள்.நன்றி

ரசிகன் said...

எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதி வருகிறீர்கள்..

சுஜாதாவிற்கு அடுத்ததாக அறிவியலை இவ்வளவு சிறப்பாக தமிழில் தருவது நீங்கள்தான்...

Anonymous said...

முதலில் இந்த தொடரை எழுதுவதற்கு பிரபஞ்சத்தில் உள்ள அணுக்கள் எண்ணிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,நான் இந்த தொடரை மிக சமீபத்தில் இறுந்து தான் படித்து கொண்டிருக்கிறேன், மிக தெளிவாகவும் புரியும் படியும் எழுதிகொண்டிருகிரீர்கள், என்னை போன்று பிரபஞ்சத்தை(அணு) பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொடர் வரப்ரசாதமாக உள்ளது, தொடர்ந்து எழுதுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....

Anonymous said...

முதலில் இந்த தொடரை எழுதுவதற்கு பிரபஞ்சத்தில் உள்ள அணுக்கள் எண்ணிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,நான் இந்த தொடரை மிக சமீபத்தில் இறுந்து தான் படித்து கொண்டிருக்கிறேன், மிக தெளிவாகவும் புரியும் படியும் எழுதிகொண்டிருகிரீர்கள், என்னை போன்று பிரபஞ்சத்தை(அணு) பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொடர் வரப்ரசாதமாக உள்ளது, தொடர்ந்து எழுதுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....

இராஜவர்மன் said...

நேற்று முதல் உங்கள் பதிவை படிக்கிறேன். மிகவும் அருமையான நடை. நேரம் அனைத்தையும் விட உயர்ந்தது. அதனை ஒதுக்கி அருமையான கட்டுரை தந்தமைக்கு நன்றி.

Anonymous said...

Great.

Unknown said...

Wow.. Really great ..